இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் திரு.நரேந்திரமோடி வரும் 8ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. முதன்முறையாக பாதிப்பு எண்ணிக்கை இன்று ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இதன்படி 1 லட்சத்து 3 ஆயிரத்து 558 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 ஆயிரத்து 247 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் […]
Tag: decision
திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 21 கைதிகள் தபால் ஓட்டு போட விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என மொத்தம் 1, 500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்கு விசாரணைக் கைதிகளுக்கோ அல்லது தண்டனை கைதிகளுக்கோ அனுமதி கிடையாது. ஆனால் இதற்கு மாறாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மட்டும் ஓட்டு போட அனுமதி […]
பட்டாசு ஆலைகளை பாதுகாக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 24 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து காளையர் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், அதே நாளில் சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு […]
லாரிகளுக்கான வாடகை 30 சதவீதமாக உயர்த்தப்படாததால் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உரத் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையம்போன்ற இடங்களில் லாரிகள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் துறைமுகத்தில் சரக்கு இறக்கும் பணிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் கூறும்போது, தமிழகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த […]
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதிகள் இணைந்து மரக்கன்று நட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்தது. அரியலூர் மாவட்டத்திலுள்ள நல்லாம்பாளையம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் பத்மபிரியா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த உடனேயே நல்லம்பாளையம் அரசு பள்ளிக்கு சென்று அங்குள்ள மைதானத்தை சுற்றி மரக்கன்றுகளை நட்டனர். அதோடு இந்த புது மணத்தம்பதிகள் அனைத்து மரக்கன்றுகளையும் இனிவரும் […]
கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த மக்கள் சவுதிக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சவுதி அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பொதுமக்கள் வருவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சவூதி அரசு வெளியிட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, இந்தோனேஷியா, அர்ஜெண்டினா, பாகிஸ்தான், அயர்லாந்து, இத்தாலி, ஜெர்மனி, பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஸ்விட்சர்லாந்து, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், எகிப்து, போர்ச்சுக்கல், லெபனான் […]