2020 ஆம் ஆண்டில் ஊடுருவல் முயற்சிகள், பயங்கரவாத வன்முறைகள் மிகவும் குறைந்து விட்டதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி கூறும்போது, கடந்த 2019 ஆம் ஆண்டு எல்லையில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் 127 பேர் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து 71 பேர் 2020ஆம் ஆண்டில் நடந்த தாக்குதலால் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதோடு 2019 ஆம் ஆண்டில் 216 ஊடுருவல் முயற்சிகளும், 2020ஆம் ஆண்டில் […]
Tag: Decrease
சேலம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் ஏழு பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேர் மற்றும் கெங்கவல்லி, கொளத்தூர், வீரபாண்டி, ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் 4 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அம்மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து […]
20 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்கும் சென்றாலும் குறைந்த அளவில் மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் தவிக்கும் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மீனவர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று 20 நாட்களுக்கு பிறகு […]
சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 296 ரூ விலை குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 37 ரூபாய் விலை இறங்கி, 3838 ரூபாய்க்கும் ஒரு சவரன் 296 ரூபாய் விலை சரிந்து, 30 ஆயிரத்து 704 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 200 ரூபாய்க்கும் விலை வீழ்ச்சி கண்டு 49 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை 60 ரூபாயாக குறைந்துள்ளது மழை வெள்ளம் ஆகியவற்றால் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வெங்காயத்தின் வரத்து கடந்த சில மாதங்களாக குறைந்து இருந்தது. இதனால் சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்தது. பெரிய வெங்காயமும் கடந்த இரண்டு மாதங்களாக 100 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மகாராஷ்டிரா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வெங்காயத்தின் வரத்து […]