Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்‍கு வெளிநாட்டினரின் ஆதரவும் – எதிர்ப்பும்..!!!

டெல்லி விவசாய போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இதுபோன்ற கருத்துக்கள் மூலம் இந்திய ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது என உள்துறை அமைச்சர் அமிக்ஷா கூறியுள்ளார். விவசாயிகள் போராட்டம் பற்றி செய்தியை டிவிட்டரில் பதிந்துள்ள அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா இது குறித்து ஏன் நாம் பேசவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார். ரிஹானாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இங்கிலாந்து எம்.பி, கிளாடியா  இந்த பிரச்சனை நாடாளுமன்றத்தில் எழுப்பபோவதாக தெரிவித்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

புதிய வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு..!!!

இந்தியாவின் புதிய வேளாண் சட்டங்களை வரவேற்பதாக அமெரிக்கா வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இந்திய சந்தையை மேம்படுத்த புதிய சட்டங்கள் உதவும் என்றும் கூறியுள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் இந்திய வணிகச் சந்தையின் வலிமையை மேம்படுத்துவதோடு தனியார்துறை முதலீடுகளை அதிகரிக்க உதவும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது. அதேநேரம் டெல்லியில் தொடரும் விவசாயிகளின் போராட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா வெற்றிகரமான ஜனனாயகத்தை தனிச்சிறப்பை குறிக்கும் அமைதிவழிப் போராட்டங்களை அங்கீகரிப்பதாக கூறியுள்ளது. பிரச்சனைகளுக்கு அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் இல்லையெனில் இந்தியா இல்லை – குலாம் நபி ஆசாத்

விவசாயிகள் இல்லை எனில் இந்தியா இல்லை என்பதை மத்திய அரசு உணர வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திரு குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். மாநிலங்கள் அவையில் தேசிய அவையின் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான திரு குலாம்நபி ஆசாத் விவசாயிகள் இல்லை எனில் இந்தியா இல்லை என்பதை மத்திய பாஜக அரசு உணர வேண்டும் என்று கூறினார். விவசாயிகளுடன் மத்திய அரசு போர் நடத்துவது ஏன் என கேள்வி எழுப்பினார். பிரதமர் திரு.நரேந்திர மோடியால் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு இப்படி பண்ணுது…! நாங்க பேச போறதில்லை…. போராட்டம் தொடரும்….!!

விவசாயிகள் மீதான ஒடுக்குமுறைகளை  கைவிடும் வரை மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என போராடும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுத்  கிஷான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. மத்திய பாரதிய ஜனதாவின் அரசின்  புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடர் போராட்டம் 68 நாட்களாக நீடிக்கிறது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து போலீசார் போராட்டத்தை முடக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

பாலமே தேவை, சுவர் அல்ல – மத்திய அரசு குறித்து ராகுல் விமர்சனம்..!!!

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்குவதை  விட்டு விட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி திரு. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் எம்.பி திரு. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் விவசாயிகளின் போராட்டம் நடைபெறும் இடத்தில் போலீசார் இரும்பு ஆணிகளை அடித்திருப்பது சாலை தடுப்புகளை அமைத்து உள்ளிட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவோடு விவசாயிகளின் போராட்டத்தை தடுக்க எண்ணாமல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் சுவரை எழுப்பாமல்  பாளத்தை கட்டுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |