Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடடே….. வியக்க வைக்கும் திறமை…. 1 1/2 வயது குழந்தையை பாராட்டிய டி.ஜி.பி….!!

டி.ஜி.பி சைலேந்திரபாபு டாக்டர் பட்டம் பெற்ற 1 1/2 வயது குழந்தையை பாராட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ்காரராக ஜெய காமேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 1 1/2 வயது உடைய கவினேஷ் தேவ் என்ற மகன் உள்ளார். இந்த குழந்தை பல்வேறு நாட்டுக் கொடிகள், கரன்சிகள் ஆகியவை குறித்து தெளிவாகவும் விரைவாகவும் கூறி வந்துள்ளான். இந்நிலையில் ஒரு போட்டியில் கலந்துகொண்டு கவினேஷ் டாக்டர் பட்டம் பெற்றுள்ளான். இதனால் டி.ஜி.பி சைலேந்திரபாபு குழந்தையை பாராட்டியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

காவல் துறையில் நான்கு உயரதிகாரிகள்… தலைவர்கள் ஆகும் ஏடிஜிபி.கள்…!!!!

காவல்துறையில் உயர்ந்த பதவி டிஜிபி பதவி ஆகும். ஐபிஎஸ் அதிகாரிகள் ஏ.எஸ்.பியாக பதவியில் இணைந்து எஸ்.பி, டிஐஜி, ஐஜி, ஏடிஜிபி, டிஜிபி என 5 கட்ட பதவி உயர்வை பெறுகின்றனர். இந்நிலையில், கூடுதல் டிஜிபியாக இருந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகளை, டிஜிபியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு,  டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.அம்ரீஷ்  புஜாரி சைபர் கிரைம் பிரிவு டிஜிபியாகவும்,  ஜெயந்த்  முரளி சிலை கடத்தல் தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

சிறையில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் – தூத்துக்குடி டிஜிபி ஆஜராக உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் டிஜிபி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மரக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் பெயர் பென்னிக்ஸ், அருகிலேயே ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிமுறைகளை மீறி அதிக நேரம் கடைகளை திறந்திருந்ததாக கூறி ஜெயராஜை போலீசார் திட்டியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக காவல்துறையின் சிபிசிஐடி டிஜிபியாக பிரதீப் வி.பிலிப் நியமனம்!!

தமிழக காவல்துறையின் சிபிசிஐடி டிஜிபியாக பிரதீப் வி.பிலிப் என்பவரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமை பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாபர் சேட் கடந்த 2011ம் ஆண்டில் மண்டபம் பிரிவுக்கான காவல்துறை அதிகாரியாகவும், ஏடிஜிபி யாகவும் இருந்தார். அதன்பின்னர் காவலர் பயிற்சி பள்ளியில் அதிகாரியாக இருந்தார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிபிசிஐடியில் டிஜிபியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

சிறுவனை காலணியை கழற்றுமாறு கூறிய விவகாரம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க நோட்டீஸ்..!!

பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றுமாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய விவகாரத்தில், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு தமிழ்நாடு டி.ஜி.பி, தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தேசிய பழங்குடியின நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை பார்வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கு சென்றார். அப்போது அவர், அங்கிருந்த கோயிலுக்குச் செல்லும்போது பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றுமாறு கூறினார். […]

Categories
மாநில செய்திகள்

“தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை” – டிஜிபி திரிபாதி எச்சரிக்கை.!

தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி திரிபாதி எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு அருகே சாலவாக்கம் அருகே உள்ள பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இதில் சிலையியின் கை, மூக்கு ஆகிய பகுதி சேதமடைந்துள்ளது. பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், டிடிவி தினகரன் உட்பட பலரும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குறைந்த நேரத்தில்….. 3கிமீ தூரம் நீந்துவது எப்படி…?? DGP செய்முறை விளக்கம்…!!

தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ஆழமான இடத்தில் தீயணைப்பு துறை வீரர்களுக்கு பயிற்சி அளித்தார். தமிழகத்தின் பல்வேறு தீயணைப்பு துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று சைலேந்திரபாபு வீரர்களுக்கு பல பயிற்சிகளை அளித்து வருகிறார். அதன்  ஒரு பகுதியாக கன்னியாகுமாரி மாவட்டம் பேச்சிபாறை அருகே உள்ள ஆழமான குளத்தில் வெள்ளநீர் இடையே குறைந்த நேரத்தில் மூன்று கிலோ மீட்டர் தூரத்தை நீந்திக் கடக்கும் விதிகளை தீயணைப்பு துறை கமெண்டோ  வீரர்களுக்கு பயிற்சி அளித்ததுடன் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் முதல் பெண் டிஜிபி மரணம்… அதிகாரிகள் இரங்கல்..!!

நாட்டின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சௌத்ரி பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் மும்பையில் காலமானார். 1973ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற காஞ்சன் சௌத்ரி 1974 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் பிஜேபி ஆக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் டிஜிபி அதிகாரி என்ற சாதனையை படைத்தார். தனது பதவியிலிருந்து 2007ம் ஆண்டு ஓய்வுபெற்ற பின்னர் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஹரியானா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பின் […]

Categories
மாநில செய்திகள்

105 டி.எஸ்.பிக்கள் “இடமாற்றம்”.. டி.ஜி.பி திரிபாதி அதிரடி உத்தரவு..!!

தமிழகம் முழுவதும் 105 டி.எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து புதிய டி.ஜி.பி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.  தமிழகத்தில் புதிய டிஜிபியாக திரிபாதி பதவியேற்றதையடுத்து காவல் துறையினர் மத்தியில் பல்வேறு  மாற்றங்களை ஏற்படுத்தி வந்தார். குறிப்பாக காவல்துறையினர் ஹெல்மெட் அணியவில்லை என்றால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் உள்ளிட்டவற்றை நடைமுறையில் அமல்படுத்தினார். இதனை தொடர்ந்து டி.ஜி.பி திரிபாதி தமிழகம் முழுவதும் 105 டிஎஸ்பிக்களை இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  

Categories
தேசிய செய்திகள்

டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்..!! 

தமிழகத்தில் நுழைந்து கொலை செய்து  கொள்ளையடித்த பவாரியா கும்பலை ஒழித்த டிஜிபி எஸ்.ஆர். ஜாங்கிட் இன்றுடன் ஒய்வு பெறுகிறார்.  ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்த எஸ்.ஆர்.ஜாங்கிட் 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி பிறந்தார். இவரது முழுப்பெயர் சங்காராம் ஜாங்கிட். நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஜாங்கிட் முதுகலை பொருளாதாரம் படித்தார். பின்னர் அங்குள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.  அதன்பின் இவர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 1985 ஆம் ஆண்டில் ஐ.பி.எஸ் பதவி பெற்றார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் புதிய டிஜிபியாக ஜே .கே திரிபாதி நியமனம்..!!

தமிழ்கத்தின் புதிய டிஜிபியாக சிறை துறை செயலாளராக பணியாற்றிய ஜே .கே திரிபாதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது தமிழக டிஜிபியாக இருந்து வரும் டி கே இராஜேந்திரன் அவர்களின்  பதவிக்காலம் நாளையுடன் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில் புதிய டிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரிகள் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர் சேட், லட்சுமி பிரசாத், அசுதோஷ்,  மிதிலேஷ் குமார், தமிழ்செல்வன், ஆஷிஷ் பங்கரா , சைலேந்திர பாபு, கரன்சின்கா, பிரதீப், ரமேஷ் குடவாலா, விஜயகுமார் ஆகியோரின் பெயர் பட்டியலை தமிழக அரசு கடந்த […]

Categories

Tech |