தர்மபுரி அருகே மருமகனை மாமனாரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை அடுத்த திண்ணைப் பகுதியில் வசித்து வந்தவர் விஜய். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில், காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பிக்கன பள்ளி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதையடுத்து ஆறு மாதங்களுக்கு முன்பாக இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணம் செய்துகொண்ட […]
Tag: dharmaburi
தர்மபுரியில் பெற்றோர்கள் திருமணத்தை தள்ளி போட்டதால் காதல் ஜோடி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். அரூர் பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வசிக்கும் அதே பகுதியில் சோபியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள். இந்நிலையில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனதை பரிமாறி காதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் […]
தர்மபுரி அருகே சமூக இடைவெளி இல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதற்கு 7 பேர் தனிமைப்படுத்தப்பட ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து நேற்றைய தினம் வளைகாப்பு என்பது நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் வெளியாட்கள் என சுமார் 60 பேர் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நடந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ […]
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழக அரசு 2,895 பள்ளிவாசல்களுக்கு சுமார் 5,450 டன் அரிசி வழங்கியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் இருக்கக்கூடிய பள்ளிவாசலில் 700 குடும்பங்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சி தயாரிக்க தேவையான அரிசி, மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமைதாங்க, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் கலந்துகொண்டு […]
தர்மபுரி அருகே பொம்மிடி பகுதியின் எல்லைகளில் பள்ளம் தோண்டி வேற்று ஆட்கள் ஊருக்குள் வராமல் தடுத்ததற்கு 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதிக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தொடர்ந்து வந்து செல்கின்றனர். ஆனால் இந்த கிராமத்து மக்களை தவிர தர்மபுரி மாவட்டத்திற்கு பொம்மிடி பகுதி வழியாக அவ்வபோது கேரள வாகனங்கள் வந்து செல்வதாகவும் ரகசிய தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது. […]
தர்மபுரியில் சாகுபடி செய்த வாழை மரங்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஏக்கரில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். வருடம்தோறும் நல்ல லாபத்தை தரக்கூடிய இந்த வாழை சாகுபடி, இந்த வருடம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக வாழை மண்டி கடைகள் மூடப்பட்டு உள்ளதால் கொள்முதல் செய்ய ஆள் இல்லாமல் வாழைகள் […]
தர்மபுரியில் நல்ல விலைக்கு போக வேண்டிய சம்பங்கி பூக்கள் அறுவடை செய்ய முடியாமல் கருகி நாசமாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் கோடைகாலங்களில் அமோகமாக இருக்கும். அறுவடை செய்யப்படும் பூக்கள் பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் முக்கிய பூ மார்க்கெட் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அறுவடை பூக்கள் அறுவடை […]
தர்மபுரியில் தக்காளியை பறிக்க ஆளில்லாமல் அழுகி வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தர்மபுரியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். அது நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ள சமயத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்குதடையின்றி செல்லலாம் என்று அரசு அறிவித்த போதிலும், தக்காளியை பறிக்க கிராம மக்கள் யாரும் முன் வருவதில்லை என்பதால், தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் […]
தர்மபுரி அருகே புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 66 குடிசைகளை அதிகாரிகள் திடீரென அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் கல்லாங்குத்து என்னும் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் பஞ்சப்பள்ளி கிராமத்தை சுற்றியுள்ள 66 பேர் இந்த புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து குடிசை அமைத்துக் கொண்டனர். ஆனால் இது புறம்போக்கு நிலம் அரசுக்கு சொந்தமானது. இதில் குடிசை அமைத்தவர்களை உடனடியாக அகற்றக் கோரி வருவாய்த்துறை சார்பில் பலமுறை […]
தர்மபுரி அருகே கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மேல் ஆண்டி பள்ளி கிராமத்தில் வசித்து வந்தவர் முனியப்பன். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த வாரம் அவரது தோட்டத்தில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
தர்மபுரி அருகே ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு நபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் அசோக் குமார். இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். இந்நிலையில் இருவரும் தர்மபுரிக்கு அவர்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மொரப்பூர் பகுதியை தாண்டி வரும் பெட்ரோல் நிலையம் அருகில் […]
தருமபுரி அருகே அரசு வேலை பார்க்கும் பெண்ணிடம் இருந்து செயின் பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர். தருமபுரி மாவட்டம் பிடமநெறி பகுதியை சேர்ந்தவர் கிரிஜா சங்கரி. இவர் அழகாபுரி பகுதியில் உள்ள வட்டார அலுவலகத்தில் எழுத்தாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அழகாபுரியில் இருந்து தனது வீட்டிற்கு அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கழுத்திலிருந்த சங்கிலியை பறித்துச் சென்றனர். இதில் அவருக்கு […]
தர்மபுரியில் மனைவியின் கையை பிடித்து இழுத்த விவசாயியை கணவன் தலையில் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். 45 வயது ஆன நிலையில் இவருக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ரமேஷ் என்பவர் குமாரிடம் ரூபாய் 48,000 தொகையை குடும்ப செலவிற்காக கடனாகப் பெற்றிருந்தார். இந்த கடன் தொகையை கடந்த வாரமே […]
தர்மபுரியில் மகன் மகளின் உதவியுடன் மனைவியே கணவன் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவர் தர்மபுரியை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நாள்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவி மகன் மகளுடன் போதையில் தங்கராசு சண்டையிடுவது வழக்கம். இதையடுத்து சம்பவத்தன்று மது அருந்திவிட்டு தனது மனைவி, மகன் மகளுடன் சண்டையிட்டு உள்ளார் தங்கராசு. இதையடுத்து […]
தர்மபுரியில் விடுமுறையை சிறப்பிக்க கிணற்றுக்கு குளிக்க சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியை அடுத்த பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் விவசாய தொழிலாளி ஆவார். இவரது மகன் மோனிஷ் அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அரையாண்டு விடுமுறை என்பதால் நேற்றைய தினம் தனது மூன்று நண்பர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார் […]
தர்மபுரியில் பள்ளி மாணவி மர்ம காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வீரபுத்திரன் கோவில் தெருவில் லோகநாதன் தேவகி ஆக்கிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரே மகளான பரணி ஸ்ரீ அதே பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்க பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பரமேஸ்வரிக்கு திடீரென பயங்கர காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பின் தனியார் மருத்துவமனையிலும், அரசு மருத்துவமனையிலும் அவருக்கு மாற்றி மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு […]
அன்னசாகரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை முன் மழைநீர் தேங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி அன்னசாகரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். மாவட்டத்தில் தொடர் மழைக் காரணமாக இப்பள்ளியில் உள்ள வகுப்பறை முன் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வகுப்பறைகளுக்குச் செல்லும் மாணவர்கள் தேங்கி கிடக்கும் மழைநீரில்தான் நடந்து செல்லவேண்டியிருக்கிறது.மேலும் மழைநீரில் உருவாகும் கொசுக்களால் பள்ளி மாணவ மாணவியருக்கு டெங்கு காய்ச்சல் […]