Categories
தர்மபுரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”2 டன் ரேஷன் அரிசி….. ”கர்நாடகாவுக்கு கடத்தல்”…. பறிமுதல் செய்த அதிகாரிகள் ..!!

தருமபுரியிலிருந்து, பெங்களூருவுக்கு கடத்த முயன்ற இரண்டு டன் ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரூ செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே குடிமைப்பொருள் வாணிபக்கழக தனி வட்டாட்சியர், தனி வருவாய் ஆய்வாளர் செல்வம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை வழிமறித்து சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்துடன், அரிசியை பறிமுதல் செய்த அலுவலர்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

புரோக்கர்கள் பிடியில் பாலக்கோடு சந்தை – விவசாயிகள் வேதனை….!!

பாலக்கோடு தக்காளி சந்தையில் புரோக்கர்கள் (இடைத்தரகர்கள்) மாபியா கும்பல் போல் செயல்படுவதாக தக்காளி விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தக்காளி சந்தை இயங்கி வருகிறது. மாவட்டத்தின் பாலக்கோடு, மாரண்டஹள்ளி, பென்னாகரம், பெரியாம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி செய்த தக்காளிகளை பாலக்கோடு தக்காளி சந்தையில் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.பாலக்கோடு தக்காளி சந்தையிலிருந்து நாளொன்றுக்கு 100 முதல் 150 டன் தக்காளி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், விவசாயிகள் […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் இப்படி செய்யலாமா ? டெங்கு கருத்தரங்கில் செய்யும் காரியத்தைப் பாருங்கள்…!!

கருத்தரங்கில் மாவட்டம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டனர் என்று சொல்வதைக் காட்டிலும் செல்ஃபோனுக்குள் மூழ்கியிருந்தனர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். டெங்கு காய்ச்சல் தமிழ்நாடு முழுவதையும் ஆட்டிப் படைக்கிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக வேலூரில் வேகமாக பரவிவரும் டெங்குவை தடுப்பதற்காக அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் விழிப்புணர்வு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டெங்கு புழுவை உற்பத்தி செய்த 4 நிறுவனங்களுக்கு ரூ25,000 அபராதம்….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

தர்மபுரியில் டெங்கு கொசுப்புழுக்களை  உற்பத்தி செய்த 4 நிதி நிறுவனங்களுக்கு ரூ 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வண்ணம் தூய்மைப் பணியை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார். அதன் பெயரில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தொழிலாளர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் சுத்தம் செய்யும் பணியிலும் சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழில் முழக்கமிட்ட MP” தவறாக எழுதலாமா தமிழை….வைரலாகும் ட்வீட் பதிவு …!!

தமிழில் முழக்கமிட்டு தமிழை தவறாக எழுதிய தமிழக MP ட்வீட் வைரலாகி வருகின்றது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற தமிழக MP_க்கள் மக்களவை பதவி ஏற்பு விழாவில் தமிழில் முழக்கங்கள் எழுப்பி பதவி ஏற்றுக் கொண்டது அரசியல் விவாதமாக மாறியது. மேலும் தமிழக MP_க்கள் முழக்கத்திற்கு எதிராக பிஜேபி_யினர் ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கமும் எழுப்பினார்கள். இந்நிலையில் திமுக சார்பில் தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற  செந்தில் குமார்  இன்று […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் “இடியுடன் கூடிய கனமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகம். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை […]

Categories
மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு….. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும்  வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால்  பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை… பத்தாண்டு சிறை.. மகளிர் கோர்ட் அதிரடி உத்தரவு…

மாணவியை பாலியல் வன்கொடுமை  செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருக்கும் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதப்பாண்டி.   27 வயதான இவர்  கடந்த  2014-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்ன்கொடுமை செய்ததற்காக அம்மாவட்ட போலீசாரால் கைது செய்ப்பட்டார் .  மேலும் இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.இதில்  அரசு தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில்  […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ரூ.3,47,00,000 அரசுப் பஸ்ஸில் கேட்பாரற்றுக் கிடந்தது……!!

அரூர் அருகே அரசு பேருந்தில் கேட்பாரற்று கிடந்த 3 கோடியே 47 லட்சம் ரூபாயை  பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலையில் இருந்து தருமபுரி நோக்கி புறப்பட்டு சென்ற அரசு பேருந்தை பையர்நாயக்கன்பட்டி அருகே சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.அப்போது அந்த பேருந்தில் 7 பைகள் கேட்பாரற்று கிடந்ததால் அது குறித்து விசாரணை ‌நடத்தப்பட்டது. யாரும் உரிமைக்கோராத அந்த பைகளை திறந்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததைக் கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பையில் இருந்த மொத்தம், 3 கோடியே […]

Categories

Tech |