கொடைக்கானலில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துவந்த மூவரை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆத்மநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் பேரில் ஆய்வாளர் ராஜசேகர், உதவி ஆய்வாளர் காதர் ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கலையரங்கம் பகுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் லாட்டரி […]
Tag: Dindigul
திண்டுக்கல் அருகே இரண்டு கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திண்டுக்கல் அருகே மதுரைதேசிய நெடுஞ்சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொடைரோடு பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத நல்லிணக்கத்திற்காக நாகல் நகர்ஜூம்மா பள்ளிவாசலும், சந்திப்புப் பள்ளிவாசலும் இணைந்து 10 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கினர். திண்டுக்கல் நாகல்நகர் பகுதியிலுள்ள பள்ளிவாசலில் ஆண்டு தோறும் முகமதுநபி ரசுரூல்லா சல்லலாகு அலகி சல்லம் அவர்களின் நினைவாக அனைத்து மதத்தினருக்கும் சமத்துவ உணவு வழங்குவது வழக்கம். இந்தாண்டு மத நல்லிணக்கத்திற்காக கயிமா சார்பில் கந்தூரி விழாவை முன்னிட்டு முட்டை பிரியாணி வழங்கப்பட்டது. இதற்காக 2000 ஆயிரம் கிலோ அரிசியில் பிரியாணி சமைத்து, 15 ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்டது. காலை […]
கனடா நாட்டுப் பெண்ணுக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவருக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டைச் சேர்ந்தவர் ஜோஸ்பின். சிறுகதை எழுத்தாளரான இவர் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்த பாரதி அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இந்நிலையில் இவரும் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த வைபவ் என்பவரும் ஃபேஸ்புக் மூலமாக பழகி, காதலித்து வந்தனர். இதனிடையே இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து தங்களுடைய பெற்றோர்களின் சம்மதத்தையும் பெற்றனர். இதனையடுத்து இவர்களின் […]
நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே பன்னியாமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. இதே ஊரைச் சேர்ந்த கதிர்வேல் குமார் மகன் சிவா(8), இவரது தம்பி அழகுராஜாவின் மகள் மோனிகா(9). இவர்களுடன் அதே ஊரைச் சேர்ந்த தர்ஷிணி, சபரி, லாவண்யா ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் தேங்கிக் கிடந்த நீரில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது […]
திமுக முகவர் வாக்கு எண்ணிக்கை மையத்தின் உள்ளே நுழைந்ததாகக் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் மாநிலம் முழுவதும் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.வி.எம் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒன்றிய கவுன்சிலருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போது, திமுக முகவர் வாக்கு எண்ணிக்கை […]
ஒட்டன்சத்திரத்தில் வாக்குச்சாவடி மையத்திற்கு முகவர்கள் அனுமதிப்பதில் முறைகேடு இருப்பதாக ஆளும் கட்சியினர் மற்றும் பாஜகவினர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில்இன்று காலை 7 மணியளவில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையொட்டி திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி ஒன்றியங்களில் நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு கடந்த இரண்டு தினங்களாக வாக்கு எண்ணிக்கை மையத்திற்கான முகவர் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வாக்குச்சாவடி முகவர் அனுமதி சீட்டு வழங்குவதில் முறைகேடு […]
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தயாரிக்கப்பட்டுள்ள 20 அடி உயரம் கொண்ட ஐரோப்பிய ஜிஞ்சர் பிரட்கேக் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் கொடைக்கானல் வன்னமட்டுவப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஐரோப்பியர்களால் விரும்பி சுவைக்கப்படும் 20 அடி உயர ஜிஞ்சர் பிரட்கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் ஜேர்மன் சர்ச் சிலை முன்னோட்டமாக கொண்டு இந்த கேக் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் […]
உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்குக்காக பணம், பிரியாணி கொடுப்பதாக வந்த தகவலையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் குடோனில் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி சிவன் கோயில் அருகே தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவருக்குப் போட்டியிட சுந்தரவடிவேல் என்பவரது மனைவி வளர்மதி போட்டியிடுகிறார். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலையொட்டி இந்த நூற்பாலையில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பிரியாணி கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ […]
ஓசியில் சிகிரெட் கேட்டு பேக்கரி பெண்ணை கத்தியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார் . திண்டுக்கல் அருகே ஓசியில் சிகிரெட் கொடுக்க மறுத்த பேக்கரி கடை பெண்ணிடம் கத்தியை காட்டி ஆபாச வார்த்தைகளால் மிரட்டியவன் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டார் .முத்தனம்பட்டியில்உள்ள அந்த பேக்கரியில் நாகலட்சுமி என்ற பெண் இருந்தபோது வந்த வேலடிச்சான்பட்டியை சேர்ந்த சரவணன் ஓசியில் சிகிரெட் கேட்டு கத்தியை காட்டி மிரட்டியுள்ளார் .ஒருவன் கத்தியை காட்டி மிரட்டும் போது ஒருவர் எவ்வித […]
திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் வெங்காயம் பதுக்கப்பட்டுள்ளதா என்று அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்திவருகின்றனர். திண்டுக்கல்லில் வெங்காயம் விற்பதற்க்கு என்றே மீனாட்சிநாயக்கன்பட்டியில் தனியாக இயங்கிவரும் சந்தையில் குடிமைப்பொருள் வழங்கல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடைகளில் வைக்கப்பட்டுள்ள வெங்காயம் இருப்பு மற்றும் விலை நிலவரம் போன்றவற்றையும் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து,புதுக்கோட்டையில் உள்ள வெங்காய மண்டி மற்றும் மொத்த விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும்,இருப்பு வைக்கப்படும் கிடங்குகளையும் ஆய்வு நடத்தினர். வியாபாரிகள் 50டன் வெங்காயத்திற்கு […]
பேருந்து நிலையில் அருகே குடியிருப்புப் பகுதியில் சமையல் எரிவாயு உருளை வெடித்த விபத்தில் தாய், மகள் காயமடைந்தனர். திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள வி.எம்.ஆர். பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாக்கியம்மாள் (70). இவர் தனது மகள் அங்குலட்சுமியுடன் அங்கு வசித்துவருகிறார். இன்று காலை, பாக்கியம்மாள் வீட்டிற்கு வெளியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். வீட்டினுள் மகள் அங்குலட்சுமி சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சமையல் எரிவாயு உருளையில் (சிலிண்டர்) வாயுக்கசிவு ஏற்பட்டு திடீரென உருளை வெடித்தது. இதில், […]
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்கொண்டு விளையாடிவருகிறது. இந்தியாவில் நடைபெற்றுவரும் பரம்பரியமிக்க கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இத்தொடரின் தொடக்க நாளான இன்று குரூப் ஏ, பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கர்நாடக அணியின் கேப்டன் கருண் நாயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய […]
வத்தலக்குண்டு தனியார் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில், முறைகேடாக விடுதியில் தங்கியிருந்ததாக 6 ஜோடிகளை காவல் துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு, கொடைக்கானல் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய இடம் என்பதால் சுமார் 15க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் அங்கு செயல்பட்டு வருகின்றன.இந்தத் தனியார் விடுதிகளில் முறைகேடாக ஆண்கள் சிலர் பெண்களுடன் தங்கி செல்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வத்தலக்குண்டு தனியார் விடுதிகளில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். […]
ஒட்டன்சத்திரத்தில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழும் குழந்தையைக் கால தாமதமின்றி 30 நொடிகளில் மீட்க புதிய கருவியைக் கண்டுபிடித்து, விவசாயி அசத்தியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீரங்கன் புதூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் விவசாயத்தை பிரதானத் தொழிலாக செய்து வருகிறார். தமிழ்நாட்டையே உலுக்கிய மணப்பாறை சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி, உயிரிழந்த சம்பவத்தையடுத்து, குழந்தையைக் காப்பற்றும் விதமாக 30 நொடிகளில் குழந்தையின் கையைப் பிடித்து தூக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். குறிப்பாக, மின்மோட்டார் மூலம் இயங்கும் […]
வேடசந்தூர் பெரிய பள்ளிவாசலில் நபிகள் நாயகம் பிறந்த நாளையொட்டி, நடைபெற்ற மாபெரும் கந்தூரி விழாவில், மதப் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பெரிய பள்ளி வாசலில் வருடந்தோறும் ரபியுல் அவ்வல் மாதத்தில், நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில், வேடசந்தூர் இஸ்லாமிய மக்கள் அனைவரும் கூட்டாக நன்கொடை வழங்கி 2,300 கிலோ கிராம் அரிசியில் சமையல் செய்து, அனைத்து மத மக்களுக்கும் காலை முதலே பிரியாணி […]
தாசில்தார் செல்போனில் பேசியதைக் கண்டு நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோபமடைந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் தமிழ்நாடு அரசின் சார்பில் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நத்தம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அம்மா சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் […]
விவசாயிகள் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில் அவர்களின் குறைகளை கேட்டறியாமல் அலுவலர்கள் சிலர் தொடர்ந்து செல்ஃபோன் பயன்படுத்தியதால் விவசாயிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலை, கீழ்மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு விவசாயமே முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மாதந்தோறும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கொடைக்கானல் சார்ந்த விவசாயிகள் கலந்து கொள்ள முடியவில்லை என்பதால், கொடைக்கானலில் குறை தீர்க்கும் கூட்டம் நடத்திட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. […]
பழனியில் முன்விரோதம் காரணமாக சாமியார் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் பழனியில் வில்வக்குடில் என்ற ஆசிரமம் உள்ளது. இந்த வளாகத்திற்குள் சிவன்கோயில், அங்காளம்மன் கோயில், மாசாணியம்மன் கோயில் மற்றும் இந்த கோயில்களை நிர்வகித்து வந்த செல்லத்துரை என்பவரது சமாதியும் உள்ளது. இந்தக் கோயில்களை ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த மலர்கனிராஜா என்பவர் நிர்வாகம் செய்துவந்தார். இவருக்கும் இந்த ஆசிரமத்திலுள்ள கோயிலில் பணிபுரியும் பூசாரி தர்மராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்தச் […]
ஒட்டன்சத்திரம் பகுதியில் விற்பனை செய்யப்படும் வாழைப்பழத்தில் ரசாயனம் திரவியம் தெளிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தென் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தையாகும். அதேபோல் ஒட்டன்சத்திரம்-பழனி சாலையில் சுமார் பத்திற்கும் மேற்பட்ட வாழைப்பழம் மண்டிகள் உள்ளன.இங்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் வாழைக்காய்கள் மீது ரசாயனம் கலந்த திரவியம் தெளிக்கப்படுகிறது. வாழைக்காய்களைப் பழுக்க வைப்பதற்கு இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்படுப்படுகிறது.சரக்கு வேன் ஒன்றில் கொண்டுவரப்பட்ட ஒரு லோடு வாழைக்காய்கள் மீது பாட்டிலில் உள்ள நீர் போன்ற திரவம் தெளிக்கப்படுகிறது. […]
வாக்குச்சாவடி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது அழகர் சிங்கம்பட்டி. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் ஊரின் அருகே உள்ள சென்னமநாயக்கம்பட்டியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர். இந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அழகர் சிங்கம்பட்டியைச் சேர்ந்த […]
கொடைக்கானல் அருகே தங்களது மகன்களுக்கு மதிய உணவு கொண்டுசென்ற தந்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பூண்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லோகநாதன்(61) என்பவரின் மகன் சிவமுருகன்(15). அதே ஊரைச் சேர்ந்த விவசாயி முருகன்(48) என்பவரின் மகன் உமாநாத்(15). இருவரும் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர்.லோகநாதன், முருகன் ஆகிய இருவரும் தங்களது மகன்களுக்கு மதிய உணவு எடுத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றனர். அப்போது லோகநாதன், […]
2 வயது சிறுமியின் மீது, தனியார் பள்ளி வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வாண்டரான்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று இவர்களது உறவினர் சசிகலா மஞ்சுவின் மூத்த குழந்தையை பள்ளியிலிருந்து அழைப்பதற்காக இளைய குழந்தையான மகிழ்மித்ராவுடன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் முன் பகுதியில் மகிழ்மித்ரா சென்றுள்ளார். ஓட்டுநர் கவனிக்காமல் வாகனத்தை இயக்கியதால் […]
கொடைக்கானலில் உள்ள ஒரு பள்ளியில் இரு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கோல்ப் கிளப் அருகே பவான்ஸ் காந்தி வித்யாஸ்ரம் எனும் தனியாக உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மாணவர்களுக்கிடையே நேற்றிரவு திடீரென வாய் தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த ஒரு மாணவன் மற்றொரு மாணவனான கபில் ராகவேந்திராவை கத்திரிக்கோலால் கழுத்தில் குத்தியது அதுமட்டுமில்லாமல் அங்கிருந்த கிரிக்கெட் […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகம். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]
தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகிறார்கள். ஆனால் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் சிறிது மகிழ்ச்சியில் உள்ளார்கள். இருந்தாலும் கோடை மழையை தமிழக மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு […]