கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து 2020ஆம் ஆண்டு பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு உபவடிநில முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரியுள்ள பாலாறு படுகை பாசனதாரர்கள் வேண்டுகோளினை ஏற்று திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து 27ஆம் தேதியிலிருந்து நான்கு சுற்றுகளில் மொத்தம் 7,600 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட ஆணையிடப்பட்டுள்ளது. […]
Tag: Directive
டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களைத் தகுதி நீக்கம் செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வந்தது.இந்நிலையில், அது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடங்கிய 9,398 பணியிடங்களுக்கு 2019 செப்டம்பர் 01ஆம் தேதியன்று தொகுதி IV தேர்வு பல்துறைகளைச் சார்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் […]
சைதாப்பேட்டை எம்.சி. ராஜா மாணவர் விடுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்காதது தொடர்பாக ஜனவரி 20ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளருக்கும், விடுதி வார்டனுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளைச் சுகாதாரமாக பராமரிக்க உத்தரவிடக்கோரி விழுப்புரம் மாவட்டம், வானூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், “சென்னை சைதாப்பேட்டையிலுள்ள எம்.சி. ராஜா மாணவர் விடுதியில் அடிப்படை வசதியும் […]
தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக தொடக்கக் கல்வி இயக்குநராக இருந்த கருப்புசாமி, மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதே போல மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநராக இருந்த ராமேஸ்வர் முருகன், பள்ளிசாரா கல்வி இயக்குநராக மாற்றபட்டுள்ளார். பள்ளிசாரா கல்வி இயக்குநர் சேதுராமவர்மா தொடக்கக்கல்வி இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக நேற்று தமிழக அரசு மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதை […]
மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மெட்ரிக் பள்ளிகள் இயக்கத்தை தனியார் பள்ளி இயக்கமாக மாற்றி தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.இனி மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தனியார் பள்ளிகள் இயக்ககம் என்று அழைக்கப்படும்.நர்சரி , பிரைமரி உள்ளிட்ட அனைத்து வகையான அரசு உதவி பெறாத பள்ளிகளும் தனியார் பள்ளிகள் இயக்கத்தின் கீழ் வரும் ,தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணதை விட கூடுதலாக வசூலிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.