மர்ம நோயால் 20 ஆடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆயக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான 20 செம்மறி ஆடுகள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர்கள் செந்தில், ஸ்ரீவித்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆடுகளின் தோல் மற்றும் இரத்த மாதிரிகளை சேகரித்தனர். இதனையடுத்து சோதனை முடிவில் […]
Tag: Disease
அரசு மருத்துவமனையில் குவித்து வைக்கப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனைக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், கொரோனா தொற்று பரிசோதனை செய்யவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் கொரோனா வார்டில் பயன்படுத்தப்பட்ட மருந்துகள், முழுகவச ஆடைகள், மருத்துவ கழிவுகள் போன்றவற்றை மூட்டை மூட்டையாக கட்டி வைத்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு நோய் தொற்று […]
வலிப்பு நோய் ஏற்பட்டதால் கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள அம்பிகாபுரம் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கல்லுடைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே வலிப்பு நோய் இருந்துள்ளது. இதற்காக வளநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் நின்றுகொண்டிருந்த செல்வதற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி […]
கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதை அப்புறப்படுத்த வேண்டிய பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கண்டி பகுதியில் வெண்மலையப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்திலுள்ள ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஏராளமான விவசாயிகள் இந்த குளத்தின் அருகே உள்ள தங்களது விவசாய நிலங்களில் முந்திரி பயிரிட்டு அதனை பராமரித்து வருகின்றனர். ஆனால் அந்த பயிருக்கு […]
மலேசியாவில் உயிரிழந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வரும்படி அவரது மனைவி தனது இரு குழந்தைகளுடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரை குளத்தில் கருப்பசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் மேலூரை சேர்ந்த ஒரு தரகர் மூலம் மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்திற்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு வேலைக்கு சென்றிருந்தார். அதன்பின் கடந்த 10 மாதங்களாக வேலை இல்லாத சமயத்தில் தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கருப்பசாமி அவரது மனைவி கோகிலா […]
பறவை காய்ச்சல் எதிரொலியாக கோழி மற்றும் முட்டை விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் பொருட்டு அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோழி மூலம் தயாரிக்கப்படும் கிரில், லாலிபாப், சிக்கன் 65, தந்தூரி போன்ற உணவுகளும், முட்டை மூலம் ஆம்லேட், ஆப்பாயில், பொடிமாஸ் என்று விதவிதமான உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. இதனால் கோழி வகை உணவுகளுக்கு அசைவ பிரியர்களிடம் தனி இடம் உண்டு. ஆனால் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் […]
குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கரூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் கிழக்கு சாலையில் அனைத்து குப்பைகளும் கொட்டப்படுகின்றன. அதோடு அங்குள்ள திருமண மண்டபத்திலிருந்து வாழை மரங்கள், சாப்பிட்ட இலைகள் என பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் அதே இடத்தில் கொட்டப்படுகின்றன. இந்நிலையில் அள்ளப்படாத குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அதோடு இப்பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் தனிப்பட்ட நபர் ஒருவர் சில சமயங்களில் தீவைத்து எரித்து விடுவதால் […]
நெற்பயிர்களை குலை நோய் தாக்கியதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் கிராமத்தில் நெல் சாகுபடியானது 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பயிர்களையும் குலை நோய் தாக்கி சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் இந்நோயால் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து காரியாபட்டி வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் இந்நோய் குறித்து தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வேளாண் […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பயிரிடப்பட்ட உளுந்து பாசிப்பயிறு பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நாகம்பட்டி கிராமத்தில் உளுந்து மற்றும் பாசிப் பயிறு பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இப்பயிர்களை மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. கிட்டத்தட்ட இக்கிராமத்தில் மட்டும் 847 ஏக்கரில் இப்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால் ஏராளமான பயிர்கள் வீணாயின. இந்நிலையில் மீண்டும் பயிர்களை விதைத்தனர். தற்போது இப்பயிர்களை […]
பிறந்தநாள் கொண்டாட்டம் எங்கிருந்து உருவாகி இன்று நாம் கொண்டாடுகிறோம் என்று பார்ப்போம். பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு நோய் என்று சொல்கிறார்கள். ஆமாம் ஒரு நோயில் இருந்து பிறந்ததுதான் பிறந்தநாள் கொண்டாட்டம். பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழ் பண்பாடு இல்லை, இது ஒரு ஐரோப்பிய பண்பாடு ஆகும். கிபி 1347ம் ஆண்டு ஒரு மர்ம நோய் ஐரோப்பிய மக்களை பயங்கரமாக தாக்கியது. எப்படி கொரோனா நம்மை பாடாய் படுத்துகிறது, அதே மாதிரி ஒரு மர்ம நோய் அப்போவே ஐரோப்பிய மக்களை […]
உலகை அச்சுறுத்தும் புற்றுநோய் கடந்த ஆண்டு அதிகளவு உயிர்களை பலி வாங்கியது. உலகின் இரண்டாவது கொடிய நோய். கிட்டத்தட்ட உலக அளவில் 6-ல் 1 பேர் இறக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் 11 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 25 லட்சம் பேர் தற்போது புற்றுநோய் பாதித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இப்படி 100 வகையான புற்றுநோய்கள் இந்த உலகை சூழ்ந்துள்ள நிலையில் மார்பகப் புற்றுநோய்தான் பெண்களை வெகுவாகத் தாக்கும் புற்றுநோயாக இருக்கிறது. அதன் பிறகு புகைப்பிடித்தல், புகையிலை […]
உலகளவில் 40 % இதய நோயாளிகள் இந்தியாவில் இருக்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரபல செய்தி நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா , நொவர்டிஸ் என்ற மருந்து நிறுவனத்துடன் இணைந்து பொதுமக்களிடையே இதய நோய் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘பீட் ஹார்ட் ஃபெயிலியர்’ என்ற நிகழ்ச்சியை முக்கிய பல நகரங்களில் நடத்தியது.மும்பையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மருத்துவதுறையை சார்ந்த பல்வேறு கல்வியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் உலகளவில் 40 % இதய நோயாளிகளில் இந்தியாவில் உள்ளார்கள் என்றும் , 2.60 […]
திருப்பூர் அருகில் நோய் குணமாகாததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் கரட்டாங்காட்டையை சேர்ந்தவர் முருகசாமி. இவருடைய மனைவி ராமாத்தாள் .85வயதான முருகசாமி ஆஸ்துமா நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் . ஒருவாரத்திற்கு முன்புதான் மருத்துவமணையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தன் மனைவியிடம் கூறியுள்ளார். இந்தநிலையில் முருகசாமி திடீரென்று தனது கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்ட அவரது […]