Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொது குளியல் தொட்டியில் குளியல்…. சட்டென்று வந்த கார்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

வேகமாக சென்ற கார் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆலம்பட்டி கிராமத்தில் சதாசிவம் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சதாசிவம் அப்பகுதியில் இருக்கும் பொது குளியல் தொட்டியில் குளித்து விட்டு தனது வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது திருமங்கலம் நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராதவிதமாக சதாசிவத்தின் மீது மோதி விட்டது. இதில் படுகாயமடைந்த சதாசிவத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 4 மாதம் தான் ஆச்சு…. புது மாப்பிள்ளையின் முடிவு…. விசாரணையில் காவல்துறை….!!

திருமணமான நான்கு மாதங்களில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள இடையப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு கடையில் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் அபிநய பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வாழ்க்கையை வெறுத்த வினோத்குமார் மன உளைச்சலில் […]

Categories
மதுரை

காய்கறிப் பைக்குள் என்ன….? பரிசோதித்த காவல்துறை…. காத்திருந்த அதிர்ச்சி….!!

காய்கறிப் பைக்குள் மறைத்து வைத்து கடத்தி சென்ற 4 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பாலமேடு பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையை பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது 4 கிலோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என் மகன் இப்படிதான் நினைத்தான்” தாய்-தந்தையை பறிகொடுத்த சிறுவர்கள்… கண்ணீர் மல்க கேட்ட உதவி…!!

இரண்டு சிறுவர்கள் கொரோனா தொற்றினால் தனது தாய், தந்தை, பாட்டி என மூவரை பறி கொடுத்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனி பகுதியில் தன்ராஜ் என்ற மருந்து கடை உரிமையாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு விபின், சாமுவேல் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவன், மனைவி இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனையடுத்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணுனா தான் சரிவரும்… வசமாக சிக்கிய சிறுவர்கள்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

ஊரடங்கின் விதிமுறைகளை மீறி வெளியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை  அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி பகுதியில் ஊரடங்கு நேரத்தில் சிறுவர்கள் ஒன்று சேர்ந்து கிரிக்கெட் விளையாடி உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை மடக்கிப் பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் அந்த சிறுவர்களை திருக்குறள் ஒப்புவிக்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்னும் அதை கொடுக்கல… போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட தெற்கு மண்டலம் 91-வது வார்டில் மணிகண்டன் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 27ஆம் தேதி மணிகண்டன் உடல்நலக் குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மணிகண்டனின் குடும்பத்தினருக்கு ஈமசடங்கு தொகையான 25 ஆயிரம் ரூபாயை மாநகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் 91 மற்றும் 92-வது வார்டுகளில் பணிபுரியும் பணியாளர்கள் 91-வது வார்டு அலுவலகம் முன்பு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க…. வசமாக சிக்கிய குற்றவாளி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

டாஸ்மாக் கடையில் கொள்ளையடித்து சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காக்காபாளையம் அரசு டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கதவை உடைத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை கொள்ளையடித்து விட்டு  தப்பினர். இது குறித்து காவல் நிலையத்தில் டாஸ்மாக் கடையின் மேலாளர் தவமணி என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பச்சாபாளையம் மதுபான கடை அருகே தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்களே இப்படி பண்ணலாமா… முட்புதரில் செய்த வேலை… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்த டாஸ்மாக் கடை ஊழியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடக்கிபாளையம் காவல்துறையினருக்கு நஞ்சகவுண்டன் புதூர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் கிராம சேவை கட்டிடத்தின் பின்புறம் ஒரு முட்புதரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

போதைக்காக இப்படியா பண்ணுறது… ஆட்டோ டிரைவருக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

போதைக்காக சோடாவில் சானிடைசரை கலந்து குடித்த ஆட்டோ டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் மூர்த்தி என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக தனது மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மூர்த்தி ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் மதுபானங்கள் இல்லாமல் தவித்துள்ளார். எனவே மூர்த்தி சோடாவில் சானிடைசரை கலந்து குடித்ததால் அவருக்கு கண் பார்வை மங்கி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சட்டென நடந்த விபரீதம்… கோர விபத்தில் பறிபோன உயிர்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாலமுருகன் திருச்செந்தூரிலிருந்து குமாரபுரம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து இவர் அப்பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சி அருகில் சென்று கொண்டிருந்த போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பாலமுருகனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது.இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலமுருகன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விழிப்புணர்வு நிகழ்ச்சி… காவல்துறையினரின் நடனம்… பொதுமக்களுக்கு அறிவுரை…!!

காவல்துறையினர் கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு நடனமாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் காவல் துறையினரின் கொரோனா விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த பிரச்சார நிகழ்ச்சியில் காவல்துறையினர் முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியுடன் நின்றுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு நடனமாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தின் மூலம் கோரானா தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு உடனே போடுங்க…. காவல்துறையினரிடம் வாக்குவாதம்… திருப்பூரில் பரபரப்பு…!!

கொரோனா தடுப்பூசி உடனடியாக போட வேண்டும் என கூறி பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டோக்கன்கள் அடிப்படையில் தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனையடுத்து 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்ட பலர் டோக்கன் அடிப்படையில் நீண்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இங்க இருந்த டி.வி-யை காணும்… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… கைது செய்த காவல்துறையினர்…!!

எல்.இ.டி டி.வி-யை திருடிய குற்றத்திற்காக இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த எல்.இ.டி டி.வி-யை திருடிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனை அடுத்து காலையில் வசந்தகுமார் டி.வி திருடு போனதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட பொருள்…. சிக்கினார் மாவட்ட செயலாளர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த குற்றத்திற்காக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பரசலூர் கிராமத்தில் மயில்வாகனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இவருடைய வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்படி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு…. ஊரடங்கை மீறிய செயல்…. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்….!!

ஊரடங்கை மீறி தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்த 90 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதில் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பால் கடை, மருந்து கடை, பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தவிர அனைத்து கடைகளும் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மணல்மேடு கடைவீதி, பஸ் நிலையம், வில்லியனூர், கடலங்குடி, […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு…. பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட்…. தேசிய புலனாய்வு துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபரை தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 7 பேரை தேசிய புலனாய்வுத் துறையினர் கைது செய்து இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜாமினில் வெளியே வந்த கோவையை சேர்ந்த முகமது ஆசிக் என்பவர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணன்… நடந்த கொடூர சம்பவம்… திருச்சியில் பரபரப்பு…!!

குடும்ப தகராறில் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் ஆறுமுகம் என்ற மாநகராட்சி துப்புரவு பணியாளர் வசித்து வருகிறார். இவருக்கு துரைசாமி, ஐயப்பன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் துரைசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டிலேயே திருமணமாகாமல் இருந்துள்ளார். மேலும் ஒரு தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக ஐயப்பன் வேலை பார்த்து வந்துள்ளார். இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்ணன் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மண்ணுக்குள்ள மறைச்சு வச்சிருக்காங்க… பெண் செய்த வேலை… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

100 லிட்டர் சாராய ஊறலை காவல் துறையினர் கண்டுபிடித்து அழித்து விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள வளநாடு காவல்துறையினருக்கு வெள்ளியங்குடி பகுதியில் வசிக்கும் லட்சுமி என்பவரின் தோட்டத்தில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மண்ணுக்கு அடியில் புதைத்து வைக்கப்பட்ட நிலையில் ஒரு பேரலில் இருந்த 100 லிட்டர் சாராய ஊறலை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அதனை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதிர்ச்சியடைந்த தங்கை… மகளை கற்பமாக்கிய முதியவர்…. திருச்சியில் பரபரப்பு…!!

61 வயதான முதியவர் மாற்றுத்திறனாளி மகளை கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூர் பகுதியில் 61 வயதான கூலித் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் இவருடைய மூத்த மகள் கை, கால்களை அசைக்க முடியாமலும், பேச முடியாமலும் மாற்றுத்திறனாளியாக இருக்கின்றார். இந்நிலையில் திருமணம் ஆகாத  இந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு திடீரென உடல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அவங்க அதை பயன்படுத்துறாங்க… உடல் நலக்குறைவு ஏற்படும் அபாயம்… பொதுமக்களின் குற்றச்சாட்டு…!!

தொழிற்சாலையில் விறகிற்கு பதில் நிலக்கரியை பயன்படுத்துவதால் அதிகளவு புகை வெளியேறி பொது மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணெரிமுக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலை தொழிற்சாலையில் தேயிலைத்தூள் தயாரிக்கும் போது விறகுக்கு பதிலாக நிலக்கரியை பயன்படுத்துகின்றனர். இதனால் அளவுக்கு அதிகமான புகை தொழிற்சாலையிலிருந்து வெளியேறுவதால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கண்ணெரிச்சல், தலைசுற்றல், மூச்சுத் திணறல் போன்ற உடல் நலக் குறைவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சின்ன வயசிலிருந்து சேர்த்தது… சிறுவர்களின் சிறப்பான செயல்…. குவியும் பாராட்டுகள்….!!

கொரோனா நிவாரண நிதிக்காக சிறுவர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை கலெக்டரிடம் வழங்கியுள்ளனர். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற பணத்தை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு 3 சிறுவர்கள் கொரோனா நிவாரண நிதிக்கு கொடுப்பதற்காக தங்களது உண்டியல் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அருவங்காடு பகுதியில் வசிக்கும் கௌஷிக், ஊட்டி நியூ லைன் பகுதியில் வசிக்கும் கீர்த்திகா மற்றும் ஊட்டி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அஞ்சலிக்காக வைக்க கூடாது… அதிகாரிகளின் உடனடி நடவடிக்கை… நீலகியில் பரபரப்பு…!!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் உடலை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 400-க்கும் அதிகமாக இருக்கின்றது. இந்நிலையில் ஊட்டி நொண்டி மேடு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இறந்த நபரின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதுலதான் எல்லாமே இருக்கு…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ரயிலில் வைத்து பெண்ணிடம் 3 வாலிபர்கள் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதி இந்த தம்பதிகள் சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ரயில் திருச்சி முடுக்குபட்டு ரயில்வே கிராசிங்கில் நின்று கொண்டிருந்தபோது, தெய்வானை கையில் இருந்த பையை 3 மர்ம நபர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் இதான் இருக்கா….? கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் கஞ்சா பதுக்கி வைத்திருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதுல என்ன இருக்கு…? வசமாக சிக்கிய இருவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மது பாட்டில்களை கடத்தி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவ்வழியாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அதில் கர்நாடக மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மதுபாட்டில்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அதை யார் எடுத்துட்டு போனா…? கட்சி அலுவலகத்தில் பதற்றம்… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்து பணம் மற்றும் சால்வைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நேதாஜி சாலையில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தினை மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் என்பவர் நிர்வகித்து வருகின்றார். இந்நிலையில் இந்த அலுவலகத்தின் ஜன்னல் வழியே உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சால்வைகள் மற்றும் 10 ஆயிரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயமே இல்ல… வசமாக சிக்கிய 4 பேர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மதுவிலக்கு காவல்துறையினர் ஓசூர் ஜூஜூவாடி மற்றும் சுங்க சாவடி போன்ற பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவ்வழியாக வந்த சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கர்நாடக மதுபாட்டில்கள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த குற்றத்துக்காக காவல்துறையினர் மூவேந்தன், முனிராஜ், மருதுபாண்டியன், அன்பரசன் ஆகிய 4 பேரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதை பற்றி பேசும் போது… தாய்மாமனின் மூர்கத்தனமான செயல்… கோவையில் பரபரப்பு…!!

குடும்ப பிரச்சனை காரணமாக தாய்மாமன் வாலிபரை தாக்கி அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் தொகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மநாபன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக பத்மநாபன் குடும்ப பிரச்சனை காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் பத்மநாபனும் பழனிகவுண்டன் புதூரில் இருக்கும் இவரது தாய் மாமா கண்ணன் என்பவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துள்ளனர். இதனையடுத்து குடும்ப பிரச்சனை குறித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே தப்பா நடக்குது… விரக்தியில் பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் கணவன்-மனைவி வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டதால் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் அந்த பெண்ணின் உறவினர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் கணவன் ஒரு புறம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில், உறவினர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அந்த பெண் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எத்தன தடவை சொல்லுறது… விதிமுறைகளை மீறி நடக்காதீங்க…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

விதிமுறைகளை மீறி திறந்து வைக்கப்பட்டிருந்த கடையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் காய்கறி மற்றும் மளிகை கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதிகாரிகள் ஒரு கடையின் ஷட்டர் பாதி அளவு திறக்கப்பட்டு பொருட்கள் விற்பனை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதனால் தான் லேட் ஆகிட்டு…. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்… அதிகாரிகளின் தகவல்…!!

மருந்துகள் வராததால் தடுப்பூசி போடுவதற்காக சென்ற பொதுமக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி நெகமம், கோட்டூர், ஆனைமலை போன்ற பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இங்கு 18 வயது முதல் 44 வயது வரை இருக்கும் 700 பேருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட 300 பேருக்கும் தடுப்பூசி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருவேளை மறுபடி வந்துருக்குமோ… பெண் எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டைப் பாளையம் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் உடனடியாக தனியார் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சிகிச்சை பெற்று குணம் அடைந்து அனைவரும் வீடு திரும்பி விட்டனர். அப்போது திடீரென அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளிய அப்படியே தான் இருக்கு… மர்ம நபர்களின் செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

டாஸ்மாக் கடையின் மேற்கூரையில் துளையிட்டு மர்ம நபர்கள் மது பாட்டில்களை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகள் உட்பட அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விமான நிலையம் அருகில் இருக்கும் ஒரு டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு போனதாக பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ண மாட்டோம்… உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்… அதிகாரிகளின் அறிவுரை…!!

அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றியவர்களை நிறுத்தி அபராதம் விதித்து காவல்துறையினர் உறுதிமொழி எடுக்க செய்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என கண்காணிப்பதற்காக காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்களை நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களை சமூக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 1093 டன்… முக்கிய இடங்களில் தீவிர பணி… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

சென்னை மாநகராட்சியில் தீவிர தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் ஒரே நாளில் 1093 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தேவையற்ற கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, தீவிர தூய்மை பணி திட்டத்தின் கீழ் மாநகராட்சி கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி நீண்ட நாட்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆர்டர் செய்து வாங்குறாங்க… அசைவ பிரியர்களின் ஆசை… ஹோட்டல்களில் பின்பற்றப்படும் விதிகள்…!!

பொதுமக்கள் ஹோட்டல்களில் சமூக இடைவெளியை பின்பற்றி அசைவ உணவுகளை வாங்கி செல்கின்றனர். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளையும் திறப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும்  வாகனங்கள் மூலம் மக்களுக்கு காய்கறிகளை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இறைச்சி கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டதால் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் தற்போது பொதுமக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தூக்க கலக்கமா இருந்துச்சு” தலை குப்புற கவிழ்ந்த கார்… சென்னையில் பரபரப்பு…!!

தடுப்பு சுவரில் மோதிய கார் தலைகுப்புற கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் அப்ரின் கான் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அப்ரின் கான் தனது உறவினரான சையத் என்பவருடன் இ-பதிவு செய்துவிட்டு காரில் சென்னைக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் துபாயில் இருந்து வரும் ஒரு உறவினரை அழைப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் அப்ரின் கான் கிண்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது தூக்க கலக்கத்தில் காரை சரியாக ஓட்டவில்லை. இதனால் கட்டுப்பாட்டை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படி வீணா போகுதே…. மும்முரமாக நடைபெறும் பணி… பொதுமக்களின் கருத்து…!!

தொட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சாலையில் வீணாக பெருக்கெடுத்து ஓடியது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் குனியமுத்தூர், கிணத்துக்கடவு, குறிச்சி போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீரானது குனியமுத்தூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ்  விநியோகிக்கப்படுகிறது. எனவே கிணத்துக்கடவில் அமைக்கப்பட்டுள்ள தரைமட்ட தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்பட்ட பிறகு குறிச்சி, குனியமுத்தூர் போன்ற பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தரைமட்ட தொட்டியில் இருக்கும் குழாயில் திடீரென விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குழாயில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சட்டென அங்கு திரும்பியதால்…. கோர விபத்தில் பறிபோன உயிர்கள்… கோவையில் பரபரப்பு….!!

லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவில்பாளையம் காளியண்ணன் புதூர் பகுதியில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேது விக்னேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேது விக்னேஷ் மற்றும் அவருடன் பணியாற்றும் கிருஷ்ணராஜ் மற்றும் சங்கர் நாராயணன் போன்றோர் இரவு வேலையை முடித்து விட்டு காரில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நடந்த சம்பவம்…. கைரேகை நிபுணர்களுடன் ஆய்வு…. போலீஸ் வலைவீச்சு….!!

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 8 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பலவஞ்சிபாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான யுவராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சிவராஜ் வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பக்கத்துலதான் போயிருந்தேன்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் சிக்கிய 2 பேர்….!!

9 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்டுவெல் காலனி பகுதியில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெளியே சென்ற சந்தானகிருஷ்ணன் திரும்பி வந்து பார்த்தபோது தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றதை அறிந்து உடனே தென்பாகம் காவல்துறையினரிடம் புகார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும் வகையில் நின்ற கார்…. கண்காணித்த காவல்துறை…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

சட்டவிரோதமாக காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முனியசாமிபுரம் பகுதியில் தென்பாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த ஒரு காரை பார்த்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் தூத்துக்குடி முனியசாமிபுரம் பகுதியில் வசிக்கும் டேனியல் ராஜ் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காரில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக டேனியல் ராஜை காவல்துறையினர் கைது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இத பண்ணாதீங்க…. கிடைத்தது ரகசிய தகவல்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை காவல்துறையினருக்கு திருமலையான்பற்றி பகுதியில் சிலர் பணம் வைத்து விளையாடிக் கொண்டு இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிரமாக கண்காணித்து உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக அய்யப்பன், அழகர்சாமி, அப்புகுட்டி என்ற மூன்று வாலிபர்களை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டிவி பார்த்து கொண்டிருந்த மூதாட்டி…. உள்ளே புகுந்து ஹெல்மெட் அணிந்த வாலிபர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்து ஹெல்மெட் அணிந்த வாலிபர் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பாப்பம்மாள் என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது ஹெல்மெட் அணிந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து விட்டார். இதனையடுத்து மூதாட்டி சற்றும் எதிர்பாராத சமயத்தில் அந்த வாலிபர் அவர் அணிந்திருந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் இத்தனை பேர் போட்டுட்டாங்க…. மொத்தம் 117 தடுப்பூசி மையங்கள்…. ஆர்வம் காட்டும் பொதுமக்கள்….!!

நேற்று ஒரே நாளில் 10,330 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்களை விட அதிக ஆண்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்கள், தனியார் மையங்கள் என மொத்தம் 117 மையங்களில் தினமும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நல்ல வேளை ஒன்னும் ஆகல… சட்டென கவிழ்ந்த மினி லாரி… நீலகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வாளவயல் பகுதியில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சக்தி தேயிலை நிரப்பும் சாக்கு பைகளை தனது மினி லாரியில் ஏற்றிக்கொண்டு அட்டி பகுதிக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து அட்டி பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென சக்தியின் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக சக்தி காயமின்றி உயிர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இது பொம்மை துப்பாக்கி” வசமாக சிக்கிய இருவர்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காவல்துறையினர் சந்தேகப்படும் படியாக விடுதியில் தங்கியிருந்த இரண்டு பேரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் விடுதியில் இரண்டு பேர் சந்தேகப்படும்படியாக தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த 2 பேரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உணவின்றி தவிக்கும் குரங்குகள்… காவல்துறையினரின் சிறப்பான செயல்… குவியும் பாராட்டுக்கள்…!!

உணவின்றி தவிக்கும் குரங்குகளுக்கு பழங்கள் கொடுத்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் வெறிச்சோடிய சாலைகளில் ஆடு, மாடு குதிரை போன்ற விலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன. இந்நிலையில் தேவையான உணவு கிடைக்காமல் மஞ்சூர் பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிந்துள்ளது. இதனைப் பார்த்த மஞ்சூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் பிற காவல்துறையினர் உணவு கிடைக்காமல் சுற்றித்திரிந்த குரங்குகளுக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்… இறந்து கிடந்த கரடி குட்டி… வனத்துறையினரின் தீவிர விசாரணை…!!

சாலையோரம் பெண் கரடி குட்டி இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது சிறியூர் சாலையோரம் கரடி குட்டி ஒன்று இறந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அவர் ஏறிட்டார்னு நினைச்சேன்… புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

அடுத்த மாதம் திருமணம் நடைபெறப்போகும் நிலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வீட்டிபடி பகுதியில் முகமது சாலீக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பக்கனா பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணிற்கும் வரும் ஜூன் மாதம் 17ஆம் தேதி திருமணம் நடத்த இரு குடும்பத்தினரும் நிச்சயம் செய்துள்ளனர். இந்நிலையில் முகமது  மினி லாரியில் பசுந்தேயிலை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது மினி லாரி டிரைவர் முகமது லாரியில் ஏறி […]

Categories

Tech |