Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

55 ஆண்டு கால திருமண வாழ்வு…. இறப்பிலும் இணை பிரியாத தம்பதி…. சோகத்தில் மூழ்கிய கிராமம்….!!

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாத்தூர் பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் காதலித்து சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும் 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக சுப்பிரமணிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் சுப்பிரமணியனின் உறவினர்கள் அவருக்கு இறுதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பலமாக வீசிய சூறைக்காற்று…. வேரோடு சாய்ந்த மரங்கள்…. அப்புறப்படுத்திய நெடுஞ்சாலைத்துறையினர்….!!

சூறாவளி காற்றினால் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டியில் லேசான மழை பெய்துள்ளது. இந்நிலையில் மழையுடன் வீசிய சூறாவளி காற்றில் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் இருக்கும் சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்து விட்டது. இதேபோன்று கணக்கம்பாளையம் பகுதியில் இருக்கும் மற்றொரு மரமும் சூறாவளி காற்றால் விழுந்துவிட்டது. இதுகுறித்து உடனடியாக நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விரைந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவு…. வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர்…. வெறிச்சோடிய சாலைகள்….!!

ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாலைகள் மற்றும் கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம் காவிரி ஆற்று பாலத்தில் போக்குவரத்து நெரிசல் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவில் வளாகத்திலேயே சமையல்… அதிகாரிகளின் தீவிர முயற்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

கோவில் நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியினை மாவட்ட உதவி ஆணையர் கருணாநிதி தொடங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சார் அங்க வச்சிதான் விக்குறாங்க… வசமாக சிக்கிய வாலிபர்கள்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 960 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் காய்கறி மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த ரவிக்குமார், வைகுண்டம் ஆகிய இருவரை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த 960 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செல்வநாயகபுரம் தொகுதியில் தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சில வாலிபர்கள் மது விற்பனை செய்து கொண்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மது விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் செல்வம், விஜய் பொன்னுசாமி போன்ற 3 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதுக்காக இப்படி பண்ணலாமா… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வயிறு வலியால் துடித்த இளம்பெண் மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சென்னல்பட்டி பகுதியில் முத்துசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு பூமாதேவி என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பூமாதேவிக்கு அடிக்கடி வயிறு வலி வந்துள்ளது. இதற்காக பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிறுவலி குணமடையவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு பாதுகாப்பு இல்ல… தொழிலாளர்களின் திடீர் போராட்டம்… நீலகிரியில் பரபரப்பு…!!

பாதுகாப்பு வேண்டி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் வசிக்கும் பூங்கொடி என்ற தொழிலாளியை காட்டுயானை மிதித்து கொன்று விட்டது. இந்நிலையில் தேவாலா, நெல்லியாளம், பாண்டியாறு, சேரங்கோடு மற்றும் கொளப்பள்ளி போன்ற இடங்களில் வேலை பார்க்கும் அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காட்டு யானையிடம் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பணியாளர்களுக்கு தொற்று உறுதி… மூடப்பட்ட தலைமை அலுவலகம்… தீவிரப்படுத்தப்படும் சுகாதார நடவடிக்கைகள்…!!

தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தின் தலைமையகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதில் குன்னூர் சிம்ஸ் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இனிமேல் நீ பேசக்கூடாது” காவல் அதிகாரியின் மருமகள் எடுத்த விபரீத முடிவு… தந்தையின் பரபரப்பு புகார்…!!

செல்போன் பேசக்கூடாது என கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நல்லியக்கோடன் நகர் பகுதியில் வேலு என்ற ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில் முருகன் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு புதுக்குப்பம் பகுதியில் வசிக்கும் பட்டதாரியான விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தயவு செய்து வெளிய வராதீங்க… கைகூப்பி கேட்டு கொண்ட அதிகாரிகள்… தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை…!!

காவல் அதிகாரிகள் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் நிறுத்தி தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என கைகூப்பி வணங்கியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இதனால் காலை 10 மணி வரை மட்டுமே மளிகை மற்றும் காய்கறி கடைகள் செயல்பட அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கடை வீதிகளுக்கு கிராமப்புறங்களை சேர்ந்த ஏராளமானோர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவு…. கடுமையாக சரிந்த பழத்தின் விலை…. பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள்….!!

ஊரடங்கு காரணமாக தர்பூசணி மற்றும் கிர்ணிப் பழத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சாலையோர பழ வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வெயில் வாட்டி வதைக்கும் இந்த நேரத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவு…. மூடப்பட்ட பள்ளிவாசல்கள்…. வீடுகளில் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்….!!

முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே தொழுகை நடத்தியுள்ளனர். இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் பண்டிகையை வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ரம்ஜான் பண்டிகை எளிமையாகவே கொண்டாடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் காரணமாக கடந்த 10ஆம் தேதி முதல் வருகிற 24-ஆம் தேதி வரை தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் தமிழகம் முழுவதும் பள்ளிவாசல்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாட்டி வதைத்த வெயில்…. திடீரென்று பெய்த மழை…. மகிழ்ச்சியில் நாகை மக்கள்….!!

நாகையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து கொண்டிருந்தது. இந்த வெயிலின் தாக்கம் இரவிலும் தெரிந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி முதல் நாகையில் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக வேதாரண்யம், வேளாங்கண்ணி, கீழ்வேளூர் போன்ற பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்துள்ளது. இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இதனை […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 73 ஆயிரம் மதிப்பு…. டாஸ்மாக் கடையின் 2 காவலாளிகளுக்கு நேர்ந்த பயங்கரம்…. 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை….!!

டாஸ்மார்க் கடையின் காவலாளிகளை கட்டையால் தாக்கி கயிறால் கட்டிப் போட்டுவிட்டு ரூபாய் 73 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை ஒரு கும்பல் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 10-ஆம் தேதி முதல் வருகின்ற 24 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல் கீரனூர் பகுதியைச் சேர்ந்த டாஸ்மார்க் கடையில் மைக்கேல்ராஜ் மற்றும் அந்தோணி ஆகிய இருவரும் இரவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அவர் தற்கொலை பண்ணிக்கிட்டார்…. நாடகமாடிய பெண்…. உண்மையை அம்பலப்படுத்திய கணவரின் மரண வாக்குமூலம்….!!

கணவர் மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு மனைவி எரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மடிப்பாக்கம் பகுதியில் பாண்டி என்ற சலவைத் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பாண்டி மது அருந்திவிட்டு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கணவர் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கியுள்ளனர். இந்நிலையில் கணவன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இறப்பதற்கு முன்பும் கடமை தவறவில்லை… 10 ஆயிரத்திற்கும் மேல் தாண்டிய எண்ணிக்கை… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை தைரியமாக பிடித்தவர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கள்ளிக்குப்பம் பகுதியில் ஸ்டான்லி பெர்னாண்டஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேமராமேனாக பொதிகை தொலைக்காட்சியில் பணிபுரிந்து பின் ஓய்வு பெற்றவர் ஆவார். மேலும் ஸ்டான்லி பாம்பு பிடிக்கும் நிபுணராக கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இருந்துள்ளார். இவருக்கு தெரசா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செட்ரிக் என்ற மகனும், ஷெரின் இம்மானுவேல் என்ற மகளும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடனை திருப்பி கொடுங்க…. சகோதரர்களை தாக்கிய 3 பேர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

அண்ணனையும் தம்பியையும் தாக்கிய குற்றத்திற்காக 3 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் தியாகராஜன், அருள்செல்வன் என்ற அண்ணன் தம்பி வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருட்செல்வன் தனது தந்தைக்கு கடனை திருப்பி தர வேண்டிய குருமூர்த்தி என்பவரிடம் பணம் கேட்டுள்ளார். அந்த சமயத்தில் குருமூர்த்திக்கும் அருள் செல்வனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த குருமூர்த்தியின் உறவினர்களான சின்னதுரை, ரவி, செல்வகுமார் ஆகிய 3 பேரும் அருகில் இருந்த இரும்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு…. வாகனங்களில் சுற்றித்திரிந்த 203 பேர்…. அபராதம் விதித்த காவல்துறை….!!

ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 203 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த இரு நாட்களாக மதுரையில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 203 பேர் மீது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. ரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி…. கைது செய்த காவல்துறை….!!

குடும்பத் தகராறில் மனைவியை கணவன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலபணங்காடி கிராமத்தில் அருண்குமார்-உஷா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அன்று இந்த தகராறு முற்றியதால் உஷாவை அருண்குமார் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த உஷா சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதற்குள்ள எப்படி போச்சு… சட்டென எட்டிப்பார்த்த மலை பாம்பு… அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…!!

சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை வனத்துறையினர் பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையை ஒட்டி அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த அணையின் கரையோரத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பதற்காக அங்கு தனி அறை ஒன்று உள்ளது. இந்நிலையில் திடீரென மலைப்பாம்பு ஒன்று இந்த அறைக்குள் நுழைந்துவிட்டது. இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

4 லட்ச ரூபாய் இழப்பீடு… பெண்ணிற்கு நடந்த விபரீதம்… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

யானை மிதித்துக் கொன்ற பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக வனத்துறையினர் 4 லட்ச ரூபாயை வழங்கியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திடீரென அப்பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை பூங்கொடியை மிதித்து கொன்று விட்டது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன்பிறகு பிரேதப் பரிசோதனை செய்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்…. 7 மாதம் கர்ப்பமாக உள்ள சிறுமி…. போக்சோவில் கைது செய்த காவல்துறை….!!

சிறுமியை திருமணம் செய்து கற்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபர் போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள காடுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவருக்கு வயது 23ஆகும். இவருக்கும் உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள 16 வயது சிறுமிக்கும் கடந்த ஜூன் மாதம் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பின்னர் செல்லப்பாண்டி காடுபட்டி கிராமத்தில் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கதவில் தொங்கிய சிதைந்த உடல்… அதிர்ச்சியடைந்த காவலாளி… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

சிறுத்தைப்புலி ஒன்று நாயை கவ்வி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள வண்டிச்சோலை, அட்டடி, கரோலினா போன்ற பகுதிகளில் சிறுத்தை புலி நடமாட்டமானது அதிக அளவில் உள்ளதால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் குன்னூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியின் முன் பக்க கதவில் சிதைந்த நிலையில் தொங்கிக்கொண்டிருந்த நாயின் உடலை கண்டு வனத்துறையினருக்கு காவலாளி தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவங்க ஏன் அங்க போனாங்க… மகன் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தாய் கோபித்துக் கொண்டு சென்றதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தட்டார்மடம் நயினார்புரம் பகுதியில் சுயம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொன்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிவ பாலகிருஷ்ணன் என்ற 17 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வாங்கிய டிவிக்கு தவணை கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பொன்மணி செட்டிவிளை பகுதியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

ஏற்கனவே திருமணமானவர் ஆதிவாசி கிராமத்தில் வசிக்கும் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி அருகிலிருக்கும் ஆதிவாசி கிராமத்தில் 19 வயது இளம்பெண் வசித்து வருகின்றார். இந்நிலையில் திடீரென இந்த இளம்பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதால் உடனடியாக அவரது பெற்றோர் இளம்பெண்ணை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவர்கள் அந்த பெண்ணை பரிசோதித்து பார்த்த போது அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தம்பதி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. வலைவீசிய காவல்துறை….!!

வீடு புகுந்து நகை, பணம் உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மங்களபுரம் பகுதியில் ராதாகிருஷ்ணன்-லட்சுமி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். பின்னர் மாலை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மேம்படுத்தப்படும் வசதிகள்… அதிகாரிகளின் திடீர் ஆய்வு… பின்பற்றப்படும் தீவிர கட்டுப்பாடுகள்…!!

கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படும் தனியார் பள்ளியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்வதால் அங்கு படுக்கை வசதிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிகாரிகள் கோத்தகிரி அருகில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்ற முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து நீலகிரி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்கும் இங்கும் சிதறிய பொருட்கள்… சேதமடைந்த சனி பகவான் கோவில்… வனத்துறையினரின் தீவிர முயற்சி…!!

காட்டு யானைகள் ஒன்று சேர்ந்து சனி பகவானின் கோவிலை சேதப்படுத்திய சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் காட்டுயானைகள் கூடலூர் பகுதியில் அமைந்துள்ள சனிபகவான் கோவிலை முற்றுகையிட்டது. அதன்பின் காட்டு யானைகள் கோவிலின் கதவை உடைத்து அங்கிருந்த மரச்சாமான்கள் மற்றும் பூஜைப் பொருட்களை போன்றவற்றை எடுத்து வீசியுள்ளன. இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இந்த காலத்துல ரொம்ப நடக்குது… உடனே அந்த நம்பர் கால் பண்ணுங்க… கலெக்டரின் அறிவுரை…!!

குழந்தை திருமணங்கள் நடைபெறுவது அறிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி கலெக்டர் கூறியுள்ளார். இன்றைய காலகட்டங்களில் பல மாவட்டங்களில் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக குழந்தை திருமண தடுப்பு சட்டம் 2006-ன் படி 21 வயது நிறைவடையாத ஆணிற்கும், 18 வயது முடிவு பெறாத பெண்ணிற்கும் நடைபெறும் திருமணமானது சட்டப்படி மிகப் பெரும் குற்றமாகும். இது குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சீதா லட்சுமி கூறும்போது, இவ்வாறு சட்டத்தை மீறி பெரியவர்களே முன்னின்று நடத்தும் திருமணத்திற்கு இரண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வயிற்று வலி…. சிகிச்சை அளித்தும் பலனில்லை…. மனமுடைந்த கூலிதொழிலாயின் முடிவு….!!

வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள கூழைய்யாபுரம் பகுதியில் வசித்து வந்தவர் அழகர். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வயிற்று வலியால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த வயிற்று வலிக்காக இவர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் எதுவும் பலன் அளிக்காத காரணத்தினால் விரக்தியில் மனவேதனை அடைந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 1/2 கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு… தனியாக தவித்த குடும்பத்தினர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 1/2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் சுஜித் தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கம்பெனியில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜித் தாஸ் தனது காரில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு சென்ற போது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார். இதனால் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கிடைத்தது ரகசிய தகவல்…. ரோந்து பணியில் சிக்கிய வாலிபர்…. கைது செய்த காவல்துறை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நகர்ப்பகுதி முழுவதும் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பைபாஸ் ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கண்காணித்து உள்ளனர். இதில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு வாலிபர் நின்று கொண்டிருப்பதை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தல்…. ஒத்திவைக்க தொடுக்கப்பட்ட மனு…. தளர்வுக்கு பின்னர் நடத்த உத்தரவிட்ட நீதிபதி….!!

மதுரை ஆவின் இயக்குனர்கள் தேர்தலை ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் நடத்தவேண்டும் என மதுரை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆவின் தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் பெரியகருப்பன் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது “மதுரை ஆவினில் 11 இயக்குனர்கள் பதவிக்கான தேர்தல் கடந்த ஆண்டு நடந்துள்ளது. இதில் அதிமுகவை சேர்ந்த 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து ஏற்கனவே ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டாக்டர் பண்ணுற வேலையா இது… கண்டுபிடித்த காவல்துறையினர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

ரெம்டெசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்த டாக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் குடிமை பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கள்ளசந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்த குற்றத்திற்காக தினேஷை கைது செய்துள்ளனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் டாக்டர் அதிபதி என்பவரும் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஏற்கனவே கைதான […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரொம்ப புழுக்கமா இருந்துச்சு…. வீடு புகுந்த மர்மநபர்…. விசாரணையில் காவல்துறை….!!

வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள மேலப்பட்டி கிராமத்தில் தங்கசாமி-புவனேஸ்வரி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதியில் வெயில் அதிகமாக இருப்பதால் இரவில் காற்றோட்டமாக இருக்க கதவைத் திறந்து வைத்து துவங்கியுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் 2 மணிக்கு வீடு புகுந்து புவனேஸ்வரி அணிந்திருந்த 5 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இது அதற்காக ஒதுக்கப்பட்ட இடம்… வாக்குவாதம் செய்த வியாபாரிகள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் மேம்பாலத்திலிருந்து சத்தியமூர்த்தி நகர் பக்கிங்காம் கால்வாய் வரை 40 அடி அகலம் உள்ள சர்வீஸ் சாலை இருக்கின்றது. இந்த சாலையை ஒட்டி 6 அடி அகல இடம் மழைநீர் கால்வாய் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பகுதியில் வசிக்கும் சிலர் இந்த இடத்தை ஆக்கிரமித்து வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் கடைகளை கட்டியிருக்கின்றனர். இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இவங்கதான் அதை பண்ணிருக்காங்க…. மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கண்டுபிடித்த காவல்துறையினர்…!!

மூதாட்டியின் வீட்டில் இருந்த ஒரு பவுன் தங்க நகையை திருடிச் சென்ற வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊமையனூர் பகுதியில் பேபி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் தனது விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மூதாட்டி கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 1 1/2 பவுன் தங்க நகை காணாமல் போனதை அறிந்து ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துணிச்சலுடன் செயல்பட்ட பெண்…. மாட்டிக்கொண்ட மாப்பிள்ளை வீட்டார்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறை….!!

பெண்ணிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்திய குற்றத்திற்காக கணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள சமயபுரம் பகுதியில் கௌரிசங்கர்-மாலதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் திருமணத்தின் போது மாலதியின் பெற்றோர் 51 பவுன் நகை மற்றும் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகள் ஆகியவற்றை மாப்பிள்ளையின் வீட்டிற்கு கொடுத்துள்ளனர். இந்நிலையில் தற்போது மேலும் கூடுதலாக வரதட்சணை கேட்டு கௌரிசங்கரும் அவரது குடும்பத்தினரும் மாலதியை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவங்களுக்கும் டெஸ்ட் பண்ணியாச்சு… அதிகாரிகளின் தீவிர முயற்சி… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இதுவரை 884 பேர்கோரோனாவால் பாதிக்கப்பட்டு, 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அரசம்பாளையம் பகுதியில் இருக்கும் தொழிற்சாலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப முக்கியம்… அதிகாரிகளின் தீவிர சோதனை… பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்…!!

முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்த பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் வைத்தியநாதன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் படி வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி கோவில்பாளையம், கிணத்துக்கடவு போன்ற பகுதிகளில் வருவாய்த்துறையினர் கண்காணிப்பு குழுவினரை அமைத்து விதிமுறைகளை முறையாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

யார் அந்த முதியவர்….? அதிகாலை 3 மணிக்கு நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் கட்டகுலம் பிரிவில் நேற்று அதிகாலை 3 மணிக்கு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இறந்த முதியவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது இன்னும் தெரியவரவில்லை. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சரவண பொய்கையில் குளியல்…. கொத்தனாருக்கு நேர்ந்த சோகம்…. விசாரணை நடத்தும் காவல்துறை….!!

சரவண பொய்கையில் குளிக்கச் சென்ற கொத்தனார் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் பகுதியில் கொத்தனார் பழனிகுமார் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று மாலை சரவண பொய்கையில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அங்கு அவர் படிக்கட்டில் அமர்ந்து குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் தவறி விழுந்து ஆழமான பகுதிக்குள் சென்று நீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விஷம் வைத்து கொன்றது யார்….? ஒரே நேரத்தில் செத்து கிடந்த 7 நாய்கள்…. புகார் அளித்தார் விலங்குகள் நல வாரிய ஆலோசகர்….!!

தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி விலங்குகள் நல வாரிய ஆலோசகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கோமதிபுரம் பகுதியில் விலங்குகள் நலவாரிய ஆலோசகர் மயூர் ஹசிஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூடல் நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருந்ததாவது “கூடல்நகர் ரயில்வே நகர் 2வது தெருவில் ஏழு தெருநாய்கள் செத்துக் கிடக்கிறது. ஒரே நேரத்தில் நாய்கள் அனைத்தும் செத்து கிடப்பதால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வனத்திலிருந்து வெளியே வந்த கரடி…. அணைக்கு அருகில் நடமாட்டம்…. எச்சரித்த வனத்துறையினர்….!!

வரட்டுப்பள்ளம் அணை அருகில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த கரடி சிறிது நேரம் அங்கேயே நடனமாடி விட்டு பின்பு வனப்பகுதிக்குள் சென்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வரட்டுப்பள்ளம் பகுதியில் அணை ஒன்று உள்ளது. இங்கு காலை மாலை நேரங்களில் அருகிலுள்ள மலைப்பகுதியில் இருந்து மான்கள், கரடி, யானை, காட்டுப்பன்றி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக அணை பகுதிக்கு வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் நேற்று மாலை அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காலநிலைக்கு ஏற்ப மாறும் தன்மையுடையது…. மே பிளவர் மரங்கள்…. கண்ணை பறிக்கும் சிவப்பு பூக்கள்….!!

பர்கூர் மலைப் பகுதியில் மே பிளவர் மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் பர்கூர் மலைப் பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இங்குள்ள மரங்கள் காலநிலைக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டுள்ளது. அதன்படி மே மாதத்தை முன்னிட்டு பர்கூர் மலைப்பகுதியில் ரோட்டோரத்தில் இருபுறங்களிலும் உள்ள மே பிளவர் மரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும் மரத்தில் இலைகள் தெரியாத அளவிற்கு சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குவது கண்களைப் பறிக்கும் விதமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூரிலிருந்து இறங்கிய ஆட்கள்…. கண்மாயில் மீன்பிடிக்க முயன்ற 24 பேர்…. விதிகளை மீறியதால் வழக்குபதிவு….!!

கண்மாயில் மீன் பிடிக்க முயற்சி செய்த 24 பேரையும் பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா காரணமாக முழுஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளியூரில் இருந்து அதிக அளவு ஆட்களை இறக்கி மதுரை மாவட்டம் திருவாதவூர் நல்லாங்குளம் கண்மாயில் மீன் பிடிக்க சிலர் முயன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மீன்களை பிடிக்க 2 மினி வேனில் வந்தவர்களை வழிமறித்து தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் கண்மாயின் மீன்பிடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தடுத்து நிறுத்திய காவலாளி…. பலமாக தாக்கிய 2 பேர்…. அதிரடி நடவடிக்கையில் காவல்துறையினர்….!!

நிறுவனத்திற்குள் திருட முயற்சித்த 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கப்பலூர் தொழிற்பேட்டையில் புலிக்குத்தி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பணியில் இருக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டி மகன் கண்ணன் மற்றும் மூக்கன் மகன் கண்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து நிறுவனத்திற்குள் புகுந்த திருட முயற்சித்துள்ளனர். இதனை கண்ட காவலாளி புலிக்குத்தி அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் புலிக்குத்தியை சரமாரியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காப்பாற்ற முயற்சிக்கும் போது… தம்பதிகளுக்கு நடந்த விபரீதம்… தனியாக தவிக்கும் குழந்தைகள்…!!

குடும்ப தகராறு காரணமாக தீக்குளித்த இளம்பெண்ணும் அவரை காப்பாற்ற சென்ற கணவரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காளியாங்குப்பம் பகுதியில் புருசோத்தமன் என்ற லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரித்திகா, அனுஸ்ரீ என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான புருசோத்தமன் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலீஸ்காரருடன் நடந்த பிரச்சனை…. கோபித்துகொண்டு சென்ற மனைவி…. வழக்குபதிவு செய்த காவல்துறை….!!

மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆயுதப்படை காவலர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சுந்தரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் ஆயுத படை போலீசில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திவ்யா கணவரிடம் கோபித்து கொண்டு பெற்றோர் […]

Categories

Tech |