பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு இருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜெய கிருஷ்ணா புரம் பகுதியில் உள்ள ஏ.டி காலனியில் சரிதா வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். தி.மு.க-வைச் சேர்ந்த சரிதா வீரமுத்து ஜெய கிருஷ்ணா புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கின்றார். இந்நிலையில் சரிதா வைரமுத்துவின் வீட்டிற்கு திடீரென சென்ற அப்பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான மாரிமுத்து மற்றும் மாயவன் போன்றோர் சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் குடிபோதையில் சரிதாவை […]
Tag: District News
கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் சாந்தி காலனியில் இருக்கும் தனியார் சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டுமான பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கட்டுமான பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் திருமங்கலம் காவல் துறையினருக்கு கட்டிட தொழிலாளி குமார் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற […]
மனித உரிமை மீறலில் ஈடுபட்ட குற்றத்திற்காக பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஜாபர்கான் பேட்டை பகுதியில் எம். சரண்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனுவினை அளித்துள்ளார். அந்த மனுவில் எம். சரண்ராஜ் கடந்த 2019ஆம் ஆண்டு ஜாபர்கான்பேட்டை பகுதியில் இருக்கும் ராகவ ரெட்டி காலனியில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இந்நிலையில் அந்த இடத்திற்கு […]
செல்போன் பழுது பார்க்க தாய் பணம் தராததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருமுல்லைவாயில் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இவருடைய மனைவி மங்கை தனது பிள்ளைகளான கௌசல்யா மற்றும் சௌந்தர்ராஜன் போன்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கூலி வேலை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த சௌந்தர்ராஜன் தனது செல்போனை பழுது பார்க்க பணம் தரும்படி தனது […]
சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து புது பெண்ணை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குப்பனூர் பகுதியில் பகவதி குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஹரிப்பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு ஹரிப்பிரியாவின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருவரும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். […]
விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பெண்ணை மீட்பதற்கு ஆம்புலன்ஸ் வராததால் கணவன் கண் முன்னேயே மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பட்டரவாக்கம் ஆவின் சாலையில் மனோகரன் என்பவர் தனது மனைவி ஜான்சிராணியுடன் மோட்டார் சைக்கிளில் அம்பத்தூர் நோக்கி சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற ஆவின் பால் பண்ணை ஒப்பந்த லாரியானது திடீரென இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த ஜான்சிராணி […]
வழக்கறிஞர் வீட்டின் குளியலறைக்குள் யோகா ஆசிரியை கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து பத்து வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் வசித்த வீட்டின் அருகில் சித்ரா தேவி என்ற யோகா ஆசிரியை வசித்து வந்தார். இவரும் தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அதன்பின் ஹரிகிருஷ்ணன் தனது மகளை சித்ரா […]
விபத்தில் சிக்கிய அரசு பஸ் கண்டக்டர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள செம்பட்டி கிராமத்தில் வீரய்யா என்பவர் வசித்து வந்தார். இவர் மேலூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலை முடிந்த பின்பு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அந்த சமயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் அங்கு […]
நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அய்யப்பன்தாங்கல் பகுதியில் டேவிட் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களான பழனிச்சாமி மற்றும் லட்சுமணன் என்பவர்களுடன் ஒன்றாக அமர்ந்து டேவிட் மது குடித்துள்ளார். இதனையடுத்து நண்பர்கள் மூன்று பேருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதால் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். அப்போது டேவிட் தனது வீட்டில் இருந்த மூங்கில் கம்பை எடுத்து […]
மன உளைச்சலில் இருந்த ஓவிய ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓவிய ஆசிரியராக அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையில் ராஜேந்திரனுக்கு கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ரேஸ்கோர்ஸ் […]
ஆன்லைன் வகுப்புகளை சரியாக பின்பற்றாமல் இருப்பதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சௌரிபாளையம் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் சினேகா என்ற மகள் இருந்துள்ளார். தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் அனைத்து கல்லூரிகளும் இயங்க தடை விதிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக மட்டுமே வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் பாடங்களை சினேகா சரியாக பின்பற்றாமல் […]
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சேலை கிராமத்தில் மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீனா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தீனா தனது உறவினர் பெண்ணை காதலித்து வந்ததை அறிந்த அவரது பெற்றோர் தீனாவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த தீனா வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அதன்பின் வெளியே சென்ற மகன் நீண்ட […]
குடும்ப தகராறில் தந்தை மகன் மற்றும் மருமகளை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் சுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சைக்கிள் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சுப்பிரமணியனுக்கு ஐந்து மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணமான தனது அனைத்து பிள்ளைகளுக்கும் சுப்ரமணியன் சொத்துக்களை சரிபாதியாக பிரித்து கொடுத்து விட்டு தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து இவரது ஆறாவது மகனான […]
அம்மா உணவக ஊழியரிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழ்வார் திருநகர் பகுதியில் இருக்கும் அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் செல்வி பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர் ஒருவர் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு […]
கணவனின் தலையில் இரும்பு குழாயால் அடித்து மனைவி கொலை செய்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கோவூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரிகளை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கரின் தாய் மாங்காடு காவல் நிலையத்தில் தனது மகன் பாஸ்கர், மருமகள் உஷா மற்றும் குழந்தைகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போனவர்களை தேடி […]
காதல் திருமணம் செய்து கொண்டவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் ராமமூர்த்தி என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிமணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த ராமமூர்த்தி திடீரென மதுவில் மஞ்சள் நிற சாணி பவுடரை கலந்து […]
டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 10 லட்சத்தில் 72 ஆயிரத்து 279 ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் புரம் லாலி ரோடு சந்திப்பு பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த மதுக்கடையில் கண்காணிப்பாளரான வேலுசாமி என்பவர் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் வசூலான 10 லட்சத்து 72 ஆயிரத்து 279 ரூபாயை கடையின் உள்ளே வைத்து பூட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை […]
சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆனைமலை பகுதியில் முகமது சபீர் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் முகமது அதே பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்துள்ளார். அதன் பின் முகமது ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து ஆனைமலை காவல் […]
வாலிபர் ஒருவர் ஆன்லைன் விளையாட்டு மூலம் சிறுவனிடம் இருந்து 12 லட்ச ரூபாயை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் ராம்விலாஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ராம்விலாஸ் தனது வீட்டு லாக்கரில் வைத்திருந்த பணம் அடிக்கடி காணாமல் போவதை கண்டு அதிர்ச்சி அடைந்து ரகசியமாக வீட்டில் இருப்பவர்களை கண்காணித்து வந்துள்ளார். அப்போதுதான் 13 வயதான தனது 8-ஆம் வகுப்பு படிக்கும் மகன் பணத்தை எடுத்தது ராம் விலாஸுக்கு தெரிய வந்துள்ளது. […]
பெயிண்டிங் தொழில் செய்ய சென்ற வீட்டில் 11 பவுன் நகையை திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்-நிறைமதி தம்பதியினர். நிறைமதி தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர்களுடைய வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்றது. அந்த சமயத்தில் அவருடைய வீட்டில் பீரோவில் வைத்திருந்த 11 பவுன் நகை காணாமல் போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]
அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பியும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திரளி கிராமத்தில் பெரிய கோட்டையன்-பூச்சியம்மாள் என்ற தம்பதி வசித்து வந்தனர். இந்நிலையில் பெரிய கோட்டை உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் இறந்துள்ளார். இதுகுறித்து அவருடைய தம்பியான செட்டி ராமன் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் அவர் தனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது அண்ணண் இறந்த நிலையில் இருப்பதை கண்டதும் அவர் அழுது புலம்பியுள்ளார். பின்னர் ஓரமாக அமர்ந்திருந்த […]
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியானது ஏ.வி.சி கல்லூரியில் நடைபெற்றது அந்த சமயத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு உள்ளே செல்லும் அலுவலர்கள், பத்திரிக்கையாளர்கள், கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை […]
இரண்டு கார்கள் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு பகுதியில் அழகு கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் கயத்தாறில் இருந்து நெல்லைக்கு காரில் தனது நண்பரான பேச்சிமுத்து என்பவருடன் சென்று கொண்டிருந்தார். அதேசமயம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் என்பவர் தனது காரில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சிறுநீர் கழிப்பதற்காக கஜேந்திரனின் காரானது சற்று […]
வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள தங்காசேரி பகுதியில் அரசால் வழங்கப்பட்ட காலணி தொகுப்பு வீட்டில் பாண்டியம்மாள் என்பவர் வசித்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று இரவு காற்றுக்காக தனது வீட்டின் வெளியே படுத்து தூங்கியுள்ளார். அதன்பின் அதிகாலையில் லேசாக மழை தூரியதால் அவர் வீட்டிற்குள் சென்று தூங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது தொகுப்பு வீடு திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் பாண்டியம்மாள் படுகாயம் அடைந்து […]
இரண்டு வாலிபர்கள் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணம்மா என்ற மனைவி உள்ளார். இவர்கள் தங்களது வீட்டின் பக்கத்தில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மாட்டுத்தொழுவம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் சுந்தர் மற்றும் பாண்டி என்ற இரண்டு வாலிபர்கள் கண்ணம்மாவுடன் தகராறு செய்ததோடு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனையடுத்து அந்த வாலிபர்கள் மாட்டுத் […]
சுமார் அரை மணி நேரம் பெய்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் சில நாட்களாக வெளியில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் இரவு நேரங்களிலும் வெயிலின் வெப்பத்தை உணர்வதாகவும் மக்கள் கவலையில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி பகுதியில் நேற்று காலை பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழை சுமார் அரை மணி நேரம் பெய்ததால் அப்பகுதியில் நிலவி […]
காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அருள்புரம் பகுதியில் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வேறு சமூகத்தைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ராஜ்குமார் என்ற ஒரு வயதில் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]
விலை நிலத்திலேயே தர்பூசணி பழங்கள் அழுகிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் விவசாயிகள் நிலத்தடி நீர் மூலமாகவும் பம்புசெட்டுகள் மூலமாகவும் கிணற்றில் உள்ள நீர் மூலமாகும் பல ஏக்கரில் மணல் தொடர்களில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளனர். இதுகுறித்து திருக்கடையூர் விவசாயிகள் கூறும்போது நாங்கள் இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வதைக்கும் என்பதால் தர்பூசணி அதிகளவு சாகுபடி செய்து வந்தோம். இந்த பயிர்கள் 60 நாட்களில் நன்கு […]
மர்ம நபர்கள் முன்னாள் அ.தி.மு.க கவுன்சிலரின் வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் முன்னாள் அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலரான மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனுக்கப்பட்டு கிராமத்தில் சொந்தமாக நிலம் இருப்பதால் நெற்பயிர் சாகுபடி செய்யும் சமயத்தில் மட்டும் அங்கு சென்று உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல் போன்ற பணிகளை செய்வார். அப்போது மட்டும் அந்த கிராமத்தில் இருக்கும் அவர்களது வீட்டில் தங்கி […]
வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு பத்திரமாக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், நாகை, வேதாரண்யம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் சட்டசபை தேர்தல் நடந்ததையடுத்து இந்த மாதம் மே 2ஆம் தேதி வாக்குப்பதிவு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இந்த வாக்கு எண்ணும் பணியானது நேற்று முன்தினம் முடிந்தபின் மீண்டும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் […]
கொரோனா தடுப்பூசியை 3,500 பேருக்கு போடப்பட்டுள்ளதாக வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் விஜயராஜ் கூறியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூரில் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் விஜயராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது “இதுவரை பூதலூர் வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி 3,500 பேருக்கு போடப்பட்டுள்ளது. மேலும் தினமும் 150 பேருக்கு குறையாமல் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசி போடும் பணியானது பூதலூர் வட்டாரத்தில் உள்ள மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் அரசு மருத்துவமனைகளிலும் […]
முறையாக கட்டப்படாத சாக்கடை கால்வாய் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி சார்பில் போயம்பாளையம் பகுதியில் இருக்கும் ராஜா நகர் ஐந்தாவது வீதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு வீதியின் இருபுறமும் கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாயில் சென்ட்ரிங் இல்லாமலும், சில இடங்கள் அகலம் குறைவாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போயம்பாளையம் கிளை […]
பொங்கல் கரும்பு விதைக்கும் பணியை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் விளைவிக்கப்படும் கரும்புக்கு தனி மவுசு உண்டு. அது ஏனென்றால் வளமான மண், காவிரி நீர் மற்றும் பாரம்பரிய விவசாய முறைகளை விவசாயிகள் கடைப்பிடிப்பதே ஆகும். அதன்படி பொங்கல் கரும்பு பயிரிடுவதற்கு சித்திரை மாதம் உகந்தது என்பதால் திருக்காட்டுப்பள்ளி விவசாயிகள் பொங்கல் கரும்பு விதைக்கும் பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி விதைக் கரும்பு கரணைகளை பாரம்பரிய விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு வயல்களை […]
வாய்க்கால்களில் பள்ளங்கள் அமைத்து மழை நீர் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் மூலம் விவசாயத் தொழிலாளர்கள் பலரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்நிலையில் கோடை காலத்தில் பெய்யும் கோடை மழை நீரை சேமிக்கவும் அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் கிராமப்புறங்களில் உள்ள வாய்க்கால்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட […]
பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த கல்லூரி அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளையராஜா பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த இளையராஜா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதன் பின் இளையராஜா வீட்டிற்கு வெளியே […]
80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணவாளநகர் ஒண்டிகுப்பம் பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலம் கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மணவாளநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் இறந்து கிடந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
பிரபல ரவுடியை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, தகராறு வழக்கு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டதால் பிரதாப் என்ற ரவுடி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வானூர் காவல்துறையினர் வழிப்பறி வழக்கில் பிரதாப்பை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்து விட்டனர். இதனை அடுத்து இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் […]
அரசு மருத்துவமனை அருகில் இருக்கும் மின் கம்பிகளில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பேருந்து நிலையம் அருகில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையை சுற்றி ஏராளமான குடியிருப்பு பகுதிகள் இருக்கின்றன. இந்த மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தினமும் பொதுமக்கள் மற்றும் 400 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு சீட்டு வழங்கும் பகுதிக்கு அருகில் […]
தனியார் நிறுவன காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ரங்கநாதன் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அருகில் இருந்தவர்கள் தர்மபுரி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பட்டகபட்டி பகுதியில் திலகவதன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திலகவதன் காரிமங்கலம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து இவரது மோட்டார் சைக்கிள் பொம்மஅல்லி பிரிவு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வேகமாக சென்ற தனியார் பேருந்து இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட திலகவதன் […]
தனியார் நிறுவன மேலாளரை அடித்து கொன்ற வழக்கில் விபச்சார கும்பலை சேர்ந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் செல்லும் சாலையில் கடந்த 24ஆம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த சரவணம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் இறந்தவரின் பேண்ட் பையில் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்ப்பதற்கான அடையாள அட்டையும், செல்போன்களும் இருந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சரவணம்பட்டி […]
கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குழுமம்பாளையம் புதூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் கடந்த 3 நாட்களாக தனது வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். இதனையடுத்து தனது அறைக்கு சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் […]
பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மங்கலகரைப்புதூர் பகுதியில் சின்னராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பராணி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் இவர்களது மளிகை கடைக்கு சென்று உள்ளனர். இதனையடுத்து அந்த வாலிபர்கள் புஷ்பராணியிடம் குளிர்பானத்தை வாங்கிக் கொண்டு சில திண்பண்டங்களை கேட்டுள்ளனர். அதனை எடுப்பதற்காக புஷ்பராணி […]
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஆட்டோ டிரைவர் சவாரிக்கு சென்றதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள மணலி பகுதியில் 44 வயதுடைய ஆட்டோ டிரைவர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவருக்கு அறிகுறிகள் எதுவும் பெரிதாக இல்லாததால் ஆட்டோ டிரைவர் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி மண்டல சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஆட்டோ டிரைவர் வீட்டில் இல்லாமல் சவாரிக்கு […]
மனைவி இறந்த துக்கத்தில் கணவரும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் தங்கப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு விசாலாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத காரணத்தால் விசாலாட்சியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் […]
இளம் பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது எட்டிப்பார்த்த வடமாநில தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள மணல் பகுதியில் கௌதம் என்ற வடமாநில தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கௌதம் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான 23 வயது இளம்பெண் அவரது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது எட்டி பார்த்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த […]
பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்த கல்லூரி அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் அலுவலக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளையராஜா பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த இளையராஜா தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் வீட்டிற்கு வெளியே அவர் […]
கடுமையான சுவாசப் பிரச்சனையால் அவதிப்படும் ரிவால்டோ யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் காட்டு யானை ஒன்று கடந்த சில ஆண்டுகளாக சுற்றி வருவதோடு பொது மக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கு உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்ததால் மக்களுடன் பழகும் நிலைக்கு மாறிவிட்டது. எனவே இந்த யானையை பொதுமக்கள் ரிவால்டோ என்று அழைத்து வருகின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் ரிவால்டோ யானையின் […]
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொள்ளுப்பட்டி பகுதியில் கஸ்தூரி ராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி ராஜனுடன் அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்களான வெற்றி செல்வன் மற்றும் சச்சின் போன்றோர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த போது அதே பகுதியில் தாரமங்கலத்தில் […]
6 வயது சிறுமியை தொழிலாளி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் 6 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது பெற்றோரை இழந்ததால் தாத்தா, பாட்டியுடன் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அனைவரும் வேலைக்கு சென்ற பிறகு சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த பேட்டலாடா பகுதியில் வசிக்கும் பழனிவேல் என்ற தொழிலாளி அந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டார். அதன்பின் பழனிவேல் அந்தச் சிறுமியை மிரட்டி […]