Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இறந்து 15 நாட்களுக்கு மேல் ஆச்சு… அழுகிய நிலையில் இளம்பெண் சடலம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை செல்லும் சாலையில் இருக்கும் முனியப்பன் கோவில் அருகிலுள்ள கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண்ணின் சடலம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக ஊத்தங்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு படை வீரர்களின் உதவியோடு இளம் பெண்ணின் சடலத்தை கயிறு கட்டி மேலே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கைகள் கட்டப்பட்ட அழுகிய சடலம்… வட மாநில இளம்பெண்ணா…? கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

கைகள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளகொண்டபள்ளி பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகம் அருகில் துர்நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

நாங்க என்ன பண்ணுவோம்…. கோபத்தில் கொந்தளித்த விவசாயிகள்… திரும்பி சென்ற அதிகாரிகள்…!!

நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பயிர்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெத்தலகாரன்பள்ளம், ஜீவா நகர், ராஜகிரி, சொரக்கையன் கொள்ளை போன்ற கிராமங்களில் தென்னை, வாழை, ராகி, சோளம், கரும்பு, மஞ்சள், நெல் போன்றவற்றை விவசாயிகள் அதிகமாக பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் சிப்காட் தனிப் பிரிவு அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் சர்வேயர்கள் ஒன்றிணைந்து இந்த கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களை சிப்காட்டிற்காக கையகப்படுத்துவதற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து விளை நிலங்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அதை கொண்டு போகும் போது மாட்டிட்டான்… திணறிய வாலிபர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எலவடை கிராமத்தில் செல்லன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு அருகில் இருக்கும் விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு மதியம் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க நகை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஏன் தனியா விட்டுட்டு போனீங்க… விவசாயி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் ரகுவரன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு லதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரகுவரன் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் திடீரென ரகுவரன் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி விட்டார். இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வயலில் கேட்ட அலறல் சத்தம்… ஓட்டம் பிடித்த கணவரின் தம்பி…. தர்மபுரியில் பரபரப்பு…!!

முன்விரோதம் காரணமாக ஒருவர் அண்ணனின் மனைவியை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரசநத்தம் பகுதியில் வடிவேலு என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் வடிவேலுக்கும், அவரது அண்ணன் மனைவியான சரோஜா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. மேலும் இவர்கள் இருவருக்கும் பொதுவான விவசாய கிணறு இருக்கின்றது. இந்நிலையில் அந்த விவசாய கிணற்றில் இருந்து டீசல் என்ஜின் மூலம் சரோஜா தனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சி உள்ளார். இதனால் கோபமடைந்த வடிவேலு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவன எங்க கூட்டிட்டு போறீங்க…? பதறிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி… பெயிண்டருக்கு நடந்த விபரீதம்…!!

பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வீரகேரளம் பகுதியில் தர்மலிங்கம் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தர்மலிங்கம் வீட்டில் இருந்த போது கடந்த 23ஆம் தேதி காரில் வந்த மர்ம நபர்கள் அவரிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தர்மலிங்கத்தின் தாயாரான லட்சுமி தனது மகனை எங்கு அழைத்துச் செல்கிறீர்கள் என அந்த மர்ம அவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு தர்ம […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைகள் மீது மை வைத்தார்களா…? அதிர்ச்சியில் பெற்றோர்… கடத்தல் கும்பல் குறித்து சர்ச்சை…!!

குழந்தை கடத்தல் கும்பல் சுற்றி திரிவதாக சமூக வலைதளங்களில் பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மாக்கினாம்பட்டி, வைகை நகர் போன்ற பகுதியில் குடுகுடுப்பைக்காரன் போல் வேடம் அணிந்த ஒரு கும்பல் ஒன்று சென்றுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த ஒரு நபர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் மீது மை தடவை முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் அச்சத்தில் குழந்தைகள் உடனடியாக வீட்டிற்குச் சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளனர். அதன்பின் பெற்றோர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஈஷா வித்யா பள்ளிகளை பயன்படுத்துங்க… ஜக்கி வாசுதேவின் ட்விட்டர் பதிவு… களமிறங்கிய தொண்டர்கள்…!!

கொரோனா சிகிச்சை மையமாக ஈஷா வித்யா பள்ளிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசிடம் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம்அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இருக்கும் வித்யா பள்ளிகளை தமிழக அரசுக்கு கொரோனா சிகிச்சை மையமாக அளிக்க உள்ளதாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறும்போது, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“25 வருடம் இதை செய்யவே கூடாது” 7 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து கொன்ற குற்றத்திற்காக குற்றவாளிக்கு நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பகுதியில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை துடியலூர் காவல் துறையினர் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றத்திற்காக கைது செய்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சந்தோஷிற்கு தூக்கு தண்டனை விதித்ததோடு, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் ஜாலியா இருந்த போது… மாணவனுக்கு நடந்த விபரீதம்… சென்னையில் நடந்த சோகம்..!!

கோவில் குளத்தில் மூழ்கி 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் தனது நண்பர்களுடன் இணைந்து திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது குளித்துக்கொண்டிருந்த விக்னேஷ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“எங்கிட்ட கருப்பு பணம் இருக்கு” நூதன முறையில் மோசடி செய்த இளம்பெண்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற வேண்டும் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் மற்றும் சிறுமியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் தற்போது மலேசியாவில் பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரேவதி அடிக்கடி 17 வயது சிறுமியுடன் இணைந்து சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கு தயாராக இருக்கும் ஆட்டோவில் பயணம் செய்வது வழக்கம். இதனையடுத்து தன்னை ஒரு பணக்கார பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மயானத்தில் வைக்கப்பட்ட மனைவி… கணவருக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய கிராமம்…!!

மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நிலை சரியில்லாததால் ரஜெஸ்வரி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் ராஜேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து ராஜேஸ்வரியின் உடலை மயானத்தில் தகனம் செய்வதற்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

உடல்நலம் குன்றிய இளம்பெண்… மனநலம் பாதித்தவரின் கொடூர செயல்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

உடல் நலம் குன்றிய இளம்பெண்ணை மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்ன செவலை கிராமத்தில் பரத பிள்ளை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மகள் உள்ளார். இதில் 38 வயதான உடல் வளர்ச்சி குன்றிய ரேவதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் அதே ஊரில் வசிக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட முத்துக்கண்ணு என்ற முதியவர் ஒரு மாட்டை வெட்டிக் கொன்றுவிட்டு, தனது மனைவி பொன்னம்மாள் என்பவரை அடிப்பதற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

என் அம்மாவை காணும்…. கண்மாயில் கிடந்த சடலம்… மகனின் பரபரப்பு புகார்…!!

காணாமல் போன மூதாட்டி கண்மாயில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சார்ஜர் வண்ணார்பேட்டை பகுதியில் சின்னம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மூதாட்டி காணாமல் போனதால் அவரது மகன் பாலன் என்பவர் அனைத்து இடங்களிலும் அவரை தேடி பார்த்துள்ளார். இந்நிலையில் சத்திரப்பட்டி கண்மாய்க்குள் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பாலன் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது கண்மாய்க்குள் இறந்து கிடப்பது தனது தாய் சின்னம்மாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சொன்னா கேட்க மாட்டீங்களா… மருத்துவமனைகளுக்கு சீல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றாத இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனத்தில் வேகமாக பரவும் நோயை கட்டுப்படுத்துவதற்காக நகராட்சி, வருவாய் மற்றும்  சுகாதாரத் துறை போன்ற அனைத்து துறையினரும் ஒன்று சேர்ந்து தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து திண்டிவனத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை பற்றி அவதூறு பேசிய பெண்… அடித்து கொல்லப்பட்ட கணவர்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிவபெருமான் பாளையம் பகுதியில் ஐயப்பன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஐயப்பனின் உறவினரான சரவணன் என்பவருடைய மனைவி விஜயகுமாரி நதியாவை பற்றி தவறாக ஐயப்பனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து நதியாவிடம் இதுகுறித்து ஐயப்பன் கேட்டதால் கோபத்தில் அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஐயப்பன் தனது மனைவியை பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நான் சொன்னதை அவர் கேட்கல… மனைவியின் விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தனிக்குடித்தனம் போக கணவர் சம்மதிக்காததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாகலிங்கபுரம் நகரில் சரத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அருப்புக்கோட்டை பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் துணை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜெயபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் ஜெயபாரதி தனிக்குடித்தனம் போக வேண்டும் என சரத்குமாரை கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால் அதற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அலறி துடிதுடித்த மனைவி…. தீ வைத்த கணவர் தற்கொலை… தி.மலையில் பரபரப்பு…!!

மது குடிக்க பணம் தாராததால் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவர் தானும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முளகிரிபட்டி கிராமத்தில் சங்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பார்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சங்கர் பணம் கேட்டு தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். அதற்கு பார்வதி மறுத்ததால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த சங்கர் வீட்டில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தலைகீழாக தொங்கியபடி யோகா…. புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சி… தொற்றை தடுக்கும் வழிமுறைகள்…!!

16 நிமிடம் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்து கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர். உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நேரு யுவகேந்திரா சார்பில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? பள்ளி மாணவியின் விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்டலசெரி கிராமத்தில் முருகவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சங்கரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிறுமியின் உடலை கைப்பற்றி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கலப்படமானவை சந்தைகளில் புழக்கமா…? வசமாக சிக்கியவர்கள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கலப்பட சிமெண்ட் தயாரித்து சந்தைகளில் புழக்கத்தில் விட்ட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் காவல் துறையினருக்கு செங்காளம்மன் நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான கிடங்கில் கலப்பட சிமெண்ட் தயாரிக்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சோழவரம் காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, சிலர் கலப்பட சிமெண்ட் மூட்டைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர். அவர்கள் காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முட்புதரில் கேட்ட அலறல் சத்தம்… இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை… அடித்து உதைத்த பொதுமக்கள்…!!

இளம்பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட குளத்துமேடு பகுதியில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த இளம் பெண் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள முட்புதருக்கு அருகே சென்றபோது அவ்வழியாக வைரவன் குப்பம் கிராமத்தில் வசிக்கும் பன்னீர் என்ற வாலிபர் சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபர் இளம் பெண்ணை தாக்கியதோடு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதிவேகம் மிக ஆபத்து… ஆசிரியருக்கு நடந்த விபரீதம்… கோர விபத்தில் பறிபோன உயிர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பேடு கிராமத்தில் காந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் காந்தி தனது மோட்டார் சைக்கிளில் கும்மிடி பூண்டியில் இருந்து செங்குன்றம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவரின் மோட்டார்சைக்கிள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக பின்புறம் வேகமாக வந்த லாரி மோட்டார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பொது மக்களுக்கு போய் சேரல…. விலை நிர்ணயம் பண்ணுங்க…. தமிழ்நாடு பரவாயில்லை கூறிய நீதிபதி….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு பரவாயில்லை என்று கூறிய நீதிபதி வழக்கை அடுத்த வாரம் ஒத்திவைத்துள்ளார். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மத்திய அரசின் உத்தரவின் பேரில் போடப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்- லாரி மோதல்… உடல் நசுங்கி பலியான பெண்… திருவள்ளூரில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பெண் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி பகுதியில் விஜயகுமார் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு தங்கலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தங்கலட்சுமி தனது உறவினரான லோகேஷ் குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சாலையின் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு செல்ல முயற்சி செய்துள்ளார். அப்போது ஆந்திரா நோக்கி சென்னையிலிருந்து சென்ற கன்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக இவர்களின் மோட்டார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுட்டெரித்த வெயில்…. திடீரென்று பெய்த கனமழை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

இடி மின்னலுடன் அரை மணி நேரம் பெய்த மழையால் அலங்காநல்லூரில் குளிர்ச்சி நிலவுகிறது. தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வாட்டுகின்றது. இந்த வெயிலால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூரில் நேற்று மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த இந்த மழையால் பழைய காவல் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அதை செய்ய முயன்ற போது… சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்… திருவள்ளூரில் நடந்த சோகம்…!!

மின்கசிவு காரணமாக வாட்டர் ஹீட்டர் எந்திரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அதிகத்தூர் கிராமத்தில் விநாயகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அவினாஷ் என்ற 7 வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டின் குளியல் அறைக்கு சென்ற சிறுவன் அவினாஷ் அங்கிருந்த பாத்திரத்தின் மீது ஏறி நின்று வாட்டர் ஹீட்டர் எந்திரத்தின் சுவிட்சை ஆப் செய்ய முயற்சி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வழி சொல்லுங்க…. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம்…. மனு கொடுத்த சலூன் கடைக்காரர்கள்….!!

சலூன் கடைகளை திறக்க கோரி முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் மனு கொடுத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகின்றது. இதனால் தமிழக அரசு அத்தியாவசிய மற்ற கடைகளை மூடக்கோரி உத்தரவிட்டுள்ளது. இதில் சலூன் கடைகளும் அடங்கும் என்பதால் முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்கள் ஒரு மனுவை எழுதி உள்ளனர். அதில் “எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பகுதி நேரமாவது சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டும். இல்லையென்றால் நாங்களும் எங்கள் குடும்பமும் மிகுந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… தந்தையின் பரபரப்பு புகார்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்பட்டு சக்தி அவென்யூ பகுதியில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஐந்து வயது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மஞ்சுளா தனது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாடுகளை தளர்வுகள் செய்யுங்க…. இல்லையென்றால் 10000 நிதி கொடுங்க…. மனு கொடுத்த மரக்கால் கலைக்குழுவினர்….!!

மாதந்தோறும் ரூபாய் 10000 நிதியாக வழங்க வேண்டும் என மரக்கால் ஆட்டக் கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். கலைமாமணி மோகன் மரக்கால் கலைக்குழு சார்பாக கலெக்டர் அன்பழகனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருந்ததாவது “தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் எங்களது கலைத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வேலை வாய்ப்பை இழந்து அன்றாட உணவுக்கு கூட கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம். அதனால் மதுரை மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி தர […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது என்ன கருப்பு கலர்ல இருக்கு… அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள்… விவசாயிகளின் கோரிக்கை…!!

அமராவதி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் கருப்பு நிறத்துடன் துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்வரத்தை ஆதாரமாக கொண்டு கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. இந்நிலையில் அமராவதி ஆறு மற்றும் பிற கால்வாய்கள் மூலம் பத்து நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனால் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கருப்பு நிறத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எதுக்கு இந்த கலர்ல இருக்கு…. பணம் கொடுத்து தண்ணீர் வாங்க முடியல…. போராட்டம் நடத்த போகிறோம்….!!

நகராட்சியில் இருந்து விநியோகிக்கப்படும் குடிநீர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் பெத்தானியாபுரம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கடந்த ஒரு மாத காலமாக கடும் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. மேலும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்ததற்கான அடையாளமும் காணப்படவில்லை. இந்த தண்ணீரை பாத்திரத்தில் பிடித்து வைத்த பின் சில மணி நேரங்கள் கழித்து பார்க்கும்போது பாத்திரத்தின் அடியில் இரும்புத்தாது போற்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போன தடவை மாதிரி ஆக போகுது… கொஞ்சம் கூட பயமே இல்ல… தொற்று ஏற்படும் அபாயம்…!!

தாராபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவை வாங்கி செல்வதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மதுவினை வாங்கி செல்கின்றனர். இப்பகுதியில் கடந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இனிமேல் குடிக்க கூடாது…. கண்டித்த பெற்றோர்…. காத்திருந்த அதிர்ச்சி….!!

பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் மின் கம்பியை பிடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் தும்மக்குண்டு கிராமத்தில் வசித்து வருபவர் அய்யர். இவருடைய மகன் பழனி என்பவர் பால் வண்டியில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவார். இதனால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் அவர் மனவேதனை அடைந்து தனது வீட்டின் அருகில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியை பிடித்துள்ளார். இதனால் அவர் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூட்டிய கடையில் கைவரிசை…. தடயங்களை சேகரித்த போலீஸ்…. மர்மநபருக்கு வலைவீச்சு….!!

பூட்டிய பழக்கடையில் கைவரிசை காட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கோச்சடை பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவர் எச்.எம்.எஸ் காலனியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது ரூபாய் 4000 […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு… கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த லாரி… திருப்பூரில் பரபரப்பு…!!

நூல் பண்டல் பாரம் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் பகுதியிலிருந்து நூல் பண்டலை ஏற்றிக்கொண்டு காங்கேயம் வழியாக திருப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்று உள்ளது. இந்த லாரியை ஸ்டாலின் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது காலை 11 மணி அளவில் சக்கராசனம் பாளையம் பிரிவு நால்ரோடு அருகே சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இப்படித்தான் நடந்துக்கணும்…. தீவிரமாக நடைபெற்றும் பணி… பின்பற்றப்படும் கட்டுப்பாடுகள்…!!

திருப்பூர் மாவட்டத்தின் பல முக்கிய பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியானது மேற்கொள்ளப்பட்டது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் நகராட்சி சார்பில் பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணியானது நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தினசரி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கல்யாணம் ஆகி 4 மாதம்தான் ஆச்சு…. வாலிபரின் சோக முடிவு…. கண்ணீரில் மனைவி….!!

திருமணமான நான்கு மாதங்களில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் பகுதியில் பரமசிவம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் இருந்தார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாசுதேவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாசுதேவனின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள்…. ரகசியமாய் விற்பனை செய்த பொருள்…. மடக்கி பிடித்த காவல்துறை….!!

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள அண்ணாமலை காவல் நிலையத்தில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் நோட்டமிட்டனர். இதனை அடுத்து அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் நாகமலை புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மக்கள் முறையாக கடைபிடித்தனர்…. 134 பேருக்கு மட்டும் அபராதம்…. மொத்தம் 27500 வசூலானது….!!

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் 134 பேருக்கு தலா ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் 27500 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது. மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கபட்டபோது மாவட்டம் முழுவதும் போலீசாரால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் அங்கு உள்ள மக்கள் முழு ஊரடங்கை விதிமுறைகள் படி சரியாக கடைபிடித்தனர். மேலும் ஊரடங்கு விதிமுறைகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கை எப்படி பயன்படுத்தலாம்…. மணல் திருட்டில் ஈடுபட்ட 24 பேர்…. கைது செய்த காவல்துறை….!!

முழு ஊரடங்கை பயன்படுத்தி மணல் திருட்டில் ஈடுபட்ட 24 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் முழுஊரடங்கின் போது கல்லாத்து ஓடையில் மணல் திருட்டில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை விட்டல்பட்டி கிராம நிர்வாக அதிகாரி தங்கம் முனியம்மாள் போலீசாருக்கு அளித்துள்ளார். இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் கல்லாத்து ஓடையில் சோதனை நடத்தினர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வழிப்பறி கொள்ளை…. கையும் களவுமாக சிக்கிய 4 வாலிபர்கள்…. கைது செய்த காவல்துறை….!!

வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 4 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மர்ம நபர்களை பிடிப்பதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை அழைத்து விசாரித்து உள்ளனர். அந்த 4 பெரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அங்க எங்களால வாழ முடியல… இளம்பெண்ணின் தர்ணா போராட்டம்… கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இளம்பெண் தனது குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் சீதாதேவி என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது குடும்பத்துடன் சென்ற சீதாதேவி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் அந்த பெண் கலெக்டர் விஜய கார்த்திகேயனிடம் ஒரு மனுவினை அளித்துள்ளார். அந்த மனுவில் தங்களது வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி அமைந்துள்ளதாகவும், […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் பண்ணுற வேலையா இது…? 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

16 வயது சிறுவன் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள எம்.எஸ். நகர் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த சிறுவன் அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமியை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி நடந்த அனைத்து சம்பவங்களையும் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் அதிர்ச்சி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது மட்டும் தான் ஒரே வழி… இனிமேல் எந்த தொந்தரவும் இல்ல… கமிஷ்னரின் அதிரடி உத்தரவு…!!

தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஒருவரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டி.டி.பி மில் சாலையில் நடந்து சென்ற தொழிலாளியிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வழக்கில் பழனிச்சாமி நகரில் வசிக்கும் சூர்யா என்பவரை அனுப்பர்பாளையம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரின் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ரொம்ப ஜாலியா இருந்தோம்… மாணவனுக்கு நடந்த துயரம்… செய்வதறியாது திகைத்த நண்பர்கள்…!!

குளித்துக் கொண்டிருக்கும் போது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 12-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜகோபால் நகரில் வீரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பரத் ஹரிஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பரத் ஹரிஷ் தனது நண்பர்களுடன் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் ஹரிஷ் தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

5 வருசத்துக்கு முன்னால பண்ணது… பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கர்ப்பப்பையில் ஆப்ரேஷன் செய்ததால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சொக்கனூர் கவுசிக் நகர் பகுதியில் சேகர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சிவசங்கரி கடந்த 5 வருடத்திற்கு முன் கர்ப்பப்பையில் ஆப்பரேஷன் செய்துள்ளதால் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது வயிற்றுவலி குணமாகவில்லை. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… முதியவர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள துளுக்கப்பட்டி சிவகாமி காலனி பகுதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் மாரியப்பன் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் இவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மாரியப்பன் தனது வீட்டில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க… ஏக்கத்தில் இளம்பெண் எடுத்த முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் தனக்கு குழந்தை இல்லாத ஏக்கத்தில் சத்யா எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]

Categories

Tech |