தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷம் பக்தர்கள் யாருமின்றி எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது. தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. இந்த கோவிலுக்கு உள் மாநிலத்தில் மட்டுமின்றி வெளி மாநிலத்திலும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வருவதுண்டு. ஆனால் கொரோனாவிற்கு பின்னர் வெளிநாட்டினரும் வெளி மாநிலத்தினரும் வருவதில்லை. இந்நிலையில் கொரோனா ஊரடங்கின் எதிரொலியாக கடந்த 16 பெரிய கோவில் மூடப்பட்டுள்ளது. இருப்பினும் […]
Tag: District News
குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேளாங்கண்ணி பகுதியில் விக்னேஷ் கலைச்செல்வி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு குழந்தை இல்லாததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று கலைச்செல்வி தனது அறையை பூட்டிக் கொண்டு மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். அப்போது சத்தம் கேட்டு விக்னேஷின் […]
இறால் குட்டை அமைக்க தடை விதிக்கக்கோரி உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கீராநல்லூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் குடியிருப்புக்கு அருகில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இறால் குட்டை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதனால் அங்கு வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதாலும் குடிநீர் உப்பு நீராக மாறி குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதாலும் உடனடியாக இறால் குட்டை அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்த வேண்டும் என […]
லாரி ஒன்று ஆட்டோ மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வந்தார். இவர் ஆட்டோ மூலம் பால் வினியோகம் செய்து வந்தார். அவ்வாறு அவர் நேற்று காலை எலியார்பத்தி அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு பால் விநியோகம் செய்துவிட்டு ஆட்டோவை எடுக்கும் நேரத்தில் பின்னாலிருந்து வந்த ஒரு லாரி ஆட்டோவின் மீது மோதியுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனை கண்ட […]
இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை துறைமுகத்திற்கு வந்த சரக்கு ரயிலில் துண்டிக்கப்பட்ட ஆணின் கால் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துறைமுகத்திற்கு இரும்பு கம்பிகளை ஏற்றுக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சேலம் மாவட்டத்தில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் துறைமுக ஊழியர்கள் இந்த சரக்கு ரயிலில் இருந்த இரும்பு கம்பிகளை இறக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இரும்பு கம்பிகளுக்கு நடுவில் துண்டிக்கப்பட்ட ஆணின் கால் கிடப்பதை பார்த்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாகப் துறைமுக காவல்துறையினருக்கு […]
கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு காவல்துறையினருக்கு முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன், நாகம்மன் கோவிலில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் உண்டியலை உடைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவிலுக்குள் புகுந்து மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த மர்ம நபர்களை மடக்கி பிடித்த காவல்துறையினர் அவர்களிடம் […]
பிறந்தநாள் விழாவில் கேக்கை கத்தியால் வெட்டியவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மரவன்மடம் திரவியபுரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த 22ஆம் தேதி தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடியுள்ளார். அப்போது மணிகண்டன் அதே பகுதியில் வசிக்கும் தனது நண்பர்களான ராஜா, அதிர்ஷ்ட லிங்கம், யுவராஜா, ஜெயகணேஷ் போன்றோருடன் இணைந்து பிறந்தநாள் கேக்கை வாள் போன்ற நீண்ட கத்தியால் வெட்டியுள்ளார். மேலும் […]
அறுவை சிகிச்சை இன்றி சிறுமி விழுங்கிய ஐந்து ரூபாய் நாணயத்தை மருத்துவர்கள் வெளியேற்றியுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குபேரபட்டினம் பகுதியில் போஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 3 1/2 வயதுடைய தனுசியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சிறுமி தனுசியா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக சிறுமியை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிறுமிக்கு […]
விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறுனாத்தூர் சாலையூரில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் டெபுடி ஜெனரல் மேனேஜராக சென்னை ஏர்போர்ட்டில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு ராஜகுமாரி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சுப்பிரமணி மற்றும் அவரது மகன் சுரேஷ் என்பவரும் பயிரிட்டு உள்ளனர். இந்நிலையில் நிலத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் எலித்தொல்லையை […]
16 வயது சிறுமிக்கு கட்டிட தொழிலாளி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்த சிறுமி தனது கிராமத்தில் நடைபெற்ற தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து சென்று கொண்டிருக்கும் போது அதே பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான சதீஷ் என்பவர் அந்த சிறுமியை வழிமறித்து உள்ளார். இதனையடுத்து அவர் அங்குள்ள ஒரு விவசாய நிலத்திற்கு […]
மாநில விதை பண்ணையில் பிளாஸ்டிக் பைகளை ஒட்டுமொத்தமாக எரித்ததால் அந்த இடமே கரும் புகை சூழ்ந்து காணப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாரப்பட்டியில் மாநில விதை பண்ணை ஒன்று செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பண்ணையில் குளிர்பதன கிடங்கு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக கிடங்கு தளவாடங்கள் மற்றும் குளிர்பதனப் பெட்டி கொண்டு வரப் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தர்மாகோல் போன்றவற்றை வளாகத்திற்குள் குவித்து வைத்துள்ளனர். அதன் பின் அந்த குப்பை குவியலுக்கு தீ வைத்துள்ளனர். […]
பேருந்து நிலையத்தில் சுற்றுச் சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஏரியூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக 3.5 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலைய கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இறுதிக்கட்ட பணியாக பேருந்து நிலைய சுற்று வட்டார பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் திடீரென சுற்றி சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து […]
கணவரை விட்டு பிரிந்ததால் அளவுக்கு அதிகமாக மது குடித்த பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரீனா இமாகுலேட் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக சார்லஸ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கணவன் தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் மன […]
6 காட்டு யானைகள் தொடக்கப்பள்ளியின் கட்டிடத்தை சேதப்படுத்தியதோடு அரிசி மூட்டைகளை தின்று நாசம் செய்துள்ளன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டமானது அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் மூன்று காட்டு யானைகள் சோலையார் அணை வனப்பகுதி வழியாக சென்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விட்டது. இந்த யானைகள் தாமஸ் என்பவரின் வீட்டின் மேற்கூரையை உடைத்ததால் அச்சத்தில் பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
ஜன்னல் கம்பியை அறுத்து ஷோரூமின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 12 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் சாலையில் தனியாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஷோரூமில் ரமேஷ் பாபு என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் காவலாளி கழிவறைக்கு சென்றதை பயன்படுத்தி சில மர்ம நபர்கள் ஷோரூமில் ஜன்னல் கம்பியை அறுத்து உள்ளே சென்றுள்ளனர். […]
தொழிலாளி மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரி பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நெப்பத்தூர் கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் தொழிலாளி சீனிவாசன் இறந்து கிடந்துள்ளார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரி அவரது உறவினர்கள், கிராம மக்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர், தேசிய தமிழ் பேரியக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆகியவை போன்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த […]
மணல் அள்ளிய குற்றத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அழகர்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் அனுமதியின்றி ஓடையில் மணல் அள்ளிய காரணத்திற்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேடசந்தூர் கிளை சிறையில் இரவு அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாகவே அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே இவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. […]
ஃபேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் கும்பலால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய கம்பியூட்டர் காலத்தில் செல்போன் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மேலும் சமூக வலைத் தளங்களான ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல்வேறு செயலிகளை செல்போனில் டவுன்லோட் செய்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் ஒரு கும்பல் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி அதன் மூலம் மக்களிடம் பணம் பறித்து வந்துள்ளனர். இதனையடுத்து பணம் பறிக்கும் கும்பல் ஒருவருடைய பேஸ்புக் […]
இரவு நேர ஊரடங்கை பின்பற்றாத 75 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் இரவு 10 மணிக்கு மேல் வெளியில் சுற்றி திரிபவர்கள் மற்றும் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து […]
வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கிக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியை அடுத்த ஆப்பக்கூடல் என்னும் ஊரில் கனரா வங்கி ஒன்று உள்ளது. அந்த வங்கியில் மேலாளராக பணி புரியும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நபருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது மேலாளருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் […]
கொரோனா விதிகளை பின்பற்றதால் காஞ்சிபுரத்தில் உள்ள 11 கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் பட்டு புடவை வாங்குவதற்காக தினமும் ஏராளமான மக்கள் செல்கின்றனர். இந்நிலையில் காந்தி சாலை என்ற பகுதியில் உணவு, ஜவுளி கடைகளில் அரசு அறிவித்த படி முககவசம் மற்றும் சமூக இடைவெளி ஆகிய கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடிக்காமல் மக்கள் அதிகம் கூடியுள்ளனர். இதனை அடுத்து நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆணையாளர் காந்தி சாலை பகுதிகளில் […]
அடகுக் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நிலக்கோட்டை கிராமத்தில் திரவியம் என்பவர் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் வங்கியில் அடகு வைத்திருக்கும் நகைகளை கமிஷன் முறையில் மீட்டு பணம் பெரும் தொழிலும் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் ஆங்காங்கே விளம்பரமும் செய்துள்ளார். இந்த விளம்பரத்தைக் கண்டு மதுரையை சேர்ந்த வினோத் என்பவர் திரவியத்தை செல்போனில் தொடர்பு கொண்டு […]
கொரோனா தொற்றின் காரணமாக திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவம் மற்றும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சித்திரை பவுர்ணமி உற்சவம் விழா மற்றும் பௌர்ணமி கிரிவலம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி கொண்டிருப்பதனால் வரும் 26ம் தேதி அன்று சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் […]
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருப்பச்சாவடிமேடு பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தொடக்க அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செங்கல் சூளை தொழிலாளியான சூரப்பட்டை பகுதியில் வசிக்கும் தேவராசு என்பவர் மாணவியின் தாயை செங்கல்சூளை வேலைக்காக அழைத்துச் செல்ல சென்றுள்ளார். அந்த சமயம் […]
கடன் தொல்லையால் தாய் மகன் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் சாந்தி என்பவர் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு ராம்குமார் என்ற மகன் இருந்தார். சாந்தி தனது கணவரை விட்டுப் பிரிந்து தனது மகனுடன் தனியே வசித்து வந்துள்ளார். மேலும் இவர் ஏலச்சீட்டு நடத்தி கடன் தொல்லைக்கு ஆளாகி உள்ளார். இதனால் சாந்தியும் அவரது மகனும் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளனர். […]
மின்கம்பத்தை உடைத்து அதில் இருந்த இரும்பு கம்பிகளை திருட முயற்சி செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாமிநத்தம் பகுதியில் இரண்டு மர்ம நபர்கள் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு சொந்தமான மின் கம்பம் ஒன்றை உடைத்து கொண்டிருந்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மின்கம்பத்தை உடைத்து அதில் இருந்த இரும்பு கம்பியை மர்ம நபர்கள் […]
டிக் டாக் பதிவிடுவதில் ஏற்பட்ட மோதலில் மகள் மற்றும் தாய்க்கு இருவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மனைவி இளஞ்சியம். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகளின் பெயர் திவ்யா. இவர் கள்ளச்சி என்ற பெயரில் டிக் டாக் செய்துவருகிறார். இந்த நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் மற்றும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுகந்தி இருவருடனும் டிக்டாக்கில் திவ்யாவிற்கு […]
பொது இடத்தில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் வசூலிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திட்டச்சேரி பேரூராட்சியில் செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் பரமநாதன் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர். அப்போது சாலையில் செல்பவர்கள் முக கவசம் அணியாமல் இருந்தால் அவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியின்றி ஒருவரை ஒருவர் ஓட்டிக் கொண்டு சென்றால் அவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்துள்ளனர். […]
குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த பசு மாட்டை மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகருக்கு உட்பட்ட 42 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் கூட்டுக்குடிநீர் பணிகளுக்காக ஆங்காங்கே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இவ்வாறு தோண்டப்படும் பள்ளங்களை ஊழியர்கள் சரியாக முடிவதில்லை எனவும், பணிகளை முடிக்க காலம் தாழ்த்துவதாகவும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் செவல்பட்டி தெரு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு தாமிரபரணி கூட்டு […]
காயங்களுடன் கண்மாய் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பாலையம்பட்டி பகுதியில் இருக்கும் கண்மாயில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் காயங்களுடன் இறந்து கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அருப்புகொட்டை டவுன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த முதியவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
முன்விரோதம் காரணமாக உறவினர் காருக்கு ஒருவர் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள குவளைக் கண்ணி கிராமத்தில் ரூபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேத்தூர் பகுதியில் இருக்கும் தனது தென்னந்தோப்பு காரில் சென்றுள்ளார். இந்நிலையில் தென்னந்தோப்புக்கு சென்றுவிட்டு ரூபன் திரும்பி வந்து பார்த்த போது அவரது கார் தீப்பற்றி எரிந்து உள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரூபன் உடனடியாக ராஜபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
நூதன முறையில் மூதாட்டியிடம் இருந்து மர்ம நபர் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சுந்தர வள்ளி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த மூதாட்டி ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த மர்ம நபர் மூதாட்டியிடம் உங்களுக்கு முதியோருக்கான உதவி தொகை வந்துள்ளதாக கூறியுள்ளார். அதன்பின் அந்த உதவித்தொகை கிடைக்க வேண்டுமானால் நீங்கள் அதிகாரிக்கு முன்பு […]
அதிகாரிகள் பாலம் கட்டாமல் தூர்வாரும் பணியை மட்டும் மேற்கொண்டதால் கோபமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பேரூராட்சி அலுவலகம் எதிரே இருக்கும் குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் செல்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்துவிட்டது. இதனால் சாக்கடை கால்வாயை தூர்வாரும் பணியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். அந்த கால்வாயில் பாலம் கட்டி கொடுக்க வேண்டும் […]
சொத்து தகராறில் இரண்டு பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள குத்தாலம் சுவாமிமலை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மனைவி கல்யாணி. இந்த தம்பதிகளுக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் மூத்த மருமகனின் பெயர் பாண்டியன், இரண்டாவது மருமகன் ஆத்மநாதன், மூன்றாவது மருமகன் பாலசண்முகம். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி பணி ஓய்வுக்குப் பின்னர் வந்த பணத்தை பங்கிட்டுக் கொள்வது தொடர்பாக மூன்று மருமகளுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. […]
திருமணம் செய்து கொள்வதாக கூறி கட்டிட தொழிலாளி சிறுமியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாம்பல்பட்டியில் சிதம்பரம் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் தங்கி கட்டிடத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் வசித்து வரும் 17 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சிதம்பரம் அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி கடத்தி சென்றுள்ளார். இந்நிலையில் தங்களின் […]
மூதாட்டியிடம் 16 1/2 பவுன் நகை மற்றும் 1 1/2 லட்சம் போண்டவற்றை மோசடி செய்த மின்வாரிய ஊழியரை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள லாலா பேட்டை பகுதியில் செல்லம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவருக்கு தனபால் என்ற மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் சசிகுமார் என்பவர் அரவக்குறிச்சியில் மின்வாரிய ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சசிகுமார் மற்றும் சசிகுமாரின் நண்பரான வேலவேந்தன் இருவரும் செல்லம்மாளிடம் 1 1/2 […]
தீயில் 6 வீடுகள் கருகி சாம்பலானதில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கிராமத்தில் தமிழக அரசால் கடந்த 15 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளது. இந்த வீடுகள் பழுதடைந்து உள்ளதால் அவர்கள் வீடுகளுக்குப் பின்புறம் உள்ள காலி இடத்தில் தென்னங்கீற்று குடிசை அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் செல்வம் என்பவரது வீட்டின் பின்புறத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. அப்போது காற்று […]
சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அய்யர்மலை பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சிலர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசித்து […]
வீட்டிற்குள் மர்மமான முறையில் இறந்து அழுகிய நிலையில் வழக்கறிஞரின் உடலானது மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நங்கநல்லூர் பகுதியில் மாரி குமார் என்ற வழக்கறிஞர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு அனுஷா என்ற மகள் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி இறந்தாலும், அனுஷா விடுதியில் தங்கி படிப்பதாலும் மாரிகுமார் மட்டும் வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் […]
தனக்கு கோரானா தொற்று வந்ததாக அச்சத்தில் இருந்த கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் லோகநாதன் கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததுள்ளது. இதனையடுத்து லோகநாதனுக்கு தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் […]
பொது இடத்தில் போலீசாரிடம் ரகளை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் புதிய பஸ் நிலையம் முன்புறம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ஒரு பெண் முகக்கவசம் அணியாமல் ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தார். அவரை நிறுத்தி முக கவசம் அணியாமல் இருந்ததால் அபராதம் ரூபாய் 200 செலுத்துமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். அப்போது அந்த பெண் போலீசாரை பார்த்து “எல்லோரும் உழைச்சுதான் சாப்பிடுகிறோம். இந்த அளவு சிறிய முகக்கவசத்திற்கு ரூபாய் 200 கட்ட […]
குடும்ப பிரச்சனை காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை கிராமத்தில் விவசாய ஆண்டிஅய்யா என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த 18ஆம் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்துவிட்டு தனது வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து […]
கோழி ஒன்று 10 வயது சிறுமி ஆசையாய் வளர்த்த செடியை சேதப்படுத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் வெள்ளையம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மரியா என்ற பேத்தி உள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் ஆசையாக மரியா ஒரு செடியை வளர்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் பாஷா என்பவரது கோழி மரியா ஆசையாக வளர்த்த செடியை […]
முக கவசம் அணியாமல் அபராதம் விதித்த அதிகரிக்கும், கடை உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மாவட்டத்திலுள்ள அத்திப்பட்டு பகுதியில் இருக்கும் கடைகளில் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றுகின்றனரா என்று சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து அதிகாரிகள் ஐ.சி.எப் காலனியில் இருக்கும் அரிசி […]
விவசாயி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது டிராக்டர் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அலமேலுபுரம் பூண்டி கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி மஹாலிங்கம். இவர் தனது வீட்டிலிருந்து வெளியே வந்து நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் பூண்டி மாதா கோவில் அருகில் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த டிராக்டர் அவர் மீது மோதியுள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் […]
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளி தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருக்களில் சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட ஒருவர் வீட்டில் தன்னை தனிமைபடுத்தி சிகிச்சை பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால் அந்த நபர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தெருக்களில் சுற்றித் திரிவதாகவும் அதனால் மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் புதுப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் […]
பெண் தர மறுத்ததால் நண்பர்களுடன் சேர்ந்து காதலியின் தந்தையை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுனாமி நகரில் சுப்ரமணியன் என்ற மீனவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்துள்ளனர். முதல் மனைவிக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகள் மட்டும் உள்ளார். ஆனால் தற்போது இரண்டு மனைவிகளும் உயிரோடு இல்லை. இந்நிலையில் தனது இரண்டாவது மனைவியின் மகளுக்கு சுப்பிரமணியன் திருமண ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதனால் […]
மேல் அதிகாரி தொந்தரவு செய்த காரணத்தினால் கிராம ஊராட்சி மன்ற உதவியாளர் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பம் பகுதியில் சந்திரசேகர் – மாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் மாரியம்மாள் அப்பகுதியில் உள்ள ஊராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாரியம்மாள் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் மாரியம்மாளை மீட்டுஅருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
அரசு மருத்துவர் சரியாக பணி புரியாத காரணத்தினால் பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது இந்த மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவர் மருத்துவமனைக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும், நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை எனவும் மருத்துவர் மீது பொதுமக்கள் […]
கடையின் முன்பு படுத்து தூங்கிய வாலிபரின் உடலில் திடீரென தீப்பிடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கரையான்சாவடி டிரங்க் ரோடு பகுதியில் இருக்கும் ஒரு கடையின் முன்பு இரவு நேரத்தில் வாலிபர் படுத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் திடீரென இரவு நேரத்தில் அந்த வாலிபர் உடலில் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் தீயை அணைக்க போராடி உள்ளனர். ஆனாலும் தீயில் கருதி அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து பூந்தமல்லி காவல் […]