மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் சுருதி பிரியன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் ஊத்துக்கோட்டை பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவரும் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி முடிந்த பிறகு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நொளம்பூர் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது, […]
Tag: District News
முதியவரை தாக்கியதை பார்த்து தட்டிக்கேட்ட வாலிபரின் மோட்டார் சைக்கிளை 3 வாலிபர்கள் சேர்ந்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, முதியவர் ஒருவரை 3 பேர் கொண்ட கும்பல் தாக்கிக் கொண்டிருந்ததை யுவராஜ் பார்த்துள்ளார். இதனை அடுத்து அந்த முதியவரை ஏன் தாக்குகிறார்கள் என்று அந்த மூன்று பேரிடம் யுவராஜ் கேட்டபோது, அவர்கள் கோபத்தில் யுவராஜை […]
முதியவரை 2 வாலிபர்கள் உருட்டு கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமிர்த நல்லூர் கிராமத்தில் கன்னியப்பன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கும் பொன்னேரி பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் வாலிபர்களான பாரதி கண்ணன் மற்றும் ஜெகதீசன் என்பவர்கள் முதியவரை கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து காயம் அடைந்த முதியவர் கவரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை […]
திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வெளியகரம் கிராமத்தில் சுதர்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தரகராக இருக்கின்றார். இந்நிலையில் சுதர்சன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருந்த 7 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை […]
மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள உளுந்தை கிராமத்தில் நாகப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் தனியாக இருந்த நாகப்பனின் தாயார் ஜெயமணி என்பவர் தண்ணீர் மோட்டாரை இயக்குவதற்காக மோட்டார் ஸ்விட்ச்சை போட்ட போது, எதிர்பாராதவிதமாக அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உள்ளார். இவ்வாறு மின்சாரம் பாய்ந்ததில் மூதாட்டி பக்கத்தில் இருந்த கல்லில் மோதியதால் அவரது தலையில் பலத்த […]
காவல்துறையினரின் பாதுகாப்புடன் ராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட வெடிபொருட்களை வெடித்து செயலிழக்க செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலைக்கு வெளிநாடுகளில் இருந்து இரும்பு துகள்கள் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஈராக், ஈரான் போரின் போது பயன்படுத்தப்பட்ட ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்ட பல வெடிபொருட்கள் வெடி மருந்துகளுடன் கலந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் வெடி மருந்துகளுடன் கூடிய ராக்கெட் […]
பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள துணிகள் மற்றும் தையல் எந்திரங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கா நகர் செல்லும் சாலையில் லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற ராகுல் என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு 7 மணி அளவில் பனியன் நிறுவனத்தில் இருந்து கரும்புகை வந்ததை பார்த்தவர்கள் உடனடியாக மத்திய நிறுவன உரிமையாளருக்கு இதுகுறித்த தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பனியன் நிறுவனத்தில் திடீரென […]
குடும்பம் நடத்த வர மறுத்த காதல் மனைவியை கூலித்தொழிலாளி அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அக்கொண்டபள்ளி பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சங்கீதா ஓசூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து நாகராஜ் சங்கீதாவின் பெற்றோர் […]
கடந்த இரண்டு ஆண்டுகளில் 150 பேருக்கு வெற்றிகரமாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக டாக்டர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நீலகிரி, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் பல்வேறு சிகிச்சைக்காக வருவது வழக்கம். அந்த மருத்துவமனையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இதய அறுவை சிகிச்சை பிரிவு செயல்பட ஆரம்பித்துள்ளது. அங்கு துறை தலைவர் பேராசிரியர் சீனிவாசன், மயக்கவியல் துறை தலைவர் டாக்டர் கல்யாணசுந்தரம் போன்றோரின் தலைமையில் […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100% வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடை பகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தொண்டு நிறுவன இயக்குனர் தலைமை தாங்கியுள்ளார். அப்போது கோவை பாரதியார் பல்கலைக்கழக […]
திருமணமான 4 மாதத்திலேயே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வாளவாடி பகுதியில் நித்தியானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மகள் உள்ளார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரதிக்கும் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகனான ஸ்ரீதருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பின் தாசம்பாளையம் பகுதியில் பாரதி தனது கணவருடன் வசித்து […]
மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த 35 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை காவல் துறையினருக்கு குமாரலிங்கம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த ஒரு பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து மது […]
ஸ்கூட்டர் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள இ.பி நகரில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு தனது ஸ்கூட்டரில் காயத்ரி மலையம்பாளையம் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் கரும்பு பாரம் ஏற்றி சென்ற இரட்டை டிப்பர் உடன் கூடிய ட்ராக்டர் திடீரென இடது புறமாக […]
டாஸ்மாக் கடைக்குள் பாம்பு நுழைந்து விட்டதால் மது பிரியர்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நெய்தலூர் காலனி பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் போது, மதியம் சுமார் ஒரு மணி அளவில் டாஸ்மாக் கடைக்குள் வயல் வெளியிலிருந்து சாரை பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. இந்நிலையில் பாம்பைப் பார்த்ததும் மது வாங்க நின்ற மது பிரியர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து […]
தனியார் பேருந்து நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காச்சினாம்பட்டி பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூலி வேலைகளுக்குச் சென்றும் ஜவுளி கடைகளில் வேலை பார்த்து தங்களது அன்றாட வாழ்வை கழிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் சின்னதாராபுரம் பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கரூரிலிருந்து தாராபுரம் வரை செல்லும் தனியார் பேருந்து காச்சினாம்பட்டி பிரிவில் கடந்த […]
காரைத் திருடி சென்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். கரூர் மாவட்டத்தில் உள்ள ஜீவா நகர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரை தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த போது, திடீரென மர்ம நபர்கள் அந்த காரை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தாந்தோனிமலை காவல் நிலையத்தில் கருப்பசாமி புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அந்த விசாரணையில் தாந்தோனிமலை […]
சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் சந்தேகப்படும்படியாக அங்கிருந்த பொது கழிவறை அருகே நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோட்டில் வசித்து வரும் முருகன் என்பதும், மற்றொருவர் அவரது மகன் செந்தில்குமார் […]
டிக்டாக்கின் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விருகம்பாக்கம் பகுதியில் தரணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்வேதா மற்றும் பிரியதர்ஷினி என்ற 2 மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் முனியாண்டி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தரணி கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 11ஆம் […]
சொத்து பிரச்சனை தகராறில் நாட்டு துப்பாக்கி வைத்து அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொத்தான் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கும் அவரது சகோதரரான சந்தோஷ் என்பவருக்கும் தந்தையின் சொத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு சந்தோஷ் தனது தாய் பெரியதாயிடம் கூறியுள்ளார். […]
கடன் தொல்லை அதிகரித்ததால் தலைமறைவாகிய தனது கணவரை மீட்டுத் தர வேண்டி பெண் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பருத்திக்காடு பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தனது தாயுடன் சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தனது கணவரான கோபால் என்பவருக்கும், தனக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் அவர் பணிபுரிந்து […]
கல்லாபுரம் ஊராட்சி பகுதி பொதுமக்கள் அடிப்படை வசதி செய்து கொடுத்து விட்டு எங்கள் ஊருக்கு ஓட்டு கேட்டு வாருங்கள் என்று பதாகை வைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், வேட்பாளர்கள் போன்ற தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் கல்லாபுரம் ஊராட்சி பூளவாடி புதுநகரில் உள்ள புரட்சிதாய்புரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் […]
லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் பகுதியில் கோபால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திகேயன் என்ற அண்ணன் உள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களது நண்பர்களான சுரேஷ்குமார், கார்த்தி, வடிவேல் போன்றோருடன் வீரப்பூர் கோவிலுக்கு காரில் புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து திருப்பூருக்கு மீண்டும் காரில் கரூர்-கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்று கொண்டிருந்த லாரி […]
மூன்று வயது ஆவதற்கு முன்னரே இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சிறுவன் அசத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சேரன் நகரில் ஜான்பால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு விதுஷன் என்ற மகன் உள்ளான். இந்த சிறுவன் தனக்கு மூன்று வயது ஆவதற்கு முன்னரே தேசிய அளவில் சாதனையாளர்களின் திறமைகளை அங்கீகரிக்கும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளான். இந்த சிறுவன் 1 நிமிடம் 6 […]
1200 கிலோ ரேஷன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து, அதனை கடத்தியவர்களை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு அவனியாபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது காவல்துறையினரை பார்த்ததும் சரக்கு வேனில் இருந்த ஒரு நபர் […]
நாய்கள் கடித்து குதறியதால் புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு வனத்துறை அதிகாரிகளுக்கு விடத்தகுளம் கண்மாய் கரையில் மான் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வனசரக அலுவலர் கோவிந்தன் தலைமையில், வேட்டை தடுப்பு காவலர்கள் பிரபு வனசரக அலுவலர் விஜய் பாண்டியன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மானை பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விடத்தகுளம் கண்மாய் பகுதிக்கு இரை தேடுவதற்காக வந்த மானை […]
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏ.பி.டி கம்பம் பகுதியில் சுகன்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட யோக பாலகுமாரன் என்ற 14 வயது மகன் உள்ளார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டோர் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு வீட்டை விட்டு வெளியே சென்ற யோக பாலகுமாரன் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சுகன்யா அவரை அனைத்து இடங்களிலும் தேடி […]
கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சிவகாசி கிழக்கு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பாலமுருகன் என்பதும், வெங்கடசாமி என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் அப்பகுதியில் […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டத்தில் வடக்கு தெற்கு அவிநாசி, தாராபுரம், உடுமலை, பல்லடம், மடத்துக்குளம், காங்கேயம் போன்ற எட்டு சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவுகான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்படுகின்றன. இந்நிலையில் இந்த எட்டு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிந்தபிறகு வாக்கு எண்ணும் மையமான திருப்பூர் அரசு மகளிர் […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பன்னம்பரை அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கிடந்த பெரிய கல் மீது மோதி விட்டது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு […]
கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ராம்குமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கவில்லை. இவர்களில் முத்துலட்சுமி, வெங்கடாசலபதி என்பவருக்கு சொந்தமான பிரிண்டிங் பிரஸ்ஸில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராம்குமார் தனது மனைவிக்கும், வெங்கடாசலபதிக்கு தகாத உறவு இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே […]
சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த திட்டத்தின்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வி.இ சாலையோரத்தில் தோண்டப்பட்டு உள்ளதால் அந்த வழியாக செல்வதற்கு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக ஒரு கார் சாலையோரத்தில் சென்ற போது எதிர்பாராதவிதமாக தோண்டப்பட்ட அந்த பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் காரை ஓட்டி […]
காணாமல் போன தனது மனைவி மற்றும் குழந்தைகள் கிடைக்காத விரக்தியில் ஒருவர் காவல் நிலைய வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள உப்பிலியாபுரம் பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் லாரியில் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சோலை ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு துர்கேஷ், நிதிஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சோலை ஈஸ்வரி தனது மகன்களுடன் […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனுமதி பெற்று வைத்திருந்த 64 துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் நகர், மல்லி, கிருஷ்ணன்கோவில், வத்திராயிருப்பு, நத்தம்பட்டி, வளையம்பட்டி போன்ற பகுதிகளில் வசிக்கும் […]
தங்க நகைகளுக்கான பெண்ணின் கை, கால்களை கட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை சவுகார்பேட்டையில் பைனான்சியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இவர்களின் மகன் பூனேவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்களது வீட்டின் காவலாளியாகவும், வீட்டு வேலைகளை பார்க்கவும் பெங்களூருவில் வசித்துவரும் ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் […]
ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் ரயில் புறப்பட தாமதமானதால் பயணி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் பணி மற்றும் தொழில் சம்பந்தமாக வெளியே செல்பவர்கள் மின்சார ரயில் சேவையை அதிக அளவு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தாம்பரம் செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் ரயில் சேவைகளை குறைத்ததோடு, பல்லாவரம், தாம்பரம் பகுதிகளில் இருந்து சில குறிப்பிட்ட நேரங்களில் ரயில்கள் […]
வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள நந்தனம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் ராமகிருஷ்ணன் என்ற முதியவரிடம் இருந்து கடந்த 13-ஆம் தேதி ஒரு கும்பல் 10 பவுன் தங்க நகை மற்றும் காரை வழிப்பறி செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த சைதாப்பேட்டை காவல் துறையினர் சிவகங்கை பகுதியில் தலைமறைவாக இருந்த கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ராகப்பன் […]
காட்டு யானை ஊருக்குள் நுழைந்து தோட்ட தொழிலாளியின் வீட்டை சேதப்படுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் காட்டு யானைகுனில்வயல் பகுதிக்குள் நுழைந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள பாக்கு வாழை போன்ற மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது. அதன் பின் காட்டுயானை அப்பகுதியில் உள்ள மணியம்மா என்ற பெண் தோட்டத் தொழிலாளியின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சிறுத்தைப்புலி நாயை கவ்விச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சிறுத்தைப்புலி ஒன்று குன்னூரில் உள்ள ரயில்வே காலனி பகுதியில் புகுந்து விட்டது. இந்த சிறுத்தை அந்த காலனியில் வசிக்கும் நாராயணன் என்பவரது வீட்டு வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த நாயை கவ்வி இழுத்துச் சென்றுள்ளது. இந்நிலையில் காலையில் நாராயணன் நாயை தேடிய […]
இயங்கிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது கார் கல்லடி மலைப்பாதை வழியாக ஊட்டியை நோக்கி 12 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கார் என்ஜினில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து உள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் காரை நிறுத்திவிட்டு […]
கார் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் பகுதியில் வசிக்கும் 7 பேர் அமெரிக்காவில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னைக்கு காரில் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாமல்பள்ளம் என்ற பகுதியில் இவர்களது கார் சென்று கொண்டிருந்தபோது ஓசூர் நோக்கி வந்த மினி லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த […]
மில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அன்னூர் காவல்துறையினருக்கு சத்திகிரில் சாமி தோட்டம் அருகே ஆண் பிணம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வடகாடு பகுதியில் வசித்து வந்த பரமசிவம் என்பது […]
முதல் மனைவிக்கு தெரியாமல் ஒருவர் 2-ஆவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ண பாளையம் பகுதியில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதேவி என்ற இளம்பெண்ணை ராஜேஷ் காதலித்து வந்துள்ளார். இதனால் தனது முதல் மனைவிக்கு தெரியாமல் ஸ்ரீதேவியை கடந்த 9ஆம் தேதி ராஜேஷ் திருத்தணி முருகன் கோவிலுக்கு அழைத்து […]
ஏ.சி-யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக நர்சிங் கல்லூரியில் ஆய்வகம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்திற்குள் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் இரண்டாவது மாடியில் இருக்கும் ஆய்வகத்தில் பொருத்தப்பட்டுள்ள ஏ.சி-யில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து அங்கு தீ மளமளவென எரிய ஆரம்பித்தால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தீயானது அந்த ஆய்வகத்தின் உள்ளே தர்மாகோல் மூலம் அமைக்கப்பட்டிருந்த கூரையில் வேகமாக பரவி […]
மனித உரிமைகள் ஆணையம் சகதியில் சிக்கி காயமடைந்த கூலித் தொழிலாளிக்கு தமிழக அரசு 3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூரில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு மனுவை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கொடுத்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2018ம் ஆண்டு மழையின்போது தான் சகதியில் சிக்கி கீழே விழுந்ததாகவும், அதனால் தனது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை […]
காட்டுப்பன்றிகள் மக்காச் சோளப் பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குடிமங்கலம் பகுதியில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு அறுவடை முடிந்து விட்டது. இந்நிலையில் குறைந்த அளவு தண்ணீர், குறைந்த செலவு போன்றவற்றை மனதில் வைத்துக் கொண்டு விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் மக்காச்சோள பயிர்களை அதிகளவு நாசம் செய்கின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, உணவு தேவைக்காக காட்டு பன்றிகள் விளை […]
முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கல்லமேடு கிராமத்தில் குட்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சுகுணா தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சோனியா என்பவர் முன் விரதத்தை மனதில் வைத்துக் கொண்டு தகாத வார்த்தைகளால் சுகுணாவை திட்டியுள்ளார். இதுகுறித்து சோனியாவிடம் கேட்டபோது, சோனியாவின் உறவினர்கள் சுகுணாவையும், அவரது உறவினர்களையும் தகாத வார்த்தைகளால் […]
100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் கடற்கரையில் மணல் சிற்ப விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை சார்பில் அனுமந்தை பகுதியில் இருக்கும் கடற்கரையோரத்தில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி மணல் சிற்பம் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு […]
அதிக பாரம் ஏற்றி வந்த லாரி கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை ஆனது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. இந்த வளைவுகளில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றன. மேலும் பாரம் தாங்காமல் சில வாகனங்கள் கவிழ்ந்து விடுவதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகுவிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு மரத்துண்டுகளை ஏற்றி சென்ற […]
பேருந்தை இயக்குவது தொடர்பாக அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்கு சிவகாசியில் இருந்து அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் வந்துள்ளது. இந்த பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்த உடன் பேருந்தை இயக்குவது தொடர்பாக இரண்டு ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் ஸ்ரீவில்லிபுத்தூர் நிலையத்தில் இருந்து எந்தப் பேருந்தும் வெளியே செல்ல முடியாத வகையில் அரசு […]
100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் மினி மாரத்தான் ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனை கலெக்டர் கண்ணன் துவங்கி வைத்துள்ளார். […]