குளித்துக்கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சேர்வைகாரன்பட்டி பகுதியில் ஆத்தியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் ஊருக்கு கீழ்புறம் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இவருடைய நண்பர்கள் இருவரும் குளக்கரைக்கு சென்றுவிட்டதால், ஆத்தியப்பன் மட்டும் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென எதிர்பாராத விதமாக ஆத்தியப்பன் கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டார். இதனையடுத்து அங்கு வந்த அவருடைய நண்பர்கள் கிணற்றின் சுவற்றின் மீது துணிகள் […]
Tag: District News
அப்பர் பவானி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி, குன்னூர், மஞ்சூர் மற்றும் ஊட்டி போன்ற பகுதிகளில் உறைபனி தாக்கம் அதிகமாக உள்ளதால் வனப்பகுதிகளில் இருக்கும் செடிகள் மற்றும் மரங்கள் கருகிய நிலையில் காணப்படுகிறது. இதனால் காட்டுத்தீ ஏற்படுவதை தடுக்க வனத்துறையினர் தீ தடுப்பு குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பர் பவானி வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயில் அங்குள்ள செடி, கொடிகள் மற்றும் […]
மோட்டார் சைக்கிள் கார் மீது மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி பகுதியில் வினோத் ராமு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊட்டிக்கு தனது நண்பரான கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூசபாடி பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து விட்டு ஊட்டியில் இருந்து ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து […]
முதுமலை வனப்பகுதியில் குட்டி யானை இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தமிழக-கர்நாடக எல்லையான கக்கநல்லா வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு குட்டை பக்கத்தில் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்ததையடுத்து, தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். […]
பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் கண்டக்டர்கள் முக கவசம் அணியாமல் பணிபுரிந்ததால் ஆணையாளர் அவர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன் கோவை காந்திபுரம், கிராஸ்கட் சாலை, 100 அடி ரோடு போன்ற பகுதிகளில் இருக்கும் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் என அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்துள்ளார். இதனை தொடர்ந்து காந்திபுரம் […]
சிறுத்தையிடம் இருந்து தனது குட்டியை காப்பாற்ற முயன்ற ஆட்டிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளூர் நகரில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான இரண்டு வயது ஆட்டுக்குட்டியை அதிகாலை 4:30 மணி அளவில் சிறுத்தை ஒன்று வேட்டையாட முயற்சி செய்துள்ளது. இந்நிலையில் தனது குட்டியை சிறுத்தை வேட்டையாடுவதை பார்த்த தாய் ஆடு சிறுத்தையிடம் இருந்து குட்டியை காப்பாற்ற முயற்சிக்கும் போது, சிறுத்தை கடித்ததால் தாய் ஆட்டின் கழுத்து பகுதியில் பலத்த காயம் […]
வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் 500 கோடி ரூபாய் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் வங்கி வளாகத்தில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மண்டல செயலாளர் ராஜவேலு வின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மீனாட்சி சுப்ரமணியன், மகேஸ்வரன், சசிதரன் போன்றோர் பங்கேற்றனர். இதேபோல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரத்தில் உள்ள மண்டல […]
ரயில் மோதி படுகாயமடைந்த ஆண் யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு அருகே தமிழக-கேரள எல்லையில் வாளையார் ஆறு இருக்கின்றது. இந்த ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக நள்ளிரவு 6 யானைகள் வந்துள்ளன. அதன்பின் தண்ணீர் குடித்துவிட்டு அதிகாலை 1:20 மணி அளவில் யானைகள் அருகில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது, சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் சென்றுள்ளது. இந்த ரயில் எதிர்பாராதவிதமாக 28 […]
கால்வாயில் தள்ளி கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலானது அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆதியூர் கிராமத்தில் பிரசாந்த் என்கிற புருஷோத்தமன் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு பொள்ளாச்சியில் உள்ள ஒரு பணிமனையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்தின் தந்தையான அம்சா வேல் கோவை வடக்கு காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என கடந்த 7ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]
உரிய ஆவணம் இன்றி இரும்பு கடை வியாபாரி கொண்டு சென்ற 4 லட்ச ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் அனைத்து இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சங்கனூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போது […]
மோட்டார் சைக்கிள் திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மசக்கவுண்டனின் செட்டிபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளை மாணிக்கம் பாளையம் பகுதியில் நிறுத்தி விட்டு அங்குள்ள கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது செந்தில்குமாரின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து […]
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து சென்ற இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைய ஆரம்பித்ததால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பதால் மார்க்கெட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் மார்க்கெட்டுக்கு தினமும் வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் செல்போன் எண் மற்றும் முகவரி பெறப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி பரிசோதனை செய்தவர்களில் இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது […]
சார்ஜாவில் இருந்து கடத்தி வந்த அரை கிலோ தங்கம், ஒரு லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் மூன்று விலை உயர்ந்த செல்போன்களைத் மர்ம நபர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்து விட்டு திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அருணாச்சலம் சாலையில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நாகூர்கனி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு இளம்பெண் மற்றும் சிறுமியுடன் காரில் வந்தபோது திடீரென அங்கு வந்த 3 மர்ம நபர்கள் நாகூர்கனி, அந்த இளம்பெண் மற்றும் […]
பஞ்சு மூட்டைகள் மின்கம்பி மீது உரசியதால் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வழியாக கும்பகோணம் நோக்கி கோவை மாவட்டத்திலிருந்து பஞ்சு கழிவுகளை ஏற்றிக்கொண்டு லாரி சென்றுள்ளது. இந்த லாரியை கனகராஜ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் உடுமலை-பழனி நெடுஞ்சாலையில் இருக்கும் சினிமா தியேட்டர் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக மின்கம்பி பஞ்சு மூட்டைகளை உரசி விட்டது. இதனால் பஞ்சு மூட்டை திடீரென தீப்பிடித்து லாரி முழுவதும் பற்றி […]
வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ள பப்பாளியை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், மெட்ராத்தி, தாந்தோணி, ஜோதம்பட்டி, மைவாடி பகுதியில் அதிக அளவில் பப்பாளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பப்பாளியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் பப்பாளி பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, கோடை காலத்தில் மட்டும் இல்லாமல் எந்த காலத்திற்கும் ஏற்ற அதிக சத்துள்ள பப்பாளியை விவசாயிகள் அதிகளவில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். […]
100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த கேஸ் சிலிண்டர்களில் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குபதிவை உறுதிபடுத்த ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயத்தில் கோலப்போட்டி, விழிப்புணர்வு பிரச்சாரம், வாகன பேரணி போன்றவை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து காங்கேயம் தொகுதி தேர்தல் அலுவலர் ரங்கராஜன், தாசில்தார் சிவகாமி மற்றும் […]
திருச்செந்தூர் கோவில் துப்புரவு பணியாளர் பேருந்தில் தவறவிட்டு 5,000 ரூபாய் பணத்தை காவல்துறையினர் உடனடியாக மீட்டு கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாமி நகர் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணக்கிளி என்ற மனைவி உள்ளார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பஞ்சவர்ணக்கிளி தனது மாத சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாயை ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து எடுத்துள்ளார். அதன் பிறகு அந்தப் பணத்தையும் கார்டையும் […]
முன்விரோதம் காரணமாக அ.தி.மு.க பிரமுகரின் மோட்டார் சைக்கிளை எரித்து, அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாநகராட்சி 56 வது வார்டு அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதியாக இருக்கின்றார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் வெளியே நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]
வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஏ.டி.எம்-களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். மத்திய அரசு இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் ஒரு பொதுத்துறை இன்ஷூரன்ஸ் நிறுவனம் தனியார் மயமாக்கப்படும் என அறிவித்ததற்கு வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருச்சி வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், தர்ணா போராட்டம் போன்றவை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் […]
சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்று வீடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் எட்டாவது மாநில சிலம்பம் போட்டி நடைபெற்று உள்ளது. இந்த போட்டியில் திருச்சி மாவட்டம் சார்பில் காவல் துறை அதிகாரி அரவிந்த் தலைமையில் 16 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியானது 6 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து போட்டியின் முடிவில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் 12 தங்கம், 3 வெள்ளி மற்றும் 9 வெண்கல பதக்கங்களை […]
பெண்ணிடம் இருந்து 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள வல்லம் கிணற்று தெருவில் சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் குற்றாலம் அருகில் இருக்கும் இலஞ்சி குமாரர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். இதனை அடுத்து ரமாமணி ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த மர்ம நபர் ரமாமணியின் […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 48 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 31 காவல் நிலையங்களில் 48 பேர் மீது சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக காவல் துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்துள்ளனர். […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்ததோடு அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்துநகர் காவல் துறையினர் கோவில்பிள்ளை விலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் ஆரோக்கியபுரம் பகுதியில் வசித்து வரும் சேர்மராஜா என்பதும் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த […]
மனைவி தன்னுடன் வாழ மறுத்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவடி தெருவில் சீனிவாசன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இவர்களின் ஒரு குழந்தை இறந்த பிறகு கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மகேஸ்வரி சீனிவாசனை விட்டு […]
கடும் வீழ்ச்சிக்குப் பிறகு தேயிலையின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பச்சைத் தேயிலையை பயிரிட்டு உள்ளனர். இதற்காக நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு தனியார் தொழிற்சாலைகளும், கூட்டுறவு தொழிற்சாலைகளும் அமைந்துள்ளன. இந்நிலையில் தங்களது தோட்டத்தில் பறிக்கும் பச்சைத் தேயிலையை விவசாயிகள் அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்குகின்றனர். இதையடுத்து தொழிற்சாலைகளில் பச்சைத் தேயிலையை கொண்டு தயாரிக்கப்படும் தேயிலைத்தூள் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில் ஆன்லைன் மூலம் […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கிரீன்ஃபீல்ட் பகுதியில் சுரேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சுரேந்திரன் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]
சாலைகள் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர்-கேரளாவை இணைக்கும் சாலையில் தேவாலா, நாடுகாணி, பந்தலூர், மரப்பாலம், சேரம்பாடி போன்ற முக்கிய பஜார்கள் அமைந்துள்ளது. இந்த சாலை வழியாகத்தான் பந்தலூர் தாலுகா மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள கூடலுருக்கு சென்று வருகின்றனர். மேலும் அத்தியாவசிய பொருட்களை கேரளாவிற்கு கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் இந்த சாலையில் இயக்கப்படுவதால் எப்போதும் […]
உயர் அதிகாரிகளின் அனுமதி கிடைத்த பிறகு தாவரவியல் பூங்கா திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள நாடுகாணி வனச்சரகத்தில் தாவரவியல் மைய பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் அரிய வகை தாவரங்கள், பராமரிப்பு கூடம், திசு வளர்ப்பு மையம், பெரணி இல்லங்கள், பசுமை பள்ளத்தாக்குகள், வனவிலங்குகளின் பதப்படுத்தப்பட்ட உடல் பாகங்கள் கொண்ட கண்காட்சியகம் போன்றவை அமைந்துள்ளது. இந்த தாவரவியல் பூங்கா கல்லூரி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகளின் கல்வி சுற்றுலா மையமாக மட்டுமே செயல்பட்டு வந்தது. இதனையடுத்து […]
கட்டுப்பாட்டை இழந்த லாரியானது கவிழ்ந்த விபத்தில் தாய் மகள் இருவரும் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை வெப்பலம்பட்டி பகுதியில் இருக்கும் நான்கு வழிச் சாலையை விரிவாக்கம் செய்யும் பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலத்தில் இருந்து வேலூர் நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரியை ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வரும் வடிவேல் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது வெப்பலம்பட்டி […]
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை ஆடுகளை கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பெத்திக்குட்டை பகுதியில் துரைசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மேய்ச்சலுக்காக வெளியே தோட்டத்தில் 3 ஆடுகளை கட்டிவிட்டு துரைசாமி அங்கிருந்து சென்றுவிட்டார். இதனை அடுத்து அதிகாலை ஆடுகள் திடீரென வித்தியாசமாக சத்தம் போட்டதால் துரைசாமி வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது கழுத்து மற்றும் பல இடங்களில் ரத்த காயங்களுடன் […]
கூர்நோக்கு இல்லத்தில் இருந்த வார்டனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய நான்கு சிறுவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து விட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள லட்சுமி மில் சந்திப்பில் இருக்கும் கூர்நோக்கு இல்லத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 11 சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் இரவு சாப்பாட்டிற்காக வெளியே விடப்பட்ட 11 சிறுவர்களில் 6 சிறுவர்கள் திடீரென வார்டனை தாக்கி, அவரை அவர்கள் தங்கி இருந்த அறையில் தள்ளி வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து 7 மணிக்கு சிறுவர்கள் […]
தனியார் பள்ளி வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 10 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் எம்.ஜி.ஆர் நகர் சந்திப்பில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
மண்பானைகள் உற்பத்தி முடிவடைந்த நிலையில் வருகின்ற கோடை காலங்களில் விற்பனை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆவலப்பம்பட்டி, பொன்னாபுரம், நல்லம்பள்ளி, பெரும்பதி, வேட்டைகாரன்புதூர் போன்ற இடங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியானது அதிக அளவில் நடைபெற்றுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்னரே இந்த ஆண்டு மண்பாண்டங்கள் தயாரிப்பு முடிவடைந்த நிலையில் எதிர்பார்த்த அளவு இன்னும் மண்பானைகளின் விற்பனை அதிகரிக்கவில்லை. இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும்போது, குளிர்சாதன பெட்டி குளிர் நீரை விட மண்பாண்டத் குளிர்நீர் உடம்புக்கு […]
தண்ணீர் வாளிக்குள் தலைகுப்புற விழுந்து 1 1/2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சுப்பு பிள்ளை தெருவில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இனியாசி என்ற 1 1/2 வயது பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வேலைக்கு சென்றுவிட்டு குமரேசன் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். அதேசமயம் கலைவாணியும் கண் அயர்ந்து […]
ஏ.டி.எம்-மில் நிரப்புவதற்காக கொண்டு சென்ற 1 கோடியே 9 லட்சத்து 47 ஆயிரத்து 800 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொது மக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள […]
கட்டிட தொழிலாளி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வாசுகி நகர் பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமாக கட்டி வரும் வீட்டு கட்டுமான பணியில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த துக்குனாசாகு மற்றும் பிரசன்னகுமார் ஜனா போன்றோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் துக்குனாசாகு பகலில் கட்டிட தொழிலாளியாகவும், இரவில் காவலாளியாகவும் வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து பிரசன்னகுமார் கட்டுமான பணி நடைபெறும் கட்டிடத்திற்கு தனது […]
மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் பகுதியில் நவநீத கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நவநீத கண்ணன் மோட்டார் சைக்கிளில் மடத்தூர் சர்வீஸ் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி இவரின் மோட்டார்சைக்கிள் மீது […]
விவசாயியின் வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமர் தோட்டம் பகுதியில் ஸ்ரீனிவாசன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் காந்திபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீனிவாசன் தனது வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 18 பவுன் தங்க […]
ஆவணமின்றி கொண்டு சென்ற இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நேர் அழகிரி சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் இரண்டு லட்சம் ரூபாய் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் காரில் வந்த நபர் துணி வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காரில் […]
கால்வாயில் தள்ளி விட்டு வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆதியூர் கிராமத்தில் அம்சா வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஐ.டி.ஐ படித்து முடித்த பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 7ஆம் தேதி தனது மகனை காணவில்லை என அம்சா வேல் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]
டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவனதபுரம் பகுதியில் லிப்சன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக காய்கறி மற்றும் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது காய்கறி கடைக்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக லிப்சன் காரில் வெள்ளகோவிலில் இருந்து திருப்பூருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து இவரது […]
மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள பொத்திரெட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கால் வலியால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது கால் வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இருக்கன்குடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் […]
கோயம்புத்தூர் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 6 சிறுவர்கள் வார்டனை தாக்கிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் குற்ற செயல்களில் ஈடுபடும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் கோவை லட்சுமி மில் சந்திப்பில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறாக 11 சிறுவர்கள் இந்த கோவை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டு, இவர்களை கண்காணிப்பதற்காக வார்டனும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரவு 7.30 மணி அளவில் இரவு சாப்பாட்டுக்காக சிறுவர்கள் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன மேற்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வடுக பாளையம் பகுதியில் நித்திய குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி உள்ளார். இவர் பல்லடம் கடைவீதியில் பெண்கள் அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மோட்டார் சைக்கிளில் தனது மனைவியை […]
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் விசாகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் மத்தாப்பு தீக்குச்சிகளை காய வைப்பதற்காக தொழிலாளர்கள் அதனை எடுக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, கருமருந்து உராய்வு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு அறைகள் தீப்பிடித்து எரிந்து உள்ளன. இதுகுறித்து தகவல் […]
தனது குழந்தையை கொன்றுவிட்டு இளம் பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகரில் ராம்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள துணிக்கடையில் டிரைவராக பணிபுரிந்த போது அங்கு வேலை பார்த்த கவிதா என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் காமராஜர் நகரில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஹரிஹரன் என்ற […]
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நகைக்கடை உரிமையாளர் வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தலை வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தீவிரவாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் போன்றவற்றை கொடுப்பதை தடுக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார்கோவிலில் ஹெலிகாப்டர் ஒன்று வந்துள்ளது. இதனை அறிந்த அதிகாரிகள் அங்கு சென்று ஹெலிகாப்டரை சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையில் ஹெலிகாப்டரில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாததால் […]
மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மருதா நாட்டியாஞ்சலி விழா 300க்கும் மேற்பட்ட கலைஞர்களால் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்றுமுன்தினம் சிவராத்திரி விழாவையொட்டி மாலை 6 மணி முதல் நான்கு கால பூஜை நடைபெற்று சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்று ஸ்வாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டுள்ளது. பின்னர் மருதா நாட்டியாஞ்சலி குழுவினரின் பத்தாவது […]
தேங்காய் பருப்பு விலை வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள கொளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குமராபாளையம், மரவாபாளையம், சேமங்கி, நொய்யல் போன்ற பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தென்னை மரத்தைப் பயிரிட்டு தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் அதனை பறித்து உரித்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் பருப்பு ரூபாய் 139 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் இதன் விலை 134.9 விற்பனை செய்யப்படுகிறது. இதன் வித்யாசம் 4 […]
வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வாகனங்களில் சிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்கள் நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்கள், அரசு பஸ்கள், சரக்கு வாகனங்கள், போன்ற பொது மக்களால் அதிகம் பயன்படுத்தக்கூடிய வாகனங்களில் கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி சார்பில் ஒரு […]