சரக்கு ஆட்டோ இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள விக்கிரமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் கோவிந்தராஜ். இவரும் அதே பகுதியில் வசிக்கும் மரியதாஸ் என்பவரும் பெண் பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சுத்தமல்லி வரை சென்று பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும்போது துனிச்சிக்குட்டை ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த சரக்கு ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த […]
Tag: District News
மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் மனமுடைந்த காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் சாமிதாஸ் பகுதியில் ஜான் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எழும்பூரில் இருக்கும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வனஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு வனஜா கருத்து வேறுபாடு காரணமாக ஜான் கிறிஸ்டோபரை விட்டு பிரிந்து தனது […]
மின் கம்பி உரசியதால் கரும்பு பயிர்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள காரைபாக்கம் கிராமத்தில் கரும்புகள் பயிரிடப்பட்டிருந்தது. இந்த கரும்பு பயிரிடப்பட்ட இடத்தின் மேலே மின் கம்பிகள் தாழ்வாக இருந்துள்ளது. இதனால் ஒன்றோடொன்று மின்கம்பிகள் உரசியதில் தீப்பொறி ஏற்பட்டு அது வயல்களின் மீது விழுந்து தீப்பற்றியுள்ளது. இதனை யாரும் கவனிக்காத காரணத்தினால் தீ மளமளவென அருகிலிருந்த வயல்களுக்கும் பரவியுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 8 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து […]
பெண்ணிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலி மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டின் பக்கத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது திடீரென அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பாரதியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் சிறை காவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மாங்குடி கிராமத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புழல் சிறையில் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் புழல் சிறை காவலர் குடியிருப்பில் வசித்து வரும் மணிமாறன் என்ற மற்றொருவரும் புழல் சிறையில் காவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு காவலர்களும் மாதவரத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் புழல் சிறை நோக்கி சென்றுள்ளனர். அப்போது இவர்களின் […]
ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்கு எடுத்துச் செல்லப்பட்ட 1 கோடியே 8 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை நகரத்தில் உள்ள ஏ.டி.எம்-மில் பணம் நிரப்புவதற்காக சென்ற 2 வாகனங்களை அதிகாரிகள் பிடித்து சோதனை செய்துள்ளனர். […]
போலீஸ்காரர் திடீரென தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பாளையம் கிழக்குத் தெருவில் ஹரிஹரசுதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்குழலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி ஏழாவது பாட்டாலியன் சிறப்பு காவல் படையில் போலீசாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பதவி உயர்வுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் […]
குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நாகரசம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகுணா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் இவரின் இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்த சுகுணா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டில் இருந்த […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை இருவர் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னவேடம்பட்டி பகுதியில் சூர்யா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் அருள் மற்றும் சந்தோஷ்குமார் ஆகியோருக்கும், சூர்யாவுக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து இவர்களுக்கு இடையில் மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, கோபத்தில் அருள் மற்றும் சந்தோஷ்குமார் இணைந்து சூர்யாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சூர்யாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து […]
100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவசமாக தர்பூசணி வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம், பேரணி, நடனம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றுள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது பொதுமக்களுக்கு இலவசமாக தர்பூசணி […]
கணவன் மனைவி இருவரும் ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள பெரம்பூர் நெடுஞ்சாலை பகுதியில் ஸ்ரீநிவாசன் என்ற பா.ஜ.க பிரமுகர் வசித்து வருகிறார். இவருக்கு கனகதுர்கா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் சேர்ந்து ஏலச்சீட்டு நடத்தி உள்ளனர். இந்நிலையில் இவர்கள் ஏலச்சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காமல் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் கணவன் மனைவி இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் […]
விமானம் புறப்பட இருந்த நேரத்தில் அதில் பயணம் செய்த ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து 148 பயணிகளுடன் விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்தது. இந்த விமானத்தில் மத்திய உள்துறை இணை மந்திரிகிஷன் ரெட்டி இருந்துள்ளார். இந்நிலையில் விமானம் ஓடுபாதையில் ஓட தயாராக இருந்துள்ளது. அப்போது திடீரென சென்னை பெரம்பூரில் வசித்துவரும் தயாளன் என்ற பணிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கம் அடைந்து விட்டார். இதுகுறித்து விமானி உடனடியாக […]
போலியான கால் சென்டர் நடத்தி இருவர் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் புருஷோத்தமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை அடையாறு சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தன்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் கடன் வாங்கி தருவதாக கூறி ஆன்லைன் மூலம் 10,000 ரூபாயை வாங்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து தன்னிடம் பணம் கேட்டு தொல்லை […]
தீக்காயங்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சைதாப்பேட்டை பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு கண்ணகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கவி வர்ஷன் என்ற மகனும், நட்சத்திரா என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென ராஜ்குமார் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் […]
மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி சக்தி நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்வாரிய ஊழியர்கள் கணேசன், பத்மநாபன் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பாம்பே நகரில் வசித்து வரும் சாய் சத்குரு ஆகியோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கையில் உரை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் சாய் சத்குரு மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தபோது, திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதில் சாய் சத்குரு மின்கம்பத்தில் […]
கோவிலை இடிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சுந்தரம்பிள்ளை நகரில் சுந்தர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலானது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலை அகற்ற வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் பட்சத்தில் விநாயகர் கோவிலை இடித்து அகற்றும்படி சென்னை […]
மருத்துவமனை பெண் ஊழியரை மிரட்டி வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்த குடியாத்தம் பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில், இந்த இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் இளம்பெண்ணும், அவரது தாயாரும் வீட்டில் உள்ள குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது, அப்பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபர் அதனை வீடியோ […]
22 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை வேனில் கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்ன கந்திலி அருகே தேர்தலுக்காக அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது டைட்டன் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு மினி வேனில் 22 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கி ஏந்திய காவலர் உடன் இந்த நகைகளை திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை […]
விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள முத்தூர் அர்ஜுனாபுரம் பகுதியில் ரேவந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அர்ஜுனா புறத்திலிருந்து ரேவந்த் நந்த காடையூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இவர் நத்தகாடையூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, திடீரென இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி ரோட்டில் இருந்த பனை மரத்தில் மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொம்மிகுப்பம் கிராமத்தில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வேலூர் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் சீனிவாசன் என்பவர் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததை காவல்துறையினர் […]
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் சமையலராக அரசு ஆதிதிராவிடர் விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமு தனது மோட்டார் சைக்கிளில் மானாமதுரையிலிருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டுள்ளார். இவரது மோட்டார் சைக்கிள் அரியநேந்திரன் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. […]
கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துலிங்காபுரம் பகுதியில் மணிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான மணிராஜ் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அவரது மனைவி சரஸ்வதி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி வெளியே சிறிது […]
துணி பந்தல் ஏற்றி சென்ற லாரியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து துணி பண்டலை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கொல்கத்தா நோக்கி சென்றுள்ளது. இதை திருச்சி மாவட்டத்திலுள்ள துறையூரில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அதோடு நடராஜ் என்பவர் கிளீனராக பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த லாரி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விக்கிரவாண்டியில் இருக்கும் ஒரு தனியார் கல்லூரி பக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் சென்று கொண்டிருந்தபோது, […]
தனது மகளையும், மருமகனையும் ஒன்று சேர்த்து வைக்க முடியாததால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஞானசிகாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிதா திடீரென காணாமல் போனதால் ஞானசிகாமணி அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். இந்நிலையில் கவிதா வீடூர் அணையில் பிணமாக மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் […]
லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள பெரியவிள்ளை வலசை பகுதியில் செல்லப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் தனது உறவினருடன் மத்தளம்பாறை பகுதியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு இரண்டு பேரும் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து ராமச்சந்திரன் என்பவர் அந்த ஆட்டோவை பழைய குற்றாலம் பகுதியில் ஓட்டி சென்ற போது, நிலை தடுமாறிய ஆட்டோ அங்கு […]
தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 116 ரவுடிகளை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக 180 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த மாவட்டத்தில் பதட்டமான இடங்களாக கண்டறியப்பட்ட 51 இடங்களில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். மேலும் 543 துப்பாக்கி உரிமையாளர்கள் துப்பாக்கியை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது. இதில் 489 பேர் துப்பாக்கியை ஒப்படைத்த நிலையில் 54 பேருக்கு விலக்கு அளித்து உள்ளனர். […]
அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் சிங்கபெருமாள் கோவில் செல்லும் சாலையில் ஒரு மூதாட்டி சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஓன்று மூதாட்டி மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த ஒரகடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மதபோதகர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் பகுதியில் சுரேஷ் என்ற கிறிஸ்தவ மத போதகர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து வேலூருக்கு தனது மகள் பியூலா என்பவருடன் சென்றுள்ளார். இந்நிலையில் இவர்களது மோட்டார் சைக்கிள் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, அடையாளம் தெரியாத வாகனம் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி பள்ளத்திற்குள் கவிழ்ந்த விபத்தில் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பாளையம் பகுதியில் விஷ்ணுகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் வெள்ளகோவில் பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு திலகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் விஷ்ணுகுமார் இரவு வீட்டிற்கு தனது பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போது இவர் நத்தகாடையூர் காங்கயம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் […]
விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பானுமதி என்ற பெண்குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து இவர்களின் மோட்டார் சைக்கிள் அய்யனாரூத்து பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறுக்கே சென்றதால் கருப்பசாமி திடீரென […]
நண்பர்களுடன் குளிக்க சென்றவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நவாவூர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சித்திரைச்சாவடி அணைக்கு குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்துவிட்டு அணையில் இறங்கி குளித்துள்ளனர். இதனையடுத்து பழனிச்சாமி தண்ணீர் தேங்கிய பகுதியில் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் விழுந்து மூழ்கி விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய […]
மூன்று குழந்தைகளை விட்டுவிட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி கிராமத்தில் வெங்கட்ராமன்-விஜயா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய திருமண நாளன்று வெங்கட்ராமன் வெளியூருக்கு சென்று விட்டதால் மனமுடைந்த விஜயா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பழுவூர் கிராமத்தில் அரசு பாலிடெக்னிக் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நிலையில் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகள் திடீரென பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வலியுறுத்தி கோரிக்கைகளாவது “அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தரவேண்டும், கல்லூரியில் தரப்படும் உணவின் […]
சலவைத் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் சலவைத் தொழிலாளியான சங்கரநாராயணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று சங்கரநாராயணன் மது அருந்திவிட்டு தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து கரூர் […]
ரயில் மோதி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள பைபாஸ் சாலையில் இருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் ரயில் மோதி இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த நபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை.ஆனால் அந்த நபரின் இடது […]
மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் கணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள நூலகவுண்டனூர் பகுதியில் சரவணன்-சித்ரா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சரவணன் மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி சித்ராவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் சித்ரா தனது இரண்டு குழந்தைகளையும் மாமியாரிடம் விட்டு விட்டு தனது தாய் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சரவணன் தனது வீட்டில் […]
விடுதியில் தங்கியிருந்த நபரிடம் 3 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளிலும் 12 பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பறக்கும் படை குழுக்கள் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் […]
கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மத்தூர் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பெண் போலீஸ்காரர் ரமணி என்பவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மத்தூர் பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான புகாரின்படி மத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி […]
4 வருடங்களாக காதலித்தவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷகீன் என்ற மகள் உள்ளார். இவர் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான சண்முகம் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுப்பம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தேன்மொழி […]
விபத்தில் ஆடு வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாசுரெட்டிகண்டிகை கிராமத்தில் சுபன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆடு வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுபன் லட்சுமபுரம் ஆற்று மேம்பாலம் மீது தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுபன் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பாரதியார் தெருவில் மோகன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் மோகன் அடிக்கடி மது குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட […]
புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வெளிமாநில வாலிபரை கைது செய்த காவல்துறையினர், 72 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள போயம்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அனுப்பர்பாளையம் காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் […]
திருமணமாகி ஓர் ஆண்டுகளே நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள என்.ஆர்.கே நகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வெல்டிங் ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சுபஜனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஓராண்டு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அதிகாலை சுபஜனா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன் அருகில் இருந்தவர்கள் உதவியோடு […]
பனியன் நிறுவன உரிமையாளர் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற 2 லட்சத்து 32 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பறக்கும் படையினர் பொதுமக்களுக்கு பரிசுப்பொருள் மற்றும் பணத்தை கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் வஞ்சிபாளையம் பகுதியில் வணிக வரித்துறை அலுவலர் […]
மனைவி பிரிந்து சென்றதால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் மாரிமுத்து என்ற லோடு ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதிலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பத்து மாத ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஜோதிலட்சுமி தனது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக சென்றுவிட்டார். இதனையடுத்து ஜோதி லட்சுமியுடன் […]
முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள லக்கம்பட்டி பகுதியில் மாரியப்பன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஊத்தங்கரை காவல்துறையினருக்கு அருகில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முதியவரின் உடலை விட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து […]
ஒற்றை காட்டு யானை மிதித்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள திருச்சிபள்ளி கிராமத்தில் ராஜப்பா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு பாப்பம்மா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் காலையில் ராஜப்பா தனது வீட்டை விட்டு வெளியே வந்து அப்பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது அங்கு பதுங்கி இருந்த ஒற்றை யானை திடீரென ராஜப்பாவை துரத்த ஆரம்பித்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜப்பா அங்கிருந்து […]
போலி ரசீது தயாரித்து மோசடி செய்த குற்றத்திற்காக தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஜி.எஸ்.டி இயக்குனர் ஜெனரல் புலனாய்வு அதிகாரிகளுக்கு சேலம், பொள்ளாச்சி, கரூர் போன்ற நகரங்களில் பதிவு செய்யப்பட்ட பிளைவுட், செராமிக் பொருட்கள் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனம் போலி ரசீதுகளை தயார் செய்து மோசடியில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ஜி.எஸ்.டி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் லாரி டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குரும்பட்டி பகுதியில் முனிவேல் என்ற லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த ஒரு வாகனம் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முனிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து […]