தமிழக அரசால் வழங்கப்படும் புத்தகப் பைகள் கொண்டு வந்த கண்டெய்னர் லாரியை பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒரு கண்டெய்னர் லாரி வந்து நின்றுள்ளது. அந்த லாரி வெகுநேரமாக அங்கேயே நின்றதால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு வந்து லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் சர்வே நடத்தியுள்ளனர். அதில் அந்த […]
Tag: District News
15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு அதே பகுதியில் 17 வயதான 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் அந்த மனைவி பள்ளியில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் பயன்பாடு குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாதிரி வாக்குப்பதிவு ஒத்திகை நிகழ்ச்சி கரூர் பஸ் நிலையத்தில் வைத்து நேற்று நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதில் வாக்காளர்களிடம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் வாக்கு பதிவு இயந்திரம் […]
விவசாயின் தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் தென்னை மரங்களை வேரோடு சாய்த்து அட்டகாசம் செய்துள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கடையம் பகுதியில் விவசாயி வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று இரவு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து எட்டு தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. இதுவரை இவரது தோட்டத்தில் மட்டும் 55 தென்னை மரங்கள் சேதமானது குறிப்பிடத்தக்கது. மேலும் அப்பகுதியில் 800 ஏக்கர் நெற்பயிர்கள் பயிடப்பட்டுள்ளது. இது தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் […]
குளிக்கச் சென்ற கட்டிட மேஸ்திரி ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் வசித்து வந்தவர் வெங்கடேஷ். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் தாங்கள் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக வெங்கடேஷ் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அவருடைய நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குணபதிமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் அஞ்சம்மாள். இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் அஞ்சம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று அஞ்சம்மாள் அருகில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். பின்பு மறுநாள் காலை அஞ்சம்மாள் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்திருப்பதை கண்டு […]
மலை மீது பற்றி எரியும் தீயானது காற்றின் வேகத்தால் மளமளவென பற்றி எரிகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம், ஆரல்வாய்மொழி, தோவாளை போன்ற மலைத்தொடர்களில் அடிக்கடி தீ பிடிக்கிறது. இந்நிலையில் சுங்கான்கடை மலையில் உள்ள பல்வேறு இடங்களில் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீயில் அரிய வகை செடிகள் மற்றும் மரங்கள் கருகி விட்டன. மேலும் பலத்த காற்று காரணமாக தீயானது பல்வேறு இடங்களுக்கு பரவி கொண்டிருக்கிறது. அதோடு தீ அணையாமல் பற்றி எரிவதால் எல்லா இடங்களிலும் புகை […]
பிரத்யேக இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து கலெக்டர் ஓட்டி சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பழனிகுமார் என்ற மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இதனால் மரிஸ்வரி தனது மகனை எப்போதும் வெளியே அழைத்துச் செல்லும்போது இடுப்பில் சுமந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற மாரீஸ்வரி மகனை தன் இடுப்பில் […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் ஜீவா நகர் பகுதியில் கேசவன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர்-பாகலூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த பிக்கப் வேன் இவரின் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு […]
நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது விளையாட்டாக சிறுவன் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிவந்திப்பட்டி பகுதியில் முத்தையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 6 ஆம் வகுப்பு படிக்கும் சதீஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சதீஷின் பெற்றோர் வயலுக்கு சென்ற பிறகு அப்பகுதியில் வசிக்கும் சிறுவர்களுடன் சதீஷ் விளையாடி கொண்டிருந்தான். அப்போது வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை விளையாட்டாக குடிக்க போகிறேன் என்று கூறிய சதீஷ் திடீரென அதனை குடித்துவிட்டான். இதனை […]
ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருபவர் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புதூர் கிராமத்தில் ஸ்டீபன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பணகுடி பகுதிக்கு கூலி வேலைக்காக சென்ற ஸ்டீபன் தனக்கு திருமணமானதை மறைத்து அப்பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை காதலித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவியுடன் கடந்த […]
மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் மனோஜ்குமார் என்ற ஓட்டுநர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவபாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஜீவபாரதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பெற்றோர் வீட்டில் உள்ள தனது மனைவியை பார்க்க சென்ற மனோஜ்குமார் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் மனோஜ்குமார் மனைவிக்கு கொலை […]
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீராம் நகர் பகுதியில் ஜெகதீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹசிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஹசிகா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து […]
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்ற இரண்டு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிவசக்தி காலனி பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவியின் பெற்றோர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதால், இந்த மாணவி தனது சித்தி மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள மறைவான பகுதிக்கு சென்றுள்ளார். […]
மனைவி கொரோனா தொற்றுக்கு பலியானதால் விரக்தியில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கீழ பூவாணி கிராமத்தில் ராமதாஸ் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ராமதாஸின் மனைவிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் மனைவி இறந்த நாள் முதலே ராமதாஸ் மிகவும் மனவருத்தத்துடன் இருந்துள்ளார். அவ்வபோது தன் மனைவி சென்ற இடத்திற்கே தானும் செல்ல […]
தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மனைவியை மிரட்டியவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பிள்ளையார்புரம் பகுதியில் மணிகண்டன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தினமும் மது குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்யும் மணிகண்டன் அவரை மிரட்டுவதற்காக அடிக்கடி தூக்கு போட்டு தற்கொலை செய்வது போல மிரட்டியுள்ளார். இவ்வாறு சம்பவம் நடைபெற்ற அன்று மணிகண்டன் மது குடித்து […]
பாகன்களை பிரிந்த சோகத்தில் வாடிய ஜெயமால்யதா யானை பாகன்களுடன் மீண்டும் கோவிலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் யானை சிறப்பு நலவாழ்வு முகாம் கடந்த மாதம் 8ஆம் தேதி தொடங்கி உள்ளது. இந்த புத்துணர்வு முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த 26 யானைகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் […]
பிரியாணி ஹோட்டலில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உக்கடம் பகுதியில் வசித்து வரும் சபைர் என்பவர் காவல் நிலையம் அருகே பிரியாணி ஹோட்டல் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஹோட்டலில் ஊழியர்கள் பிரியாணி சமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சமையலறையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஹோட்டலை விட்டு வெளியேறி விட்டனர். இதுகுறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் […]
காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் 20 வருடம் கழித்து மனைவியின் அண்ணனை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எஸ்.எம்.நகர் பகுதியில் சர்புதீன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இவரது சகோதரி சிறுமுகையில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சர்புதீனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட கார்த்திக் திடீரென சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து […]
பெண்ணை தாக்கிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் மலர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று உதயகுமாரும் அவருடைய உறவினரான கோவிந்தராசும் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த மலர் கோவிந்தராசுவிடம் உங்களுடைய உறவினரான சேகர் இறைச்சி வாங்கியதில் எனக்கு பாக்கி தரவேண்டும் என கூறியுள்ளார். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த உதயகுமார் என் தந்தை எப்போது […]
வீட்டிலுள்ள நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடிவிட்டு சொத்து பத்திரங்கள் பட்டுப்புடவைகள் ஆகியவைகள் எரித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள தாதம்பேட்டை கிராமத்தில் பொன்னம்பலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று கோவிலில் நடைபெறும் விசேஷத்திற்கு கலந்துகொள்வதற்காக வீட்டிலிருந்து சென்றுள்ளார். பிறகு இரவு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வீட்டின் கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது. இதனை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்து பின்புறமாக வீட்டிற்குள் சென்றுள்ளார். அவர்கள் வீட்டிற்குள் செல்லும் போது வீட்டுக்குள் புகை மண்டலமாக இருந்துள்ளது. அவர் […]
டிராக்டரில் ஏற்றி செல்லப்பட்ட வைக்கோல் மின்கம்பி உரசியதால் தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அறுவடை முடிந்த பின்னர் வைக்கோலை விற்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த வைக்கோல் டிராக்டர் மூலம் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்படுகின்றது. இந்நிலையில் காந்திகிராமம் பகுதியில் உள்ள டிராக்டர் வைக்கோலை ஏற்றுக் கொண்டு சென்றுள்ளது. அப்போது டிராக்டரில் இருந்த வைக்கோல் மின்கம்பத்தின் மீது உரசியதால் தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதி […]
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருடைய மனைவியான சத்யாவிற்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் பல இடங்களில் சிகிக்சை பெற்று வந்தார். ஆனால் எந்த வித பலனும் இல்லாததால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சம்பவம் நடந்த அன்று சத்யாவிற்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர் எலி […]
பண்ணாரியம்மன் கோவில் அருகே காட்டு யானை அங்குமிங்குமாக அலைந்ததில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் பகுதியில் பண்ணாரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த கோவில் சத்தியமங்கலம்-மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் யானைகள் தண்ணீரைத் தேடி ரோட்டை கடந்து சென்று வருகிறது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் தூரத்திலேயே வாகனங்களை நிறுத்திக் கொண்ட காத்திருந்தனர். இதனால் […]
பழைய கட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எர்ணாபுரம் கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் தன்னுடைய பழைய வீட்டை இடித்து விட்டு புதிதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக பழைய வீட்டின் சுவரை அவர் சின்னத்தம்பி என்பவரை கொண்டு இடித்துக் கொண்டிருந்தார் அந்த சமயத்தில் அப்பகுதியை சேர்ந்த பூங்கொடி மற்றும் 2 வயது குழந்தை ஸ்ரீதேவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் சுவர் திடீரென்று இடிந்து விழுந்ததால் […]
நிலமற்ற விவசாயிகளுக்கு அனைத்து கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சுய உதவிக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் நாங்கள் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் ஓரமாக அமர்ந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடைபெற்றுள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது “விவசாய கடன், மகளிர் சுய உதவி குழு கடன், நகை […]
வேலூர் ரவுடி வசூர்ராஜாவை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் கிராமத்தில் செல்லத்துரை என்ற பிரபல ரவுடி வசித்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த கொலை தொடர்பாக 29 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதிலும் முக்கிய குற்றவாளியான வேலூரைச் சேர்ந்த வசூர்ராஜா என்ற ரவுடி தலைமறைவாக இருந்துள்ளார். இவர் கடந்த […]
காரில் கொண்டுவரப்பட்ட 1232 வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலுள்ள வேம்பூர் கூட்டு ரோடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி […]
கணவரை இழந்த பெண் சப் இன்ஸ்பெக்டர் மீது புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் இடம் 33 வயது பெண் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அந்தப் பெண்ணின் கணவர் இறந்து விட்டதால் தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வாழ்ந்து டிபன் கடை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவரது கடைக்கு முன்பு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஸ்ரீரங்கம் காவல் நிலைய […]
பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 20 பாக்கெட் புகையிலையையும் பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி இந்திரா காலனி பகுதியில் சாத்தூர் தாலுகா காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் வேலுச்சாமி என்பவர் தனது கடையில் புகையிலைப் பொருட்களை வாங்கி வைத்து விற்பனை செய்து வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து […]
குரங்கிடம் இருந்து தப்பிப்பதற்காக சிறுவன் சிலை போல் நடித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள மறைகுளம் கிராமத்திற்குள் நுழைந்த குரங்கு ஒன்று தெருவில் நடமாடும் அனைவரையும் துரத்தி கடித்துள்ளது. மேலும் அந்த குரங்கு 15க்கும் மேற்பட்ட நாய்களையும் கடித்து குதறி உள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பள்ளியின் சுற்றுச்சுவரில் 10 வயது சிறுவன் ஏறி விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த குரங்கு சிறுவன் அருகே சென்று […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவரும் திண்டுக்கல் மாவட்டத்தில் வசித்து வரும் திவ்யகுசீலி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]
மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி தேவர்குளம் பகுதியில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்து ரிஷி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முது ரிஷி தனது உறவினருடன் மோட்டார் சைக்கிளில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென அவ்வழியாக வந்த டிராக்டர் இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்து ரிஷி சம்பவ இடத்திலேயே […]
2 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்றவர்களை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து, ரேசன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விருதுநகர்-சிவகாசி சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒரு வேனை காவல்துறையினர் மடக்கி சோதனை செய்ததில் அந்த வேனில் 40 மூட்டைகளில் 2 டன் ரேசன் அரிசி இருந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் […]
கடலூர் மாவட்டத்தில் 40 ரவுடிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கடலூர் மாவட்டத்தில் உள்ள ரவுடிகளை கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பெயரில் பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், கடலூர், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட 5 […]
கால் தவறி குளத்தில் விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் வசித்து வந்தவர் கணேசன். இவர் அதே பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று பணியை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இதற்கிடையில் வாராப்பூர் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து இரண்டு லட்சம் மதிப்புள்ள தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குருபீடபுரம் கிராமத்தில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தவமணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தவமணிக்கு பல் வலி இருந்ததால் தனது மகன் ராஜ்குமார் என்பவருடன் கள்ளக்குறிச்சி நோக்கி சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதனையடுத்து இவர்களின் மோட்டார் சைக்கிள் பிரிதிவிமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, இவர்களுக்கு பின்னால் […]
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் காலனி பகுதியில் லியோபால் என்ற வேன் டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா மேரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களது பக்கத்து வீட்டில் ராதாகிருஷ்ணன் என்ற கல்லூரி மாணவர் வசித்து வருகிறார். இந்த ராதாகிருஷ்ணனும், சுஜாதா மேரியும்யும் அடிக்கடி பேசி வந்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளகாதலாக மாறிவிட்டது. […]
மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று வேறு ஒருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஈத்தாமொழி கிராமத்தில் வசித்து வந்தவர் கதிரவன். இவர் எலக்ட்ரிஷனாக பணிபுரிந்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கதிரவன் அஜிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்ட நிலையில் அஜிதா மட்டும் […]
ஓடும் பேருந்தில் இரண்டு பெண்களிடம் இருந்த ரூபாய் 6200 திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ராஜலட்சுமி மற்றும் மகேஸ்வரி தென்காசி மாவட்டத்திற்கு பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மகேஸ்வரி தனது கைபை பிளேடால் அறுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.. இதுகுறித்து அவர் ராஜலட்சுமியிடம் கூறியுள்ளார். அதேபோல் அவரது கைப்பையும்பிளேடால் அறுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து இருவரும் பேருந்து நடத்துநரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் பயணிகளுடன் பஸ்ஸை திருவேங்கடம் […]
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டில் இவர்கள் மத்திய அரசின் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளனர். அந்த சமயம் தேவதானம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த அ.தி.மு.க-வை சேர்ந்த ஆறுமுகம் என்பவரிடம் வீடு கட்டுவதற்குரிய […]
மணப்பெண் காணாமல் போனதால் பெண் வீட்டார் நஷ்ட ஈடு தர வேண்டும் என மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கு, மதுராந்தகம் பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணுடன் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமணமானது நசரத்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் நடத்தப்படுவதாக இருவீட்டாரும் அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர். இதனை அடுத்து திருமணத்திற்கு […]
வெடி மருந்து விற்பனை கிடங்குகளில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல தட்டப்பாறை, கீழ் தட்டப்பாறை மற்றும் தெய்வசெயல்புரம் போன்ற பகுதிகளில் கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிமருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கிடங்குகளை சோதனை […]
பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லான்பிள்ளைபெற்றாள் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் மாசிலாமணி. இவருடைய மகன் ரமேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு சிற்பக் கூடத்தில் சிற்பியாக வேலை செய்து வந்தார். இவர் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து வேலைக்கு செல்லாமல் அடிக்கடி ஊர் சுற்றி வந்துள்ளதால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ரமேஷ் தனது வீட்டில் இருந்து கடந்த பிப்ரவரி 8ஆம் […]
உள்ளூரில் வசித்து வரும் ஆசிரியைக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நொச்சிக்குளம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. அந்தப் பள்ளியில் அதே ஊரில் வசித்து வரும் ஆசிரியை ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த பணியிடத்தில் திசையன்விளை பகுதியில் வசித்து வரும் மற்றொரு ஆசிரியைக்கு வழங்கியுள்ளனர். இவ்வாறு வேறு ஒரு ஆசிரியை பணியில் சேருவதை கிராம மக்கள் விரும்பவில்லை. இந்நிலையில் […]
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் காலண்டர்கள் விநியோகித்த பா.ஜ.கவினர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அம்மன் கோவில்களில் மாசி மாத திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் குமாரபாளையத்தில் உள்ள காளியம்மன், மாரியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் கோவில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாஜகவினர் மோடி […]
கடன் சுமையால் தச்சு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாதா நகர் பகுதியில் ராமமூர்த்தி என்ற தச்சு தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் பல பேரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடன் தொகையை இவரால் திருப்பி செலுத்த இயலவில்லை. இந்நிலையில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த ராமமூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தாளமுத்துநகர் மொட்டை கோபுரம் கடற்கரைப் பகுதியில் ராமமூர்த்தி விஷம் […]
செல்போனில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் கடற்கரையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுமிதா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களின் மகள் மதுமிதா பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போனை எடுத்து மதுமிதா கேம் விளையாடுவதால் அவரது தாய் அவரை கண்டித்துள்ளார். […]
காதலை ஏற்றுக்கொள் என வாலிபர் வற்புறுத்தியதால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாரீஸ் புரம் பகுதியில் இருளாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியை காதலித்ததால், தினமும் அந்த மாணவி பள்ளிக்கூடம் சென்று கொண்டிருக்கும் போது வழியில் நின்று கொண்டு தன்னை காதலிக்குமாறு அந்த மாணவியை வற்புறுத்தியுள்ளார். மேலும் […]
வனத்துறையினர் ஊருக்குள் முகாமிட்டுள்ள யானையை மர குண்டு வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளது. இந்த யானை குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாவனல்லா பகுதியில் ஊருக்குள் சுற்றி வந்த காட்டு யானை மீது தீப்பந்தம் […]