டிப்பர் லாரியில் மணல் கடத்திய இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வக்கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்றை அவர்கள் வழிமறித்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் அதில் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் லாரி உரிமையாளரான சதீஷ் மற்றும் டிரைவர் மலைராஜ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து மணலையும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் […]
Tag: District News
தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பாத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகேசன். இவர் கட்டிடத்தில் கம்பி கட்டும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று கம்பி கட்டி கொண்டிருக்கும் போது தவறுதலாக அவருடைய கை விரல் மின் கம்பியின் மீது பட்டுள்ளது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்துள்ளார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன்பின் அவர் […]
திடீரென இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் பரமசிவம்-பூரணி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். பரமசிவம் ஏற்கனவே இறந்துவிட்டதால் பூரணி சுகன்யா என்பவரது வீட்டில் வீட்டு வேலை செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சுகன்யா தனது இருசக்கரவாகனத்தில் பூரணியை ஏற்றுக்கொண்டு கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென பூரணி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த பூரணி சிகிச்சைக்காக அரசு […]
கடன் சுமை காரணமாக கொசு மருந்தை குடித்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் வசித்து வந்தவர் மனோகரன்-சரஸ்வதி தம்பதியினர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு கடன் சுமை அதிகமானதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சரஸ்வதி வீட்டில் தனியாக இருக்கும்போது கொசு மருந்தை எடுத்து தண்ணீரில் கலந்து அதனை குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
தன்னை விட்டு பிரிந்து சென்றதால் கணவன் மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் கிராமத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சத்யா துணை சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சத்யா தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் சத்யா தனது இருசக்கரவாகனத்தில் சென்று கொண்டுடிருந்தபோது அவரைப் பின் தொடர்ந்து ஹெல்மெட் அணிந்தவாறு ஒரு […]
ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தூக்கம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜதுரை. இவர் நேற்று தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்கியுள்ளார். பின்னர் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தனது வீட்டில் இருந்த ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் காணாமல் போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அவர் அப்பகுதியில் விசாரித்தபோது கொத்தனார் வேலை செய்யும் மாணிக்கம் மற்றும் மனோகரன் ஆகிய 2 பேரும் செல்போனை திருடியது […]
மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவை கடத்தி வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம்-ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் செல்லும் சாலையில் காவல்துறையினர் சோதனை சாவடி அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவர்களிடம் சோதனை செய்துள்ளனர். அப்போது அவர்களின் இடுப்பு […]
பாழடைந்து கிடக்கும் பழைய அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தை பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் இயங்கி வந்த பழைய அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தற்போது ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பழைய அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் பாழடைந்து புதர்மண்டி பூட்டியே கிடக்கிறது. மேலும் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் விரிசல் ஏற்பட்டும் இடிந்த நிலையிலும் காணப்படுகிறது. இது எந்த நேரத்திலும் சாலையில் செல்பவர்கள் மீது விழ […]
செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரப்ப செட்டியார் நகர் பகுதியில் வசித்து வரும் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல் மாடியில் தனியார் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுள்ளது. இவ்வாறு செல்போன் கோபுரம் அமைத்தால் அங்கு வசிக்கும் பொதுமக்களின் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதனை அமைக்கக்கூடாது என்று கூறி பொதுமக்கள் மாநகராட்சி […]
மன உளைச்சலால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மாங்குட்டைபாளையம் கிராமத்தில் வசித்து வந்தவர் தினேஷ்குமார். இவர் அஞ்சல் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வேலைக்கு தினமும் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வந்து சென்றுள்ளார். இந்நிலையில் தினேஷ் குமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருப்பதாக காணப்பட்டுள்ளார். இதைப்பற்றி தனது நண்பர்களிடம் அவர் அடிக்கடி பேசியுள்ளார். இதனால் அவர் தன்னுடைய வாழ்க்கையில் வெறுப்படைந்ததால் தன்னுடைய […]
தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சிவகுமாரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் சிவகுமார் மது அருந்திவிட்டு சேவூரில் வசிக்கும் தனது சகோதரரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனை […]
மது குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனை கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளியம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் வேதகிரி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மதுவுக்கு அடிமையான வேதகிரி தனது பெயரில் உள்ள 12 ஏக்கர் நிலத்தையும் விற்று அந்த பணத்தை வைத்து குடித்துக்கொண்டு ஊர் சுற்றி திரிந்துள்ளார். இதனை அவரது தாயும் மனைவியும் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் யாருடைய சொல்லையும் கேட்காததால் […]
ஆக்கிரமிக்கப்பட்ட 60 சென்ட் நிலத்தை அரசுக்கு சொந்தமான நிலம் என நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான 60 சென்ட் இடம் நொய்யல் வீதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தை அப்பகுதியில் வசிக்கும் ஒரு நபர் கடந்த 18 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்த வழக்கானது திருப்பூர் 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடமானது அரசுக்கு சொந்தமானது என உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து வருவாய் […]
மேட்டூர் அணையில் நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக இருப்பதனால் அணையின் நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையின் நீர் வரத்து தற்போது குறைந்துள்ளது காரணம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததால இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 172 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அதேபோல் நேற்றும் 183 அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அதன்படி வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் அணையில் […]
மா இலை பறிக்கச் சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தம்பாடிபுதூர் கிராமத்தில் வசித்து வருபவர் தேவராஜ்-பழனியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சௌந்தர்யா என்ற மகளும் கோபாலகிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர். இவர்கள் புதிதாக வீடு கட்டி கிரகப்பிரவேசத்திற்கு தனது உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து இருந்தார். இந்நிலையில் வீட்டின் கிரகப்பிரவேச பூஜைக்காக மா இலை தேவைப்பட்டதால் கோபாலகிருஷ்ணன் தனது வீட்டின் மாடி மீது உள்ள தண்ணீர் தொட்டி மேல் ஏறி நின்று […]
குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் வசதி வேண்டி ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உசிலங்குளம், அய்யனார்புரம், காந்திநகர் போன்ற பகுதிகளில் குடிநீர் சரிவர விநியோகிக்கப்படுவது இல்லை. மேலும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் குடிநீர் வசதி கோரி பொதுமக்கள் ஆலங்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கழிவுநீர் கலந்த […]
மாநகராட்சி அதிகாரிகள் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி குணசேகரன் எம்.எல்.ஏ அலுவலகத்தை பூட்டி சீல் வைத்துள்ளனர். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மாவட்டம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு, அரசியல் கட்சியினரின் செயல்களையும் கண்காணித்து வருகின்றனர். இதனை அடுத்து அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன. மேலும் மாநகராட்சி அதிகாரிகள் […]
காதல் திருமணம் செய்து கொண்ட ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் மருங்காபுரி பகுதியில் வசிக்கும் பவானி என்ற நர்சிங் படிக்கும் மாணவியும் காதலித்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் காதல் விவகாரம் இவர்களது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் […]
டிராக்டர் டிரைவர் தீப்பற்றி எரிந்த வைக்கோலை சாலையில் இறக்கி விட்டு சென்ற சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நடுவலூர் சாலையில் டிராக்டரில் வைக்கோல் ஏற்றி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த டிராக்டர் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது திடீரென டிராக்டரில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை கவனித்த டிராக்டரின் பின்னால் வந்த வாகன ஓட்டிகள் டிராக்டர் டிரைவரிடம் வைக்கோல் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் டிராக்டரை விட்டு […]
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஒருவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி ரயில்வே ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகில் கடந்த மாதம் 7ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக திருச்சி கன்டோன்மென்ட் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கன்டோன்மென்ட் காவல்துறையினர் கருணாமூர்த்தி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் […]
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தாம்பரத்தில் இருந்து பூந்தமல்லி நோக்கி ஜல்லியை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்த லாரி மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனால் சாலையில் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்புகளை உடைத்துக்கொண்டு சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விட்டது. இதனை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து அதில் சிக்கிய […]
கருஞ்சிறுத்தை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து நாயை கவ்வி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 குடும்பங்களுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள எமக்குண்டு குடியிருப்பில் கரடி நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கட்டப்பெட்டு வனத்துறையினரிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு நாய் திடீரென மாயமானதால் அந்த நாயின் உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரின் வீட்டில் […]
கணவன் தனது பேச்சை கேட்காததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடியில் சந்தோஷ் குமார் என்ற ராணுவ வீரர் வசித்து வருகிறார். இவர் ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வினுப்ரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சந்தோஷ் குமார் தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்கு செல்ல முயற்சித்தபோது, வினுப்ரியா அவரிடம் […]
ஆறு மாத பயிற்சிக்குப் பின் நான்கு மோப்ப நாய்கள் சிறப்பான திறன்களை வெளிப்படுத்தி ரயில்வே போலீசில் பணியை துவங்கியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரத்தில் தலைமையிடமாக கொண்டு சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவு இயங்கி வருகிறது. அங்கு ரயில்வே போலீஸில் டைசன், செல்லி என்ற வெடிகுண்டுகளை மோப்பம் பிடிக்கும் திறன் கொண்ட இரண்டு மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த மோப்ப நாய்கள் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், நடைமேடைகள், தண்டவாளங்கள், ரயில் வண்டிகளில் முக்கிய […]
செல்போன் காணாமல் போனதால் பெற்றோர்களுக்கு பயந்து 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சிவகுமார். இவருடைய மகன் நிஷாந்த் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் விளையாடுவதற்காக தனது செல்போனை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது செல்போனில் சார்ஜ் இல்லாததால் நண்பருடைய வீட்டில் சார்ஜ் போட்டு விட்டு […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோர தடுப்பில் மோதிய விபத்தில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் நவீன் குமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தனது தாய், மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில் சுற்றுலாவுக்காக சென்றுள்ளார். இவர்கள் அனைத்து சுற்றுலா தளங்களையும் சுற்றி பார்த்துவிட்டு, ஊட்டியிலிருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக தலைகுந்தா பகுதிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென அவரது காரில் பழுது ஏற்பட்டதால், அப்பகுதியில் […]
வேலூர் மத்திய சிறைக்குள் கஞ்சா பொட்டலங்களை வீச முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்து அதே சிறையில் அடைத்து விட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை அமைந்துள்ளது. இந்த சிறை வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள விவசாய நிலத்திற்குள் நுழைந்த ஒரு வாலிபர் அங்கிருந்து தென்னை மரத்தில் ஏறி சிறை வளாகத்தை எட்டி பார்த்துள்ளார். இந்நிலையில் அந்த வாலிபரை சிறை கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து சிறை காவலர்கள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து அங்கிருந்து தப்பி […]
மின்சாரம் தாக்கியதில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சக்தி நகர் பகுதியில் வரதன் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்களது மூத்த மகன் கவுதம் என்ற 8 வயது சிறுவன் அருகில் உள்ள பூங்காவிற்கு விளையாடுவதற்காக சென்றுள்ளான். அப்போது பூங்காவில் இருந்த மின் விளக்கில் வெளியே தெரியும்படி தொங்கிக்கொண்டிருந்த […]
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தந்தையே மகனை தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் பகுதியில் வசித்து வருபவர் ராம்கி-காயத்ரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்த தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த ராம்கி தனது மூத்த மகனான சாய்சரண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் உடல் கருகி ஆபத்தான […]
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக மனைவியை வீட்டிற்கு வரவழைத்து அவர் தலையில் கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் நகரில் வெற்றி செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே […]
எம்.ஜி.ஆர் சிலை தீப்பிடித்து எரிந்ததால் அ.தி.மு.க-வினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தில் எம்.ஜி.ஆர் சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை தேர்தலின் காரணமாக துணியால் மூடி வைத்துள்ளனர். இந்நிலையில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கந்திலி ஒன்றிய தி.மு.க சார்பில் அப்பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது எம்.ஜி.ஆர் சிலை மூடப்பட்டிருந்த துணி மீது தீப்பொறி பறந்து விழுந்ததால், மளமளவென தீ சிலை முழுவதும் பரவிவிட்டது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் […]
குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கலாசிபாளையம் பகுதியில் கார்த்திக் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை பிறக்கவில்லை. இதனால் திவ்யா எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் […]
உயர்மின் அழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் கிராமம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பி கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் காந்திநகர் சிங்காரம் தெருவில் மகேந்திரன் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டின் மாடியில் பில்லர் அமைப்பதற்காக குணசேகரன் கம்பி கட்டியுள்ளார். அப்போது பில்லருக்கு கட்டியிருந்த கம்பி திடீரென சாய்ந்ததால் குணசேகரன் கம்பியை பிடிக்க முயற்சி செய்துள்ளார். […]
டீக்கடை தொழிலாளி உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் மணிகண்டன் என்ற டீ கடை ஊழியர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் பேருந்து நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நின்று கொண்டிருந்தபோது, சுக்காங்கல்பட்டி தெருவில் வசித்து வரும் ஆட்டோ டிரைவரான அஜய் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அஜய் மணிகண்டனை அழைத்து தங்களுக்கு மதுபானம் வாங்கித் […]
உயர் மின்னழுத்த பாதை அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நம்பிபத்து கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தும்பு ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் நம்பிபத்து கிராமம் வழியாக இந்த ஆலைக்கு உயர் மின் அழுத்த மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த சமயம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய […]
மனைவியிடம் அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, பின் வேறொரு பெண்ணுடன் அவரது கணவர் குடும்பம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புங்கனூர் கிராமத்தில் கிரேனா என்ற பெண் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பெண்ணிற்கும் உக்கிரன்கோட்டை பகுதியில் வசித்து வரும் ராஜபாண்டி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கிரேனாவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு ராஜபாண்டி மற்றும் அவரது பெற்றோர் எட்வர்ட், ரூத் போன்றோர் கொடுமை படுத்தியுள்ளனர். இதனையடுத்து கோபத்தில் […]
மோட்டார் சைக்கிளில் தனது பேரனுடன் சென்ற முதியவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அகிலாண்டபுரம் பகுதியில் குழந்தைசாமி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் தனது பேரன் மகேந்திரன் என்பவருடன் மானுருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிளானது மானூர் பக்கத்தில் சென்று கொண்டிருந்தபோது, குழந்தைசாமி எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த குழந்தைசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை […]
ஆட்டோவில் இருந்து தவறி கீழே விழுந்தவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் சண்முகராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சண்முகராஜா ஆட்டோவில் சிவந்திபட்டி சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஒரு திருப்பத்தில் திரும்பும்போது சண்முகராஜா நிலைதடுமாறி ஆட்டோவில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் பலத்த காயமடைந்த சண்முகராஜாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]
மாடு இறந்த சோகத்தில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கருத்தலிங்கபுரம் பகுதியில் மாடகண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாடு வியாபாரம் செய்து வந்ததால் 22 ஆயிரம் ரூபாய்க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மாட்டினை வாங்கியுள்ளார். இந்நிலையில் அந்த மாட்டிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அது இறந்து விட்டது. இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த மாடகண்ணு தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]
தொடக்க கூட்டுறவு வங்கியில் அறிவிக்கப்பட்டிருந்த தங்க நகை கடன் மறுக்கப்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மருக்காலங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தமிழக அரசின் உத்தரவின்படி நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு நகை கடன் வழங்குவதற்காக கடந்த பிப்ரவரி மாதம் டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்களை குறிப்பிட்ட தேதியில் வங்கிக்கு வருமாறு கூறி உள்ளனர். இந்நிலையில் வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு பொதுமக்கள் சென்றபோது, வங்கி அதிகாரிகள் யாருக்கும் […]
கும்பாபிஷேக விழாவில் பெண்களின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பிச்சையம்மாள், ஆரியமாலா, விமலா, சரஸ்வதி, ராணி போன்ற 5 பெண்களிடம் இருந்து 20 பவுன் தங்க சங்கிலிகளை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர். மேலும் கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் வசிக்கும் […]
காதலில் தோல்வியடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிச்சாவடி பகுதியில் வசித்து வருபவர் அறிவழகன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் பலமுறை அந்த பெண்ணிடம் தனது காதலை எடுத்துச் சொல்லியும் அந்தப் பெண் சம்மதிக்காததால் விரக்தியடைந்த அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கன்னங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் வழங்க மறுத்ததால் பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மருக்காலங்குளம் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த பிப்ரவரி மாதம் நகை கடன் வழங்குவதற்காக பொதுமக்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின் நேற்று டோக்கன்கள் வழங்கிய நபர்களை நகைக்கடன் பெற்றுக்கொள்வதற்காக வங்கிக்கு அதிகாரிகள் வரச்சொல்லியுள்ளனர். அதனால் பொதுமக்கள் நேற்று வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் திடீரென்று யாருக்கும் நகைக் கடன் வழங்கப்படமாட்டாது என அறிவித்ததையடுத்து ஏமாற்றமடைந்த பொதுமக்கள் […]
ப்ளஸ் 2 படிக்கும் மாணவியை கடத்தியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டத்திலுள்ள தடிக்காரன்கோணம் பகுதியில் வசித்து வருபவர் தொழிலாளி முருகன். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இவர் பிளஸ் 2 படிக்கும் மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறியதுடன் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் மாணவியின் பெற்றோருக்கு தெரிந்தவுடன் அவர்கள் முருகன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதற்கிடையே […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தேவூர் பகுதியில் வசித்து வருபவர் கேசவன். இவருக்கு சசி என்ற பெண்ணுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சசிக்கு போலீஸ்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. […]
கல்குவாரியில் வேலை செய்யும் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்திலுள்ள போகம் கிராமத்தைச் சார்ந்தவர் சுந்தர். இவர் கல்குவாரியில் கேட் கீப்பராக வேலை செய்து வந்தார். சுந்தருக்கு உறவினரான தமிழ்வாணனும் அதே இடத்தில் வேலை செய்வதனால் இருவரும் உத்திரமேரூர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக சுந்தருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் தமிழ்வாணன் மட்டும் […]
இரண்டு இருசக்கர வாகனம் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று புதூர் சாலையில் இருசக்கரவாகனத்துடன் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இவருக்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த மாரியப்பன் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த அய்யனார் மீது மோதியுள்ளார். இதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு […]
இலவச வேட்டி சேலைகள் கொண்டு தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில்அரியலூர் மாவட்டத்தில் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசியல் தலைவர்களின் சிலைகளை துணிகளை கொண்டு மூடி வைத்துள்ளனர். இந்த சிலைகளை மூடுவதற்கு தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக கொடுக்கப்பட்ட இலவச வேட்டி சேலைகள் உபயோகிக்கப்பட்டுள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் ஏதேனும் […]
கோடை சீசனை முன்னிட்டு நேரு பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நேரு பூங்காவில் தோட்டக்கலைத் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் காய்கறி கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்க்க வருவர். இந்நிலையில் கோடை சீசன் தொடங்குவதை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே நிலத்தை பதப்படுத்தி பூங்காவில் புதிய மலர் நாற்றுகளை நடுவதற்காக பேரூராட்சிக்கு சொந்தமான பூங்காவிலிருந்து இயற்கை உரம் கொண்டு வரப்பட்டு போடப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 40 […]
தீராத தலைவலியால் அவதிப்பட்டு வந்த கோவில் அலுவலக பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கட்டில் பாறை சந்தைப் பகுதியில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி தலைவலி வந்துள்ளது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது தலைவலி குணமாகாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த […]