இருசக்கர வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுண்டக்காம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கதிரேசன். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதே பகுதியில் வசித்து வரும் சக்திவேல் என்பவரும் கதிரேசனும் பட்டம்பாளையம் கிராமத்தில் இருக்கும் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இரவு பணியை முடித்துவிட்டு அதிகாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சாணார்பாளையம் […]
Tag: District News
உடல்நிலை சரியில்லாமல் போன காரணத்தால் கூலி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எட்டிப்பட்டி பகுதியில் ராசு என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் ராசு மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் விரக்தியில் ராசு தனது வீட்டில் […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி காவல்துறையினருக்கு பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தில் மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசித்து வரும் காந்தி என்பதும், […]
உரிய ஆவணமின்றி வைத்திருந்த 19, 22, 300 ரூபாய் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் சட்டசபை தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருப்பதால் பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வழங்கப்படுவதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காவல்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் கூடலூர்-கேரள எல்லைப் பகுதிகளிலும், கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள சோதனை […]
ஏரியில் குளிக்க சென்ற சிறுமி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தட்சங்குறிச்சி தேரடி தெருவில் பாலகிருஷ்ணா என்ற விவசாய வசித்து வருகிறார். இவருக்கு நிஷாந்தினி என்ற 8 வயது மகள் உள்ளார். இந்த சிறுமியும் சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் மகேஸ்வரி என்ற இளம்பெண்ணும் அப்பகுதியில் உள்ள ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதனை அடுத்து மகேஸ்வரியின் சத்தம் கேட்டு […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து விட்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்டக சாலை பகுதியில் ஸ்டெபின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் தனது உறவினர் பெண்ணை காதலித்ததை அறிந்த அந்தப் பெண்ணின் பெற்றோர் ஸ்டெபினை கண்டித்துள்ளனர். இந்நிலையில் இவர் காதலித்த பெண்ணின் வீட்டின் முன்பு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்த 15 வயது சிறுமியிடம், ஸ்டெபின் தான் காதலிக்கும் பெண்ணின் செல்போன் நம்பர் வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் […]
ஊருக்குள் புகுந்த காட்டு எருமை பெண் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கன்னிகாதேவி காலனியில் சந்திர மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தானலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்தானலட்சுமி தனது வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டுவதற்காக வெளியே உள்ள குப்பை தொட்டிக்கு அருகில் சென்றபோது, அங்குள்ள புதரின் பின்னால் மறைந்து நின்று கொண்டிருந்த காட்டெருமை திடீரென வெளியே வந்து சந்தானலட்சுமியை விரட்டி உள்ளது. இதனால் அவர் அங்கிருந்து தப்பி […]
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இரண்டு லாரிகளில் கொண்டுவரப்பட்ட 3520 குக்கர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் அரியலூர் மாவட்டத்திலுள்ள சமத்துவபுரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இரண்டு லாரிகள் தஞ்சை நோக்கி […]
அங்கன்வாடியில் பணிபுரியும் பெண் ஊழியரை வேலைக்கு வரச்சொல்லி மிரட்டியதால் அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சந்தியா. இவர் குளத்துப்பாளையம் அங்கன்வாடியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவம் நடந்த அன்று ஒரு வீடியோ பதிவினை தனது சக ஊழியர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “அனைவருக்கும் வணக்கம். நான் குளத்துப்பாளையம் சந்தியா பேசுகிறேன். என்னை ரிக்கார்டு எழுதுவதற்காக ஆபீசுக்கு வரும்படி மேலதிகாரிகள் […]
மது பாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கரம்பக்குடி காவல் நிலையத்திற்கு முள்ளங்குறிச்சி பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் முள்ளங்குறிச்சி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பாண்டியன் மற்றும் சரவணன்ஆகிய 2 பேரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை காவல்துறையினர் கண்டுள்ளனர். உடனே அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 30 மது […]
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் 94 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ரயில் மூலம் வந்துள்ளனர். தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்கள் மூடப்பட்டதோடு, அங்கு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த கட்சி விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. மேலும் 30 பறக்கும் படை அமைக்கப்பட்டு அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணமோ அல்லது […]
கடையில் பட்டுப்புடவைகள் திருடிய கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஜவுளி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த ஜவுளிக்கடையில் மோகன்ராஜின் தந்தை திருஞானசம்பந்தம் இருந்தபோது, 3 பெண்கள் உட்பட 5 பேர் இவர்களது ஜவுளி கடைக்கு வந்து பட்டு புடவை வேண்டும் என்று கேட்டுள்ளனர். அப்போது திருஞானசம்பந்தம் பல்வேறு வகைகளில் பட்டுப்புடவைகளை அவர்களிடம் காண்பித்தும், […]
தொழிற்சாலைக்கு பெயிண்ட் அடிக்க வந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னூர் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தொழிற்சாலையில் பெயிண்டிங் அடிப்பதற்காக விருதுநகரில் இருந்து சில தொழிலாளர்கள் வந்துள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு நூற்பாலை வளாகத்திற்கு உள்ளேயே குடியிருப்பும் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வேலைக்கு வந்த விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி பகுதியில் வசித்து வரும் மங்களேஸ்வரன் என்பவர் குடியிருப்பு பகுதியில் […]
கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் செல்வமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாடத்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டியன் நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து கொண்டிருந்த செல்வமணி சம்பவம் நடைபெற்ற அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் […]
தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும் போது வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஸ்டாலின் தெருவில் சுரேஷ் என்ற வெல்டர் வசித்து வந்துள்ளார். இவர் ஆவடி ரயில் நிலையத்திற்கு தனது பெற்றோருடன் மின்சார ரயிலில் செல்வதற்காக வந்துள்ளார். அப்போது சுரேஷ் டிக்கெட் வாங்கிவிட்டு இரண்டாவது நடைமேடைக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்து செல்ல முயற்சித்தபோது, அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த புறநகர் மின்சார ரயில் இவரின் மீது பலமாக மோதி விட்டது. […]
2 1/2 பவுன் தங்க சங்கிலியை திருட முயற்சித்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவேற்காடு பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இவர்கடந்த சில நாட்களுக்கு முன்பு நாசரேத் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் பாலமுருகன் தனது குடும்பத்தினருடன் மாசித்திருவிழா தேரோட்டம் பார்ப்பதற்காக திருச்செந்தூருக்கு சென்றபோது, அவர் தனது சித்தி அணிந்திருந்த தங்க சங்கிலி அறுந்து விட்டதால் அதை […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்டுப்பட்டி பகுதியில் காரைபட்டி பகுதியில் அதிவேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் சென்றுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதோடு அந்த மோட்டார் சைக்கிளில் வந்தவரும் படுகாயமடைந்த நிலையில், உயிருக்கு போராடி கொண்டிருந்தார். […]
வேலை கிடைக்காததால் விரக்தியில் வாலிபர் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அன்பர் தெருவில் சுரேஷ் என்ற டிப்ளமோ இன்ஜினியர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு செல்ல வேண்டும் என நினைத்து பல்வேறு இடங்களில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் இவரது தகுதிக்கு ஏற்ற சரியான வேலை கிடைக்காததால் எப்போதும் சோகமாகவே இருந்துள்ளார். மேலும் இவரது பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய முடிவெடுத்து பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் இவருக்கு ஏற்ற சரியான […]
காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுஜாதாவும், அவரது உறவினரான சிலம்பரசன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கு சிலம்பரசனின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2ஆம் தேதி சிலம்பரசன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனாலேயே சுஜாதாவின் பெற்றோர் அவரை அழைத்துக்கொண்டு ஆவடியில் உள்ள […]
மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலந்தை குளம் கிராமத்தில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சாயல்குடி-தூத்துக்குடி சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, சாயல்குடி நோக்கி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு […]
மின் ஊழியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்த இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஆனத்தூர் கிராமத்தில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லேனா என்ற மகள் உள்ளார். இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு கடந்த 25ஆம் தேதி சென்றுவிட்டு மீண்டும் அவரது வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில் லேனா ஊருக்கு சென்றிருந்த போது, அப்பகுதியில் வசிக்கும் கந்தசாமி என்ற மின் ஊழியர் வழிமறித்து […]
சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்ததோடு, அவரிடம் இருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாரியம்மன் கோவில் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் பூமி ராஜன் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் அந்த வாலிபர் அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை […]
இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் பகுதியில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி ராஜேந்திரன். இவர் தனது சொந்த வேலைக்காக வாலாஜாவை நோக்கி இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியில் வேகமாக வந்த ஒரு லாரி எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் அவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். உடனே அவரை அருகில் […]
டிராக்டரில் இருந்து கீழே விழுந்த விவசாயி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியில் வெங்கடாசலம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இந்நிலையில் தனது வயலில் டிராக்டர் மூலம் உழவுப் பணியை செய்து கொண்டிருந்த போது, டிராக்டர் கவிழ்ந்து வெங்கடாசலம் நிலைதடுமாறி வரப்பின் பகுதியில் விழுந்து விட்டார். இதனையடுத்து தவறி விழுந்த வெங்கடாச்சலம் எதிர்பாராதவிதமாக டிராக்டரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]
காய்கறி கடைக்காரர் ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கிணறு பகுதியில் சிவகுமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். ஆனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் அதனை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சிவ குமரேசன் அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், அவர் […]
முன்விரோதத்தால் பெண்ணை தாக்கியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தில்லைவிளாகம் பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியன் கீதா தம்பதியினர். அதே பகுதியில் துரைராஜ் என்பவரும் வசித்து வருகிறார். இவருக்கும் பாலசுப்பிரமணிக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று கீதாவை துரைராஜ் கைகளால் தாக்கி கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து கீதா முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் […]
டோல்கேட்டு பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மலைமேடு கிராமத்தில் அப்துல்ரஹீம் என்பவர் வசித்து வந்தார். இவர் வாலாஜா டோல்கேட்டில் இருக்கும் தனியார் நிறுவனம் வைத்திருக்கும் ஸ்டாலில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று அதிகாலை வேலைக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய கைவிரல் அப்பகுதியில் உள்ள மின்கம்பத்தில் இருக்கும் சுவிட்ச் பாக்ஸ் மீது உரசியுள்ளது. அந்த சுவிட்ச் பாக்ஸில் ஏற்கனவே மின்சாரம் பாய்ந்து இருந்ததால் அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. […]
தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூரில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறும், இ.எஸ்.ஐ திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதோடு விற்பனைக்கு ஏற்றவாறு கடைகளில் பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பியுள்ளனர். […]
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கண்ணன்டஅள்ளி பகுதியில் அஜித் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் காகன்கரை-மாடராஅள்ளி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென தவறிக் கீழே விழுந்து விட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சேலம் […]
குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பண்ணபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட புறனபள்ளி, நரசாபுரம் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்த கிராம மக்கள் புதிதாக ஆழ்துளை குழாய் […]
குடும்பத்தில் இருந்த முன்விரோதம் காரணமாக 7 மாத குழந்தையை எரித்துக் கொலை செய்ய முயற்சித்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உத்தனம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளி கதிர்வேலு. இவருக்கு சுகன்யா என்ற மனைவியும் தர்சிகா ஸ்ரீ என்ற 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. கதிர்வேலுவின் உறவினரான செந்தில்குமார் பண்ணைப்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் கதிர்வேலுவுக்கும் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த செந்தில்குமார் […]
விவசாய நிலத்தில் குப்பைகளை எரித்துக்கொண்டிருக்கும் போது சேலையில் பிடித்த தீயினால் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்மநாயக்கம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சின்னச்சாமி. இவருடைய மனைவியான சின்னதாய் என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை சேகரித்து அதில் தீயை பற்ற வைத்துள்ளார். அந்த சமயத்தில் வேகமாக வீசிய காற்றினால் எதிர்பாராதவிதமாக சின்னத்தாயின் சேலையில் தீப்பற்றியுள்ளது. இதை அவர் கவனிக்காமல் வேலையில் மும்முரம் காட்டியுள்ளார். பிறகு மளமளவென தீ […]
மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கென்பத்தாபள்ளி பகுதியில் அந்தோணிசாமி என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்தபோது, கோபத்தில் அந்தோணிசாமியின் மனைவி அவரது பெற்றோர் வீட்டிற்கு போய்விட்டார். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்த அந்தோணிசாமி […]
ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செல்வவிளை பகுதியில் ரதி குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் பகுதிக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அதன்பின் தனக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது, இவரது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் ராஜகுமாரியை திடீரென […]
கேரட் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் நஷ்டமடைந்த விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உருளைக்கிழங்கு, பீட்ரூட், காலிஃபிளவர், முட்டைக்கோஸ், நூல்கோல், கேரட், பீன்ஸ் மற்றும் வெள்ளைப்பூண்டு போன்றவற்றை விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பயிரிட்டு அதனை சாகுபடி செய்கின்றனர். இவற்றில் கடந்த சில மாதங்களாக கேரட் கிலோவிற்கு 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள […]
குடிப்பழக்கத்தை கண்டித்ததால் தன்னைத் தானே ஒருவர் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கொம்பாடி கிராமத்தில் விவேக் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டிடங்களுக்கு கம்பி கட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு கோபிநாத் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விவேக் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அவரது அம்மாவும் அக்காவும் அவரை கண்டித்துள்ளனர். இதனையடுத்து மிகவும் […]
பள்ளி மூடப்படுவதாக நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்ததால் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிளாய் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டிருகிறது.. இந்நிலையில் திடீரென இந்த பள்ளியை மூட போவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததால், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதனால் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் திடீரென இவ்வாறு […]
அரசு பேருந்து மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியதால் தற்காலிக ஓட்டுனர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற இருப்பதால், அதற்காக சிறப்பு பேருந்துகள் பொள்ளாச்சியிலிருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில் பொள்ளாச்சிக்கு ஆனைமலையில் இருந்து ஒரு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து சீனிவாசபுரம் பகுதியில் இருக்கும் பாலத்தின் கீழ் வந்து கொண்டிருந்தபோது, பாலத்தின் மேல் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென கற்களை எடுத்து பேருந்து […]
சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் போலீசாருக்கு அப்பகுதியில் உள்ள அணைக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு ஆத்துப்பாலம், தண்ணீர்பந்தல், காந்திபுரம், வடகோவை, சங்கனூர் ரோடு போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீசார் அப்பகுதிகளில் தீவிரமாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக மாதவன், அய்யாசாமி, போஸ், பாண்டியன், சந்திரசேகர், பாண்டியராஜன் மற்றும் சந்தோஷ் […]
பூட்டிய வீட்டை உடைத்து மாற்றுத்திறனாளி பெண்ணை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மாங்காடு பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் காரணமாக மாற்றுத்திறனாளியாக மாறிவிட்டார். இவருடைய தாயார் இவரை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த அதே பகுதியில் வசித்து வரும் லாரி டிரைவரான முத்து […]
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 முறைகேடு விசாரணையை சி.பி.ஐ .க்கு மற்றகோரிய மனு 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்சி. குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள 16 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இதன் முடிவுகள் வெளியான நிலையில் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் 100 இடத்தை பிடித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த மதுரையை சேர்ந்த முகமது ரஸ்வி என்ற வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் […]
காலையில் திருமணம் முடிந்து, மாலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரத்தில் மலைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரனுக்கு சாயல்குடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இரு வீட்டாரும் மணமக்களை வாழ்த்திய பிறகு புதுமண தம்பதிகள் மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து சம்பிரதாய முறைப்படி இருவருக்கும் விரிந்து நடைபெற்றுள்ளது. […]
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அதாவது 200 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைப்பதற்கு விவசாயிகள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்போது இந்த திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முடிவு […]
மகளின் திருமணம் நடைபெற்ற அன்றே தந்தை மது விருந்தில் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளிய மரத்தை அரசடி கிராமத்தில் சண்முகராஜ் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவருடைய மகளுக்கு திருமணம் நடைபெற்ற அன்று இரவு சண்முகராஜ் தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது அதே பகுதியில் வசித்து வரும் இமானுவேல் என்பவரும் அந்த மது விருந்தில் பங்கேற்க சென்றபோது, சண்முகராஜுக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த […]
கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறு பூனம்பாளையம் வடக்கு தோட்டத்தில் வெற்றிவேல் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் இவர்களுடைய மூத்தமகள் ஜோஷினி அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 -ஆம்வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி ஜோஷினி தோட்டத்திற்கு சென்றபோது, ஆட்டை விரட்டி கொண்டே ஓடியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு உள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து […]
பூ வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் நாராயணா என்ற பூ வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு சில்பா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு லக்ஷ்மி பிரசன்னா, சுபாஷ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் நாராயணன் விவசாயிகளிடம் பூ வாங்கி ஓசூர் மார்க்கெட்டில் வைத்து விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல பூ வாங்கி ஓசூர் மார்க்கெட்டில் விற்பனை செய்து விட்டு வீட்டிற்கு […]
டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காரவள்ளி பகுதியில் தேவி பிரசாத் என்பவர் வசித்துவருகிறார். இவர் பொக்லைன் எந்திரம் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காலை சித்ரா எழுந்து பார்த்தபோது, பிரசாத் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக பிரசாத்தின் தாயார் ஸ்ரீதேவிக்கு செல்போன் மூலம் சித்ரா தகவல் தெரிவித்து விட்டார். இதனால் ஸ்ரீதேவி கருங்கல் காவல் […]
மூன்று வயது ஆண் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது கழிவு நீர்த் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் விஜயகாந்த் என்ற எலக்ட்ரிஷியன் வசித்து வருகிறார். இவருக்கு ஜெபசெல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய்சரண் என்ற 3 வயது ஆண் குழந்தை இருகின்றான். இந்நிலையில் திருவண்ணாமலைக்கு விஜயகாந்த் வேலை விஷயமாக சென்றுவிட்டதால், ஜெபசெல்வி தனது குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அடுத்து ஜெபசெல்வி […]
சொத்து பிரச்சனை காரணமாக தம்பியின் மனைவியை அண்ணன் கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கடுகு கிராமத்தில் வீரராகவன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு கோதண்டம் என்ற அண்ணன் உள்ளார். இவர்கள் இருவரும் அருகருகே வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவருக்கும் நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்த காரணத்தால் குடிபோதையில் கோதண்டம் வீரராகவனின் வீட்டிற்கு முன்பு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது கோதண்டம் மஞ்சுளாவை தகாத வார்த்தைகளால் […]