சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் ரங்கநாதபுரம் பகுதியில் நளினா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற போது, இவரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை […]
Tag: District News
தொழிலாளியை கத்தியால் குத்திய சிறுவனை சிறார் சிறையில் அடைத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் குளித்தலை பகுதியில் வசித்து வந்தவர் மாரிமுத்து. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் இட தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாரிமுத்து தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருக்கும்போது 18 வயது சிறுவன் ஒருவன் இட தகராறு காரணமாக காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து மாரிமுத்துவின் முதுகில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து […]
வீட்டின் கதவை உடைத்து தங்கம், வெள்ளி மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பனந்தோப்பு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொலை தொடர்பு அலுவலகத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் முசிறியில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு […]
பட்டப்பகலில் மூதாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை வாலிபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கதிர்வேல் நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கம் என்ற மனைவி உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, சுமார் 20 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் அப்பகுதியில் நடந்து சென்றுள்ளனர். அவர்கள் திடீரென அந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். […]
ராணுவ வீரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பொய்கை மேட்டூர் பகுதியில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவருடைய மகன் வசந்தகுமார் என்பவர் லடாக்கில் ராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அவருடைய குடும்பத்தில் நடந்த பிரச்சனையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் […]
கடலில் சூறைக்காற்று வீசியதால் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலில் சூறைக்காற்று வீசப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம், மணியன்தீவு, ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், கோடியக்கரை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சூறை காற்று வீசியதால் 5000 மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லவில்லை. அவர்களின் படகுகளை பாதுகாப்பான இடத்தில் […]
ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கா நகர்ப்பகுதியில் ஜமால் மொஹைதீன் என்ற ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் வசித்து வருகிறார். இவர் வாழவந்தான் கோட்டைக்கு தனது உறவினரை பார்ப்பதற்காக ஸ்கூட்டரில் சென்று உள்ளார். இந்நிலையில் இவர் மன்னார்புரம் பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது, பின்னால் வந்த காரானது இவரின் ஸ்கூட்டர் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜமாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு […]
கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் அரசு பள்ளி ஆசிரியை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள பி.மேட்டூர் கங்காணி தெருவில் பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் பள்ளியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மோகனாம்பாள் என்ற மனைவி உள்ளார். இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுஜித், ரித்திகா என்ற இரு […]
500 கிராம் தங்கம் மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அருணாப்பேரி மெயின் ரோட்டில் பூமணி என்ற தேங்காய் வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சங்கர் கணேஷ், ராமராஜன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பூமணி அவரது மனைவி மற்றும் மகன் ராமராஜனை அழைத்துக் கொண்டு மதுரைக்கு வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனை […]
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் வசித்து வரும் ஒரு மாணவி பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு […]
போலியான பல்பொடி நிறுவனத்தை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் கோபால் பல்பொடி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இங்கு தயாரிக்கப்படும் பல்பொடியானது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் சாலையில் இருக்கும் ஒரு கடைக்கு இரண்டு பேர் காரில் வந்து தாங்கள் கோபால் பல்பொடி விற்பனையாளர்கள் என்று கூறியுள்ளனர். அதன்பிறகு அதனை வாங்கிய வியாபாரி கொடுத்த பணத்தை பெற்றுக் கொண்டு இருவரும் காரில் […]
மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வை 3012 மாணவ மாணவிகள் எழுதியுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்டத்தில் 11 மையங்களிலும் அரியலூர் மாவட்டத்தில் 15 மையங்களிலும் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்வு இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்டுள்ளது. அதாவது காலை 9.30 மணி முதல் 11 மணி வரை மனத்திறன் தேர்வும் அதன்பின் 11.30 மணி முதல் […]
அரும்பாவூர் ஏரி கடந்த 4 மாதங்களில் மீண்டும் நிரம்பியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பந்தட்டை பகுதியில் இருக்கும் அரும்பாவூர் பச்சைமலை பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் கல்லாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் அரும்பாவூர் ஏரிக்கு வந்தடைந்துள்ளது. இந்த ஏரியும் தற்போது நிரம்பியதால் அங்கிருந்து நீர் நிரம்பி வழிகிறது. இந்த நீரானது அரும்பாவூர் சித்தேரி பகுதிக்கு செல்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் இந்த ஆண்டு முழுவதும் […]
கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் பழனிச்சாமி. இவர் கேரளாவில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக அங்கு வேலை இல்லாததால் அவர் தனது சொந்த ஊருக்கே வந்துள்ளார். அவர் குடும்ப செலவுக்கு பணம் இல்லாததால் கடந்த 11 மாதங்களாக அக்கம் பக்கத்தில் கடன் வாங்கியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த […]
கோவில்பட்டி-நெல்லை இடையேயான இரட்டை அகல ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் வரும் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஆய்வு செய்யவுள்ளார். மதுரை கோட்டத்தில் மதுரையிலிருந்து தூத்துக்குடி மற்றும் நெல்லை இரட்டை அகல ரயில் பாதை பணி தற்போது நடந்து வருகிறது. இதில் மணியாச்சி, தட்டப்பாறை, கங்கைகொண்டான் இடையே பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது. மேலும் இது ரயில்வே பாதுகாப்பு கமிஷனரின் ஒப்புதலின் பேரில் போக்குவரத்துக்கு தயாராக இருக்கிறது. இதற்கிடையே கோவில்பட்டி கடம்பூர் இடையே மின்மயமாக்கப்பட்ட […]
பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சித்தாலை கிராமத்தில் வசித்து வருபவர் சுந்தர்ராஜ். இவர் தமிழ்நாடு திறந்தவெளி சேமிப்பு கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் சுந்தர்ராஜ் நேற்று வேலைக்கு சென்ற பின்னர் ஜெயலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் சிறிது நேரம் கழித்து வந்து […]
கடந்த 3 ஆண்டில் மட்டும் 51 குழந்தைகள் பெற்றோர்களால் வளர்க்க முடியாமல் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மதுரை மாவட்ட குழந்தைகள் நலகுழு பெற்றோர்களால் வளர்க்க முடியாத குழந்தைகளை தங்களிடம் ஒப்படைத்து விடலாம் என்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர்கள் போலீசாருடன் இணைந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஆனால் என்ன விப்புணர்வு கொடுத்தாலும் மதுரை பகுதியில் ஆங்காங்கே பெண்சிசுக்கொலை இன்னமும் அரங்கேறி வருவது வருத்தமளிக்கிறது. இதுகுறித்து குழந்தைகள் நல குழு உறுப்பினர் பாண்டியராஜா […]
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியால் தான் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்துள்ளது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார். மதுரை மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசியபோது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியால் தான் புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததுள்ளது. இது போன்ற காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்க வேண்டும் என்ற கொள்கைபடி தென் மாநிலத்தில் பாஜகவுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். மேலும் காங்கிரஸ் தற்போது இந்தியாவில் இல்லை என்றாலும் ஒரு சில இடங்களில் மட்டுமே […]
அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் ரயில் நிலையத்திற்குப் பக்கத்தில் மதுரை செல்லும் ரயில் பாதையில் வாலிபர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி சப் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோரது தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து வாலிபரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் […]
இரு வீட்டின் கழிவு நீர் செல்லும் தகராறில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள கோச்சடை கிராமத்தில் வசித்து வருபவர் முத்தையா. இவருடைய வீட்டிற்கு அருகில் ரகு என்பவருடைய வீடு உள்ளது. இவர்கள் இருவரின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ரகு தனது ஆதரவாளர்களுடன் முத்தையாவின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றியதால் […]
செல்போன் விளையாட்டில் ஐடியை பரிமாறிக் கொண்டதற்காக 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலுள்ள கூடங்குளம் பகுதியில் வசித்து வருபவர் குருநாதன். இவருடைய மகன் மாற்றுத்திறனாளியான சூர்யா. இவர் தனது செல்போனில் ஒரு கேம் டவுன்லோட் செய்து விளையாடியுள்ளார். அதற்கான ஐடியை தனது நண்பரான லிங்கராஜாவிடம் கொடுத்துள்ளார். பின்னர் லிங்கராஜா விளையாடிவிட்டு அதே பகுதியில் வசித்து வரும் நவீன் என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனை அறிந்த சூர்யா நவீனை அழைத்து […]
குற்றாலத்தில் கனமழை பெய்துவருவதால் அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தென்காசி, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் நான்குநேரி, களக்காடு, அம்பை போன்ற பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. மேலும் பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. மேலும் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் இரவிலிருந்து கனமழை பெய்து வருவதால் […]
இரட்டை கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் மனுத்தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் பகுதியில் இருந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் விசாரணைக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதன் பின்பு அங்கு போலீசார் தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் கொல்லப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் முத்துராஜ், தாமஸ்பிரான்சிஸ் உள்பட 10 பேர் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் திடீரென மதுபோதையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வாலிபர் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு […]
வனக்காப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காட்டூரில் பிரபாகரன் என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர் சென்னம்பட்டி வனத்துறை அலுவலகத்தில் வனக்காப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கொம்புதூக்கி அம்மன் கோவில் பகுதியில் அந்தியூர் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பிரபாகரன் அங்கு சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பர்கூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ […]
கோவில் குளத்தில் இருந்து ஏழு சிலைகள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டகாமுத்தூர் சாலையில் புட்டுவிக்கி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் சாமி சிலைகள் கிடந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக தாசில்தார் முத்துக்குமாருக்கும், பேரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் உத்தரவின்படி, அதிகாரிகள் குளத்தில் இருந்த 7 சிலைகளையும் மீட்டனர். அங்கிருந்து உலோகத்தால் செய்யப்பட்ட 1/2 அடி முதல் 1 1/2 […]
கை கழுவுவதற்காக சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் சுரேந்திரன் என்ற கார் டிரைவர் வசித்துவருகிறார். இவருக்கு நூர்ஜகான் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுரேகா மற்றும் சுனிதா என்ற மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முப்பந்தல் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஊருக்கு திரும்பும் போது, அங்குள்ள மரத்தடியில் […]
காதலி பேசாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்கு கொண்டால் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இவர் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு இளம் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண் இவருடன் பத்து நாட்கள் பேசாமல் இருந்த காரணத்தால் மன உளைச்சலில் இருந்த விக்னேஷிர்கு அவரது […]
டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செண்பகராமன்புதூர் கீழத்தெருவில் மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 4 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் மூர்த்தி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவி மகாலட்சுமியுடன் தகராறு செய்ததால் லட்சுமி அவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து மூர்த்தி […]
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் கீழே விழுந்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பாக்கம் கிராமத்தில் சங்கர் என்ற கட்டிட மேஸ்திரி வசித்து வருகிறார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கட்டுமான பணியை முடித்து விட்டு தன்னுடன் சித்தாள் பணிக்காக வந்த மகாத்மா காந்தி சாலையில் வசித்து வரும் இந்திரா என்ற பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார். இந்நிலையில் மாகரல் காவல் நிலையம் அருகே இவர்களின் மோட்டார் […]
செல்போன் திருடிய மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னா குமார் என்பவரும், அவரது உறவினரான ஹரிலால் குமார் என்பவரும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜாஜி தெருவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒரகடம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் உள்ள கேண்டினில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களுடைய செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர்களது வீட்டிற்குள் நுழைந்த […]
800 ஏக்கர் நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானதால் விவசாயிகள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள உச்சிமேடு, நெல்லிக்குப்பம், தாழங்குடா, நாணமேடு, திருமாணிகுழி, நடுவீரப்பட்டு, புதுப்பாளையம், கட்டார் சாவடி, வானமாதேவி ஆகிய இடங்களில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட காய்கறி வகைகள், நெற்பயிர்கள் அங்கு பெய்த கனமழையால் தண்ணீரில் மூழ்கி விட்டது. மேலும் அங்கு 800க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்து விட்டன. இதனையடுத்து அங்கு பயிரிடப்பட்ட […]
கடலூரில் ஒரே நாளில் 19 சென்டி மீட்டர் மழை பதிவாகி 91 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை முறியடித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு மேற்கு திசை காற்று சுழற்சி காரணமாக கனமழை பெய்துள்ளது. அதன்படி வரலாற்றுச் சாதனையாக கடலூரில் இந்த கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறும்போது, புதுச்சேரி மற்றும் கடலூர் போன்ற இடங்களில் பெய்த கனமழை புதிய வரலாற்று சாதனையாக பதிவாகியுள்ளது என […]
அதிகாரிகள் மெமோ வழங்கியதால் மன உளைச்சலில் இருந்த கண்டக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வ.ஊ.சி நகர் 4 வது தெருவில் இளவரசன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கீதா பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இவர் கடந்த 14 ஆண்டுகளாக தண்டையார்பேட்டை அரசு பணிமனைக்கு உட்பட்ட 56 டி மணலி பேருந்து கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் […]
மனைவியை உயிரோடு எரித்துக் கொன்று, கணவர் குடும்பத்தோடு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இரும்புலி காலனியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு ஜீவா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பவித்ரா என்ற மகள் இருக்கிறார். இவர் உத்தரமேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். மேலும் ஜீவா எப்போதும் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதால், பார்த்திபனுக்கு அவர் மீது […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிராந்தகம் பெரியபாளையம் பட்டியில் நாகராஜ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் மேட்டுகடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென எதிரே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இவரின் மோட்டார்சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அருகில் […]
அ.தி.மு.க கவுன்சிலரை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து சென்று தலையை துண்டித்த கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோவிலூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருடைய மகன் ராஜேஷ் என்பவர் நடந்து முடிந்த ஊராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக நின்று வெற்றி பெற்று ஊராட்சி ஒன்றிய கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நேற்று […]
பெட்டி கடையில் நான்கு மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த கடையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் குட்கா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் சில இடங்களில் மறைமுகமாக விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால் வழக்கமான விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனையடுத்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் திருச்சி, சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து பிற ஊர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது என காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த […]
வீடு புகுந்து தாக்குதலில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேலபுதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் சேகர்-விஜயா தம்பதியினர். அதே பகுதியைச் சார்ந்தவர் முத்தரசன். இவருக்கும் சேகருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முத்தரசன் தனது உறவினர்கள் 3 பேரை அழைத்துக் கொண்டு சேகரின் வீட்டிற்கு சென்று அவரை பலமாக தாக்கியுள்ளார். இதனை தடுக்க முயன்ற அவருடைய மனைவியான விஜயாவையும் தாக்கியுள்ளார். இதனை அடுத்து காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு […]
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ள நீரில் நீரால் சூழ்ந்துள்ளது. வளிமண்டலத்தில் உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர் நிலவி உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் திருவண்ணாமலை சன்னதி தெரு, பெரியார் சிலை சந்திப்பு அவலூர்பேட்டை சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள 100-க்கும் […]
பனை மரத்திலிருந்து கள் இறக்கி விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கண்ணிகாபுரம், பொண்ணமங்கலம், சஞ்சீவ்புரம் ஆகிய பகுதிகளில் பனை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியும் வாழைபந்தல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியழகனும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் மேற்குறிப்பிட்ட கிராமங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் […]
கோவில் குளத்தில் 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூரில் புகழ்பெற்ற பட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால் இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் தண்ணீர் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் அந்த குளத்திற்குள் 3 ஐம்பொன் சிலைகள் கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில் நிர்வாகத்திற்கும், பேரூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்து விட்டனர், இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் […]
பணம் வைத்து சூதாடிய 15 வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான காவல்துறையினர் அத்திமரப்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் 15 பேர் கொண்ட குழு பணம் வைத்து சூதாடியதை கண்டுள்ளனர். உடனே காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் அப்பகுதியில் உள்ள சின்னசாமி, லட்சுமணன், சர்க்கரை ராஜா, முருகன், வடிவேல், சதீஷ்குமார் உள்பட 15பேர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]
வாலிபர் உடைய மர்ம மரணத்தால் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தினமணி நகரில் வசித்து வருபவர் வினோத்குமார். இவருடைய நண்பரான கேசவன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மங்களம்கொம்புவில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் வினோத்குமார், கேசவன் மற்றும் அவருடைய ஐந்து நண்பர்களும் கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு பின்னர் மங்கலம்கொம்புவில் உள்ள கேசவன் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர். அதன்பின் மறுநாள் காலை வினோத்குமாரை தவிர அனைவரும் படுக்கையில் இருந்து […]
7 சட்டமன்ற தொகுதிகளிலும் 142 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்பதால் தேர்தலின் போது கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், நத்தம் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளில் மொத்தம் 1973538 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 2503 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இதில் தேர்தல் ஆணையம் 1050 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள வாக்குச்சாவடியை இரண்டாகப் […]
காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோட்டைவாசல்படி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை எக்காரணத்தைக் கொண்டும் இகழக்கூடாது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு […]
அ.ம.மு.க மாவட்ட மாணவரணி செயலாளர் கொலை வழக்கில் மேலும் 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்தவர் வானவராயன். இவரை பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வைத்து ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தி.மு.க பிரமுகர் உட்பட 7 பேரை கைது செய்து உள்ளனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூருவைச் சேர்ந்த கூலிப்படையை வைத்து வானவராயனை கொலை […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற கோரி மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள திமுக இளைஞரணி சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்துள்ளது. இந்த ஊர்வலம் திருச்சிற்றம்பலத்தில் தொடங்கி காலகம், கொன்றைக்காடு, ஆண்டவன் கோவில் வழியாக பேராவூரணியில் சென்று முடிவடைந்துள்ளது. இதில் மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் ஜெயபிரகாஷ், ஒன்றிய பொறுப்பாளர் இளங்கோவன், அன்பழகன், ஒன்றிய […]
சுகாதாரத்துறை சார்பில் கோகூர் ஊராட்சியில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுகாதாரத்துறை சார்பில் கோகூர் ஊராட்சி பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு கீழ்வேளூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் பிரபு தலைமையிலான டாக்டர்கள் பிரபு, விக்னேஷ், கயல்விழி, முருகேஷ் குமார், ஜனனி, தீபிகா ஆகியோர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் இந்த முகாமில் பொது மருத்துவம், பல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், கண் மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை […]
மினி லாரியில் சாராயம் கடத்தி வந்தவர்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அந்த வழியாக ஒரு மினி லாரி அதிவேகமாக வந்துள்ளது. உடனே காவல்துறையினர் அந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் லாரி டியூப்பில் சாராயம் இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் லாரியில் வந்த இரண்டு பேரையும் கைது […]