Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போலீசாருக்கு கிடைத்த தகவல்… சோதனையில் சிக்கிய பொருள்… முதியவர் கைது…!!

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அவர்கள் குளித்தலை பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையில் குளித்தலை பகுதியில் கடை வைத்து நடத்தி கொண்டிருக்கும் பரமசிவன் என்னும் முதியவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பது தெரியவந்துள்ளது. இதனால் காவல்துறையினர் பரமசிவனை கைது செய்து அவரிடம் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு… மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்… 23 பேர் கைது…!!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சப்பட்டியில் உள்ள விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கரூர் மாவட்டத்திலுள்ள லாலாபேட்டை பகுதியில் நேற்று அகில இந்திய போராட்டக்குழு சார்பில் சாலை மறியல் நடைபெற்றுள்ளது. இந்த மறியலில் பஞ்சம்பட்டி வாழ் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இதில் பெண்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இவர்கள் “டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், மூன்று வேளாண் சட்டங்களில் உள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

காளைகளை அடக்கிய வீரன்… தீடிரென நேர்ந்த சோகம்… கதறும் குடும்பம்…!!

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஐயம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 400 க்கும் மேற்பட்ட வீரர்களும் 600க்கும் மேற்பட்ட காளைகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சின்னமனூரை சேர்ந்த முருகேசன் வந்துள்ளார். இவர் ஆவேசமாக காளைகளை அடக்கியபோது  எதிர்பாராதவிதமாக ஒரு காளை அவருடைய மார்பு பகுதியிலும் தொடைப் பகுதியிலும் முட்டியுள்ளது. அதனால் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனால் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நாளை முதல் முகாம்… 48 நாள் பங்கேற்க… பூஜை செய்து அனுப்பப்பட்ட லட்சுமி…!!

ஸ்ரீயோக ராமச்சந்திர மூர்த்தி கோவிலுக்குரிய லக்ஷ்மி யானை இன்று காலை லாரி மூலம் புத்துணர்வு முகாமில் கலந்துகொள்வதற்காக தேக்கம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியில் இருக்கும் ரேணுகாம்பாள் கோவில் உடன் இணைந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கோவிலுக்கு சொந்தமான யானை ஒன்று உள்ளது. இந்த யானையின் பெயர் லட்சுமி ஆகும். இந்த லக்ஷ்மி யானை இன்று காலை தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் கலந்துகொள்வதற்காக லாரி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புத்துணர்வு முகாம் நாளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

படிப்படியாக குறைந்துள்ளது…. புதிதாக 7 பேருக்கு உறுதியானது… அளிக்கப்பட்டு வரும் தீவிர சிகிச்சை…!!

சேலம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் ஏழு பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேர் மற்றும் கெங்கவல்லி, கொளத்தூர், வீரபாண்டி, ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் 4 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அம்மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எதுவுமே சரி இல்ல… ஒழுங்காவே வேலை பார்க்கல… பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள்…!!

தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் கூறி சாலைப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் இருந்து பெருமாள்புரம் வழியாக தேவசகாயம் மவுண்ட் செல்லும் சாலையில் பெரும்பாலான பகுதிளில் அலங்கார தரைக் கற்கள் பதிக்கப்பட்டு, ரயில்வே சாலை மட்டும் சீரமைக்க படாமல் இருந்துள்ளது. இதற்காக ஆரல்வாய்மொழி பேரூராட்சி பொது நிதியில் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சிமெண்ட் தளம் போடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் கிடந்த கழிவு மண்ணை அகற்றாமலும், தரமற்ற […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்… கைது செய்த காவல்துறை… விருதுநகரில் பரபரப்பு…!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் விவசாயிகள் சங்க மணிக்குமார் இதற்கு முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தை முன்னாள் எம்.எல்.ஏ ராமசாமி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நான் சொல்லுறத செய்யுங்க… இல்லைனா நீங்க கேட்குறது நடக்காது… கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்…!!

3000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விஷ்வரெட்டி பாளையம் கிராமத்தில் பன்னீர்செல்வம் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் அதே கிராமத்தில் 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்தை தனது அண்ணன் ரங்கநாதன் என்பவரிடம் இருந்து பெற்றுள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு பன்னீர்செல்வம் கிராம நிர்வாக அலுவலரான விஸ்வரங்கன்  என்பவரிடம் கேட்டுள்ளார். இதனையடுத்து பன்னீர்செல்வம் பெயருக்கு பட்டா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புதிய தாலுகாவுக்கு அலுவலகம்…. 3,18,00,000 செலவில் கட்டப்படும் கட்டிடம்…. மாவட்ட ஆட்சியர் ஆய்வு….!!

கலவை தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை நேரில் சென்று ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாஸ்டன் புஷ்பராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவையை புதிய தாலுகாவாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் தேதி அறிவித்துள்ளார். தற்போது கலவை பேரூராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் வைத்து தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால் மாம்பாக்கம் சாலையில் புதிய தாலுகா அலுவலகம் ரூபாய் 3 கோடியே 18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிப்பதை முதல்ல நிறுத்து…. கண்டித்த தாய்…. சமையலறையில் மகன் செய்த செயல்….!!

தாய் கண்டித்ததால் கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு பகுதியை சார்ந்தவர் வசந்த். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பஞ்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவரது தாயார் அவரை கண்டித்துள்ளார்.  இதனால் அவர் மனமுடைந்து நேற்று முன்தினம் காலை வீட்டின் சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

தொட்டில் விளையாட்டு…. கூச்சலிட்ட தங்கைகள்…. தாயின் புடவையால் சிறுமிக்கு நேர்ந்த நிலை….!!

புடவையில் தொட்டில் கட்டி விளையாடும் போது கழுத்து இறுக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாகல்பட்டியை சார்ந்தவர் பன்னீர்செல்வம்-தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு 3 பிள்ளைகள் இருந்தனர். பன்னீர்செல்வம் பெங்களூரில் தங்கி பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவியான தமிழரசி கூலிவேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தமிழரசி நேற்று முன்தினம் கூலி வேலைக்கு சென்ற பிறகு மூன்று பிள்ளைகளும் புடவையில் தொட்டில் கட்டி விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது புடவை செல்வராணி என்ற குழந்தையின் கழுத்தில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏற்பட்ட பெரும் விபத்து… தீவிர சிகிச்சையில் ஒருவர்… சிறையில் அடைக்கப்பட்ட மேற்பார்வையாளர்கள்…!!

பாறை சரிவு ஏற்பட்ட கல்குவாரியில் மேற்பார்வையாளராக பணியாற்றிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருதூர் கிராமத்தில் கடந்த 4 ஆம் தேதி உள்ள தனியார் கல்குவாரியில் பாறை சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மணிகண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து மீட்பு படையினர் அந்த பாறை இடுக்குகளில் சிக்கிய 9 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இதில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வடமாநிலத்தை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எப்படியோ தப்பிச்சாச்சு… காற்றின் வேகத்தால் கவிழ்ந்த படகு… கரை ஒதுங்கிய மீனவர்களின் உடல்கள்…!!

படகு கவிழ்ந்த விபத்தில் 2 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் திட்டு பகுதியில் வசித்து வரும் குணசேகரன், தமிழன், வீரத்தமிழன் போன்றோரும் சிங்கார குப்பம் பகுதியில் வசித்து வரும் அப்பு என்பவரும் குணசேகரனுக்கு சொந்தமான படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு வெள்ளாற்று முகத்துவாரம் பகுதியில் இவர்களது படகு வந்து கொண்டிருக்கும் போது, காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நிலைதடுமாறி படகு கவிழ்ந்துவிட்டது. இதில் படகில் பயணித்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

அதிவேகம் என்றுமே ஆபத்து… கொஞ்சம் பார்த்து போக கூடாதா… மூதாட்டிக்கு நடந்த விபரீதம்…!!

சாலையை கடக்க முயன்ற போது கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ராஜீவ் காந்தி நகரில் காந்தம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அப்பகுதியில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் காந்தம்மாள் ஊரப்பாக்கம் டீக்கடை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வேகமாக சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக காந்தம்மாள் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த மூதாட்டியை அருகிலிருந்தவர்கள் மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெட்ரோல் போடதான வந்த… நைசாக பையை பறித்த வாலிபர்கள்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

பெட்ரோல் பங்க்கில் இருந்த பணப்பையை திருடி சென்ற 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டியில் இருக்கும் பெட்ரோல் பங்க்கிற்கு 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட சென்றுள்ளனர். அந்த பெட்ரோல் பங்கில் சுந்தர்ராஜன் என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வாலிபர்கள் அவரிடம் நூறு ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்தபோது, நைசாக அவர் வைத்திருந்த பணப்பையை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனால் சுந்தர்ராஜன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சார் அங்க வச்சி விக்குறாங்க… சோதனையில் சிக்கிய பொருள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்து அவர்கள் வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் எம். புதுப்பட்டி போலீசார் கோத்தகிரி பேருந்து நிறுத்தம் அருகில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று பெட்டி கடையில் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அங்கே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவன் மேலதான் சந்தேகமா இருக்கு… சட்ட விரோதமான செயல்…. கைது செய்த காவல்துறை…!!

சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்ததோடு அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் பாப்பான்குளம் ரயில்வே கேட் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு ஒரு நபர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அந்த நபர் அதே பகுதியில் வசித்து வரும் ஆனந்த் என்பதும், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடித்து பிடித்து ஓட்டம்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர் போலீசாரை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூடப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வெள்ளவேடு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் தான் வைத்திருந்த பையுடன் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை மடக்கி பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் 150 கிராம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இந்த சட்டம் வேண்டாம்… அரை நிர்வாணத்தில் போராட்டம்… ஏர் கலப்பையுடன் வந்த விவசாயிகள்…!!

ஏர் கலப்பையுடன் சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சியில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் இருந்து ஏர் கலப்பையுடன் விவசாயிகள் கரூர் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்துள்ளனர். அந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளா ஒரே இடத்தில் நின்ற லாரி… உள்ளே கிடந்த எலும்பு கூடு… திருச்சியில் பரபரப்பு…!!

லாரியில் அடையாளம் தெரியாத ஒரு ஆணின் எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகில் இருந்த ஒரு காலி மனையில் பழுதடைந்த லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்த லாரியானது கடந்த ஆண்டு பெய்த கனமழையால் பாதி அளவுக்கு தண்ணீரில் மூழ்கி வெளியே எடுக்க முடியாத அளவுக்கு சேற்றில் சிக்கி இருந்துள்ளது. இந்நிலையில் லாரியில் இருந்த தண்ணீர் வடிந்து விட்டதால் லாரியை வெளியே எடுத்து பழுது பார்க்க லாரியின் உரிமையாளர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சொந்த ஊருக்கு வந்தவர்… எப்போவுமே சோகம் தான்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… போலீசாரின் தீவிர விசாரணை…!!

பெண் இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆண்டாள் தெருவில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்சிதா என்ற மகள் உள்ளார். இவர் பி.இ படித்து முடித்துவிட்டு அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கொரோனா ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த சஞ்சிதா கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து உள்ளார். இந்நிலையில் மனமுடைந்து தனது அறையில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஐயோ என் ஆட்டை காணும்… உடனே வித்துடுறாங்க… கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமம்தான்…!!

இரண்டரை இலட்சம் மதிப்புள்ள செம்மறி ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள உடையாபட்டி பகுதியில் அருள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடுகள் மற்றும் 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இவர் தனது முப்பது ஆடுகளையும் தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் தனது வயலில் நடைபெற்ற அறுவடை பணிகளில் ஈடுபட்ட அருள்ராஜ், பணியை முடித்துவிட்டு ஆடுகளை திறந்து விடுவதற்காக அங்கு சென்றபோது, 7 […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்ச நேரம்தானே வெளிய போனேன்… அதுக்குள்ள இப்படியா… வீட்டிற்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள பள்ளிபாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு அவரது மனைவியுடன் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் இவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பவுன் தங்க நகை திருடப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எல்லா மருத்துவமும் பாத்தாச்சு… மனநலம் பாதித்த பெண் எடுத்த முடிவு… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஜேடர்பாளையம் பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உமாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சமீபகாலமாக மனநிலை பாதிக்கப்பட்ட உமாதேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உள்ளார். ஆனால் அவருக்கு மனநிலை சரியாகவில்லை. இந்நிலையில் உமாதேவி தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அங்க ஏதோ பேய் நிக்குது…. பயந்த பள்ளி மாணவி… சிறுமிக்கு நேர்ந்த துயரம்…!!

கருப்பு உருவம் போல் பேய் ஒன்று இருப்பதாக கூறிய பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பாட்டி வீட்டிற்கு அருகில் உள்ள சுவற்றில் கருப்பாக பேய் போன்ற உருவம் நிற்பதாக அபிநயா தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் பேய் என்று ஒன்றும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யாரும் பயப்படாதிங்க… இன்னைக்கு பிடிசிருவோம்… மயக்க ஊசி செலுத்தும் முயற்சி…!!

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை கொம்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட உள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று பேரை ஒற்றை கொம்பன் யானை கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு அடித்துக் கொன்றுவிட்டது. மேலும் யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் இதன் ஒரு தந்தம் உடைந்து இருப்பதால் இதனை களப்பணியாளர்கள் ஒற்றைக்கொம்பன் என்றும், வனத்துறையினர் சங்கர் என்றும் அழைத்து வருகின்றனர். இந்த யானையை கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கேடுன்னு தெரிஞ்சும் ஏன் பண்றீங்க… மது அடிமைக்கு ஏற்பட்ட விளைவு… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

உடல்நலக்குறைவு காரணமாக மன உளைச்சலில் இருந்த கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எலசகிரி முல்லைவேந்தன் நகரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையை அதிகமாக மது குடிக்கும் பழக்கம் ராஜாவிற்கு இருந்ததால் இவரது உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மனமுடைந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஒரு இடத்துக்கு போக முடியல… எங்க போனாலும் இதே தொல்லையா இருக்கு… மர்ம நபர்களின் கைவரிசை…!!

4 பெண்களிடம் இருந்து 16 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளம்புவனம் கிராமத்தில் பூமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றுள்ளது. இந்த கோவில் விழாவில் இளம்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது மாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் ஆவுடையம்மாள் என்பவர் விழாவில் கலந்துகொண்டபோது, அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை மர்ம […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது எங்களுக்கு வேண்டாம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி… டாக்டர்களின் போராட்டம்…!!

தனியார் மருத்துவமனை டாக்டர்கள் ஈரோட்டில் இருந்து கரூர் வரை விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. மத்திய அரசு அறிவித்திருந்த சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவர்கள், அலோபதியில் உள்ள 58 வகையான அறுவை சிகிச்சைகளை செய்யலாம் என அறிவித்திருப்பதை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கத்தினர் சார்பில் நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு-பெருந்துறை ரோட்டில் ஐ.எம். ஏ சார்பில் கடந்த 1ஆம் தேதி முதல் தனியார் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் பண்ணது தப்புதான்…. புதுமண தம்பதியின் பாசம்…. கணவர் பிரிந்து செல்வதால் மனைவியின் செயல்….!!

விமான நிலையத்தில் கணவரை வழி அனுப்புவதற்காக மனைவி போலியான இ-டிக்கெட் மூலம் விமான நிலையத்திற்குள் வந்ததற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சார்ஜா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் மட்டும் ஆவண பரிசோதனை நடைபெற்றுள்ளது. இந்தப் பரிசோதனை முடிந்த பின் அவர்கள் விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். அந்த சமயத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நவாஸ் ஷேக் மற்றும் அவருடைய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுன்னு தெரியல…. வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்… முற்றிலும் எரிந்து நாசம்…!!

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் இரண்டு குடிசை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சீனிவாசபுரம் பகுதியில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவரது பேத்தியான சௌமியா என்பவர் வீட்டில் சமைத்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கேஸ் கசிந்து குடிசையில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இந்நிலையில் மளமளவென பரவிய தீயானது அருகில் இருந்த செங்கோடன் என்பவரது குடிசை வீட்டிலும் தீ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

எல்லாமே பண்ணியாச்சு…. சரி வர மாட்டங்குது…. கூலி தொழிலாளியின் விபரீத முடிவு…!!

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பால குட்டை பகுதியில் சௌந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உடல் நலக்குறைவால் கடந்த மூன்று மாதங்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல மருத்துவமனைக்கு சென்று சௌந்தரராஜன் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த சௌந்தரராஜன் விஷம் குடித்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஒன்றிய குழுத்தலைவர் பாரபட்சம் பார்க்கிறார்… அதிமுக பெண் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்… வெளிநடப்பு செய்த திமுக கவுன்சிலர்…!!

ஒன்றியக்குழு கூட்டத்தில் அதிமுக பெண் கவுன்சிலர்கள் 2 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதும் திமுக பெண் கவுன்சிலர் வெளிநடப்பு செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் நடந்தபோது 5 வது வார்டு அதிமுக கவுன்சிலர் அன்புமணி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி…. 7 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கள்ளக்காதலை கண்டித்ததால் மனைவி கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள இடையன்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்த பிணம் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்ததால் அதன் அடையாளம் காண முடியவில்லை. எனவே பிணத்தில் உள்ள எலும்புகளை எடுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்… கொஞ்சம் பார்த்து போக கூடாதா… முதியவருக்கு நேர்ந்த துயரம்…!!

ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது ஆட்டோ மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் சுந்தர்ராஜ் நகரில் ராபர்ட் ஆம்புரோஸ் என்பவர் வசித்துவருகிறார்.இவர் திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரேஸ் கோர்ஸ் ரோடு பகுதியில் கடந்த 3 ஆம் தேதி நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராதவிதமாக ராபர்ட் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம்கூட மனசாட்சி இல்ல… 3 வயது குழந்தைக்கு சிகிச்சை… 50 வயது முதியவரின் முகம் சுளிக்கும் செயல்…!!

50 வயது முதியவர் மூன்று வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குப்பநத்தம் கிராமத்தில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் மூன்று வயது குழந்தைக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த அந்த குழந்தையின் பெற்றோர் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் துரைராஜ் மீது புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டிற்கு வந்தவர்… எதிர்பாராமல் நடந்த துயர சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தனது உறவினரை பார்க்க வந்தவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வரட்டனபள்ளி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பெங்களூரு விஜய நகரில் வசித்து வரும் பத்மநாபன் என்பவர் வந்துள்ளார். இவர் அப்பகுதியில் நடந்த எருதுவிடும் விழாவை பார்த்துக் கொண்டிருந்த போது, வேகமாக ஓடி வந்த காளை பத்மநாபனை முட்டித் தள்ளியது. இந்நிலையில் மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறானது கீழே விழுந்த பத்மநாபனின் காலில் சிக்கி கொண்டது. இதனால் அவரை இழுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கொஞ்சம் லேட் ஆகிருச்சு… தாமதமாக வந்ததற்கு தாக்குதல்… ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பலமான அடி…!!

108 ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி எருதுவிடும் விழா நடத்தப்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வரட்டனபள்ளி கிராமத்தில் 53 ஆம் ஆண்டு எருதுவிடும் விழாவானது நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக வரட்டனபள்ளி, பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் சிந்தகம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் போட்டிக்கு வரவழைக்கப்பட்டன. அப்போது குறிப்பிட்ட தூரத்தை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குஷியான குடிசை வாசிகள்… எல்லா வசதியும் இருக்கு… இனி எந்த கவலையும் இல்ல… திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்..!!

192 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 17 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் 192 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக சென்னையில் நடைபெற்ற திறப்பு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இந்த குடியிருப்புகளை திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் இந்த புதிய அடுக்குமாடி குடியிருப்பில் அசோகபுரி ஆக்கிரமிப்பு பகுதியில் வசித்து வந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தப்பு பண்ணுனா இதான் கதி… குற்றத்திற்குரிய தண்டனை… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக நீதிபதி குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணாடி புதூரில் பானுமதி என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்குள் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பானுமதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காரணம் சீக்கிரம் தெரியவரும்… என்ன ஆச்சுன்னு தெரியல… இறந்து கிடந்த யானை…!!

இறந்து கிடந்த பெண் யானைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் அது புதைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் வனப் சரகத்திற்கு உட்பட்ட புதுபீர் கடவு வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போளி பள்ளம் என்ற இடத்தில் ஒரு யானை இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து விட்டனர். இதனைத்தொடர்ந்து பவானிசாகர் வனச்சரக அதிகாரி சரவணன், வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் போன்றோர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லா ஏற்பாடுகளையும் பண்ணியாச்சு… மும்முரமாக நடக்கும் பணி… துவங்கும் புத்துணர்வு முகாம்…!!

யானைகள் புத்துணர்வு முகாமானது பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் புத்துணர்வு முகாம் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில் யானைகள் பங்கேற்க போகின்றன. இந்த முகாமானது வருகின்ற 8ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் பாகன்கள் தங்குமிடம், பாகன்கள் ஓய்வறை, யானைகள் முகாமில் அலுவலகங்கள், யானைகளுக்கான […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இனிமேல் சீக்கிரமா போகலாம்… எல்லாம் ரெடியா இருக்கு… கண்டக்டர் இல்லாமல் இயக்கப்படும்…!!

பேருந்து நிலையத்திலேயே டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு கண்டக்டர்கள் இல்லாமல் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பேருந்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் நெல்லைக்கு நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் செல்வதற்கு 1.45 மணி நேரம் ஆகும் காரணத்தால் நெல்லைக்கு என்ட் டு என்ட் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து போக்குவரத்து கழகம் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று என்ட் டு என்ட் பேருந்துகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய அணை…. முதல்வரின் அதிரடி உத்தரவு…. பாசன வசதி பெறும் 6250 ஏக்கர் விளைநிலங்கள்….!!

நங்காஞ்சியாறு அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தாலுகாவில் நங்காஞ்சியாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 39.37 அடியாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் திண்டுக்கல் மற்றும் கரூரில் பல பகுதிகள் பாசன வசதி பெற உதவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையால் அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பாசன வசதிக்காக நீரை திறந்து விடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்பேரில் நங்காஞ்சியாறு அணையில் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நகராட்சி கட்டிடத்திற்கு வாடகை உயர்வு…. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு…. குத்தகைகாரருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி வடுவூர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடம் ஓன்று உள்ளது.  இந்தக் கட்டிடத்தில்  இரண்டு கடைகளை குத்தகைக்கு எடுத்திருப்பவர் அரசாணைப்படி வாடகை உயர்வு செய்யப்பட்டதை கண்டித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இந்த வழக்கின் தீர்ப்பு நகராட்சிக்கு சாதகமாகவே வந்துள்ளது. இந்நிலையில் குத்தகைகாரர் வாடகை தொகையை செலுத்தாததால்  நகராட்சி ஆணையர் கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்பேரில் நகராட்சி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் அவதி படுறாங்க…. எப்போ தான் திறக்க போறீங்க…. சமாதியிடம் மனு கொடுத்த இளைஞர்கள்….!!

சாலையை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் இளைஞர்கள் குளித்தலை சுடுகாட்டில் உள்ள சமாதிக்கு மனு கொடுத்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முத்துச்செல்வன் மற்றும் குளித்தலை பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் பலர் குளித்தலை சுடுகாட்டில் உள்ள சமாதியில் மனு அளித்துள்ளனர். இந்த மனுவில் கூறியிருந்ததாவது “கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை நகரத்தில் மூடப்பட்டிருந்த அண்ணா நகர் புறவழிச் சாலையை திறக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த பயனும் இல்லை. இந்த சாலை திறப்பது தொடர்பாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாதகமாக அமைந்த கூட்ட நெரிசல்…. கோவிலில் பெண்கள் செய்த செயல்…. 4 பேர் கைது….!!

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகைகளை திருடிய 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள நாராயணபுரம் மந்தையம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் வயதான பெண்களை குறிவைத்து 18 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல்நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை ஒன்று அமைத்துள்ளது. இந்த தனிப்படை பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இதற்கிடையே நகை திருட்டில் ஈடுபட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கையை நிறைவேற்றுங்கள்…. மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம்…. 177 அரசு ஊழியர்கள் கைது….!!

தொடர்ந்து மூன்றாவது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மூன்றாவது நாளாக நேற்று முன்தினம் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் ஆரம்பித்து பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு தாலுகா அலுவலகம் அருகில் பெரியார் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அரசு ஊழியர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது “புதிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்படியாது மீட்டு குடுங்க… உங்களுக்கு பம்பர் பரிசு விழுந்துருச்சு… ஏமாற்றப்பட்ட டாக்டர்… !!

ஆன்லைன் மோசடியில் 1 1/4 லட்சம் ரூபாயை டாக்டர் பறி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்டீபனா ஜோனாத்தன் என்றார் டாக்டர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் மோசடியில் ரூபாய் 1 1/4 லட்சத்தை இழந்துவிட்டார். இது குறித்து இவர் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் தனியார்ஆன்லைன் வர்த்தக நிறுவனம் பெயரில் கடந்த மாதம் 27 ஆம் தேதி தனக்கு ஒரு கடிதம் வந்ததாகவும், அந்த கடிதத்தில் 11 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகளின் பாதுகாப்பிற்காக சென்றவர்… மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்… மருமகனின் வெறிச்செயல்…!!

குடும்பத் தகராறில் மருமகன் மாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை அளவாய் வரை வாடி கிராமத்தில் பொன்னம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10 குழந்தைகள் இருக்கின்றனர். இவருடைய ஏழாவது மகளான ராமலட்சுமி என்பவரை இடிந்த கல்புதூர் கிராமத்தில் வசித்து வரும் மீனவரான முருகன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு […]

Categories

Tech |