அதிகாரிகள் மைனர் பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கரசனூர் பகுதியில் நாராயணசாமி என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய மைனர் பெண்ணுடன் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்த போது, மைனர் பெண்ணுடன் திருமணம் நடக்கப் போவதாக விழுப்புரம் சைல்ட் ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு புகார் அளிக்கப்பட்டது. […]
Tag: District News
தி.மு.க-வின் ஒன்றிய துணை செயலாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல் மனம்பேடு மீனாட்சி நகரில் கருணாகரன் என்ற தி.மு.க பூந்தமல்லி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கனியமுதன் மற்றும் பருதி என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இவரது மனைவி கோமதி தி.மு.க ஊராட்சி செயலாளராக இருக்கின்றார். இந்நிலையில் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கருணாகரன் […]
மோட்டார் சைக்கிள் மீது மினி வேன் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் நகரில் ஜானகிராமன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சஞ்சய் குமார் என்ற மகன் உள்ளார். இவர் மணவாள நகர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சஞ்சய் குமார் தனது நண்பர்களான சஞ்சீவி மற்றும் பரத் ஆகிருடன் திருவள்ளூரில் இருந்து அதிகத்தூரில் உள்ள தனது நண்பரைப் […]
மனைவிக்கு அண்ணன் கேக் வாங்கி கொடுத்ததால் சந்தேகத்தில் தம்பி அண்ணனைக் கொலை செய்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குமாரசேரி கிராமத்தில் யோவான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏசான் என்ற சகோதரன் இருக்கின்றார். இவர்கள் இருவரும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களில் ஏசான் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், மதுப்பழக்கம் மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்தபோது, திடீரென […]
லாரி டிரைவர் கடத்தியதற்காக மதபோதகர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள வியாசர்பாடி பகுதியில் மோகன் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கிறிஸ்தவ சபையை நடத்தி வந்துள்ளார். இவர் பூந்தமல்லி தேசியநெடுஞ்சாலை நசரத்பேட்டை அருகே காரில் அவரது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி காரின் மீது உரசியதால் கார் சேதம் அடைந்தது. இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் மணிகண்டன் ரூபாய் 3 […]
விசேஷ பூஜைகள் நடத்த வேண்டும் எனக் சிறுமியின் தாயார் இடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மந்திரவாதியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சீர்காழியை சக்திவேல் என்ற மந்திரவாதி வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ளவர்களிடம் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை குணப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலை உண்மை என்று நம்பிய கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் ஒரு பெண் தனது 7 வயது மகளை குணப்படுத்துவதற்காக அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதற்கு […]
கோவில் சுவரில் தலையை மோத செய்து தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சொரத்தூர் பகுதியில் சிவகங்கை என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெற்றதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் கோவிலுக்கு சென்ற சிவகங்கை பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு […]
சிறுமி கடத்தப்பட்டது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அவரை அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடத்தப்பட்ட சிறுமியையும் கடத்திச்சென்ற தமிழ்செல்வனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கணவர் இறந்த சோகத்தில் குழந்தையுடன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுவங்கூர் கிராமத்தைச் சார்ந்தவர் தாமோதரன்-திவ்யா லக்ஷ்மி தம்பதியினர். இவர்களுக்கு நான்கு வயதில் சாலிக்கியா என்ற ஒரு மகள் இருந்தார். தாமோதரன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்துவிட்டார். தாமோதரன் இறந்த மன வேதனையில் திவ்யா லக்ஷ்மி அடிக்கடி அழுது கொண்டே இருப்பார். இதனால் உறவினர்கள் அனைவரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளனர். ஆனால் கணவரை மறக்க […]
பள்ளி தலைமை ஆசிரியை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள செல்வமுருகன் மானிய நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அதில் 7 ஆசிரியர் பணியாற்றும் நிலையில் சுமார் 265 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் வாசுகி என்பவர் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 25 ஆண்டுகளாக அந்த பள்ளியில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக பள்ளி நிர்வாகத்திற்கும் தலைமை ஆசிரியையான வாசுகிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக […]
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் கோரிக்கைகளாவது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 லட்சம் வழங்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் அளிக்கப்பட வேண்டும். அரசுத் […]
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலியை காதலன் கத்தியால் சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொண்ணைரஜபுரம் பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்துவருகிறார். இவர் ரேஸ் கோர்ஸில் உள்ள ஒரு தனியார் காபி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் இவரது உறவினரான 19 வயது கல்லூரி மாணவியும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வர இருவரின் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதித்து விரைவில் அவர்களுக்கு திருமணம் நடத்த […]
கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுண்டன் பாளையம் பகுதியில் மகேந்திரன் என்ற ஆட்டோ டிரைவர் வசித்துவருகிறார். அதே பகுதியில் அல்லிமுத்து என்ற கூலித் தொழிலாளியும் வசித்து வருகிறார். இந்த இருவருக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இதில் அல்லி முத்துக்கு வசந்தி என்ற சித்தி உள்ளார். இந்நிலையில் வசந்திக்கும் மகேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இதுபற்றி அல்லிமுத்துக்கு தெரியவர, அவர் தனது […]
லோடு ஆட்டோ ஏற்றி பஞ்சாயத்து துணை தலைவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் நாராயணன் என்ற பால் வியாபாரி வசித்து வருகிறார். இவர் செம்மரிகுலம் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்து வந்துள்ளார். இவருக்கு அதே ஊரில் வசிக்கும் லிங்கதுரை என்ற உறவினருடன் நிலத்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப்ரமணியபுரத்திலிருந்து மெய்ஞானத்திற்கு நாராயணன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பின்னால் லோடு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த லிங்க […]
மது விற்பனை செய்த வாலிபர்களை கையும் களவுமாக பழங்குடியினப் பெண்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோக்கல் என்ற கிராமத்தில் கோத்தர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு வாழும் பழங்குடியின மக்கள் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் அவர்களின் குடும்பங்கள் மிகுந்த சிரமப்பட்டனர். இதனால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அந்த […]
ஹரியானா ஹோட்டலில் சாப்பிட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து லாரியில் பாக்கு ஏற்றிக்கொண்டு பொன்ராஜ் மற்றும் நிஹித் ஆகிய இருவர் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் ஹரியானா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு நேரத்தில் சாப்பிட்டுள்ளனர். அதன்பின் அங்குள்ள ஒரு அறையில் ஓய்வு எடுத்து உள்ளனர். இவர்கள் இருவருக்கும் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]
சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதிக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரனூர் பகுதியில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சேலம் செவ்வாய்பேட்டை போலீசாரால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு விட்டது. இதனையடுத்து சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தும், […]
விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியை சார்ந்தவர் அபூபக்கர் சித்திக். இவருடைய மகன் இர்பான் என்பவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் உள்ள மாணவர்களுடன் சேர்ந்து இர்பான் விளையாட சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இர்பான் தனது வீட்டிற்கு வந்து விட்டதால் அந்த 5 […]
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஜவுளி கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் பகுதியைச் சார்ந்தவர் சுப்பிரமணியன்-வனிதா தம்பதியினர். சுப்பிரமணியன் அதே பகுதியில் ஒரு ஜவுளி கடை வைத்து நடத்தி வந்தார். நேற்று ஜவுளி கடையில் வைத்து கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுப்பிரமணியன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். வெகு நேரமாகியும் கணவன் திரும்பி வராததால் வனிதா தொலைபேசியில் அழைத்த போது […]
முதியோர் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மங்கலம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கந்தசாமி காயம்பாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இவர்களின் மகள்கள் அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். அவர்களை கவனிக்க ஆள் யாரும் இல்லாத காரணத்தினால் வெகுநாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளனர். இந்த தம்பதியினர் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்று […]
போஸ்டர் ஒட்டுவதில் ஏற்பட்ட தகராறில் சசிகலா மற்றும் அதிமுக ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சசிகலா சிறையில் இருந்து விடுதலையான நிலையில் அவரை தமிழகத்திற்கு வரவேற்கும் விதமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தில் சசிகலாவை வரவேற்க அதிகளவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று இரவு பெரியகுளம் ஜெயலலிதா பேரவை அவைத்தலைவர் சாந்தகுமார் சார்பில் சசிகலா ஆதரவாளர்கள் ஆண்டிப்பட்டி நகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது […]
பல கோரிக்கைகளுடன் தமிழக அரசு ஊழியர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் மேற்கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியனை ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரத்து 5௦68 பேருக்கு வழங்கப்பட்ட குற்ற குறிப்பு ஆணைகளை ரத்து செய்ய வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை […]
புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வதற்காக பழனி கோவிலில் இருக்கும் கஸ்தூரி என்ற யானைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் தேக்கடியில் நடைபெறுவது வழக்கம். இந்த முகாம் 48 நாட்கள் நடக்கும் என்பதால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில் யானைகளும் இந்த முகாமில் கலந்து கொள்ளும். இந்த ஆண்டு வருகிற 8 ஆம் தேதி புத்துணர்வு முகாம் தொடங்க இருக்கிறது. கொரோனாவின் அச்சுறுத்தலால் தமிழக அரசு பல கட்டுபாடுகளை […]
பார்வையற்ற ஆசிரியையின் ஏடிஎம் கார்டை வாங்கி பண மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் ராமலிங்கம்-சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சரஸ்வதி கண்பார்வையற்ற ஆசிரியை. இவர் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி ஒட்டன்சத்திரம் வந்தபோது ஆட்டோ டிரைவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு ரகசிய எண்ணை கூறியுள்ளார். அப்போது ஆட்டோ டிரைவர் […]
டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மேலகொண்டூர் கிராமத்தைச் சார்ந்தவர் முத்து. இவருடைய மகன் ஜெயபால் என்பவர் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். புதூர் கிராமத்தில் வயலில் உழுது விட்டு வீட்டிற்கு செல்வதற்காக டிராக்டரை வயலில் இருந்து மேலே ஏற்றி உள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்துள்ளது. இதில் டிராக்டர் அடியில் சிக்கிய ஜெயபால் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து […]
அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தென்மலை கிராமத்தில் மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைரமுத்து என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் பெயிண்டிங் பணிக்காக மோட்டார் சைக்கிளில் இவர்கள் இருவரும் சென்றுள்ளனர். அதன்பின் பணியை முடித்துவிட்டு இரண்டு பேரும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். இவர்களது மோட்டார் […]
கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கப்பெற்ற சங்ககால பண்பாட்டின் தொல்பொருட்கள் உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகத்தில் காட்சிப்படுத்தப்படும் என கவர்னர் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையின் 2021 ஆம் ஆண்டின் முதல் கூட்டமானது தொடங்கியுள்ளது. இது ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியுள்ளது. அந்த கூட்டத்தின் உரையில் கவர்னர் பேசும் போது, இந்த அரசின் முதன்மை குறிக்கோள் என்பது நம் தாய் தமிழ் மொழியின் பெருமையை வளர்ப்பது என கூறியுள்ளார். இதனை அடுத்து தமிழ் மொழி பேசும் […]
ஜெயலலிதா நினைவிடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 27ஆம் தேதி எம்.ஜி.ஆர் நினைவிடம் அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சரான ஜெயலலிதாவிற்கு கட்டப்பட்ட நினைவிடமானது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இதனையடுத்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை சென்று பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பொதுப்பணித்துறை பொதுமக்கள் ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது, பராமரிப்பு பணிகளுக்காக ஜெயலலிதா நினைவிடம் […]
கும்பக்கரை அருவியில் நேற்று முதல் குளிப்பதற்கு அனுமதி அளித்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் கொரோனா ஊரடங்கால் கும்பகரை அருவியில் குளிப்பதற்கு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதால் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்காக அனுமதி அளிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து பத்து மாதங்களுக்குப் பின்னர் நேற்று சுற்றுலா பயணிகளுக்கு […]
வீட்டின் பூட்டை உடைத்து தங்க கைக்கடிகாரம் உள்ளிட்ட நகைகளை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் பகுதியை சார்ந்த குருநாத பிரபு சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கொரோனா ஊரடங்கிற்காக இவர் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி திவ்யா கர்ப்பிணியாக இருப்பதனால் திவ்யாவும் அவரது பெண்குழந்தையும் திவ்யாவின் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளனர். மனைவியை பார்ப்பதற்காக […]
முத்தூட் வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் இருக்கும் முத்தூட் வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அவர்கள் லாக்கர் இருக்கும் அறையை உடைக்க முயன்ற போது அலாரம் அடித்துள்ளது. அலாரம் சத்தத்தை கேட்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த சத்தம் கேட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிசிடிவி […]
ஸ்கூட்டரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ஷேக் உசைன் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டிற்கு அருகில் உள்ள முரளிகுமார் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். ஷேக் உசைன் முரளிகுமார் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஷேக் உசைனை வல்லத்தில் விடுவதற்காக முரளிகுமார் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் […]
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தந்தையின் சிலையுடன் மேடைக்கு வந்த மூத்த சகோதரிகளால் தங்கை இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த தொழில் அதிபர் செல்வம்-கலாவதி தம்பதியினர். செல்வம் கடந்த 2012ஆம் ஆண்டு இறந்துவிட்டார். செல்வத்திற்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் இரண்டு மகள்களுக்கு செல்வம் உயிரோடு இருக்கும்போதே திருமணம் நடந்துள்ளது. கடைசி மகளான லக்ஷ்மி பிரபாவுக்கு கிஷோருக்கும் தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணத்தின் போது தந்தை இல்லை என்பதால் லட்சுமி பிரபா மிகுந்த வருத்தத்தில் […]
தனியார் பேருந்து மோதி அரிசி வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பழங்குடிபட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ச் செல்வன். இவருடைய மகன் சிவசங்கர் என்பவர் அரிசி கடை வைத்து நடத்தி வந்தார். இவர் தன்னுடைய சொந்த வேலைக்காக நேற்று மதியம் இழும்பூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று சிவசங்கரின் இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த சிவசங்கரை அருகில் உள்ளவர்கள் தனியார் […]
தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டிபட்டி கிராமத்தை சார்ந்தவர் பொன்னையா. இவருடைய மகன் அருண்குமார் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அருண் தனது தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். கடந்த 29ஆம் தேதி இரவு தனது தந்தையிடம் மீண்டும் பணம் கேட்டுள்ளார். ஆனால் அருண் குமாரின் தந்தை பணம் கொடுக்க மறுத்து விட்டதால் அவர் தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு […]
வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் ரயில்வே நிலையத்தில் யார்டு பகுதியில் ஒரு வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் சென்னை நோக்கி வந்த ஒரு ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
பாட்டி வீட்டுக்கு வந்த போது செல்போன் கடையில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் கோபால். இவர் அதே பகுதியில் ஒரு செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்பு மறுநாள் காலை வழக்கம் போல் கடையை திறப்பதற்காக வந்துள்ளார். கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் திருடு போயிருந்ததை […]
பேனர் வைக்க முயன்ற போது உயர் மின்னழுத்தம் தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செந்தில்குமார் என்ற நண்பர் உள்ளார். இவர்கள் பேனர் வைக்கும் தொழில் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோடு பகுதியில் ஒரு கட்டிடத்தின் மேல் பேனர் வைக்க முயற்சி செய்தபோது, பேனரின் கம்பியானது அங்கு இருந்த உயர்மின் அழுத்த கம்பியின் […]
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் இருந்து 9 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கம்பூர் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். வள்ளியின் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சி சிற்றம்பலத்தில் நடைபெற்றதால் அந்த திருமண நிகழ்ச்சிக்கு செல்ல வள்ளி முடிவெடுத்தார். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த 9 பவுன் நகையை ஒரு பையில் எடுத்துக்கொண்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக பேருந்து […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 16 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒத்தையால் கிராமத்தில் சாத்தூர் தாலுகா போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்தபோது அதன் உரிமையாளரான சிவராஜ் என்பவர் மது பாட்டிலை விற்பனை செய்துள்ளது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மேட்டுப்பட்டி பகுதியில் மூர்த்தி என்பவரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது […]
பேருந்தை இயக்கிய போது எதிர்பாராத விதமாக அதில் அடிபட்டு 3 வயது பெண் குரங்கு இறந்துவிட்டது. கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து அந்த மாநில அரசு பேருந்து இரவு நேரத்தில் புறப்பட்டு உள்ளது. இந்த பேருந்தை ஆனந்த் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்த டிரைவர் பிலிகுண்டுலு பகுதியில் பேருந்தை நிறுத்திவிட்டு வனப்பகுதி சாலையில் நின்று கொண்டிருந்த குரங்குகளுக்கு பழங்களை கொடுத்துள்ளார். அதன்பின் பேருந்தை இயக்கிய போது, பேருந்தில் மூன்று வயதான பெண் குரங்கு […]
ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து பணத்தையும் நகையும் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் செங்குந்தபுரம் கிராமத்தில் கொளஞ்சியப்பன்-ஹேமலதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சபரீஸ்வரன் என்ற ஒரு மகன் உள்ளான். ஹேமலதா அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஹேமலதா கொளஞ்சியப்பன் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு சென்றுள்ளனர். சபரீஸ்வரன் தனது சித்தப்பா வீட்டிற்கு […]
மது குடித்து விட்டு பாட்டிலை வீசியதில் ஆசிரியர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் காளை விடும் திருவிழா நடைபெற்றுள்ளது இந்தத் திருவிழாவிற்கு சென்ற வந்த காட்பாடி அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் அருகே அமர்ந்து மது அருந்திவிட்டு பள்ளியின் சுவற்றின் மீது அதை வீசியுள்ளனர். அப்போது உடைந்த பீர் பாட்டிலின் துண்டு வகுப்பறையில் இருந்து வெளியே வந்த ஆசிரியை மீது பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் […]
குடியிருப்பை புதிதாக மாற்றும் முயற்சியில் கட்டிடம் இடிந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் மேலமாசி வீதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான குடியிருப்பு ஒன்று அதே பகுதியில் உள்ளது. அது மிகவும் பழமையாக இருப்பதால் அதனை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள நேற்று காலை 10க்கும் மேற்பட்டோர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று எதிர்ப்புறம் இருந்த சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில் மூன்று பேரை உடனடியாக மீட்டு […]
கட்டிடத்திலிருந்து பெயிண்டர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள வெங்கமேடு பகுதியை சார்ந்த ரங்கநாதன் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். இவர் சம்பவம் நடந்த அன்று அந்த பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்திற்கு பெயிண்ட் அடிப்பதற்காக சென்றுள்ளார். பெயிண்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது நிலைதடுமாறிய ரங்கநாதன் அங்கிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை […]
சொத்துக்காக வளர்ப்புத் தந்தையை தாக்கி விட்டு தலைமறைவான வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி பகுதியை சார்ந்தவர் கோவி மணி. இவர் தனக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் தனது உறவினர் மகனான ராஜ் என்பவரை எடுத்து வளர்த்து வந்துள்ளார். ராஜ்க்கு தற்போது திருமணமாகி நீண்டமங்களத்தில் வசித்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று தனது வளர்ப்புத் தந்தையிடம் வந்து சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். இதற்கு கோவி மணி பொறுமையாக இருக்குமாறு கூறியுள்ளார். இதனை […]
வனப்பகுதியில் உள்ள சாலையில் சிறுத்தை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், ஆசனூர், தாளவாடி, பவானிசாகர் போன்ற பத்து வன சரகங்கள் இருக்கின்றன. அங்குள்ள வனப்பகுதியில் காட்டெருமை, சிறுத்தை, மான், யானை, புலி மற்றும் கரடி போன்ற வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடிக்கு இரண்டு பேர் இரவு 9 மணி அளவில் காரில் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் காரில் அருகே […]
20 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்கும் சென்றாலும் குறைந்த அளவில் மீன்கள் கிடைத்துள்ளதால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக இலங்கை சிறையில் தவிக்கும் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விசைப்படகு மீனவர்கள் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று 20 நாட்களுக்கு பிறகு […]
திமுக கட்சியானது பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் பரப்பி வருவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, கட்சியின் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான கருத்துக்களை கேட்டு வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க உடன் கூட்டணி முடிவு செய்த பிறகுதான் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது […]
சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட இரண்டரை டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஒரு நபர் மகாராஜபுரம் அம்பேத்கர் தெருவில் 57 மூட்டை அதாவது இரண்டரை டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் ராஜூ தலைமையிலான போலீசார் விரைந்து சென்று உள்ளனர். இதனையடுத்து இரண்டரை டன் அளவுள்ள ரேஷன் அரிசி அங்கு […]