சாலை விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள கம்பிளியம்பட்டியை சார்ந்த செந்தில் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். செந்தில் கடந்த 30ஆம் தேதி தோகைமலை சென்று விட்டு ஊருக்குத் திரும்பும் வழியில் கிருஷ்ணம்பட்டி அருகில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் செந்திலின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த செந்தில் அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
Tag: District News
அரசு அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் பல லட்சம் மதிப்பிலான சொத்து ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியை சார்ந்தவர் கோபி. இவர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் தணிக்கை பிரிவில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கோபியின் […]
லாரியில் மணல் கடத்தியவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் மற்றும் இதர காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது செய்யாற்றில் இருந்து ஒரு டிப்பர் லாரி அந்த வழியாக வந்துள்ளது. அதை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 3 யூனிட் மணல் சட்டத்திற்கு விரோதமாக கடத்தி வரப்பட்டது என்பதை அறிந்த காவல் துறையினர் விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ராமானுஜம் என்பவரை கைது செய்துள்ளனர். […]
பெண்ணிடமிருந்து சங்கிலியை பறிக்க முயன்ற திருடனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடக்குவெளி கிராமத்தைச் சார்ந்தவர் தர்மலிங்கம்-மீனா தம்பதியினர். மீனா அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு வடக்குவெளி கிராமத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீனாவிடம் தனது மோட்டார் சைக்கிளில் ஏறுங்கள் ஊருக்குள் சென்று விடுகிறேன் என்று கூறியுள்ளார். […]
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள அகரம் கிராமத்தில் எழிலரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் சொந்தமாக கட்டுமான தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு வந்த எழிலரசன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் எழிலரசனை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு […]
வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கிலோ வெள்ளி, 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 3 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா நகர் மனோன்மணி தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அரிசி மண்டி நடத்தி வந்துள்ளார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டார். இதனையடுத்து தனது வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு […]
தனியாக வருபவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதை வழக்கமாகக் கொண்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் கூலி தொழிலாளியான பொன்னன் என்பவர் கோயம்பேடு மார்க்கெட்டில் சுமை தூக்கும் வேலை பார்த்துவிட்டு அங்கு உள்ள பேருந்து நிலையத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இவர் தனது பணியை முடித்துவிட்டு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த இருவர் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் […]
போதை காளான்களை விற்ற 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் சில நாட்களாக கஞ்சா மற்றும் போதை காளான்கள் விற்பனை நடைபெறுவதாக டி.எஸ்.பி ஆத்மநாதன் அவர்களுக்கு புகார் வந்துள்ளது. இந்த புகாரின் பெயரில் 5க்கும் மேற்பட்ட காவலர்கள் மன்னவனூர், கவுஞ்சி, கல்லுக்குழி, வட்டகணல் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் செல்வராஜ், மகேந்திரன், குழந்தைசாமி, மாதவன், மோகனசுந்தரம், கார்த்தி ஜெயசீலன் ஆகிய 6 பேரை காவல்துறையினர் […]
சசிகலாவுக்கு அதிமுகவின் கொடியை பயன்படுத்துவதற்கு முழு உரிமை உள்ளதாக நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது “அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பின்னர் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் போது அவர் சிறைக்கு சென்று உள்ளார். எனவே அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கு முழு தகுதியும் சசிகலாவிற்கு உள்ளது. கே.பி.முனுசாமி வெளியிட்ட கருத்தை வைத்துப் பார்க்கும்போது சசிகலா அதிமுகவில் இணைந்து […]
சாலையில் வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காந்தி தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற நண்பர் உள்ளார். இவர்கள் இருவரும் கிண்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் போரூரில் நடந்த நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் இரவு நேரத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களின் மோட்டார் சைக்கிள் […]
வித்தியாசமான முறையில் ஆழ் கடலுக்குள் நீந்தி திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சின்னதுரை என்ற பி.ஏ பட்டதாரி வசித்து வருகிறார். இவருக்கு கோயமுத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் ஸ்வேதா என்ற பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு எடுத்தனர். இவர்கள் இருவரும் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது பணத்தை வித்தியாசமான முறையில் ஆழ்கடலில் நீந்தியபடி செய்துகொள்ள விரும்பியதால் புதுச்சேரி மற்றும் […]
பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள நாகமரையை சார்ந்தவர் சின்னமுத்து. இவருடைய மகன் விஜய் என்பவர் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் ஒரு மாணவியை விஜய் கடத்தியதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் குறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த […]
கால்வாயில் திடீரென ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வந்ததால் குளிக்க சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆண்டார் குளத்தில் நாஞ்சில் புத்தனார் கால்வாய் இருக்கின்றது. இந்த கால்வாயில் குளிக்க சென்ற நபர்கள் வெள்ளத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதந்து வருவதைக் கண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் சுசீந்திரம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய […]
தனது மகளை ஆசை வார்த்தைகள் கூறி யாரோ கடத்தி சென்று விட்டதாக தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது பெற்றோர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்ற காரணத்தால், இந்த மாணவியும், அவரது அக்காவும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் இரவு வீட்டிற்கு […]
மொபட்டை திருடியவரை கையும் களவுமாக பிடித்து உரிமையாளரே காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் பாளையம் பகுதியில் நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருந்துறை பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நித்தியானந்தன் காளிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வந்த போது, அவருடைய மொபட்டை மர்மநபர்கள் யாரோ திருடி விட்டுச் சென்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சித்தோடு காவல் நிலையத்தில் […]
வேலைக்கு சென்ற துப்புரவு தொழிலாளி திடீரென நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக கூறியதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் தொகுதியில் வீரபாண்டி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு தொழிலாளியாக அங்குள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பணியில் இருந்தவர் நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக அதிகாலை 4 மணி அளவில் அவரது வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலானது தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடி […]
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரில் தமிழ் தேச குடியரசு இயக்கம் சார்பில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் போன்ற 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மைய பொறுப்பாளர் தமிழரசன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். அதன் பின் ராம்நகர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ராமமூர்த்தி வரவேற்புரை அளித்தார். இந்த […]
பேருந்து நிறுத்தத்தில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெப்படை போலீசாருக்கு பச்சாம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த முதியவரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு […]
புரோகிதர் வீட்டில் செயின் மற்றும் தோடை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கணபதி நகரில் அழகிய சிற்றம்பலம் என்ற புரோகிதர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவை பார்ப்பதற்காக கடந்த 28ஆம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் புரோகிதருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரின் வீட்டிற்கு […]
பத்து மாதங்களுக்குப் பிறகு ராமேஸ்வரம் கோவிலில் உள்ள தீர்த்தக்கிணறு திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதோடு கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு தளர்வு காரணமாக கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இந்த கோவிலில் […]
மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஓட்டல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் மங்கலம் தொகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நூருல்நிஷா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். பசீர் அகமது இந்திராநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது பணியை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு […]
மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் பூலியப்பன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் வீராணம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஊத்துமலை விலக்கு அருகே இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் […]
40 நிமிடங்களில் 60 வகையான பாரம்பரிய உணவு வகைகளை செய்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சாதனை படைத்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்பட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ரித்திகா மற்றும் தர்ஷினி என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் பல வகையான மூலிகை செடிகளை தங்கள் வீடுகளில் வளர்ப்பதுடன் அந்த மூலிகைச் செடி […]
திருச்சி விமானநிலையத்திற்கு ஒரு பெண் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி விமான நிலைய தொலைபேசி எண்ணிற்கு காலை வேளையில் ஒரு போன்கால் வந்துள்ளது. இதனை திருச்சி விமான நிலையத்தின் நிலைய மேலாளரான ஆல்பர்ட் என்பவர் எடுத்து பேசியுள்ளார். அதன் எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தகுதி இல்லாமல் விமான நிலைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை உடனடியாக பணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். அதோடு திருச்சி விமான நிலையத்திற்குள் குற்றவாளிகளுக்கு […]
மனைவி இறந்த விரக்தியில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்காசி சாலையில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு குரு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முத்து பிரியா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் குரு செல்வி பலருடன் பேசி வருவதாக கூறி சந்தேகத்தில் மாரிமுத்து தனது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த […]
பணியிட மாற்றம் பெற்ற மூன்று நாட்களிலேயே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் தாலுகாவில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார். இவர் முகலிவாக்கம் பகுதியில் தனது பெற்றோருடன் ஏ.ஜி.எஸ் காலனியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதோடு அவரது உறவினர்கள் பலமுறை அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் அவர் எடுக்காததால் சந்தேகம் […]
பணம் கேட்டு மிரட்டியதோடு ஒருவரை அரிவாளால் தாக்கிய குற்றவாளியின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் மரவன்மடம் தம்பிக்கு மீண்டான் பகுதியில் வசித்து வரும் ஜெயமுருகன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் சோரீஸ்புரம் பகுதியில் வசித்துவரும் ஒருவரிடம் பணம் கேட்டு மிரட்டியதோடு, அவரை அரிவாளால் தாக்கி உள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஜெயமுருகனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் குற்றவாளியான ஜெயமுருகன் […]
கணவரின் இறப்பிற்கு காரணமான பெண் போலீசை கைது செய்யகோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒளலூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜா என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த சங்கீதா என்ற பெண் போலீசை காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் […]
வீடு புகுந்து பொருட்களை வண்டியில் ஏற்றி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள மேடவாக்கம் பகுதியில் பலராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஸ்டெல்லா ஜோதிபாய் என்ற மனைவி உள்ளார். இவர் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 16 ஆண்டுகளாக மேடவாக்கம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தரைதளத்தில் அவர் வசித்து வருவதாகவும், தனது மகன் கௌதம் என்பவர் இரண்டாவது தளத்தில் அவருடைய குடும்பத்தோடு வசித்து […]
சந்தன மரம் வெட்டியவரை வனத்துறையினர் அதிரடியாக மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள சீரானபுரம் காப்புக்காட்டில் அருணா என்ற வனவர் வசித்து வருகிறார். அவருடன் சேர்ந்து வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மாதேஷ் என்பவர் சந்தன மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். மாதேஷ் வன காவலர்களை கண்டதும் அவர்களிடமிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால் காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்துள்ளனர். பின்பு வனத்துறையினர் மாதேஷை கைது செய்து அவரிடம் இருந்த 3 கிலோ […]
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் அதிகமான எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றுவதாக பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளது. இந்த புகாரின் பேரில் பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் நேற்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த போக்குவரத்து விதிகளை மீறி அதிக பயணிகளை ஏற்றி வந்த வாகனங்களையும், தகுதிச்சான்று புதுப்பிக்கப்படாத […]
உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக பூமி பூஜையில் எம்.எல்.ஏ ரவி அடிக்கல் நாட்டியுள்ளார். அரக்கோணம் மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றைக் கடந்து செல்வதற்காக சாலை வசதி இல்லாமல் ஆற்றைக் கடந்து சென்றுள்ளனர். மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என்று அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ ரவியிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையின்படி அனந்தபுரம் தக்கோலம் இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ரூபாய் […]
மனைவியுடன் பழகிய கல்லூரி மாணவனை கணவன் நபர்களுடன் சேர்ந்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள செல்லாண்டி பாளையத்தை சார்ந்தவர் தீபன். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ராயனூர் முகாமைச் சார்ந்தவர் குணா. இவரும் தீபனும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அதனால் குணாவின் வீட்டிற்கு தீபன் அடிக்கடி செல்வது வழக்கமான ஒன்றானது. அப்போது குணாவின் மனைவியுடன் தீபனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் அறிந்த குணா […]
தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் மீது சரக்கு ரயில் மோதி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள திருமச்சிபுரத்தைச் சார்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு முன்று வயதில் ருத்ரன் என்ற மகன் இருந்தான். செந்தில்குமாரின் வீட்டின் பின்புறத்தில் ரயில்வே தண்டவாளம் உள்ளது. கடந்த 27ஆம் தேதி ருத்ரன் அந்த ரயில்வே தண்டவாளத்தில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அந்த சமயத்தில் கரூரில் இருந்து திருச்சி நோக்கி வந்த சரக்கு ரயில் ருத்ரன் மீது மோதியதில் ருத்ரன் […]
ராணுவ வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி கிராமத்தைச் சார்ந்தவர் சாம்ராஜ். இவர் ஒரு ராணுவவீரர். இவரது மனைவி சாந்தி கந்திலி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பொங்கல் விடுமுறைக்காக சாம்ராஜ் திருப்பத்துருக்கு வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சாம்ராஜ் தனது வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். […]
மகனை குக்கரால் தாக்கி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் ராமதாஸ்-சந்திரா தம்பதியினர். இவர்களுக்கு பிரவீன் என்ற ஒரு மகன் இருந்தார். பிரவீன் அந்த பகுதியில் இருக்கும் ஒரு பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ராமதாஸ் குடிபோதையில் வந்து தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது பிரவீன் அதனை தட்டிக் கேட்டுள்ளார். தனால் ஆத்திரமடைந்த ராமதாஸ் அவரை உதைத்து கீழே தள்ளியதுடன் […]
தென்மாவட்டங்களில் மதுரை வழியாக கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட உள்ளது. கொரோனா ஊரடங்கால் ரயில்வே சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக சரக்கு ரயில்கள் மற்றும் பார்சல் ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தற்போது 70 சதவீத ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக கூடுதலாக ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் அளித்துள்ளது. அந்த ஒப்புதலில் நாகர்கோவில்-தாம்பரம் இடையே தினசரி அந்தியோதயா ரயில் இயக்கப்படுகிறது, கன்னியாகுமரி-ஹவுரா இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது, நெல்லை- […]
மினிவேன் கவிழ்ந்ததில் 25 பெண்களும் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மாவட்டத்திலுள்ள குன்னத்தூரில் ஜெயலலிதா கோவில் திறப்பு விழா கடந்த 29 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த விழாவுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுகவினர் திரண்டு வந்துள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக பூலாம்பட்டி பகுதியில் இருந்து ஒரு மினி வேனில் 25 பெண்கள் தேவன்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் நிலைதடுமாறிய மினி வேன் […]
போலீசாரின் கொடி அணிவகுப்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் போலீசார் கொடி அணிவகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த கொடி அணிவகுப்பில் காமராஜர் திடலில் ஆரம்பித்து சத்திரம், எம் ஜி ஆர் சாலை வழியாக அண்ணா சிலைக்கு வந்து நிறைவடைந்துள்ளது. இந்த அணிவகுப்பில் வஜ்ரா, வருண் ஆகிய வாகனங்களும் பங்கேற்றுள்ளது. கொடி அணி வகுப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் கூடுதல் சூப்பிரண்டுகள் […]
பெண் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி கிராமத்தைச் சார்ந்தவர் சௌந்தர்ராஜன்-மங்கையர்கரசி தம்பதியினர். மங்கையர்கரசி கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். மங்கையர்கரசியின் மகனுக்கு வரன் பார்த்து வரும் நிலையில் வரன் ஏதும் சரியாக அமையவில்லை என்பதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். கடந்த 26ஆம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் எலி மருந்தை […]
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் இருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் முன்பு குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளையும் பெண்களையும் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை […]
சரக்கு ரயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் புத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் சுரேஷ் என்பவர் கடந்த 29 ஆம் தேதி இரவு ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாகை நோக்கி வந்த சரக்கு ரயில் சுரேஷ்குமார் மீது மோதி படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் […]
அவித்த முட்டையில் இருந்து இறந்த கோழிக்குஞ்சு வெளி வந்ததை கண்ட மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் கூடிய அவித்த முட்டையும் வழங்கப்பட்டு வருகின்றது. அங்கன்வாடி குழந்தைகளுக்கும் இதே போல் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு நாமக்கல்லில் இருந்து ஒப்பந்ததாரர் மாதத்திற்கு ஒருமுறை அறந்தாங்கியில் முட்டையைக் கொண்டு வந்து ஒப்படைப்பார். அந்த முட்டை மதிய உணவு திட்ட சத்துணவு மையங்களுக்கு […]
தொடர் கனமழையால் பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பயிரிடப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பருவம் தவறி பெய்த மழையால் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளத்தால் தற்போது அழுக தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் அறுவடை பணியை தொடங்கியுள்ளனர். ஆட்கள் வைத்து கூடுதல் கூலி கொடுத்து இரண்டு […]
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய மாதா சர்ச் தெருவில் கிளின்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாமுவேல் புரத்தில் வசித்து வரும் அந்தோணி ராஜ் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் குற்றவாளிகளான 3 பேரையும் கைது செய்து விட்டனர். அதன்பின் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இந்த […]
சுமைதூக்கும் தொழிலாளர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து நாகையில் ஆர்ப்பாட்டத்தில் நடத்தியுள்ளனர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமை தூக்கும் ஏ.ஐ.டி.யூ.சி தொழில் சங்கத்தினர் நாகை மாவட்டத்தில் கடந்த 29 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு எடைக்கு ஏற்ற கூலி உள்ளிட்டவைகள் தனியாருக்கு இணையாக மூட்டை ஒன்றுக்கு 15 வழங்க வேண்டும், சுமைதூக்கும் தொழிலாளர் கூலி விவரங்களை கையடக்க கருவியில் பதிவு செய்து அதை மாதம் 5ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும், […]
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் நேற்று முன்தினம் பேசியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் 13ஆவது சட்டத் தொகுதிகளில் போட்டியிட இருக்கும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றுள்ளார். இதில் அவர் பேசியபோது “சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலையையாக உள்ளனர். இந்த விடுதலையை உறுதியளிக்கும் வகையில் தற்போது ஆளுநர் கையெழுத்திட உள்ளார். […]
இருசக்கர வாகனம் தொழிலாளி மீது மோதிய விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள மடிகை கிராமத்தை சார்ந்தவர் ரத்தினம். இவர் கூலி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 29 ஆம் தேதி காலை பட்டுக்கோட்டை சாலையில் நடந்து சென்றுள்ளார். ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் ஊழியராக பணிபுரியும் சிவகுமார் என்பவர் நேற்று முன்தினம் காலை ஒரத்தநாடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக சாலையின் ஓரமாக […]
குட்டையில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மூங்கில் ஊருணியை சார்ந்தவர் ராஜ்குமார். இவருடைய மகன் தஸ்வந்த் பிரியன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ராஜ்குமாரின் பக்கத்து வீட்டில் உள்ளவர் பாரதிராஜா. இவருடைய மகன் பிரஜின் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். இருவரும் ஊருக்கு வெளியே உள்ள பண்ணைக்குட்டைக்கு நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளனர். குட்டையை பார்த்த சந்தோஷத்தில் இருவரும் குட்டையில் இறங்கி விளையாடிய […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் தியாகு என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராம குரு மற்றும் ஸ்ரீ சங்கர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் ஸ்ரீ சங்கர் அங்குள்ள ஒரு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் அவரது நண்பர்கள் 2 பேருடன் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு குளிப்பதற்காக சென்றுள்ளனர். அவர்கள் […]