குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் காவல்துறையினரின் வாகனத்தை சிறை பிடித்ததால் பழனி அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகில் இருக்கும் ஜவகர் நகரில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கோதைமங்கலம் ஊராட்சிக்கு பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அவர்கள் ஆத்திரமடைந்து பழனி தாராபுரம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழனி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
Tag: District News
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ரங்கா புரத்தைச் சார்ந்த விவசாயி குமார். இவர் கடந்த 27ஆம் தேதி விவசாய நிலத்தில் வேலை செய்வதற்காக தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தில் உள்ள அனைவரையும் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பியதும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 81/2 […]
பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலக்கோடு அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அமானி மல்லாபுரம் பகுதியைச் சார்ந்தவர் பிரஷாந்த்-சங்கீதா தம்பதியினர். பிரசாந்த் போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். சங்கீதா அப்பகுதியில் எலக்ட்ரானிக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 28ஆம் தேதி அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் சங்கீதா மிகுந்த […]
ஆற்றில் பள்ளி மாணவி மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பத்தல அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன்-காவிரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு மணிகண்டன் மதியழகன் மற்றும் முத்துலட்சுமி என்ற மூன்று பிள்ளைகள் இருந்தனர். முத்துலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 1௦ ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தார். கடந்த 28ஆம் தேதி காவிரியம்மாள் முத்துலட்சுமி மற்றும் அவரது தோழியான சஞ்சனா இருவரையும் அழைத்துக்கொண்டு நாகாவதி ஆற்றுக்குத் சென்றுள்ளார். அந்த ஆற்றில் கால்வாய் அமைப்பதற்காக ஆங்காங்கே […]
பேராசிரியையின் வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்களிங்கபுரம் உச்சி சாமி கோவில் தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அவரின் தாயார் வீட்டிற்கு தூங்குவதற்காக சென்றதால், ஜெயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். […]
சரியாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் பெண்கள் காலி குடங்களுடன் வந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை 9 வது வாரம் உஜ்ஜி சாமி கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்களுக்கு கடந்த 25 நாட்களாக சரியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் கோபமடைந்த அங்கு வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் குடிநீர் வழங்க வேண்டும் என அருப்புக்கோட்டை- திருச்சுழி சாலையில் […]
வருவாய்த்துறை ஊழியர்கள் வட்டாட்சியர் பயிற்சி ஆணையைத் திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் 12 வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வந்துள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு மாதவரம், அம்பத்தூர், மதுரவாயில் மற்றும் திருவொற்றியூர் ஆகிய 4 வட்டங்கள் சென்னை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. இதனால் புதிதாக வந்த ஆர்.கே பேட்டை சேர்த்து தற்போது 9 வருவாய் வட்டங்கள் இருக்கின்றன. இந்நிலையில் சென்னை நகர பட்டியலில் குறுவட்ட வருவாய் ஆய்வாளர்களுக்கான 4 பதவிக்கும், துணை வட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் […]
தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நெம்மேலி குப்பத்தில் அதிக அளவில் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்குள்ள கடற்கரையோரம் கடல் நீரை குடிநீராக்கும் ஆலையானது சூளேரிகாட்டு பகுதியில் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆலைக்கு கடல்நீர் கொண்டுவருவதற்காக கடலில் 30 மீட்டர் தூரத்திற்கு ராட்சத குழாய்கள் அமைப்பதற்காக பெரிய பாறாங்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. அங்கு கடல் அலையின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக கொட்டப்பட்ட இந்த கற்களால் அதன் பக்கத்தில் […]
சென்னை அரசு பேருந்தில் முன்புறமாக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான டிக்கெட்டுகள் திருடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூரை சார்ந்தவர் ரகுபதி. இவர் அரசு பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஓசூருக்கு பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் ரகுபதி மற்றும் சண்முகம் பணியில் இருந்துள்ளனர். பேருந்து ஓசூரை நோக்கி சென்றபோது வழியில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்டறம்பள்ளி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி […]
பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு குளங்கள் இருக்கின்றன. இந்த குளங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் சீசன் காலங்களில் அதிக அளவில் வரும். இதனால் பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது. இந்த பணி இன்றுடன் முடிவடைகிறது. நெல்லை மாவட்டத்தில் முன்னீர் பள்ளத்தில் […]
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி சென்ற குற்றத்திற்காக இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் அழகுராம் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஈரோடு சாலையில் முனியப்பன் கோயில் அருகில் சந்தேகம் அளிக்கும் வகையில் ஒரு கார் நின்றுள்ளது. அந்த காரை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வேலுச்சாமிபுரத்தை சார்ந்த மணி […]
தீ குளிப்பதற்காக கையில் மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் காலை முதியவர் தீகுளிப்பதற்காக கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்துள்ளார். இதனை கண்ட போலீசார் அவரை பிடித்து கையிலிருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அந்த முதியவர் லாடபுரம் கிராமத்தைச் சார்ந்த பரமசிவன் என்பதும் மேலும் அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமான கூரைவீடு இடிந்துவிட்டதால் அதே இடத்தில் புதிய வீடு […]
நான் நேரடி அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் நான் தெருவுக்கு தள்ளப்பட்டதாகவும் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள திருமலை நாயக்கர் மஹாலில் மன்னர் திருமலை நாயக்கரின் 438 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ உருவ சிலைக்கு ஆர்.எம்.ஆர் பாசறையின் நிறுவனத் தலைவரும் தமிழக முன்னாள் தலைமை செயலாளருமான ராம மோகன ராவ் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராம மோகன ராவ் “ஆர்.எம்.ஆர் பாசறை ஒரு […]
“உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்” என்ற புதிய பயணத்தின் மூலம் தி.மு.க வின் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களை சந்தித்து மனுவை பெற்று வருகிறார். தமிழ்நாடு முழுவதும் மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் “உங்கள் தொகுதிகளில் ஸ்டாலின்” என்ற புதிய பயணத்தை அறிவித்து 100 நாட்களுக்குள் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள […]
ஆழ்கடலில் வசிக்கக்கூடிய அதிக விஷத்தன்மை கொண்ட பேத்தை மீன் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் கடற்கரையில் அதிக விஷத்தன்மை கொண்ட பேத்தை மீன் ஒன்று இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இந்த மீன் ஆபத்துக் காலங்களில் தன்னை பாதுகாப்பதற்காக பந்து போல் உருமாறி கொள்ளும் தன்மை கொண்டது. மேலும் இந்த மீனின் உடலில் முட்கள் அமைந்திருக்கும். கோடியக்கரையில் இருந்து நாலுவேதபதி கடற்கரை பகுதி வரை கடல் சீற்றம் மற்றும் படகுகளின் விசிறியில் அடிபடுவது போன்ற […]
வாலிபர்கள் கண்டக்டரை தாக்கியதை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட தனியார் பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்திற்கு புதுவையில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் கொந்தமூர் வழியாக இயக்கப்படுகிறது. இந்த வழியாக செல்லும் தனியார் பேருந்துகள் பயணிகளை அங்குள்ள பாலத்தின் மேல் இறக்கி விட்டு செல்கின்றனர். ஆனால் தனியார் பேருந்துகள் அனைத்தும் சர்வீஸ் சாலை வழியாக பயணிகளை இறக்கி விட வேண்டும் என்று கொந்தமூர் கிராம மக்கள் கூறி வந்துள்ளனர். […]
பணிமனையில் வேலை செய்து கொண்டிருந்த போது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுனர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆப்பக்கூடல் சக்தி நகரில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சம்பூர்ணம் என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு லதா என்ற மகளும், ஸ்ரீதர் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் அந்தியூர் கரட்டு பாளையத்தில் உள்ள பணிமனையில் அரசு பேருந்துகளை சுத்தம் செய்வதற்காக கொண்டு செல்லும் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த […]
கால் மிதியடி தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமிளம்பரப்பு பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கால் மிதியடி தயாரிக்கும் நிறுவனம் மற்றும் பழைய துணிகளை மறுசுழற்சி செய்து பஞ்சாக மாற்றும் நிறுவனம் ஆகியவற்றை சித்தோடு பச்சபாலி வசுவபட்டி என்ற கிராமத்தில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணி அளவில் இந்த கம்பெனி திடீரென தீப்பிடித்து […]
கணவனை கழுத்தை நெறித்துக் கொன்றதோடு, மகளை கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த விவகாரம் தொடர்பாக போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியில் வேல்முருகன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது கணவர் வேல்முருகன் உடல்நலம் சரியில்லாததால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் காரிப்பட்டி காவல் நிலையத்தில் வேல்முருகனின் தாயார் காவேரியம்மாள் […]
சிம்ஸ் பூங்காவில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் செல்வதற்கு வசதியாக பாதை அமைக்கும் பணியானது தொடங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனால் பல்வேறு வகையான நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படுகிறது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கோடை சீசன் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு கோடை சீசன் நடைபெற இருப்பதால் சுற்றுலா தளங்களை […]
நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கான இ-பாஸ் நடைமுறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுத்த பின்னரே சுற்றுலா தளங்களுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டதால் இ-பாஸ் விண்ணப்பிக்கும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இ-பாஸ் பெற்ற சுற்றுலா பயணிகள் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் இ-பாஸ் எடுக்கும் நடைமுறை தெரியாத பொதுமக்கள் […]
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொர்ணம் என்ற ஒரு மனைவி உள்ளார். இவரது கணவர் குலசேகரன்பட்டினம் பேருந்து நிறுத்தத்தில் கூல்ட்ரிங்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இதனால் கணவருக்கு உதவியாக காலையில் கடைக்கு சென்றுவிட்டு, வேலைகளை முடித்த பின்பு சொர்ணம் வீட்டிற்கு திரும்புவார். இந்நிலையில் வழக்கம்போல கடையின் வேலைகளை […]
பாலத்திற்கு அடியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அக்ரஹாரசாமகுளம் ஊராட்சியில் 160 ஏக்கர் பரப்பளவில் பெரிய குளம் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவில்பாளையம் போலீசாருக்கு இந்த குளத்திற்கு சொல்லக்கூடிய பாலத்தின் அடியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடித்து […]
சாலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது வேன் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலை மற்றும் பிற விவசாய தொழில்களில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பகவான்தேவ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகன் ரஞ்சித் ஆகியோருடன் கோட்டூர் வஞ்சிபுரத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை நாளில் […]
டாக்டர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்னபகண்டை விநாயகர் கோவில் தெருவில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மருத்துவமனை புதுவை அரியாங்குப்பத்தில் குப்பத்தில் உள்ளது. இவர் தற்போது அரியாங்குப்பத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான சின்னபகண்டையில் உள்ள வீட்டில் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகளை உடைத்து மர்ம நபர்கள் […]
2 டன் எடையுள்ள திமிங்கலம் கரை ஒதுங்கி இறந்துவிட்டதால், மீன்வளத்துறை அதிகாரிகள் சுமார் ஆறு அடிக்கு பள்ளம் தோண்டி அந்த திமிங்கலத்தை புதைத்துவிட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவோற்றியூர் குப்பம் கடற்கரை பகுதியில் சுமார் 18 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் ஒன்று உயிருடன் கரை ஒதுங்கி விட்டது. அந்த திமிங்கலத்தை பார்ப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்கரையில் குவிந்துவிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இந்நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த திமிங்கலத்தை […]
சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த திருமணமான வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தொட்டிய பாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டைலர் கடையை கொடுவாய்ப்பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவர் வெங்கிட்டிபாளையம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 17 வயது சிறுமியின் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி குணசேகரன் […]
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்து வந்த இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல வஞ்சிபாளையம் பகுதியில் வீரபாண்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வஞ்சிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் இருவரையும் சோதனை செய்தனர். அந்த சோதனையில் அவர்கள் இருவரிடமும் 15 மதுபாட்டில்கள் […]
சரியான வேலை இல்லாத விரக்தியில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போடாரம்பாளையம் பகுதியில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரின் தாயார் பிரியா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் சஞ்சய் தனது பாட்டி லீலாவதியின் வீட்டில் தங்கி இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தார். அதன்பின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு […]
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை நர்சுகளுக்கும் வழங்க வேண்டும் எனவும், கொரோனா காலத்தில் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிய நர்சுகளுக்கு ஒரு மாத ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். அதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்சுகளுக்கு நிவாரணம் மற்றும் […]
காதல் மனைவியை ஏமாற்றிய குற்றத்திற்கா கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வண்டராம்பட்டு கிராமத்தில் மஞ்சுளா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் குமார் என்பவரை காதலித்து கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு ராஜேஷ்குமார் மஞ்சுளாவை அவரது பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு, சென்னைக்கு சென்று எலெக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இவர் மாதத்திற்கு ஒரு […]
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காவடி எடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து விட்டு சென்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் முருகருக்கு தங்கவேல் மற்றும் தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அப்போது தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வண்ணம் பக்தர்கள் காவடி எடுத்து கோவிலை வலம்வந்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு […]
பட்டா பெயர் மாற்றம் செய்து தர விண்ணப்பித்தவரிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் மோகனப்பிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளத்துக்கோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரிடம் அதே பகுதியில் வசித்து வரும் மூர்த்தி என்பவர் தன்னுடைய தந்தை பெயரில் உள்ள பட்டாவை தன் பெயருக்கு மாற்றி தருமாறு விண்ணப்பித்துள்ளார். […]
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அரசு நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது. ஆனால் இந்த கல்லூரியில் அரசு கல்லூரிக்கு உரிய கட்டணம் வசூலிக்காமல், தனியார் கல்லூரிகளுக்கு இணையான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் அந்த கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் அரசு அறிவித்த கட்டணத்தை […]
நகை மற்றும் செல்போன் திருடிய நபரை புகாரளித்த 2 மணி நேரத்திலேயே போலீசார் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பம்மலில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி புதூரில் உள்ள ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் மண்டபத்தின் மாடியில் நகைகளை வைத்து பூட்டிவிட்டு கீழே சென்று திருமண வேலைகளை பார்த்து வந்துள்ளார். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பூட்டு உடைக்கப்பட்டு […]
மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் ஒரு பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்த 15 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்மாயில் வீதி, பட்டறை மற்றும் அவிநாசி சூளை போன்ற இடங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இஸ்மாயில் வீதிப் பகுதியில் வசித்து வரும் மரகதம் என்பவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது […]
வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்ததால் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உழவர் தெருவில் பத்மினி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு மாதவன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தேவநேசன் நகர் 2வது தெரு இருளர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த வாரம் சென்றுள்ளார். இந்நிலையில் மாதவன் திடீரென தூக்கில் […]
காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே பட்டப்பகலில் மீனவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அப்பர் சாமி கோவில் தெருவில் நாராயணன் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவரின் மீது கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவரது மனைவி கல்பனா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நாராயணன் தனது மனைவியை பார்த்து விட்டு, காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென […]
கஞ்சா போதையில் மாமூல் கேட்டு மார்க்கெட்டுக்குள் புகுந்த மர்மநபர் வியாபாரிகளை சரமாரி வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் உள்ள பகுதியில் மர்ம நபர் ஒருவர் அரிவாளுடன் நுழைந்துள்ளார். அதன்பின் அவர் அங்கிருந்த ஒரு டீக்கடையில் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் டீக்கடை உரிமையாளர் மாமூல் தர மறுத்ததால் அந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டினார். அதோடு அந்த கடையின் அருகே படுத்திருந்த சுமை தூக்கும் […]
திருமணமான ஒரு வருடத்தில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற கர்ப்பிணி பெண் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் 2வது தெருவில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பி.காம் பட்டதாரியான வைஷாலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள […]
யானை மிதித்ததால் வாலிபர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி காலனியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நரசிபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். இவர் வழக்கம்போல் கோவிலுக்கு சென்று விட்டு பச்சாவயல்பதி என்ற இடத்திலிருந்து தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதியான ஆத்தூர் என்ற கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள ஒரு பாலத்தை […]
அனுமதியின்றி ஊர்வலத்தில் ஈடுபட்டதால் 200 பேர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பினர் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தில் டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாகவும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஊர்வலம் உரிய அனுமதியின்றி நடைபெற்றதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 200 பேர் மீது […]
தண்ணீர் தொட்டிக்குள் இறங்கி வேலை செய்த தொழிலாளர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தர்மபுரியில் சரஸ்வதி என்பவர் வசித்துவருகிறார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆனந்த் நகரில் ஒரு பழைய வீட்டை வாங்கி இருக்கிறார். அங்கு தரைமட்ட தண்ணீர் தொட்டியை புதுப்பிக்கும் பணியானது நடைபெற்றுள்ளது. இந்தப் பணியில் சத்யசாய் நகரில் வசித்து வரும் பெரியசாமி என்பவரும், கட்டிகானப்பள்ளி கீழ் புதூரில் வசித்து வரும் வெங்கடாஜலபதி மற்றும் முருகன் என்பவர்களும் ஈடுபட்டுள்ளனர். […]
கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு இறந்த சிறுவனின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெட்டு காட்டுப்புதூர் அருந்ததியர் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு குமரேசன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது காலனிக்கு அருகே […]
புத்துணர்வு முகாமிற்கு அழைத்து வரப்படும் யானைகளுக்கு கொரோனா பரிசோதனையானது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. ஆனால் முகாம் தொடங்கும் தேதியை இன்னும் தமிழக […]
ஆசிரியை திடீரென்று மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டத்திலுள்ள ஓச்சேரி பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வசித்து வந்தார். அவர் தர்மநீதி கிராமத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 24ஆம் தேதி அவர் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது தந்தை அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் […]
16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் கூலித் தொழிலாளியின் மகளான 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமிக்கு ஆனைமலை பகுதியில் வசித்துவரும் மூன்று பேர் செல்போனில் பேசியதால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த […]
போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காரமடையில் முருகேசன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்துவருகிறார். இவர் ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற முருகேசனுக்கு மதியம் 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மயங்கி விழுந்த முருகேசனை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அந்த மருத்துவமனையில் […]
பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தினால் 30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை ரோடு எம்.ஆர்.டி நகரில் செந்தில் என்பவர் வசித்துவருகிறார். இவர் ஒரு பிளாஸ்டிக் குடோனை கடந்த இரண்டு வருடமாக நடத்தி மொத்த வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 4 மணிக்கு திடீரென இந்த பிளாஸ்டிக் குடோன் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து விட்டது. இச்சம்பவம் குறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]
ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சிபுரத்தில் இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையத்தில் திடீரென்று அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் பாகாயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று காலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஏடிஎம் மையத்தில் உள்ள […]