Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நீங்க ஏன் நடுவுல வந்தீங்க…. பெண்களுக்கிடையில் தகராறு… கைது செய்யப்பட்ட நால்வர்…!!

பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக போலீசார் 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள மேட்டமலை கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாச்சியார் என்ற ஒரு மனைவி உள்ளார். அப்பகுதியில் மற்றொரு முருகன் என்பவரும் வசித்து வருகிறார். அவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் அனிதாவிற்கும் நாச்சியார்விற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அனிதாவின் உறவினர்கள் ஐயனார், முருகன், மாரீஸ்வரன் மற்றும் ஈஸ்வரன் போன்ற நான்கு பேர் நாச்சியாருடன் தகராறு செய்துள்ளனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வீட்டுக்குள்ளே வந்து திருட்டு…! கத்தியை காட்டி அட்டகாசம்… மதுரையை நடுங்க வைத்த சம்பவம் …!!

வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள டி.டி.சி நகரை சேர்ந்தவர் பிரகாஷ்-சௌந்தர்யா தம்பதியினர்.  இவர்கள் இருவரும் வீட்டில் இருந்த பொழுது திடீரென்று ஒரு மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி சௌந்தர்யா அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதனை தடுக்க முயன்ற பிரகாசை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து சௌந்தர்யா காவல் நிலையத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வேலை பார்க்குற இடத்துல… இப்படி செய்யலாமா ? ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ் …!!

ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் திருடிய மூவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் உள்ள பெருங்குடியை அடுத்த வளையப்பட்டியில் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் செல்வம், விஜய், முத்துராமன் பணி புரிந்து வருகின்றனர்.  இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்திலிருந்து ரூபாய் 30 ஆயிரம் மதிப்பிலான மூலப்பொருள்களை மூவரும் திருடியது தெரியவந்தது. இந்நிலையில் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளரான ராகவன் பெருங்குடி காவல் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போலீஸ் சார்…! ரொம்ப அவசரம்… கொஞ்சம் அனுப்புங்க… கைதியால் காத்திருந்த அதிர்ச்சி ..!!

போலீஸ் ஏட்டை தாக்கி விட்டு தப்பிச் சென்ற சிறைக் கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் கிடைத்த தகவலின் படி சின்னசேலம் போலீஸ் ஏட்டுகள் முஸ்தபா, சிவராமன், சுப்பிரமணியண் ஆகியோர் நாமக்கல் கிளை சிறையில் இருந்த சக்கரவர்த்தி, சௌந்தர்ராஜன் ஆகியோரை விசாரணை செய்வதற்காக கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளார். ஆத்தூர் பஸ் நிலையம் வந்ததும் சிறுநீர் கழிக்க வேண்டும் என கைதி சக்கரவர்த்தி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உறவினரை பார்க்க சென்ற முதியவருக்கு… சரக்கு ரயில் மூலம் வந்த எமன்… திருப்பத்தூர் அருகே நடந்த விபரிதம்…!!

ரயில் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் மொரப்பூர் அருகே இருக்கும் வேட்ரப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் காலை மொரப்பூர் வந்துள்ளார். பின்பு அங்கிருந்து வேட்ரப்பட்டி செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த சென்னை நோக்கி செல்லும் சரக்கு ரயில் ஒன்று முருகன் மீது மோதியது. இந்த விபத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உறவினர் வீட்டுக்கு போயிட்டு வரும் வழியில்…. குடும்பத்தினருக்கு போன தூக்க செய்தி… மதுரையில் சோக சம்பவம் …!!

மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள தேனுரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். பாலசுப்பிரமணியன் தனது நண்பரான அழகர்சாமியுடன் உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அரியூர் வழியே சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் அரியூர் அருகே இருசக்கரவாகனம் நிலைதடுமாறி மரத்தின் மீது மோதியது. இதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அழகர்சாமி படுகாயமடைந்து […]

Categories
Uncategorized திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எல்லையை தீர்மானிப்பதில் சிக்கல்…. கணவன் பிணத்துடன் போராடிய மனைவி… இரு மாநிலங்களின் குழப்பம்….!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான புகாரை ஏற்க மாநில அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு இடையே ஏற்பட்ட குழப்பத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புல்லூர் ஊராட்சியில் ராம்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற ஒரு மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர் வாணியம்பாடி புத்து கோவில் பகுதியில் வசித்து வரும் இரண்டு பேருக்கு 7 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நேருக்கு நேர் மோதல்…. வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் புதிய காலனியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவர் பெயிண்டிங் வேலைக்காக கிருஷ்ணகிரிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு புறப்பட்டு உள்ளார். அப்போது  சேகர் கீழ்பெண்ணாத்தூர் வழியாக வந்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த கீழ்பெண்ணாத்தூர் பகுதியிலுள்ள அம்பேத்கர் நகரில் வசித்து வரும் வெற்றி என்பவரின் மோட்டார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சட்டத்திற்கு விரோதமாக… வாலிபர் செய்த செயல்… கைது செய்த காவல்துறை…!!

போலீசார் மணல் கடத்திய குற்றத்திற்காக வாலிபரை கைது செய்ததோடு, அதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் பறிமுதல் செய்து விட்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்பூண்டி கிராமத்தில் போலீசார் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை போலீசார் நிறுத்தினர். இதனையடுத்து அந்த லாரியை சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கல்பூண்டி பகுதியில் வசித்து வரும் பிரசாந்த் என்பவரை […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதையில் வந்த கணவர்… கண்டித்த மனைவிக்கு.. காத்திருந்த சோகம்…!!

டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாதவச்சேரி கிராமத்தை சார்ந்தவர் ஞானபண்டிதன் இவருடைய மகன் ரவி என்பவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் மஞ்சப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்து ஓர் ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கின்றனர். ரவி அனுஷாவின் தாய் வீட்டிற்கு சென்று அவரை விட்டுவிட்டு மூன்று நாட்களுக்குப் பின்பு அனுஷாவை காண்பதற்காக மஞ்சப்புத்தூர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன்…. இதோட இரண்டாவது முறை…. ஆய்வு செய்து வரும் அதிகாரிகள்….!!

ஒரே வாரத்தில் இரண்டு சிறப்பு ரெயில்கள் தடம் புரண்டதால் தண்டவாளங்களை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு சரக்கு ரயிலானது புறப்பட்டு சென்றுள்ளது. இந்த சரக்கு ரயில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியிலுள்ள ஒரு வளைவில் திரும்ப முயன்றபோது, ரயிலின் 25வது மற்றும் 26ஆவது பெட்டிகளின் சக்கரங்கள் தடம்புரண்டு தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி விட்டது. இந்நிலையில் திடீரென கேட்ட அந்த பயங்கர சத்தத்தால் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஐய்யோ..! என்னால தாங்க முடியல…! தொழிலாளி எடுத்த சோக முடிவு….. தர்மபுரியில் அதிர்ச்சி சம்பவம் ..!!

கூலி தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள மொரப்பூர் பகுதியில் இருக்கும் போடிநாயக்கன்பட்டியைச் சார்ந்தவர் வேலு-கல்பனா தம்பதியினர். கூலித் தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வேலு நீண்ட நாளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார். இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஆசை பட்ட பெண்ணை… திருமணம் செய்ய முடியாததால்… வாலிபர் எடுத்த சோக முடிவு…!!

வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு பகுதியில் இருக்கும் செம்மநத்தத்தை சார்ந்தவர் கௌரி செட்டி. இவருடைய மகன் நடராஜன் என்பவர் பாலக்கோடு பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். நடராஜன் அவருடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்ய எண்ணி பெண்ணின் பெற்றோரிடம் பெண் கேட்டும் கொடுக்க மறுத்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் மனமுடைந்த நடராஜன் நேற்று வீட்டில் தனியாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

பணியில் இருந்து திரும்பியவர்…. வழியில் நடந்த விபரீதம்… வாலிபருக்கு நேர்ந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புதுப்பாடி என்ற பகுதியில் சுகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுகுமார் சின்ன குக்குண்டியில் உள்ள தனது நண்பரைப் பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் புதுப்பாடி அருகே சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக செய்யாறில் இருந்து ஆற்காடு நோக்கி வந்த லாரி ஒன்று திடீரென இவரின் மோட்டார் சைக்கிள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்…. வலைதளங்களில் அவதூறு…. கைது செய்த காவல்துறை….!!

சமூக வலைதளங்களில் அமைச்சர்கள் குறித்து அவதூறு பரப்பிய குற்றத்திற்காக முன்னாள் திமுக பிரமுகரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் சொர்ண லட்சுமி கார்டன் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் தி.மு.க மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக பதவியில் இருந்துள்ளார். இவர் கட்சிக்கு எதிராக நடந்த காரணத்தால் கடந்த ஆண்டு இவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தி.மு.க அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

என்ன காரணமா இருக்கும்…? மர்மமான மரணம்…. மனைவியின் சந்தேகம்…!!

லாரி டிரைவர் திடீரென மரணித்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பஜார் தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மணிகண்டன் இறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அடித்து பிடித்து ஓடியவர்கள்… மடக்கி பிடித்த போலீசார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மணல் கடத்திய குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு, தப்பி ஓடிய மற்றொருவரை வலைவீசி தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் கே.வி. குப்பம் போலீசார் மேல் காவனூர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றிக்கொண்டு வந்ததை போலீசார் கண்டனர். அதன்பின் போலீசார் வருவதை பார்த்த மூவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களில் இருவரை மடக்கி பிடித்து விட்டனர்.  ஆனால் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் திருந்த மாட்டிங்களா…? எங்கையும் தப்பிக்க முடியாது… மடிக்கி பிடித்த போலீசார்…!!

ஒரு வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு போலீசாருக்கு மூகாம்பிகை நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சில சட்ட விரோதமாக சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விட்டனர். இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவனிக்காமல் இருந்த தாய்…. விளையாடிய சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. திருவள்ளூரில் பரபரப்பு….!!

சிறுவன் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பட்டறை பெருமந்தூர் பகுதியில் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராகவன் என்ற மகன் உள்ளார். இவர் ஒரு டிபன் கடையை நாராயணபுரம் பகுதியில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தன் வீட்டில் இருந்தபோது செல்வி கிரைண்டரில் மாவு அழைத்துள்ளார். அப்போது ராகவன் அங்கு வந்து கிரைண்டர் மீது கை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற மூதாட்டி…! எதிரே வந்த பேருந்தால் நேர்ந்த பரிதாபம் …!!

வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் உள்ள மேலக்கோட்டையை சார்ந்தவர் பாண்டியம்மாள். இவர் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது பஸ் நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் திடீரென்று பாண்டியம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளி மீது மோதிய வாகனம் – புதுக்கோட்டையில் விபத்தால் உயிரிழப்பு …!!

இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வண்ணார்பட்டியை சேர்ந்தவர் திருமாறன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று பட்டுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் திடீரென்று எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த திருமாறனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கேட்கவே மாட்டேங்குதே… வலியால் துடித்த கல்லூரி மாணவன்… தஞ்சையில் நடந்த சோகம்…!!

வயிற்று வலியால் துடித்து வந்த கல்லூரி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள வல்லம் பகுதியில் இருக்கும் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மகன் வல்லரசு என்பவர் ஒரு தனியார் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சில நாட்களாக வல்லரசு கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இதனால் வல்லரசு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாட்டர் சர்விஸ் செய்த போது… திடிரென தாக்கிய மின்சாரம்… பின் நேர்ந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும்போது திடீரென தாக்கிய மின்சாரத்தால் மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள வடக்கு வாசல் கங்கா நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் மெக்கானிக் ஷாப் ஒன்றில் இருசக்கர வாகனத்திற்கு வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டிருக்கும் போது தரையில் கிடந்துள்ள சேதமடைந்த மின் ஒயரில் மிதித்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கி உள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குப்பையில் கிடந்த 1பவுன் மோதிரம் …. தேடி மீட்டுக்கொடுத்த பாக்கியம்… குவியும் பாராட்டுக்கள் …!!

குப்பையில் தவறவிட்ட ஒரு பவுன் மோதிரத்தை மீட்டுக்கொடுத்த பெண் தூய்மைப் பணியாளரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் அசோக் நகரைச் சேர்ந்தவர் முத்து  – அனந்தலட்சுமி தம்பதியினர். இவர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் பாக்கியம் என்பவரிடம் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள குப்பைகளோடு பூஜை அறையில் இருந்த பழைய பூக்களையும் அளித்துள்ளார். பின்னர் பூஜை அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் மோதிரம் இல்லாததை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பணம் வைத்து சூதாட்டம்…. ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவலர்கள்… கையும் களவுமாக சிக்கிய மூவர்…!!

பணம் வைத்து சூதாட்டம் ஆடிய மூன்று பேரை பேரையூர் அருகே போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேரையூர் பகுதியை சார்ந்த சுப்புராம், ஆனந்தன், வேல்முருகன் ஆகியோர் அந்தப் பகுதியில் இருக்கும் மந்தை அருகே பணத்தை வைத்து சூதாடி கொண்டிருந்தனர். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவர்களை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த ரொக்கப்பணம் 530 ரூபாயை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எங்கெல்லாம் மறைச்சு வைக்குறாங்க… அவ்வளவும் தங்கம் தான்… அதிகாரிகளின் அதிரடி சோதனை…!!

சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வந்த ரூபாய் 4 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள 8 கிலோ 500 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில்  தங்கம் கடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரின் உத்தரவின்படி, சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“முன்விரோதம்” ஆயுதமாக மாறிய கத்திரிக்கோல்… மதுரையில் பரபரப்பு…!!

டிரைவரை கொலை செய்த ஒருவரை வாடிப்பட்டி அருகே போலீசார் கைது செய்துள்ளனர் மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி பகுதியில் இருக்கும் ராமநாயக்கன்பட்டியைச் சார்ந்தவர் ரகுராஜ். இவர் டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கருப்பட்டியை சார்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி ராஜேஷ்குமார், முருகன், சுரேஷ் ஆகியோர் ரகுராஜை வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அந்த சமயத்தில் ராஜேஷ்குமார் கத்தரிக்கோலை எடுத்து ரகுராஜ் என்பவரின் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

களைகட்டிய கலாச்சார விழா… கோலாகலமான தொடக்கம்…. அசத்திய கலைஞர்கள்….!!

உள்நாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் மாமல்லபுரத்தில் கலாச்சார கலை விழாவானது தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் சுற்றுலாத்துறை சார்பில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கலாச்சார கலை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கலாச்சார கலை விழா மாமல்லபுரம் பூங்காவில் உள்ள திறந்தவெளி மேடையில் தொடங்கிவிட்டது. இந்த விழாவிற்கு மாமல்லபுரம் சுற்றுலா அதிகாரி ராஜாராமன் தலைமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் நடந்த விபரீதம்… துக்க நிகழ்ச்சிக்கு சென்றவருக்கு நடந்த துயரம்… வசமாக சிக்கியவர்கள்….. !!

ரவுடியை கொலை செய்த வழக்கில் போலீசார் ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணதாசன் நகரில் சூரியபிரகாஷ் என்ற ரவுடி வசித்து வந்தார். இவர் பூமாலை கடை ஒன்றை பழைய வண்ணார்பேட்டை பகுதியில் வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் தனது அண்ணன் ஜெயக்குமார் என்பவருடன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வண்ணார்பேட்டைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த  மர்மநபர்கள் சூரியபிரகாஷை ஓட ஓட வெட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மிரட்டப்பட்ட மாணவர்கள்…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கத்திமுனையில் கல்லூரி மாணவர்களை மிரட்டி கொள்ளையடித்த மர்ம நபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சந்திப், அனிஷ், அழகேஸ்வரன் என்ற 3 பேர் தங்கி ஹோட்டல் மேனேஜ்மென்ட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரையும் கோடம்பாக்கத்தில் உள்ள பாலத்திற்கு கீழ் மர்ம நபர்கள் அழைத்துச் சென்று கத்தி முனையில் அவர்களை மிரட்டியுள்ளனர். அதன் பின் அவர்களிடமிருந்த ஏ.டி.எம் கார்டை வாங்கி கொண்டு, ஏ.டி.எம்-மில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயல் வேலையில் மூழ்கிய பெண்…. “காலில் ஏதோ கடிச்சிட்டு” பின்னர் ஏற்பட்ட இழப்பு…. கதறித் துடித்த கணவன்….!!

வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பாம்பு கடித்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் இருக்கும் முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்-காளீஸ்வரி தம்பதியினர். இவர்கள் நிலத்தில் கதிர் சேகரித்துக் கொண்டிருக்கும் போது காளீஸ்வரி காலில் பாம்பு கடித்துவிட்டது. இதனை அடுத்து ஆபத்தான நிலையில் காளீஸ்வரியை சிகிச்சைக்காக சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனுஷத்தனம் இல்லாம போச்சே…. தெரு நாய்க்கு நடந்த கொடூரம்…. சிசிடிவி காட்சியால் சிக்கிய இருவர்….!!

விடாமல் குறைத்து கொண்டிருந்ததால் தெரு நாயை அடித்துக் கொன்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள செல்லூர் பகுதியை சார்ந்தவர் முத்துசரவணன். இவர் அந்த வழியாக சென்று வரும் போது தெருநாய் ஒன்று அவரை பார்த்து குறைத்துக்கொண்டு கடிக்க முயன்றுள்ளது. அந்த வழியாக செல்லும் அனைவரையும் அந்த நாயைப் அதே போன்று செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்துசரவணன் அந்த நாயை கொள்வதற்காக கணேசபுரத்தில் சேர்ந்த விமல்ராஜ் என்பவரிடம் 500 ரூபாய் பணம் கொடுத்து அந்த நாயை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அய்யோ… என் சங்கிலி போச்சே… கதறும் மூதாட்டி… மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…!!

மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை மர்மநபர் பறித்த சம்பவம் செந்துறை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி. இவர் தன் வீட்டிலிருந்து வெளியே வந்து தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை  பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து மீனாட்சி தளவாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் தளவாய் காவல்துறையினர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அமைதியா போயிட்டு இருந்த மின்வாரிய ஊழியர்…. எதிரே வந்த பேருந்து…. எதிர்பாராமல் ஏற்பட்ட பெரும் இழப்பு….!!

மின்வாரிய ஊழியர் பஸ் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சார்ந்தவர் நல்லப்பன். இவர் மின்வாரியத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று மாலை கீழப்பழுவூர் பஸ் நிலையம் அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பஸ் அவரது வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நல்லபனை அருகில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக அரியலூர் அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இவங்கமேல தான் சந்தேகம்…. காணாமல் போன பசுமாடு… வசமாக சிக்கியவர்கள்…!!

பசுமாட்டை திருடிச் சென்றவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் பிரபு என்பவர் வசித்துவருகிறார். இவர் இராணிபேட்டை பாலாறு அருகில் உள்ள ஒரு மின் கம்பத்தில் தனது பசுமாட்டை கட்டியுள்ளார். அதன் பின் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது, கட்டிவைத்த பசு மாட்டை அங்கு காணவில்லை. இதனையடுத்து கீரைசாத்து பகுதியில் வசித்து வரும் ஆனந்தன் மற்றும்  எசையநூரில்  வசித்து வரும் ரகுவரன் போன்றோர் பசுமாட்டை திருடி சென்றது […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொஞ்சம் அதை பற்றி விசாரிங்க…. வசமாக சிக்கியவர்கள்…. கைது செய்த காவல்துறை…!!

தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்தவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விருதம்பட்டு பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடப்பட்டுள்ளது. எனவே இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமாருக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்பின்னர் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் தோட்டப்பாளையத்தில் வசித்து வரும் அஜய் என்பவரிடமும், அம்பேத்கர் நகரில் வசித்து வரும் ராஜ்குமார் என்பவரிடமும் விசாரித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த காலத்தில் குழந்தை திருமணமா..?? சிறுமிக்கு நேர்ந்த துயரம்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

குழந்தை திருமணம் நடைபெற்ற சிறுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமிக்கும், 16 வயது சிறுவனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த சிறுமி தன் கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்கு சென்ற பின் அந்த சிறுமி தனது வீட்டு மாடிக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து புகார்கள்… ஒரே நேரத்தில் நான்கு இடங்களில் சோதனை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை செய்ததில் கணக்கில் வராத 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி நகர சங்கம்( டி.யு.சி.எஸ் ) மிகவும் பழமை வாய்ந்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் விற்பனை, பெட்ரோல் டீசல் விற்பனை, ரேஷன் கடைகள், உணவகங்கள் மற்றும் சூப்பர் மார்க்கெட்கள் போன்றவை நடத்தப்படுகின்றது. இந்நிலையில் டி.யு.சி.எஸ் மூலம் நடத்தப்படும் சூப்பர் மார்க்கெட்டுகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

முகக்கவசம் இல்லாம இருக்க…..? எடு 200 ரூபாய்…. சந்தையில் சோதனை…. சிக்கிய வியாபாரிகள்….!!

முகக் கவசம் அணியாமல் விற்பனையில் ஈடுபட்ட கடை வியாபாரிகளிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலை பகுதியில் வார சந்தை நேற்று நடைபெற்றது. இந்த சந்தையில் சின்னரெட்டிபட்டி, அத்திப்பட்டி, நாகனூர், கழுகூர், கீழ்வெளியூர், தோகைமலை உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு பொருட்களை வாங்குவதற்காக சந்தைக்கு வந்துள்ளனர். இதனை அடுத்து சந்தையில் தோகைமலை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரங்கசாமி, ஆய்வாளர் சௌந்தர்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். சந்தையில் உள்ள 200க்கும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

தொழில் போனா எல்லாம் போச்சா….? தொழிலதிபர் செய்த வேலை…. குழந்தையுடன் கதறும் மனைவி…!!

டெக்ஸ்டைல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தொழிலதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சதீஷ்-கலைவாணி தம்பதியினர். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. சதீஷ் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகிறார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார். இதனால் சதீஷ் நேற்று முன்தினம் தனது வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு போறேன்னு சொன்னா… இன்னும் வரல…. காவல்துறையை நாடிய பெற்றோர்….!!

வேலைக்கு சென்று வருவதாக கூறிய பெண் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள மண்மங்கலம் பகுதியைச் சார்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் சுவாதி. இவர் ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற சுவாதி இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதியின் பெற்றோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காததால் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

அய்யோ..!! “என் மகளும் பேத்திகளும் போன இடம் தெரியலையே” கதறும் தாத்தா…. தேடுதல் வேட்டையில் போலீஸ்….!!

தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் மாயமான சம்பவம் குறித்து வெள்ளியணை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்திலுள்ள வெள்ளியணையில் ஜல்லிப்பட்டிகுடி தெருவை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவருடைய மகள் மகேஸ்வரி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ரெங்கசாமி என்பவருடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரி ரெங்கசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகேஸ்வரி தனது தந்தை பொன்னுசாமியின் வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

யாரும் தப்பிக்க முடியாது… மாட்டினால் அவளோதான்… மீறினால் கடும் நடவடிக்கை…!!

சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலானது முழுமையாக குறையவில்லை. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் முகக் கவசம் அணியாமல் பணிபுரிகின்றனர். மேலும் அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை போன்ற பல புகார்கள் வந்துள்ளது. எனவே தமிழக அரசு சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து தான் பணிக்கு வரவேண்டுமென தமிழக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து எரிந்த குடிசைகள்…. அனைத்தும் நாசம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

அடுத்தடுத்த வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 19வது வார்டு அம்சா நகர் 1வது தெருவில் வேலு என்று கூலி தொழிலாளி வசித்துவருகிறார். இவர் வேலைக்கு சென்ற சமயத்தில் அவரது குடிசையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீ பற்றி விட்டது. அப்போது அவரது குடிசையில் தீ எரிவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் அந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ரொம்ப நேரமாகியும் வரல… கடையில் காத்திருந்த அதிர்ச்சி…. மனைவியின் புகார்….!!

சலூன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிகுப்பம் சேரன் தெருவில் டில்லிபாபு என்பவர் வசித்துவருகிறார். இவர் காக்களூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் தெருவில் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவு வெகு நேரம் ஆகியும் டில்லிபாபு வீட்டிற்கு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு டில்லிபாபு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசிற்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

எப்படி செத்துச்சு….? கரை ஒதுங்கிய கடல் உயிரினங்கள்…. உடற்கூறாய்வுக்கு பின் புதைப்பு…!!

வேதாரண்யம் கடல் பகுதியில் 50 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி அமையும் டால்ஃபினும் இறந்து கரை ஒதுங்கியது. வேதாரண்யத்தில் கோடியக்கரை தொடங்கி புஷ்பவனம் கடற்கரை பகுதி வரை பசுபிக் பெருங் கடலில் வாழும் அரிய வகை உயிரினமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் பருவகாலங்களில் இனப்பெருக்கத்திற்காக 2000 கிலோ மீட்டர் நீரோட்டத்திற்கு தகுந்தவாறு பயணம் செய்து இந்த பகுதிக்கு வந்து மேடான பகுதியில் மணலை தோண்டி 25 முட்டைகள் வரை இட்டுச்செல்லும். சமூக விரோதிகள் இந்த முட்டைகளை எடுத்துச் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

செயற்கை முறையில் முடி… பெண் கிடைக்கவில்லை… திருமணமாகாத விரக்தியில் வாலிபர் எடுத்த முடிவு…

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில் நடேசன் நகர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவன் என்ற மகன் உள்ளார். கேசவனுக்கு தலையில் வழுக்கை விழுந்த காரணத்தால் பெங்களூருக்கு சென்று செயற்கை முறையில் முடி வைத்துள்ளார். அதன் பிறகும் கேசவனுக்கு திருமணம் செய்வதற்கு எந்த ஒரு பெண்ணும் அமையவில்லை. இந்நிலையில் திருமணம் ஆகாததால் விரக்தி அடைந்த கேசவன் மதுவில் விஷம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மின்சார வேலியில் சிக்கியவர்…. வெளியில் சென்றவருக்கு நடந்த சோகம்…. வேலூரில் பரபரப்பு…!!

மின்சார வேலியில் சிக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சம்பத் ராயன்பேட்டை காமராஜர் தெருவில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நெசவு தொழில் செய்து வந்துள்ளார். இவர் கொசஸ்தலை ஆற்று பகுதியில் உள்ள ஒரு விவசாய நிலத்திற்கு சென்றபோது, அங்கு அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி கொண்டார். அப்போது அவரின் மீது மின்சாரம் பாய்ந்ததில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இச்சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ராட்சச அலை இழுத்து சென்றது…. பறிபோன பெண்ணின் உயிர்… தடைப்பட்ட ஆன்மீக பயணம்…!!

ஆன்மீக யாத்திரையாக வந்த ஒரு பெண் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு கோவை மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியை சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் 50 பேர் சேர்ந்து ஒரு குழுவாக நடந்து வரும் தைப்பூச விழாவிற்கு சுவாமியை தரிசனம் செய்வதற்காக வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் மாமல்லபுரத்திற்கு சென்றுள்ளனர். அதன் பின் அங்குள்ள கடற்கரைக் கோவில், வெண்ணை உருண்டைகள், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு போன்ற சின்னங்களை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணம்…?? பெண் போலீசார் எடுத்த விபரீத முடிவு… கடலூரில் பரபரப்பு…!!

பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நடுவீரப்பட்டு போலீஸ் சரகம் பத்திரக்கோட்டை பகுதியில் நாகமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். சரண்யா அரியலூர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீசாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் முடக்குவாதம் நோயால் பாதிக்கப்பட்ட சரண்யா கடந்த இரண்டு மாதமாக விடுமுறை எடுத்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின் சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பிய சரண்யாவிற்கு மறுபடியும் உடல்நிலை சரியில்லாமல் […]

Categories

Tech |