Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ஆப்சென்ட் போடுறாங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்… கல்லூரியில் பரபரப்பு…!!

பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். அதோடு இக்கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேப்பூர் பகுதிக்கு போக்குவரத்து வசதி சரியாக இல்லாத காரணத்தால் கல்லூரிக்கு வரும் அனைவரும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மகளுடன் வெளியில் சென்ற தாய்… வழியில் நடந்த விபரீதம்… தவிக்கும் குடும்பத்தினர்…!!

ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியை மீது டிராக்டர் மோதியதில் அவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள நல்லான் பட்டினம் கிராமத்தில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வர்ஷினி என்ற மகளும், விஷ்ணுவர்தன் என்ற மகனும் இருக்கின்றனர். ராஜேஸ்வரி புவனகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி தனது மகளுடன் ஸ்கூட்டரில் புவனகிரியில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிகளவு பனிமூட்டம்…. பாதிக்கப்பட்ட சேவை…. திருப்பி விடப்பட்ட விமானங்கள்…!!

அதிகளவு பனி மூட்டத்தால் சென்னை விமான நிலையத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டது.  சென்னை மாவட்டத்தில் அதிகாலை முதலே பனிமூட்டமானது அதிகமாக காணப்பட்ட காரணத்தால் புறநகர் பகுதிகளான ஆதம்பாக்கம், பரங்கிமலை, ஆலந்தூர், மீனம்பாக்கம் போன்ற பகுதிகளில் எதிரில் வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில் மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் உள்ள ஓடுபாதையில் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் சென்னை விமான நிலையத்திலும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மதுரை, மும்பை, அகமதாபாத், பூனே, டெல்லி, […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

அப்பா, அம்மா துரத்திட்டாங்க… பாட்டியுடன் சுற்றிய இளம்பெண்… வேலூரில் பரபரப்பு…!!

ஒரு வாரமாக வெளியில் சுற்றி திரிந்த இளம்பெண் மற்றும் அவரது மூதாட்டியை அதிகாரிகள் மீட்டனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காந்திரோடு, பாபுராவ் தெரு போன்ற பகுதிகளில் இளம்பெண் ஒருவர் மூதாட்டியுடன் ஒரு வாரமாக சுற்றித்திரிந்து உள்ளார். இவர்கள் இரவு நேரங்களில் அங்குள்ள கடைகளுக்கு முன்பு தூங்கி உள்ளனர். இந்த பகுதியில் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் நடமாட்டமானது அதிகளவு இருப்பதால் அந்த பகுதியில் இவர்களை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த பெண்ணிடம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

17 வயசுதான் ஆகுது…. நிறுத்தப்பட்ட திருமணம்… எச்சரிக்கப்பட்ட பெற்றோர்… அதிரடி நடவடிக்கை…!!

மைனர் பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை சமூகநலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதோடு, அவரது பெற்றோரை எச்சரித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி தாலுகாவில் பிளஸ் டூ படித்து முடித்துள்ள 17 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் வசித்து வரும் உறவினர் மகனான அருண்குமார் என்பவருடன் வரும் 27ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் வைத்து திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திருமணம் குறித்து திருவண்ணாமலை மாவட்ட சமூகநலத்துறை அலுவலர்களுக்கு ரகசிய […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வேகமாக வந்த லாரி…. சக்கரத்தில் சிக்கிய பெண்… தி. மலையில் பரபரப்பு…!!

விபத்தின்போது லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் பெண்ணாத்தூர் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு செல்வி என்ற சகோதரி உள்ளார். இவர் தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் செங்கம் சாலையில் பெரியகோளாபாடி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் செல்வி தூக்கி வீசப்பட்டு லாரியின் சக்கரத்தில் தலை சிக்கிக்கொண்டதால் சம்பவ இடத்திலேயே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சீக்கிரமா மீட்டு குடுங்க… தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்… தி. மலையில் பரபரப்பு….!!

தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரும்படி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலர் கொட்டாய் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் தீக்குளிப்பதற்காக பெட்ரோல் கேனை மறைத்து கொண்டு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்த பெண்… பட்டதாரி பெண் எடுத்த முடிவு…. நேர்ந்த துயர சம்பவம்…!!

காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் ஆதனூர் காலனியில் ஜானகிராமன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ்.சி, பி.எட் பட்டதாரியான கோடீஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஜெகதீஷ் மற்றும் ரோகித் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மகளை பார்க்க சென்ற தாய்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. புகாரளித்த மகன்…!!

அரசு மருத்துவமனை நர்ஸின் வீட்டு பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முத்தம்பாளையம் வாஞ்சிநாதன் பகுதியில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர் தொகைபாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.  இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டை உடைத்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மும்பைக்கு சென்ற குடும்பத்தினர்…. புதுமுறையில் அரங்கேறிய சம்பவம்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

வீட்டின் பீரோவை கள்ள சாவியை பயன்படுத்தி திறந்து அங்கிருந்த 9 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அணிலாடி கிராமத்தில் தேவசகாயம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜான்சன் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் வீடுகளுக்கு ஜன்னல், கதவு, கேட் போன்றவை புதிதாக செய்து கொடுக்கும் நிறுவனத்தை மும்பையில் நடத்தி வந்துள்ளார். எனவே ஜான்சனுக்கு உதவும் வண்ணம் தேவசகாயம் தனது மனைவி கணிக்கைமேரியுடன் கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரசு ஊழியர்களாக மாற்றுங்க…. அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்பாட்டம்… கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்…!!

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வல்லம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது விழுப்புரம் மாவட்ட செயலாளர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. அதோடு ஒன்றிய தலைவர் கிறிஸ்டினா மேரி, மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தம்மாள், ஒன்றிய செயலாளர் சரளா மற்றும் ஒன்றிய பொருளாளர் குமாரி போன்றோர் இந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற குடும்பத்தினர்… திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பரபரப்பு…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள எம்.கே.பி நகர் முகமது அபி முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எங்கையும் சரியாகல…. என்ன செய்றதுன்னு தெரியல… வியாபாரியின் விபரீத முடிவு….!!

உடல்நல பாதிப்பால் மனமுடைந்த தேங்காய் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கோபம்பட்டி கிராமத்தில் சேட்டு என்ற தேங்காய் வியாபாரி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பார்த்தும், அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. இந்நிலையில் வளத்தூர் கிராமத்திற்கு தேங்காய் விற்க சென்றுள்ளார். அப்போது இவர் அம்பேத்கர் நகரில் இருக்கும் முனிராஜ் என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

டேய்..! விஜய் ஸ்டேஷனுக்கு வாடா… கூப்பிட்ட போலிஸ் மீது தாக்குதல்…. பரபரப்பான திருச்சி ..!!

போலீஸ் ஏட்டை இரும்பு கம்பியால் தாக்கி தப்பிச் சென்றவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலுள்ள பாலக்கரை காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் வேல்முருகன். இவர் சங்கிலியாண்டபுரம் பைபாஸ் சாலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது அதே சாலையில் சங்கிலியாண்டபுரத்தை சார்ந்த விஜய் மற்றும் 2 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்து கொண்டிருந்தனர். விஜய் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை பிடிக்க வேல்முருகன் முயன்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இந்த அட்ரெஸ் எங்க இருக்கு…? மூதாட்டியை ஏமாற்றிய வாலிபர்கள்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

முகவரி கேட்பது போல மூதாட்டி அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் சுசிலா என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பிள்ளையார் கோவிலில் அமர்ந்து இருந்த போது, அவ்வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது சுசிலாவிடம் முகவரி கேட்பது போல் பேச்சு கொடுத்து சுசிலா அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பின்னால் அமர்ந்திருந்த […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. அதான் இப்படி செஞ்சேன்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுகருணாகரசேரி சிவன் கோவில் தெருவில் யுவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோனிஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குளியலறையில் குளித்து விட்டு வருவதாக சென்ற மோனிஷா வாந்தி எடுத்ததை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சி அடைந்து, அவரிடம் என்னவென்று வினவியுள்ளார். அதற்கு மோனிஷா தனக்கு வயிற்று வலி அதிகமாக இருந்ததால் பயிருக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரவோடு இரவாக….. மர்ம நபர்களின் கைவரிசை… வலை வீசி தேடும் போலீசார்…!!

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திரு.வி.க தெருவில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை துறைமுகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் கீழ்தளத்தில் வந்து தூங்கி உள்ளார். இந்நிலையில் இவர் காலையில் எழுந்து பார்த்தபோது, அவரது வீட்டு மாடியின் கதவு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

வெளிய சென்று வரேன்….. முதியவருக்கு நேர்ந்த சோகம்… காஞ்சியில் பரபரப்பு…!!

வாகனம் மோதிய விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கருவேப்பம்பூண்டி கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உத்திரமேரூர் சென்று வருவதாக கூறிவிட்டு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் உத்திரமேரூர்-காஞ்சிபுரம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, அடையாளம் தெரியாத வாகனம் முதியவரின் மீது மோதி விட்டது. இச்சம்பவத்தை பார்த்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து ஆம்புலன்சில் வந்த டாக்டர்கள் அந்த முதியவரை பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மன்னார்குடி போயிட்டு வரேன்…! மனைவியிடம் கேட்ட கணவன்…! கடுப்பில் கொலை செய்த கொடூரம் …!!

குழந்தைகள் கண் முன்பு மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் திருச்சி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் தவசி-ராஜேஸ்வரி தம்பதியினர். புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வரும் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தவசிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இதனால் ராஜேஸ்வரி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அக்கம்பக்கத்து வீடுகளில் வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். ராஜேஸ்வரியின் நடத்தை மீது தவசி சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டேய்..! யாருட சண்டைக்கு வார ? உதவியவரால் பறிபோன உயிர்… தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம் …!!

லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு பகுதியில் இருக்கும் மணல் மேட்டை சேர்ந்தவர் ராமலிங்கம்-முத்துலட்சுமி தம்பதியினர். லாரி டிரைவர் தொழில் செய்து வரும் இவருக்கு ஜெகதீசன், வர்ஷா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். மேலும் ராமலிங்கம் பள்ளியக்ரஹாரம் பைபாஸ் சாலையில் ஒரு டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். அந்த பாருக்கு செல்லும் வழியில் சாலைகள் மழைநீரால் சேதமடைந்து இருப்பதனால் மணல் அடிக்குமாறு ராமலிங்கம் ரகுவரன் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு வந்த மாணவி…. கடத்தி சென்ற டிரைவர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

கார் டிரைவர் நர்சிங் மாணவியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். அதே பகுதியில் 17 வயதுடைய நர்சிங் மாணவி வசித்து வந்துள்ளார். இந்த மாணவி சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த அந்த மாணவியை சரவணன் கடத்தி சென்றுள்ளார். இதனை அறிந்த அந்த மாணவியின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சோகமயமான பிறந்தநாள் விழா… வாலிபருக்கு நேர்ந்த துயரம்… சென்னையில் பரபரப்பு…!!

நண்பர்களுடன் குளிக்க சென்றவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள எம்.ஜி.ஆர் தெருவில் பிரின்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பெரிய அருங்கால் கிராமத்திற்கு சென்றுள்ளார். அதன் பின் அங்கு உள்ள விவசாய கிணற்றில் பிரின்ஸ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் குளித்துக்கொண்டிருந்த பிரின்ஸ் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனையடுத்து மறைமலைநகர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தூங்கும் போது நடந்த விபரீதம்… வசமாக சிக்கியவர்கள்…. வேகமாக செயல்பட்ட போலீசார்…!!

லேப்டாப் திருடியவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 2 லேப்டாப்கள் மற்றும் 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர். சென்னை மாவட்டத்திலுள்ள சோளிங்கநல்லூர் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஆண்களுக்கான விடுதி ஒன்று செயல்படுகிறது. அந்த விடுதியில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சசிகுமார் என்பவர் பணிபுரிகிறார். இவர் விடுதியில் காலை 9 மணி அளவில் தூங்கிவிட்டு மதியம் எழுந்து பார்த்தபோது, அறையில் வைத்திருந்த அவரது லேப்டாப்பை காணவில்லை. இச்சம்பவம் குறித்து சசிகுமார் உடனடியாக செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கேட்கவே மாட்டேங்குதே…! வலியால் துடித்த பெண்…! கரூரில் சோக சம்பவம் ..!!

தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நொய்யல் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள புன்னம்சத்திரம் பகுதியில் இருக்கும் பலமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்-சங்கீதா தம்பதியினர். சங்கீதாவுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டதால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி நேற்று வீட்டில் தனியாக இருக்கும்போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் யாரும் இல்லாத போது…! இந்திரா எடுத்த வீபரீத முடிவு… அரியலூரில் பரபரப்பு …!!

தூக்குப் போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜெயங்கொண்டம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கீழத் தெருவை சேர்ந்தவர் சண்முகம் இந்திரா தம்பதியினர். சண்முகம் கூலித்தொழிலாளி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 வயது பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இந்திரா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம் பக்கத்தினர் இந்திராவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பணத்துக்காக நடந்த இரவு சம்பவம் …! அம்பலப்படுத்திய ஆடுகள்… கொத்தாக சிக்கிய கும்பல் …!!

மீன்சுருட்டி பகுதியில் ஆடுகளை திருட முயற்சித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் இருக்கும் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவர் சரக்கு ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் தனது அக்காவான கமலியின் வீட்டில் வீர பாண்டியனும் அவரது தாயாரும் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் ஆடுகளின் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர்கள் எழுந்து பார்த்த போது மர்ம நபர்கள் ஆடுகளை திருடி கொண்டிருந்தது தெரியவந்தது. ஆடு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எங்கையும் தப்பிக்க முடியாது… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்… விசாரணையில் வெளிவந்த உண்மை..!!

ஆட்டோவில் கடத்தப்பட்ட 300 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணைநல்லூருக்கு புதுச்சேரியிலிருந்து மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக சிறப்பு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் கரடிப்பாக்கம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த சோதனையின் போது, அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை சந்தேகப்பட்டு போலீசார் நிறுத்தினர். இதனையடுத்து போலீசை பார்த்த பயத்தில் ஆட்டோவில் இருந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்… வீட்டிற்கு திரும்பும் போது நடந்த விபரீதம்… பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

ரோட்டில் நடந்து சென்ற இளம்பெண் மீது வாகனம் மோதி விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கல்குளம் புதிய தெருவில் ஜெகநாதன் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு மகள் உள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் கலைச்செல்வி தனது வீட்டிலிருந்து புறப்பட்டு கூவத்தூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அங்கிருந்து கடலூர்-மதுராந்தகம் சாலையில் நடந்து தனது வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

1௦ டன் எடை…. பிரம்மாண்ட விநாயகர் சிலை… ஆகம முறைப்படி பூஜை… மும்பைக்கு அனுப்பப்பட்டது….!!

15 டன் எடை உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட விநாயகர் சிலையானது கிரேன் மூலம் கன்டெய்னர் ஏற்றப்பட்டு மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு சிற்பக்கலை கூடம் உள்ளது. இங்கு மும்பையில் உள்ள ஜீவ்தானி மந்திர் கோவிலில் நிறுவுவதற்காக 10 அடி உயரத்தில் விநாயகர் சிலை வடிவமைக்கும் பணியானது ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பணியை பத்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் சுமார் இரண்டு மாதங்களாக வடிவமைத்து வந்தனர். இந்த விநாயகர் சிலையை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதெல்லாம் கட்டாயம் செய்யணும்… சாலை பாதுகாப்பு பிரசுரம்… விழிப்புணர்வு நிகழ்ச்சி… !!

பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சியானது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழங்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது வேலூர் கோட்ட பொறியாளர் எஸ்.எஸ். சரவணன் தலைமையில் நடைபெற்றது. மேலும் உதவி பொறியாளர் டி. ஞானராஜ் மற்றும் வாலாஜா, உதவி கோட்ட பொறியாளர் பிரகாஷ் போன்றோர் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதோடு சாலை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் பார்ட்டி… போலீசாரிடம் வாக்குவாதம் செய்த பெண்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

பெண் இன்ஜினியர் மதுபோதையில் ஜீப்பை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூரில் ஒரு தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 21 வயது பெண் என்ஜினீயர் பயிற்சிக்காக பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் மணவாள நகர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தனது ஒரு ஆண்டு பணி நிறைவு பெற்றதை கொண்டாடுவதற்காக இந்த பெண் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கொடுக்கல் வாங்கலில் தகராறு…! தம்பி மனைவி என்று பாராமல்…. கொடூரத்தை அரங்கேற்றிய ராஜகோபால்…!!

பள்ளி தாளாளர் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக பெண் இன்ஜினியரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள இ.வி.எஸ் நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி-சொர்ண பிரியா தம்பதியினர். சாப்ட்வேர் என்ஜினீயரான இவர்கள் இருவரும் பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இவர்கள் இருவரும் திருவாரூரில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து ஆன்லைனில் பணியை மேற்கொண்டு வருகின்றனர். சுந்தரமூர்த்தியின் அண்ணன் குடும்பமான […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பேனர்கள் வைத்து… விளக்கு ஏற்றி…. கமலா ஹாரிஸ்சுக்கு வாழ்த்து… ஜோராக கொண்டாடிய கிராமமக்கள்…!!

கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராகப் பதவியேற்ற நிகழ்ச்சியை துளசேந்திரபுரம் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக  ஹாரிஸும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த பதவியேற்பு விழா அமெரிக்க நாடாளுமன்றத்தில் வைத்து நடைபெற்றது. அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றது பெருமையை அளித்துள்ளது. கமலா ஹாரிஸ் தாயின் பூர்வீகமான திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த துளசேந்திரபுரம் மக்கள் விழா கொண்டாடி வாழ்த்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் சீக்கிரமா பண்ணுங்க… மனு கொடுக்கும் போராட்டம்…. விவசாய சங்கத்தினரின் கோரிக்கை…!!

விவசாயிகள் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், கரும்புக்கு ஏக்கருக்கு 40,000 ரூபாயும், உளுந்து மணிலா பயிர்களுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாயும் நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் இருந்த போலீஸ்…! வசமாக சிக்கிய கஞ்சா கபாலி…. விசாரணை தீவிரம் …!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் அமராவதி ஆற்றுப் பாலத்தின் அடியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர் கபாலி என்கிற லட்சுமணன் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்கு தேடியும் கிடைக்கவில்லை…. கால்வாயில் பிணமாக மிதந்த குழந்தை… அதிர்ச்சியில் பெற்றோர்… கடலூரில் பரபரப்பு…!!

ஒன்றரை வயது ஆண் குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள மாளிகை கோட்டை பகுதியில் மணிவண்ணன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரணியன் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இதனையடுத்து பெண்ணாடம் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாகனங்களின் அலட்சியம்… முதியவருக்கு நேர்ந்த சோகம்… கடலூரில் பரபரப்பு…!!

முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிங்காரத்தோப்பு பகுதியில் ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முதியவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவர் புதுச்சேரி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பணம் தரவில்லை…. விரக்தியில் மாணவன் எடுத்த முடிவு… தவிக்கும் தாயார்…!!

செலவுக்கு பணம் தராததால் கல்லூரி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள போளூர் ரயில்வே கிராஸ் ரோடு பகுதியில் சந்திரா என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விக்டர் ரோசாரியோ என்ற மகன் உள்ளார். இவர் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டை வேலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்டர் தனது தாயிடம் செலவுக்கு பணம் வேண்டும் என்று கேட்டபோது அவரது தாய் தன்னிடம் பணம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற தம்பதிகள்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி… மர்ம நபர்களின் கைவரிசை…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோவில்மாதிமங்கலம் பகுதியில் சத்யநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத போது, சத்யநாராயணன் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவர்கள் வீட்டு கதவை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20 ஆயிரம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகளை திருடிவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து வீட்டிற்கு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற விவசாயி…. திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தி. மலையில் பரபரப்பு…!!

விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோவில்மாதிமங்கலம் கிராமத்தில் விஸ்வநாதன் என்ற விவசாயி வசித்து வருகிறார் இவர் தனது குடும்பத்துடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20 பவுன் நகை ஆகியவற்றை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காலில் அறுவை சிகிச்சை… வீடியோ மூலமாக மக்களை சந்திப்பேன்…. கமல்ஹாசனின் அறிக்கை…!!

நேரில் வர முடியாவிட்டாலும் வீடியோ மூலமாக மக்களை சந்திப்பேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.  கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தின் தலைவராவார். இவர் அவரது வீட்டில் உள்ள படிக்கட்டில் ஏறும்போது தவறி விழுந்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்த வலியுடன் கமலஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்ட போது அவரது காலில் மீண்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தைகளின் நலன் கருதி… இயற்றப்பட்ட அவசர சட்டம்… ஒத்தி வைக்கப்பட்டுள்ள வழக்கு…!!

தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் இயற்றியுள்ளது. தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி சூதாட்டத்திற்கு தடை விதித்து அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யும்படி சென்னை ஐகோர்ட்டில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இதற்கு தமிழக உள்துறை துணை செயலாளர் உதயபாஸ்கர் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்போது ஐகோர்ட் மதுரை கிளையில் தெலுங்கானாவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து சட்டம் இயற்றியது […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த விஷ பரீட்சை…. போட்டி போட்ட தம்பதிகள்… கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்… திருவள்ளூரில் பரபரப்பு…!!

கணவன் மனைவி இருவரும் போட்டி போட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணிமேடு பகுதியில் பூபதி தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். பூபதி கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்குள் திருமணம் நடந்த நாள் முதல் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்கா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தொல்லை தாங்க முடியல… மருமகனை கொலை செய்த மாமியார்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் மருமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள வி.ஆர். பிள்ளை தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1௦ ஆம் தேதி கொள்ளுமேடு ஆர்ச் அந்தோனி நகர் அருகிலுள்ள ஒரு மைதானத்தில் கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வரும் அரவிந்த், […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பக்கத்துல விளையாடிய குழந்தை…! சிறிது நேரத்தில் பரபரப்பு… அரியலூரில் துயர சம்பவம் …!!

செந்துரை பகுதியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன்-ஜான்சிராணி தம்பதியர். இவர்களுக்கு ஹன்சிகா, தனவர்ஷிணி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சமாதி குட்டை ஏரிக்கரையில் குணபிரியன், ராஜபிரகதி, தனவர்ஷிணி, ஹன்சிகா ஆகிய நான்கு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து குணபிரியன், ஹன்சிகா, ராஜபிரகதி ஆகிய மூன்று குழந்தைகளும் ஏரியில் தவறி விழுந்தனர். இதனை கண்ட […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போ வாங்கி தர முடியாது… தொந்தரவு செய்த வாலிபர்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு..!!

தந்தை மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுத்ததால் மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோவில்பதாகை கலைஞர் நகர் 2வது தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத்திய அரசாங்கத்தின் ராணுவ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பரத்குமார் என்ற மகன் உள்ளார். பரத் அவரது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தரும்படி தொந்தரவு செய்துள்ளார். அதற்கு அவரது தந்தை இப்போது வாங்கி தர முடியாது எனவும், ஓய்வுபெற்ற […]

Categories
அரியலூர்

கள்ளத்தனமா செய்த வேலை…. ரோந்து பணியில் போலீசார்…. பெண் உட்பட 4 பேர் கைது…!!

மது விற்பனை செய்த 4 பேரை உடையார்பாளையம் அருகே காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பள்ளம் என்ற பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் பிற காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் தத்தனூர் கிராமங்களைச் சேர்ந்த உலகநாதன், சுப்பிரமணியன், கோவிந்தசாமி, வெண்ணிலா ஆகிய நால்வரும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாமிட்டையே கைய வச்சிட்டீங்களேடா…. மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் திருமங்கலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தெக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்தபின் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நடுஇரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் 15 கோவில் மணிகளை திருடி சென்றுள்ளனர். நேற்று வழக்கம்போல் பூசாரி  காலை கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சின்ன தண்ணி பிரச்சனை…. அதுக்குனு இப்படியாடா பண்ணுவ…. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

தனது வீட்டில் குடிநீர் வராத கோபத்தில் குடிநீர் தொட்டியில் விஷம் கலந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புலிவந்தி பகுதியில் பாலமுருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி மீது ஏறி நின்று ஏதோ செய்து கொண்டிருந்ததை பார்த்த பொதுமக்கள் அவரிடம் குடிநீர் தொட்டியில் ஏறிக்கொண்டு என்ன செய்கிறாய் என்று வினவியுள்ளனர். அதற்கு பாலமுருகன் தனது வீட்டில் குடிநீர் வராததால் இந்த தொட்டியில் விஷம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடியால் வந்த வினை…. கட்டிலிலிருந்து விழுந்தவர் மரணம்…. காரணம் என்ன….?

தொழிலாளி கட்டிலிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் இருக்கும் அம்மாபட்டி கிராமத்தை சார்ந்தவர் பாண்டியராஜன். இவர் சென்ட்ரிங் தொழிலாளி ஆவார். மது பழக்கத்திற்கு அடிமையானவர் இவர் 2 நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு கட்டிலில் படுத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். இதனால் இவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவருடைய உறவினர்கள் இவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காத காரணத்தினால் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் […]

Categories

Tech |