Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கேமராவில் பதிவு இருக்கு… முன்னுக்கு பின் முரணா பேசுறீங்க… சிக்கிய உண்டியல் கொள்ளையர்கள் …!!

கோவில் உண்டியலை உடைத்து திருடிய 2 வாலிபர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரகூராம்பட்டியில் தண்ணீர் பந்தல் முனியப்பன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த 29ஆம் தேதி இரவு உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இச்சம்பவம் குறித்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது அதில் இரண்டு வாலிபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து திருச்செங்கோடு ரூரல் காவல் நிலையம் புகார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சார்… இதுதான் எங்க பொழப்பு…. ப்ளீஸ் செஞ்சுகொடுங்க…. விவசாயிகள் கோரிக்கை ..!!

நெல் கொள்முதல் நிலையம் அமைத்து தருமாறு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதி விவசாயிகள் இணைந்து மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் முத்துசாமிபுரம், மேட்டுப்பட்டி, சேத்தூர் மற்றும் சோலைசேரி போன்ற கிராமங்களில் சுமார் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் நெற்பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையம் சேத்தூரில் அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு அது மிகவும் பயனுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

1இல்ல… 2இல்ல…. கூடுதலாக 30,000…. சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம் …!!

தமிழகத்திற்கு வாக்குச்சாவடி எந்திரங்கள் கூடுதலாக வர உள்ள நிலையில் அவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. தமிழக சட்டசபை பொதுத் தேர்தலானது வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெறும் என்பதால் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள் சென்னைக்கு வந்து அரசியல் கட்சி பிரதிநிதிகளோடு தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் தமிழகத்தில் 67 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அந்த பழக்கம் வேண்டாம்…! உடனே நிறுத்து…. எச்சரித்த உறவினர்… பிறகு நடந்த சோகம் ..!!

குடிப்பழக்கத்தை விடுமாறு கண்டித்ததால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஐயனார் நகரில் ஞானமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்துவந்த விஸ்வராஜ் என்பவரை காதலித்து கடந்த 5 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விஸ்வராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையான காரணத்தால் அவரது குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த விஸ்வராஜ் பிளேடால் தனது கையை அறுத்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என் கூட தானடா வந்த… நண்பன்கிட்டயே இப்படி பண்ணிட்டியே.. சேலத்தில் நடந்த சம்பவம் ..!!

நண்பரின் மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்து அதனை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கங்கவள்ளி என்ற பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார்.     இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சாயப்பட்டறை தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தங்கவேல் தன்னுடன் வேலை செய்யும் செல்வம் என்கிற தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் வந்துள்ளார். இதனையடுத்து தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்வம் சென்றபிறகு, தங்கவேல் அவரது மோட்டார் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடிக்கடி சண்டை போட்ட கணவர்…! முடிவெடுத்த மனைவி…. அனாதையான குழந்தைகள் …!!

கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மலையம்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். மாரிமுத்து தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பானுப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரொம்ப பழைய கட்டிடம்…! பலமுறை சொல்லிட்டோம்…. உயிர் தப்பிய பஞ். தலைவர்… விருதுநகரில் பரபரப்பு ..!!

பஞ்சாயத்து அலுவலகத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் உள்ளது. இந்த பஞ்சாயத்து அலுவலகமானது ஒரே ஒரு அறையில் மட்டுமே இயங்கி வருகிறது. மேலும் இந்த பஞ்சாயத்து கட்டிடம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் போதிய பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்நிலையில் புதிய பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவராக பதவி ஏற்றவர்கள் பஞ்சாயத்து கூட்டத்தின்போது புதிய […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சோதனையில் போலீஸ்… பயந்து ஓடிய நால்வர்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள  சிந்தாமணி ரோடு பகுதியில் வந்த வாகனங்களை காவல் துறையினர் நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர். அச்சமயத்தில் இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் அவ்வழியாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்திய போது  அவர்கள் கீரைத்துறை பசும்பொன் நகரை சார்ந்த ராமகிருஷ்ணன், குமாரவேல், அனுப்பாண்டி, காளீஸ்வரன் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குறுக்கே பாய்ந்த நாய்…. தடுமாறிய மோட்டார் சைக்கிள்… நேர்ந்த சோகம்…!!

நாய் குறுக்கே சென்றதால் கேஸ் சிலிண்டேர் கம்பெனி ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள அழகிச்சிப்பட்டியை சார்ந்தவர் சுதாகர். இவர் தனியார் கேஸ் சிலிண்டர் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று சுதாகர் வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது நாய்தான்ப்பட்டி என்னும் ஊருக்கு அருகில் நாய் ஒன்று சாலையின் குறுக்கே பாய்ந்தது. இதில் சுதாகர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்பு அவர் மதுரை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பயிர்களை காப்பாற்ற மின் வேலி… சிக்கிய ஆண் யானை… வனத்துறையினர் விசாரணை…!!

உயர் மின் அழுத்தம் தாக்கி யானை இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் தென்னமநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் ஆறுச்சாமி. இவர் குளத்தேரிப் பகுதியில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் நெற்பயிர்களை பயிரிட்டு இருந்தார். நெற்பயிர் நன்கு வளர்ந்த நிலையில் இருக்கும் போது யானை அல்லது காட்டுப்பன்றிகளிடமிருந்து நெற்பயிரை காப்பாற்ற தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார். இந்நிலையில் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் இருந்து 15 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு யானைகள் வெளியேறியது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

திருப்பதி போயிட்டு வந்தவருக்கு….! காத்திருந்த அதிர்ச்சி…. நொந்து போன உரிமையாளர்…. போலீஸ் விசாரணை ..!!

கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இருந்த பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பராங்குசம் தெருவில் முரளி என்பவர் வசித்துவருகிறார். இவர் மன்னார்குடி பழைய பேருந்து நிறுத்தம் அருகே ஒரு செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முரளி திருப்பதிக்கு சென்று விட்டார். இந்நிலையில் முரளி ஊரில் இருந்து திரும்பி வந்து கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சார்..! அங்க விக்குறாங்க…! போலிஸுக்கு வந்த தகவல்…. வசமாக சிக்கிய 2பேர் கைது …!!

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக மருத்துவ கல்லூரி காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார், புதிய பேருந்து நிலையம் பகுதியில் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் சந்தேகப்படும் வகையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்த போது, அந்த நபர் சாமந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் சரிந்த யானை…! ஓடி வந்து பார்த்த பொதுமக்களுக்கு ஷாக்…! போலீஸ் தீவிர விசாரணை …!!

உயர் மின்னழுத்தம் பாய்ந்து காட்டு யானை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தென்னமநல்லூரில் துரை(எ)ஆறு சாமி வசித்துவருகிறார். இவர் குளத்தெரி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நெற்பயிர்களை பயிரிட்டுள்ளார். இந்த நெற்பயிர்களை காட்டுப்பன்றி மற்றும் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்கும் வண்ணம் அவரது தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 15 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் யானைகள் போளுவாம்பட்டி வன சரகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வெறும் 3பேர் தான் வராங்க…! ”தலைகீழாக மாறிய பயணம்” காரணம் என்ன ? ரயில்வே நிர்வாகம் புலம்பல் …!!

பாசஞ்சர் ரயிலானது எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றமடைந்ததால், பொதுமக்களுக்கு இதில் பயணிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பின் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு காரணமாக ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இந்நிலையில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயிலான,  திருச்சி-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அதோடு எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் அடைந்த இந்த ரயிலில் தற்போதுள்ள நடைமுறையின்படி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இப்போல்லாம் யாரும் வரல…! போலீஸ் விரட்டணும்…. சமாளிக்க முடில…. ஈ ஆடும் பார்கள் …!!

பார்களில் மது பிரியர்கள் கூட்டம் இல்லாததால் பார் உரிமையாளர்கள் சிரமத்தில் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 8 மாதங்கள் டாஸ்மாக் மது பார்கள் மூடப்பட்டு இருந்தன. எனவே அனைத்து பார்களை திறக்க வேண்டும் என உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்ததையடுத்து பார்கள் திறக்கப்பட்டாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மொத்தம் 3,2௦௦ பார்கள் செயல்பட்டாலும், விற்பனையானது மந்தமாகவே உள்ளது. மேலும் புத்தாண்டன்று விற்பனையானது பல […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கொரோனா ஆய்வகத்தில் தீ விபத்து… வெடித்து சிதறிய சோதனை மாதிரிகள்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

 அரசு மருத்துவமனையில் ஏ.சி வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா  பரிசோதனை ஆய்வகம் அமைந்துள்ள ஆர்என்ஏ கண்டறியும் ஆய்வகத்தில் இருந்த ஏசி எந்திரம் வெடித்ததில் ஆய்வகம் தீ பற்றி எரிந்தது. ஆய்வகம் முழுவதும் ஆல்கஹால் கலந்த சோதனை மாதிரிகள் அதிகம் இருந்ததால் அவை அனைத்தும் வெடித்து புகைமூட்டமாகியது. இதனையடுத்த மருத்துவமனை ஊழியர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிருஸ்துவ ஆலயத்தில்…. உண்டியல் உடைப்பு…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி…!!

கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியலை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் அச்சுகிராமம் பகுதியில் மயிலாடியில் கிறிஸ்துவ ஆலயம் ஒன்று உள்ளது. அங்கு ஞாயிற்றுக்கிழமை மாலை ஆலயத்தைப் பூட்டி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் ஊழியர்கள் வழக்கம்போல் நேற்று காலை ஆலயத்தை திறப்பதற்காக வந்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பின் அவர்கள் ஆலயத்திற்குள் சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் உள்ள பணம் திருடப்பட்டு இருந்ததை கண்டார். மேலும் செபரூதின் […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…! மக்களுக்கு எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு …!!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் இன்று திறக்கப்படுகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புற நகரில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனைதொடர்ந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உங்களுக்கு அது தான் முக்கியமா ? நொந்து போன மனைவி… கணவன் எடுத்த வீபரீத முடிவு …!!

மனைவி வீட்டை விட்டு வெளியேறியதால் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டத்தில் ஷைபின் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் மராட்டிய மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபினா என்பவருக்கும் முகநூலில் காதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இதனை அடுத்து ஷைபினுக்கு குடிப்பழக்கம் இருப்பது அபினாவிற்க்கு தெரியவர, கணவன் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தீடிரென வெடித்த AC…! பதற்றமான அரசு மருத்துவமனை….! விழுப்புரதில் பரபரப்பு …!!

ஏசி எந்திரம் வெடித்து சிதறியதில் மருத்துவமனை ஆய்வகம் முழுவதும் தீக்கிரையான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் கொரோனா பரிசோதனை ஆய்வகம் உள்ளது.  இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள ஆர்.என்.ஏ கண்டறியும் ஆய்வகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏசி எந்திரம் திடீரென வெடித்து சிதறியதில் அந்த ஆய்வகம் முழுவதும் தீக்கிரையானது. அதோடு ஆய்வகத்தில் ஆல்கஹால் கலந்த சோதனை மாதிரிகள் வைக்கப்பட்டிருந்ததால் அவை வெடித்து அந்த இடமே […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலுக்கு சென்ற ஜெயபால்….. வீட்டுக்கு திரும்பும் வழியில் அதிர்ச்சி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தார்…!!

வயலில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய விவசாயி ஓட்டிய மொபட் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் மாவட்டத்திலுள்ள சாணக்கியாபுரத்தில் ஜெயபால் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவர் கல்லகம் கிராமத்தில் உள்ள அவரது வயலுக்கு சென்று விட்டு திரும்ப மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, அரியலூரில் இருந்து பாடலூருக்கு சரக்கு ஏற்றி வந்த டிப்பர் லாரி ஜெயபாலின் மொபட் மீது மோதியது.  இதில் படுகாயமடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஹலோ..! உங்களுக்கு ஆஃபர் இருக்கு…! 15பெண்கள் செய்த செயல்… போலீஸ் விசாரணையில் பகீர் ..!!

தனியார் நிறுவனம்,என கூறி பொதுமக்களை ஏமாற்றிய போலி கால் சென்டரில் இருந்த 15 இளம்பெண்களை போலீசார் எச்சரித்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் என்ற பகுதியில் உள்ள இளம்பெண்கள், தாங்கள் தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அங்கு நூறு நபர்களில் செல்போன் எண்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து செல்போன் மற்றும் பவர் பேங்க் உள்ளிட்டவைகளை குறைந்த விலையில் தருவதாகவும் கூறி வந்துள்ளனர். அதோடு குலுக்கல்முறையில் விழுந்த இப்பரிசுகளை குறைந்த பணத்தை செலுத்திவிட்டு தபால் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 1/2வயது குழந்தைக்கு…! என்ன தெரியும் ? அலட்சியத்தால் பறி போன உயிர்… திருச்சியில் சோகம் …!!

ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை  குடித்த குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் உள்ள காமாட்சி பட்டி பகுதியில் சதீஷ்குமார் -சுகன்யா என்ற தம்பதிகள் வசித்து வருகின்றனர். சதீஷ்குமார் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஜீவா என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளார். இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மண்ணெண்ணையை ஜூஸ் என தவறுதலாக நினைத்து குடித்து விட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அக்குழந்தையை மீட்டு உடனடியாக திருச்சி […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கரூரில் அதிரடி வேட்டை ..! சோதனையில் இறங்கிய போலிஸ்… வசமாக சிக்கிய 11பேர்…!!

புகையிலை பொருட்கள் விற்பனை செய்த குற்றதிற்காக போலீசார் 11 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம், வெங்கமேடு, வாங்கல், தாந்தோனிமலை ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு இடங்கள் மற்றும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அச்சோதனையின்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் 11 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் வீட்டிலே கொள்ளை ? மாயமான 34பவுன் நகை… எஸ்.ஐ பரபரப்பு புகார் …!!

சப்-இன்ஸ்பெக்டர் தனது வீட்டில் 34 பவுன் நகைகளை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பில் செல்லத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் சப்-இன்ஸ்பெக்டராக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் செல்லத்துரை திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் செல்லத்துரை தனது வீட்டில் 50 பவுன் நகையை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனது சொந்த ஊரான தென்காசி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை…. அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. ஒட்டுமொத்தமாக தடை உத்தரவு

குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி மற்றும்  பழைய குற்றாலம் போன்ற அனைத்து அருவிகளிலும் போதியளவு தண்ணீர் விழுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் குற்றாலம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவில் முன் பைக் திருட்டு… வாகன சோதனையில் சிக்கிய இருவர்… போலீஸ் விசாரணை…!!

இரண்டு சக்கர வாகனத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் கோவிலின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அதன்பின்பு வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனதை அறிந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காளிதாஸ் பேரையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனம் திருடிய நபர்களை தேடிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் வாகன […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜாக்கிரதையா இருக்கணும்…. உடனே இதெல்லாம் பண்ணுங்க…. அதிகாரிகளின் அறிவுரை…!!

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்  கோவை மாவட்டத்தில் உள்ள  சுல்தான் பேட்டை பகுதியில்  டெங்கு காய்ச்சலை தடுக்கும் பொருட்டு சுகாதாரத்துறையினர் மற்றும் ஒன்றிய நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனைப்பற்றி சுல்தான்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா மற்றும் வட்டாட்சியர் குழந்தைசாமி ஆகியவர்கள் கூறியதாவது. ப்ளீச்சிங் பவுடர் மற்றும் நாரால் நீர் சேமிக்கும் கலன்களை நன்கு தேய்த்து கழுவி பின் தண்ணீர் பிடித்து  மூடி வைக்க வேண்டும். இதை செய்வதினால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மகளோட வாழ்க்கை போச்சு… சண்டை போட்டு கொண்ட பெற்றோர்… தாய் எடுத்த முடிவு…!!

மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள செருவாமணி தெற்கு தெருவில் முருகானந்தம் மற்றும் அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் லாவண்யாவிற்கும் அதே பகுதியில் வசித்த வாலிபருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இதனால் மனமுடைந்த அகிலா தனது மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று என்று கூறி கணவரிடம் கூறிய பொது […]

Categories
திண்டுக்கல் திருச்சி மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்து… டீக்கடைக்குள் புகுந்த டிராக்டர்… தப்பி ஓடிய ஓட்டுனர்…!!

சாலையில் சென்று கொண்டிருந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து டீக்கடைக்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு டிராக்டர் ஒன்று திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நள்ளிரவில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது திருச்சி மாவட்டத்திலுள்ள மரவனூர் பகுதியில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விட்டது. இதனையடுத்து திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அணுகு சாலையில் டிராக்டர் இறங்கியது. அதோடு கட்டுப்பாட்டை இழந்த டிராக்டரானது அப்பகுதியில் இருந்த இரு கடைகளின் முன்புறம் மோதியதோடு கணபதி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓட்டை பிரித்து திருட முயற்சி… கடையை காப்பாற்றிய மர ரீப்பர்… பரபரப்பை ஏற்ப்படுத்திய சம்பவம்…!!

கடையின் ஓட்டை பிரித்து கொள்ளை அடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் முக்கன்  செட்டி தெருவில் முகமது இசாக் என்பவர் வசித்து வருகிறார். இவர் வல்லம் கடைவீதியில் பெட்டிக்கடை மற்றும் பஞ்சர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு கடையை அடைத்துவிட்டு மறுநாள் காலை சென்று கடையை திறந்தபோது கடைக்குள் மழைநீர் தேங்கி கிடப்பதை கண்டார். அதன் பின் மேலே பார்த்தபோது கடையில் உள்ள ஓடுகள் பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

உடல் நலம் பாதிப்பு… வாழ்கையில் விரக்தி… பெண் எடுத்த முடிவு…!!

உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் என்ற பகுதியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவியும், 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர். அழகிரியின் 4 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அழகிரி இறந்துவிட்டதால்  கமலம் தன்னுடைய மகனுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக கமலத்திற்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அசந்த நேரத்தில்… மருந்து கடையில் திருட்டு… கல் தடுக்கியதால் சிக்கிய வாலிபர்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருந்து கடையில் திருடிய வாலிபனை போலீசார் கைது செய்தனர் பாண்டியம்மாள் என்பவர் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வசந்த நகர் பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். கடைக்கு வெளியே ஒருவரை பார்ப்பதற்காக கல்லாவை பூட்டி விட்டு கடையிலிருந்து சென்றிருக்கிறார். இவர் வெளியில் செல்வதை அருகில் இருந்து நோட்டமிட்ட 2 வாலிபர்கள் கடைக்குள் சென்று கல்லாவை திறந்து அதில் இருக்கும் 1100 ரூ பணத்தை எடுத்து கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். பாண்டியம்மாள் கடையிலிருந்து வெளியே வருபவர்களை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேருந்து நிலையம் அருகே… காவல்துறைக்கு கிடைத்த தகவல்… 4 பேர் கைது..!!

கஞ்சா விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பஸ் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தாவிற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்து வந்துள்ளனர். அப்போது பூசாரிக்குளத்தை சார்ந்த விஜய் என்பவரும் பூமாலைப்பட்டி சார்ந்த சரவணகுமார் என்பவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை […]

Categories
Uncategorized மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கடன் கட்ட முடியல …. வேதனையில் பெண்….எடுத்த விபரீத முடிவு….!!

கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன்-பரமேஸ்வரி தம்பதியினர். பரமேஸ்வரி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்த நிலையில் இவர் அண்மையில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இதனால் அவர்  மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார். இந்நிலையில்  மனமுடைந்த பரமேஸ்வரி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். நெருப்பின் வெப்பத்தை தாங்கமுடியாத காரணத்தினால் பரமேஸ்வரி கூச்சலிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

நோய் பரவும் அபாயம்… பாதிக்கப்படும் பொதுமக்கள்… சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் கரூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் கிழக்கு சாலையில் அனைத்து குப்பைகளும் கொட்டப்படுகின்றன. அதோடு அங்குள்ள திருமண மண்டபத்திலிருந்து வாழை மரங்கள், சாப்பிட்ட இலைகள் என பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் அதே இடத்தில் கொட்டப்படுகின்றன. இந்நிலையில் அள்ளப்படாத குப்பைகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அதோடு இப்பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் தனிப்பட்ட நபர் ஒருவர் சில சமயங்களில் தீவைத்து எரித்து விடுவதால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்த இழப்புகள்… கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்… அரசின் நடவடிக்கை…!!

பாதிக்கப்பட்ட பயிர்களுக்கான நிவாரணம் வழங்கப்படும் நிலையில், மேலும் பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி போன்றவை 1 லட்சத்து 48 ஆயிரத்து 476 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு பின் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள அனேக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு புரவி புயல் மற்றும் நிவர் புயல் காரணமாக தொடர்ந்து பெய்த கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வயல்களில் மழை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பயமில்லாமல் விற்பனை” வசமாக சிக்கிய மூவர்… பறிமுதல் செய்த போலீசார்.!!

லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மூன்று பேரை காவல்துறை கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் என்ற பகுதியில் அப்பகுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு சிலர் லாட்டரி சீட்டுகளை  பொது இடத்தில் வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இந்நிலையில் வேலூரை சேர்ந்த சுந்தரம் என்பவர் அண்ணா சிலை அருகிலும், வெண்மணி என்ற கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் போளூர் பஸ் நிலையம் அருகிலும், […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இரக்கமற்ற இளம்பெண்… மயங்கி கிடந்த மூதாட்டி.. அதிர்ச்சி அடைந்த மகள்…!!

மூதாட்டியை தாக்கிவிட்டு நகை மற்றும் பணத்தை பறித்த இளம்பெண் கைது செய்யப்பட்டார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சேரபனஞ்செரி நாவலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் காசாம்பூ என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருடைய மகள் துளசி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் துளசி அவரது தாயை பார்க்க நாவலூர் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு காசாம்பூ சமையலறையில் தலையில் காயத்துடன் மயங்கி கிடந்த நிலையில் இருந்ததை கண்டு துளசி அதிர்ச்சி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊருக்குள் புகுந்து அட்டகாசம்… அலறி அடித்து ஓடிய கால்நடைகள்… பீதியில் பொதுமக்கள்…!!

வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்த சிறுத்தைப்புலி மேய்ந்து கொண்டிருந்த மாட்டை அடித்துக் கொன்ற சம்பவம் மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டத்திலுள்ள நாயக்கன் சோலை என்ற பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியிலிருந்து காட்டு யானை, சிறுத்தை புலி போன்ற பல்வேறு வனவிலங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கின்றன. இப்பகுதியில் வசிக்கும் ராஜரத்தினம் என்பவர் ஏராளமான கால்நடைகளை வளர்த்து கொண்டிருக்கிறார். அவரது கால்நடைகள் அப்பகுதியில் உள்ள புல்வெளிக்கு சென்று மேய்ந்து […]

Categories
Uncategorized சென்னை மாவட்ட செய்திகள்

“இதை மட்டும் வளர்க்காதீங்க” மீறினால் நடவடிக்கை… போலீசார் எச்சரிக்கை…!!

மலை கிளி குஞ்சுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக ஐவரை போலீசார் கைது செய்ததோடு, கிளி குஞ்சுகளையும் பறிமுதல் செய்தனர். சென்னை மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆன்லைன் மூலமாகவும், சந்தைகளிலும் மலைப் பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.  இதனையடுத்து வனத்துறையினர் கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசன் என்பவரது தலைமையில் சந்தைக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வனத்துறை அதிகாரிகள் சில நாட்களே ஆன மலை கிளிகளின் குஞ்சுகள் விற்பனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதுப்பிக்கும் பணி… தவறி விழுந்த தொழிலாளி… பலனளிக்காத சிகிச்சை… நேர்ந்த துயரம்…!!

மாடியிலிருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.  இந்த பணியில் பல்லாவரத்தில் வசிக்கும் பாஸ்கர் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, கடந்த சில நாட்களுக்கு முன் பாஸ்கர் திடீரென  மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கரை மீட்டு,உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பயிர்களை தாக்கிய குலை நோய்… சோகத்தில் மூழ்கிய விவசாயிகள்… நிவாரணம் தர வேண்டி கோரிக்கை…!!

நெற்பயிர்களை குலை நோய் தாக்கியதால் உரிய நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் கிராமத்தில் நெல் சாகுபடியானது 300க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து பயிர்களையும் குலை நோய் தாக்கி சுமார் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்பயிர்கள் இந்நோயால் சேதம் அடைந்துள்ளது. இதனையடுத்து காரியாபட்டி வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் இந்நோய் குறித்து தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து வேளாண் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோதிய இருசக்கர வாகனங்கள்… தூக்கி வீசப்பட்ட இருவர்… நேர்ந்த துயர சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருகப்பட்டியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன ஊழியராக ஓசூரில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இளங்கோவன் புலியூர்-ஊத்தங்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தது.அதே வழியாக  கேரிகேப்பள்ளியில் வசிக்கும் விவசாயியான செல்வம் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக இருவரது வாகனங்களும் மோதி கொண்டது. இதனால் சம்பவ இடத்திலேயே இளங்கோவன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து திருட்டு… 31 பவுன் நகை மற்றும் பணம்… மர்ம நபர்களின் கைவரிசை…!!

வீட்டின் பூட்டை உடைத்து  நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னம் பாளையத்தில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். ராஜன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியூருக்கு சென்று விட்டார். இந்நிலையில் தனது ஊரிலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது.  இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூபாய் 1 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை பண்ணிருக்கு… இந்த வேலையெல்லாம் செய்யாதீங்க… ஓய்வு பெற்ற தொழிலாளி எடுத்த முடிவு…!!

இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் ஓய்வு பெற்ற தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நாராயணசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து பின் ஓய்வு பெற்றார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாராயணசாமிக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதனால் கடினமான வேலைகளை செய்யக் கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த ஊரில் உள்ள தோட்டத்தில் நாராயணசாமி தூக்கிட்டு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மாடியில் விழுந்துவிட்டது… பந்தை எடுக்க சென்ற போது… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்…!!

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஸ்டார்லேன் என்ற தெருவில் பிராங்கிளின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தனது குடும்பத்துடன் அழகப்பபுரத்திற்கு வந்துள்ளார். இவருக்கு அன்பரசு இம்மானுவேல் என்ற மூன்றாம் வகுப்பு படிக்கும் மகன்  இருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி தனது வீட்டின் அருகே அன்பரசு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பல் துலக்கும் போது…. கோவிலில் நடந்த சம்பவம்… காவலாளிக்கு நேர்ந்த சோகம்…!!

காவலாளி கிணற்றுக்குள் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் திருமலைநம்பி என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோவில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இரவு நேர பணி முடிந்து அதிகாலையில் அக்கோவிலின் கிணற்றின் பக்கத்தில் நின்றுகொண்டு பல் துலக்கி கொண்டு இருந்த போது, திருமலைநம்பி கிணற்றுக்குள் எதிர்பாராவிதமாக தவறி விழுந்தார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கிணற்று […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

6 மணி நேர போராட்டம்… பல அடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எறிந்த தீ…. தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பயன்பாட்டில் இல்லாத  அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை 6 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான அணுமின் நிலையம் ஒன்று செயல்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இங்கு பராமரிப்பு பணிகள் மட்டும் அவ்வபோது நடைபெறுகிறது. இந்நிலையில் அணுமின் நிலையத்தில் உள்ள மின் ஒயர் மற்றும்  எண்ணெய் போன்றவற்றில் திடீரென தீ பற்றியதால் பல அடி உயரத்துக்கு தீயானது கொழுந்துவிட்டு எரிந்து, அப்பகுதியே கரும் புகையால் சூழ்ந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் தந்தை-மகன்…. புகையிலை பொருட்கள் கடத்தல்… கைது செய்த போலீஸ்…!!

மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் சேலம் மாவட்டத்திலுள்ள பால் மார்க்கெட் என்ற பகுதியில் செவ்வாய்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அவ்வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது ஒருவர் லாங்கிலி ரோடு என்ற பகுதியை சேர்ந்த மந்தாரம் என்பதும், மற்றொருவர் அவரது மகன் பரத்மாலிக் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது சந்தேகமடைந்த […]

Categories

Tech |