Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முகக்கவசம் இல்லை…. 52 பேர் மீது வழக்கு…. 10,400 ரூபாய் அபராதம்…!!

முகக் கவசம் அணியாத 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 10,400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி பொது மக்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனை அடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வந்த 52 பொதுமக்கள் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

காலம் மாறிப்போச்சு…. சாராயம் விற்ற மூதாட்டி… மடக்கி பிடித்த போலீஸ்…!!

சாராயம் விற்பனை செய்த மூதாட்டியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான குழு அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. அப்போது குப்பு என்னும் மூதாட்டி சாராயம் காய்ச்சி விற்பது தெரியவந்தது. இதனையடுத்து மூதாட்டியை போலீசார் உடனடியாக மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்த சாராயத்தையும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வியக்க வைக்கும் திறமை….! இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்…! ஆச்சரியமூட்டும் 3 வயது சிறுவன்…!

3 வயது சிறுவன் 53 உலக நாடுகளின் தலைநகரங்களில் பெயர்களை சரளமாக ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புதூர் கிராமத்தில் தர்மபாலா-முத்துலட்சுமி என்ற தம்பதிகள் வசித்து வருகின்றன. ஹோட்டல் உரிமையாளரான தர்மபாலாக்கு அகரன், ஆதவன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில் தர்மபாலாவின் இளைய மகனான ஆதவன் இந்தியாவின் 36 மாநிலங்களின் தலைநகரங்களின் பெயர்களை 48 வினாடிகளில் ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். மேலும் இவர் 53 உலக நாடுகளின் தலைநகரங்கள், தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை, ஆங்கில மாதங்கள், […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மக்களின் கனவு நனவாகியது…! தமிழகத்தின் 38வது மாவட்டம்…! உதயமானது மயிலாடுதுறை…!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை தனியாகப் பிரித்து புதிய மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார் தமிழ்நாட்டில் முதலில் 32 மாவட்டங்கள் இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தில் இருந்து தனியாகப் பிரிந்து தென்காசி மாவட்டம் உருவானது. அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையும், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் தனியாக பிரிந்து ஆக மொத்தம் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இப்புதிய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எச்சரிக்கையாக இருங்கள்”- யானைகள் நடமாட்டம் அதிகம்…! அரை மணி நேரம் தவித்த மக்கள்…!

வனப்பகுதி சாலையில் யானைகள் கூட்டமாக சுற்றித் திரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர் ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் இருக்கின்றன. இவ் வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, மான் உட்பட பல்வேறு வகையான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி இவ்வனப்பகுதியில் அமைந்துள்ள சாலைகளை கடந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளது.இந்நிலையில் பகல் 11:30 மணி அளவில் ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“ராஜ வீதியை காணவில்லை” வடிவேலு கதையா இருக்கு…. ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!

ராஜ விதியை காணவில்லை எனக் கூறி கிராம மக்கள் அனைவரும் இணைந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு மாமன்னன் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்தான். மாமன்னன் ராஜேந்திர சோழன் மாளிகைமேட்டில் உள்ள தனது அரண்மனையில் இருந்து பிரகதீஸ்வரர் கோவில் செல்லும் வழியில் ஒரு கணக்க விநாயகர் கோவிலை கட்டி வழிபட்டுள்ளார். மன்னன் முதலில் விநாயகரை வழிபட்ட பின்னரே ராஜவீதி வழியாக பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தம்பதிகளின் அன்பு… கணவன் இறந்த செய்தி… இரவே உயிரை விட்ட மனைவி…!!

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் அதே நாளில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் ஏழுமலை-ராஜம்மாள் தம்பதி வசித்து வந்துள்ளனர்.  இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அம்பத்தூரில் உள்ள ஏரியில் ஏழுமலை மீன் பிடித்தும்,  அவரது மனைவி ராஜம்மாள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்தும் வாழ்ந்து வந்தனர்.  இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தனர். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“அப்பா அம்மா சண்டை போடுறாங்க” 14 வயது சிறுமி எடுத்த முடிவு… முழுவதுமாக சோகத்தில் ஆழ்ந்த குடும்பம்…!!

பெற்றோர்கள் சண்டையிட்டதால் 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் பலாத்காரக் தெருவில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார்.  ஜீவானந்தத்திற்கு சினேகா என்ற ஒரு மகள் உள்ளார்.  14 வயதான சினேகா தற்போது ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில் ஜீவானந்தத்திற்கும்,  சினேகாவின் தாயார் சீதாவிற்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை நடந்துள்ளது. தனது பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதை பார்த்த சினேகா மிகவும் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சுகாதார சீர்கேடு…! குவிந்து கிடக்கும் குப்பைகள்…! முகம் சுளிக்கும் வியாபாரிகள்…!

சாலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுவதால் குப்பை தொட்டி அமைத்து தர வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காதர் பேட்டை ஆடை விற்பனைக்கு பெயர் பெற்றது.  இவ்விடத்திற்கு தினமும் ஏராளமான வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.  இவ்விடத்தில் சில்லறை மற்றும் மொத்த ஆடை விற்பனை கடைகள் செயல்படுகிறது.  இக்காரணத்தினால் கடையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.  ஆனால் மிகவும் பிரபலமான இவ்விடத்தில் குப்பைத்தொட்டி வசதி இல்லை. […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

பழுதடைந்த சிலிண்டர்…. வீட்டிற்கு கொண்டு வந்ததால்… நேர்ந்த துயர சம்பவம்….!!

பழுதடைந்த சிலிண்டர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவிலில் வசித்து வருபவர் வைகுண்டம்.  இவருக்கு திருமணம் ஆகவில்லை. வைகுண்டம் அப்பகுதியில் உள்ள ஒரு சமையல் எரிவாயு ஏஜென்சியில் வேலை பார்த்து வந்தார்.  அதே ஏஜென்சியில் திருவேங்கடத்தை சேர்ந்த பசுபதி பாண்டியன் என்பவரும் தாழையூத்தை சேர்ந்த காளி என்பவரும் சிலிண்டர் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  இந்நிலையில் பழுதடைந்த ஒரு சிலிண்டரை பசுபதி பாண்டியன் மற்றும் காளி ஆகியோர் வைகுண்டம் வீட்டிற்கு லோடு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் குளியல்…. தண்ணீரில் மூழ்கிய 8ஆம் வகுப்பு மாணவன்…. திருவள்ளூரில் சோகம்….!!

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தண்ணீர் குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தட்சிணாமூர்த்தி.  இவருக்கு சந்தோஷ் என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளான்.  இந்நிலையில் கிருஷ்ணா கால்வாய்க்கு சந்தோஷ் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். சந்தோஷ் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென நீரால் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிகழ்வை கரையிலிருந்து கண்டவர்கள் நீரில் குதித்து சந்தோஷை மீட்டு உடனடியாக திருவள்ளூர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“என்ன கல்யாணம் பண்ணிக்கோ” 14 வயது சிறுமிக்கு தொந்தரவு… போக்சோவில் தள்ளிய தாய்….!!

14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் பகுதியில் கூலி வேலை பார்த்து வரும் சடையன் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு பெரியசாமி என்ற ஒரு மகன் உள்ளார்.  பெரியசாமி அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமியை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். பெரியசாமி கட்டாயப்படுத்தியதை அச்சிறுமி தனது அம்மாவிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து  சிறுமியின் தாயார் […]

Categories
கேரளா மாநிலம் தேசிய செய்திகள்

“மின்சாரம் பாய்ந்தது” 51 வயது மனைவி கொலை…! 28 வயது கணவன் வாக்குமூலம்…!

28 வயது கணவர் தனது 51 வயது மனைவியைகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கேரள மாநிலத்தில் கோர கோணம் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ஷஹாகுமாரி மற்றும் அருண். இவ்விருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். ஆனால் ஷஹாகுமாரிக்கு 51 வயது மற்றும் அருணுக்கு 28 வயது என்று இவர்கள் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் பெரிய அளவில் இருந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் இருவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.  திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“அரசு பஸ்ஸில் கஞ்சா” போலீசின் அதிரடி சோதனை…. இருவர் கைது…!!

ஆந்திர மாநில அரசு பேருந்தில் கஞ்சா கடத்திய இரு வாலிபர்களை கும்மிடிப்பூண்டி அருகில் போலீசார் கைது செய்தனர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எளாவூரில் ஊரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் அவர்களின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வாகனங்களை சோதனை செய்தார். அப்போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஆந்திர மாநில பேருந்து ஒன்றை நிறுத்தினார். பேருந்தில் சந்தேகப்படும்படியாக இருந்த இரண்டு வாலிபர்களை கண்டனர். பின்னர் அரசு பஸ்சின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலியான போலீஸ்” முக்கிய நபருக்கு வலைவீச்சு… சிக்கிய இருவர்…!!!

பிரபல தொழிலதிபரின் வீட்டில் போலீஸ் எனக்கூறி கொள்ளையடித்த கும்பலை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை மாவட்டம் கேகே நகரில் பிரபல தொழிலதிபர் பாண்டியன் வசித்து வருகிறார்.  இவரது வீட்டிற்குள் கடந்த ஒன்பதாம் தேதி ஒரு மர்ம கும்பல் அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் தாங்கள் சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் என கூறிவிட்டு அங்கிருந்த 12 லட்சம் ரொக்கம் மற்றும் 45 பவுன் நகையை திருடிவிட்டு தப்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

ஆற்றில் மூழ்கி மாணவர் பலி…! நண்பர்கள் கண்முன்னே நடந்த விபரீதம்…!

நண்பர்களுடன் ஆற்றிற்கு குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் கோவுலாபுரம் கிராமத்தில் குமரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரத் என்னும் மகன் இருந்தார்.  பரத் அயன்வேலூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார்.  பரத் விடுமுறை தினமான நேற்று மதியம் நண்பர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். அங்கு ஆற்றில் குளிக்கும்போது திடீரென பரத்தை காணவில்லை. இதனையடுத்து பரத் நீரில் மூழ்கியதை அறிந்த அவரது சக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“தொந்தரவு செய்யறாங்க” புகார் கொடுத்தும் பலனில்லை…. குழந்தைகள் கதர… ஆட்டோ ஓட்டுனர் செய்த செயல்…!

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு  மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் கிறிஸ்மஸ் தினத்தன்று தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகம் முன்பு சென்று தீக்குளிக்க முயன்றார்.  அப்போது அவர் தன் மீதும் பிள்ளைகள் மீதும் பெட்ரோல் ஊத்தியுள்ளார். இதில் குழந்தைகளின் கண்ணில் பெட்ரோல் பட்டதால் அவர்கள் கதறி அழுதனர்.  பின்னர் ஜீவானந்தம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” துணியால் கழுத்து இறுக்கி… காதல் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்… கணவனுக்கு வலைவீச்சு…!!

குடும்ப தகராறில் காதல் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  தென்காசி மாவட்டத்திலுள்ள  சுரண்டையில் வேல்சாமி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகள் பூங்கோதை திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அங்கு பூங்கோதைக்கும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜோகிந்தர் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மாவட்ட கலெக்டரின் அறிவிப்பு… புகார் இருந்தால் தெரிவிக்கலாம்…!!

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு பெறுவதில் ஏதேனும் குறைபாடு இருந்தால் புகார் கொடுக்கலாம் என விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார் பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, 20 கிராம் முந்திரி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு போன்ற பொருட்கள் மற்றும் ரூபாய் 2500 ரொக்கம் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு வழங்குவதற்கான முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து […]

Categories
தூத்துக்குடி

காப்பீட்டுத் தொகை எங்கே….? விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ்…. அம்மன் படத்துடன் அங்கப்பிரதட்சணம்….!!

விவசாயிகளுக்கான பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி காங்கிரஸ் கட்சியினர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தாலுகாவிற்கு  உட்பட்டு சங்கரபேரி, இளவேளங்கால் போன்ற பல்வேறு கிராமங்கள் உள்ளது. இக்கிராமங்களில் வெங்காயம், மக்காச்சோளம்,  உளுந்து,  பருத்தி,  நெல் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டனர். இந்நிலையில் பருவமழை தாமதமாக பெய்தது  மட்டுமல்லாமல் பயிர்களை படைபுழு நோய் மற்றும் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. இதனிடையே பயிர் காப்பீடு செய்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம்… குடிக்கு அடிமை… கண்டித்த தாய்… புதுமாப்பிள்ளை எடுத்த முடிவு….!

மது அருந்திவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் ரகுராம் என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனியார் பஸ் டிரைவராக மேட்டுப்பாளையம் பகுதியில் வேலை செய்து வந்தார். ரகுராம் தான் காதலித்த நர்மதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தான் ரகுராமிற்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்தது அவரது வீட்டிற்கும் நர்மதாவிற்கும் தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் […]

Categories
மதுரை

15 நிமிடம் தான்…. ஹெலிகாப்டரில் போகலாம்… மதுரை மக்களுக்கு ஒரு இன்பச் செய்தி…!!

தனியார் நிறுவனம் சார்பில் மதுரையை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் நிறுவனம் மற்றும் பொறியியல் கல்லூரி ஒன்று இணைந்து ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளனர்.  மதுரை முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களான அழகர்கோவில் , ஒத்தக்கடை மதுரை மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம்,  கீழக்குயில் குடியில் உள்ள புராண சின்னங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சுமார் 15 நிமிடத்தில் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பயணிக்கும் ஒருவருக்கு ரூபாய் 6000 […]

Categories
நாகப்பட்டினம்

நிலம் கிடைச்சிட்டு…. தந்தையை வெளியேற்றிய மகன்… சப்-கலெக்டரின் அதிரடி செயல்…!!

நிலத்தை வாங்கிவிட்டு  தந்தையை வீட்டை விட்டு வெளியேற்றிய மகனின் நில உரிமையை சப்-கலெக்டர் ரத்து செய்தார் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் ரத்தினவேலு என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு 2  மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.  கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி ரத்தினவேலு தனக்கு சொந்தமான 2 ஏக்கர் 7 சென்ட் நிலத்தை தானம் செட்டில்மெண்ட் ஆவணம் மூலம் தனது இளைய மகனாகிய ஆனந்த் என்பவரின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். […]

Categories
தூத்துக்குடி

எங்களோட பொழப்பே இதுதான்…! மண்ணை அள்ளி போட்ட தேமல் நோய்… கண்ணீரில் விவசாயிகள் ….!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே பயிரிடப்பட்ட உளுந்து பாசிப்பயிறு பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நாகம்பட்டி கிராமத்தில் உளுந்து மற்றும் பாசிப் பயிறு பயிர்களை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் இப்பயிர்களை மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. கிட்டத்தட்ட இக்கிராமத்தில் மட்டும் 847 ஏக்கரில் இப்பயிர் பயிரிடப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்ததால் ஏராளமான பயிர்கள் வீணாயின. இந்நிலையில் மீண்டும் பயிர்களை விதைத்தனர். தற்போது இப்பயிர்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பைக் மோதிய விபத்தில்…. சிக்கி கொண்ட 3பேர்…. மீட்கப்பட்டாலும், காத்திருந்த அதிர்ச்சி …!!

கோவை அருகே விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை அருகே கணுவாய் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் அவரது நண்பர் பிரபுவும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் நர்சரி கார்டன் என்ற பகுதியில் செல்லும்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த காமராஜ் என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோதினர்.  இதில் மூவரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இம்மூவரையும் அப்பகுதியில் உள்ளவர்கள்  மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு சிகிச்சைக்கு முன்பாக […]

Categories
திருச்சி

மாற்றுத்திறனாளிக்கு நடந்த கொடூரம்… மகன் என்று பார்க்காமல்…. தந்தையின் அறிவற்ற செயல்…!!

மாற்றுத் திறனாளி மகனை பராமரிக்க முடியாததால் கழுத்தை அறுத்து கொடூரமாக தந்தை கொலை செய்த சம்பவம்  திருச்சி மாவட்டம் தாபேட்டை அருகே வசித்து வருபவர் தங்கவேல். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.  இவருடைய மனைவி செல்வராணி.  இத்தம்பதிக்கு கோபி என்ற ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும்போது கோபிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது.  இதன் காரணமாக வாய் பேசமுடியாமல்,  நடக்க முடியாமல் மாற்றுத்திறனாளியாக வீட்டிலேயே இருந்துள்ளார். கடந்த சில தினங்களாக […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு… மாநகராட்சி வெளியீடு..!!

சென்னையில் 373 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதிகபட்சமாக ராயபுரம் பகுதியில் 117 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் விவரங்களை மண்டல வாரியாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி திருவொற்றியூர் பகுதியில் 13 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மணலியில் ஒருவருக்கும், மாயவரத்தில்  3 பேருக்கும், தண்டையார்பேட்டையில் 46 பேருக்கும், நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தில் 117 பேரும், திரு.வி.க நகரில் 46 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூரில் ஒருவருக்கும், அண்ணாநகரில் 32 பேரும், […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

கொரோனா அச்சம்….. சாக்கடைக்குள் இறங்கி….. சுத்தம் செய்யும் பணி….!!

நாடே ஊரடங்கால் வீட்டுக்குள் முடிந்திருக்கும் சூழ்நிலையும் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவானது ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் இந்நிலையில், மருத்துவர்களும், துப்புரவு பணியாளர்களும் தன்னலம் கருதாமல் பிறர் நலம் கருதி உழைத்து வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கும் இந்த சூழ்நிலையில் வீடுதோறும் சென்று குப்பைகளை சேகரித்து வருவதோடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தப்பியோடிய இளைஞர்….. சுட்டு பிடித்த போலீஸ்…. சென்னையில் பரபரப்பு….!!

சென்னை அருகே காவல்துறை அதிகாரியை தாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞரை இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவள்ளூர் தொகுதியை அடுத்த பெரியகுப்பம் நகரில் பாஸ்ட் புட்  கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் ஆகாஷ் என்ற வாலிபர் தனது நண்பர்கள் ஐந்து பேருடன் சேர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு பின் பணம் கொடுக்காமல் சென்றதால் கடையில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர்  ஆத்திரமடைந்து சாப்பிட்டதற்கு பணம் கொடுங்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி” 3 பேர் மட்டுமே அனுமதி…. பிரபல வங்கி அதிரடி…!!

கொரோனா வைரஸ் எதிரொலியாக பிரபல வங்கியில்  உள் நுழைய மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றனர். அதன்படி மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரியலூர் மாவட்டத்தில் பிரபல வங்கி ஒன்றில் மக்கள் கூட்டம் சேராமல் தடுப்பதற்காக மூன்று வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வங்கிக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பண பரிவர்த்தனையை மேற்கொண்ட பின் அடுத்த வாடிக்கையாளர்கள் வங்கிக்குள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி NO TRAFFIC….. 7 இடங்களில்….. ரூ45,00,00,000 செலவில்….. நகரும் நடைபாதை….!!

சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஏழு முக்கிய இடங்களில் ரூபாய் 45 கோடி செலவில் நகரும் நடைபாதை அமைக்க உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். சென்னை மக்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல். பொதுவாக சென்னை மக்கள் சாலையை நடைமேடை வழியாக கடைக்க மாட்டார்கள். அதற்கு காரணம் படி வழியாக ஏறிச் செல்லவேண்டும் என்ற சோம்பேறித்தனம் தான். இதற்கு மாற்றாக தடுப்புச் சுவரின் இடையே ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக மக்கள் சாலையை கடந்து செல்வர். இதனால் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அதிவேகம்….. சூறைக்காற்று புழுதி….. விபத்தில் சிக்கி வாலிபர் மரணம்…. காஞ்சி அருகே சோகம்…..!!

காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்கி. இவர் கடந்த ஆண்டுதான் கல்லூரி படிப்பை முடித்தார். இந்நிலையில் வேலை தேடிக் கொண்டிருக்கும் இவர் நேற்று தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாலஜாபுரத்திலிருந்து  வண்டலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது படப்பை அருகே நிலைதடுமாறிய இவர் காற்று வேகமாக வீசியதால் கண்ணில் தூசி விழுந்து வாகனம் நிலை தடுமாறி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோர விபத்து” பைக் மீது மோதிய கார்…… 2 கல்லூரி மாணவர்கள் பலி…..!!

கடலூர் அருகே விபத்தில் சிக்கிய  2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைக் அடுத்த இருப்புகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மரிய வின்சன்ட். இவர் சேப்பிளநத்தத்தில் உள்ள விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவரும் இவரது நண்பரான அமல்ராஜ் என்பவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது புதுப்பட்டி பகுதி அருகே சென்ற சமயத்தில் இவர்கள் மோட்டார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நண்பனுக்கு துரோகம்….. 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை….. வேன் டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது….!!

கோவை அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லையளித்த வேன் டிரைவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டம் ராமபுரம் பகுதியை அடுத்த கணேசபுரம் ஏரியாவில் வசித்து வந்தவர் அருண்குமார். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில்  வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரின் தந்தைக்கும் இடையே நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது.  இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு மனைவி வீட்டிற்கு அருண்குமார் அடிக்கடி சென்று […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

என் மனைவியை அனுப்புங்க…… மாமனார் விரலை கடித்து துப்பிய மருமகன் கைது….. செங்கல்பட்டு அருகே பரபரப்பு…..!!

செங்கல்பட்டு அருகே குடும்பத் தகராறில் மாமனாரின் விரலை கடித்து துப்பிய மருமகன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னன்.  இவரது மனைவி கற்பகம். இவர்கள் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் பொன்னனுக்கு  குடிப்பழக்கம் அதிகம் இருப்பதால் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்ததோடு மட்டுமல்லாமல், குடும்பத்தையும் ஒழுங்காக பராமரிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த கற்பகம் கணவனை பிரிந்து தென்பட்டியில் உள்ள […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பூட்டை உடைத்து….. தொடர் திருட்டு….. 45பவுன் பறிமுதல்….. 2 பேர் கைது….!!

அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த விருதாச்சலம் சாலையில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் அருகே காவல் நிலைய அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: மயக்க மருந்து கலந்து மாணவி பலாத்காரம்…… பிரபல நடிகர் கைது…..!!

சென்னை அருகே தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரை மயக்க மருந்து கொடுத்து நடிகர் ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாங்களும் நல்லவங்க தான்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருபவர் நடிகர் விஜய் ஹரிஷ். இவர் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் சமயத்திலேயே காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். கைதிற்கான காரணமாக கூறப்படுவதாவது, சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

BREAKING : 11 மாத குழந்தை உட்பட…… 3 பேருக்கு கொரோனா…… திருச்சியில் பரபரப்பு…..!!

திருச்சியில்  11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனோ அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. மலேசியா மற்றும் ஷார்ஜாவில் இருந்து தமிழகத்திலுள்ள திருச்சிக்கு வருகை தந்த 11 மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனோ வைரஸ் அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அவர்களிடம் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவத்துறை நிபுணர்கள், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் மூவரையும் அனுமதித்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

HOTSTAR க்கு போட்டி….. களமிறங்கிய சென்னை மெட்ரோ….. 10 நிமிடத்தில் முழுப்படம்…..!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையம் பொதுமக்கள் திரைப்படங்கள் வெப்சீரிஸ் நாடகங்கள் உள்ளிட்டவற்றை பார்ப்பதற்காகவே புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிலையம் சுகர் பாக்ஸ் என்ற புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாட்ஸ்டார் செயலியை போலவே இதன் இந்த செயலி மூலம் சுகர் பாக்ஸ் மூலம் சென்னை மெட்ரோவில் வைஃபை வசதியை பயன்படுத்தி, தமிழ் ஆங்கிலம் என  இரு மொழிகளிலும் உள்ள திரைப்படங்கள் வெப்சீரிஸ் நாடகங்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் கண்டுகளிக்கலாம். ஆஃப்லைனில் காண […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஊர் கூடியதால்…. கொலை மிரட்டல்… தொழிலாளி கைது..!!

பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியவர் கைது சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கச்செல்வி. இவர் கடந்த 20ம் தேதி வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி  முருகன் என்பவர் எதிர்பாராத நேரம் வீட்டிற்குள் நுழைந்து தங்கச்செல்வியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த தமிழ்ச்செல்வி சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து முருகனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மனதில் ஏற்பட்ட அழுத்தம்…. 4 வயது மகளுடன் தற்கொலை…. தந்தை மகள் மரணம்..!!

நான்கு வயது மகளுடன் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதாவரம் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி சுனிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஹரிஷ் என்ற மகனும் ஹரிகா என்ற நாலு வயது மகளும் இருந்துள்ளனர். திருப்பதி சென்னையில் இருக்கும் பூண்டு கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். சில நாட்களாகவே மனஅழுத்த நோயால் அவதி பட்டு வந்துள்ளார் திருப்பதி. மன அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆசைப்படும் பார்வையற்ற ஜூடோ வீரர்

பாரா ஒலிம்பிக் போட்டியில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கும் பார்வையற்ற ஜூடோ வீரர் குறித்து விளக்கும் ஒரு செய்தி தொகுப்பு. திருவள்ளூர் மாவட்டம் சோலிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் 85% பார்வை குறைபாட்டுடன் பிறந்துள்ளார். முழுமையான கண்பார்வை இல்லாவிட்டாலும் எதிர்நீச்சல் போட்டு பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தனக்கென்று ஒரு அடையாளத்தை தேட முயற்சித்த மனோகரன் பாரா ஜூடோவை தேர்வு செய்து பயிற்சி பெற்றார். திருவள்ளூர் மாவட்டத்தில் இதற்கான பயிற்சிகள் அளிக்கப்படாத நிலையில் சென்னை நேரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அந்த பக்கம் போறேன் பாரு…. நீரில் மூழ்கி போனதால் சோகம் …!!

மெத்தை வியாபாரி குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் பீர்முகமது இவர் மூவோட்டுக்கோணம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து ஆட்டோ மூலம் பல இடங்களுக்கு சென்று மெத்தை விற்பனை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று களியக்கவிலை அருகில் இருக்கும் கோழிவிளை மருதங்கோடு குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர் பீர்முகமது அவரது நண்பர்களும். குளத்தில் இறங்கிய பீர்முகமது மறுகரைக்கு செல்ல நீந்தி  சென்றுள்ளார் அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதனை கண்டு கரையோரம் இருந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாமுல் கேட்டு பிரச்னை…. ”ஆட்டோ ஓட்டுநர் கொலை”…. ஓட்டேரியில் பரபரப்பு …!!

ஆட்டோ ஓட்டுநரை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை ஓட்டேரி கிருஷ்ணதாஸ் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் ஆட்டோ ஓட்டுநரான இவரது மனைவி சபரி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சம்பவத்தன்று தன்ராஜ் இரவு நேரத்தில் சவாரி முடித்துவிட்டு மங்கலாபுரம் காலணியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென 4 மோட்டார் சைக்கிளில் வந்த எட்டு பேர் தன்ராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நீரில் மூழ்கிய நண்பனை மீட்டு நீரில் மூழ்கிய நபர் – ஆத்தூரில் ஆற்றில் சோகம் ..!!

நண்பனை காப்பாற்ற சென்று வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கண்ணிராஜபுரத்தை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அந்தோணி சுமார் 150 பேருடன் திருச்செந்தூருக்கு பாத யாத்திரை புறப்பட்டு வந்துள்ளனர். மாரிமுத்து மாற்றுத்திறனாளி ஆவர் எனவே அவர் அவரது மூன்று சக்கர சைக்கிளை ஓட்டியபடி பாதையாத்திரை வந்தவர்களுடன் வந்துள்ளார். நேற்று ஆத்தூர் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றின் தென்புற படித்துறையில் குளித்துக் கொண்டிருந்தனர். மாரிமுத்து படித்துறையில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சங்கத்தை வீட்டு நீக்கம்…. ஆத்திரத்தில் கொலை முயற்சி…

ஜீப் ஓட்டுநரை விரட்டி விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானலில் வாடகைக்கு ஜீப் ஓட்டி வருபவர் ராஜமணி. அதே பகுதியை சேர்ந்த மோகன் என்பவரை ஜீப் ஓட்டுநர் சங்கத்திலிருந்து நீக்கியுள்ளனர். இதற்கு காரணம் ராஜமணி தான் என நினைத்த மோகன் ராஜமணி மீது கோபத்தில் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவத்தன்று ராஜமணியை  மோகன் விரட்டி விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் மோகன் கஞ்சா போதையில் இருந்ததாக கூறியுள்ளனர். காவல் துறையினர் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமணத்திற்கு சென்ற குடும்பத்தினர்…. வீடு திரும்புகையில் காத்திருந்த அதிர்ச்சி…!!

குடும்பத்துடன் திருமண விழாவிற்கு சென்று விட்டு திரும்புகையில் வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பொள்ளாச்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு திருமணத்திற்காக கடந்த 18ம் தேதி வெளியூர் சென்றுள்ளார். பிறகு திருமண விழா முடிந்து 19 ஆம் தேதி இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உயிருடன் கொளுத்திய கொடூரம்… காதலை மறுத்த திருமணம் முடிந்த பெண்…. ஒருதலை காதலால் விபரீதம்..

காதலை ஏற்க மறுத்த பெண்ணை உயிருடன் எரிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் சேர்ந்தவர் பிலோமினா. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் ராணுவத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் பிலோமினா நெய்வேலி டவுன்ஷிப்பிலிருந்து வடலூருக்கு தினமும் தனியார் பேருந்து ஒன்றில் சென்று வந்துள்ளார். அப்போது தனியார் பேருந்து ஓட்டுனருக்கும் பிலோமினாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பேருந்தில் செல்லும் பிலோமினா பேருந்து ஓட்டுனர் சுந்தரமூர்த்தியிடம் பேசி வந்துள்ளார். இதனை தவறாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மாயமான ஊழியர்…. காதல் தோல்வி…. விரக்தியில் தற்கொலை

காதல் தோல்வியின் காரணமாக இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் பெட்ரோல் ஊழியராக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் நான்கு மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று பணிக்கு வராத மணிகண்டனை தேடியுள்ளனர் சக பணியாளர்கள். அப்போது  பெட்ரோல் பங்க் அருகில் இருக்கும் தொழிலாளர்களுக்கான சமையலறையில் இருந்த கம்பி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார் மணிகண்டன். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து வெள்ளவேடு காவல்துறையை துறையினருக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

டிக் டாக் மாணவன்…. பயம் கொண்ட மக்கள்… போலீசாரிடம் கோரிக்கை..

டிக் டோக் வீடியோ பதிவு செய்ய  மக்களை முகம் சுழிக்க வைத்த கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் டிக் டாக் எனும் செயலியை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் எனும் கல்லூரி மாணவன் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் எதிர்பாராத நேரங்களில் மக்கள்மீது இடித்தும் அவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் நடனமாடியும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் […]

Categories

Tech |