களக்காடு அருகே வயல் வரப்பில் நடந்து சென்ற பெண்ணை பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார் களக்காடு உச்சிக்குலத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மனைவி தங்கரத்தினம். இவர்களுக்கு ஒரு மகன்உள்ளார். சம்பவத்தன்று வயலில் களை எடுப்பதற்காக சென்ற தங்கரத்தினம் களை எடுத்து முடித்துவிட்டு சாப்பிடுவதற்காக நடந்து செல்கையில் பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. காயமடைந்த இரத்தினத்தை உறவினர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]
Tag: District News
வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணின் நகையை பறித்துக்கொண்டு போன மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை சேர்ந்தவர் சத்யா. சத்யாவின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் செங்கோட்டையில் இருந்து தஞ்சாவூரில் நடைபெறும் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய மொபட்டில் சென்றுள்ளார் சத்யா. அச்சமயம் வி கே நகர் பகுதியில் சத்யா மொபட்டில் சென்று கொண்டிருக்கையில் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் சத்யாவின் கழுத்தில் கிடந்த […]
அக்காவை கொலை செய்த தம்பி
சொத்துப் பிரச்சினையில் சொந்த அக்காவை கொலை செய்துவிட்டு காவல்துறையில் சரணடைந்த தம்பி ஆரணியை சேர்ந்த ஜெய்சன்ராஜின் மனைவி எலிசபெத். இவருக்கும் எலிசபெத்தின் தம்பியான சந்தோஷம் என்பவருக்கும் சில வருடங்களாக சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. தாயின் பென்ஷன் தொகையை மாதம் மாதம் தன்னிடம் கொடுத்து விட வேண்டும் என சந்தோஷம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் போல் இன்றும் அக்காவின் வீட்டிற்கு சென்று தனக்கு சொத்தை பிரித்து தரும்படி தகராறு செய்துள்ளார். இதனால் அக்கா தம்பி இடையே […]
திருமணமான மூன்றே நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஆற்காடு சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் திவ்யா ஆற்காட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த காவல் அதிகாரி ராகவேந்திரன் என்பவருக்கு கடந்த 7ஆம் தேதி திவ்யாவை திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனையடுத்து நேற்று கணவருடன் தாய் வீட்டிற்கு வந்த திவ்யா எல்லோரிடமும் ஆனந்தமாக பேசிவிட்டு ஓய்வு எடுக்கப் போவதாக கூறி […]
மனைவியும் இரண்டு வயது குழந்தையும் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே மணல் மேட்டை சேர்ந்த முருகேசனின் மனைவி சர்மிளா தனது 2 வயது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் மனைவியும் குழந்தையும் வீடு திரும்பாததால் உறவினர் வீடுகளிலும் மற்றும் பல்வேறு இடங்களிலும் மனைவி குழந்தையை தேடியுள்ளார் முருகேசன். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் குழந்தை மற்றும் மனைவியை காணவில்லை என தந்தொனிமலை காவல்துறையினரிடம் புகார் […]
கணவன் மனைவி பிரச்சனையில் சமாதானத்திற்கு வந்த உறவினரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். கோயம்புத்தூர் இடையார் பாலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி தனலட்சுமி. கணவன் மனைவியிடையே இருந்து வந்த குடும்ப பிரச்சினையின் காரணமாக சகோதரியின் இல்லத்தில் வசித்து வந்துள்ளார் தனலட்சுமி.மனைவியின் சகோதரி இல்லத்திற்கு சென்ற ராஜேந்திரன் மனைவி தனலட்சுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அதற்க்கு மறுப்பு தெரிவித்த தனலட்சுமியிடம் ராஜேந்திரன் தகராறு செய்துள்ளார். தகராறில் தனலட்சுமியின் சகோதரியின் கணவன் சௌந்தர்ராஜன் இடையில் வரவே கோபம்கொண்ட […]
திருச்சி மாவட்டம் தென்னுரை சேர்ந்தவர் அப்பாஸ். திருமணம் முடிந்து 15 வருடங்கள் ஆன நிலையில் 15 தினங்களுக்கு முன்பு எட்டாவதாக குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கணவன் மனைவி இருவரும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய காரணத்தினால் 6 குழந்தைகளையும் முதல் குழந்தையான 15 வயது சிறுமியின் கட்டுப்பாட்டில் விட்டு சென்றனர். அப்போது 1 1/2 வயதான குழந்தை ஹரி குளியலறையில் விளையாடிக் கொண்டிருக்கையில் தண்ணீர் இருந்த வாலியில் தவறிவிழுந்து இறந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிந்து தில்லைநகர் போலீசார் விசாரணை நடத்தி […]
கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் செந்தில்குமார். தனியார் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துக்கொண்டிருந்த செந்தில் குமார், நேற்று காலையில் வீட்டை விட்டு வெளியே போனவர் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடியுள்ளனர். இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் ஒரு மரத்தில் பிணமாக தொங்கி உள்ளார் செந்தில்குமார். இதுகுறித்து சுந்தர்ராஜ் காவல்துறையினரிடம் அளித்த […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் அறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கோயம்புத்தூர் மாவட்டம் பீளமேடு சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தியின் மகள் ஹரிணி அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஹரிணி தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் பிளமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த காவல்துறையினர் ஹரிணியின் உடலை […]
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தாராபுரத்தை சேர்ந்தவர் வேலு இவரது மனைவி சுதா. சுதா வருவாய் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வேலு சண்டை போட்டுக்கொண்டு உப்புத்துறை பாளையத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். வேலுவின் தாயார் கடந்த இரண்டு தினங்களாக வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த வேலு மனவேதனையுடன் இருந்தமையால் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். […]
பலநாள் தேடி வந்த பிரபல ரவுடியை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ஒருவர் இன்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ராமநாதபுரம் காவல் நிலையத்தில் 2 கொலை வழக்குகளும் நெல்லை மாவட்ட காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குகளும் இருந்துள்ளன. மேலும் அந்த ரவுடிக்கும் கூலிப்படையினருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் அவரை தேடி வந்துள்ளனர். பல நாள் முயற்சி செய்த […]
மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்டு கொலை செய்த கணவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி சங்கீதா இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சங்கீதா வீட்டிலேயே தையல் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இளையராஜா வெளிநாடு சென்று வேலை செய்கிறேன் என்று கூறி அடிக்கடி வெளிநாடு சென்று வேலை செய்யாமல் பணத்தை விரயம் செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே சண்டைகள் பல ஏற்பட்டுள்ளது. கடந்த […]
பெற்றோர் காதலை கண்டித்ததால் செவிலியர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் குள்ளம்பட்டி அரசு குரும்பப்படியை சேர்ந்தவர் கருணாகரன். கூலித் தொழிலாளியான கருணாகரனின் மகள் நாகதேவி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செவிலியர் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நாகதேவி வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். நாகதேவியின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வர மாணவியை கண்டித்துள்ளனர் பெற்றோர். இதனால் மனமுடைந்த நாகதேவி வீட்டில் யாரும் இல்லாத சமயம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் […]
ஓடும் பேருந்தில் பயணம் செய்தவரிடம் இருந்து பணத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர் ஈரோடு மாவட்டம் கருங்கள்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் ஈரோடு செல்வதற்காக தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அவர் பயணித்த பேருந்து காவிரி ரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது கருப்பையாவின் பின்புறம் நின்ற 2 மர்ம நபர்கள் திடீரென கருப்பையாவின் பாக்கெட்டிலிருந்து 1000 ரூபாயைய் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த கருப்பையா திருடன்.. திருடன்.. என அலறி உள்ளார். பேருந்தில் இருந்த […]
தாயின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை கண்டு தாங்கிக்கொள்ள இயலாத மகன் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவர் சுபேந்திரன். கூலித் தொழிலாளியான சுபேந்திரனின் தாயாருக்கு சில தினங்களுக்கு முன்பு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் சுபேந்திரனின் தாயாருக்கு குணமாகவில்லை. இதனால் சுபேந்திரன் வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனிமையில் இருந்த சுபேந்திரன் தாயாரின் நிலையை குறித்து எண்ணி விரக்தியில் விஷம் குடித்துள்ளார். தகவல் அறிந்த அக்கம் […]
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டு கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சங்கரன்கோவில் காமராஜர் நகரைச் சேர்ந்த வீராசாமி கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாப்பா இவர்களுக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறாள். கேரளத்தில் பணிபுரியும் வீராசாமி அடிக்கடி கேரளா செல்வதால் தனது மனைவி மேல் சந்தேகம் கொண்டு தகராறு செய்துள்ளார். அதேபோல் நேற்று கேரளாவில் இருந்து வீடு திரும்பிய வீராச்சாமி மனைவியிடம் சண்டை […]
இரண்டு பிள்ளைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கோவில் அருகே அறிவொளி நகரை சேர்ந்தவர் விஜயா. விஜயாவின் கணவர் ராமசாமி. இத்தம்பதியினருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராமசாமி தனது மகன் மற்றும் மகளை வெளியில் அழைத்துச் சென்றுள்ள சமயம் வீட்டில் தனியாக இருந்த விஜயா திடீரென தீக்குளிக்க தனக்குத் தானே நெருப்பு வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும்நெருப்பு பரவி வலி தாங்க முடியாமல்அலறல் போட்டுள்ளார் விஜயா. விஜயாவின் […]
கிரிவலம் சென்று திரும்பிய தம்பதியினரை தாக்கி நகை பறித்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை அருகில் உள்ள பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன் அருணா தம்பதியினர். நேற்றைய முன் தினம் பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் சென்றன.ர் கிரிவலம் முடித்து இரவு 2 மணி அளவில் வீட்டிற்குத் திரும்பினர். வரும் வழியில் செல்வா நகர் வந்த பொழுது எதிரே பைக்கில் வந்த இருவர் தம்பதியினரை வழிமறித்து அருணாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்து உள்ளனர். […]
காதலை ஏற்க மறுத்ததால் வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராஜபாளையம் அருகிலுள்ள சொக்கநாதன் புத்தூர் சேர்ந்தவர் அருண். பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். அம்மாணவி அருணின் காதலை ஏற்க மறுத்தும் தினமும் மாணவி கல்லூரிக்கு செல்லும் நேரம் பின்தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாணவியிடம் தனது காதலை ஏற்கும் படி கேட்டுள்ளார். அருணின் காதலை மாணவி மறுத்துவிடவே விரக்தி அடைந்த அருண் திடீரென தான் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தன்மீது […]
பாட்டியிடம் பணம் கேட்டு தர மறுத்ததால் கோபத்தில் பாட்டியை பேரன் கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள விஸ்வநாதபுரம்புதுமனையை சேர்ந்தவர் மும்தாஜ் இவர்களுக்கு அசன் ஷா என்ற மகன் உள்ளார். இவர்களது பேரன் அப்துல் சலாம் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அப்துல் சலாம் அவ்வப்போது தனது பாட்டியிடம் வந்து பணம் பெற்று செல்வது வழக்கம். அதே போல் நேற்றும் பாட்டியிடம் பணம் கேட்டு சென்றுள்ளார். ஆனால் பாட்டியோ தனக்கு வயதாகிவிட்டது நீதான் […]
தமிழகத்திற்கு மிகச் சிறந்த ஆளுமை தேவைப்படுகிறது எனவும் அந்த ஆளுமை கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே கொடுக்க முடியும் எனவும் கவிஞர் சினேகன் கூறியுள்ளார் ஈரோடு மாவட்டத்தில் மண்டல நகர ஒன்றிய செயலாளரை அறிமுகபடுத்தும் விழா நடைபெற்றது. அவ்விழாவில் கவிஞரும் மாநில இளைஞரணி செயலாளருமான சினேகன் கூறியதாவது, மக்கள் நீதி மையத்தின் முக்கிய நிர்வாகிகளாக கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு நான் ஈரோட்டிற்கு வந்திருந்த பொழுது கண்ட எழுச்சியை இப்போதும் என்னால் காணமுடிகிறது. நமது ஒரே […]
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வரும் நிலையில் மனமேடையிலையே கையெழுத்திட்டுள்ளனர் புதுமண தம்பதியினர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திமுக தலைமையில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடர்ந்து நடந்துகொண்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த மாணவரணியின் அமைப்பாளர் சபீர் அன்சில் மற்றும் சஜிதா பர்வீன் என்பவருக்கு நேற்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மணமேடையில் வைத்தே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு […]
மதுரையை சேர்ந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மிளகரணையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் நாகராஜ். இவர் சிக்கந்தர் சாவடியில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அன்பரசு என்ற 15 வயது சிறுவனும் உடன் இருந்துள்ளான். சிக்கந்தர் சாவடி அருகில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி நாகராஜின் மோட்டார் சைக்கிள் மீது […]
அனுமதியின்றி மது விற்ற தாக கூறி ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் பெண்கள் உட்பட 3 வேற கைது செய்துள்ளனர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இண்டூர் பகுதியில் அனுமதி இல்லாமல் மது விற்று வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது. அந்தத் தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது அனுமதி இல்லாமல் மது விற்ற மகேஸ்வரி கல்யாணி மற்றும் அண்ணாதுரை ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து மது பாட்டில்களையும் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் சோழன்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் கடந்த 3ஆம் தேதி மாநில அளவிலான கபடி போட்டியில் பங்கேற்க கிருஷ்ணகிரி மாவட்டம் சென்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர். இறுதிவரை சென்ற சோழன்குடிகாடு அரசு உயர்நிலை பள்ளி மாணவிகள் […]
கணவன்-மனைவி இடையே நடந்த சண்டையினால் பெண் தற்கொலை. தூத்துக்குடியில் உள்ள சுனாமி காலனி சிலுவைப் பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரை காதல் திருமணம் செய்தவர் ஜாஸ்மின். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்க்கை வெறுத்து மனமுடைந்த ஜாஸ்மின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தற்கொலை செய்ய எண்ணி விஷத்தைக் குடித்து மயங்கியுள்ளார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஜாஸ்மினை […]
சங்கரன்கோவிலில் பணிபுரிந்து வரும் கூலித்தொழிலாளி விபத்தில் படுகாயம் அடைந்து இறந்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் சங்கரன்கோவிலில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு தனது சொந்த ஊரான விருதுநகர் செல்ல முடிவெடுத்து மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் ராஜ்குமார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் ராஜ்குமார். இதுகுறித்து திருவேங்கடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் பேரூர் அருகே மது அருந்த பணம் தராத தந்தை தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவான மகன் கைது செய்யப்பட்டார். இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் அவர் மனைவி துளசி இவர்களுக்கு நான்கு மகனள்களும் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகேயன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். […]
பாஜகவினர் நடத்திய போராட்டம் விஜய்க்கு எதிரான போராட்டம் இல்லை என எச்.ராஜா தெரிவித்துள்ளார். விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக கூறி விஜய் ரசிகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு பிரச்சனைகள் தொடர்ந்த நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா கூறியிருப்பதாவது “நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே சரத்குமாரின் படப்பிடிப்பின் பொழுது விபத்து ஒன்று ஏற்பட்டது அதன் பின்னர் அவ்விடம் சூட்டிங் எதுவும் நடத்தக்கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் நடந்ததால் பாரதிய […]
உடல்நல குறைவால் அவதிப்பட்ட வாலிபன் விஷம் குடித்து தற்கொலை. சென்னையை அடுத்த பொன்னேரி அருகில் உள்ளகோளூர் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தகுமார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சாந்தகுமார், சில தினங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனம் உடைந்து வாழ்க்கை மீது வெறுப்பு கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் சாந்தகுமார். அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவி இறந்த சோகம்… கணவன் தற்கொலை
தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் தனிமையில் இருந்த பாலமுருகன் மகள் வீட்டிற்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார். இருந்த போதும் மனைவியின் பிரிவால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த பாலமுருகன் தற்கொலை செய்ய எண்ணி விஷம் குடித்து மயங்கி உள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலமுருகன் இறந்துவிட்டார். இதுதொடர்பாக ஓடைப்பட்டி காவல் துறையினரிடம் […]
புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னையில் வாக்கத்தான் நடைபெற்றது. சென்னை அடையாறு புற்றுநோய் மையம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்திய வாக்கத்தான் அடையாறில் இருந்து தேனாம்பேட்டை வரை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் மருத்துவர்களும் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு வாக்கியங்களை கையில் ஏந்தியபடி பங்கேற்றனர்.
பாதுகாப்பிற்கு உட்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதிகள் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் கடந்த சில தினங்களுக்கு முன்பு காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க முயற்சித்து அதனையடுத்து பலரும் காவிரி டெல்டாபகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க கோரிக்கை விடுத்திருந்தனர். அக்கோரிக்கைகளை ஏற்று இன்று சேலத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக […]
சேலத்தில் ஆயிரம் கோடி செலவில் கால்நடை ஆராய்ச்சி பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புக்கு சொந்தமான 1000 ஏக்கர் பரப்பளவில் உலக தரமிக்க ஆசியாவிலேயே மிகச் சிறந்த நவீன கால்நடை பூங்கா அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள கால்நடை பூங்காக்களை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி சேலத்தில் அமைக்க இருக்கும் பூங்காவிற்கு பல்வேறு விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டார். […]
திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியில் சேர்ந்தவர் கோமதி. இவரது கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முதல் மகன் ரமேஷ் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இரண்டாவது மகன் அருண் வெளியூரில் பணிபுரிந்து வருகிறார். முதல் மகன் ரமேஷ் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி தாயிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார். அதற்கு கோமதி 25 வயது ஆனவுடன் பெண் […]
கோவை மாவட்டம் பேரூர் அருகே மது அருந்த பணம் தராத தந்தை தாயை பெற்ற மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா வீதியை சேர்ந்தவர் சுந்தரம் அவர் மனைவி துளசி இவர்களுக்கு நான்கு மகனள்களும் கார்த்திகேயன் என்ற ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் குடிப்பழக்கத்திற்கு அடிமையான கார்த்திகேயன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனை பொறுத்துக் கொள்ள இயலாத கார்த்திகேயன் […]
விபத்தில் தனது காலை இழந்த பெண்ணிற்கு கிராம உதவியாளர் பணி ஆணையை அமைச்சர் வேலுமணி வழங்கினார். கோவை மாவட்டம் அவினாசி ரோட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி அன்று கோல்ட்மின்ஸ் எனும் இடத்தில் சிங்காநல்லூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் ஸ்கூட்டரில் பணிக்கு சென்ற பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் பெண்ணின் பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் ராஜேஸ்வரியின் இடது கால் நசுங்கிய நிலையில் அவரை உடனடியாக […]
சேலம் ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில் இரண்டு பெண் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி செய்துள்ளார். திவ்யா எனும் பெண் தனது மூன்று வயது மகள் வர்ணிகாவையும் ஒன்றரை வயது மகள் தன்சிகா வையும் கிணற்றில் வீசிவிட்டு தானும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். வீட்டின் அருகே உள்ள விவசாய கிணற்றில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது திவ்யா கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை […]
சேலம் மாவட்டம் மாவட்டம் வாழப்பாடி துணிப்பை வழங்கும் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளனர் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வைகை இயற்கை பாதுகாவலன் இயக்கம் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் கிராமப்புற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று பாலித்தின் தீமைகளை பற்றி எடுத்துக்கூறி துணிப்பைகளை வழங்கி வருகின்றனர் தகவலறிந்த மாணவர்களை சந்தித்த வாழப்பாடி தாசில்தார் ஜாஹிர் ஹுசைன் அவர்களின் சமூக சேவையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து மாணவன் கபிலன் கூறுகையில் “இது பிளாஸ்டிக் ஒழிப்பு மட்டும் அல்ல […]
நெல்லை மாவட்டத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகள் பிரெய்லி முறையில் புத்தகம் வாசித்து உலக சாதனை படைத்தனர். நெல்லை மாவட்டத்தில் புத்தகத் திருவிழா கடந்த பிப்ரவரி 1ம் தேதி பாளையங்கோட்டையில் உள்ள வாஉசி மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ள இந்த திருவிழாவின் ஒரு பங்காக உலக சாதனை படைக்க தொடர் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. 520 பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்து வருகின்றனர். இந்நிலையில்பார்வை மாற்றுத்திறனாளிகள் இருவர் […]
தமிழகத்தில் ஆப்ரேஷன் சாகர் காவச் பாதுகாப்பு ஒத்திகையின் போது தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 19 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முயல் தீவு வழியாக இரண்டு விசைப்படகில் ஒரு குழு ஊருக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் வேடத்தில் பதுங்கியிருந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி வெடிகுண்டுகள் திட்ட வரைபடங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்று நாகை கடற்கரை பகுதிகளில் கடலோர காவல்படை படகில் […]
திண்டுக்கல்லில் சொத்துக்காக பெரியப்பாவை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள அழகாபுரி கிராமம் மேற்கு தெருவை சேர்ந்தவர் மாசானம். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவருக்கும் இவரது தம்பி மகனான பழனிச்சாமி என்பவருக்கும் நீண்ட வருடங்களாக சொத்துத் தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்படும். இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன் இவர்கள் இருவரும் சண்டையிட தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த பழனிச்சாமி கட்டையை […]
கரூரில் ஆபாச வீடியோக்களைசமூகவலைத்தளத்தில் பகிர்ந்ததாக அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரில் உள்ள சலூன் கடையில் வட மாநிலத்தை சேர்ந்த வியாசர் என்பவர் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றி வருகிறார். இவர் தனது செல்போனில் சிறுவர்களின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து வியாசர் ஜானியை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற […]
ராஜராஜ சோழன் காலத்தில் பெண்களை கருவறைக்குள் பணி செய்வதற்காக அனுப்பி அதற்கான ஓவியங்கள் குறித்தும் அதற்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலில் அக்காலகட்டத்தில் 1200 பேர் வேலை செய்திருக்கிறார்கள். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் பிற சமூகத்தவர்கள் அனைவருமே இந்த குழுவில் பணியாற்றி இருக்கிறார்கள். கோவிலில் இருக்கக்கூடிய கருவரைக்கு அவர்கள் எப்போதுமே போகலாம். குறிப்பாக தளிச்சேரிப் பெண்கள் கோவில் கருவறைக்குள் சென்று வழிபடக்கூடிய உரிமையைப் பெற்றிருந்தனர். மேலும் அவர்கள் கோவிலில் பணி புரிந்ததற்கான ஆதாரங்களும் […]
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்பங்களை பார்க்கும்போது அக்காலகட்டத்தில் நாம் பிறந்திருக்க கூடாதா என்ற அளவிற்கு நம்மை வியப்பில் பால் தெரிகிறது. ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலில் பல சிவாலயங்கள் உள்ளன. முதலில் நுழையும் பொழுது கேரளாந்தன் திருவாசகம் என்ற ஒன்று உள்ளது. அதனை தொடர்ந்து ராஜராஜன் திருவாயில் வரும். இந்த திருவாயில் திருசிற்றம் மாலையுடன் அமைந்துள்ளது. மேலும் இதில் 24 சிற்றாலயங்கள் உள்ளன. இந்த இருபத்தி நான்கு சிற்றாலயங்களிலும் உள்ள கடவுள்களை திசை கடவுள் என்று […]
திருப்பத்தூரில் மருத்துவரிடம் செல்போனில் பேசிக் கொண்டே செவிலியர் பிரசவம் பார்த்ததால் தாய் சேய் உயிரிழந்தது குறித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரணை மேற்கொள்ளவுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆரீஃ ப் நகரைச் சேர்ந்தவர் இம்ரான். இவரது மனைவி பரிதா என்பவருக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பெற்றெடுத்த சில மணிநேரங்களிலேயே பரிதா உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்ததும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து காவல்துறையினர் அன்று மருத்துவமனையில் […]
தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு மருத்துவமனையில் எட்டு படுக்கைகளை கொண்ட கொரோன வைரஸ் சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது கொரோன வைரஸ் சீனாவில் வேகமாக பரவி நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை எடுத்துள்ளதால் உலகநாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 8 படுக்கைகளுடன் தனித்தனி அறைகள் கொண்ட கொரோன வைரஸ் சிறப்பு சிகிச்சை பிரிவினை மருத்துவமனை முதல்வர் சங்குமணி தொடங்கி வைத்தார். இங்கு கொரோன வைரஸ் அறிகுறிகளைக் கண்டறியும் கருவிகளுடன் இரு நுரையீரல் […]
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் 75 கோடி செலவில் பாலம் கட்டப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளது. 75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திலிருந்து காமம் திறந்து வைத்தார். அதன் பின்னர் அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து மக்கள் பயன்பாட்டிற்காக சாலைப்போக்குவரத்து பாலத்தில் தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில் கட்டுப்பட்டு வரும் மேம்பாலங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், அவினாசி சாலையில் […]
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடுநிலைப்பள்ளி ஒன்று வெறும் மூன்று ஆசிரியர்களுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் ப.வில்லியனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி ஒன்று உள்ளது. சுமார் 150 குழந்தைகளின் கல்வி ஆதாரம் இந்த பள்ளிதான் கடந்த 18 மாதங்களாக தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்களுடன் மட்டுமே இந்த ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளி இயங்கி வருவதாக கூறப்படுகிறது. அவர்களும் ஆறு முதல் எட்டாம் […]
மருது கணேஷின் மனு தள்ளுபடி
ஆர்கே நகர் தொகுதி தேர்தல் ரத்து காரணமாக ஏற்பட்ட செலவுத் தொகையை இழப்பீடாக வழங்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது தேர்தல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் பணம் பட்டுவாடா தொடர்பாக அந்தத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்திருந்தார் திமுக வேட்பாளர் மருது கணேஷ். ஆர்கே நகர் தேர்தல் ரத்து காரணமாக ஏற்பட்ட செலவுத் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார். […]