புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 9 மாத ஆண் குழந்தை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விற்பனை செய்யப்படுகிறது. பெரிய கல்லை சேர்ந்த காடன் செல்வி தம்பதியினருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றொரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த ஆண் குழந்தை பிறந்து நான்கு நாட்களிலேயே 5 லட்சம் ரூபாய்க்கு பெற்றோர் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரை அடுத்து சைல்டு […]
Tag: District News
அரசு தலைமை மருத்துவமனையில் இணை இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டதையடுத்து அங்கு கூடுதல் இயக்குனர் விசாரணை மேற்கொண்டார். சுகாதார துறையில் பொது சுகாதளராக பணிபுரியும் தயாளன் என்பவர் செவிலியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பணியிடமாற்றம் கோறுகையில் லஞ்சம் பெற்றதாகவும், நோயாளிகளுக்கான மருந்துகளை வாங்குவது முறையீட்டில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நேரில் சென்ற கூடுதல் இயக்குனர் மாலதி, செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் என 10க்கும் மேற்பட்டோர் இடம் விசாரணை மேற்கொண்டார். […]
சென்னையை அடுத்த அம்பத்தூரில் அருகே வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜெண்ட் கடத்தப்பட்டதாக அளிக்கும் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரகடத்தை சேர்ந்த திலீப் குமார் என்ற அந்த நபர் பல இளைஞர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் இருந்து வந்ததாக புகார் கூறப்படுகிறது. இந்த நிலையில் பணம் கொடுத்து ஏமாந்த ஏமாந்தவர்கள் என சொல்லப்படும் ஐந்து பேர் திலீப் குமாரின் வீட்டிற்கு சென்று அவரை வெளியில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் […]
சீனாவில் இருந்து சென்னை வந்த 8 பேருக்கு கொரோன பாதிப்பு சோதனை நடத்தப்பட்டு பாதிப்பு இல்லை என தெரிந்ததும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், திண்டுக்கல் மற்றும் சென்னை சேர்ந்த இருவர் என எட்டு பேர் சீனாவில் இருந்து பெங்களூர் வந்து அங்கிருந்து சென்னை வந்தனர். அவர்களை தீவிரமாக பரிசோதித்து பாதிப்பு ஏதும் இல்லை என்று தெரிய வந்ததை அடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் பாதுகாப்பு […]
இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் ஐந்து நாட்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வாணியம்பாடி தனியார் மைதானத்தில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கமிட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மாபெரும் கண்டன பேரணி […]
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கட்டாயமாக நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர் அரசுப்பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு உள்ள திட்டங்கள் குறித்து விளக்கங்களையும் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு […]
கடலூர் கடலூர் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு கடை வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் நகராட்சிக்கு உட்பட்டு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் நகராட்சி சார்பாக வாடகை வசூலித்து கொண்டிருந்தனர். திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன் கடையில் வாடகை தொகையை 10 மடங்கு நகராட்சி உயர்த்தியுள்ளது அதாவது 1000 ரூபாய் வாங்கப்பட்ட கடைகளுக்கு தற்போது பத்தாயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் நகராட்சி அலுவலரிடம் முறையிட்டனர். ஆனால் வாடகை தொகையை குறைக்க […]
திருச்சியில் ஒரே நாளில் இரண்டு கொலைகள் அடுத்தடுத்து நடந்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்சியில் பாரதிய ஜனதா பிரமுகர் விஜயரகு நேற்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன் நேற்று இரவு திருச்சி மரக்கடை அருகே மாநகராட்சி கழிவறையில் இளைஞர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அந்தஇளைஞர் தில்லை நகரைச் சேர்ந்த முகமது இசாக் என்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை தொடர்பாக பாலக்கரை […]
பிப்ரவரி ஐந்தாம் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது தஞ்சை பெரிய கோவிலும் தயாராகி விட்டது ஆனால் கோவிலில் தமிழ் மொழியில் திருகுட நன்னீராட்டு நடக்குமா இல்லை சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுமா என்ற கேள்விக்கான பதில் நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கிறது. பெரும்பாலான இந்து கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் கடந்த 1996ம் ஆண்டுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற வில்லை. கும்பாபிஷேகம் நடத்த கோரி கடந்த 2008ம் ஆண்டு முதலே பக்தர்கள் […]
திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து காந்தி மார்க்கெட்டில் உள்ள கடைகளை அடைக்க வேண்டும் என்று பாஜகவினர் வற்புறுத்தியுள்ளனர் அப்போது ஏற்பட்ட தகராறில் கடை ஊழியர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காந்தி மார்க்கெட் அருகே உள்ள உப்புபாறை பகுதியை சேர்ந்தவர் விஜயரகு. பாலகரை மண்டல பாஜக செயலாளராக இருந்து வந்த இவர் மார்க்கெட்டில் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் பணியையும் செய்து வந்துள்ளார். இன்று அதிகாலை மார்க்கெட் நுழைவாயில் பகுதியில் நின்று கொண்டிருந்த விஜயரகுவை அடையாளம் […]
கோவை சிங்காநல்லூர் அருகே தொழிலதிபர் ஆதம் ஷா என்பவரது வீட்டை உடைத்து 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆதம் ஷா கோவையில் சிங்கநல்லூரில் வசித்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் சிவகாசியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீடு திரும்பிய ஆதம் ஷா வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதையும் படுக்கை அறையில் இருந்த பீரோ […]
ஜல்லிக்கட்டு நிறைவு
திருச்சியில் ஜல்லிக்கட்டு நிறைவுபெற்றுள்ளது. கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு ஆங்காங்கே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. கருங்குளத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் 633 காளைகள் 429 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் 22 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். இருந்தும் சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டினை நடத்தி முடித்துள்ளனர்.
மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை 5 கோடியில் இருந்து 12 கோடி ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். திருச்செந்தூர் அருகே கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். மற்றும் ஹைட்ரோகார்பன் குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ஹைட்ரோகார்பன் விவசாய நிலங்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கக்கூடிய ஒரு திட்டம். அது இருக்கக்கூடிய வளத்தை பயன்படுத்தக்கூடிய ஒன்று என்று கூறி அதனை […]
கொல்லகுப்பம் ஊராட்சிமன்ற அலுவலகத்துக்கு இளைஞர்கள் பூட்டு போட்டது அந்த பகுதியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொல்லகுப்பம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய இளைஞர்கள் கடந்த 3 ஆண்டுகளாக கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும் கிராமசபை தீர்மானங்களை நிறைவேற்றாதது குறித்து அதிகாரிகளுடன் கொல்லகுப்பம் இளைஞர்கள் வாக்குவாதம். கிராமசபை தீர்மானங்களை நிறைவேற்றவில்லை அதுதான் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இளைஞர்கள் பூட்டு போட்டனர்.
கடலூரில் 106 வயதிலும் ஒருவிரல் புரட்சி செய்து வரும் சிறந்த குடிமகனை மாவட்ட துணை ஆட்சியர் நேரில் சென்று கவுரவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. திட்டக்குடி அடுத்த பெருவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பையன். இவருக்கு வயது 106, நான்கு தலைமுறைகளை கண்ட சின்னப்பையன் உள்ளாட்சி முதல் நாடாளுமன்றம் வரையிலான அனைத்து தேர்தல்களிலும் ஒரு முறை கூட தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் இருந்தது கிடையாது. சிறந்த குடிமகனான சின்ன பையனை தேசிய வாக்காளர் தினத்தில் கடலூர் மாவட்ட துணை […]
அரியலூரில் ராட்சத இயந்திரங்கள் மூலம் ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் நிலையில் கனிமங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக இருக்குமோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள் அப்பகுதி கிராம மக்கள். அரியலூர் மாவட்டம் ஆதனக்குறிச்சி, புதுப்பாளையம் கிராமங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் ராட்சத இயந்திரங்கள் மூலம் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணறுகளை அமைத்து வருகிறது. எதற்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது எனத் தெரியாமல் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மத்திய அரசு நிறுவனம் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளதால் இயற்கை […]
நெல்லையில் உள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி அம்பாள் கோவிலில் நடைபெற்ற லட்ச தீப திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் தீபாவளி ஜொலித்தது. 2000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று லட்ச தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கடந்த 11ம் தேதி யாகசாலை பூஜையுடன் லட்ச தீப திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக அம்பாளுக்கு […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் 3கோடியே 11 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் அமைச்சர் நிலோபர் கபில் மாணவ மாணவிகளுக்கு வழங்கினர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு 2019 2020 ஆம் ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே சி வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில்ஆகியோர் கலந்துகொண்டு மிதிவண்டி […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோவில் நடைபெற்ற பிரம்மாண்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள முனியாண்டி சுவாமி கோவிலில் 85வது ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பிரபல முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதனையொட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பெண்கள் தேங்காய் பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி […]
சத்தியமங்கலம் பகுதியில் வேகமாக பரவும் காய்ச்சலை தடுக்க மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புளியங்கோம்பை பகுதியில் வசித்து வரும் 30க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தி ஆவதால் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாகவும், நகராட்சி பணியாளர்கள் சுகாதார பணிகளை மேற்கொள்ள வரவில்லை எனவும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுகாதாரத் துறை சார்பாக சிறப்பு […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே முனியாண்டி கோயிலில் நடைபெற்ற மெகா பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி முனியாண்டி சாமி கோயிலில் 85வது ஆண்டு பிரியாணி திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் நடத்திவரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதையொட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில் பெண்கள் தேங்காய் பழம் பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி […]
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி பழனிசாமி கோவையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இன்று அதிகாலை 3 மணிக்கு பழனிசாமி வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதன் பின்பு அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பழனிசாமி அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியுள்ளார் என்ற தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் முன்னாள் எம்பியாக கே சி பழனிச்சாமி நாமக்கல் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற […]
சேத படுத்த பட்ட பெரியார் சிலை சீரமைக்க பட்டு புதிய சிலை திறப்பு. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள களிய பேட்டையில், திராவிடர் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் சிலையினை, மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். தகவல் அறிந்து போலீசார், பெரியார் சிலையை துணியால் மறைத்து, சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில், பதட்டம் ஏற்படாமல் இருக்க, பெரியார் சிலை உடனடியாக சீரமைத்து, வண்ணம் பூசி புதிய பொலிவுடன் திறக்கப்பட்டது..
சென்னை பல்லாவரம் பகுதியில் மதுபோதையில் பேருந்தை தாறுமாறாக ஓட்டி வந்த அரசுப் பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். சென்னை தாம்பரம் பகுதியை அடுத்த அனகாபுதூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து பிராட்வே நோக்கி சென்ற மாநகரப் பேருந்து திடீரென எதிரே வந்த வாகனங்கள் மீது கட்டுப்பாடில்லாமல் மோதியது. இதையடுத்து பேருந்தை மடக்கிப் பிடித்த வாகன ஓட்டிகள், பொதுமக்கள், மதுபோதையில் ஓட்டுநர் இருந்ததை கண்டுபிடித்ததையடுத்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். பின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், […]
தேனி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து அரங்கேறும் தொடர் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாக கேரளா செல்லும் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். கேரள மாநிலம் குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளத்தை சேர்ந்த மூன்று சுற்றுலா பயணிகளுக்கு மதுபானம் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று, மர்ம நபர்கள் சிலர் கழுத்தில் அரிவாள் வைத்து மிரட்டி அவர்களது உடமைகளை பறித்து சென்றனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அகமது ரஃபிக், ராஜேந்திரன், அஜித் […]
சென்னையில் திரைப்பட பாணியில் வருமானவரித்துறையினர் போன்று நடித்து வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் நெற்குன்றம் பல்லவன் நகரை சேர்ந்த நூருல்லா என்பவர் வீட்டிற்கு காரில் வந்த 4 பேர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது பீரோவில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து சவரன் நகை எடுத்த கும்பல் அவர்களைத் தடுத்தமுயன்ற நூருல்லாவை தாக்கி […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நாட்டு மல்லியுடன் ஊடுபயிராக வெங்காயத்தை விவசாயிகள் பயிரிட்டு உள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராமநாதபுரத்தை சுற்றியுள்ள மருதங்கநல்லூர், திம்மநாதபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நாட்டு மல்லி சாகுபடி அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள சின்ன வெங்காயத்தை தங்களின் வீட்டு பயன்பாட்டிற்காகவும் அவர்கள் தேவையை அவர்களே பூர்த்தி செய்யும் விதத்திலும் நாட்டு மல்லியுடன் ஊடுபயிராக விவசாயிகள் பயிரிட்டுள்ளது நல்ல விளைச்சலையும் வரவேற்பையும் […]
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த அந்த 8 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி விளையாட செல்வதாக கூறிவிட்டு வெளியில் சென்றதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். […]
சென்னையில் ஜனவரி 19 ஆம் தேதியன்று 1,645 சிறப்பு முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த 24 ஆண்டு காலமாக போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதை கடைப்பிடிக்கும் விதமாக இந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதியன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடானது போலியோ […]
நாகை மாவட்டம் சீர்காழி அருகே தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் உரிய ஆவணம் இன்றி சரக்கு வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 200 டன் வெங்காயம் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திட்டை கிராமத்தில் வட்டாட்சியர் பெயர் மற்றும் காவல்துறை அடங்கிய பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சரக்கு வாகனத்தில் இருவருடன் வெங்காயம் ஏற்றிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் இருந்து ஏற்பட்டு […]
திருப்பூர் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் அருகே கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட செந்நெறி புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் எரிசாராயம் பதிக்கி வைக்கப்பட்டிருப்பதாக சேலம் மண்டலம் மத்திய புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான குழு பொள்ளாச்சி மதுவிலக்கு காவல்துறை அதிகாரிகள் உதவியுடன் வீட்டில் பதுக்கப்பட்டிருந்த 10 லிட்டர் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் […]
மேட்டுப்பாளையத்தில் குழந்தையின் உடலில் தடுப்பூசியின் ஒரு பகுதி உடைந்து சிக்கியது. கோவை மாவட்டம் எம் எஸ் ஆர் புரத்தைச் சேர்ந்த தம்பதிகள் பிரபாகரன் மலர்விழி. இவர்களுக்கு கடந்த 26ஆம் தேதி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் குழந்தைக்கு தொடையில் தடுப்பூசி போடப்பட்டது. அதில் தடுப்பூசியின் ஒரு பகுதி உடைந்து குழந்தையின் உடலிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு ஊசியின் உடைந்த பகுதியை மருத்துவர்கள் […]
நடிகை திரிஷா சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் . பிரபல நடிகை திரிஷா தற்போது யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் யுனிசெப் அமைப்பின் சார்பில் “குழந்தைகள் உரிமைகள்” தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம் என்றும், இணையதள குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்போம் என்று கூறினார். மேலும், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை மற்றவர்களால் புரிந்துகொள்ள […]
அத்திவரதர் வைபவத்தில் கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு 2 நாட்கள் விடுமுறையை அறிவித்து மாவட்ட SP உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கும் வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறும். இங்குள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவ நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. முதல் 31 நாட்கள் ( ஜூலை 31) […]
அத்திவரதர் வைபவம் நேற்றோடு நிறைவடைந்த நிலையில் இன்று அத்திவரதர் அனந்தசரஸ் குளத்துக்குள் செல்கின்றார். காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கோவிலாக விளங்கும் வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை 46 நாட்கள் அத்திவரதர் வைபவம் நடைபெறும். இங்குள்ள அனந்தசரஸ் குளத்துக்குள் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த வைபவ நிகழ்ச்சி கடந்த ஜூலை மாதம் 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. முதல் 31 நாட்கள் ( ஜூலை 31) வரை சயன கோலத்தில் […]
அத்திவரதர் தரிசனம் நாட்களை நீடிக்க கோரிய பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு இந்து மகாசபை சார்பிலும் , மற்றொருவர் தரப்பிலும் இரண்டு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.அதில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீடிக்க வேண்டும் என்றும் , 48 நாட்கள் மட்டும் தான் அத்திவரதரை தரிசிக்க வேண்டுமென்றஆகமவிதி ஏதும் இல்லாத நிலையில் அதை நீட்டிக்கலாம் என்றும் , மற்றொரு வழக்கில் தனக்கான வழிபாட்டு உரிமை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அனைவரும் தரிசிக்கும் முறை […]
அத்திவரதர் தரிசனத்தை மேலும் நீடிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 45 நாட்கள் நடைபெறும் இந்த தரிசனத்தை மேற்கொள்ள தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். அத்திவரதர் தரிசனம் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகின்றது.வருகின்ற 17-ஆம் தேதி முதல் அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட இருக்கின்ற சூழலில் அத்திவரதர் தரிசனத்தை […]
அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதர் தரிசனம் ஜூலை 1_ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. 45 நாட்கள் நடைபெறும் இந்த தரிசனத்தை மேற்கொள்ள தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். அத்திவரதர் தரிசனம் இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் இருந்து வருகின்றது.வருகின்ற 17-ஆம் தேதி முதல் அத்திவரதர் மீண்டும் குளத்தில் வைக்கப்பட இருக்கின்ற சூழலில் […]
அத்திவரதர் வைபவ நிகழ்ச்சி நடைபெறும் 3 நாட்கள் காஞ்சிபுரம் நகர பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோவிலில் இருக்கும் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1_ஆம் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். முதல் நாளிலிருந்தே அத்திவரதரை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் வரிசையில் காத்து கிடந்து அத்திவாரத்தாரை வழிபட்டு வருகின்றனர்.இந்நிலையில் வருகின்ற 13-ஆம் தேதி முதல் 16_ஆம் தேதி வரை அத்திவரதர் வைபவம் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. இதற்காக […]
அத்திவரதரின் 8ஆம் நாள் வைபவதில் இளஞ்சிவப்பு பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்திவரதரின் வைபவ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் மட்டுமே நடைபெறும் அத்திவரதர் உற்சவதின் எட்டாம் நாளான இன்று அத்திவரதர் இளஞ்சிவப்பு நிற பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அருள் தருகிறார்.வழக்கம் போல் இன்று அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அத்திவரதர், பொதுமக்களுக்கு காட்சியளித்து வருகிறார் . 40 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் தரிசனம் கொடுக்கும் அத்திவரதரை காண சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அதிகமானோர் […]
பாளையங்கோட்டையில் புதிதாக கட்டிவரும் வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதியில் உள்ளனர். நெல்லை மாவட்டம் பகுதியில் மேலப்பாட்டத்தைச் சேர்ந்த கணேசன் என்பவர் புதிய வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் நள்ளிரவில் அவரது வீட்டில் இரு முறை பலத்த வெடி சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஜன்னல் மற்றும் கதவுகள் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சோதனை நடத்தினர். அப்போது நாட்டு வெடிகுண்டுகள் வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இரண்டு வெடிகுண்டுகள் போலீசார் கைப்பற்றினர். […]
முதுகுளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடையால், முன்னால் சென்ற தனியார் பேருந்து மீது, டேங்கர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அருப்புக்கோட்டையில் இருந்து கமுதி, முதுகுளத்தூர் சாலை வழியாக கடலாடிக்கு நேற்று மதியம் தனியார் பேருந்து வந்தது. அப்பொழுது அங்கிருந்த வேகத்தடையை கடக்க முயன்ற போது பின்னால் வந்த டேங்கர் லாரி பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இதில் லாரியின் முன்பக்கம் உடைந்து சிதறியது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. லாரி, பேருந்து சேதமடைந்து நின்றதால் அந்தப்பகுதியில் நீண்ட நேரம் வாகன போக்குவரத்து […]
வரதட்சணை கொடுமை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் வசிப்பவர் ஜீவா. இவருடைய (வயது 28). இவர் வேன் டிரைவராக வேலை செய்கிறார். இவரும் சேலம் தாதம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி (வயது 23 ) என்பவரும் கடந்த 2½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். இந்த தம்பதிகளுக்கு 1½ வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு கலைச்செல்வி வெளியில் ஓடி வந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயை […]
பெண் பணியாளர் தற்கொலை…!!
கே.கே.நகரில் பெண் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டம் கே.கே . நகர் அடுத்துள்ள அம்பேத்கர் குடியிருப்பை சேர்ந்தவர் வசந்தி. இவருடைய வயது50. இப் பெண் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் கடந்த 10வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது மகன் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இந் நிலையில் போதிய வருமானம் இல்லாமல் தனிமையில் வசித்து வந்த வசந்தி கடந்த சில தினங்களாக மிகுந்த […]
குடிபோதையில் சண்டையிட்ட தந்தையை கோபத்தில் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் கோவிந்தராஜ் நகரில் வசிப்பவர் சேகர் இவருடைய வயது 48. அதே இடத்தில் உள்ள சோப்பு கம்பெனியில் பணியாற்றி வந்தார். இவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 23ம் தேதி வழக்கம்போல் வீட்டிற்கு குடிபோதையில் வந்த சேகர் அவரது மகன் (வயது 28) நரேஸ் குமாரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அவரது மகன் பணம் இல்லையென கூறினார். […]
முக்கூடல் அருகே திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்துள்ள இலந்தகுளம் கிராமத்தில் வசிப்பவர் செல்வம் என்ற செல்வராஜ். 30வயதான இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். நீண்ட நாளாக தனது பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்கும்படி கூறியுள்ளார். அவரின் பெற்றோர் செல்வராஜிற்கு பல பகுதிகளில் பெண் பார்த்தனர். ஆனால் அவருக்கு எந்த பகுதியிலும் பெண் கிடைக்கவில்லை. இதனால் மகனுக்கும், பெற்றோருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது விரக்தியான செல்வராஜ் வீட்டிற்குள் […]
மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதியினரும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மதுரை மத்திய சிறையில் தேனி ,திண்டுக்கல் ,நெல்லை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து தண்டனை கைதிகள், சிறை கைதிகள் என 1000 திற்கும் அதிகமானோர் இருப்பதால் உணவு , சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அதிகமான கட்டுப்பாடுகளை சிறைத்துறை நிர்வாகம் விதித்தது. இதன் காரணமாக கைதிகளுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கைதிகள் சிறையின் சுவர் மீது ஏறி போலீசாரை நோக்கி கற்களை வீசி கோஷங்களை எழுப்பினர். தாங்கள் போராட்டங்களை கைவிட்டால் சிறைக்காவலர்கள் […]
பூம்புகார் அருகே மீனவர் வீட்டில் திருடிய திருடர்களை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர். நாகை மாவட்டம் பூம்புகார் அருகே உள்ள வானகிரியை சேர்ந்தவர் சரவணன் (வயது 30) மீனவர். இவர் கடந்த 18-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு கும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட திருடர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 12 பவுன் நகையையும் , ரூ. 3 ஆயிரத்து 500 ரொக்கத்தையும் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில்நேற்று வீடு திரும்பிய சரவணன் நகை பணம் திருடப்பட்டிருப்பதை […]
உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்துள்ள ஆசனூர் ராஜவீதியில் வசிப்பவர் சரவணன் வயது 34 . இவர் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தந்தை குணசேகரன் என்பவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் உடல்நிலையை கவனிப்பதற்காக டெல்லியிலிருந்து ரயில் மார்க்கமாக விழுப்புரம் வந்தடைந்தார். பின்னர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி உளுந்தூர்பேட்டை ஆசனுர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தில் […]
மதுபான கடைகள் விடுமுறை நாளில் மதுபானத்தை பதுக்கி அதிக விலைக்கு விற்றவர்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர். மக்களவை தேர்தல் நாளில் மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கி அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை அதிகாரி சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய முறையில் தகவல் கிடைத்தது. காவல்துறை அதிகாரிக்கு கிடைத்த தகவலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் சட்டவிரோதமாக பதுக்கி மதுபானம் விற்பனை செய்பவர்களை கைது செய்து மதுபாட்டில்களை […]