கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதாக மார்க்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த இரண்டு நாட்களாக காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் 10 முதல் 14 ரூபாய்க்கும், தக்காளி, கேரட், பீட்ரூட் உள்ளிட்டவை கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலையை தவிர மற்ற அனைத்து காய்கறிகளின் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் […]
Tag: Districtmews
கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார். கோடிமுனை பகுதியைச் சேர்ந்த இவர் பணி நிமித்தம் காரணமாக குவைத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்றாம் தேதி குவைத்தில் இருந்து வந்த இவர் சிறப்பு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். இவரது ரத்த மாதிரிகள் நெல்லை இரத்த பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், […]
BIGBASKET அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆர்டர் செய்யலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. BIGBASKET , அமேசான் உள்ளிட்டவற்றில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் உபயோக பொருட்கள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யலாம் எனவும், அவற்றை டெலிவரி செய்வதற்கு தடை இல்லை எனவும், சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக சமைத்த உணவை டெலிவரி செய்யும் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.