இரண்டாம் போக நெல் சாகுபடியை கைவிட கூறிவிட்டு முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை வீணாக திறந்ததற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தேனி கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள விவசாயிகள் பல ஆண்டுகளாக இரண்டாம் போக நெல் சாகுபடியை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை நம்பியே தொடங்குவர். அந்த வகையில் கடந்த வருடம் இரண்டாம் போக நெல் சாகுபடி தொடங்கிய போதிலும் போதிய மழை இல்லாததால் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப் படாமல் விவசாயிகள் […]
Tag: DistrictNews
திருநெல்வேலி அருகே சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜவகர் அலி. இவர் சேரன்மகாதேவி சாலையில் இருசக்கர வாகனங்களுக்கு சீட் தைத்து கொடுக்கும் பணியை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது செல்போனில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்தும், அதை பார்த்தும், பின் மற்றவர்களுக்கு சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வந்துள்ளார். இதனை தொழில்நுட்பப் பிரிவின் மூலம் கண்டறிந்த […]
திருவாரூரில் டெல்டா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட பின்பும் எண்ணெய் கிணறு அமைப்பதாக கூறி நிலத்தை தோண்டுவது ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் அங்குள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. அந்தவகையில் அமிர்தக்கவி, நடராஜன் ஆகிய இரண்டு விவசாயிகளின் நிலங்களை 20 ஆண்டுகளுக்கு முன்பே குத்தகைக்கு எடுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த நிலத்தில் 2 எண்ணெய் […]
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாத்தா சொத்தை பேரனுக்கு வழங்க கோரி ஏட்டாக பணிபுரியும்பெண் காவலரின் கணவன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது கலெக்டர் அலுவலகத்தில் சந்தேகப்படும்படி தாடியுடன் மர்ம நபர் ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். அவரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சுற்று சுவர் மீது ஏறி குதித்து உள்ளே […]
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரச்சனையை கூறி தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு மக்கள் தங்களது பிரச்சனைகளை கூறி மனுக்களை அளித்தனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்டது. அந்த வகையில் திருப்பத்தூர் வேடியப்பன் நகர் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றையதினம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பப்பரப்பா என்ற பெண் மனு கொடுப்பதாக கூறி உள்ளே நுழைந்துள்ளார். நுழைவுவாயிலில் காவல்துறை அதிகாரிகள் அவரது பையை சோதனையிட்டபோது அதில் மண்ணெண்ணெய் கேன் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் இவ்வாறு தெரிவித்தார், […]
மனைவியின் கள்ளக் காதலால் ஏற்பட்ட அவமானத்தால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உப்புத்துறை பாளையத்தில் வசித்து வருபவர் வேலுச்சாமி. இவர் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுதா தாராபுரம் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் வேலுச்சாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல் நிலைத்தில் தகவல் தெரிவிக்க […]
திருவள்ளூர் அருகே பானிபூரி வியாபாரி பேருந்து சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பகுதியை அடுத்த மணலிபுதுநகரை சேர்ந்தவர் பர்வீன். இவர் வடமாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து இங்கே பானிபூரி விற்பனை செய்து வருகிறார். இவர் மணலி புதுநகர் பகுதியில் வீடு எடுத்து தங்கி அதே பகுதியில் பானிபூரி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் பானிபூரி தயாரிக்க தேவையான பொருட்களை வாங்க நேற்றையதினம் மணலி புதுநகரில் இருந்து […]
திருவண்ணாமலை அருகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி நியாயம் கேட்டு தனது குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட தோறும் உள்ள முக்கிய அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் கல்வி உதவித்தொகை திருமண உதவித்தொகை முதியோர் உதவித்தொகை வங்கி கடன் உள்ளிட்ட பிரச்சினைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட […]
வேலூர் அருகே மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தாய் காவல் நிலையத்தில் மருமகன் மீது புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவிதா என்பவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் வேலூர் மாவட்டத்தில் யோகா பயிற்சி பள்ளி ஒன்றில் யோகா ஆசிரியர் பணி கிடைத்தது. இந்நிலையில் அதே பகுதியில் தங்கி பணிபுரிந்து வர, கணவன் மனைவி இடையே […]
விழுப்புரம் நீதிமன்றத்தில் விடுதிக் காப்பாளர் பணிஇடமாற்றத்திற்கு ரூபாய் ஒரு லட்சம் லஞ்சம் கேட்ட வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஐடிஐ மாணவ விடுதியில் காப்பாளராக அதியமான் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான விடுதியில் காப்பாளராக பணியாற்ற விரும்பி இடமாறுதல் அளிக்கக் கோரி கடந்த 2013ம் ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அதிகாரியான வந்தவாசி என்பவரை அணுகினார். […]
விருதுநகர் அருகே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களது 11 மாத குழந்தையை துடிதுடிக்க கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் உள்ள அரசு பணியாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் அமல்ராஜ். இவரது மனைவி சம்சீதா இவர்களது 11மாத குழந்தை சில நாட்களுக்கு முன்பு நீரில் மூழ்கி இருந்ததாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் கணவன் மனைவி இருவரிடமும் விசாரணை மேற்கொள்கையில், பல திடுக்கிடும் […]
கடந்த 15 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களை முழுமையாக விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப்-1 தேர்வு என்னும் ஒரு போட்டித்தேர்வு உண்டா இல்லையா என்பதே பலகாலம் மறைக்கப்பட்டிருந்தது. இப்படி இருக்க முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமெனில் குறைந்தது இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்களை எடுத்து அதனை ஆராய வேண்டும். இதன் மூலமாகத்தான் முழுமையான முறைகேடுகளை கண்டறிய முடியும் என்று […]
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை பணம் கார் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் மங்கல பகுதியில் வசித்து வரும் நந்தகோபால் என்பவர் எஸ்பிஐ வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். சனிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்ற அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பிய போது வெளிப்புற கேட்டின் தாழ்பாள் சேதப்படுத்தப்பட்டு உட்பக்கம் நிறுத்தப்பட்டிருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஷிப்ட் கார் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். […]
சென்னை நந்தனத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை துல்லியமாக பதிவு செய்யும் தானியங்கி கேமராக்கள் இயக்கத்தை சென்னை காவல் ஆணையர் AKவிசுவநாதன் துவக்கி வைத்தார். வாகனங்களை கண்காணிப்பதுடன் நம்பர் பிளேட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள எண்களை துல்லியமாக பதிவு செய்து சேமித்து வைக்கும் திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு, சிக்னல்களில்விதிமீறல், பைக் ரேஸ்ஸில் ஈடுபடுவோர் மற்றும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களை இதன் மூலம் விரைவாக கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சென்னை […]
சேலம் அருகே ஆம்ணி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ1,00,00,000 மதிப்பிலான தங்க வைர நகைகள் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் BMG ஜூவல்லரி என்ற பெயரில் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு வேலை செய்யும் கௌவுதம் என்பவர் சனிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் உள்ள தலைமை கிளையில் இருந்து சுமார் ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை பேக்கில் வைத்துக் கொண்டு ஆம்னி பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை […]
திருச்சியில் 2 குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்த அதிகாரிகள், அவர்கள் விற்கப்பட்ட குழந்தைகளா? அல்லது கடத்தி வரப்பட்ட குழந்தைகளா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் இரண்டு தம்பதியினர் வேறொரு தம்பதியினரிடம் இருந்து குழந்தையை வாங்கியதாகவும், அதேபோல் மற்றொரு தம்பதியினர் வேறொரு தம்பதியினருக்கு தங்களது குழந்தையை விற்றதாகவும் குழந்தை பாதுகாப்பு மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்க, திருச்சி மாவட்ட காவல் நிலையத்தில் துறை சார்பில் […]
நெல்லையில் முழுமையாக கட்டாத மேம்பாலத்தை ஆய்வு செய்ய ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. அதன் முதல் பகுதியாக சென்னை முதல் மதுரை வரை ரயில் பாதை அமைக்கப்பட்டு பின் அங்கிருந்து நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. தற்போது மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால் விரைவில் பணி தொடங்கப்படும் […]
குப்பைகளை தரம் பிரித்து தராவிட்டால் எங்களுக்கு அபராதம் விதிக்க அனுமதி உண்டு அதை செய்யக்கூடாது எனில், மக்கள் தாங்களாகவே முன்வந்து உதவ வேண்டும் என்று ஆம்பூர் நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை அடுத்த ரெட்டிதோப்பு, தார்வழி உள்ளிட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனை வேலூர் மாவட்ட நகராட்சி ஆணையர் ஆலோசனைகளின் படி பல்வேறு மாறுதல்கள் செய்து திட்டத்தை ஆம்பூர் நகராட்சி செயல்படுத்தியுள்ளது. […]
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தர கோரி 4 லட்சம் இளைஞர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற இயக்கம் முடிவு செய்துள்ளது. திருவாரூரில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட குழு கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் அவ்வியக்கத்தின் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் இளைஞர்களின் நலனுக்கான பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தமிழகம் முழுவதும் சுமார் 96 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு வேலைக்காக […]
தூத்துக்குடி அருகே 14 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக மணமகன் உட்பட 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் மகுடம் பகுதியை சேர்ந்த தனபால் என்பவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை கடந்த வாரம் எட்டையபுரம் பகுதியில் உள்ள வெக்காளியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சமூகநலத்துறை அதிகாரி பேச்சியம்மாள் என்பவர் தூத்துக்குடி மாவட்ட அனைத்து […]
திருப்பூர் அருகே வீணாகும் தண்ணீரை சரிசெய்ய கோரி நடுரோட்டில் வேஷ்டி சட்டையை கழட்டி முன்னாள் திமுக செயலாளர் குளியல் போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையை காட்டிலும் அதிகமான தண்ணீர் பஞ்சம் விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வெங்கடேஸ்வரா நகர் பகுதிக்கு தண்ணீர் வினியோகிக்க பயன்படும் குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலைகளில் வீணாக […]
திருவள்ளூரில் சினிமா நடிகர்களுக்கு கார் வாடகைக்கு தேவைப்படுவதாகக் கூறி எடுத்துச்சென்று ரூபாய் ஒன்றரை கோடி அளவில் மோசடி செய்து தலைமறைவாகிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கார் உரிமையாளர்களை சந்தித்த மூன்று பேர் சினிமாகாகவும், தனியார் கம்பெனிகளுக்காகவும் கார் வாடகைக்கு வேண்டும் என்றும் நாளொன்றுக்கு 3 ஆயிரம் வாடகை தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி அப்பகுதியைச் சேர்ந்த 19 பேரிடம் காரை பெற்றுச் சென்றனர். […]
திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்ற பௌர்ணமி கிரிவல ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். குறிப்பாக பௌர்ணமி நாளன்று கிரிவலம் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். அந்த வகையில், இந்த மாத பௌர்ணமிக்காக தமிழகமெங்குமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 14 கிலோமீட்டர் நகர் பகுதியின் மையத்தில் உள்ள மலையைச் சுற்றி கிரிவலம் மேற்கொண்டனர். விடியவிடிய நடைபெற்ற […]
வேலூர் அருகே தமிழகம் முழுவதும் இயங்கி வரும் பிரபல ஏஜென்சீ ஷோரூமில் திருடர்கள் கைவரிசை காட்டி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வரும் பிரபல சத்யா ஏஜென்சி கிளை ஒன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் செயல்பட்டுவருகிறது. இந்த ஷோரூமில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று ரூபாய் 40 ஆயிரம் ரொக்கப்பணம் 3 செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார். அதேபோல் […]
விழுப்புரம் அருகே வாலிபரை தற்கொலைக்கு தூண்டிய தாய் மகனை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த நயம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் சிங்கப்பூரில் ஐந்து ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் திடீரென பெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள அவரது தற்கொலைக்கு அதே பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் தான் காரணம் என்று கூறிய […]
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4.5 கிலோ கஞ்சா கடத்தி வந்த நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு நபரை அழைத்து விசாரணை செய்தபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படை […]
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சாலையோரத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து தீப்பிடித்தது இதில் 2 பேர் கருகி உயிரிழந்தனர். திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்குசென்று விட்டு வீடு திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டது. இன்று காலை திருஈங்கோய்மலை என்ற இடத்தில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் விபத்துக்குள்ளானதில் தீப்பிடித்து எரிந்தது. ஈரோடு மாவட்டம் கொளம்பலூரை சேர்ந்த ஓட்டுனர் மணிகண்டன் (27) மயில்சாமி (35) என்ற இருவர் தீயில் கருகி உயிரிழந்தனர். வேனில் பயணம் செய்த பயணிகள் […]
காரியாபட்டி அருகே ஒரு வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ் – சுஷ்மிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரு வயது மகன், வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் குழந்தையின் தந்தையே தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டு கொலை செய்ததாகவும் கூறி குழந்தையின் தாயார் காரியாபட்டி காவல் […]
காதலித்து ஏமாற்றப்பட்ட வடமாநில இளம்பெண் ஒருவரை, காவல்துறையினர் மீட்டு பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். சேலம் அருகே உள்ள கருப்பூரில் பிப்ரவரி 2ஆம் தேதி இரவு 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் சுற்றி திரிந்தார். தனியாக வந்த அந்தப் பெண்னை பார்த்த கருப்பூர் காவல்துறையினர், அவரை அழைத்து விசாரித்தனர். அதில், அந்த பெண்ணின் பெயர் ரீபா (எ) ராணி என்றும், மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், ஆந்திர […]
2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் கோயில் கலசத்தில் இரிடியம் இருப்பதாகக் கூறி ஐந்து லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திமுக பிரமுகர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மூலனூர் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (50). இவர் சந்தையில் ஆடு விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இவரிடம் மூன்று பேர் வந்து கோபுர கலசத்தில் வைக்கும் இரிடியம் தங்களிடம் இருப்பதாகவும் அதை வீட்டில் வைத்தால் வசதி வாய்ப்புகள் குவியும், […]
தேனியில் குடும்ப தகராறு காரணமாக கணவனே மனைவியை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூட்டிலங்கோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி அம்மணி. இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். கடைசி மகள் அம்பிகாவை தவிர மற்ற அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கிருஷ்ணனுக்கும் அவரது மனைவி அம்மணிக்கும் இடையே அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்படுவது வழக்கம் .இந்நிலையில் நேற்றைய […]
கோவையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி காயமடைந்தவர்களை தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கோரிப்பாளையம் அருகே வேகமாக சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாளையத்தை சேர்ந்த கோபால் மற்றும் பச்சை பாளையத்தை சேர்ந்த தங்கவேலு ஆகியோர் காயம் அடைந்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தன்னுடைய சொந்தப் […]
நாகையில் கந்தூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளை இசை புயல் AR ரஹ்மான் நேரில் வந்து பார்வையிட்டார். நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 463 ஆண்டு நடைபெறும் கந்தூரி விழா. கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமும், பின் நாகூர் ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் […]
திருமணமான 8 மாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் ஆத்திரம் அடைந்த கணவன் 2 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பார்வதிபுரம் நகரில் வசித்து வருபவர் கமலகாந்த் என்ஜினீயரான இவருக்கும் புள்ளம்பாடி பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர் ஜீவிதா என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் […]
நெல்லையில் தொழிலதிபரிடம் கள்ளநோட்டு கொடுத்து ரூ12,50,000 மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பலில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் வில்பரின். இவர் பால் பண்ணை தொழில் அதிபரும், ஜவுளி மொத்த வியாபாரியும் ஆவார். இந்நிலையில் இவருக்கும் சிவகாசியை சேர்ந்த தயாளு என்பவருக்கும் தொழில்ரீதியாக பழக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தனது தொழிலை பெருக்க ஒரு கோடி ரூபாய் கடன் வேண்டும் அதை வாங்கி தரமுடியுமா என்று கேட்டுள்ளார். அதன்படி, […]
தென்தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்களில் 76 சிற்றின வகைகளில் 46,000 க்கும் மேற்பட்ட பறவைகள் கணக்கெடுப்பில் பதிவாகியுள்ளன. தாமிரபரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது அகத்தியமலை மக்கள் சார் இயற்கை வள காப்பகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவர்கள், விவசாயிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் ஆறு குழுக்களாக பிரிந்து 51 நீர் நிலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சுமார் 76 சிற்றின வகைகளில் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் […]
தூத்துக்குடி அருகே திருமணமான 5 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த பெரியசாமிபுர கிராமத்தை சேர்ந்தவர் பாக்கிய ஜார்ஜ். இவரும் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் மகள் மேரி என்பவரும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் நேற்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மேரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல் நிலைத்தில் தகவல் […]
திருவள்ளூரில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக கரும்பு கடைக்காரர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் மணவாளர் நகர்ப்பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு உள்ளதாக வந்த தகவலை அடுத்து சமூக நலத்துறை அதிகாரிகள் அப்பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பெரிய ஜவுளிக் கடைகளில் தான் அதிகமான குழந்தைத் தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தது. ஆனால் அங்கெல்லாம் சோதனை மேற்கொள்ளாமல் அப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கரும்பு ஜூஸ் கடையில் 15 வயது […]
பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் மேற்கொள்வதற்கு உகந்த நேரம் எப்போது என்பதை திருவண்ணாமலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பௌர்ணமி கிரிவலத்திற்கு பிரசித்தி பெற்ற கோவில் என்றால் அது திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் தான். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று இந்த கோவிலில் தமிழகமெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்ள வருவார்கள். அந்த வகையில், இந்த மாதம் வரக்கூடிய சிறப்பு பவுர்ணமி தினத்திற்கு கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது என்பதை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி […]
சாலை விபத்துக்களை தடுக்கும் வண்ணம் பல்வேறு சோதனை தேர்வுகளுக்கு பின்னரே வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என போக்குவரத்து தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். சாலை விபத்துகளை தவிர்ப்பதற்காக வேலூர் மண்டல அளவில் சாலை பாதுகாப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து துறை தலைமை செயலாளர் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில்பேசிய அவர், 2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் தான் அதிக அளவில் சாலை விபத்து நடைபெற்றது. அந்த ஆண்டில் மட்டும் சுமார் 17 […]
பத்து மாதங்களுக்குப் முன்பு நண்பர்களால் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டவரின் எலும்பு துண்டுகளை கண்டெடுத்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கரிகாலன் நகரை சேர்ந்தவர் லோகேஷ் (21). ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவரை காணவில்லை என்று அவரது தந்தை தனசேகர், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பல மாதங்களாக […]
திண்டுக்கல் மாவட்டத்தில் 6 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சிறுவர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணவன் மனைவி இருவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 10 வயது மகன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். […]
திண்டுக்கல்லில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமியை மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கணவன் மனைவி இருவர் தனியார் நூற்பாலையில் வேலை செய்துவருகின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். பத்து வயது மகன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், மகள் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் […]
கடலூர் அருகே அடமானம் வைப்பது போல் வைத்து ரூ98 லட்சம் பெற்றதோடு அடமானம் வைத்த பொருளையும் திருடி சென்று விற்ற வியாபாரிகள் உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ரூட்டியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் முந்திரி வியாபாரிகளான செல்வமணி மற்றும் கலைமணி ஆகிய இருவரும் தலா 560 என்ற கணக்கில் 1120 முந்திரி முட்டைகளை அடமானம் வைத்து ரூபாய் 90 லட்சம் கடனாக பெற்றனர். இதற்கு பரசுராமன் மற்றும் […]
கோவையைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கும், கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் கல்லூரி படிப்பை படித்து வரும் மாணவன் தயாநிதிக்கும் இடையே முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து மாணவன் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை பாலியல் […]
செங்கல்பட்டு அருகே குப்பைமேட்டில் திடீரென குழந்தைகள் சாப்பிடக்கூடிய சாக்லேட்டுகள் ஆயிரக்கணக்கில் குவிந்தவண்ணம் கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மிகப் பழமையான பயன்படுத்தப்படாத சிவன் கோவில் ஒன்று உள்ளது. இதன் அருகே அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களும் வியாபாரிகளும் அவ்வப்போது வந்து குப்பையை கொட்டி செல்வதால் நாளடைவில் அது குப்பை மேடாக மாறியது. இந்நிலையில் நேற்றைய தினம் பொது மக்கள் அப்பகுதியில் குப்பை கொட்ட சென்றபோது, அங்கே 500க்கும் மேற்பட்ட சாக்லேட்டுகள் குவிந்து கிடந்தன. […]
செங்கல்பட்டில் ஒரே நாளில் 2 இடங்களில் நடந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் நாகராஜன். கூலித் தொழிலாளியான இவர் தனது அண்ணன் வீட்டில் இல்ல நிகழ்ச்சிக்காக பூந்தமல்லி அருகே உள்ள ஐயப்பன்தாங்கல் பகுதிக்கு வந்து இருந்தார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 6 பவுன் தங்க […]
சென்னையில் சொந்த உறவினர் வீட்டிலேயே ஜன்னலை உடைத்து 22 பவுன் நகை ரூபாய் 15,000 ரொக்கத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை மாவட்டம் திருவேற்காடு பகுதியை அடுத்த ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி மைதிலி. கணவன் மனைவி இருவரும் திருவேற்காடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்ற மாதம் இவர்களது வீட்டில் 22 பவுன் நகை ரூபாய் 15 ஆயிரம் ரொக்கப் பணம் திருடு போனது. […]
ஈரோட்டில் நடைபெற்ற விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் விவசாயி ஒருவர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் மாதம்தோறும் காலிங்கராயபுரம், கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்த வகையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டத்தில் தங்களது குறைகளை சொல்ல நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இந்தக் கூட்டத்தில் விவசாயிகளில் ஒருவர் பேசியபோது, நிர்வாக அலுவலர்கள் சரியாக […]