தூத்துக்குடியில் கணவன் மற்றும் மகன்கள் செலவுக்கு பணம் தராததால் மனைவி தூக்கில் தொங்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புன்னக்காயல் பவுலா நகரில் வசித்து வருபவர் ராஜ். இவரது மனைவி பெயர் ராஜகன்னி. ராஜ் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் 3 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில் கணவர் ராஜ் மற்றும் அவரது இரண்டு மகன்களும் கடலில் மீன்பிடி தொழில் […]
Tag: DistrictNews
திருவள்ளூரில் திடீர் முடிவாக பெண் ஒருவர் தூக்கில் தொங்க, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை அடுத்த ஆர்கே பேட்டை கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார். இவர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகிமா இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூன்று குழந்தைகளும் பள்ளிப் படிப்பை படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் எலக்ட்ரீசியன் வேலையை முடித்து விட்டு […]
பணியிடைமாற்றம் செய்த வேதனையினால் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய வாலிபர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பின்னால் விழுப்புரம் to காட்பாடி வரை செல்லும் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தில் நேற்றைய தினம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்றதும் ரயில்வே காவல் நிலைய அதிகாரிகளுக்கும் […]
விருதுநகரில் தரமற்ற தண்ணீரால் ஏற்பட்ட சிறுநீரக கல் பிரச்சனை ஏற்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள 450க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மக்கள் நிலத்தடி நீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகமானது பல கிராமங்களுக்கு செய்யப்பட்டு வந்தாலும் , இன்னும் ஒரு சில கிராமங்களில் மக்கள் நிலத்தடி நீரையே குடிநீர் ஆதாரமாக நம்பி உள்ளனர். இந்நிலையில் பாவாலி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சீனியாபுரம், […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 3 1/2 வயது குழந்தை தாக்கப்பட்ட சம்பவத்தில் தாயின் கள்ளக்காதலனை போலீசார் விசாரித்து வருகின்றனர். கணவரை பிரிந்து தனது 3 1/2 வயது மகளுடன் வசித்து வந்தவர் நந்தினி. இந்த நிலையில் கள்ளக்காதலனுடன் மதுபோதையில் இருந்த நந்தினி தன் மகளுக்கு மது கொடுத்ததோடு, பலமாக மகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ரத்த வாந்தி எடுத்ததால் குழந்தையைக் […]
வேலூரில் காதலனை தாக்கிவிட்டு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். வேலூர் பச்சையப்பாஸ் துணி கடையில் பணிபுரிந்து வரும் அஜித்தும் அதே கடையில் பணிபுரிந்து வரும் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சனிக்கிழமை இரவு கோட்டை பூங்காவில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு கஞ்சா போதையில் வந்த 3 பேர் அஜித்தை தாக்கிவிட்டு பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. […]
தந்தை பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி மதுரையில் நடிகர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்த ஆதித்தமிழர் பேரவையினர் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் துக்ளக் இதழின் 50 வது ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு ஆதித்தமிழர் பேரவையினர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்ததோடு அவரை கைது செய்ய வேண்டும் என முழக்கங்களையும் எழுப்பினர். பொம்மை […]
சேலத்தில் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி கொள்முதல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் மரவள்ளி கிழங்கு அதிகம் உற்பத்தி செய்யப்பட அதிலிருந்து உற்பத்தியாகும் ஸ்டார்ச் மற்றும் ஜவ்வரிசி ஆகியவை கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் மகாசிவராத்திரி பண்டிகை வருவதால் வடமாநில வியாபாரிகள் அதிகளவில் வந்து கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் விலை அதிகரித்து டிசம்பர் மாதம் ஸ்டார்ச் 90 கிலோ அரிசி மூட்டை 4,150 […]
கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி தீப்பற்றி எரிந்தது. அரியலூர் மாவட்டம் ஆலத்தூரில் ராம்கோ சிமெண்ட் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு சிமென்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் கற்களை ஏற்றிக்கொண்டு சேலம் வாழப்பாடி நோக்கி புறப்பட்ட சரக்கு லாரி கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியின் பின்பக்கத்தில் அதிக அளவில் புகை வெளியேற ஓட்டுநர் லாரியை உடனடியாக சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் லாரி […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பட்டாணி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி பள்ளங்கி கோம்பை பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பட்டாணி பயிரிடப்பட்டுள்ளது. அங்கு நிலவும் பனிப்பொழிவு மற்றும் இதமான காலநிலை காரணமாக பட்டாணி நல்ல விளைச்சல் கண்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ 40 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது 55 முதல் 60 ரூபாய் வரை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழுப்புரத்தில் கரும்பு கேட்டு கொடுக்காததால் வியாபரியை மர்ம ஆசாமி ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே கரும்பு கேட்டு கொடுக்காத ஆத்திரத்தில் வியாபாரியை கத்தியால் குத்திய போதை ஆசாமியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். வசந்த கிருஷ்ணா புரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் ஆற்றுதிருவிழாவில் கரும்பு விற்பனை செய்து கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் அவரிடம் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் பணம் கொடுக்காமல் கரும்பு கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. […]
திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் 54 அடி உயர புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும் பெரிய கோவில் என்று அழைக்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜசுவாமி ஆலயத்தின் இரண்டாவது பிரகாரத்தில் வன்மீகநாதர் சன்னதி எதிரே இருந்த 98 ஆண்டு பழமை வாய்ந்த கொடிமரம் பழுதடைந்தது. இதனால் கேரள மாநிலத்தில் உள்ள மலைப் பகுதியில் இருந்து 54 அடி உயர தேக்கு மரம் கொண்டுவரப்பட்டு ஆகம விதிப்படி புதிய மரம் உருவாக்கப்பட்டது. […]
கரூரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. கரூர் மாவட்ட போக்குவரத்து துறை சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை 200க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். சாலை விதிகளை பின்பற்ற வலியுறுத்தி நடந்த இந்த பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் மற்றும் எஸ்பி பாண்டியராஜன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சென்னை ஐஸ்ஹவுஸ் நடேசன் சாலை பகுதியைச் சேர்ந்த ராம் குமார் என்பவரை 10 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ஐஸ்ஹவுஸ் பக்கத்தில் வசித்து வருபவர் ராம்குமார். இவர் AC மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று தனது வீட்டின் அருகே நின்று ராம்குமார் செல்போன் பேசி கொண்டிருந்த போது அங்கே வந்த 10 பேர் கொண்ட கும்பல் அவரை ஆட்டோவில் கடத்தி சென்றது. இது தொடர்பாக வழக்கு […]
அரசியலில் எனது ஆதரவு எப்போதும் என் தந்தை கமலஹாசனுக்கு தான் என்று நடிகை ஸ்ருதிகாசன் தெரிவித்துள்ளார். செம்மனூர் இன்டர்நேஷனல் ஜுவல்லர்ஸ் இன் 46வது கிளையை மதுரையில் நகைக்கடை நிறுவனர் பாபிசிம்நூர் மற்றும் திரைப்பட நடிகை சுருதிஹாசன், அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். பின்னர் உலக அமைதிக்காக 812 கிலோமீட்டர் ஓடிய பாபி சிம்மநூரின் சாதனையை மையமாக வைத்து எழுதப்பட்ட USEFULL USELESS என்ற புத்தகத்தை நடிகை சுருதிஹாசன் வெளியிட்டார். பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]
ஈரோட்டில் பழுதடைந்த பாலத்தை சரி செய்யக்கோரி 10 ஊர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை முன்பு உள்ள பழுதடைந்த பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் கட்ட டெண்டர் விட்டு பல மாதங்களாகியும் பணிகள் தொடங்கப்படாமல் இருப்பது அப்பாலத்தை போக்குவதற்கு பயன்படுத்தி வரும் மற்ற கிராம மக்களை அவதிக்குள்ளாகியுள்ளது. மன்னடி சாலையில் உள்ள அந்தப் பாலத்தில் ஓட்டை விழுந்ததால் போக்குவரத்துக்கு 2018 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து புதிய பாலம் கட்ட […]
ஜெயலலிதா ஆட்சியில் தன்னலமற்று உழைத்த உழைப்பால் தான் இந்த பதவிக்கு வந்ததாகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அரசு திட்டங்களை கிராமம் முதல் நகரங்கள் வரை மக்களுக்கு துரித நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தொண்டர்களை கேட்டுக் கொண்டதோடு, அது குறித்த விளக்கத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமென்றார். தொடர்ந்து பேசிய அவர், மாண்புமிகு முன்னாள் […]
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கட்டப்பட்டுள்ள சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கடந்த 3 ஆண்டுகளாக சீரடியில் உள்ளது போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக் கலையுடன் 20 ஏக்கர் பரப்பளவில் 60,000 சதுர அடியில் 30 கோடி ரூபாய் மதிப்பில் சாய்பாபா கோவில் கட்டப்பட்டுள்ளது. இதையடுத்து கும்பாபிஷேகம் விழா கடந்த 17ம் தேதி தொடங்கி காவிரி ஆற்றிலிருந்து 1,008 குடங்களில் எடுத்து வரப்பட்ட தண்ணீர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. இந்த […]
வேலூர் காட்பாடியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை அடுத்த பாலாஜி நகரில் வசித்து வரும் ராமனைய்யா குடியாத்தம் சாலையில் சாந்தி கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது முன்பக்க கதவு மற்றும் பீரோ பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த […]
பெரியார் குறித்து பேசியதற்கு ரஜினிகாந்த் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று பாஜகவின் தேசிய செயலாளர் H.ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயிலான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தரிசனம் செய்ய வந்தார். அங்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலைகள் பொன்னாடைகள் அணிவிக்கபட்டு கௌரவிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கர்நாடகா உத்திரபிரதேசம் மாநிலங்களைப் போல ஒரு சில அமைப்புகளை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டிய […]
கொடைக்கானலில் விபசார தொழிலில் வடமாநில இளம்பெண்களை ஈடுபடுத்திய புரோக்கர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் தனது நண்பர்களுடன் கொடைக்கானலில் சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலா சென்ற இடத்தில் அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த மோகன் ராஜா என்பவர் தன்னிடம் குறைந்த வாடகையில் அறைகள் வசதி இருக்கிறது அதில் வடமாநில இளம்பெண்கள் இருக்கிறார்கள் பணம் கொடுத்தால் அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது நண்பர்களை கூட்டிக்கொண்டு […]
தர்மபுரியில் மகன் மகளின் உதவியுடன் மனைவியே கணவன் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு. இவர் தர்மபுரியை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நாள்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவி மகன் மகளுடன் போதையில் தங்கராசு சண்டையிடுவது வழக்கம். இதையடுத்து சம்பவத்தன்று மது அருந்திவிட்டு தனது மனைவி, மகன் மகளுடன் சண்டையிட்டு உள்ளார் தங்கராசு. இதையடுத்து […]
கடலூரில் கர்ப்பிணி பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த கார்குடல் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியசீலன். இவரும் 7 மாத கர்ப்பிணியான இவரது மனைவி கிருஷ்ணவேணியும் நேற்று காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது முன்விரோதம் காரணமாக 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கியது. இதில் படுகாயமடைந்த இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதையைடுத்து கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமாக தாக்கிய […]
திண்டுக்கல் நாகல்நகர் ஜும்மா பள்ளிவாசலில் கந்தூரி விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட சமத்துவ பிரியாணியை திரளானோர் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர். திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரையடுத்த அனைத்து மதத்தினறிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இந்த கந்தூரி விழாவானது முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு நடைபெற்ற விழாவில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது. காலை 7 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பிரியாணி வழங்கப்பட்ட நிலையில் நீண்ட வரிசையில் […]
சேலம் அருகே நிலத்தை எழுதி தருமாறு கேட்டு முதியவரை கழுத்தை அறுத்து கொன்றதாக அவரது மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் சிவதாபுரம் பகுதியை அடுத்த ஆண்டியா பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. 62 வயதான இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மகன் பூபதி குடும்பத்துடன் தனியாக வசித்து வரும் நிலையில், தந்தை வசம் உள்ள நிலத்தை எழுதி தருமாறு கேட்டுள்ளார். இது தொடர்பாக இன்று காலை ஏற்பட்ட தகராறு முற்றி தந்தை பழனிச்சாமியை […]
திருச்சி மாவட்டம் பொத்தமேட்டுப்பட்டி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு, போட்டியில் காளை முட்டி தூக்கியதில் சிறுமி உட்பட 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி அருகே புனித வியாகுல மாதா ஆலய மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண மணப்பாறை வட்டாட்சியர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 650 காளைகள் […]
கிணத்துக்கடவு அருகே ஊராட்சி மன்றத் தலைவர், அவருடைய கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோவிந்தாபுரம் ஊராட்சிப் பகுதியில் நேற்று ஒருதரப்பினர் பொங்கல் விழா நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ஊராட்சி மன்றத் தலைவர் ஆனந்தி, அவருடைய கணவர் ஆகியேர் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இன்று காலை கிணத்துக்கடவு காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கவந்த பொதுமக்கள் திடீரென காவல் நிலையம் […]
செங்கல்பட்டில் விபத்துக்குள்ளான 2 வாலிபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், வேல்முருகன் இவர்கள் இருவரும் சிற்பக் கலைக்கூடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மாமல்லபுரம் சிற்பக் கலைக்கூடத்தில் தங்களது வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு ஒரே இருசக்கர வாகனத்தில் இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது மாமல்லபுரம் அரசு மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்த சமயத்தில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி நின்று கொண்டிருந்த […]
சேலத்தில் தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியவர்களில் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி அருகே ஒவ்வொரு ஆண்டும் காளைகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது போல் வங்காநரிகளை வைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். ஆனால் வங்காநரி பாதுகாக்க பட வேண்டிய உயிரினம் என்பதால், இந்த போட்டிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே வனத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருந்தாலும் ஊர் மக்கள் தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தி வருவதும் அவர்கள் மீது […]
தேனியில் விவசாயி வீட்டில் 24 பவுன் நகை 80,000 ரூ பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை அடுத்த எரசக்கநாயக்கனூர் ஊரை சேர்ந்தவர் சமுத்திரவேல். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் தனது உறவினர் வீட்டிற்கு செல்ல, அதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில் காலை தனது வீட்டிற்கு வந்த சமுத்திரவேல் […]
தென்காசியில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை அடுத்த கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் சந்தானம். இவர் மிட்டாய் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி லட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீதர் என்ற மகனும் ஜோதி என்ற மகளும் […]
தஞ்சையில் இருதரப்புக்கிடையே நடந்த மோதலில் 2 பேர் மரணம் அடைய ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் வடக்கு வாசல் பகுதியை அடுத்த இரட்டை பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் செபஸ்டின். இவரும் இவரது நண்பருமான சதீஷ்குமார் ஆகியோர் வடக்குவாசல் சிரேஸ்சத்திரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த 4 பேர் இருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்ற தகராறாக மாறியது. இதையடுத்து ஆத்திரமடைந்த நான்கு பேரும் செபஸ்டின் […]
சிவகங்கை மாவட்டத்தில் காளைகள் முட்டி 81 பேர் படுகாயமடைந்துள்ளனர். தென் தமிழகத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற மஞ்சுவிரட்டு என்றால் அது சிவகங்கை மாவட்டம் சிரவாயில் மஞ்சுவிரட்டு தான். சுமார் 80 ஏக்கர் நிலப் பரப்பளவில் மஞ்சுவிரட்டு போட்டியானது அப்பகுதியில் சிறப்பாக நடத்தப்படும். இதனைக் காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருப்பர். ஒவ்வொரு ஆண்டும் தை மூன்றாம் தேனாட்சி அம்மன், பெரிய கோவில் அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு வழிபாடு செய்து, முன்னோர்களுக்கு அழைப்பு […]
சேலத்தில் எருதாட்டத்தை காண சென்ற வாலிபரை காளை முட்டி கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை அடுத்த வேப்பங்கொட்டை அய்யனாரப்பன் கோவில் முன்பு பிரசித்தி பெற்ற விளையாட்டான எருதாட்டம் நடைபெற்றது. இந்த விளையாட்டை காண்பதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு மக்கள் அப்பகுதியில் குவிந்தனர். அந்த வகையில் எடப்பாடி பகுதியை அடுத்த செட்டிகுறிச்சியை சேர்ந்த உத்தர குமார் என்ற இளைஞர் தனது நண்பர்களுடன் எருதாட்டத்தை காண வந்துள்ளார். அப்போது காளை ஒன்று […]
புதுக்கோட்டையில் மனைவியை நண்பனுடன் சேர்ந்து கொன்று 3 வருடம் கணவன் நாடகமாடி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்தவர் சரண்யா. இவரும் அதே பகுதியை அடுத்த பள்ளத்திவிடுதியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞரும் கடந்த 2005 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தை மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் ஆகும். இவ்வாறு இருக்கையில் […]
தலைமை பண்பு மற்றும் நற்பண்பை வளர்த்துக்கொள்ள இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் கிரிக்கெட், கபடி, வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டுப் போட்டிக்கு அம்மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க பெரம்பலூர் மாவட்ட எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இதையடுத்து போட்டியில் பங்கேற்ற வாலிபர்களுக்கு தேவையான பந்து, கிரிக்கெட் மட்டை, க்ளவுஸ் உள்ளிட்டவற்றை போட்டியாளர்களிடம் வழங்கிவிட்டு போட்டியை தொடங்கி […]
நீலகிரி உதவி கலக்டெர் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய கோரி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் இருந்து உழவர் சந்தைக்கு செல்ல கூடிய பாதை மிகவும் குறுகலானது. இந்த பாதையின் இருபுறங்களிலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வண்ணம் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சிங், அப்பாதை வழியாகத்தான் தினமும் தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்க்கு […]
நாமக்கல்லில் உல்லாசம் அனுபவித்து, பணம் பறித்துவிட்டு காதலியை காதலனே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை அடுத்த ஆண்டவலசு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் ஜோதிடர் ஆவார் இவரது மகள் வெள்ளையம்மாள். இவரது மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபருடன் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணமான 6 மாதங்களிலேயே கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் […]
திருச்செங்கோட்டில் பெண்களுக்காக மட்டுமே நடத்தப்படும் நவீன ஜல்லிக்கட்டு போட்டியில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள நந்தவன தெரு பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே கலந்துகொள்ளக்கூடிய நவீன ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே காளையர்கள் காளைகளை அடக்குவதுதான் வழக்கம். ஜல்லிக்கட்டில் பெண்களுக்கு அனுமதியில்லை. ஆனால், சற்று வித்தியாசமாக சிந்தித்த நந்தவன தெரு பகுதி இளைஞர்கள், பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் […]
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், கிராம பொதுமக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை அடுத்த வடகடும்பாடி கிராமத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது. . இந்த நிகழ்ச்சியில் அதிமுக கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை […]
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. பொங்கலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் அதிக அளவில் பூக்களை வாங்கி குவித்துள்ளனர். இந்நிலையில் அங்கு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ மூன்றாயிரம் ரூபாய், சம்மங்கி 100 ரூபாய்க்கும், பிச்சி 100 ரூபாய்க்கும் கனகாம்பரம் 100 ரூபாய்க்கும் ஜாதிமல்லி 1200 […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 37 சோதனைச் சாவடிகளில் காவல்துறையினருக்கு துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று அடி கொண்ட ரைபிள் ரக துப்பாக்கி 37 சோதனை சாவடிகளில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள ஓரிரு சோதனைச் சாவடிகளிலும் துப்பாக்கியுடன் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
திருமணமான பெண் இறந்தால் அவரது தாய் சட்ட படி வாரிசாக முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை அமைஞ்சகரையை அடுத்துள்ள பிவிஆர் நகரை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவரது மனைவி விஜயலட்சுமி கடந்த 2013ம் ஆண்டு இறந்த நிலையில் சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழில் அவரது தாயாரின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் கிருஷ்ணா வழக்கு தொடுக்க, நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கணவன் இறந்துவிட்டால் மனைவி குழந்தை மட்டுமின்றி […]
முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பதவியில் இருக்கும் போது அவர் செய்தது என்ன? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள மீன்வள துறை அலுவலகத்தில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து அரசை குற்றம்சாட்டி வருகிறார். ஆனால் அவரது கருத்துகளை நாங்கள் பெரிதாக ஏற்றுக்கொள்வது இல்லை. அதை நாங்கள் பாஜக கட்சியின் கருத்தாகவும் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாளையங்கோட்டை கைதிகள் கரும்பை பயிரிட்டனர். அது தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது.. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சிறைச்சாலையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என மொத்தம் 1,400 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களில் நன்னடத்தை கைதிகளாக தேர்வு செய்யப்பட்ட 100 லிருந்து 150 பேர் அங்கு உள்ள சுமார் 25 ஏக்கரில் விவசாய பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த விளை நிலத்தில் நெல் கரும்பு வாழை மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படும். தற்போது […]
தூத்துக்குடி மாவட்டம் விரைவில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் அதில் எனது பங்கும் கட்டாயம் இருக்கும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துறைமுக சங்கத்தில் நேற்றையதினம் சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த உலகில் பல்வேறு தொழிலதிபர்களும் அரசியல் தலைவர்களும் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநரும் தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று பேசினார். நிகழ்ச்சியில் சிறந்த ஏற்றுமதியாளர்களாக தேர்நதெடுக்கப்பட்ட 38 பேருக்கு விருது வழங்கிய, பின் […]
திருப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுக்கு 2,194 பேர் விண்ணப்பிருந்த நிலையில் 1603 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு இன்று திருப்பூரில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு திருப்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள 2194 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதன்படி 1,093 பேருக்கு திருப்பூர்குமரன் மகளிர் கல்லூரியிலும், 891 பேருக்கு இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வுகள் எழுத வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்வு எழுத வரும் விண்ணப்பதாரர்கள் […]
திருவள்ளூரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண ,மோசடி செய்த கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ரம்யா. பட்டதாரிகளான இவர்கள் இருவரும் அரசு வேலையில் சேர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு அதற்கான படிப்புகளைப் படித்து வந்தனர். இதையடுத்து இருவரும் அரசு வேலைக்கு ஆசைப்படுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள எண்ணி அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் அவரது மனைவி […]
திருவண்ணாமலையில் ஆந்திர பெண் ஒருவரின் மடிக்கணினியை திருடர்கள் திருடி சென்றதால் அவர் தனது வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். ஆகையால் அங்கு நாள்தோறும் வரும் கார் மற்றும் வாகனங்களை நிறுத்த அரசு சார்பிலும் கோவில் நிர்வாகம் சார்பிலும் வசதி ஏற்படுத்தபட்டதுடன் அதற்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க ஆந்திராவிலிருந்து வந்த ஒரு குடும்பத்தினர் தங்களது காரை அம்மணி அம்மன் கோபுரம் அருகே நிறுத்தி பூட்டிவிட்டு […]
பெற்றெடுத்த 2 குழந்தைகளையும் குளத்தினுள் பறிகொடுத்துவிட்டு பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நெமிலி பகுதியை அடுத்த மேலூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவர் நெமிலியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அமுலு. இவர்கள் இருவருக்கும் ஹரிணி என்ற 4 வயது பெண் குழந்தையும், தர்ஷன் என்ற 2 வயது ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார் அமுலு. […]