சென்னை ராணிப்பேட்டை பகுதியை வாலாஜாவில் குடும்ப தகராறு காரணமாக உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 5 பேருக்கு வெட்டு காயம் ஏற்பட்டது. சென்னையைச் சேர்ந்த செல்வம் என்பவரது மனைவி இறந்த நிலையில் அவரக்கு மறுமண ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளது. ஆனால் செல்வத்தின் உறவினர் காத்தவராயன் என்பவர் திருமணத்திற்கு இடையூறு செய்து பெண் கொடுக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே பகை முற்றிய நிலையில் வாலாஜாபேட்டை வந்திருந்த செல்வத்தையும் அவரது தாயாரையும் காத்தவராயன் உள்ளிட்ட 3 பேர் […]
Tag: DistrictNews
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை கொட்டி தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை தகவல் தொடர்பாக சென்னையில் உள்ள மண்டல வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று கன மழை கொட்டி தீர்க்கும் என்பதை மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ராமநாதபுரம் திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறி இருக்கிறது. சென்னை மாநகரைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் […]
சென்னையை ஆவடி பகுதியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற காவலர்களுக்கு சத்தியப்பிரமாண விழா நடைபெற்றது. சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் உள்ள மத்திய ரிசெர்வ் காவல்படை பயிற்சி முகாமில் டிஜிபி பிரவீன் தலைமையில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 407 காவலர்களுக்கு 24 வாரங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் நவீன ஆயுதங்களை கையாளுதல் துப்பாக்கி சுடுதல் உடற்பயிற்சி போன்ற பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது. பயிற்சி முகாம் நிறைவு பெற்ற நிலையில், […]
வேளாங்கண்ணியில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் வேற்று மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பகுதியில் மதநல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இயேசு பிறப்பு நிகழ்வுகளை கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும் பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலமாகவும் எடுத்துக் கூறப்பட்டது. நிகழ்ச்சியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் வேளாங்கண்ணி பேராலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மதுரை: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்ட நகை மதிப்பீட்டாளருக்கான தொகையை நிர்ணயித்து வெளியிட்ட அறிவிப்பானையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் சங்கத்தின் சார்பில் நாகர்கோவில் சடகுட்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். மனுவில், “ தேசிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கியில் உள்ள நகை மதிப்பீட்டாளர் சங்கத்தில் 54 பேர் […]
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புதிய விளையாட்டு குறித்த சிறப்பு மூன்று நாள் பயிற்சி வகுப்பு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் புதிய விளையாட்டுகளாக கேரம், ஜிம்னாஸ்டிக், தேக்வாண்டோ, கடல் கூடைப்பந்து, சதுரங்கம், உள்ளிட்ட 12 விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதற்கான புதிய விதிமுறைகள் குறித்து பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மூன்று நாள் சிறப்பு பயிற்சி மூன்று மாவட்டங்களை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதான வளாகத்திலுள்ள, கேரம் […]
மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே பொதுப் பாதையை ஆக்கிரமித்து தனியார் மதுபான விடுதிக்கு பாதையாக பயன்படுத்திவரும் ஆக்கிரமிப்பை அகற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த ஷாஜகான், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,” 1997ஆம் ஆண்டு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள 22 சென்ட் நிலத்தை விலைக்கு வாங்கினேன். அதில் 11 சென்ட் நிலத்தை வாடகைக்கு விட்ட நிலையில் 11 சென்ட் நிலத்தை […]
உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் குறித்த பயிற்சி கூட்டத்தில் பங்குபெறாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவு பிறப்பித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்லுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த […]
ஆண்டிபட்டி அருகே பள்ளி வளாகத்தில் பயன்பாட்டில் இல்லாத சத்துணவு சமையல் கூட கட்டிடம் இடிந்து விழுந்ததில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பொன்னன்படுகை என்ற கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் சத்துணவு சமைப்பதற்காக 30 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சமையல் கூடம் பயன்பாடின்றி இருந்தது. அந்த கட்டிடத்தை இடிக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால் மிகவும் […]
குழந்தைகளை விற்பனை செய்யும் கும்பலைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மதுக்கரையைச் சேர்ந்த ஜாகீர் ஆட்டோ ஓட்டுநராக வேலைசெய்து வருகிறார். இவர் தனக்கு தெரிந்தவர்களுக்கு குழந்தை தேவை எனக் குழந்தை விற்பனை செய்யும் கும்பலான ஹசீனா, அவரது தோழி கல்யாணி ஆகியோரைத் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் குழந்தைக்கான பணத்தையும் பேசியுள்ளனர். இதனையடுத்து, மதுரையைச் சேர்ந்த கண்ணன் – ஜோதி என்ற தம்பதியினரை ஆண் குழந்தையுடன் கோவை கருமத்தம்பட்டி அழைத்து வந்த ஹசீனா […]
ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தில் சுமார் 400 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை இழந்த 20க்கும் மேற்பட்டோர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தனர். கோவையை தலைமையிடமாகக் கொண்டு டி மேக்ஸ் சொல்யூஷன் என்ற பெயரில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக செயல்பட்டுவருகிறது. இதை காரமடை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், மேட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலு ஆகியோர் நடத்திவருகின்றனர். இந்த நிறுவனமானது தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் […]
வயது முதிர்வின் காரணமாக பழம்பெரும் நடிகர் ஸ்ரீராம் லக்கு காலமானார். 92 வயதான ஸ்ரீராம் லக்கு பூனேவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஸ்ரீராம் லக்கு இந்தி சினிமாவிலும், மராத்தி சினிமாவிலும் புகழ் பெற்ற நடிகராவார். திரையரங்க நாடகங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 20க்கும் மேற்பட்ட மராத்தி நாடகங்களை ஸ்ரீராம் லக்கு இயக்கியுள்ளார். இவர் இறப்புக்கு பிரகாஷ் ஜவடேக்கர், ரிஷி கபூர், மதூர் பந்தர்கர் போன்ற திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். ‘ஏக் […]
திருவாரூர்: மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விடுதியைவிட்டு வெளியேற்றும் விதமாக பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரை அடுத்த நீலக்குடியில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட காவல் துறையினரின் தாக்குதலைக் கண்டித்து இன்று மாலை திடீரென்று பல்கலைக்கழக வளாகத்தின் முன்பாக ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டத்தில் […]
சென்னை: அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று டெல்லி செல்ல இருக்கிறார். அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கூட்டம் நாளை நடக்க இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதற்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை டெல்லி செல்லவுள்ளார். இதில் தமிழ்நாட்டிற்கு நிலுவையிலுள்ள நிதி, புதிய திட்டங்களுக்கான நிதி உள்ளிட்டவை குறித்து கோரிக்கை […]
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமுட்டத்துடன் காணப்படும். மேலும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புஉள்ளது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் […]
புதுச்சேரி திருபுவனையில் ஒரு மதுபான விடுதியில் நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில் மூன்று இளைஞர்கள் வந்து மது அருந்தியுள்ளனர். அவர்கள் மது அருந்தியதற்கான பணத்தை அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் பணம் கொடுக்க மறுத்துள்ளனர் . ஊழியர் இது குறித்து காசாளரிடம் கூறியுள்ளார். பின்னர் காசாளர் அந்த இளைஞர்களிடம் பணம் கேட்க அந்த மூன்று இளைஞர்களும் பண கொடுக்க மறுத்ததோடு அவரையும் மிரட்டியஉள்ளனர் , அது மட்டும் இல்லாமல் தங்களுக்கு […]
குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் ஜாமியா JNU உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்கள் குடி உரிமை மசோதா திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய பொழுது காவல்துறை அவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்புகளும் கல்லூரி மாணவர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தமிழகத்திலும் இதற்கான போராட்டங்கள் வலுப்பெற்று உள்ள நிலையில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இந்திய […]
திருச்சி: ‘டிப்ஸ்’ மூலம்தான் எங்கள் வாழ்வே நடக்கிறது என சமையல் கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழிற்சங்கத் தலைவர் கணேஷ் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘ கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்பவர்களுக்கு டிப்ஸ் தராதீர்கள்’ , என ஒரு எண்ணெய் நிறுவனம் தற்போது விளம்பரம் செய்து வருகிறது. இதனால் கேஸ் நுகர்வோர் எங்கள் மீது கோபத்திலும், […]
நீலகிரி: ஈளாடா பகுதியில் பொது மக்களை அச்சுறுத்தி வரும் புலியை ஏழு நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் பணிகள் தொடங்கின. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் வருவது அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்து வரும் நிலையில் கோத்தகிரி அருகேயுள்ள ஈளாடா பகுதியில் இரண்டு புலிகள் கடந்த 15 நாட்களாக பொது மக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித் திரியத் தொடங்கி உள்ளன. பகல் நேரங்களிலேயே வனப்பகுதியிலிருந்து வெளியில் வரும் […]
சென்னை மதுரவாயல் பகுதியில் மணி பர்சை திருடியதால் வந்த தகராறு காரணமாக சொந்த நண்பனையே தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவள்ளூர் பகுதியை அடுத்த வேப்பம்பட்டை நகரை சேர்ந்தவர் முரளி. இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த சிம்சன் சுப்பிரமணியன் அரவிந்த் ஆகிய மூன்று பேருடன் மதுரவாயல் பகுதியில் தனியாக வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வந்துள்ளார். இவர்கள் நான்கு பேரும் கட்டிடங்களில் டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்டு வந்துள்ளனர். […]
விழுப்புரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திடீரென ஏற்பட்டதீ விபத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் அருகே ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இயந்திரத்தில் இருந்த பணம் அதிஷ்டவசமாக தப்பியது. அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள இந்திய வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் வெளிப்புறத்தில் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனுள் ஏடிஎம் இயந்திரம் பாஸ்புக் பிரின்டிங் இயந்திரம் போன்றவை இருந்துள்ளன. நேற்று மாலை இந்த மையத்தில் மின்கசிவு காரணமாக பயங்கர தீ […]
நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்தததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்து வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன்படி நாகப்பட்டினம் வேளாங்கண்ணி வேதாரண்யம் திருதுறைபூண்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் வடியாமல் வெள்ளம் ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண் ஒருவர் ஏமாற்றும் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்தவர் கேபிள் ஆப்பரேட்டர் பாலாஜி. இவரை செல்போனில் தொடர்புகொண்ட பெண் குரல் ஒன்று ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது என்று கூறி அதற்கான சான்று வாட்ஸ் அப்பில் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தேவை இல்லை எனில் 12,500 ரூபாய் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கி […]
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே 2 சிறுமிகள் தலா ரூபாய் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் வசித்து வரும் விஜயலட்சுமி என்கின்ற பாட்டி ஒருவர் அவரது பேத்திகளையே ரூ 10,000 க்கு இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்துள்ளார். விற்கப்பட்ட சிறுமிகள் ஈரோடு மாவட்டத்திலுள்ள பின்னலாடை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் குடவாசல் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சிறுமிகளை […]
ஆபாச படத்தை பகிர்ந்த குற்றத்திற்காக திருச்சி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தில் ஆபாச படங்களை பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை பாய போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தகவல் பரவியது. ஆனால் சிறுவர் சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களை பார்ப்பவர்கள் பகிர்பவர்கள் மீதுதான் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை விளக்கம் அளித்தது. இதுதொடர்பாக சுமார் 3,000 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் சம்மன் அனுப்பி விசாரணைக்கு பிறகு கைது […]
மதுராந்தகம் ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீர் கசிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் . செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக விளக்கும் மதுராந்தகம் ஏரி 694 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஏரி முழு கொள்ளளவை எட்ட 4 அங்குலமுள்ளது. இந்த நிலையில் ஏரிகளில் இருந்து நீர் கசிவது விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தானியங்கி மதகுகளில் துருப்பிடித்து விரிசல் ஏற்பட்டு இருப்பது இதற்கு காரணமாகும். ஏரியை பராமரிப்பதில் அதிகாரிகள் மெத்தனம் […]
புதுச்சேரியில் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருந்த ரவுடி கும்பலை காவல்துறையினர் பிடிக்க முற்பட்டபோது இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. கலிதீர்தால்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி ஜனா. இவர் மீது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தலைமறைவாக இருக்கும் ரவுடி ஜனா ஆண்டியார் பாளையம் கரும்பு தோட்டத்திற்குள் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் […]
வெளிநாட்டில்இருந்துஇறக்குமதிசெய்யப்பட்டவெங்காயத்தால் மக்களைவேதனையிலிருந்து நீக்கும் விதமாக வெங்காயம் விலை சரிவு […]
கோவையில் வெறும் வாட்டசாப் வதத்ந்தி ஒருவரின் உயிரையே எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றின் அருகே கடந்த மூன்றாம் தேதி காயங்களுடன் சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் என்பது தெரியவந்தது. வாட்ஸாப்ப் வதந்தி : சண்முகத்தின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு […]
உலகநன்மைக்காக நெல்லை மாவட்ட மக்கள் இந்திரவிழா பூஜையில் ஈடுபட்டனர். நெல்லை மாநகரில் உலக நன்மைக்காகவும் மழைக்காகவும் விவசாயம் செழிக்க வேண்டும் எனவும் இந்திரவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு தாமிரபரணி மற்றும் நீர்தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்பட்டு வந்த மண்ணை பசுவும் கன்றும் செய்தும், முளப்பாரி செய்தும் பெண்கள் இந்திர பூஜை செய்வர். அப்போது பாடல்களை பாடியும் கோலாட்டம் அடித்தும் வழிபடுவர். இதனால் விவசாயம் செழித்தும், மழை பெய்தும் உலக மக்களுக்கு நன்மை பயக்கும் என்பது நெல்லை மாவட்ட […]
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உள்ள முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை அடுத்து உள்ள பெரிய கண்மாய் பகுதியில் மரக்கன்றுகள் நடும் பொழுது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய முதுமக்கள் தாழியை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இதனை கண்ட கண்டுபிடிப்பாளர்கள் காவல் துறை மூலமாக தொல்லியல் துறைக்கு தகவல் அனுப்பினர். இதையடுத்து முதுமக்கள் தாழி குறித்து அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என அரசு அருங்காட்சியக காப்பாளர் தெரிவித்தார். மேலும் இதனை கண்டெடுத்த இளைஞர்களுக்கும் […]
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது வந்த நிலையில், குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ராயப்பேட்டை மயிலாப்பூர் சோழிங்கநல்லூர் தாம்பரம் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளிலும் மழை பெய்ததால், இதமான சூழல் நிலவியது. கடந்த சில நாட்களாக மழை பெய்து […]
அரக்கோணம் அருகே அதிகாலையில் ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சென்னை மாவட்டம் காட்பாடி to அரக்கோணம் ரயில் பாதையில் சித்தேரி ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்திற்கு இடையே சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ், காவேரி எக்ஸ்பிரஸ் மற்றும் சேரன் விரைவு வண்டிகள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. பின் தண்டவாள விரிசல் உரிய நேரத்தில் ஊழியர்களால் சரிசெய்யப்பட்டதால் […]
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 70 சவரன் தங்க நகை ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் வேந்தட்டை பகுதியை அடுத்த சின்னாறு கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் செல்வம் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்ற அவர் மாலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு […]
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. அணையின் மேல்பகுதியில் உள்ள மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களுக்கு முன் கொட்டிய கன மழையால் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர்வரத்தால் நீர்மட்டம் ஒரே நாளில் 90 அடியில் இருந்து 96.4 அடியாக வேகமாக உயர்ந்தது. இன்று காலை வினாடிக்கு 1,508 […]
மொக்க காரணத்திற்க்காக மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் ஆன ஜெயராஜும் அவரது மனைவி 24 வயதான இலக்கியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இலக்கியா வேளச்சேரி ஃபீனிக்ஸ் வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த ஒன்றாம் தேதி அன்று வீட்டில் ஜெயராஜன் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருப்பவர்கள் ஓடிவந்து பார்த்த பொழுது இலக்கியா தூக்கில் பிணமாக தொங்கினார். தன்னுடன் சண்டை […]
ரயிலில் பயணி ஒருவர் விட்டுச் சென்ற பையை நேர்மையாக ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்த பெண் துப்புரவு பணியாளர் தமிழக ரயில்வே காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். கடந்த செவ்வாய்கிழமையன்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எழும்பூர் வந்த நிலையில், சிவசுப்பிரமணியம் என்ற பயணி ரயிலில் தனது பையை மறந்து விட்டுச் சென்றுள்ளார். யாரும் கண்டு கொள்ளாத நிலையில் கிடந்த பையை ரயிலில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த ராஜலட்சுமி என்பவர் ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் பத்திரமாக […]
சென்னை ஆவடி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம் ஐ உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை ஆவடி பகுதியை அடுத்த முத்தா புதுபேட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்மில் நள்ளிரவில்புகுந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த 4 கண்காணிப்பு கேமராக்களிலும் கலர் பெயிண்ட் அடித்து திருட முயன்றுள்ளார். இதனை வங்கியின் மும்பை தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணித்த அதிகாரி ஒருவர் உடனடியாக முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதனை […]
சென்னையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மன உளைச்சல் அடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குன்றத்தூர் பகுதியை அடுத்த விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் பவானி. இவரது மகன் உதயகுமார் அமுதா என்ற பெண்ணை சில வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துகொண்டார். உதயகுமார் கார் மெக்கானிக் ஆக பணியாற்றி தனது மனைவியுடன் சரஸ்வதி நகர் அவென்யூ பகுதியில் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது மனைவி அமுதா […]
கடந்த சில தினங்களாகவே பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் பகுதிகளை சுற்றி மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்ற வருடம் மழை பெய்யாததன் காரணமாக இந்த வருடம் மே மாதத்தில் ஏரிகள் அனைத்தும் வறண்டு காணப்பட்டதால் சென்னைவாசிகள் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சத்தை சந்தித்து வந்தனர். ஆகையால் சென்னைவாசிகள் வடகிழக்கு பருவமழை கைகொடுக்கும் என்று பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்களது நம்பிக்கையை வீணடிக்காமல் வடகிழக்கு பருவமழை […]
கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பிஷப்புகளும் பாதிரியார்களும் இந்திய கிறிஸ்துவ சட்டத்தின்படி கிறிஸ்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்தத் திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க பதிவுத்துறைக்கு உத்தரவிடக் கோரி வேலூரைச் சேர்ந்த பிஷப் நோகா யோவனராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், கிறிஸ்துவ திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை […]
வேலூரில் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததன் காரணமாக தாயே பெற்ற குழந்தையை கொடூரமாக மூச்சு திணற கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கு திருமணமாகி ஓராண்டு முடிந்த நிலையில், ஒரு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவரது குழந்தை பெயர் மௌனிகா. இவரது கணவர் நேற்றைய தினம் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் வீட்டில் பவித்ரா அவரது குழந்தையுடன் வீட்டு வேலை […]
தஞ்சாவூரில் 23 வயதான இளைஞர் ஒருவர் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் வெறும் 23 வயதான இவர் இதுவரை எட்டு பெண்களை காதலித்து திருமணமும் செய்துள்ளார். இதுவரை திருமணம் செய்த 8 பெண்களுடனும் ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் மாறி மாறி வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கடைசியாக திருமணம் செய்த எட்டாவது பெண் அவரை நீண்ட நாட்களாக […]
கரூர் மாவட்ட தான்தோன்றி மலை அருகே புறா பிடிக்க சென்றவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கரூர் மாவட்டம் தந்தோந்ன்றி மலைப் பகுதியில் தங்கியிருந்து கொத்தனார் ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேல்முருகனும் அவரது நண்பர் ராஜாவும் காட்டுப்பகுதிக்குள் புறா பிடிக்க சென்றுள்ளனர். அப்பொழுது அங்கே இருந்த மொட்டை கிணறு ஒன்றில் புறா ஒன்று இருந்துள்ளது. அதனை பிடிப்பதற்காக கயிறு கட்டி கிணற்றினுள் இறங்கியுள்ளார் […]
பவானிசாகர் அருகே கிராமத்துக்குள் சிறுத்தை புகுந்து ஆடு ஒன்றை தூக்கிச் சென்ற சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானிசாகர் பகுதியை அடுத்த புதுக்கீனுர் கிராமம் வனப்பகுதியை ஒட்டி காணப்படும். இந்த கிராமத்திற்கு சென்ற மாதம் சிறுத்தை ஒன்று புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. மேலும் கால்நடைகளை தாக்கி வேட்டையாடியும் வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் விட்டனர். இந்நிலையில் மீண்டும் அதே சிறுத்தை வனப்பகுதிக்குள் இருந்து தப்பி கிராமத்திற்குள் மீண்டும் புகுந்தது. […]
காதலியுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டிய வனத்துறை ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் நாகர்கோவிலில் உள்ள வனப்பகுதியில் வன உதவி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு பழனியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு அது காலப்போக்கில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் ராஜா அந்த பெண்ணிடம் தான் உன்னை காதலிப்பதாகவும், தன்னை […]
பிரபல தொழிலதிபரை கொல்லும் முயற்சியில் பெட்ரோல் குண்டு வீசியதில் தீக்காயமடைந்த தொழிலதிபரின் மனைவி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தபாபு. இவரது மனைவி நீலிமா. இவர் அப்பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவரும் இவரது மனைவியும் கடந்த 11ஆம் தேதி வழக்கம்போல் தொழிற்சாலைக்கு காரில் சென்றுள்ளனர். ஆனால் திரும்பும்பொழுது வேலை இருந்ததால் ஆனந்தபாபு மனைவியை மட்டும் வீட்டிற்கு போகுமாறு […]
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியை அடுத்த சித்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இயற்கை மரணம் அடைந்து விட்டார். சுப்பிரமணியன் ஊட்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவரது மூத்த மகள் பிஎஸ்சி நர்சிங் படிப்பை முடித்துவிட்டு சென்னை தனியார் மருத்துவமனை […]
கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையினால் சுமார் 1500 வீடுகள் நீரில் மூழ்கிய படி காட்சியளித்தன. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்ட பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்து வந்துள்ளது. இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரை கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வந்துள்ளது. இதனால் கடலூர் லாரன்ஸ் சாலையில் […]
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த பொங்காளி ஊரைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி லாவண்யா. இவர்கள் இருவருக்கும் ஜஸ்வந்த் என்ற 5 வயது குழந்தை உள்ளது. இந்நிலையில் ஜஸ்வந்த் அதே ஊரில் உள்ள அங்கன்வாடியில் படித்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை நேரத்தில் ஜஸ்வந்த் தனது வீட்டு […]