காஞ்சிபுரம் மாவட்டம் படூர் அருகே நகை கடை சுவரில் துளையிட்டு கடைக்குள் இருந்த வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். காஞ்சிபுரமாவட்டம் படூர் கூட்டு ரோட்டில் நாராயணன் என்பவருக்கு சொந்தமான பவானி அடகு கடை மற்றும் பாத்திர கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இரவில் கடை அடைக்கப்பட்டிருந்த சிறிது நேரத்திலையே கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையிலிருந்த வெள்ளி மெட்டி, கொலுசு, வெள்ளி மோதிரம் என சுமார் அரை கிலோ […]
Tag: DistrictNews
நாகை மாவட்டம் கோடியக்கரை வன சரணாலயத்தில் கடலாமை பாதுகாப்பு மையம் அமைக்க இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடல் ஆமை மற்றும் கடல் சார்ந்த அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க பாதுகாப்பு மையம் அமைக்க ரூ 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதில்,கடல் ஆமை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலகத் தரம் வாய்ந்த முப்பரிமான அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் அது சூரிய மின் சக்தியை கொண்டு இயங்கும் […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே திருமண வரவேற்பு வீட்டில் குடி போதையில் தகராறு செய்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ராணி மகாராஜா புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ராஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் குடி போதையில் தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து குமாரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் […]
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வீட்டின் தரை பகுதியில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த அஞ்சாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நேற்று தன்னுடைய வீட்டை சுற்றியுள்ள செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வீட்டின் சுவர் அருகே பள்ளம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்தப் பள்ளம் சுமார் 10 அடி அகலம் 15 அடி ஆழத்திற்கு நீர் நிறைந்து காணப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]
சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சென்னை திருமுல்லைவாயில் பகுதியை அடுத்த அரிக்கமேட்டுப் பகுதியை சேர்ந்த குருபிரசாத் என்பவன் பிளஸ்டூ மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து கொள்வதாகவும் வீட்டை விட்டு வருமாறு அழைத்த பொழுது மாணவி வர மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த மாணவியை கடந்த மாதம் முப்பதாம் தேதி குருபிரசாத் […]
திருவாரூர் மாவட்டத்தில் நிலத்தகராறு ஏற்பட்ட தகராறில் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் படுகாயம்அடைந்தார். திருவாரூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பரமசிவத்தின் உறவினரான ஜெயமாலினி என்பவர் நிலம் வாங்கியது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த கோபாலன் என்பவருடன் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அந்த வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஜெயமாலினி மற்றும் பரமசிவம் ஆகியோர் உடன், அங்கு வந்த கோபால், ராமன் மற்றும் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கூரிய கற்களால் தாக்கியதாக […]
திருவள்ளூர் மாவட்டம் மேலூர் பகுதியில் அரசு நிதி உதவிபெறும் தொடக்கப்பள்ளி இடிந்து விழுந்தது. திருவள்ளூர் மாவட்டம் மேலூர் பகுதியில் இயங்கி வரும் ANM என்ற அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பக்கவாட்டு சுவர்கள் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் நனைந்து பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு அந்த பள்ளியின் கட்டிடம் திடீரென இடிந்து […]
காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காஞ்சிபுர மாவட்டம் திருக்கழுக்குன்றம் திருப்போரூர் பகுதியில் நாகராஜ் என்பவரது மகன் யுகேஷ் மற்றும் மகள் மகேஷ் மற்றும் அவர்களது உறவினர்கள் செல்வகுமார் ரமேஷ் ஆகிய சிறுவர்கள் பாலாற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது செல்வகுமார் மற்றும் யுகேஷ் ஆகியோர் எதிர்பாராதவிதமாக ஆற்றின் பள்ளத்தாக்கில் இறங்கி மூழ்க தொடங்கியதை பார்த்த மற்ற 2 பேரும் அலறினர். இதனையடுத்து சத்தம் கேட்ட […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விபத்தில் சிக்கி கணவர் இறந்த துக்கத்தில் அவரது இளம் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த பாலாஜி ரிஷித்தா ஆகியோருக்கு திருமணம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற பாலாஜி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் துக்கம் தாளாது அவரது மனைவி ரிஷித்தா சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை முடிவில் கணவரின் […]
பழுதாக உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்கவில்லையென்றால் சாலை மறியலில் ஈடுபடுவோமென காங்கிரஸ் MP வசந்த குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பழுதான தேசிய நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைக்க வில்லை என்றால் வருகின்ற 16ஆம் தேதி மாவட்டம் முழுவதும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட திமுக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் […]
நெல்லை மாவட்டம் வீரமணிபுரத்தில் நேற்று இரவு பெய்த மழையில் ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. நெல்லை மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக மழை சற்று ஓங்கி இருந்த நிலையில், இன்று அதிகாலை முதல் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்தது. இந்த நிலையில் வீரமணிபுரத்தை சேர்ந்த சிவகாமி அம்மாள் என்பவரின் பழைய ஓட்டு வீட்டின் மேற்கூரை மழையால் இடிந்து விழுந்து முற்றிலும் சேதமானது. உறவினர் இல்லத் திருமண விழாவிற்காக சிவகாமி அம்மாள் வீட்டை பூட்டிவிட்டு பேட்டை […]
விழுப்புரம் மாவட்டம் கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவ மழையை நம்பி பயிரிடப்பட்ட மக்காச் சோளப் பயிர்கள் செழித்து வளர்ந்து கதிர் விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் மாணாவரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சராபாளையம், சங்கராபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்காச் சோளப் பயிர்கள் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளன. மக்காச் சோளப் பயிர்கள் விரிந்து வளரும் தன்மை கொண்டதால், பெரிய அளவில் பராமரிப்பு செலவு விதமான லாபத்தை ஈட்டித் தரக்கூடிய பயிர்கள் என்கின்றனர். […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பி ஓடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வண்ணாரப்பேட்டை கோவில் தெரு மேற்கு மாட வீதியில் கடந்த மாதம் 26ஆம் தேதி மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் திருட்டில் ஈடுபட்ட பொழுது பொதுமக்கள் பார்த்து கூச்சலிட்டதால் அவர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து பெட்ரோலை திருடவிடாத ஆத்திரத்தில் அவர்கள் கடந்த 28ம் தேதி நள்ளிரவு அப்பகுதிக்கு சென்று தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் இருசக்கர […]
சென்னை அம்பத்தூர் அருகே பாடி சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. சென்னை அம்பத்தூர் பகுதியை அடுத்த பாடி சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 3 பேர் சிக்கியுள்ளனர். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான பிரசாந்த், சதீஷ் மற்றும் அவரது நண்பர் விஜய் ஆகியோர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பின் சனிக்கிழமை […]
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள தொழுதூர் அணையின் வடிகட்டியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குளித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்ததால் ஆங்காங்கே நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் அணை அருகில் உள்ள சிறு கால்வாய் தொட்டியில் தண்ணீர் தேங்கி வருகின்றன. குறுகிய ஆழமுடைய சிமெண்ட் வடிகால் தொட்டியில் சிறுவர்கள் டைவ் அடித்து விளையாடுவதால் அவர்களது அடிப்பகுதியில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சிறுவர்களை அணை பகுதிக்குள் […]
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் ஆறு நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தாலும் சிற்றாறு அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்ததாலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் குளிக்க கடந்த 6 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது மழையின் அளவு குறைந்துள்ளதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் […]
சென்னை ஆலந்தூரில் பெண் காவலரை அடித்து துன்புறுத்திய புகாரின் பேரில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆலந்தூர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர் உமா மகேஸ்வரி என்பவருக்கும், டில்லிபாபு என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. டில்லி பாபு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சமயத்தில் சரிவர பணிக்கு வராததால் காவல்துறை சார்பில் அவருக்கு விருப்ப ஓய்வு கொடுத்து பணியில் இருந்து நீக்கி விட்டனர். இந்நிலையில் டில்லி பாபு காவலராக பணிபுரிந்து வரும் உமா மகேஸ்வரியை […]
தேனி மாவட்டம் சுருளி அருவியில் நான்கு நாட்களுக்கு பிறகு தடை நீக்கப்பட்டு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் சுருளி அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மிகவும் பிரபலமான சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக சுருளி அருவி விளங்குவதால் அங்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி […]
புதுக்கோட்டையில் சுற்றுலா சென்று வீடு திரும்பிய இளைஞர் வரும் வழியில் பைக் நிலை தடுமாறி மரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் விராலிமலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் தலைமை சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அன்னவாசல் சித்தன்ன மலை பகுதியில் சுற்றுலா சென்று சுற்றி பார்த்துவிட்டு பின் வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார். வரும் வழியில் சித்தூர்பட்டி அருகே வேகமாக […]
சென்னை திருவொற்றியூரில் பள்ளி குழந்தை டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியை அடுத்த சிவசக்தி நகரை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவரது மகள் தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகளுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் காய்ச்சல் அதிகமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் காய்ச்சல் சரியாகாமல் போக, மேற்கொண்ட சோதனையில் சிறுமிக்கு டெங்கு […]
தூத்துக்குடியைச் சேர்ந்த தம்பதியினர் தொலைக்காட்சியில் சுர்ஜித் மீட்பு பணியை பார்த்துக் கொண்டு அலட்சியமாக இருந்ததால் அவர்களது 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன், நிஷா ஆகிய தம்பதிக்கு ரேவதி சஞ்சனா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இவர்கள் இருவரும் நேற்றையதினம் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் மீட்பு பணி குறித்து தொலைக்காட்சியில் கண்ணிமைக்காமல் ஆர்வமாக […]
கன்னியாகுமாரியில் மின்சாரம் வரவழைக்க கம்பியை ஈரக்கம்பால் இளைஞர்கள் 3 பேர் தட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை அடுத்த குற்றியாபுரம் மலைக்கிராமத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டு விட்டது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் அந்த ஊர் இளைஞர்கள் மூன்று பேர் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் மின்சாரம் கடத்தும் இடத்திற்கு சென்று அங்கிருந்த கம்பியை ஈரக்கம்பால் தட்டி மின்சார […]
ரிக் வாகன இயந்திரத்தின் மூலம் குழந்தை சுர்ஜித்தை கண்டிப்பாக மீட்டெடுப்போம் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே விளையாடிக் கொண்டிருந்த பொழுது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை கடந்த 30 நேரமாக பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் முயற்சியினால் மீட்க போராடி வருகின்றனர். ஆனால் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், தற்போது நெல்லையை சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் ரிக் வாகனத்தின் மூலம் மூன்று […]
ராமநாதபுரத்தில் பயிர் காப்பீடு திட்டத்தில் விதிமுறைகளை மீறிய கிராம நிர்வாக அலுவலர்கள் மீதும், அதனால் பணம் பெற்று பயனடைந்த விவசாயிகள் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் வாரந்தோறும் கிராம மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். அந்தவகையில் நேற்றைய தினம் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் விவசாயிகளுக்கு 900 கோடி ரூபாய் […]
நாமக்கல்லில் ஆடுகளின் விற்பனை வர்த்தகம் ரூபாய் இரண்டு கோடியைத் தாண்டியதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் வாரந்தோறும் நடைபெறும் மாட்டு சந்தையானது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆடுகள் விற்பனை செய்வதற்காக இறக்குமதியாகும். இந்த வார ஆட்டுசந்தை தீபாவளி பண்டிகை என்பதால் அதிக அளவு ஆடுகள் விற்பனையானது. குறிப்பாக ஒரு ஜோடி ஆடுகள் ரூபாய் 12 ஆயிரத்திலிருந்து 50 […]
கன்னியாகுமரியில் டியூசன் ஆசிரியரை 16 வயது மாணவன் கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் பிஎட் பட்டம் முடித்த 25 வயது இளம்பெண் தனது வீட்டில் 15 மாணவ மாணவிகளுக்கு டியூஷன் வகுப்பு எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்குள் ஆள் இல்லாத சமயத்தில் நுழைந்த 16 வயது சிறுவன் ஒருவன் ஆசிரியரிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பின் ஆசிரியர் சத்தமிட உன்னை சும்மா விட்டால் […]
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பிச்சி மல்லி போன்ற பூவின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் ஒரு பெரும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைய மறுபுறம் மக்கள் கவலை அடைந்துள்ளனர். கன்யாகுமரி மாவட்டத்திலுள்ள தோவாளை மலர் சந்தை மற்றும் பூச்சிகளை விட மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த குழந்தைக்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து மலர்கள் நாள்தோறும் இறக்குமதி செய்யப்படுகின்றன. இங்கு இறக்குமதி செய்யப்படும் மலர்கள் கேரளா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு […]
திருப்பூர் அருகே கஞ்சா விற்க முயன்ற இரண்டு வாலிபர்களை ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், உதவி காவல் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் இரண்டு வாலிபர்கள் சந்தேகிக்கும் வகையில் அங்குமிங்கும் சுற்றி திரிந்தனர். பின் அவர்களை பிடித்து சோதனையிட்டபோது அவர்களிடம் கஞ்சா இருப்பது […]
தீபாவளியை முன்னிட்டு லஞ்சம் வாங்குவதாக அரசு ஊழியர்கள் மீது புகார்கள் வந்ததை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டப்படாத ரூபாய் 19 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ஆங்காங்கே பட்டாசு கடைகள் அமைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் பணம் பரிசுப் பொருளாகவோ அல்லது பணமாகவோ வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல அரசு அலுவலகங்களுக்குள் திடீர் சோதனை நடத்தப்பட்டது. […]
எந்திரங்கள் மற்றும் வாகனங்களில் உராய்வு காரணமாக ஏற்படும் தேய்மானத்தைக் குறைக்க பயன்படுத்தப்படும் லூப்ரிகண்ட் ஆயிலை மறுசுழற்சி செய்து கிராபீன் என்ற புதிய பொருளை உருவாக்கி ஐஐடி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. பொதுவாக இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் இந்தியன் மற்றும் பிற பகுதிகளில் தேய்மானம் அடையாமல் இருப்பதற்கான லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது இந்த ஆயில் பயன்படுத்தப்பட்ட பிறகு அதனை மிக குறைந்த விலையில் வியாபாரிகள் பெற்றுச் செல்கின்றனர். ஆனால் அதனை சரியான முறையில் பயன்படுத்தி நிறுவனம்தான் அதாவது வாயிலில் இருந்து […]
வருகின்ற அக்டோபர் 28ம் தேதி மகாவீரர் நிர்வாண் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து ரசிகர்களையும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மகாவீரர் நிர்வான் தினமானது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 28ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மகாவீரர் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது என்னவென்றால் அவர் எந்த உயிருக்கும் தீங்கு இழைக்க மனதளவில் நினைக்காதவர். ஆகையால் தான் வாழ்நாள் முழுவதும் இறைச்சியை வெறுத்தவர். அவரது தினத்தில் சென்னையில் பொது சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் அனைத்து […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடை அமைப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட தீயணைப்பு துறை அதிகாரி ராஜேஷ்கண்ணா அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு துறை தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகத்தில் பணி புரியும் பலருக்கு லஞ்சம் பரிசுப்பொருட்கள் மூலமாகவோ பணம் மூலமாகவோ வழங்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. ஆகையால் சென்னையில் பல இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பின்னால் […]
சென்னையில் இயற்கையின் மீது கொண்ட காதலின் காரணமாக தனது வீட்டில் 350க்கும் மேற்பட்ட மருத்துவ குண செடிகளை 35 வருடங்களாக வளர்த்து வீட்டை பசுமைகுடிலாக மாற்றியுள்ளார் ஜஸ்வந்த்சிங். சென்னை முகப்பேர் அருகே வசித்து வருபவர் ஜஸ்வந்த் சிங். இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனது வீட்டில் 350க்கும் மேற்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த செடிகளை பராமரித்து வளர்த்து வருகிறார். மருத்துவச் செடிகளோடு, பழம், காய்கறிகளை வழங்கும் செடிகளையும் அவர் வளர்த்து வருகிறார். மேலும் வீட்டின் மாடியில் […]
சத்யமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சுங்கச் சாவடியில் கொட்டப்பட்டுள்ள கரும்புகளை தின்பதற்காக யானைகள் வந்து முகாமிடுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டிச் செல்கின்றனர். சத்தியமங்கலம் to மைசூர் நெடுஞ்சாலை வனப்பகுதிக்கு அருகே உள்ளதால் அங்கே உள்ள சாலைகளில் காட்டு யானைகள் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில் பண்ணாரி சோதனை சாவடியில் கனடாவிலிருந்து கரும்பு ஏற்றி வரும் லாரிகள் அதிகப்படியான கரும்பை வைத்திருந்தால் சோதனைச்சாவடியில் மேற்கூரைகளில் சிக்கி பின் உபரி கரும்புகள் அங்கேயே […]
அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனை நடத்தியதில் பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தீபாவளியை முன்னிட்டு அதிக லஞ்ச பணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அலுவலர் லாவண்யா தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து அங்குள்ள பொது மக்களிடமும் அலுவலர்களிடமும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் கணக்கில் காட்டப்படாத பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பொதுமக்களிடம் […]
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாவட்ட அலுவலர்கள் பயன்படுத்திய வாடகை கார்களுக்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 12 லட்சம் பாக்கியை தரக்கோரி சுற்றுலா உரிமையாளர்கள் நல சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். சுற்றுலா கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அதில், நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 135 வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலின் தசரா திருவிழாவை முன்னிட்டு காணிக்கையாக உண்டியலில் 2,86,71,715 ரூபாய் கிடைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். அதேபோல் இந்த வருடமும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் சிறப்பு அம்சம் என்னவென்றால் பக்தர்கள் விழாவிற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே காப்புகட்டி, விரதம் இருந்து பின், சாமி அலங்கார வேடமிட்டு ஊரிலுள்ள அனைவரிடமும் ஊர் ஊராகச் சென்று பொதுமக்களிடம் பணம் வசூலித்து அதனை […]
திண்டுக்கல்லில் அக்காவை பள்ளி வாகனத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்துவர அத்தையுடன் சென்ற 2 வயது சிறுமியின் மீது, தனியார் பள்ளி வாகனம் மோதி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வசித்து வந்தவர் மஞ்சு. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒருவர் பள்ளியில் படிக்க மற்றொரு குழந்தை சிறு குழந்தையாகும். இந்நிலையில் இவரது உறவினர் சசிகலா என்பவர் நேற்றைய தினம் மூத்த குழந்தையை பள்ளி வாகனத்தில் […]
கன்னியாகுமரியில் ‘தங்கப் புதையல் வழக்கில் தொடர்புடைய பெண் காவல் ஆய்வாளர் உட்பட மூன்று காவலர்களை விசாரணைக்கு நேரில் கட்டாயம் ஆஜராக வேண்டுமென மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அப்பகுதியில் வசித்து வந்தவர் ஜெர்லின். இவர் அதே பகுதியில் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜெர்லினுக்கு திடீரென தங்க புதையல் கிடைத்ததாகவும், அதனால் வசதி வாய்ப்பு வந்ததாகவும் ஊரில் பலர் பேசிக் கொண்டனர். இதனை நம்பி ஜெகன் என்பவர் ஜெர்லினை 6 பேரின் […]
நாகையில் டெங்கு, மலேரியா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றும் பணியில் மாவட்ட ஆட்சியர் ஈடுபட்ட சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி நாள்தோறும் மழை கொட்டித்தீர்த்த வருவதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி டெங்கு, மலேரியா உள்ளிட்ட கொசுக்கள் பெருகி மக்களுக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தி பாதிப்பை கொடுத்து வருகிறது. ஆகையால் நாகை மாவட்ட ஆட்சியர் இதனை கட்டுப்படுத்தும் விதமாக கொசுக்கள் அதிகம் இருக்கக்கூடிய செடிகள் குப்பைகள் உள்ளிட்டவற்றை துப்புரவு […]
குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ள போரூர் to குன்றத்தூர் சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். சென்னை நகரத்தின் மிக முக்கிய நுழைவு வாயிலாக கருதப்படுவது போரூர் டு குன்றத்தூர் சாலை. இந்த சாலையை சென்னையைச் சுற்றியுள்ள நந்தம்பாக்கம், சோமங்கலம், சிறுகளத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சுத்திகரிப்பு குடிநீர் கொண்டு செல்வதற்காக கோவையில் பிரபல […]
கோவையில் பட்டங்களைப் பறக்க விட்டு தங்க வியாபாரி ஒருவர் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தங்க நகை பட்டறைகள் பணிபுரியும் கோவையை சேர்ந்த ராஜா என்பவர் வஉசி மைதானத்தில் விதவிதமான வடிவங்கள் கொண்ட டெங்கு விழிப்புணர்வு பட்டங்களை வானில் பறக்கவிட்டு மக்களின்கவனத்தை ஈர்த்தார். அதன்படி பட்டங்களில் ஏடிஎஸ் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் அதன் படங்கள் இடம்பெற்றிருந்தன.இவரின் இந்த புதிய முயற்சிக்கு கோவை மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் […]
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கூட்டுப் பண்ணை திட்டத்தின் கீழ் சம்பா சாகுபடிக்காக ரூ6 லட்சம் மதிப்பிலான பொருட்களை விவசாயிகள் கொள்முதல் செய்தனர். திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை அடுத்த வாழப்பாடி ஊராட்சியில் உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு சம்பா நெல் சாகுபடிக்கு இடு பொருட்கள் கொள்முதல் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2019-20 ஆம் ஆண்டு கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் நடப்பு சம்பா சாகுபடிக்கு 2.5 டன் நெல் […]
நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் வினோத் என்பவர் டோலக்கேட்டில் வரி செலுத்த மறுத்ததின் காரணமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் அவரை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியைடைந்த வேட்பாளர் வினோத். இவர் திருச்சியில் இருந்து காரைக்குடிக்குச் சென்றுகொண்டிந்த பொழுது மாத்தூர் சுங்கச்சாவடியில் வரி செலுத்த மறுத்ததோடு மட்டுமல்லாமல், சுங்கச்சாவடி ஊழியர்களிடம் தனது அரசியல் பலத்தைக் கூறி மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசியுள்ளார். […]
தர்மபுரியில் இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக இலக்கியம்பட்டி ஏரியானது முழு கொள்ளளவை எட்டியதன் காரணமாக கிராம மக்கள் ஆடை பலியிட்டு வழிபாடு செய்தனர். தமிழகம் முழுவதும் வடக்கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் அதிவேகமாக நிரம்பி வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக இலக்கியம்பட்டியில் உள்ள ஏரியானது முழுக்கொள்ளவை எட்டியதோடு உபரிநீரும் வெளியேற தொடங்கியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி கொண்டு ஏரி நிரம்பி […]
திருப்பூரில் குடி போதையில் இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற காவல் அதிகாரியே பெண்ணின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி எல்லைக்கு உட்பட்ட பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் மயில்சாமி. இவர் நேற்று மாலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் அவிநாசி அருகே சென்று கொண்டிருந்த பொழுது, சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது மோதிவிட்டு வாகனத்தை நிற்த்தாமல் சென்றுள்ளார். இதையடுத்து […]
நீலகிரி மாவட்டத்தில் கொலம்பை, பாரதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் வடக்கிழக்குப் பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உதகை, குன்னூர், கேத்தி, குந்தா, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறதுதொடர்மழையினால் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலைகளும் துண்டிக்கபட்டுள்ளன. இந்நிலையில் உதகை அருகே உள்ள கொலகம்பை, பாரதிநகர் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு பெய்த […]
நாகூர் அருகே கனமழை காரணமாக பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த நபர் படுகாயங்கங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதற்கிடையே நாகூரில் பனங்குடி பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவர் தனது வீட்டில் அம்மா, அப்பாவுடன் உறங்கிக் கொண்டிருந்தார்.அப்போது இன்று அதிகாலை வீட்டின் பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் கருணாநிதியின் பெற்றோர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்ஆனால், கருணாநிதியின் இரண்டு கால்களிலும் சுவரின் கற்கள் […]
அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள நிலத்தை, வட்டாட்சியர் ரவி தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்புடன் அளவீடு செய்து மீட்டனர். சேலம் செவ்வாய்பேட்டை அங்காளம்மன் கோயிலுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலம் பள்ளப்பட்டி, பெரிய ஏரிக்கரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தைச் சிலர் ஆக்கிரமிப்பு செய்து, சட்ட விரோதமாக போலி பத்திரங்கள் தயார் செய்து விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்டனர்.தகவலறிந்த திருக்கோயில் தொண்டர்கள் சபை தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கூற, இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் […]
காவல்துறை ஆலோசனையை ஏற்று நெல்லை மீனாட்சிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் மொத்தம் 12 சிசிடிவி கேரமாக்களை விஜய் நற்பணி இயக்கத்தினர் பொருத்தி கொடுத்துள்ளனர். நடிகர் விஜய் இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், விவேக் என மாபெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு […]