கன்னியாகுமரியில் சபரிமலை சீசன் காலத்தில் அமைக்கப்படும் தற்காலிகக் கடைகளுக்கு 2020ஆம் ஆண்டு முதல் தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் பொன்னையா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்குத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மத்திய அரசு 2019 ஜனவரி மாதம் கொண்டுவந்துள்ள அறிவிக்கையின்படி கடற்கரை ஓரத்தில் எந்தவிதமான வணிக நோக்கிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது. ஆனால், கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சூரிய மறையும் […]
Tag: DistrictNews
சேலம் சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடகிழக்குப் பருவமழை அதிகமாகியுள்ளதால், தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே சேலத்தில் இரவு நேரங்களில் கனமழைவெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையினால் இன்று நகரின் பல முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.இதேபோல சீலநாயக்கன்பட்டியிலுள்ள திருச்சி to நாமக்கல் NH4 சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கி […]
கல்லூரி மாணவனுக்கு சினிமா ஆசை காட்டி ரூ1,20,000 பணத்தை தந்தை , மகன் இருவரும் சேர்ந்து சுவாகா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சேப்பாக்கம் பகுதியில் மாவட்ட செயலாளராக இருப்பவர் எஸ் எஸ் கண்ணன். இவர் சென்ற வருடம் நம்ம கதை என்ற தலைப்பில் தனது மகன் கவித்திறன், நிகாவித்திறன் ஆகியோரை வைத்து படம் ஒன்றை தயாரித்தார். அந்தப்படம் திரையரங்கில் ஓரிரு நாட்களே ஓடிய நிலையில் ரூட் பொருள் போன்ற அடுத்தடுத்து படங்களை தயாரிக்க உள்ளதாகவும் […]
சேலத்தில் கூலி தொழிலாளி ஒருவரிடம் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவது போல நடித்து நூதன முறையில் கொள்ளையடிக்க முயன்ற 3 பேரை சங்ககிரி காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் தட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் சங்ககிரி திருச்செங்கோடு சாலையில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று பேர் அவருக்கு உதவி செய்வது போல நடிக்க அவரது ஏடிஎம் கார்டு பற்றிய ரகசியங்களை தெரிந்து கொண்டு பணம் […]
டெங்கு மலேரியா சிக்குன்குனியா போன்ற நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழல் உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி குழுவினர் தொடர் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். கொசு உற்பத்தியாகும் சூழலில் உள்ள கட்டிட உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். என்னுடைய மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் திருத்தப்பட்ட அபராதத் தொகை கடந்த 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் உள்ள சேலம் அரசு தலைமை மருத்துவமனையை சுற்றி எட்டு உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு உணவுப் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படுவதாக புகார் எழுந்ததையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவகங்களில் […]
சென்னையில் காதில் பிரச்சனை என்று சென்ற சிறுமிக்கு மருத்துவர்கள் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமியின் காது மடல்களில் சிறிய கட்டி இருந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை அம்பத்தூரில் உள்ள சர் ஐவன் ஸஃபோர்ட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி அன்று சீரமைக்க தொடர் பரிசோதனை நடைபெற்று வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு […]
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 4 நாட்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பெய்துவருகின்றது. ஆங்காங்கே மழை பெய்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி இருப்பதையும் நாம் பார்த்து வருகின்றோம்.இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என […]
மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணை உருண்டையைப் பார்வையிடவும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று மாமல்லபுரம். இங்கு பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை பறைசாற்றும் கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்டவை அமைந்துள்ளன. இந்த கலைச் சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்குகிறது.குறிப்பாக வெண்ணை உருண்டை பாறையை மக்கள் ஆர்வமுடன் […]
தீபாவளி பண்டிகைக்காக தி.நகரில் பொருள்கள் வாங்க வருவோரின் பாதுகாப்பிற்காக காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்புக் கேமரா பொருத்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையின்போது மக்கள் புத்தாடைகள், ஆபரணங்கள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவது வழக்கம். அந்தவகையில், சென்னை தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் பலரும் தங்களது குடும்பத்துடன் வந்து பண்டிகைக்கு தேவையான பொருள்களை வாங்கிச் சென்றுவருகின்றனர். இதனால் தி.நகரில் வழக்கத்தை விட அதிக அளவு போக்குவரத்து நெரிசலும் பொருள்கள் திருடுபோவதற்கான வாய்ப்பும் அதிகளவில் உள்ளது. […]
அரியலூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் வறட்சி காலங்களில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையிலும், நிலத்தடி நீர் ஆதாரத்தை காக்கும் வகையிலும் 30 ஆயிரம் பனை விதைகளை மாணவா்கள் விதைத்தனா். அரியலூர் மாவட்டம் அருகே உள்ள தா.பழூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் 30 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது. வருங்காலங்களில் வறட்சியைச் சமாளிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏரியின் கரைகளிலும் பனை விதை நடும் திட்டம், தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.அந்த வகையில், தா.பழூரில் உள்ள கோரை […]
சென்னையில் கற்பிதங்களும் உண்மைகளும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் காஷ்மீர் 370 கற்பிதங்களும் உண்மைகளும் என்ற தலைப்பில் பேராசிரியர் அ.மார்க்ஸ் பேசினார். அதில்,காஷ்மீரில் பண்டிதர்கள் கொல்லப்பட்டது உண்மை தான். ஆனால், அதை செய்தவர்கள் அங்கிருந்த அமைப்பைச் சார்ந்தவர்கள். ஈழத்தில் மக்கள் சாவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு தான் காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில் மட்டும் அமைப்புகள் என்று குறிப்பிடாமல் இஸ்லாமியர்கள் தான் பண்டிதர்களைக் கொன்றார்கள் என்று கூறுகிறார்கள். இதை நாம் […]
விருதுநகரில் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் நீச்சல் போட்டி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் தொடங்கின.இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நீச்சல் போட்டியில், மதுரை, தஞ்சாவூர், திருச்சி, சென்னை, சிதம்பரம் உள்ளிட்ட 14 கல்லூரிகளில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனியாக இரண்டு நாட்கள் நடைபெற்று வரும் இந்த நீச்சல் போட்டியில், இறுதிப் போட்டியில் […]
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் மழைப் பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், குந்தா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக கனமழைப் பெய்து வருகிறது.இதன் விளைவாகப் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளதுஎனவே, இந்தாண்டு வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாவட்ட தீயணைப்புத்துறை சார்பாக பேரிடர் மீட்புக் குழுவினருக்கும், உள்ளூர் தீயணைப்புத்துறையினருக்கும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.விளக்கம்இதில் நிலச்சரிவு, இடிபாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, […]
அன்னசாகரம் பகுதியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வகுப்பறை முன் மழைநீர் தேங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தருமபுரி நகராட்சி அன்னசாகரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இதில் 80-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்துவருகின்றனர். மாவட்டத்தில் தொடர் மழைக் காரணமாக இப்பள்ளியில் உள்ள வகுப்பறை முன் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வகுப்பறைகளுக்குச் செல்லும் மாணவர்கள் தேங்கி கிடக்கும் மழைநீரில்தான் நடந்து செல்லவேண்டியிருக்கிறது.மேலும் மழைநீரில் உருவாகும் கொசுக்களால் பள்ளி மாணவ மாணவியருக்கு டெங்கு காய்ச்சல் […]
தன்னை ஆளுநர் என்று அழைப்பதைவிட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புவதாக தெலுங்கானா ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான தமிழிசை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். கோவை சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி. கல்லூரியின் நிறுவன தின விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழிசை, “நான் தமிழ்நாட்டிற்கு என்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன். மேதகு ஆளுநர் என்று அழைப்பதை விட பாசமிகு சகோதரி என்று அழைப்பதைத்தான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் என்னை சகோதரி என்று அழைத்தது […]
மாவட்ட நகர்ப்புறங்களில் பாதாளச் சாக்கடை சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்ட நகர்ப்புறங்களில் கடந்த நான்கு ஆண்டுகளாக பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்பட்டுவருகிறது. மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் 38 வார்டுகளிலும் பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஓரளவிற்கு அனைவரும் பாதாளச் சாக்கடை இணைப்பை செய்து முடித்துவிட்டனர். தற்போது பாதாளச் சாக்கடையிலிருந்து கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியிருக்கிறது. மழைக்காலங்களில் மட்டுமல்லாமல், வெயில் காலங்களிலும் இந்தக் கழிவு நீர் வெளியேற்றம் இருந்துவருகிறது.தற்போது டெங்கு காய்ச்சல் பரவ […]
கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மூதாட்டியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் லிங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் தனது தோட்டத்து வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பால், மோர் வியாபாரம் செய்ததுடன் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்குவதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெருமாள் என்பவர் அரவக்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.தகவலறிந்து […]
ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழ்நாடு மீன் வளத்துறை நடத்தும் மீன் உணவுத் திருவிழாவில், உணவுகளை ருசி பார்க்க அசைவ பிரியர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்ப்பார்கள். அம்மாதம் முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் அசைவு பிரியர்களுக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது மீன் உணவு திருவிழா. சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த திருவிழா தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழ்நாடு மீன்வளத்துறை நடத்தும் இந்த விழாவில் பொதுமக்கள் […]
ஜமாத் தலைவர்களை உதாசினபடுத்தியதாகக் கூறி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து கொடைக்கானலில் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்கு சென்ற பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஜமாத் தலைவர்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி மனு அளித்துள்ளனர். அதற்கு அவர் அதிமுகவிற்கா ஓட்டு போட்டீர்கள்? ஜம்மு-காஷ்மீரில் மக்களை ஒடுக்கியது போல் களக்காடு பகுதியையும் ஒடுக்குவோம் என்றும் உதாசினப்படுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்தை கண்டிக்கும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் […]
கொடைக்கானலில் பெய்துவரும் கன மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதில் கயிறு கட்டி விவசாயிகள், பொதுமக்கள் ஆபத்தான முறையில் கடந்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரகாலமாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் பேத்துப்பாறை வயல் பகுதியில் உள்ள ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீர்வீழ்ச்சி, புலிச்சோலை அருவிகள், வில்பட்டி ஆறு, பெலாக்கெவை ஆறு என நான்கு ஆறுகள் பேத்துப்பாறை பெரியாற்றில் கலப்பதால், கன […]
கருத்தரங்கில் மாவட்டம் முழுவதும் இருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். கலந்துகொண்டனர் என்று சொல்வதைக் காட்டிலும் செல்ஃபோனுக்குள் மூழ்கியிருந்தனர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். டெங்கு காய்ச்சல் தமிழ்நாடு முழுவதையும் ஆட்டிப் படைக்கிறது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக வேலூரில் வேகமாக பரவிவரும் டெங்குவை தடுப்பதற்காக அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும், தனியார் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் விழிப்புணர்வு […]
பெண் ஒருவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்கிய கொடுங்கையூர் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த பார்வதி தாக்கல் செய்த மனுவில், கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பூட்ஸ் கால்களால் தாக்கி, பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்த கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் கனகராஜ், உதவி […]
பசும்பொன் தேவர் குருபூஜை விழா பாதுகாப்பு பணிகளில் 8 ஆயிரம் காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், இந்த விழாவை முன்னிட்டு பேனர் வைக்கவும், வாடகை வாகனங்களில் வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் வருகின்ற 30ஆம் தேதியன்று முத்துராமலிங்கத் தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ், […]
வடகிழக்கு பரவுமழையால் சென்னையில் வெள்ளம் சூழும் அபாயம் இருப்பதால் சென்னை வாசிகள் அச்சத்தில் உள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழையும் சென்னை தூத்துக்குடி நெல்லை கன்னியாகுமரி ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் நள்ளிரவு முதல் சென்னை விமான நிலையம், குரோம்பேட்டை, ஆவடி, அம்பத்தூர், வளசரவாக்கம், வடபழனி, உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து […]
நாகப்பட்டினத்தில் தரமற்ற மதுபானங்களை விற்பதாக அப்பகுதி குடிமகன்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் தரமற்ற முறையில் மதுபானங்கள் விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில், அரசு மதுபானக் கடையில் குடிமகன் ஒருவர் கோல்டன் சாய்ஸ் என்ற டீலக்ஸ் பிராந்தியை வாங்கியுள்ளார்.இதையடுத்து, அந்த பிராந்தியை குடிப்பதற்காக எடுத்தபோது மதுபான பாட்டிலின் உள்ளே கல்வடிவில் பசை போன்று ஒருபொருள் ஒட்டியிருந்தது. அதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் […]
விருதுநகரில் குடிபோதையில் வாலிபர் ஒருவர் தெப்ப குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் அல்லம்பட்டி மொட்டையான்செட்டி தெருவில் புரட்டாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் ஒரு அங்கமாக அப்பகுதி மக்கள் கோயிலிலிருந்து தெப்பக்குளத்திற்கு கரகம் எடுத்துச்செல்வது வழக்கம். அவ்வாறு கரகம் எடுத்துச் செல்லும் போது அப்பகுதியைச்சேர்ந்த ராமகிருஷ்ணன்(30) என்பவர் குடிபோதையில் நிலைதடுமாறி தெப்பத்திற்குள் விழுந்தார். விழுந்த சிறிது நேரத்தில் அவர் மூச்சுத்திணறி தண்ணீருக்குள் மூழ்கி உயிரிழந்தார். இதனைப்பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு […]
வேலூரில் டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவையடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சரண்ராஜ், மோனிகாராணி தம்பதியினருக்கு நட்சத்திரா(4) என்ற பெண் குழந்தை இருந்தது. நட்சத்திரா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி நட்சத்திராவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.ஆனாலும், காய்ச்சல் அதிகரித்ததால் உடனடியாக அடுக்கம்பாறையில் உள்ள அரசு […]
அரியலூரில் டாஸ்மார்க் கடையை மூட கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் அருகே உள்ளது உடையவர் தீயனூர் கிராமம். இக்கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு உத்தரவின்பேரில் நெடுஞ்சாலையில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டபோது, விக்கிரமங்கலத்தில் இருந்த டாஸ்மாக் கடை உடையவர் தீயனூர் மாற்றப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையானது செங்குழி பெருமாள், தீயனூர் மலை மேடு பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ளது.பொதுமக்கள் இதனால், இப்பகுதிக்கு பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ […]
இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேரமும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மீனவர்களுக்கு உதவும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.இம்மையம் அக்டோபர்16 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை செயல்படும். மையத்தில் உள்ள 04567-230355 என்ற தொலைபேசி எண்ணில் மீனவர்கள் தொடர்பு […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசு பெட்டி என்ற பெயரில் சிறப்பு சலுகைகளுடன் தீபாவளி பட்டாசுகள் தயாரிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் சிவகாசி மற்றும் சாத்தூா் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில், அதன் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பட்டாசு விற்பனையும் தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்து உள்ளது. இந்த நிலையில், இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு விதவிதமான பரிசுப் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.தீபாவளி பண்டிகை […]
பிரபல தண்ணீர் நிறுவனத்தின் பாட்டிலில் சிலந்தி மிதந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்ட பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர். நேற்று ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த விக்ரம் என்பவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக பிரபல நிறுவனத்தின் குடிநீர் […]
குழந்தைகளின் ஆபாச காணொலிகளை பரப்பியதாகச் சென்னையைச் சேர்ந்த இருவரது வீடுகளில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தினர். ஜெர்மனியில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, ஆபாச காணொலிகளை வாட்ஸ்அப்பில் பரப்பியது உள்ளிட்ட குற்றச்சாட்டின் பெயரில் ஜெர்மனியில் சஸ்சே டிரெப்கே என்பவர் கைது செய்யப்பட்டார்.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தைகளிடம் அவர் தவறாக நடந்து கொண்டதையும் காணொலிகளாக எடுத்து அதை 483 பேர் கொண்ட 29 வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்ததாக விசாரணையில் கூறியுள்ளார். இதனால் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை […]
ஓமன் நாட்டில் ஏற்பட்ட புயலில் சிக்கி உயிரிழந்த மீனவரின் உடலை மீட்டு தரக்கோரி ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை இட்ட மீனவ பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் நந்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் ஓமன் நாட்டில் கடந்த ஓராண்டாக ஒப்பந்தம் அடிப்படையில் கூலித் தொழிலாளர்களாக மீன்பிடித்து வந்தனர். கடந்த மாதம் 16ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 8 பேர் படகில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ஏற்பட்ட […]
கன்னியாகுமரியில் கடந்த 2011ம் ஆண்டு லஞ்சம் வாங்கிய வழக்கில் கனிமவளத் துறை அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவருக்கு சொந்தமாக கல்குவாரி உள்ளது. இதற்கான அனுமதி சீட்டு வழங்க மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மாரிமுத்து என்பவருக்கு ரூ 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளார். இதனால் கனிம வளத்துறை அதிகாரி அப்போது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம் […]
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற இரண்டு பேரை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் தேடி வருகின்றனர். செங்கோட்டை பகுதியில் உள்ள மெய்யப்பன் என்பவர் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இவர் 20 நாட்களுக்கு முன்பு புதிதாக வாங்கிய யமஹா ஆர்15 இருசக்கர வாகனத்தை நேற்று இரவு கடைக்கு வெளியே நிறுத்திவிட்டு கடைக்குள் தூங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது இருசக்கர வாகனம் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதனால் அங்கு பொருத்தப்பட்டிருந்த […]
சென்னையில் உலக உணவு தினத்தை முன்னிட்டு ஊட்டச்சத்தின் முக்கியதுவத்தை மாவட்டஆட்சியர் மாணவிகளிடம் எடுத்துரைத்தார். உலக உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஊட்டச்சத்து நிறைந்த உணவின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதமாக ஆறு நிறங்களில் உருவாக்கப்பட்ட பயோ ஷாட் ஒன்றை அறிமுகப்படுத்தினார். மத்திய உணவு […]
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு ரத்தக்கறை படிந்து இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த தவிட்டுபாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நள்ளிரவு பூஜை செய்த அடையாளம் தெரியாத நபர்கள், ஆடு சேவலை பலி கொடுத்து இழுத்துச் சென்ற பொழுது வீதிகளில் […]
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே இரண்டு மகன்கள் இருந்தும் கவனிக்க ஆளில்லை என்று கூறி வைகை ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற 55 வயது பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். தேனி மாவட்டம் ஜம்புலிபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரகதம். இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் மகன்கள் இரண்டு பேரும் வெளியூரில் உள்ளனர். வாழ்வாதாரத்தை காக்க வீட்டு வேலை செய்துவரும் மரகதம் வயதான நிலையில் இரண்டு மகன்கள் இருந்தும் தன்னை கவனிக்க ஆளில்லை என்று கூறி வைகை ஆற்றில் […]
சென்னை வேப்பேரியை சேர்ந்த தினேஷ் என்பவர் அதே பகுதியில் ஒப்பனை மற்றும் பேன்சி பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு அகமது என்பவர் நேரில் சந்தித்து தமக்கு தெரிந்தவரிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் 100 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதாகவும், அதை 500 மட்டும் 2,000 நோட்டுகளாக மாற்றிக் கொடுத்தால் இரண்டு விழுக்காடு கமிஷன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். கூடுதல் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தினேஷும் 80 லட்சம் […]
சென்னை அருகே சிக்கன் பிரியாணியில் புழுக்கள் இருந்ததால் சிக்கன் கடை உரிமையாளர் மீது நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் 99 பிரான்ஹிட் என்ற ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது. இந்த ரெஸ்டாரண்டில் உணவருந்த வந்த வாடிக்கையாளர் வாங்கிய பிரியாணி ஒன்றில் சிக்கனில் புழுக்கள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அந்த வாடிக்கையாளர் சிக்கனில் புழு இருந்ததை படமெடுத்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்துள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை […]
தர்மபுரியில் டெங்கு கொசுப்புழுக்களை உற்பத்தி செய்த 4 நிதி நிறுவனங்களுக்கு ரூ 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வண்ணம் தூய்மைப் பணியை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டார். அதன் பெயரில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தொழிலாளர்கள் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் டெங்கு தடுப்பு களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் சுத்தம் செய்யும் பணியிலும் சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது […]
திண்டுக்கல்லில் 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போஸ்கோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி நேற்றைய தினம் தனது சொந்த தம்பியுடன் தேவாலயத்திற்குச் சென்று வழிபட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வந்துள்ளார். அப்போது அங்குள்ள புதரில் இருந்த வாலிபர் ஒருவர் திடீரென்று அவர்களை வழிமறித்து அவரது தம்பியை தாக்கிவிட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதில் பதற்றம் அடைந்த […]
கோயம்பத்தூரில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனை ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை பகுதியில் கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தனது நண்பர் முருகன் மற்றும் ஆனைமலை நண்பர் ஒருவருடன் மது பாட்டிலை வாங்கிக்கொண்டு ஒரு தோட்டத்திற்குள் சென்று மது அருந்தியுள்ளனர். பின் போதை தலைக்கேறிய நிலையில் ஆனைமலை நண்பரின் வீட்டிற்கு […]
கோயம்பத்தூரில் நிதிநிறுவனம் ஒன்று அடமானம் வைத்த வீட்டுப்பத்திரத்தை மறு அடமானம் வைத்து ரூ70 லட்சம் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் களப்பட்டி லட்சுமி நகர் சேர்ந்தவர் அரவிந்த் குமார். இவருடைய மகள் தனது அம்மாவுடன் நேற்றையதினம் கோவை மாநகர காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து புகார் ஒன்றை கமிஷனரிடம் அளித்துள்ளார். அதில் ஐயா நான் மேல் படிப்புக்காக அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூபாய் 14 லட்சம் கடன் வாங்கினேன். படித்து முடித்ததும் என்னால் அந்தப் […]
சென்னையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் 2 பேரை ஒரே நேரத்தில் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டிபன் இவர் ஒரு ஆட்டோ டிரைவர் ஆவார். இவரது நண்பர் ஆனந்த் இவர் இந்திரா நகரைச் சேர்ந்தவர். நெருங்கிய நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் பெரும்பாக்கத்தில் உள்ள மதுபான கடை ஒன்றுக்கு சென்று மது வாங்கி சற்று தொலை தூரம் சென்று அவர்களது சொந்த […]
சென்னையில் மோசடி கும்பல் ஒன்று பெண்களை பயன்படுத்தி 1 வாரத்திற்குள் ரூ 25,00,000 மோசடி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மோசடி கும்பல் ஒன்று இனிமையான குரல்வளம் கொண்ட பெண்களை பயன்படுத்தி பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு உங்களுக்கு கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில் குறைந்த வட்டியில் அதிக பணத்தை கடனாக வாங்கித் தருவோம் என்று தெரிவிக்கிறார்கள். அந்த பெண்களின் பேச்சை உண்மை என்று நம்பி தனக்கு கடன் உதவி தேவைப்படுகிறது என்று யாரேனும் கூறும் […]
சென்னையில் நர்சிங் மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூர் பகுதியை அடுத்த அண்ணாமலை நகர் ராஜுவ்காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மகள் நந்தினி திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரம் வீட்டில் தனது அறையில் நந்தினி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நீண்ட நேரம் உறங்குகிறாள் என்று அவரது பெற்றோர் அவரை எழுப்ப […]
தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசு துறை சார்ந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளி நெருங்கி கொண்டு சமயத்தில் அனைவரும் போனஸ் தொகையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு துறை சார்பிலும் போனஸ் தொகை வழங்குவதற்கான கணக்கீடு செய்யப்பட்டு வந்தது. அதன்படி, தமிழக அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக 8.33 சதவிகிதமும், கருணை தொகையாக 11.67 சதவிகிதம் என மொத்தம் இருபது சதவிகிதம் போனஸ் […]
வேலூரில் பகலில் கட்டட மேஸ்திரியாகவும் இரவில் இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூரில் காட்பாடி பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் சுரேஷ், அஜித்குமார் என்றும் கட்டிட மேஸ்திரியான இருவரும் பகலில் கட்டிட வேலையிலும் இரவில் இருசக்கர வாகன திருட்டிலும் ஈடுபட்டதும் தெரிய வந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர். பின் […]