Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போலீஸ் விசாரணையால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்…. “அம்மாவ பாத்துக்கோ நண்பா” வைரலாகும் ஆடியோ…!!

சென்னை மாதவரம் அருகே காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தால் இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பொன்னிஅம்மன்மேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டதில் வெங்கடேசன் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரமேஷுக்கு போன் செய்து விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரக்கூறி வற்புறுத்தியதாகவும், ஆகையால் நான் சாக  போவதாகவும் தனது […]

Categories
பல்சுவை மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அப்துல்கலாம் சகோதரருக்கு அமைதிக்கான பரிசு…. அமெரிக்கா வாழ் தமிழர்கள் நிகழ்த்திய நெகிழ்ச்சி சம்பவம்….!!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு ராமேஸ்வரம் அருகே உள்ள அவரது நினைவு மண்டபத்தில் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல் கலாம் 88வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ராமேஸ்வரம் அடுத்த பேய்க்கரும்பு பகுதியில் உள்ள அவரது நினைவு மண்டபத்தில் கலாமின் சகோதரர் முத்து மீரா மரைக்காயர் உள்ளிட்ட உறவினர்கள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்தினர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ஜனநாயக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

11 மாத குழந்தை உட்பட 3 பேர் மரணம்….. மேலும் 19 பேருக்கு சிகிச்சை…. திருவள்ளூரை சூறையாடும் டெங்கு….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 19 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 114 பேர் காய்ச்சலுடன் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 10 சிறுவர்கள் உட்பட 19 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டீர்…… பேனர் வைத்த அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்….!!

உங்கள் மகளை வரவேற்க இன்னொருவர் மகளை கொன்றுவிட்டிர்கள் என்று சுப ஸ்ரீ வழக்கில் பேனர் வைத்த அதிமுக நிர்வாகிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் திருமண நிகழ்ச்சிக்காக சாலை நடுவே அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலைகுலைந்து கீழே விழுந்தார். அவர் மீது பின்னால் வந்த லாரி ஏறியதால் அவர் உடல் நசுங்கி பலியானார். இதையயடுத்து பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் […]

Categories
சென்னை பல்சுவை மாவட்ட செய்திகள்

“1 மரம் வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும்” அப்துல்கலாம் பிறந்தநாளில் விவேக் சிறப்பு பேட்டி…!!

ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டுமென்ற பசுமை தீர்ப்பாய உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என நடிகர் விவேக் கேட்டுக்கொண்டுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் நகரில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசு பள்ளிகளில் மரக்கன்று நடும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது என்றார். இதேபோல தனியார் பள்ளி மாணவர்களையும் மரக்கன்றுகளை வளர்க்க ஊக்கபடுத்த வேண்டும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிநவீன கேமராக்கள்….. 60க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு….. கடும் நடவடிக்கையுடன் தொடங்கிய “தீபாவளி பந்தோபஸ்து”.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் உள்ளிட்ட இடங்களில் திருடர்களை பல்வேறு கேமராக்கள் மூலம் கண்காணித்து பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  சென்னை வடக்கு தெற்கு மற்றும் மேற்கு மாம்பல சாலைகள், ரங்கநாதபுரம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாதாரண  நாட்களிலே கூட்டம் அலைமோதும் பட்சத்தில் தீபாவளி நேரங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் இருக்கும். இதன்  காரணமாக அப்பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த காவல்துறையினர் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாம்பலம் ரயில் நிலையம் போத்தீஸ் ரங்கநாதபுரம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இடிந்து விழுந்த பள்ளி மேற்கூரை…. உயிர் தப்பிய மாணவர்கள்….. நாமக்கல்லில் பரபரப்பு….!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த அப்பகுதியில் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்  மாவட்டம் பரமத்திவேலூர்  பகுதியை அடுத்த குப்புச்சிபாளையத்தில்   செயல்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 240க்கும்  மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் மேற்கூரை அதிகாலையில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவர்கள் அமரும் மேசை பாடப்புத்தகங்கள் வைக்கும் கல்லாலான அலமாரி உள்ளிட்டவை சேதமடைந்தன. பள்ளி நேரத்தில் இந்த விபத்து […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சரசரவென நிரம்பிய அணை “2,865 ஏக்கர் நிலம்….. 121 நாள்…. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

தேனி மாவட்டம் சோத்துப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 30 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. தேனீ மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள சோத்துப்பாறை அணையின் மூலம் பெரியகுளம் மேல்மங்கலம் லட்சுமிபுரம் தாமரைகுளம் பகுதியில் மொத்தம் 2,865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சுமார் 126.28 அடி கொண்ட அணை முழு கொள்ளளவை எட்டி தற்போது நீர்மட்டம் 126 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 500 கனஅடியாக உள்ளது. இந்நிலையில் முதல் போக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பேருந்துகள்….. 33 பேர் படுகாயம்….. சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் நேருக்கு நேர் பேருந்து மோதியதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 33 பேர்படுகாயம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து சேலம் நோக்கி அரசு டவுன் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து சென்னை டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அயோத்திப் பட்டணம் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. அதேசமயத்தில் அவ்வழியாக கல்லூரி மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு சின்ன கவுண்டர் புறம் நோக்கி  தனியார் கல்லூரி பேருந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அரசு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய சிறுவன்……”அறியாமையால் அகால மரணம்” விழுப்புரத்தில் சோகம்….!!

விழுப்புரத்தில் பல்பொடி என நினைத்து எலி பேஸ்ட்டால் பல் துலக்கிய பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை அடுத்துள்ள கோணலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம். பதிமூன்று வயதான இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஸ்ரீராம் பல்பொடி என்று நினைத்து எலி பேஸ்டை எடுத்து பல் துலக்கியுள்ளார். இதில் எலி  பேஸ்ட்டை முழுங்கிய அவர் திடீரென வாந்தி எடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மது அருந்த பணம் தரல….. விரக்தியில் தீக்குளித்த கணவன்….. உடல் கருகி மரணம்….!!

மது அருந்த மனைவி பணம் தராததால் விரக்தியில் கணவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியை அடுத்த அயன் வேலூர் என்கின்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். சுந்தரபாண்டிக்கு  மது அருந்தும் பழக்கம் அதிகமாக உண்டு அந்த வகையில் தினம்தோறும் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். இந்நிலையில் நேற்றைய தினம் தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார் சுந்தரபாண்டி. மனைவி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“வாந்தி-மயக்கம்” பள்ளி மாணவன் திடீர் மரணம்…… போலீசார் தீவிர விசாரணை….!!

விழுப்புரத்தில் திடீரென மாணவன் வாந்தி மயக்கத்துடன் மரணித்தது குறித்து காவல்துறைனர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதி அருகே வசித்து வருபவர் பழனி. இவரது மகன் ஆகாஷ் என்பவர் மணலூர்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் ஆகாஷ் இன்று பள்ளிக்கு சென்றுள்ள நிலையில், பள்ளியில் வைத்து திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்துள்ளார். பின் பள்ளி ஆசிரியர்கள் ஆகாஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரவழைத்தனர். அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நகராட்சிக்கு எதிராக சாலை மறியல்….. போலீசுடன் பொதுமக்கள் தள்ளு முள்ளு….. போக்குவரத்தால் ஸ்தமித்த விருதுநகர்….!!

விருதுநகரில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் பணிகளுக்கு எதிராக மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் , காவல்துறைக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி கீழ ரத வீதிகளில் அமைந்துள்ள வர்த்தக நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகளின்  உள்ளே நுழையும் படிகளை ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்து அகற்றி வந்தனர். இந்நிலையில் ஏற்கனவே அகற்றப்பட்ட இடிபாடுகளின் கற்களும் மணலும் ஆங்காங்கே […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதல் மனைவியை அடித்தே கொன்ற கணவன்…… நெல்லையில் பரபரப்பு…..!!

நெல்லை  மாவட்டத்தில் காதல் மனைவியை கணவனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்பத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி நகரை சேர்ந்த பாரதிராஜா என்பவருக்கும் அதே பகுதியில் மணி நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீநிதி என்ற பெண் குழந்தையும் சந்திரன் என்ற ஆண் குழந்தையும் உள்ளன. இந்நிலையில் திருமணமாகி எட்டு ஆண்டுகளில் பலமுறை இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பாரதிராஜா நெல்லையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் பயங்கரம்” ஓடும் பேருந்தில் அரிவாள் வெட்டு….. 2 பேர் படுகாயம்….. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு….!!

நெல்லை அருகே ஓடும் பேருந்தில் மர்மநபர்கள் 2 பேரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிள்ளி குளத்தில் இருந்து நேற்று இரவு நெல்லைக்கு செல்லும் அரசு பேருந்தினுள் அக்கிராமத்தைச் சேர்ந்த இருவர் ஏறினர். அவர்களை தொடர்ந்து 2 மர்ம நபர்கள் வழிமறித்து பேருந்தினுள் ஏறினர். பின் பேருந்து சிறிது தூரம் சென்ற பிறகு ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேருந்தில் பயணித்த கிள்ளி  குளத்தை சேர்ந்த இரண்டு பேரை […]

Categories
மாவட்ட செய்திகள்

நடுக்கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மின்னல் தாக்கி பலி…… தூத்துக்குடியில் சோகம்…!!

தூத்துக்குடியில் மீன் பிடிக்க சென்ற பொழுது மின்னல் தாக்கி மீனவர் உயிரிழந்த  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை அடுத்த வேம்பார் பெரியசாமி புரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின் இவர். மீன் பிடிக்கும்  தொழிலை செய்து வருவதோடு மீனவர் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் தனது சொந்த நாட்டுப் படகில் அவரது நண்பர் தேவ திரவியம் என்பவரது மகனான ஜஸ்டின் அழைத்துக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இவர்கள் இருவரும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர் கைவரிசை காட்டிய வழிப்பறி கும்பல்…… குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிப்பறி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ள 2 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக கடந்த மாதம் ஆரணி அருகே வந்த போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று அவரை தாக்கி அவர் வைத்திருந்த பணம் நகை உள்ளிட்டவற்றை பறித்துச் சென்று தப்பி ஓடியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பிளாஸ்டிக் இல்லா தமிழகம் வேண்டும்” கொடைக்கானலில் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பிளாஸ்டிக் இல்லாத தமிழகத்தை உருவாகுவதை வலியுறுத்தி நகராட்சி ஊழியர்களுடனும், அரசு அதிகாரிகளுடனும் இணைந்து  பள்ளி மாணவர்கள் பேரணியில் ஈடுப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். களத்தில் தொடங்கிய பேரணி ஏறு சாலை வழியாக சென்று பேருந்து நிலையத்தில் முடிந்தது. அங்கு பிளாஸ்டிக் பொருளைக்களை புறக்கணிப்பதை  வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து….. 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்….. திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 15 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் அருகே அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது. அந்த பேருந்து வேடசந்தூர் அருகே கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாயக்கன்பட்டி என்ற இடம் சென்றபொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“ஆம்புலன்சில் மாயமான செல்போன்” CCTV காட்சியில் பிடிபட்ட சிறுவன்….. போலீசார் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஆம்புலன்சில் இருந்து திருடன் ஒருவன் செல்போன் திருட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  திண்டுக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் விபத்தில் காயமடைந்த ஒருவரை தனியார் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் ஒருவர் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது வாகனத்திலேயே செல்போனை வைத்து விட்டு மருத்துவமனைக்குள் அவர் சென்ற நிலையில் அவரது செல்போன் திருடப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது ஒரு சிறுவன் ஒருவன் செல்போனை திருடுவது போன்ற காட்சிகள் பதிவாகி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” சொந்த மகளை கொல்ல முயன்ற பெற்றோர்கள் கைது….!!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மகளை கொலை செய்ய முயன்றதாக பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்தவர் ராமையா கவிதா தம்பதியின் மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் இரண்டாவது மகள் போடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவர் தனது அக்காள் கணவரின் தம்பியை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாணவி தனது காதலனுடன் செல்போனுடன் பேசியதாக அவர் தங்கியிருந்த விடுதி வார்டன் மாணவியின் பெற்றோருக்கு தகவல் […]

Categories
மாநில செய்திகள்

அவுரா TO மும்பை எக்ஸ்பிரஸ்…. “ரூ5 கோடி”… 13 கிலோ தங்கம்….. கடத்தல் வேலையில் ஈடுபட்ட பலே திருடர்கள்….!!

ஒடிசாவில் விரைவு ரயில்லில் கடத்தி வரப்பட்ட ரூபாய் 5 கோடி மதிப்பிலான சுமார் 13 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.  அவுராவிலிருந்து மும்பைக்கு செல்லும் ஞானேஸ்வரி விரைவு இரயிலில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் இயக்குனரகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ரூர்கேலா என்ற பகுதியை வந்தடைந்த ஞானேஸ்வரி விரைவு ரயிலில் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது 110 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆவி சொன்னதால் செய்தேன்” 1 1/2 வயது குழந்தை கழுத்தை அறுத்த போதை இளைஞன்….!!

சென்னை புழல் பகுதி அருகே ஆவி சொன்னதால் ஒன்றரை வயது குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்றதாக கூறிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை புழல் பகுதியை அடுத்த ஜஸ்டின் புரத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் ராஜ். இவர் நேற்றைய தினம் கஞ்சா போதையில் பக்கத்து வீட்டாருடன் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது ஒன்றரை வயது குழந்தை சாய்சரண் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளான்.  இதையடுத்து தப்பி ஓடிய அவனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், புழல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“அரசின் அலட்சியம்” விபத்துக்குள்ளான 40 மாணவர்கள்…… கொந்தளிப்பில் கிராம மக்கள்….!!

மதுரையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் 40 மாணவர்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வடசேரி சாத்தியார் கிராம ஓடையில் பாலம் ஒன்று 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு போக்குவரத்து வசதிக்காக திறந்துவிடப்பட்டது. தற்பொழுது அந்த பாலம் சேதம் அடைந்து இடியும் நிலையில் காணப்படுவதால் அந்த வழியாக ஊருக்குள் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளன.  இதன் காரணமாக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்த ஒரே ஒரு அரசு பேருந்தும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“போட்டோ காட்டி மிரட்டல்” 9ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த 2 பேர் கைது….!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த  2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை அடுத்த ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளி மாணவிக்கும் ஆரம்ப சேரி கிராமத்தைச் சேர்ந்த விஷ்வா என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவியுடன் நெருக்கமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கை கொடுத்த பருவ மழை….. தென் மாவட்டங்களில் விவசாய பணிகள் தீவிரம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள்  முதற்கட்ட பணிகளில் பயிர்கள் வளர்ச்சி அடைந்து இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் கம்பு, சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிர்களை பயிரிட்டு உள்ளனர். அவ்வபோது பெய்து வரும் மழையால் பயிர்கள் செழித்து இருப்பதாகவும் அடுத்தகட்ட விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த விவசாயிகள்,  தற்போது பயிர்களை சீரமைத்து களை எடுத்து பராமரித்து வருகின்றனர். இதை தொடர்ந்து அக்டோபர் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி…!!

நாமக்கல்லில் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் பிரியங்கா தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று இவர் கொசுவம் பட்டியில் உள்ள பொது கிணற்றின் அருகே ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து பிரியங்கா கிணற்றில் குதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்ட அந்த இளைஞன் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில், சம்பவத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் திருட்டு முயற்சி…. பிடிபட்ட திருடன்…. தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்….!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே வீட்டில் திருட முயன்ற திருடனை பொதுமக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் பகுதியை அடுத்த  காக்காபாளையம் பகுதியில் தனது வீட்டில் ஜன்னல் கதவு மர்ம நபர்களால் திறக்கப்பட்டுவதை  மாணிக்கம் என்பவர் பார்த்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த சிலரை உதவிக்கு அழைத்து தப்பி ஓட முயன்ற  தஞ்சாவூரை சேர்ந்த கவியரசன் என்பவனை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லையில் சிறுக்கிழங்கு சாகுபடி மும்முரம்…. குதூகலத்தில் விவசாயிகள்….!!

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுகிழங்கு நடவு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் நாயக்கர்பட்டி வேப்பங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் சிறுகிழங்கு பயரிடப்பட்டு உள்ளது. சீனா பொட்டேட்டோ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சிறுக்கிழங்கு நல்ல மணமும், சுவையும் கொண்டது. பெரிய அளவில் சாகுபடி செலவு தேவைப்படாமல் நல்ல வருமானம் கொடுக்கும் பயிராக இருப்பதால் விவசாயிகள் பலர் இதனை விரும்பி சாகுபடி செய்கின்றனர். மூன்று மாதங்களுக்கு முன்பு விதைகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை கடற்கரைகளில் தொடரும் மரணம்…. போலீஸ் நடவடிக்கைக்கு குவியும் பாராட்டு….!!

சென்னை திருவொற்றியூர் கடற்கரையில் அதிக அளவு உயிரிழப்புகள் நிகழ்ந்த பகுதிகளில் எச்சரிக்கை பலகைகளை காவல்துறையினர் நட்டு வருகின்றனர். சென்னை திருவெற்றியூர் கடற்கரை சாலையில் உள்ள கேவி குப்பம், ஒண்டிகுப்பம், கடற்கரை பகுதிகளில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் பலர் ஆபத்தை உணராமல் ஆழமான பகுதிகளுக்கு சென்று குளிப்பதற்கு முன்பு செல்பி எடுப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து உயிரிழப்பு அதிகம் நடைபெற்ற இடங்களில் அதனை தடுக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

2 பச்சிளம் குழந்தைகளுடன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட தாய்…. சென்னை கடற்கரையில் நிகழ்ந்த சோகம்….!!

சென்னையில் குழ்நதைகளின் கழுத்தை அறுத்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண் பெங்களூரில் கணவருடன் வசித்து வந்தார். புதன்கிழமை இரவு கணவருக்கு தெரியாமல் ஆறு வயது மகள் அனுஷ்யா மூன்று வயது மகன் பத்மேஷ் ஆகியோருடன் சென்னை வந்துள்ளார் பவித்ரா. மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் பின்புறம் வைத்து குழந்தைகளின் கழுத்தையும் கத்தியால் அறுத்து அவரும் தனது கழுத்தையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தைகளின் அழும் சத்தம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாடிய பயிரை கண்டு வாடும் விவசாயிகள்….. நடவடிக்கை எடுக்குமா..?? தமிழக அரசு…!!

நாகை  மாவட்டத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் கருகி கொண்டிருக்கும் பயிர்களை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சீர்காழி சுற்றுவட்டாரங்களில் கடந்த 10 ஆண்டுகளாக மேட்டூர் நீர் வராததாலும் மழை பொய்த்து போனதாலும் முப்போகம் விளைந்த பகுதியில் தற்போது ஒரு போகம் விளைய வழி இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த ஆண்டு மேட்டூர் அணை விரைவில் நிரம்பியது. இதனால் சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி திறக்கப்பட்டது. இதனை நம்பி […]

Categories
காஞ்சிபுரம் சென்னை மாநில செய்திகள்

சீன அதிபர் வருகை : தனியார் பள்ளிகளே முடிவு செய்யலாம்… பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்..!!

சீன அதிபர் வருகையால்  தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிகளே முடிவு செய்துகொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது . பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகிய இரு நாட்டு தலைவர்கள் நாளை (12 ஆம்தேதி)  மற்றும் 13  ஆகிய இரு தேதிகளில் காஞ்சிபுரம்  மாவட்டம் மாமல்லபுரத்தில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.சீன அதிபர் தமிழகம் வருகையையொட்டி பல்வேறு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளன. மேலும் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 10,000-த்திற்கு அதிகமான […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தமிழக ஓட்டுனரை தாக்கிய வடமாநிலத்தவர்கள்….. ஆதரவு அளித்த போலீசாருடன் பொதுமக்கள் மோதல்….. சென்னையில் பரபரப்பு…!!

தமிழக ஓட்டுனரை தாக்கிய வடமாநில இளைஞர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறி பொதுமக்களுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. சென்னை நீலாங்கரையை சேர்ந்த சிவச்சந்திரன் என்பவர் ஓலா கால் டாக்ஸி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு சென்னை டிஜிபி அலுவலகம் எதிரே சிவச்சந்திரனின் கால் டாக்ஸியில் வடமாநிலத்தவர்கள் ஏறியுள்ளனர். குடிபோதையில் இருந்த இருவரும் ஆர்கே சாலையில் வந்து கொண்டிருந்தபோது காரில் ஏசி குளிர்ச்சி போதவில்லை என்று கூறி தகராறு செய்ததோடு தாக்கியதாகவும் கூறப்படுகிறது. காரை நிறுத்திய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோவில் உண்டியலை உடைத்து ரூ50,000 கொள்ளை…. சென்னையில் பரபரப்பு…!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிசிடிவி கேமராவை திசை திருப்பிவிட்டு கோவில் உண்டியலை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் காணிக்கை பணம் திருடப்பட்டுள்ளது.  சென்னை  வண்ணாரப்பேட்டை பகுதியை அடுத்த  காமராஜர் சாலையில் உள்ள அரசு அச்சக குடியிருப்பு பகுதியில் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் பழமை வாய்ந்த ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இன்று காலை கோவிலுக்கு வழக்கம்போல் சென்ற பூசாரி கோவிலின் கதவு திறக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடுப்பில் சொருகிய கத்தி…. வயிற்றை கிழித்ததால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்….!!

சென்னை அயனாவரத்தில் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை அவசரத்தில் எடுத்தபொழுது அடிவயிற்றில் அறுபட்டு இளைஞர் உயிரிழந்தார். சென்னை  வில்லிவாக்கத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை விட்டுப் பிரிந்த மனைவி சபிதா அயனாவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அங்கு சென்ற மனோகரன் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சரிதாவின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பெற்றோர் அலட்சியம்” 6 வயது குழந்தை பலி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சென்னை தாம்பரம் அருகே வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது பெண் குழந்தை இரண்டாவது மாடியிலிருந்து கீழேவிழுந்து உயிரிழந்துள்ளது. சென்னை தாம்பரம்  பகுதியை அடுத்த திருமலை நகர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்திபன் சூரியகல என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராகவி என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ராகவி வீட்டின் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ராகவி எதிர்பாராத […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் IT ஊழியர் ரயில் மோதி பலி….. செல்போனால் ஏற்பட்ட கோர விபத்து…!!

பெருங்களத்தூரில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது ஐடி பெண் ஊழியர் ரெயில் மோதி உயிரிழந்தார். உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீ மித்ரா என்பவர் பெருங்களத்தூரில் தங்கி தனியார் IT  நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு நேற்று வேலைக்கு பெருங்களத்தூர் ரயில் நிலையம் சென்றார்  ஸ்ரீமித்ரா. அப்பொழுது தண்டவாளத்தை கவனக்குறைவாக செல்போன் பேசியபடியே கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

மோடி வருகையால் நடராஜா சர்வீஸ்…. மாமல்லபுர நகரத்தில் வாகனங்களுக்கு தடை…. திடீர் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் வருகின்ற 12,13 ஆகிய தேதிகளில் காஞ்சிபுர மாவட்டம் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இந்நிலையில் தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள்  நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுர நகரத்திற்குள் இருக்கும் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“ஓஎன்ஜிசி அட்டூழியம்” கருப்பு நிறத்தில் குடிநீர்….. நாகை மக்கள் வேதனை…!!

நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓஎன்ஜிசி எண்ணெய் தொழில்நுட்ப பணியால் நிலத்தடி நீர் மாசு அடைந்து விட்டதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை அடுத்த பழைய பாளையம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஆழ்துளை கிணறுகள் அமைத்து எண்ணெய்  எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் மாசடைந்து அடி பம்பில் தண்ணீர் கருப்பு நிறத்துடனும், துர்நாற்றத்துடனும்  வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் பழையபாளையம், புதுப்பட்டினம் உள்ளிட்ட 8 கிராமங்களில் நிலத்தடி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கத்தி குத்து வாங்கிய கூலி தொழிலாளி…. தப்பி ஓடிய மர்ம நபர்கள்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நள்ளிரவில் கூலித் தொழிலாளியை கத்தியால் தாக்கி விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை காவல்துறையினர்  தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்  வேடசந்தூர் பகுதியை அடுத்த குக்கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சின்னசாமி. இவருக்கு சொந்தமாக ஒரு தோட்டமும் உள்ளது. இவர் எப்பொழுதும் வேலை முடித்து விட்டு வீட்டில் உணவு உண்டு பின் காற்றோட்டமாக தூங்க தோட்டத்தில் உறங்குவது வழக்கம். அதே போல்  நேற்று தனது தோட்டத்தில் உறங்கிக் சின்னசாமி கொண்டிருந்தார். அப்பொழுது  நள்ளிரவில் இவரது தோட்டத்தில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

20 வழக்குகள்… தப்பிக்க தனக்கு தானே தீ வைத்த ரவுடி…. சேலத்தில் பரபரப்பு…!!

சேலத்தில் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ரவுடியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சேலம் மாவட்டம் கிச்சி பாளையம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பரசன் என்பவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று கிச்சிப்பாளையம் காவல் நிலையம் அருகே வந்த சிலம்பரசன் தனது காலில் டீசலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.   […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனியில் ரோப் கார் சேவை தொடக்கம்….. மகிழ்ச்சியில் பக்தர்கள்…!!

பழனி மலை கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 70 நாட்களுக்கு பின் பக்தர்களுக்கான ரோப்கார் சேவை இன்று மீண்டும் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் வருகைக்காக ரோப் கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரோப் கார் சேவை வருடத்திற்கு ஒருமுறை நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்படி கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி வருடாந்திர பராமரிப்பு சேவை நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரே நேரத்தில்…. வெடித்து சிதறிய வீட்டின் கதவுகள்… காற்றை அடைத்ததால் ஏற்பட்ட விபரீதம்…!!

சென்னையில் திடிரென்று வீட்டின் அனைத்து கதவுகளும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறிய சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அடுத்த நேருநகர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவர் நேற்றைய தினம் தனது மருமகள் பேரன் ஆகியோருடன் வீட்டின் அனைத்துக் கதவு மற்றும்  ஜன்னல்களை மூடி டிவி பார்த்துக் கொண்டிருந்தார். மேலும் வீட்டின் உள் அறையில் ஏசி ஆன் செய்திருந்ததால் அந்த கதவையும் பூட்டிவிட்டு டிவி பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் வீட்டில் இருந்த […]

Categories
அரசியல் சென்னை மாவட்ட செய்திகள்

பாரம்பரியம் காக்க…. பூம் பூம் மாட்டிடம் ஆசி…. வைரலாகும் அமைச்சர் வீடியோ…!!

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பூம்பூம்மாட்டிடம் ஆசி பெற்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைந்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் வீடு இருக்கும் வீதியில் குடுகுடுப்பைக்காரர் ஒருவர் சென்றுகொண்டிருந்தார். இதை கண்ட அமைச்சர் ஜெயக்குமார் வீட்டை விட்டு வெளியே சென்று பூம்பூம்மாட்டிடம் ஆசி பெற்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக, இது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி டும் டும் மேளம் தட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

டிப்டாப் உடையில் பக்தி பரவசம்…. பின் செல்போன் திருட்டு… வைரலாகும் ஆசாமியின் வீடியோ…!!

சென்னை குரோம்பேட்டையில் டிப்டாப் உடை அணிந்த இளைஞர் ஒருவர் கோவிலுக்குள் இருந்த செல்போனை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் 40 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பக்தி பரவசத்துடன் தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளார். இதையடுத்து கோவிலில் ஒவ்வொரு சன்னதியாக  சுற்றி வந்த அந்த இளைஞர் திடீரென குனிந்து கொண்டே மேல்தளத்தில் இருக்கக்கூடிய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலீஸ்னா என்ன… எல்லா வேலையும் செய்வோம்… போக்குவரத்து அதிகாரிக்கு குவியும் பாராட்டு..!!

ஈரோடு மாவட்டத்தில்  சாலையோரத்தில் தோண்டப்பட்ட குழியை மண்ணை கொண்டு சமன் செய்த  போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். ஈரோட்டில் 60வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாளசாக்கடை, மின்சார கேபிள் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பணிகளுக்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் இருந்தது. இதன் காரணமாக  ஈரோடு மருத்துவமனை முதல் சந்தைக்கு உட்பட்ட பகுதி வரை குழியின் காரணமாக போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டது. இதனை ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் கண்டு கொள்ளாத பட்சத்தில், போக்குவரத்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

பின் சுவரில் ஓட்டை… ரூ20,000 ரொக்க பணம்… ரூ2,00,000 மதிப்பிலான மதுபாட்டில்கள்…. சாராய கடையில் திருடர்கள் கைவரிசை…!!

செங்கல்பட்டை அடுத்த பாலூர் அருகே புதியதாக திறக்கப்பட்ட மதுபான கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.  செங்கல்பட்டு அருகே சாஸ்திரம் பாகம் பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு புதியதாக டாஸ்மாக் கடை ஒன்று திறக்கப்பட்டது. நேற்று இரவு அந்த கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துவிட்டு கல்லாவில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“மணல் திருட்டு” காவல் உதவி ஆய்வாளரை தாக்கி தப்பி ஓடிய மர்ம கும்பல்… வலை வீசி தேடும் போலீஸ்..!!

விழுப்புரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு கடத்தல் கும்பல் தப்பி ஓடிவிட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் மணல் கடத்தல் செய்யப்படுவதாக ரகசிய தகவல் காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டது. இதன் பெயரில் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இருந்து காவல் ஆய்வாளர் சதீஸ் மற்றும் காவலர் ஜோசப் ஆகியோர் சம்பவஇடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்டவரை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் மணல் கொள்ளையில் ஈடுபட்ட காசிநாதன் உள்ளிட்ட 5 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சுய தொழில்” தேனீக்கள் மூலம் வருவாய் ஈட்டும் தொழிலாளி…!!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே இயற்கை முறையில் தேனீக்களை வைத்து தேன் சேகரித்து சம்பாதித்து வருகிறார் ஒரு தொழிலாளி. தேன் உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் மருத்துவ குணம் நிறைந்தது. இதனை மக்கள் மறந்து வரும் நிலையில் சாத்தான்குளத்தில் நகுலன் என்ற தொழிலாளி இயற்கை முறையில் தேன் சேகரிப்பு தொழிலில் ஈடுபட்டு உள்ளார். சொந்த ஊரான குமரி மாவட்டம் குளித்தலையில் இருந்து தேனிகளை கொண்டு வந்து இங்கு உள்ள தோட்டங்களில் வைத்துள்ளார். தேனீக்கள் அந்த தோட்டத்தில் உள்ள முருங்கை […]

Categories

Tech |