ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தை சுற்றி கழிவுநீர் தேங்கி இருப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக நோயாளிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் உடைந்து கடந்த 8 நாட்களாக ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கும் கழிவுநீரால் நோயாளிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்குள் பிரசவம் மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவிற்கு செல்லும் வழியில் பாதாள சாக்கடை இணைப்பு குழாய் […]
Tag: DistrictNews
அரக்கோணத்தில் வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 12 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் கணேஷ் நகர் முதல் தெரு சேர்ந்த 52 வயதான என்பவர் தமது வீட்டின் வாசலில் உள்ள மரத்தில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் அவரை கவனித்தார். அந்த […]
திண்டுக்கல்லில் தனியார் கல்லூரி உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 2,30,000 ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் எம்எம் நகர் 2வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்பொழுது வடமதுரை பகுதியில் அக்னி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் என்ற பள்ளியை நடத்திவருகிறார். இவரது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில் வேலை செய்து வரும் […]
வேலூர் அரிசி மண்டி கடை உரிமையாளரிடம் இருந்து 1 1/2 லட்சம் வழிப்பறி செய்த கும்பலை சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். வேலூரில் அரிசி மொத்த வியாபாரம் செய்து வரும் கடையூரை சேர்ந்த கோதண்டராமன் இரண்டு லட்சம் ரூபாய் பணத்துடன் கடந்த 4ம் தேதி இரவு வேலப்பாடி அருகே சுந்தரராயர் தெருவில் நடந்து சென்று இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல் கையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பி […]
திண்டிவனத்தில் போக்குவரத்து துறை அதிகாரி என கூறி இருசக்கர வாகனங்களில் செல்வோரிடம் பணம் பறிப்பில் ஈடுபட்டு வரும் நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டிவனம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் புதன்கிழமை மாலை திண்டிவனத்தில் இருந்து வீடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தருணத்தில் அவரை வழிமறித்த ஒரு நபர் தலைக்கவசம் அணியவில்லை என கேட்டவாறு அவரிடம் இருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு காவல் நிலையத்தில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி […]
கள்ளக்குறிச்சியில் திருமணமான சில நாட்களில் மனைவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்த பொறியாளரான பால முருகனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணுக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை பாலமுருகன் பிரியதர்ஷினி மற்றும் அவரது தம்பி மூவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி வந்துள்ளனர். மூவருமே தலைக்கவசம் அணியவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பாலாவின் நண்பர் சந்தோஷ் […]
திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஊரே கூடி விளைநிலத்தில் புதையலைத் தேடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கிராமத்தில் பொன்னம்பலம் என்பவர் விளை நிலத்தில் புதையல் இருப்பதாக தனபால் என்பவர் அருள்வாக்கு கூறியதாகவும், கோவில் கலசம், சிலைகள் இருப்பதாக அவர் கூறியதைக் கேட்டு பழி கொடுக்க சேவலை தூக்கிக்கொண்டு ஜேசிபி உடன் ஊர் மக்கள் அங்கு படையெடுத்தனர். புற்று கோவில் முன் பூசணிக்காயை வெட்டி சேவலை பலி கொடுத்து சிறப்பு பூஜைகளுடன் […]
திருப்பூரில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் பல்லடம் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகில் உள்ள பஸ் நிலையப் பகுதியில் இன்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு தலைக்கவசம் இல்லாமல் வந்தவர்களையும், வாகன ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்களையும் பிடித்து ஓரமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது வாகன ஓட்டி ஒருவர் ராமசாமி மீது இடிக்க வந்ததாகவும், அதை காவல்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறிய […]
சென்னையில் 4.5 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டம் தொடர்பாக 45 டெண்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட நான்காவது மற்றும் ஆறாவது மண்டலம் தண்டையார்பேட்டை அயனாவரம் பகுதிகளில் நான்கரை கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் மற்றும் அதன் பராமரிப்பு உள்ளிட்ட 45 வீதமான பணிகளுக்கு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டரை பெற மாநகராட்சி புதிய நடைமுறையை கொண்டு வந்ததால் டெண்டருக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் […]
குடியாத்தம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர் அதன் உரிமையாளர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் பாலாறு உள்ளிட்ட நதிகளில் இருந்து இரவு பகலாக தொடர்ந்து மணல் கொள்ளை நடப்பதாக புகார்கள் வந்ததை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் தனிப்படை காவல்துறையினர் குடியாத்தம் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அக்ரஹாரம் பகுதிகளில் கவுண்டனை மகான் ஆற்று […]
மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை ஒரு கிலோ ரூபாய் 20 என பொதுமக்களிடம் விற்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி உட்படுத்தப்பட்ட 15 மண்டலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 4,930 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதிலிருந்தே நாள் ஒன்றுக்கு மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் தெரிந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் 160 டன் இயற்கை உரத்தை பொதுமக்களுக்கும் மாநகராட்சி பூங்காக்களுக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீதமுள்ள உரங்களையும் இனி […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள காட்டுப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் உடன் மர்மநபர்கள் சுற்றித் திரிவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ராஜபாளையம் வனத்துறையினர் அதிகாலை 3 மணி அளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொய்யாப்பழம் மற்றும் பலாபழங்களின் நடுவில் நாட்டு வெடிகுண்டுகளை மறைத்தும் வனவிலங்குகளை வேட்டையாட வந்திருந்த சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த கணேசன் மற்றும் சிவராம […]
விழுப்புரம் மாவட்டம் பொம்மையார் பாளையம் கிராமத்தில் கடல் அரிப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 25க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் பொம்மையார்பாளையம் மீனவ கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பாதி அளவிற்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல குடும்பங்கள் கடலோரப் பகுதிகளில் வசித்து வரும் நிலையில் கடந்த 15 ஆண்டுகளில் மீனவ கிராமத்தில் கடற்கரை பகுதிகளை முழுமையாக அரித்து உள்ளதாகவும் 50க்கும் மேற்பட்ட […]
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் சகி என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் காளான் உற்பத்தி, தேனி வளர்ப்பு மற்றும் தையல் பயிற்சி உள்ளிட்ட சுயதொழில் பயிற்சிகள் பெண்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான மையங்கள் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகின்றன. 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் சேர்ந்து தொழில் பயிற்சி பெற்று பயனடைந்து வருகிறார்கள். மேலும் ஸ்டெர்லைட் நிறுவனம்ரீதியாக செய்யப்படும் […]
காரைக்காலில் நிலுவையில் உள்ள ஊதிய தொகையை வழங்க கோரி போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் நிலுவையில் உள்ள நான்கு மாத ஊதிய தொகை வழங்காததை கண்டித்து இன்று அரசு சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காரைக்கால் பணிமனையில் இருந்து சுமார் 10 பேருந்துகள் மட்டுமல்லாது புதுச்சேரி […]
சேலத்தில் கள்ள காதலனை விரட்டி விட்டு 6 பேர் கொண்ட கும்பல் பெண்ணை காட்டுக்குள் தூக்கி சென்று வன்புணர்வு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்த 32 வயதான திருமணமான பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் அந்த பெண்ணை இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெய்யமலை அடிவாரத்திலுள்ள வனப்பகுதிக்கு அழைத்துச் […]
மானாமதுரை வங்கி ஒன்றில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது வங்கி காவலாளி துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சில வாரங்களுக்கு முன்பாக அமமுக நிர்வாகி சரவணன் சாலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையாக மானாமதுரை வங்கிக்கு அமமுக நிர்வாகியின் உறவினர் தங்கமணி என்பவர் வங்கிக்கு பணம் செலுத்த சென்றிருக்கிறார். அவரை பின்தொடர்ந்த தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது கூட்டாளிகள் வங்கிக்குள் சென்று திடீரென […]
உதகை அருகே மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவியைப் பிடித்து இந்து முன்னணி அமைப்பினர் விபூதி பூச வைத்தனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகே பாம்பே கேஸ் பகுதியில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் பிரசங்கங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் இரண்டு பேரும் அங்கிருக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக கூறி சுற்றிவளைத்தனர். பின்னர் […]
பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் தலை மற்றும் உடல்கள் இரு கூறாகப் பிளக்கப்பட்டு மிதந்த சடலம் அப்பகுதியில் உள்ளோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் சின்ராஜ் கூழ குமார் ஆகிய இருவரும் சில மாதங்களுக்கு முன்பு நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது ஒன்றாகவே அனைத்து செயல்களிலும் ஈடுபடுவது என்று நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் கூழ குமார் தனது அண்ணன் வீட்டிற்கு ஒருநாள் சின்ராஜை விருந்துக்கு அழைத்துள்ளார். அங்கே […]
நாமக்கல்லில் சத்துணவு அமைப்பாளரிடம் ஒழுங்கீனமாக இருந்த ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பெண் சத்துணவு அமைப்பாளர் தேவியுடன் உடன் பள்ளியின் கழிப்பறையில் வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டதாக ஆசிரியர் சரவணன் மீது புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி பள்ளிக்குள் நுழைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆசிரியர் சரவணனை சரமாரியாக தாக்கினர். இதனையடுத்து பொதுமக்கள் ஆசிரியர் சரவணன் மீது புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் […]
திண்டுக்கல்லில் வாகன சோதனை என்கிற பெயரில் பொய் வழக்கு பதிவு செய்தும், துப்பாக்கி காட்டி மிரட்டியும் வந்த SIயை கண்டித்து ஊர் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திண்டுக்கல் நத்தம் அருகே செந்துறையில் காவல்துறை அதிகாரிகள் கடந்தவாரம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மூன்று இளைஞர்களை வழி மறித்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சோதனையின்போது SI மாதவராஜ்க்கும் இளைஞர்கள் மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்தில் கடை நடத்தி வந்த குமரன், அவ்வழியாக […]
திருச்சி மணப்பாறையில் கனமழையால் ரயில் தண்டவாளத்தில் ஜல்லி அகன்று திடீர் பள்ளம் ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை பெய்தது. இந்நிலையில் பாலக்காடு ரயில்வே பாலத்தில் ரயில் இருப்புபாதை சுற்றி போடப்பட்டிருந்த ஜல்லி கற்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு தண்டவாளத்தின் கட்டைகள் அந்தரத்தில் தொங்குவது போல காட்சி அளித்தன. இதனை பராமரிப்பு பணியின் போது கண்டுபிடித்த ஒரு ரயில்வே ஊழியர் ஒருவர் உடனடியாக ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். […]
சென்னையில் அரசியல் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் பெண் மீது சாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம், கல்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுபஸ்ரீ என்ற கல்லூரி மாணவி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையின் தடுப்புகள் அருகில் இருக்கக்கூடிய மண்டபத்தில் அதிமுக பிரமுகரின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பேனர்கள் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது இருசக்கர […]
தங்க, வைர நகைகள் மற்றும் ரொக்க பணத்துடன் ஆட்டோவில் தவறவிடப்பட்ட பயணியின் சூட்கேசை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. கடந்த எட்டாம் தேதி ஆட்டோ ஓட்டுநரான தர்மராஜ் என்பவர் தனது ஆட்டோவில் தவறவிடப்பட்ட ஒரு சூட்கேஸை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள தங்க வைர நகைகள் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் அழகு […]
சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்ட முன்னாள் உதவி ஆய்வாளரின் மகன் காவல்துறையை ஆபாசமாக பேசிய நிலையிலும் அவனை மட்டும் மன்னித்துவிட்டது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் 3 பேரை அமர வைத்து ஓட்டி வந்த நபரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்ய விவரங்களை கேட்டறிந்தனர். அப்பொழுது தனது பெயர் சுதாகர் என்றும் முன்னாள் எஸ்ஐ அன்புவின் மகன் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் தகாத வார்த்தையில் […]
சென்னை அடுத்த மாதவரத்தில் அரசுக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்து செய்த தந்தை மகன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மாதவரம் பொன்னியம் மேடு பகுதியில் அமைந்துள்ள தமிழக அரசின் அலுமினிய நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 4.45 ஏக்கர் நிலம் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் இருந்துள்ளது. இதனை அபகரிக்க திட்டமிட்டு பிச்சைமுத்து மற்றும் அவரது மகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் பார்த்தசாரதி ஆகியோர் போலியான […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்துக்காக நின்றவர் மீது அரசுப் பேருந்து மோதியதால் ஓட்டுனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள புனல் நகர் சந்திப்பில் அரசு பேருந்து வந்தபோது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீது அரசுப் பேருந்து மோதியதில் அந்த நபர் கீழே விழுந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்களில் சிலர் பேருந்தின் ஓட்டுநரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்த வழியாக வந்த பத்துக்கும் […]
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே பயணிகளிடம் செல்போனை பறித்து தப்பி ஓடிய கல்லூரி மாணவர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து திண்டுக்கல் வடக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் மத்தியில் அமைந்திருக்கும் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். அதேபோல இன்று பயணி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி சாலையோரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அவருக்கு எதிர் புறம் நடந்து வந்த […]
நாமக்கல் பகுதியில் சத்துணவு ஊழியரிடம் தவறாக நடந்ததாக கூறி ஆசிரியரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். நாமக்கல்லில் சத்துணர்வு பெண்ணிடம் ஆசிரியர் சரவணன் என்பவர் தனிமையில் இருந்தததை மாணவர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து ஊர் பொதுமக்களிடம் இந்த தகவலை மாணவர்கள் தெரிவிக்க ஆசிரியரை சரமாரியாக தாக்கினர். பின் தாக்கப்பட்ட ஆசிரியர் சரவணனை விசாரணைக்காக புதுச்சத்திரம் காவல்துறையினர் அழைத்துச்சென்றனர். விசாரணைக்கு பிறகு அவரை காவல்துறையினர் விடுவித்துவிட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பகுதி மக்களையும் காவல் நிலையத்திற்கு புதுச்சத்திரம் காவல்துறையினர் […]
சென்னையில் கூவத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சிந்தி பேட்டை அருகில் உள்ள அண்ணா சாலை மேம்பாலத்தில் இருந்து பெண் ஒருவர் கூவத்தில் திடீரென்று குதித்தார். அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்மற்றும் தீயணைப்பு துறைக்கு .தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாலத்திலிருந்து ஏணி மூலம் குளத்தில் இறங்கி தேடினார்கள். சேறும் சகதியும் இருந்ததால் ஒரு […]
அரியலூர் to தஞ்சை நெடுஞ்சாலையில் கீழப்பலூர் அருகே வேன் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெரம்பலூரை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பெரம்பலூரில் வசித்து வரும் பயாஸ் என்பவரது தந்தை குவைத் நாட்டில் வேலை புரிந்து வருகிறார். இவரது மகன்கள் பயாஸ் மற்றும் ஜமீல் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் அவரது தந்தையின் நண்பர் தஞ்சாவூர் விடுமுறைக்கு வந்திருந்த நிலையில் அவரை சந்தித்து சில பொருட்களைக் கொடுத்து அனுப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் அரியலூர் டு […]
கோவையில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற கணவனை இரண்டு மனைவிகளும் சரமாரியாக அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சூளுரை சேர்ந்த அரவிந்தன் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு பிரியதர்ஷினி என்பவரையும் கடந்த ஏப்ரல் மாதம் அனுப்பிரியா என்பவரையும் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு இரண்டு மனைவிகளும் தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி அவர்களை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. தற்போது மூன்றாவது திருமணத்திற்கு திட்டமிட இருப்பதை அறிந்த இரண்டு மனைவிகளும் […]
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்ற மர்ம நபர்களை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆதிநாராயணன் என்பவருக்கு சொந்தமான விசைத்தறி கூடம் ஒன்று உள்ளது. நேற்று விடுதலை நாள் என்பதால் விசைத்தறி கூடம் மதியம் முதல் இயங்கவில்லை. இந்நிலையில் நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் விசைத்தறி கூடத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோடியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக விசைத்தறி கூடத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு […]
ஓசூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓசூரை அடுத்த கருப்புக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் சதீஷ் ஆகியோர் ஓசூர் to கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் பல்சர் பைக்கில் சென்றுள்ளனர். இதேபோல ராயக்கோட்டை நோக்கி முனிவர்மன் என்பவருடன் சின்ன ரத்தினம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வளைவில் வாகனத்தை இரு திறப்பினரும் வேகமாக திருப்பியதில் எதிர்பாராத விதமாக இரண்டு வாகனங்களும் நேருக்கு […]
மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக நிரம்பியுள்ள நிலையில் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட கூடுதலாக பெய்ததால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் நடுவே […]
வேலூர் மாவட்டத்தில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் . வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள இலக்கியநாயக்கன்பட்டியின் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தகுமார். நேற்று இவரது வீட்டில் ஆளில்லாத நேரத்தில் கொள்ளையர்கள் கதவை உடைத்து திருட முயற்சித்துள்ளனர் . அப்போது , கதவை உடைக்க முடியாத காரணத்தால் கொள்ளையர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். அதன்பின் , இந்த காட்சிகள் அருகே அருகே இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியது. மேலும் , கொள்ளையர்கள் இதற்கு […]
பழனியில் பிரசித்தி பெற்ற பஞ்சாமிர்த கடைகளில் வருமான வரித்துறை திடீர் என சோதனை நடத்தி வருகின்றனர் . திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சித்தநாத மற்றும் கந்தவிலாஸ் பஞ்சமிர்த கடைகளில் பஞ்சாமிர்தம் மற்றும் பிரசாதம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . மேலும், தேவஸ்தான பஞ்சாமிர்த விற்பனையைக் காட்டிலும் இந்த கடைகளில் அதிகமாக விற்பனையாகிறது. இந்த கடையில் விற்கப்படும் பொருட்களுக்கு ரசீதுகள் எதுவும் வழங்கப்படவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி , அவர்களுக்கு சொந்தமான கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்கள் […]
கன்னியாகுமரியில் கொலை வழக்கில் சாட்சி சொன்ன நபரை கடத்தி பணம் பறிக்க முயற்சித்த கும்பலை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். கன்னியாகுமரியை சேர்ந்த சாந்தகுமாரின் மாமன் மகளான ஜெர்சியை வெட்டிக்கொன்ற சாஜன் என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 2010ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சாட்சி சொன்ன சாந்தகுமார் என்பவரை கொல்வதற்கு இரண்டு லட்சம் ரூபாய் தருவதாக கூறி சிறையில் இருந்தபடியே ரவுடிகளை ஏவி விட்டுள்ளார். ஆனால் சாந்தகுமாரை கொலை செய்யாமல் […]
மதுரை சுங்கச்சாவடியில் துப்பாக்கி சூடு நடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். பின் ஐந்து பேர் காரில் ஏறி மதுரையை நோக்கி தப்பிச்செல்ல ஒருவர் மட்டும் மாட்டி கொண்டார். பின் அவரை சுங்கச்சாவடி […]
மதுரை திருமங்கலம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தாமல் தாக்குதல் நடத்தி தப்பிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று மதுரை திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் மகேந்திரா வாகனத்தில் வந்த ஆறு மர்ம நபர்கள் கட்டணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவர்களைத் துரத்த காரை நிறுத்தி ஆறு பேரும் சுங்கச்சாவடி ஊழியர் களுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். […]
அனுமந்தபுரத்தில் கேட்பாரற்று கிடைக்கும் வெடிமருந்து பொருள்களை அகற்றும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த அனுமந்தபுரம் மலை பகுதியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஆண்டுதோறும் மூன்று மாதங்கள் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுகளை வெடிக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருவர். அதன்படி இந்த ஆண்டு அதற்கான பயிற்சி முடிந்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் அப்பகுதி இளைஞர்கள் வெடிக்காத இரும்பு பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து எடைகடைகளில் பணத்திற்காக எடைக்கு போட்டு வந்துள்ளனர். அந்தவகையில் சில […]
கோவையில் ரயில் பெண் நிலைய மேலாளரை ஆஷா பிளேடு கொண்டு தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கோவை ரயில் நிலையத்தில் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த அஞ்சனா நிவாஸ் என்ற பெண் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். புதன்கிழமை இரவு அஞ்சனா நிவாஸ் பணியில் இருந்த போது நள்ளிரவு 1 மணி அளவில் அவரது அலுவலகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். கையில் வைத்திருந்த ஆஷா ப்ளேடை கொண்டு அவரை தாக்கியுள்ளார். […]
குற்றாலத்தில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் மீது பாரங் கற்கள் விழுந்து 3 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவிகளில் கொட்டும் மழையிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி பழைய அருவி உள்ளிட்டவற்றில்நீர்வரத்து மிதமாக காணப்ட்டது. இதையடுத்து ஐந்தருவியில் மட்டும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து வந்த நிலையில், ஓடையில் உள்ள பாரங்கல் நீரால் அடித்து வரப்பட்டு குளித்துக் கொண்டிருந்தவர்கள் […]
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே வீட்டின் மேற்கூரை விழுந்ததில் இளைஞர் ஒருவர் பலத்த காயமடைந்தார். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வடக்கு மயிலோடை அருகேயுள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் பால்ராஜ். கூலித் தொழில் செய்துவரும் இவரும், இவரது மனைவியும் சம்பவதினத்தன்று வேலைக்குச் சென்றுள்ளனர். வீட்டில் மாற்றுத்திறனாளியான பால்ராஜின் மகன் மகாராஜன்(20) தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டின் மேற்கூரை விழுந்ததில் மகாராஜனின் தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டது. மேலும், வீட்டில் இருந்த மின்சாதன பொருள்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. காயமடைந்த மகாராஜன் கயத்தாறு […]
ராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும். கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடமையாக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். மத்திய அரசால் மீனுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ஆம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து […]
மாயனூர் கதவணையிலிருந்து திருச்சி, தஞ்சை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையில் இருந்து புதிய கட்டளை வாய்க்காலில் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டதை அடுத்து சட்டமன்ற உறுப்பினர் கீதா மதகுகளிலிருந்து தண்ணீர் திறந்து விட்டார். இந்தநிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆகியோர் பங்கேற்று காவிரி நீருக்கு மலர்கள் நவதானியம் தூவி வரவேற்றனர். முதல் கட்டமாக வினாடிக்கு 100 கனஅடி வீதமும் போக போக வினாடிக்கு 400 […]
தேனியில் மனைவியுடன் தவறான உறவு வைத்திருந்ததாக எண்ணி கூலித்தொழிலாளியை கொலை செய்த கணவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பால்பாண்டி என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவரை கடந்த 2013ம் ஆண்டு தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். பின் காவல்நிலையத்தில் கொலை குற்றத்திற்காக சரணடைந்த அவரை காவல்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் தனது மனைவியுடன் தவறான தொடர்பு உள்ளதாக எண்ணி இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.பின் […]
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காதல் திருமணம் செய்த நான்கு மாதங்களே ஆன நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்த பிரபாகரனும், வீரபாண்டிய பட்டினத்தை சேர்ந்த ஆஷாவும் வீட்டில் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் வேலைக்கு […]
நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள அடவிநயினார் அணையில் இருந்து இன்று காலை விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையால் நீர் பிடிப்பு பகுதிகளில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அடவிநயினார் அணை நீர்மட்டம் 120 அடியை தாண்டியது. இதை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் உத்தரவு படி இன்று முதல் நவம்பர் மாதம் 25ஆம் தேதி வரை அடவிநயினார் […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். சாத்தான்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. தமிழகத்தின் வடபகுதிகளில் பெய்த மழையை விட தென்தமிழகத்தில் நடப்பாண்டில் போதிய மழை பெய்யாமல் கிணறுகள் வறண்டு பல நூறு ஏக்கரில் பயிரிடப்பட்ட பருத்தி செடிகள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தண்ணீரின்றி கருகும் பருத்தி சாகுபடி செய்த நிலங்களில் கால்நடைகளை மேய விடும் […]