தமிழகத்தில் முதல் முறையாக நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . கொரோனாவுக்கு முன்புவரை ஏழை எளிய மக்களுக்கும், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்கும் பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காண சிறந்த வழியாக திங்கள் கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும். இந்த கூட்டத்தில் மக்கள் கலந்துகொண்டு, தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அதற்கான தீர்வை பெறுவார்கள். […]
Tag: DistrictNews
ஊரடங்கினால் வருவாய் இழப்பு ஏற்பட்டு வேலூரில் மூடப்பட்ட தோல் பதனிடும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த 75 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த ஊரடங்கினால் பல தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் பலர் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். இதனால் பலருக்கும் நஷ்டம் […]
திருப்பூர் அருகே தமிழக கேரள மாநிலங்களின் எல்லைப்பகுதியில் இளஞ்ஜோடிகள் தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 23ஆம் தேதி அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து வரும் போதிலும், பல்வேறு தளர்வுகள் 5 ஆம் கட்ட ஊரடங்கில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசு தொடர்ந்து தடை விதித்துள்ளது. மீறி நடக்கும் பட்சத்தில் […]
திருமணம் செய்து கொள்வதற்காக தனது வீட்டாருடன் சென்னையிலிருந்து கோவில்பட்டி வந்த மணமகன் உட்பட 6 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும், கோவில்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஆனால் ஊரடங்கு அமுலில் இருப்பதால் திருமணத்தை ஊரடங்கிற்கு பின் செய்து கொள்ளலாம் என்று இருவரது வீட்டாரும் முடிவு […]
புதுக்கோட்டையில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட 3 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையின் காய்கறி சந்தையில் காய்கறி வாங்க வந்த மூன்று நபர்கள் 2000 கள்ள நோட்டை கொடுத்து ஏமாற்றி சென்றதால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி கணேஷ் நகர் காவல் நிலையத்தில் தொலைபேசி மூலம் புகார் அளித்தார். புகாரை ஏற்ற அதிகாரிகள் உடனடியாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த மூன்று பேரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், ஜெயராஜ் , […]
கரூரில் ஒன்றரை வயது குழந்தையின் அரிய வகை நோயை குணப்படுத்திய மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியை அடுத்த காந்திநகர் ஏரியாவில் வசித்துவரும் பழனி கமலா தம்பதியின் ஒன்றரை வயது குழந்தை ஹரிஷுக்கு கடந்த ஒரு வாரமாக விடாது காய்ச்சல் அடித்துள்ளது. அதேபோல் உதடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனையில் பெற்றோர்கள் அனுமதிக்க, பரிசோதனையில் மண்ணீரலில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து நோய் குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சியில், அந்த […]
குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதி அருகே தனது மகள் வயது இருக்கும் மாணவியிடம் கள்ளக்காதலில் ஈடுபட்ட டிரைவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்த மினிபஸ் டிரைவர் ஒருவர் அப்பகுதி வழியாக அவரது பேருந்தில் கல்லூரிக்குச் செல்லும் பல மாணவிகளிடம் புதுப்புது பெயர்களால் அறிமுகம் செய்து கொண்டு தனது காதல் வலையில் அவர்களை விழ வைத்து அவர்களது வாழ்க்கையை நாசம் செய்து உள்ளார். ஆனால் அவர்கள் யாரும் காவல் நிலையத்தில் புகார் […]
நாகர்கோவில் அருகே காவல்துறை அதிகாரியே விதிமுறை மீறி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 23 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கானது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 5வது கட்ட நிலையில் தொடரும் இந்த ஊரடங்கில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மக்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட தொடங்கியுள்ளனர். பல கடைகள் திறக்கப்பட்டு வியாபாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை […]
திண்டுக்கல்லில் நடமாடும் எக்ஸ்ரே வாகனங்கள் மூலம் காச நோயாளிகளை கண்டறியும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனையில் காச நோய்க்கான சிகிச்சை பிரிவு மையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கே எக்ஸ்ரே மற்றும் சளி பரிசோதனை மூலம் காச நோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு இந்தியா முழுவதும் கோர தாண்டவமாடி வருவதால், அனைத்து மருத்துவ மனைகளும், கொரோனாவை கையாளுவதில் பிசியாக உள்ளன. அந்த […]
செங்கல்பட்டு அருகே பெண் ஒருவரை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் யசோதா ராணி. இவருக்கு பெருங்குளத்தூர் பாரதி நகரில் தையல் கடை ஒன்று உள்ளது. சொந்தமாக கடை நடத்தி வரும் இவருக்கும், தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்ற நபருக்கும் ஏற்கனவே தொடர்பு ஏற்பட்டு அது நட்பாக மாறி தற்போது கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். […]
கோவையில் வாகன ஓட்டுனர்கள் பிச்சை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனர். அதில், அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் பின்வருமாறு, அனைத்து வாகன கடன்களுக்கான ஆறு மாத தவணையை முழுமையாக அரசே ஏற்று கொள்ள வேண்டும் எனவும், 2021 […]
கோவையில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொள்ள தடைவிதிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் ரேஸ்கோர்ஸ் என்னும் பகுதியில் பொதுமக்கள் அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து நடை பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இதையடுத்து கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நாள் முதல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சியை மக்கள் யாரும் மேற்கொள்ளவில்லை. இதையடுத்து ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட […]
கடலூர் அருகே நிவாரணத்தொகை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் இன்று வரை 5வது கட்டமாக தொடர்ந்து அமுலிலுள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு ரூபாய் 7,500 ரொக்கமும், மாநில அரசு 5,000 ரூபாய் நிவாரணத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்றும், சிறு குறு தொழில் செய்பவர்களுக்கு இத்துடன் ரூபாய் 10 […]
தர்மபுரியில் பெற்றோர்கள் திருமணத்தை தள்ளி போட்டதால் காதல் ஜோடி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தராஜ். அரூர் பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் பெயிண்டராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வசிக்கும் அதே பகுதியில் சோபியா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள். இந்நிலையில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மனதை பரிமாறி காதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதையடுத்து 2 பேரும் திருமணம் […]
திண்டுக்கல் பிரபல சேமியா நிறுவனத்தின் பங்குதாரர்களை மிரட்டி 2 தொழிலதிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் ரவிச்சந்திரன், சுகுமார் ஆகியோர் பிரபல அணில் சேமியா நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஆவர். இவர்கள் இரண்டு பேரையும் சென்ற மார்ச் ஏப்ரல் ஆகிய மாதங்களில், இரண்டு பேர் புதுப்புது மொபைல் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு அணில் சேமியா தரமற்ற முறையில் தயாரிக்கப்படுகிறது எனவும், இதனை வெளியே கூறாமல் மூடி மறைப்பதற்கு தனக்கு ரூபாய் 50 லட்சம் தரவேண்டும் எனவும் […]
ஈரோட்டில் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் கிராமத்தில் சுபாஷ் என்ற நபர் கட்டிடம் ஒன்றில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த பணி செய்யும் போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதான பள்ளி மாணவிக்கும், இவருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில், காதலாக மாறியது. இதைதொடர்ந்து அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி சிலர், மறைவான பகுதிகளுக்கு அந்த வாலிபர் பெண்ணை அழைத்து […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 91 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களில் தோராயமாக 83 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது. அதில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள். அந்த வகையில் இன்று ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது . இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்கள். அதேபோல காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த அனைவரையும் கண்டறிந்து, […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தன்னார்வலர் ஒருவர் காந்தி வேடமிட்டு தனியாக போராட்டம் நடத்தினார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியேறும் சூழ்நிலை யில் இருந்து வந்தனர். இந்நிலையில் 43 நாட்களுக்குப் பிறகு இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. திறந்த முதல் நாளே ஆங்காங்கே கூட்டம் கூடுவது, […]
சென்னையில் காய்கறி விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டின் மூலம் தாறுமாறாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அங்கே நடந்த சிறுசிறு அலட்சியங்கள் மூலமாக இந்த நோய்த் தொற்று பரவல் நிகழ்ந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வந்தனர். இதையடுத்து கோயம்பேடு மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவது குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றது. ஆகையால் வருகின்ற 10ம் தேதி வரை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை அளித்து வியாபாரிகள் […]
மதுரையில் இன்று பச்சை அட்டைதாரர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என அம்மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், மதுபான கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மேலும் கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக அரசு சார்பில் அவ்வப்போது விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருவதுடன், நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. அந்த வகையில், […]
சேலம் மாவட்டம் ஓமலூரில் டோக்கன் ஒன்றிற்கு ஒரு ஃபுல் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் செயல்பட்டு வந்தாலும், அதிக கூட்டங்கள் நிலவும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு இருக்கையில், அதிக கூட்டம் கூடும் மதுபான கடைகளுக்கு வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் அதிக கூட்டம் கூடும் மதுபான […]
திருப்பூரில் மதுபாட்டில்கள் வாங்க வரும்போது குடையுடன் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், ஒரு சில தளர்வுகளுடன் தனிக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அந்த வகையில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகின்ற மே 7-ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர தமிழகத்தின் மற்ற அனைத்து இடங்களிலும் திறக்கப்பட்டு மது […]
தர்மபுரி அருகே சமூக இடைவெளி இல்லாமல் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதற்கு 7 பேர் தனிமைப்படுத்தப்பட ஒருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அதே பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்து நேற்றைய தினம் வளைகாப்பு என்பது நடத்தப்பட்டது. இதில் உள்ளூர் வெளியாட்கள் என சுமார் 60 பேர் கலந்து கொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நடந்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ […]
கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 161 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் படிப்படியாக அதிகரித்து வந்தது. ஆனால் தமிழக அரசின் அசத்தலான முயற்சிகளால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் குணம் அடைந்ததுடன் அதனுடைய பாதிப்பு வீரியம் ஆகியவையும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு தமிழக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. […]
நாமக்கல்லில் தடையை மீறி இறைச்சிக்கடை நடத்திய உரிமையாளர்களுக்கு ரூபாய் 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாமக்கல் மாவட்டத்தில் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்டம் முழுமைக்கும் தடை விதிக்கபடாமல் நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மட்டும் இந்த வாரத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் தடையை மீறி இறைச்சிக்கடைகள் செயல்படுகிறதா ? என நகராட்சி ஆணையர் அதிரடி சோதனையில் திடீரென ஈடுபட்டார். இந்த சோதனையில் நாமக்கல்லின் பல்வேறு பகுதிகளில் சுமார் எட்டு […]
காஞ்சிபுரத்தில் காவல் நிலையத்தில் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான பாஸ் வழங்கப்படுவதாக கூறியதையடுத்து 500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் படையெடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை மே 17 வரை நீட்டித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் வெளி மாநிலங்களிலிருந்து வந்து பணிபுரியக்கூடிய வடமாநில தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பலர் உணவின்றி தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், […]
வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வதற்கான வழிமுறைகள் குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்ட மக்கள் வெளிமாநிலங்களுக்கு அல்லது வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்காக ஆன்லைனில் www.tnepass.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.ஈரோடு மாவட்டத்திற்கோ அல்லது பக்கத்து மாவட்டதிற்கோ செல்ல மட்டுமே மாவட்ட ஆட்சியர் உத்தரவிட முடியும். வெளிமாநிலங்களுக்கு செல்ல விரும்புவோருக்கு மாநில அனுமதிச்சீட்டு குழுவினரால் அனுமதி வழங்கப்படும். இணையதள வசதி இல்லாதவர்கள் அருகில் உள்ள தாலுகா நிலையத்தில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி அனுமதி […]
கடலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை அடுத்த விழாமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று அதே பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, இவரது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்து 2000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்று தப்பியோட, பிரபாகரன் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்க சம்பவ இடத்தில் அதிகாரிகள் கண்காணிப்பில் […]
கோவையில் குடியிருப்பு வளாகத்தில் காய்கறி விற்பனை நடைபெற்று வருவதால், சந்தைகளில் கூட்டம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் சந்தை பகுதிகளைத் தவிர்த்து மாவட்டத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் உள்ள பள்ளி மைதானங்களில் தற்காலிக காய்கறி கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வந்தது. இங்கே பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து காய்கறிகளை வாங்கிச் சென்று வந்தனர். ஆனால் சில நாட்களாக இங்கு கூட்டம் குறைந்து காணப்படுகிறது அதற்கான காரணமாக வியாபாரிகள் கூறுவதாவது, சந்தைகளில் இருந்து […]
சென்னையில் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வடமாநில தொழிலாளர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நடைபாதையில் தஞ்சமடைந்துள்ளனர். சென்னையில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் அனைத்தும் கொரோனா பாதிப்பால் முடக்கப்பட்டது. இந்த கட்டுமான பணிகளில் 75 சதவீதத்திற்கும் மேல் வடமாநில தொழிலாளிகளே ஈடுபடுத்தப்படுவர். ஊரடங்கிற்கு பின் பல கட்டுமான நிறுவனங்கள் வேலை இல்லை என்பதால், தொழிலாளர்களை அப்போதே வெளியேற்றி விட்டது. ஒரு சில கட்டுமான நிறுவனங்கள் மட்டும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்கள் பணிபுரிந்த இடத்திலேயே தங்க அனுமதி அளித்ததோடு, […]
தர்மபுரியில் நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாகக் கூறி 202 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக இன்று முடிவடைய இருந்த ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் சில பகுதிகளில் விரக்தி அடைந்த மக்கள் தொடர்ந்து ஊரடங்கு நீட்டித்துக் கொண்டே தான் இருக்கும் இப்படியே சென்றால் பிழைப்பு என்னாவது என வெளியில் சுற்றித் திரிவதும், தடைகளை மீறி கடைகளை திறப்பதுமாக, தொடர்ந்து […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதி அருகே குக்கரில் சாராயம் காய்ச்சிய இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளதால் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக மதுக்கடைகளை மூடியுள்ளனர். இதனால் மது பிரியர்கள் எங்கேயும் சட்டவிரோதமாக சாராயம் கிடைக்கிறதா என்று தெரிந்த வண்ணம் இருக்கின்றனர். இவர்களது இந்த ஆசையை பயன்படுத்தி பலர் இக்காலகட்டத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டவும் நினைத்து விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டுபிடித்து தக்க […]
கோவையில் காட்டுயானை தாக்கி கூலி தொழிலாளி மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . கோயம்புத்தூர் மாவட்டம் சின்னதடாகம் பகுதியை அடுத்த வீரபாண்டி ஏரியாவை சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். இவர் தனது வீட்டில் GAS பற்றாக்குறை காரணமாக விறகு அடுப்பில் சமைக்க காய்ந்த விறகுகளை சேகரிக்க அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று உள்ளார். இவர் சென்றது அதிகாலை நேரம் என்பதால், அங்கே காட்டு யானை ஒன்று நின்று கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. […]
கோவையில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் வளைந்து மின் விநியோகம் தடைபட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் கொளுத்தினாலும் மாலை நேரங்களில் மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில், நேற்று மாலை மழையை விட சூறாவளி காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மழை சாரலின் வீரியம் குறைவாகவே இருந்தது. அதிகப்படியாக வீசிய சூறாவளிக் காற்றினால் ஆங்காங்கே மரகிளைகள் […]
காஞ்சிபுரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் மற்றும் ஒரு இளம் பெண் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை அடுத்த ராஜீவ்காந்தி சாலை அருகே வசித்து வரும் சித்ரா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான திலகா என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின் அங்கிருந்து நான்கு பள்ளி குழந்தைகளுடன் சித்ராவும், திலகாவும் மணிமங்கலத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கே […]
தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கை கடைபிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், முதன்முதலாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு என அறிவித்தார். இவர் அறிவித்ததை தொடர்ந்து திருவாரூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டத்தில் நாளை ஒரு நாள் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்தனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தற்போது முழு ஊரடங்கு […]
நாளை கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். மே-3 நாளையன்று ஊரடங்கு முடிவடைய இருந்த சூழ்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதன் பின் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட, பல மாவட்டங்கள் முழு ஊரடங்கை கடைபிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். […]
கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 26 தொழிலாளர்களுக்கு இதுவரை கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அங்கு பணிபுரிந்த 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையின் முக்கிய இடமாக கருதப்படும் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சொந்த ஊரான கடலூர் திரும்பிய ஏழு தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 7 பேரும் சிதம்பரம் அண்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே இன்று காலை அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து […]
அரியலூரில் புதியதாக 19 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு மாவட்டத்திலிருந்து சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு திரும்பிய 19 நபர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி, கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டமாக ஆரஞ்சு மண்டலத்தில் இடம் பெற்றிருந்த அரியலூரில், தற்போது புதியதாக 19 […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், பச்சை மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலமாக அம்மாவட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை கொரோனோ நோய் பாதிப்பு இல்லாமல் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன் முதலாக கொரோனோ பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நபர் ஒருவருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற்றப்பட்டு உள்ளது. எனவே பச்சை மண்டலத்திற்கான […]
சென்னையை அடுத்த காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சுமார் 5,000 குடும்பங்களுக்கு அதிமுக மாணவர் அணி துணை செயலாளர் கோவிலம்பாக்கம் திரு. C மணிமாறன் அவர்களின் ஏற்பாட்டில் மக்களுக்காக அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார். இந்த நிகழ்வில் சிதலப்பாக்கம் ச.ராஜேந்திரன் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் சமைக்க தேவையான பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கினார். ஊரடங்கு நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் சமூக பணியில் […]
கோவையில் கழிவறைக்குள் பரவிக் கிடந்த விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஒருவர் மரணிக்க, 2பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை பீளமேடு பகுதியில் ஹட்கோ பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு பாலாஜி, முரளி ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய் தந்தையருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 […]
செங்கல்பட்டில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியை அடுத்த வல்லாஞ்சேரி அண்ணா சாலை பகுதியில் வசித்து வந்தவர் ஸ்டீவன்சன். இவருக்கு மூன்று மனைவிகள். கூடுவாஞ்சேரி அருகே டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வந்தார். ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால், இவர் தனது மூன்றாவது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட வாக்குவாதம் முற்றி, ஆத்திரத்தில் […]
அரியலூர் மாவட்டத்தில் ஐந்து ஆண்டுகளாக சேமித்து வைத்த பணத்தில் தனது கிராம மக்களுக்கு சூப் போட்டு தருவதற்காக பயன்படுத்திய மாணவிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அரியலூர் மாவட்டம் திருமானூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியையடுத்த குத்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அபி. பதினொரு வயதாகும் இவர், அதே பகுதியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளியில் பல போட்டிகளில் கலந்து அவ்வப்போது பரிசுகளும் பெற்றவர். இவருக்கு சமூக அக்கறையும் அதிகம் உண்டு. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு […]
தஞ்சை to மதுரை வரை 200 கிமீ ஊரடங்கு என்றும் பாராமல் தனது காதலனை பார்க்க நடந்தே சென்று கொண்டிருக்கும் பெண்ணை காவல்துறையினர் மீட்டு பாதுகாப்பான இடத்தில் சேர்க்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சையை சேர்ந்த பிஎஸ்சி பட்டதாரி பெண் ஒருவர் சமீபகாலமாக டிக்டாக் செயலிக்கு அடிமையாகி பல வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். அப்படி வீடியோக்களை வெளியிட்டு வந்த சூழலில் மதுரையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இவருக்கு டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின் அவர் […]
திண்டுக்கல்லில் மருத்துவர், செவிலியர், அரசு அலுவலர்கள் உட்பட 42 பேருக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதுகொரோனா பாதிப்பை கண்டு அஞ்சி நடுங்கி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆகிய துறையினர் தங்களது உயிரை பனையம் வைத்து பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட 42 பேருக்கு வீட்டை விட்டு வெளியே […]
கோவையில் மருந்து கடைகளை திறக்க வேண்டுமென்றால் போலீசார் கெடுபிடி செய்யக்கூடாது என கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு வருகின்ற 29ம் தேதி இரவு 9 மணிக்கு முடிவடையும். இந்த முழு ஊரடங்கில் மருந்துக் கடைகளைத் தவிர வேறு எந்த கடைகளும் திறந்து வைக்கக்கூடாது. மருந்து கடைக்கு விலக்கு அளிக்கப்பட்ட போதிலும், […]
காஞ்சிபுரத்தில் மின் கம்பி அறுந்து விழுந்து 40 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கெருகம்பாக்கம் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருபவர்கள் கோவிந்தராஜ், சேகர். இவர்கள் இருவரும் தங்களது வயிற்று பிழைப்பிற்காக 40 ஆடுகளை பேணி பாதுகாத்து வளர்த்து வந்துள்ளனர். நாள்தோறும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு பின் அவர்கள் ஏரியாவில் உள்ள ஒரு காலி இடத்தில் பூட்டி அடைத்துவிடுவார்கள். இந்நிலையில் நேற்று அதிகாலையில் அப்பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் […]
திருச்சியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இன்று முதல்திங்கள் கிழமை வரை முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருள்களை வாங்க மட்டுமே பொது மக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இதனை காரணமாக வைத்து வெளியே வரும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை ஆங்காங்கே மாநகராட்சிகளும், நகராட்சிகளும் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சேலம் […]
திருச்சியில் வருகின்ற 25, 26ம் தேதிகளில் தற்காலிக காய்கறி கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு மேலும் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, திருச்சி மாநகர பகுதிகளில் தற்காலிக […]