கடலூரில் வருகின்ற 26ஆம் தேதி முழு ஊரடங்கை கடைபிடிக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு மேலும் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
Tag: DistrictNews
கிருஷ்ணகிரியில் தேவையின்றி வெளியே நடமாடிய மக்கள் மீது வழக்கு பதிவு செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவை இல்லாமல் வெளியே நடமாடக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி சிலர் வெளியே சுற்றி வந்தனர். அவர்கள் மீது காவல் துறையினரும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டத்தில் […]
குமரியில் வாலிபருக்கு லிப்ட் கொடுத்த குற்றத்திற்காக டிரைவர் ஒருவரின் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த இந்த உத்தரவானது, மே 3 வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கும் அபாயம் இருப்பதால், ஆங்காங்கே பிழைப்பிற்காக சென்ற இளைஞர்கள் தங்களது சொந்த ஊர் நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அந்த வகையில், ஓசூரிலிருந்து உரம் ஏற்றி வந்த லாரி ஒன்று […]
கடலூரில் முக கவசம் அணியாத வங்கி ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வங்கிகள் அனைத்தும் நேர கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றனர். காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படுகின்றன. அதிலும் ஊழியர்கள் தங்களது வாடிக்கையாளர்களை சமூக விலகலை கடைபிடிக்க செய்ய வேண்டும் என்றும், அவர்களும் முக கவசம், சானிடைசர் உள்ளிட்டவற்றை பயன்படுத்த […]
செங்கல்பட்டில் அனுமதியின்றி நடத்தப்பட்ட கடைகளை சீல் வைத்து தாசில்தார் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகத்தில் உதயம் சூப்பர் மார்க்கெட், உதயம் ஜவுளி கடை, ஷரிபா பாத்திரகடை உள்ளிட்டவை செயல்பட்டு வந்த நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை மட்டுமே சமூக விலகலை கடைபிடித்து விற்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த வணிக வளாகத்தில் சமூக விலகளும் கடைபிடிக்க படாமல் அத்தியாவசியப் பொருள்களற்ற […]
சென்னை அருகே தம்பி செய்த தவறுக்காக அண்ணன் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெரும்பாக்கம் பெரியார் நகரில் வசித்து வந்தவர் கிரிதரன். இவர் கூலி தொழிலாளி ஆவார். இவரது தம்பி ரமேஷ் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ரமேஷ் பக்கத்து தெருவில் கேம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை காரணமின்றி அடித்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுவன் அதே ஏரியாவில் உள்ள சிவா என்ற நபரிடம் புகார் […]
நாகை மாவட்டத்தில் வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள் ஆதார் அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டையை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரும் மக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சில அடையாள […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் உட்பட யாரும் உள்ளே நுழைய முடியாதபடி பொதுமக்களே முள் வேலியை கொண்டு தடுப்பு பாதை அமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மட்டும் குறிப்பிட்ட தூரம் மட்டுமே தற்போது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வெளியூர்களுக்கு, வெளி மாவட்டங்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கான பல்வேறு தடுப்பு பணிகளை அந்தந்த மாநகராட்சிகளும், நகராட்சிகளும் மேற்கொண்டு […]
திண்டுக்கல்லில் பாலை பதப்படுத்தும் ஆவின் தொழிற்சாலையில் முறைகேடு செய்த நபர்களை அந்நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. திண்டுக்கல்லில் உள்ள தொழிற்பேட்டையில் ஆவின் நிறுவனத்தில் பால் பதப்படுத்தும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பால்கள் அனைத்தும் கொள்முதல் செய்யப்பட்டு பதப்படுத்தப்படுகின்றன. பின் அவைகள் பாக்கெட்களில் அடைக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன. மேலும் இங்கு பால்கோவா, பால் பவுடர் உள்ளிட்ட பொருள்களும் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. […]
கடலூரில் சாரயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மது பிரியர்கள் சட்டவிரோதமாக எங்கேனும் மது கிடைக்குமா? என்று அலைந்து திரிந்து வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் முந்திரி தோப்புக்குள் சாராயம் காய்ச்ச உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ […]
கோவையில் பெற்றோர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் தியாகி குமரன் தெருவைச் சேர்ந்தவர் யூசப். இவர் நகை பட்டறை ஒன்றை நடித்து வருகிறார். இவரது மகள் நஸ்ரின், கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது கொரோனாவை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இக்காலகட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதேபோல நஸ்ரின் விடுமுறை காலங்களில் […]
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த வருடமும் அந்த இரண்டு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் மருத்துவராக பணி புரிந்த நபர் ஒருவர் டெங்கு […]
கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாஸ்க் challange மேற்கொள்ளுமாறு சென்னை மக்களிடம் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு தொலைக்காட்சி மூலமாகவும், சுவரொட்டிகள் மூலமாகவும், அவ்வப்போது ஒலிபெருக்கிகள் மூலமாகவும் கைகளை கழுவுமாறும், முக கவசம் அணிந்து வெளியே வருமாறும், பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றது. ஆனால் பொது மக்கள் கடைபிடிக்க மறுக்கின்றனர். கடந்த வாரத்திலிருந்து முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு […]
இன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது கோடை வெயில் தமிழகம் முழுவதும் வாட்டி வதைத்து வரும் சூழ்நிலையில், பொதுமக்கள் அவரவர் ஊர்களில் மழை பெய்து விடாதா என்று வானத்தை ஏக்கத்தோடு பார்த்து வருகின்றனர். ஆனால் அதிர்ஷ்டம் என்பது 6 மாவட்டங்களுக்கு மட்டும் தான் தற்போதைய சூழ்நிலைக்கு அடித்துள்ளது. அதாவது, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று முதல் நாளை மாலை வரை தேனி, திண்டுக்கல், விருதுநகர், […]
தர்மபுரி அருகே பொம்மிடி பகுதியின் எல்லைகளில் பள்ளம் தோண்டி வேற்று ஆட்கள் ஊருக்குள் வராமல் தடுத்ததற்கு 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதிக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 20 கிராமங்களில் உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைக்காக தொடர்ந்து வந்து செல்கின்றனர். ஆனால் இந்த கிராமத்து மக்களை தவிர தர்மபுரி மாவட்டத்திற்கு பொம்மிடி பகுதி வழியாக அவ்வபோது கேரள வாகனங்கள் வந்து செல்வதாகவும் ரகசிய தகவல் அதிகாரிகளுக்கு கிடைத்தது. […]
கடலூர் அருகே முன்பகை காரணமாக 70 வயது முதியவரை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்ற தந்தை மகனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை பகுதியில் விவசாய தொழில் செய்து வருபவர் அய்யாக்கண்ணு. இவருக்கும் இவரது உறவினரான மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது முன்பகையாக மாறிப்போக இருவரும் பேச்சுவார்த்தையை நிறுத்திவிட்டனர். இந்நிலையில் நேற்று அய்யாக்கண்ணுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நிலம் தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவரது உறவினர் தனது மகனுடன் […]
கோவை அருகே கள்ளக்காதலனுடன் நெருங்கி பழக தடையாக இருந்த குழந்தையை பெற்ற தாயே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் கோவில் மேடு ஏரியாவில் வாடகை வீட்டில் வசித்து வந்த திவ்யா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து காலி செய்து தனது இரண்டு குழந்தைகளுடன் துடியலூர் தொகுதிக்கு குடிபெயர்ந்து வசித்து வந்தார். அங்கு அவருக்கும் ராஜதுரை என்ற நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் ஒரே வீட்டில் […]
சென்னை தாம்பரத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் தாம்பரம் பகுதியை அடுத்த சீனிவாசன் நகரில் உள்ள முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் திருமணமாகி தனது கணவருடன் ஆந்திராவில் வசித்து வந்தார். அவரது இளைய மகள் சுமித்ரா மாற்றுத்திறனாளி. இவர் தந்தைக்கு உதவியாக கூலி வேலை செய்தும், வீட்டுப் பணிகளை மேற்கொண்டும் வந்துள்ளார். இந்நிலையில் கலா […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் நாமக்கல் திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று ஒரே நாளில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 33 பேர் என 48 நபர்கள் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். […]
மதுரையில் பாதியில் விடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் யூனியனான வேடர்புளியங்குளம் பகுதியில் 11/3 கோடியில் தார்சாலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டது. அந்த வகையில் சாலைகள் ஆங்காங்கே பெயர்த்து எடுக்கப்பட்டு ஜல்லிக் கற்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவால் பணிகள் அனைத்தும் அப்படியே நிறுத்தப்பட்டு விட்டன. ஒரு மாதத்திற்கும் மேலாக தெருக்களில் ஆங்காங்கே குவியல் குவியலாக ஜல்லிக் கற்கள் கிடப்பதால் இருசக்கர வாகனங்கள் அப்பகுதி வழியாக […]
மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்து பொருள்கள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதனை தடுப்பதற்காக ஊராடங்கை தாண்டி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி கரூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கு, காய்கறி, மளிகை கடைக்கு நேர கட்டுப்பாடு என்பது விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மருந்து கடைகளுக்கு நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் காலை முதல் இரவு வரை அரசு விதிகளின்படி இயங்கலாம் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் முகக் கவசம் அணியாமல் இருந்தவர்களிடம் ரூபாய் 3,550 ரூபாய் வசூல் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அந்தந்த மாவட்டத்திலுள்ள மாநகராட்சிகளும், நகராட்சிகளும் அறிவித்திருந்தனர். அதன்படி, கன்னியாகுமரி மாநகராட்சி நேற்று அதற்கான வசூல் வேட்டையை தொடங்கியது. அந்த வகையில், இருசக்கர வாகனம் , […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அம்புலன்ஸ் தடையின்றி செல்ல தடுப்பு கம்புகளை அகற்றுமாறு சமூகஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். நாடு முழுவதும் முழுவதும் கொரோனாவிற்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் இருக்கும் தெருக்களிலும் அந்த தெருவை சுற்றியுள்ள பகுதிகளிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு […]
தர்மபுரியில் சாகுபடி செய்த வாழை மரங்கள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஏக்கரில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். வருடம்தோறும் நல்ல லாபத்தை தரக்கூடிய இந்த வாழை சாகுபடி, இந்த வருடம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் காரணமாக வாழை மண்டி கடைகள் மூடப்பட்டு உள்ளதால் கொள்முதல் செய்ய ஆள் இல்லாமல் வாழைகள் […]
சென்னையில் காவல்துறை அதிகாரிகளிடமிருந்து வாகனத்தை திருப்பி வாங்கி தருவதாக கூறி வக்கீல் வேடமிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காக 144 தடை உத்தரவானது நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதைத் தவிர தேவையின்றி வெளியே வருவோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதுடன் அவர்களது இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து விடுகின்றனர். அந்த வகையில் சென்னை மாதவரம் பால்பண்ணை காமராஜர் நகரைச் சேர்ந்த 10 நபர்கள் வாகனமும் காவல்துறை அதிகாரிகளால் […]
கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் வடமாநில பெண் தொழிலாளிக்கு ஆண்களே சாலையில் பிரசவம் பார்த்து தாய் மற்றும் சேய் காப்பாற்றிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. வாகன வசதி ஏதும் இல்லாமல் பிரசவ வலியுடன் நடந்தே மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண்ணின் பனிக்குடம் உடைந்து குழந்தை தலை வெளியேறியுள்ளது. இதனை அங்கிருந்த ஆண்கள் சிலர் கண்டதும் இணைந்து அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். பின்பு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த பெண்ணையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அனுப்பி […]
அரியலூர் அருகே திருமணமாகாத இளம் பெண் கர்ப்பமான நிலையில் அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே திருமணம் செய்துகொண்டு அலைபாயுதே பட பாணியில் வாழ்ந்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது . அரியலூர் மாவட்டம் காரைகுறிச்சி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி சிவரஞ்சனி திடீரென காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மதன் சுதாகர் சிங் என்பவரை சிவரஞ்சனி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து […]
தலைநகரான சென்னையில் கொரோனா நிலவரம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். சென்னையில் இதுவரை 228 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. குணமடைந்து 24 பேர் வீடு திரும்பிய நிலையில், 196 பேர் சிகிச்சையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட ஒருவர் குணம் அடைந்துள்ளார். 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் பாலின வாரியாகப் பார்த்தால் ஆண்களில் 68 சதவிகிதமும் பெண்கள் 32 சதவிகிதமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வயது வாரியாக […]
சென்னை திருமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணிடம் இருவர் வழிப்பறியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை திருமங்கலத்தில் அடிக்கடி செயின் பறிப்பு சம்பவங்கள் நடப்பது உண்டு. தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ரோட்டில் ஆள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. ஆகையால் பெண் சங்கிலி பறிப்பு அச்சத்தால் தனது சங்கிலியை கழற்றி கையில் வைத்திருந்ததாகவும் அதை கொள்ளையர்கள் பறித்து சென்றதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று […]
புதுச்சேரியில் தனியார் மதுபான கிடங்கை உடைத்து மதுபாட்டில்களை திருடிய இருவரை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் கைது செய்தனர். ஊரடங்கு உத்தரவால் மதுக்கடைகள், கிடங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில், மறைமலை அடிகள் சாலையில் உள்ள மதுபான கடையின் கிடங்கில் சிசிடிவி கேமராவை செயலிழக்க செய்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்தனர். சிசிடிவியை செயளிலக்க வைப்பதற்கு முன் அவர் முகத்தில் கட்டியிருந்த துணி சற்று விலக முகம் விடியோவில் பதிவாகியிருந்தது. பின் விசாரணை மேற்கொள்கையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த […]
ஈரோடு அருகே சரக்கு ஆட்டோ மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கிய சமயத்தில் தக்காளிகளை சில நிமிடத்திலையே அப்பகுதி மக்கள் எடுத்து சென்றுவிட்டனர். ஈரோடு மாவட்டம் தளவாடி மலைப்பகுதியில் இருந்து சரக்கு ஆட்டோ ஒன்று தக்காளி பெட்டிகளை பாரம் ஏற்றி வந்தது. சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தின் மீது மோதியது. இதில் வாகன ஓட்டுநர் லேசான காயங்களுடன் தப்பிக்க தக்காளிகள் அனைத்தும் வண்டியிலிருந்து […]
திண்டுக்கல்லில் ரூபாய் 50 கோடி மதிப்பிலான மிளகு மூட்டைகள் சேமிப்பில் உள்ளதாகவும் அவற்றை விற்பனைக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தோட்ட உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கீழ் மலைப்பகுதிகளில் மிளகு, சவ்சவ், காபி கொட்டை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர். இந்த பயிர்களை வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட கொடைக்கானலை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மக்கள் நால்வரும் வேலைக்கு வருகின்றனர். அவர்கள் அறுவடை செய்யும் மிளகு உள்ளிட்ட விளைபொருட்கள் மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட […]
தர்மபுரியில் நல்ல விலைக்கு போக வேண்டிய சம்பங்கி பூக்கள் அறுவடை செய்ய முடியாமல் கருகி நாசமாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொன்னகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குண்டுமல்லி, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் விளைச்சல் கோடைகாலங்களில் அமோகமாக இருக்கும். அறுவடை செய்யப்படும் பூக்கள் பெங்களூர் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் முக்கிய பூ மார்க்கெட் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். ஆனால் தற்போது 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் அறுவடை பூக்கள் அறுவடை […]
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த 13 நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பதாக மதுவிலக்கு அமல் பிரிவு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அங்கே சாராயம் காட்சி கொண்டிருந்த நபர்களை கைது செய்ததோடு 53 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வன பகுதியில் […]
கோவையில் வாழைபயிரிட்ட விவசாயிகள் நஷ்டஈடு வழங்குமாறு தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோயம்பத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதற்கு ஊடுபயிராக வாழை மரங்களை அப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யப்படும். விதைக்கப்ட்ட வாழை கன்று ஓராண்டுக்குள் நல்ல விலை கொடுத்து விவசாயிகளுக்கு நல்ல வருமானம் ஈட்டி தரும். ஆனால் தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு வாழை நல்ல விளைச்சலை கொடுத்துள்ளது. ஆனால் […]
செங்கல்பட்டில் தர்பூசணி மற்றும் நெல் மூட்டைகளை அரசே கொள்முதல் செய்ய வேண்டுமென திமுக MP வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை திமுகவின் MP மற்றும் எம்எல்ஏக்கள் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி பயிரிடப்பட்டு அவை நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ள தர்பூசணிப் பழத்தை வியாபாரிகள் யாரும் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி வாங்க முன்வருவதில்லை. ஆகையால் […]
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை நகராட்சி ஆணையர் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் ஏற்கனவே ஒரு நபருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சுமார் 13 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டனர். அதிலும் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் 3 பேரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து திருமங்கலம் நகராட்சி ஆணையர் அதை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தார். மேலும் காய்கறி மளிகை […]
நாகையில் பெண் ஒருவர் திடீரென மரணம் அடைந்ததை அடுத்து அவர் இருந்த பகுதியைச் சுற்றியுள்ள கடைகளை திறக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வெளியே வருகின்றனர். அந்த வகையில், நாகை மாவட்டத்தில் காலை 6 மணிமுதல் மதியம் ஒரு மணிவரை மட்டுமே கடை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி பொதுமக்கள் காய்கறியை வாங்கிச் சென்று வருகின்றனர். இந்த […]
கன்னியாகுமரியில் சொந்த ஊருக்கு நடந்தே சென்றவர்களை 40 கிலோ மீட்டர் தொலைவில் மடக்கிப் பிடித்த காவல்துறை அதிகாரிகள் அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மீண்டும் அனுப்பி வைத்தனர். கன்னியாகுமாரி மாவட்டம் கீரிப்பாறை பகுதி அருகே தனியார் எஸ்டேட் ஒன்று உள்ளது. இதில் கிராம்பு, மிளகு, உயர் ரக மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த எஸ்டேட்டில் பல மாவட்டங்களை சேர்ந்த நபர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் […]
காஞ்சிபுரத்தில் காவல்துறை குறித்த அவதூறு வீடியோ பரப்பிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் காவல்துறை அதிகாரிகள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் என்பவரது மொபைல் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்று வந்தது. அதில் ஒரு வாலிபர் காவல் நிலையத்திலிருந்து கையில் இரண்டு அரிவாளுடன் வெளியில் வருவது போலவும், அவருக்கு பின்னால் இருந்து இரண்டு நபர்கள் நடந்து வருவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அது கொலை மிரட்டல் விடுப்பது […]
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தி ஒன்றை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் தங்களது பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெளியே வரும் சமயங்களில் முககவசத்தை கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், அத்தியாவசிய பொருட்களான உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய், பழங்கள் உள்ளிட்டவையும், மருந்துப் பொருட்களையும் […]
கொடைக்கானலில் 100க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை திருடிய 2 வாலிபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் 50க்கும் மேற்பட்ட தனியார் மதுபானகடைகள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஊரடங்கு உத்தரவால் தற்போது மூடப்பட்டு உள்ளது. இதனால் கொடைக்கானலில் உள்ள குடிமகன்கள் மது கிடைக்காமல் திணறி வருகின்றனர். இப்படி இருக்கையில் மது பாட்டிலை அப்சர்வேட்டரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கடையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து மர்ம நபர்கள் 100க்கும் மேற்பட்ட […]
கோவையில் மருத்துவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியைச் சேர்ந்தவர்கள் வாசுதேவன், ஜோதிமணி தம்பதியர். இவர்களது மகன் ஜெயமோகன்( 30). திருமணமாகாத இவர் நீலகிரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு திடீரென அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு வந்ததும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
செங்கல்பட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சமூகவலைதளங்களில் வெளியான வீடியோவால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள அஞ்சூர், திருவடிசூலம், அலமேலுமங்காபுரம், வேன்பாக்கம் உள்ளிட்ட ஏரியாக்கள் வனப்பகுதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ளன. இந்த இடங்களில் கடந்த ஐந்து ஆண்டிற்கும் அதிகமாக சிறுத்தை நடமாட்டம் காணப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து தகவல் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர்.ஆகையால் சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினரும் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிப்பதுடன் தானியங்கி கூண்டுகளை அமைத்து […]
ஈரோட்டில் வாலிபருக்கு கொரோனா இருப்பதாக பெண் ஒருவர் பொய் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது செல்போன் மூலம் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இங்கே அம்மாபேட்டையில் இருக்கும் வாலிபர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாகவும் அவர் கட்டுப்பாடின்றி வெளியே சுற்றுவதால் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புகார் அளித்தார். அவரது புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
ஈரோட்டில் சுரைக்காய் நல்ல விளைச்சல் கொடுத்தும் பயனில்லாமல் போவதாக கூறி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர், எண்ணமங்கலம், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் சுமார் 50 ஏக்கருக்கும் மேல் சொட்டுநீர் பாசன முறையில் சுரைக்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது சுரைக்காய்நல்ல விளைச்சலை கொடுத்திருக்கக் கூடிய இந்த சூழ்நிலையில் கொள்முதல் செய்ய வழியில்லாமல் அவை அழுகிப்போவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்களது சுரைக்காயை திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட […]
ஈரோட்டில் இனி வாரத்திற்கு 3 நாட்கள் காய்கறி மளிகை கடைகள் செயல்படடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் பல்வேறு மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே தினமும் […]
கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரகாசி. இவர் கூலிதொழிலாளி ஆவார். இவர் தனது நண்பர்களான சுந்தரராஜ், மாயகிருஷ்ணன், குமரேசன் ஆகியோருடன் மது அருந்த நினைத்துள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவால் மதுபான கடைகள் அனைத்தும் மூடி இருப்பதால் அவர்களுக்கு எங்கும் மது கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு வித்தியாசமான திரவத்தில் தண்ணீர் கலந்து […]
சென்னை மக்களின் வீட்டிற்கே சென்று காய்கறிகளை டோர் லெலிவரி செய்யும் வசதியை கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் நடைமுறைப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீட்டு அருகில் இருக்கக்கூடிய மளிகைக் கடைகளிலே காய்கறிகளை வாங்கி விட்டு வீட்டிற்கு செல்ல, ஒரு சிலரோ அருகில் உள்ள மளிகை கடைகளில் விலை அதிகம் இருப்பதன் […]
நாமக்கல்லில் அமைச்சர் காரை மறித்து துப்புரவு பணியாளர்கள் முககவசம், கையுறை கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காவல் நிலையத்தில் இலவசமாக முட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அதிகாரிகள் மற்றும் மின்சாரத்துறை சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் தங்கமணி மற்றும் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு தலா 30 மூட்டை இலவசமாக வழங்கினர். பின் ராசிபுரம் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள 250 வருவாய் துறை அதிகாரிகளுக்கும் […]