காஞ்சிபுரத்தில் 51 வார்டுகளில் உள்ள தெருக்களை கம்பு கொண்டு தடுப்பு சுவர் கட்டி மக்கள் வெளிவருவதை மாவட்ட நிர்வாகம் தடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்று தமிழக அரசு பல்வேறு முறை வலியுறுத்தி வருகின்ற போதிலும் இளைஞர்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரிவதை நாம் […]
Tag: DistrictNews
ஈரோட்டில் கெட்டி சமுத்திரம் ஏரியில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து இனிமையாக கூச்சலிட்டு வருவதை அப்பகுதி மக்கள் கேட்டு ரசித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த பர்கூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள கெட்டி சமுத்திரம் ஏரியானது சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது சமீபத்தில் 9 ஆண்டுக்கு பின் முழு கொள்ளவை எட்டியது. இதை எண்ணி அப்பகுதி மக்கள் சந்தோஷம் அடைந்தனர். வெளிநாட்டு பறவையான செங்கல் நாரை உள்ளிட்டவை ஏப்ரல் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஏரியை […]
தர்மபுரியில் தக்காளியை பறிக்க ஆளில்லாமல் அழுகி வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தர்மபுரியை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். அது நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ள சமயத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்குதடையின்றி செல்லலாம் என்று அரசு அறிவித்த போதிலும், தக்காளியை பறிக்க கிராம மக்கள் யாரும் முன் வருவதில்லை என்பதால், தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் […]
கோயம்புத்தூரில் கலெக்டர் அலுவலகத்தில் தங்களது ஊருக்கு செல்ல வேண்டி பொதுமக்கள் கூட்டம் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு ஆனது ஏப்ரல் 14ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இறந்தவர்களின் ஈமச்சடங்கு திருமணம் உள்ளிட்ட அவசர காரியங்களுக்காக செல்ல விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பித்த பின் பாஸ் பெற்று செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட சொந்த ஊரைவிட்டு ஆங்காங்கே வசிக்கும் மக்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல வேண்டியும், […]
சென்னையில் தனது பைக்கை திருடிய நபரை நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே. நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராமச்சந்திரன். 20 வயதான இவர் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். சென்ற பிப்ரவரி மாதம் இரு சக்கர வாகனம் காணாமல் போனது குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். […]
திருச்சியில் இனி வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ய கூடாது என 100க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள குட்செட் யாரட்க்கு நாள்தோறும் அரிசி கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் சரக்கு ரயில் மூலம் வந்து சுமை தூக்கும் தொழிலாளர்களால் இறக்கப்பட்டு பின் லாரியில் ஏற்றி அரசு குடோனுக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது ஊரடங்கு காரணமாக சுமார் 350க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகளை ஏற்றி செல்வதால் லாரி ஓட்டுநர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் […]
நெல்லையில் இனி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நெல்லை மாநகரத்தில் காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் சமூக இடைவெளி கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில் அம்மாவட்ட ஆட்சியர் இதனை தடுக்கும் […]
திருப்பத்தூரில் வாட்ஸ்அப் வதந்தியை நம்பி காய்கறி வியாபாரி ஒருவர் ஏமாந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் எங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்களோ அந்த கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. இதை பயன்படுத்தி பலர் வதந்தி பரப்பி வருகின்றனர். அந்த […]
திருப்பூரில் சமூக இடைவெளியை கேள்விக்குறியாக்கும் விதமாக ஒன்றுகூடிய மக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே வாங்க வீட்டை விட்டு வெளியே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளியே வரும் சமயங்களிலும் முக கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்ற அறிவுரையும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் இனி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என வேலூர் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அத்தியாவசிய அரசுத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தாசில்தார், காவல்துறை உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொதுமக்களுக்கு தேவையான மருந்து, காய்கறிகள், பழங்கள், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் உள்ளிட்டவை தங்குதடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின் மாவட்ட […]
விழுப்புரம் மாவட்டத்தில் 10 ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக மாற்றி அம்மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு விழுப்புரம் மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்குநாள் தாக்கம் அதிகரிப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயிலின் […]
விருதுநகர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் உணவின்றி கஷ்டப்படும் அவலம் ஏற்படும் என்பதை உணர்ந்த தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூபாய் 1000 நிவாரணத் தொகையும், அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விலை இல்லாமல் வழங்குமாறும் உத்தரவிட்டது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை பகுதி […]
பிரதமர் நரேந்திர மோடி பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்ட நான்கு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனாவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்திய மக்களுடன் தொலைக்காட்சி வழியாக, சமூக வலைதளங்கள் வழியாக உரையாடல் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இதற்கு முன்பாக மக்களை கைதட்ட சொன்ன அவர் தற்போது மின் விளக்குகளை அணைத்து வீட்டின் வாசலில் 9 நிமிடங்கள் விளக்கு வைக்குமாறு அறிவுறுத்தியிருந்தார். அவரது அறிவுரையை ஏற்று பலரும் அதற்கு […]
வரலாற்றில் முதன்முறையாக பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா தடைப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில். இந்த கோவிலில் மிகப் பிரசித்தி பெற்ற திருவிழா பங்குனி உத்திர திருவிழா. வருகிற மார்ச் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள திருவிழா ஏப்ரல் 6-ஆம் தேதி திருக்கல்யாணமும், மறு நாள் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற இருந்தது. இந்நிலையில் வைரஸ் பரவலை தடுப்பதற்காக பாரதப் பிரதமர் […]
சென்னையில் மட்டும் 144 தடையை மீறி வெளியே சுற்றிய 250 பேரின் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 144 தடை உத்தரவு வைரஸில் தடுப்பதற்காக 144 தடை உத்தரவு நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்ட உள்ள நிலையில் பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளேயே முடங்கி இருக்கின்றனர். ஒரு சிலரோ அரசின் அறிவுரையை மதிக்காமல் வெளியே சுற்றித் திரிந்து வருகின்றனர். அவர்களுக்கும் அவ்வப்போது நூதன முறையில் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் நேற்றைய தினம் […]
புதுக்கோட்டையில் கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் புதுக்கோட்டைப் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தனது வீட்டாருடன் தனிமையில் கண்காணிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் தன்னால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனிமையை சகிக்க முடியாத காரணத்தினால் விரக்தியடைந்த அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தமிழக அரசு மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரு […]
சென்னை ஆவடியில் காய்கறிகள் வீட்டிற்க்கே லெலிவரி செய்யப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை நாடு முழுவதும் பாரதப்பிரதமர் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். அதன்படி, பொதுமக்கள் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், அப்போதும் வெளியில் சென்று வரும்போது ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் அனைத்து மக்களின் […]
நெல்லையில் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிச் செல்ல தற்காலிக சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் அதனைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஏப்ரல் 14ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை இந்தியா முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் தங்களது அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்கறி சந்தைகளில் முழுவதுமாக […]
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தியவர்களில் ஐந்துபேர் 144 தடையை மீறி ஊர் சுற்றி வந்ததால் அவர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பல்வேறு உயிர்களை பலி வாங்கி வருகிறது. அந்த வகையில், இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரிக்க 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடைய தாக்கம் மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்காக ஏப்ரல் 14 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்திற்கு 605 பேர் வெளிநாடுகளில் வேலை […]
கன்னியாகுமரியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து கொரோனா தனிப்பிரிவில் அனுமதித்துள்ளனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்துவரும் சூழ்நிலையில், 144 தடை உத்தரவு வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்ற அரசின் அறிவுறுத்தலின் பேரில் அனைவரும் அதனை கடைப்பிடித்து வருகின்றனர். காவல்துறையினரும் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரி காவல்துறையினர் ரோந்து பணியில் […]
கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி அருகே திருமண விழா நடைபெற்றது. உலக நாடுகளை கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்திவரும் சூழ்நிலையில், நாடு முழுவதும் 144 தடைவிதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 16ஆம் தேதிக்கு முன் பதிவுசெய்யப்பட்ட திருமணங்களை மட்டும் நடத்தலாம் என அரசு தெரிவித்தது.இந்நிலையில், கள்ளக்குறிச்சி அருகே சின்னதுரை – சுஸ்மிதா தம்பதிக்கு இடையே திருமணம் நடைபெற்றது. கோவிலில் நடைபெற இருந்த இந்த திருமணம், கொரோனா வைரஸ் பாதிப்பால், கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டதன் காரணமாக […]
கொரோனா நோய் தொற்றுக்கான பல்வேறு நடவடிக்கைகள் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவானது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், பெரம்பலூர் நகராட்சி நகரம் முழுவதும், கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டன. இதை தொடர்ந்து, நகராட்சி ஆணையர் மன்னன், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம், நகரின் முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அவசியமில்லாமல் மக்கள் யாரும் […]
மதுரையில் கொரோனா குறித்து பொய்யான வதந்திகள் பரப்பி வந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பு குறித்தும், ஊரடங்கு குறித்தும் பொய்யான தகவல்களை பரப்பி வருபவர்களை சைபர் கிரைம் கண்காணித்து வருவதாக தமிழக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று பொய்யான தகவல்களை பரப்பி வருவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, மதுரை கரியமேடு பகுதியில் வசித்து வரும் கார்முகிலன் என்பவர் கொரோனா குறித்து தவறான […]
வெளிநாடுகளிலிருந்து வந்த 247 பேரில் 32 நபர்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணிக்காக மராட்டிய மாநிலங்களில் இருந்து 67 பேர் அரியலூர் மாவட்டத்திற்கு வந்திருந்தனர். அவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்கையில் 8 பேருக்கு சாதாரண காய்ச்சலும், மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரியவந்து உள்ளது. இருப்பினும், சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பணி நிமித்தம் காரணமாக வெளிநாடுகளுக்குச் […]
சென்னையில் காவல்துறையினருக்கு பெண்கள் இளைஞர் பீர் பாட்டிலால் கழுத்து மற்றும் மார்பில் தன்னைத்தானே குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேப்பேரி டவுட்டன் பாலம் அருகே வசித்து வருபவர் கார்த்திக். இவரும் நந்தினி என்ற பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இவ்வாறு இருக்க நேற்று முன்தினம் மாலை நந்தினி குளித்துக் கொண்டிருப்பதை பக்கத்து வீட்டு முருகன் எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர், துப்புரவு பணியாளராக […]
சென்னை அருகே நண்பருடன் குளிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி பகுதியை அடுத்த அண்ணனுர் பள்ளிக்கூட ஏரியாவில் வசித்து வருபவர் வந்தவர் யுவராஜ். இவர் மனைவி பார்வதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகி அவரவர் கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர். யுவராஜ் அயப்பாக்கம் பகுதியில் இஸ்திரி கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது நண்பர் பிரபாகரன் என்பவருடன் அயப்பாக்கம் ஏரிக்கு […]
கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனோ பாதிப்பை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பல இடங்களில் காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை மாணவர்கள் பாதுகாப்பான முறையில் கழிக்க வேண்டும் என்பதற்காக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். அதில், கொரோனோ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் […]
தஞ்சை அருகே கொரோனோ நடவடிக்கை மேற்கொள்ள சென்ற கலெக்டர் வீட்டிலையே கொள்ளையர்கள் கை வரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ வைரசுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகள் உரிய நேரத்தில் மேற்கொள்ளப் படுகிறதா? என்பதை கண்காணிக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் துரிதப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் கொரோனோ நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதை அறிந்த […]
சென்னையில் 10 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்து விட்டு மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயலில் குடியிருப்பு வளாகம் ஒன்றில் மூன்றாவது மாடியில் வசித்து வருபவர் சுரேஷ். இவர் அதே குடியிருப்பில் வசித்து வந்த பத்து வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை இவர் வீட்டிற்கு கூட்டிச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். விஷயம் வெளியில் தெரிந்தால் மாட்டிக் கொள்வோம் என நினைத்து […]
சென்னையில் சாலையோர மக்களுக்கு தங்குமிடம், உணவு வசதி ஏற்படுத்தி தர கோரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனோ அச்சுறுத்தல் காரணமாக நாளை ஒருநாள் சுய ஊரடங்கு கடைபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். அதன்படி பேருந்துகள்,மெட்ரோ,ரயில் உள்ளிட்ட எந்த போக்குவரத்து சேவையும் தமிழகத்தில் நாளை இயங்காது பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலையோரங்களில் வசிக்கும் மக்களையும் பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த சென்னை […]
தஞ்சையில் 5 மாத குழந்தைக்கு கொரோனோ நோய் தொற்று கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ வைரஸ் நோய் தொற்று இந்தியாவிலும் தீவிரம் காட்டி வரும் சூழ்நிலையில், அதனை ஆரம்ப காலகட்டத்திலேயே தடுத்து நிறுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் நோயின் தாக்கம் சற்று வீரியத்துடன் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இதனுடைய தாக்கம் சற்றுக் குறைவாக காணப்பட்டாலும், ஆங்காங்கே கொரோனோ அறிகுறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், […]
உயர் பதவிக்கு ஆசைப்பட்டு இந்து மக்கள் கட்சியின் பிரமுகர் தன்னைத்தானே வெட்டி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் நந்தகோபால் என்பவர் தன்னை மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் வெட்டி விட்டு தப்பி சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்த தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னுக்குப் […]
கொரோனாவுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் சனிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மதுரை மாணவர்கள் அதனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் சனிடைசர் தட்டுப்பாடு என்பது உலக அளவில் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய தட்டுப்பாடு காரணமாக விலை சற்று அதிகம் உயர்த்தி விற்கப்பட்டு வருகிறது. மேலும் சானிடைசர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதி பட கூடாது என்பதற்காக மதுரை பார்மஸி கல்லூரி மாணவர்கள் மாநகராட்சியுடன் இணைந்து நாளொன்றுக்கு […]
சென்னை அருகே 9மாத கர்ப்பிணி காதலி வயிற்றை கிழித்த காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியை அடுத்த குமாரபாளையத்தில் வசித்து வருபவர் சௌந்தர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியான நர்மதா என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட அதீத நெருக்கத்தால் கல்லூரி மாணவி கர்ப்பமாகி 9 மாதம் கடந்து விட்டது. இதையடுத்து காதலன் வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனை ஆகும் என அறிந்து அதனை கலைக்க பல்வேறு முயற்சிகளை ஏற்கனவே […]
தூத்துக்குடி அருகே சாலையைக் கடக்க முயன்ற நபர் காரால் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி விடும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன். இவர் நேற்று சாலைபுதூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையை நடந்து கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதி சாலை தடுப்பு சுவரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே […]
திருநெல்வேலி அருகே விசாரணைக்காக அழைத்துச் சென்றதை அவமானமாக கருதி தாய் தனது மகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வல்லவன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் திருமலை முருகன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது மனைவி வள்ளியம்மாள். இவருக்கு மகராசி, கனகலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் வள்ளியம்மாள் அதே பகுதியைச் சேர்ந்த ஆவுடை தங்கம் என்ற […]
கோழி முட்டை மற்றும் கறியால் கொரோனாபரவாது என்பதை நிரூபிக்க நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கோழி முட்டை மற்றும் கோழி கறி சாப்பிடுவதால் கொரோனா பரவும் என்ற வதந்தி தமிழகத்தில் பரவி வந்தது. இந்த வதந்தி பரப்பிய 4 பேர் கைது செய்யப்பட்து விட்டனர். இருப்பினும் இந்த வதந்தியால் தமிழக மக்கள் கோழிக்கறியை ஒதுக்கி வந்தனர். இதன் காரணமாக கோழிக்கறி விற்பனையில் சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, கோழி விலையை குறைத்தும் விற்பனையில் வியாபாரிகள் […]
செங்கல்பட்டு அருகே விரித்த வலையில் மீனவர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் மெய்யூர் குப்பத்தை சேர்ந்தவர் பரசுராமன். இவர் மீனவர் தொழிலாளி ஆவார். இவர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றுள்ளார். சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் சென்று மீன் வலையை விரித்த போது கால் தவறி கடலில் விழுந்துள்ளார். விழுந்தவுடன் வலையானது கை,கால்களில் சிக்கியதால் நீச்சலடிக்க முடியாமல் திணறிய அவர் […]
கொரோனா வைரஸ் காய்கறி விலையில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தமிழகத்தின் காய்கறி விலையையும் சரித்திரம் காணாத அளவு மாற்றி அமைத்துள்ளது. எப்போதும் கோடை காலம் நெருங்கும் பட்சத்தில் காய்கறி விலை உச்சத்தில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் அது மிகவும் சரிந்துள்ளது. அதற்கான காரணம் தமிழகத்தில் விளைவிக்கப்படும் காய்கறிகள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். தற்போது கொரோனா […]
உரிய அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை காட்டிற்குள் அழைத்துச் சென்ற மூன்று ஜீப் ஓட்டுனர்களிடம் ரூபாய் 85 ஆயிரம் அபராதம் வனத்துறையினரால் வசூலிக்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட இடமாக கருதப்படும் முதுமலை சரணாலயத்தில் காட்டுப்பகுதியை கரைத்துக் குடித்த 3ஜிப் ஓட்டுனர்கள் சுற்றுலா பயணிகளை அனுமதி இல்லாமால் உள்ளே அழைத்துச் சென்று சுற்றி காட்டியதாக புகார்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. இதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் மூன்று பேரையும் வனப்பகுதிக்குள் வைத்து கைது செய்தனர். பின் அவர்களிடமிருந்து ஜீப்பை பறிமுதல் செய்த […]
கொரோனா வைரஸ் நமது மாநிலங்களில் பரவாமல் தடுக்க அண்டை மாநிலங்களுக்கு மக்கள் அடுத்த 15 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இது தமிழகத்திலும் பரவாமல் தடுப்பதற்காக எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஈரோடு மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து செய்தி குறிப்பு […]
பழனி மலைக்கோவிலில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக பக்தர்கள் கூட்டம் குறைந்தது. தமிழ் கடவுள் முருகப்பெருமானின் 3வது வீடான பழனி மலைக்கோவிலில் வார மற்றும் திருவிழா விடுமுறை காலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதற்கு காரணம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்வர். இதனால் கூட்டம் எப்போதும் நிறைந்த வண்ணம் காணப்படும். அந்த வகையில், தற்போது இந்தியாவில் பரவி வரும் வைரஸ் […]
தர்மபுரி அருகே புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 66 குடிசைகளை அதிகாரிகள் திடீரென அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் கல்லாங்குத்து என்னும் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் பஞ்சப்பள்ளி கிராமத்தை சுற்றியுள்ள 66 பேர் இந்த புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து குடிசை அமைத்துக் கொண்டனர். ஆனால் இது புறம்போக்கு நிலம் அரசுக்கு சொந்தமானது. இதில் குடிசை அமைத்தவர்களை உடனடியாக அகற்றக் கோரி வருவாய்த்துறை சார்பில் பலமுறை […]
சென்னை ராமச்சந்திரா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலவரையறையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போரூரில் அமைந்துள்ள ராமச்சந்திரா கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு காலவரையறையின்றி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக நாடு முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதன் தாக்கம் தமிழகத்திலும் வரலாம் என்ற அச்சத்தின் காரணமாக இந்த காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த விடுமுறை தொடரும் என்றும் கூறப்பட்டு உள்ளது. தற்போது […]
ஈரோடு அருகே தனது மரணத்திற்கு கணவர் தான் காரணம் என்று தாய்க்கு மெசேஜ் அனுப்பி விட்டு இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை அடுத்த நஞ்சனபுரம் ஏரியாவைச் சேர்ந்தவர் சத்யா. இவருக்கும் ஆர்எஸ் குளத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சத்யா அவரது தாயாரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவர் […]
திண்டுக்கல் அருகே காய்கறி மூட்டை சரிந்து தொழிலாளி மரணம் அடைய மூன்று பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி காய்கறி சந்தையில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சரக்கு வேன் ஒன்று காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த கார்த்திகை வேல் என்பவர் ஓட்ட வேனின் பின்பகுதியில் காய்கறி மூட்டைகளோடு மூட்டை தூக்கும் தொழிலாளிகளான பெருமாள், பூபதி, சண்முகவேல் உள்ளிட்டோர் அமர்ந்து வந்தனர். அப்போது பழனி அரசு குடியிருப்பு அலுவலகம் அருகே சென்று […]
கடலூர் அருகே மாமியார் திட்டியதால் மூன்று மகன்களுடன் தாய் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த வள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவருக்கு திருமணமாகி அருள் மல்லி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் வீரபாண்டியன் குடும்பத்திற்காக உழைக்க சிங்கப்பூர் சென்றுவிட அருள்மல்லி அவரது மாமியார் மற்றும் மகன்களுடன் பள்ளிப்பட்டிக்கு வசித்து வந்துள்ளார். எனவே மாமியார் மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது […]
கோவை அருகே காவல் நிலையத்திற்குள் பெண் அரிவாளுடன் வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சா. இவரது மனைவி கனகா. இருவரும் அதே பகுதியில் கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு கனகா கையில் அரிவாளுடன் காவல் நிலையம் வருகை தந்தார். அவரது கணவரும் கிழிந்த சட்டை, ஆங்காங்கே வெட்டுக்காயங்களுடன் காவல் நிலையம் வந்தடைந்தார். பின் ஒரு பெண் கையில் ரத்தக்கரை படிந்த அரிவாளுடன் […]
செங்கல்பட்டு அருகே தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க கோரி சாலை முன்பு பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை அடுத்த பெரிய வெளிக்காடு கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மிகப்பெரிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் குடிநீர் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக இந்த தொட்டிகளில் இருந்து மக்களுக்கு சரியாக நீர் விநியோகிக்கப்படுவது இல்லை. இதனால் சிறியவர்கள், பெரியவர்கள் பெண்கள், குழந்தைகள் என பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர்மக்கள் […]
தங்கை உணவு, தண்ணீரின்றி கணவன் வீட்டார் துன்புறுத்தி வருவதாக மனைவி புகுந்த வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியை அடுத்த மார்க்கெட் லைன் ஏரியாவை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத். இவர் அதே பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த 2017ம் ஆண்டு முதல் தனி குடுத்தனத்தில் வசித்து வந்தார். கணவன், மனைவி […]