திண்டுக்கல் அருகே 3 மாத சிசு குழந்தை இறந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் குப்பண்ணபட்டியைச் சேர்ந்தவர் சரவணன். அதே ஊருக்கு அருகாமையில் இருக்கக்கூடிய கட்டகருப்பன்பட்டியைச் சேர்ந்தவர் கலாவதி. இவர்கள் இருவருக்கும் கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், சிவஸ்ரீ என்ற 2 வயது குழந்தையும் மோனிஷா என்ற மூன்று மாத பெண் குழந்தையும் உள்ளது. சரவணன் பெங்களூர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருவதால் கலாவதி அவரது தாயார் வீட்டில் தங்கி […]
Tag: DistrictNews
கடலூர் அருகே கணவனை கத்தியால் குத்திய மனைவி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை அடுத்த சின்னூர் கிராமத்தில் வசித்து வருபவர் கமல்மதி. இவருக்கும் இவரது மனைவியான மயில் அழகி என்பவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராரில் மயில் அழகி கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட அங்கு சென்று தனது மனைவியை தன்னுடன் […]
இணையதளத்தை பயன்படுத்தி தகவல் சேகரித்து திருட்டில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் கோனியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த நான்காம் தேதி அன்று தேரோட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி தலா 10 பேரிடம் 35 பவுன் நகையை மர்ம பெண்கள் திருடியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் மர்ம பெண்களை வலைவீசி […]
தென்காசி அருகே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தொடர்ந்து நடைபெற்று வரும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு பாதுகாவலரை நியமிக்க கோரி ஊர்மக்களும் ஆசிரியர்களும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் முன்னாள் யூனியன் தலைவரான சட்டநாதன் என்பவர் சீவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களுடன் சேர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் இந்த பள்ளியில் பல்வேறு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் […]
தேனி அருகே பரமசிவன் மலைக்கோவில் பின் அடையாளம் தெரியாத ஆணின் தலை மற்றும் துண்டாக்கப்பட்ட நிலையில் கிடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தேனி மாவட்டத்தில் பரமசிவன் மலை கோவில் ஒன்று உள்ளது. இங்கு உள்ள கிரிவலப்பாதையில் நாள்தோறும் பொதுமக்கள் சிலர் நடைபயிற்சி மேற்கொள்வர். அப்போது அப்பகுதி நாடக மேடை ஒன்றின் வழியாக நடைப்பயிற்சி மேற்கொண்ட பொழுது சிலருக்கு துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து நாளுக்கு நாள் துர்நாற்றம் வீச சந்தேகமடைந்த அவர்கள் நாடக மேடையை சுற்றி சோதனையிட்டனர். […]
திருச்சி அருகே மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் ஐம்பத்தி ஒரு சவரன் நகை ஐந்தரை லட்சம் பணம் உள்ளிட்டவற்றை திருடிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாலாஜி நகரில் 7-வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவி வேலைக்கு […]
திருநெல்வேலி அருகே டிவி பார்க்கக்கூடாது என்று தந்தை கண்டித்ததன் காரணமாக மனமுடைந்த பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியையடுத்த கீழ அரியகுளம் கிராமத்தின் தெற்கு தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளான ராமலட்சுமி, மூலைக்கரைப்பட்டி பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு டிவி பார்க்கும் பழக்கம் அதிகம் இருந்து வந்துள்ளது. இதனால் […]
திருநெல்வேலி அருகே வளைகாப்பு நடத்த கணவன் வீட்டார் சம்மதிக்காத காரணத்தினால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியையடுத்த ஆத்தங்கரை பள்ளி நாச்சியார் தெருவில் வசித்து வருபவர் முகமது ராவி. இவருடைய மனைவி நிஷா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பம் தரித்தார். இந்நிலையில் அவருக்கு வளைகாப்பு நடத்த அவரது வீட்டார் திட்டமிட்ட நிலையில், அதனை […]
திருநெல்வேலி அருகே கொரோனா வைரஸ் வதந்தியால் கோழிக்கறி விலை சரமாரியாக குறைந்ததையடுத்து ஒரு கிலோ கோழிக்கறிக்கு 10 முட்டைகள் இலவசமாக வழங்கியதையடுத்து விற்பனை அமோகமாக நடைபெற்றது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன், நாடு முழுவதும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கி தாய்லாந்து, தென் கொரியா என இறுதியில் இந்தியாவையும் வந்தடைந்தது. இவ்வாறு இருக்கையில் தமிழகத்தில் பிராய்லர் கோழி மூலம் வைரஸ் பரவுவதாக சில சமூக விஷமிகள் வதந்தி பரப்பி வந்தனர். […]
திருவள்ளூர் அருகே இளைஞர்கள் இருவர் தலையின் மீது கல்லை தூக்கி போட்டு கொன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியையடுத்த வேம்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வீரா.இவர் அவரது நண்பர் சுதாகர் உடன் நேற்றையதினம் பொன்னேரி பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கே கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த நபர்களுடன் இவர்கள் இருவரும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறிற்க்கான காரணம் தெரியவில்லை. இதில், சண்டை முற்றவே […]
திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக கணவன் மனைவியை தாக்கிய மாமனார் மருமகன் கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் அடி அண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்கும் பொதுக் கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் ஆக மாறி இருந்தது. இந்நிலையில் கண்ணனும், அவரது மனைவி விஜயாவும் நேற்றையதினம் கிணற்றிலிருந்து நீர் எடுத்து பாய்ச்சு கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த முருகனும், அவரது மருமகனான மணிகண்டனும் சேர்ந்து […]
வேலூர் அருகே ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்த மினி வேன் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேலூர் மாவட்டம் புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் காங்கிரஸ் ரோட்டில் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் மாதவன். இவர் அதே பகுதியில் இரண்டு சக்கர வாகனங்களுக்கான ஸ்டாண்ட் நடத்திவருகிறார். இந்நிலையில் அவரது மனைவிக்கு தீராத மூட்டு வலி இருப்பதால் அதனை குணப்படுத்துவதாக ஆந்திர மாநிலம் சித்தூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல பக்கத்து ஊர் டிரைவர் வெங்கடேசன் […]
விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஆட்டோ நொறுங்கிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை அடுத்த வயலூர் கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பரான சண்முகம் ஆகிய இருவரும் சேத்துப்பட்டு சென்றுவிட்டு இந்தியாவில் ஒரு ஆட்டோ ஒன்றை பிடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆட்டோவை சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த அப்துல்கரீம் என்பவர் ஓட்டி கொண்டு […]
தஞ்சாவூரில் விஜய் ரசிகர்களால் தொடங்கப்பட்ட விலையில்லா விருந்தகம் 163 வது நாளை கடந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், மேலூர் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ரசிகர்கள் ஏழைகளுக்காக விலையில்லா விருந்தகம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி ஏழைகளுக்கு காலை உணவு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இந்த உணவு மிகவும் தரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். செப்டம்பர் மாதம் விஜய் ரசிகர்களால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்பொழுது 163 வது நாளாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று […]
கன்னியாகுமாரி மாவட்டத்தில் இன்றும், நாளையும் உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பீர்முகமது தர்கா ஆண்டுவிழா இன்றும், மண்டைக்காடு பகவதி அம்மன் மாசி கொடை விழா நாளையும் நடைபெற உள்ளது. இந்த இரண்டு விழாக்களும் அம்மாவட்டத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் கலந்து கொண்டு வெகு விமர்சையாக கொண்டாடும் இந்த விழாவை அம்மாவட்ட மக்கள் சிறப்பாக கொண்டாடுவதற்காக மாவட்ட ஆட்சியர் இன்றும், நாளையும் பள்ளி […]
கோவையில் ஒரே கல்லூரியை சேர்ந்த 80 மாணவிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிப்பதற்காக தலைமுடியை தானம் செய்துள்ளனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் தலைமுடி வைத்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கென்று விக்தயாரிக்க தொடர்ந்து உலகம் முழுவதும் உள்ளமக்கள் முடி தானம் செய்து வருகின்றனர். இதற்காக வெளிநாடுகளில் NOSHAVENOVEMBER என்ற ஒரு மாதம் முழுவதும் மக்கள் முடியையும், மீசை தாடியையும் வெட்டாமல் சேவ் செய்யாமல் வளர்த்து தானம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரே கல்லூரியைச் […]
சென்னை அருகே பாலியல், பண மோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்து மகாசபை தலைவர் ஸ்ரீகண்டன் நேற்று இரவு தனிப்படை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த நிரஞ்சனி என்பவர் இந்து மகாசபை தலைவரான ஸ்ரீகண்டன் என்பவர் மீது கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், அவர் எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வருவதாகவும், சமூக வலைதளங்களில் தொடர்ந்து என்னை இழிவு படுத்தியும், கொலை மிரட்டல் […]
செங்கல்பட்டு அருகே காதலிக்காவிட்டால் செல்பி புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவரது அக்காள் மகள் மோனிஷா. மோனிஷா தன் தாய், தந்தை இறந்துவிட அவரது தாய் மாமனான சரவணன் வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த […]
மதுரையில் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளிக்க வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரசு விழா ஒன்றிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை சென்றிருந்தார். அங்கு அவரை காண ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரிய தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றக் கோரி மனு ஒன்றை, அத்துமீறி முதல்வரிடம் 7 தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரும், அவருடன் தமிழ்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த […]
செங்கல்பட்டு அருகே குளத்தில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படடுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஒரத்தி பகுதியை அடுத்த கடம்பத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி மேத்யூ. இவர் மதபோதகராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள முரளி என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மேத்யூவின் மகன்களான ரமேஷ், ஆகாஷ் ஆகிய […]
செங்கல்பட்டு அருகே வயிற்று வலி காரணமாக இளைஞர் தூக்கில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து நேற்றையதினம் துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து சந்தேகம் அடைந்த ஊர் பொதுமக்கள் உடனடியாக மறைமலை நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஜன்னலைத் திறந்து பார்க்கையில், ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் தூக்கில் தொங்கி காணப்பட்டது. பின் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து […]
சென்னை அருகே புதிய மோட்டார் சைக்கிளுக்கு ஆசை பட்டு பாட்டியை கொன்ற பேரன் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சென்னை வியாசர்பாடி காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவருக்கு 70 வயதாகிறது. இந்நிலையில் இவர் தனது மகள் சாந்தி வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த வாரம் சாந்தியும் அவரது மகன் சுரேஷும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். பின் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கையில் வள்ளியம்மாள் மர்மமான முறையில் இறந்து கிடக்க, வீட்டில் இருந்த 7 […]
சென்னை அருகே திருட சென்ற இடத்திலையே போதையில் உறங்கிய திருடனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை மதுரவாயல் பகுதியை அடுத்த ஆலப்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருபவர் முத்துக்குமார். கடந்த வாரம் இவரது வீட்டின் கீழ் உள்ள இவருக்கு சொந்தமான மூன்று கடைகளில் மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து ரூபாய் 70 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் முத்துக்குமார் புகார் அளிக்க அப்பகுதி சிசிடிவி காட்சிகளின் […]
கோவை அருகே போலீஸ் வேடம் அணிந்து மூன்று செல்போன்களை திருடிச் சென்ற மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் அத்திப்பாளையம் சாலையில் ஏராளமான தனியார் விடுதிகள் செயல்பட்டு வருகின்றனர். இங்கு வெளியூரில் இருந்து பல்வேறு மாணவர்கள் தங்கி கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கூறி நான்கு பேர் காவல்துறை சீருடை அணிந்து நேற்று தனியார் விடுதி ஒன்றில் சோதனை செய்துள்ளனர். பின் அங்குள்ள செல்போன்களை மட்டும் […]
செங்கல்பட்டு அருகே வேகத்தடையில் வண்டி குலுங்கியதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியை அடுத்த புலியூரைச் சேர்ந்தவர் சர்தார். இவர் பழைய கண்ணாடிகளை வாங்கி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் தனது டெம்போவில் டிரைவருடன் சென்று அப்பகுதியை சுற்றியுள்ள ஏரியாக்களில் பழைய கண்ணாடிகளை சேகரித்து வந்துள்ளார். பின் டெம்போ நிரம்பியதும் இருவரும் புலியூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வரும்போது கண்ணாடிகளை பத்திரமாக பார்த்துக்கொள்வதற்காக சர்தார் அமர்ந்துவிட்டார். டெம்போவின் […]
சென்னை அருகே கணவர் கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடிய மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை அடுத்த வஉசி நகரைச் சேர்ந்தவர் தணிகைவேல். இவர் எண்ணூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரேகா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தணிக்கைவேலுக்கு மது பழக்கம் உண்டு. அவர் நாள்தோறும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்வது வழக்கம். அந்த வகையில், நேற்று முன்தினம் தனது மனைவியிடம் […]
சென்னையில் இளைஞர் ஒருவர் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். சென்னை அயனாவரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், முதன் முதலில் இன்ஸ்டாகிராமில் இளம்பெண் ஒருவர் எனக்கு மெசேஜ் செய்தார். அதற்கு நான் பதிலனுப்பினேன். எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒருநாள் தனக்கு அவர் வீடியோ கால் செய்தார். நான் முதலில் முகத்தை காட்டியபடி பேசிக்கொண்டிருந்தேன். பின் அவர் […]
கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கையை சேர்ந்த நபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை துரைசிங்கம் என்பவர் லண்டனில் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி ஒரு வேலைக்காக சென்னை வந்துள்ளார். சென்னை எழும்பூர் அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்தார். பின் மீண்டும் லண்டன் செல்வதற்காக ஆட்டோ ஓட்டுநர் ஸ்டீபன் என்பவருடன் விமான நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். […]
பெரம்பலூரில் எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் நேரடியாக காவல் நிலையம் சென்று ஒரிஜினல் துப்பாக்கி, வாக்கிடாக்கி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றுவரும் 50க்கும் மேற்பட்ட எல்கேஜி, யுகேஜி மாணவர்கள் இன்று பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் நேரடியாக சென்று ஒரிஜினல் துப்பாக்கி வாக்கிடாக்கி உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். காவல் நிலையத்திற்கு வருகை தந்த குழந்தைகளை காவல் ஆய்வாளர் நித்யா என்பவர் வரவேற்று பூங்கொத்து, இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் காவல் […]
மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தில் 2000 ரூபாய் பொம்மை தாள் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பசுமலை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம்மில் ரூபாய் 2000 எடுக்க ராஜசேகர் என்பவர் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் இருந்து சிறுவர்கள் விளையாடக்கூடிய 2000 ரூபாய் பொம்மைதாள் வந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டும், அதனை புகைப்படம் எடுத்தும் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் […]
குடிநீர் கேன் உரிமையாளர்களின் தொடர் போராட்டத்தினால் சென்னையில் குடிநீர் தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிநீர் தேவைக்காக நிலத்தடி நீரை எடுப்பதற்கு உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்க கோரி மூன்று நாட்களாக குடிநீர் கேன் உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆலைகளில் இருந்து குடிநீர் கேன்கள் வெளி நபர்களுக்கு வினியோகிக்கப் படுவதில்லை. பெரும்பாலும் சென்னை மக்கள் கேன் குடிநீரையே நீராதாரமாக பயன்படுத்தி வந்த நிலையில், இதனால் அவர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்பது […]
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உறவினர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் மருமகள் கோவையில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவரது உடன்பிறந்த சகோதரரான வெங்கடேசன் என்பவர் அவரது பெற்றோர்களிடம் கார் வாங்கித் தருமாறு நீண்ட நாட்களாக கேட்டு வந்துள்ளார். இதனைப் பெற்றோர்கள் மறுக்கவே மனமுடைந்த அவர் இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தி தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களுக்கு பெரும் சோகத்தை […]
மார்ச் ஒன்றாம் தேதி முதல் வழக்கம்போல் வாகனங்களுக்கான கட்டணங்கள் பரனூர் சுங்கச்சாவடியில் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு பலகை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 26 ஆம் தேதி செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையே நடைபெற்ற தகராறில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்து ஓட்டுனரை சரமாரியாக தாக்கினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கினர். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாகனங்கள் எந்தவித கட்டணங்களுமின்றி இயங்கிவந்த நிலையில், […]
விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் விற்பனையில் ரூபாய் 7 லட்சம் மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலையில் விடுதி ஒன்றை நடத்தி வருபவர் விக்னேஷ்வரன். இவருக்கும் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென மோகன்ராஜ் தன்னிடம் அறிமுகமாகும் போதே மோகன்ராஜ் தன்னை இருசக்கர வாகனத்தின் புரோக்கராக அறிமுகப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூன்று நான்கு […]
சென்னை அருகே 14 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கடத்த முயன்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை அருகம் பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் பின்புறம் 14 வயது சிறுமி ஒருவர் கார் ஒன்றில் வாலிபருடன் அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக மினி வேன் ஒன்றில் வந்த வாலிபர் ஒருவர் சிறுமியை கண்டு எங்கோ பார்த்தது போல் இருக்கிறார் என்று இறங்கி பார்த்துள்ளார். அப்போது தான் தெரிந்தது அது அவரது உறவினர் என்று. இதையடுத்து […]
சென்னை அருகே இரண்டாவது கணவருடன் சேர்ந்து முதல் கணவனை கொன்ற பெண் உட்பட 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கொடுங்கையூரை அடுத்த அண்ணா இந்திரா நகரில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மகன்களான சந்துரு மற்றும் தயாளன் ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தயாளன் தன் மனைவியுடன் என் ஊரில் வசித்து வருகிறார். சந்துருவின் மனைவி தாரணி. இவருக்கும், சந்திரனுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் தாரணி சில […]
கோவை அருகே குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகள் உள்ளிட்டவை உள்ளன. இவ்விடங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரம் டன் அளவிற்கு குப்பை சேகரிக்கப்பட்டு கோவை அருகே உள்ள வெள்ளலூரில் இருக்கும் மாநகராட்சிக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை […]
கோவையில் ஆதார் அட்டை எண், வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்டவற்றை சேகரிக்க முயன்ற நான்கு பேரை பொதுமக்கள் சிறை பிடித்து பிடித்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக முஸ்லிம்களும், பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்நிலையில் அது தொடர்பாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்ற தகவல் வெளியான நிலையில், தங்களது பகுதிக்குள் மர்ம நபர்கள் யாரையும் விவரங்களை சேகரிக்க அவர்கள் அனுமதிப்பதில்லை. அந்த வகையில், கோட்டைமேடு பகுதியில் நேற்றைய தினம் குழந்தைகளுக்கு […]
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகின்ற மார்ச் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் வருடந்தோறும் வெகு விமர்சையாக நடைபெறும் விழாவாகும். இந்த தேரோட்ட நிகழ்விற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து விழாவை சிறப்பித்து விட்டு சாமியை தரிசனம் செய்து செல்வர். அந்த வகையில் மார்ச் 9ம் தேதி நடைபெற உள்ள இந்த விழாவிற்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், அன்றைய தினம் […]
திருப்பூரில் இன்று பாஜகவினர் பேரணி நடத்த உள்ளதை முன்னிட்டு பிரியாணிக்கு பாதுகாப்பு வழங்க கோரி பிரியாணி சங்கத்தினர் காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளனர். திருப்பூரில் இன்று குடியுரிமை சட்ட மசோதாவிற்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். அதற்கான அனுமதியும் காவல்நிலையத்தில் வாங்கிவிட்டனர். இந்நிலையில் பெரிய கடை வீதி வழியாக அவர்கள் செல்லும் பொழுது ஏராளமான பிரியாணி கடைகள் இருப்பதால் பிரியாணி சங்கத்தினர் பாஜக உறுப்பினர்களிடமிருந்து பிரியாணியையும், பிரியாணி அண்டாவையும் பாதுகாக்கவேண்டும் […]
தேனி அருகே தலைமையாசிரியர் வீட்டில் 4 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பழனி செட்டி பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் மூணாறு அருகே உள்ள சூரிய நல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவரது தாய் சரஸ்வதி […]
நெல்லை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் முன்னாள் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். இவர் நேற்று மதியம் தனது காரில் திருச்செந்தூர் வரை பயணித்தார். அப்போது திருச்செந்தூரில் இருந்து நெல்லை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில், காரின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கி சிதர சம்பவ இடத்திலேயே ரத்த […]
திருப்பத்தூர் அருகே மர்ம விலங்கு சுற்றி திரிவதால் ஊர் மக்கள் அச்சத்தில் உள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த முரளி, வெங்கடேசன், திருப்பதி உள்ளிட்டோர் வளர்த்த மூன்று ஆடுகளை இரண்டு நாட்களுக்கு முன் கொடூரமாக கடித்து குதறியநிலையில் இறந்து கிடந்தது. இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.அதில், ஊர்மக்கள் சிறுத்தை தான் ஆடுகளை கடித்துக் கொன்றதாக தெரிவித்தனர். இருப்பினும் ஆங்காங்கே சிசிடிவி கேமராக்களை பொருத்தி ஆராய்ந்தபோது […]
திருவாரூர் அருகே பெண்ணிடம் தங்கச் செயின் பறித்துச் சென்ற இரண்டு வாலிபர்கள் மீது கூடுதல் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரோஷினி. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்திலிருந்த 4 1/2 தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து நன்னிலம் காவல் நிலையத்தில் […]
தூத்துக்குடி அருகே சக மாணவனின் வாகனத்தை திருடிய 19 வயது இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டான். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர் ஒருவர் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தை கல்லூரி வாசலில் நிறுத்திவிட்டு சென்று, பின் திரும்பி வந்து பார்த்த போது அதனை காணவில்லை. இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல் நாசரேத் பகுதியில் மற்றொரு இடத்தில் எலக்ட்ரிக்கல் […]
தூத்துக்குடி அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 7 லட்சம் மோசடி செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியை அடுத்த கூடம் பள்ளியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவர் அவரது உறவினர் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தரும் டீலர்கள் குறித்து விசாரித்து வந்துள்ளார். அப்போது கோரம்பள்ளம் பிஎஸ்பி நகரைச் சேர்ந்த கோயில்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட அவர் அரசு வேலை வாங்கித் தருவதாக […]
தமிழகத்தில் +1, +2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் அடுத்த 3 வருடங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்வு வாரிய இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் டூ மாணவர்களுக்கும், மார்ச் நான்காம் தேதி பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு திருப்பூரில் மாவட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் […]
திருவள்ளூர் அருகே அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் அவர் வீட்டில் வேலை பார்த்த வேலைக்காரனே கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி இந்தியன் வங்கி தெருவில் வசித்து வருபவர் விஜய். இவர் அதிமுக கட்சியின் முக்கிய நிர்வாகியும், அப்பகுதி ஒன்றிய கவுன்சிலரும் ஆவார். மேலும் இவர் கட்டிட கான்ட்ராக்டராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் இவரது சித்தப்பா உடல்நலக்குறைவால் மரணிக்க, அவர்களது வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார் விஜய். […]
வேலூர் அருகே ஒடுக்கத்தூர் பகுதியில் மத்திய அரசு நலத்திட்டங்கள் ஒழுங்கான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? என்று மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் யாவும் முறையாக நடக்கின்றனவா? என்பது குறித்து விசாரிக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் திடீரென ஒடுகத்தூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அந்த வகையில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 432 வீடுகள் […]
விழுப்புரம் அருகே இளம்பெண் ஒருவர் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை அடுத்த பணப்பாக்கம் இருளர் காலனியில் வசித்து வருபவர் கண்ணன். இவரது மனைவி மல்லிகா. இவர்கள் இருவரும் நேற்றையதினம் அருகாவூர் ஏரியில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். மீன்களை தேவையான அளவுக்கு பிடித்து விட்டு பின் வீட்டிற்கு திரும்பினர். இந்நிலையில் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறிய மல்லிகா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த கணவன் உறவினர்களுடன் மல்லிகாவை […]