விருதுநகர் அருகே சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு எச்ஐவி இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சிறுவன் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப் படுவதற்கு முன்பு அவர்களுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு எச்ஐவி இருப்பது தெரியவர, அதிர்ந்துபோன அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். […]
Tag: DistrictNews
திருவாரூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட சென்ற 4 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை அடுத்த நெடுவாக்கோட்டை யில் மாய காத்தான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கருணாகரன் என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை கோவிலை திறக்க வந்தபோது கோவிலில் இருந்த பீடமும், சிறிய மணிமண்டபமும் எடுக்கப்பட்டு அதில் இருந்த உண்டியல் திருடப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின் இது குறித்து காவல் நிலையத்தில் […]
தூத்துக்குடி அருகே நண்பன் பேசாததால் பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் பகுதியை அடுத்த அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் தேவநேசன். இவரது கணவர் சாமுவேல் மூன்று நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகள்கள் ஒரு மகன் இருந்தனர். அதில் மூத்த மகள் அமுதா பிகாம் படித்து முடித்து உள்ளார். இந்நிலையில் அமுதா அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் நெருக்கமாக நட்பாக பழகி […]
திருப்பூர் அருகே வங்கியில் வைத்திருந்த 50 பவுன் நகை கொள்ளை போனதை அறிந்த விவசாயி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பாரத ஸ்டேட் வங்கியின் பெட்டகத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் அதில் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த 50 பவுன் நகையை பறிகொடுத்த விவசாயி கண்ணீர் மல்க வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். அதில், விவசாய தொழிலில் பொருத்தவரையில் கடின உழைப்பு போட்டால்தான் வருமானம் […]
திருவள்ளூர் அருகே வேலை பறிபோன விரக்தியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை அடுத்த கிரிஜா நகர் பூங்காவனத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் கணேஷ். இவர் அதே பகுதியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை ஒன்றில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பாக அவரை பணியில் இருந்து தொழிற்சாலை நிறுத்தி விட்டதாக தெரிய […]
திருவள்ளூர் அருகே முன்பகை காரணமாக மாறி மாறி மோதிக்கொண்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட திருபண்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி. இவர் அவரது நண்பர்களான கோகுல், அரவிந்த், ஞானமணி ஆகியோருடன் டீக்கடைக்கு தேனீர் அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கே நின்று கொண்டிருந்த ராம்குமார், சுகுமார்,ராஜேஷ், ஜனார்தன் ஆகிய 4 பேரும் ஏற்கனவே இருந்த முன் பகையை மனதில் வைத்துக்கொண்டு டீக்கடைக்கு தேனீர் அருந்த வந்தவர்களை […]
வேலூர் அருகே தங்கச் செயினை பறித்துச் சென்ற 2 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த கேவிகுப்பம் பேருந்து நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழிப்பறி சம்பவம் அதிகமாக நடைபெற்று வருவதாக வந்த புகார்களை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் தொடர்ந்து ரோந்து பணியிலும் விசாரணையிலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் குடியாத்தம் சித்தூர் கேட் அருகே முதியவர் ஒருவர் மாடு வாங்குவதற்காக ரூபாய் 48,000 பணத்துடன் […]
விழுப்புரம் அருகே தங்கை தற்கொலைக்கு காரணமான காதலனை அண்ணன் ஆறு பேர் உதவியுடன் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டகுப்பம் பகுதியை அடுத்த மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ராகவன். இவர் ஹைதராபாத்தில் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கோட்டகுப்பத்தை சேர்ந்த அருணா என்ற நர்சிங் வேலை பார்த்து வந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் வீட்டிற்கு தெரிய வர அருணாவின் வீட்டில் பெற்றோர்கள் […]
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தின் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை அடுத்த சின்னகாமன்பட்டியில் கடந்த 19ஆம் தேதி சல்ஃபர் மற்றும் அம்மோனியம் நிறைந்து வைக்கப்பட்டிருந்த குடோனில் வெடிவிபத்து ஏற்பட அந்த அறை முழுவதும் தரை மட்டமானது. இதில் 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலி 6 பேர் படுகாயம் அடைந்தனர். பின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டுவந்த அவர்கள் […]
அரியலூரில் விடுதலை சிறுத்தை கட்சியின் சுவரொட்டியை அவமரியாதை செய்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்யக்கோரி ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் த.பழூர் பகுதியில் நேற்றைய தினம் ஒட்டப்பட்டிருந்த விடுதலைகள் சிறுத்தை கட்சியின் சுவரொட்டியை மர்மநபர்கள் நள்ளிரவில் அவமரியாதை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை காலையில் பார்த்த கட்சியை சேர்ந்த சிலர் ஆத்திரமடைந்து கட்சி ஆட்கள் மற்றும் ஊர் மக்களை திரட்டி திடீரென ஜெயங்கொண்டம்-அணைக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது சுவரொட்டியை […]
சென்னை கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு மைய அலுவலகத்தில் வருகின்ற வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரகம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்களில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் கம்பெனிகளில் வேலை வாங்கித் தரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற 28ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள வேலைவாய்ப்பு மையம் ஒருங்கிணைந்த […]
சென்னை அருகே கண் முன்னே மனைவி துடிதுடித்து இறந்தது கண்டு கணவன் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியை அடுத்த கள்ளிக்குப்பம் ஏரியாவில் வசித்து வருபவர் சரவணன். இவர் தனது உறவினரின் துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி தாட்சாயினி உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கும்மிடிப்பூண்டியை அடுத்த சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது செங்குன்றத்தில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற லாரி […]
தூத்துக்குடி அருகே விபத்தில் போலீஸ் SI உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட மாசார்பட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் சிவசுப்பிரமணியன். இவர் நேற்றைய தினம் இரவு மேலக்கரந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மாசார்பட்டி பகுதிக்கு உட்பட்ட அச்சம்குளம் கிராமத்தில் தவறு நடப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலையில் மேலக்கரந்தை பகுதியை அடுத்து லாரி ஒன்று […]
திருப்பூர் அருகே வேகத்தடையில் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கூட்டாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரும் அதே பகுதியை சேர்ந்த, இவரது நண்பருமான மணி ஆகியோர் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள நடுவுசேரியில் இருக்கும் பால் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்றைய தினம் இரவு நடுவு சேரியிலிருந்து அவிநாசி நோக்கி இரு சக்கர வாகனத்தில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். செல்லும் வழியில் வேகத்தடை […]
திருவள்ளூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர். அதே மாவட்டம் சோழவரம் பகுதியை சேர்ந்தவர் தனுஷ் பாலாஜி. இவர்கள் இருவரும் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்காக வைட்டமின்-சி குறைபாடு குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் […]
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களை தேனீக்கள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலத்தை கொண்ட கோவிலாக உள்ளது. இங்கே தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் குவிந்த வண்ணம் இருப்பர். இந்த கோவிலுக்கு நான்கு கோபுரவாசல் உள்ளது. அதன்படி, பக்தர்கள் பெரும்பாலும் அம்மணி அம்மன் கோபுரம் வாசல் மற்றும் திருமஞ்சன கோபுர வாசல் வழியாக அதிகமாக அனுமதிக்கப்படுவர். நேற்றையதினம் அம்மணி அம்மன் கோபுரம் வாசல் வழியாக பக்தர்கள் செல்லும் போது […]
வேலூரில் அமாவாசையையொட்டி மயானக்கொள்ளை வெகுவிமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தின் வட மாவட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையை ஒட்டி மயானகொள்ளை திருவிழா நடைபெறும். இதில் ஆண் பக்தர்கள் மண்டை ஓடு, எலும்புத் துண்டு, எலுமிச்சை பழம் உள்ளிட்டவற்றை மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிந்த படியும் காளி உள்ளிட்ட பெண் அம்மன் வேடமணிந்து சாமி அம்மன் ஊர்வலம் மேற்கொள்வர். அதேபோல் ஊர்வலத்தில் பெண் பக்தர்கள் ஆடு, கோழி உள்ளிட்டவற்றையும், தலையை துண்டித்து அதனை வாயில் கவ்வி கொண்டவாறு […]
விழுப்புரம் அருகே இருவேறு இடங்களில் பள்ளி மாணவி மற்றும் மீனவ தொழிலாளி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்பேத்கார் காலனியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகள் பிரியதர்ஷினி. அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் பிரியதர்ஷினி அவரது தோழி ஒருவருடன் பாக்கம் ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்ற போது ஏரிக்குள் இறங்கி மீன்பிடித்த சமயத்தில் எதிர்பாராத […]
விருதுநகர் அருகே பால் வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியையடுத்த புதுபட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் அதே பகுதியில் பால் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது தொழுவத்தில் பால் கறக்க சென்ற இவர் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான முத்துக்குமார் அமர்ந்திருப்பதைக் கண்டார். இதை கண்டவுடன் இந்நேரத்தில் ஏன் இங்கு அமர்ந்து இருக்கிறாய் என்று கேட்க இருவருக்கும் இடையே தகராறு […]
கிருஷ்ணகிரி அருகே திருமணம் ஆகி மூன்றே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி சந்தியா. இவர்கள் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர் சந்தியா திருமணத்திற்கு முன்பே ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பின் பணிக்கு செல்ல வேண்டாம் என்று மாப்பிள்ளை வீட்டாரின் குடும்பத்தினர் […]
கரூர் அருகே பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்தில் சிறுவன் எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் கேஸ் அடுப்பை பழுது பார்க்கும் பணி செய்து வருகிறார். இவரது மகன் பிரசாத் கணபதி பாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவன் சிறிது […]
கன்னியாகுமரி அருகே கடன் தொல்லை கழுத்தை இறுக்கியதால் மகளை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியை அடுத்த மயிலாடு மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் ஸ்ரீகாந்த் என்ற மகனும் சஞ்சனா என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ஸ்ரீகாந்த் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வர சஞ்சனா எல்கேஜி படித்து வருகிறார். செந்தில்குமார் […]
கள்ளக்குறிச்சி அருகே சமையல் செய்யும்போது திடீரென மேல்நோக்கி எழும்பிய தீ சேலையில் பட்டு கொழுந்துவிட்டு எரிந்தது பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மணிமேகலை. இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜேந்திரன் அதே பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் ஹோட்டலுக்கு ராஜேந்திரன் செல்ல குழந்தைகள் இருவரும் வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் […]
காஞ்சிபுரம் அருகே சாமி கும்பிடும்போது சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை அடுத்த புது மேட்டுத் தெருவில் வசித்து வந்தவர் வள்ளியம்மாள். 80 வயதாகும் இவர் தினமும் கோவிலுக்கு செல்லும் பழக்கம் உடையவர். அந்த வகையில், வழக்கம்போல் நேற்று காலை 8 மணியளவில் அருகில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார். அங்கு பொருத்தி வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கில் சாமி தரிசனம் […]
ஈரோடு அருகே ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட 18 வீடுகள் அகற்றப்பட்டன. ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை அடுத்த ஆவுடையார் பாறை பகுதிக்கு முன்பாக உள்ள சாலையில் தன்னாசியப்பன் கோவில் அருகில் உள்ள நிலமானது நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது. இதை சிலர் ஆக்கிரமித்து அதில் வீடுகளை கட்டி குடியேறினர். பின் இதுகுறித்து பொது நல வழக்கு தொடரப்பட்டு ஒரு மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள வீடுகளை அகற்றப்பட்டு நிலம் மீட்கப்பட […]
திண்டுக்கல் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி பகுதியை அடுத்த வடுகப்பட்டி கிராமத்தில் தென்னை நார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இதில் நேற்றைய தினம் மதியம் சரியாக ஒரு மணி அளவில் நார் கழிவுகளில் தீப்பிடித்து தீ தொழிற்சாலை முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து தொழிலாளர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென பரவி நார் பண்டலில் பிடித்து […]
கடலூர் அருகே ரோடுரோலர் மோதி அம்பேத்கர் சிலை சேதமானதை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சென்னை செல்லும் பசாலை அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. தற்போது அங்கே சர்வீஸ் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் பணியின்போது ரோடுரோலர் தவறுதலாக மோதியதில் அம்பேத்கர் சிலையின் கைவிரல், அதன்பீடம் சேதமடைந்து இரும்பு கூண்டும் தகர்ந்தது. […]
கடலூர் அருகே அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ 9 லட்சம் மோசடி செய்த இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகனை இன்ஜினியரிங் படிக்க வைத்துள்ளார். இந்நிலையில் படித்து முடித்த தனது மகனுக்கு எப்படியாவது அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்ற நோக்கில் ஆங்காங்கே விசாரித்து வந்துள்ளார் கிருஷ்ணசாமி. அந்த வகையில், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமியின் நண்பரான ஹரிதாஸ் […]
கோவையில் மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் நாகப்பதேவர் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் அவ்வப்போது ஆத்திரத்தில் தண்டபாணி லட்சுமியை அடிப்பது வழக்கம். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஏற்பட்ட சண்டை முற்றி ஆத்திரத்தில் அருகில் இருந்த மண்ணெண்ணையை லட்சுமி மீது ஊற்றி தீயை […]
கோவையில் போராட்டக்களத்தில் இரண்டும் தம்பதியினர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் இயக்கங்களின் சார்பில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக்கோரியும் அதனை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றுமாறும் கடந்த மூன்று நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் அதே பகுதியை சேர்ந்த அப்துல் கலாம், ரேஷ்மா என்கின்ற இளம் தம்பதியினர் பெற்றோர்களின் […]
செங்கல்பட்டு அருகே கணவர் வெளிநாட்டிற்கு சென்ற மறுநாள் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியை அடுத்த சண்முகா நகர் 12வது தெருவில் வசித்து வருபவர் மதுரா. இவரது கணவர் ஜெர்மனியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு இந்தியா வந்த அவர் குடும்பத்தினருடன் நாட்களை கழித்து விட்டு பின் மீண்டும் நேற்று முன்தினம் ஜெர்மனிக்கு சென்றுவிட்டார். இவர்களது மகன் ஹரிஹரன் நேற்றையதினம் நண்பர்களுடன் […]
செங்கல்பட்டு அருகே கார் மீது அரசு பஸ் மோதியதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். செங்கல்பட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றின் காரில் நேற்றையதினம் ஐந்து குழந்தைகள் ஏற்றப்பட்டு சிங்கப்பெருமாள் கோவில் பகுதி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது திருத்தணி அருகே உள்ள நெடுஞ்சாலை வளைவில் திரும்பும்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று கார் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த ஸ்ரீமதி, தீபக்,வெங்கடேஷ், ராமமூர்த்தி, […]
அரியலூர் அருகே சாலையோர மரங்களில் நிறம் பூசும் பணிகள் நடைபெற்றன. அரியலூர் மாவட்டம் திருமானூர் தாலுகாவுக்கு உட்பட்ட சாலை ஓரங்களில் பனை மரம், புளிய மரம் உள்ளிட்ட ஏராளமான மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. அப்பகுதி வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் உள்ள மரங்களின் மீது அவ்வப்போது மோதி சிறு சிறு காயங்களுடன் தப்பி விடுகின்றனர். தற்போது முற்றிலுமாக இதுபோன்ற விபத்துக்களை தடுக்க அரசுப் பொறியாளர் ராமச்சந்திரன் என்பவரது தலைமையில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் கருப்பு […]
சென்னை லயோலா கல்லூரியில் பேசிய திமுக MP கனிமொழி மதிய உணவுத்திட்டம் தனியார்மயமாக்கப்படுவதற்கு வேதனை தெரிவித்துள்ளார். சென்னை லயோலா கல்லூரியில் நேற்றையதினம் நடைபெற்ற கருத்தரங்கில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு சகிப்புத் தன்மையில் இருந்தும், மரியாதையில் இருந்தும் அமைதி பிறக்கிறது என்ற தலைப்பில் பேசினார். அப்போது பேசிக்கொண்டிருந்த அவர் தனியார்மயமாதல் குறித்து கருத்து ஒன்றைத் தெரிவித்தார். அதில் தற்போது மத்தியில் இருக்கும் அரசு ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியாருக்கு தாரைவார்த்து வருகிறது. அந்தவகையில், தற்போது தமிழகத்தில் […]
சென்னை அருகே காதலி வராத ஆத்திரத்தில் காவல் நிலையத்தில் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார். சென்னை மாவட்டம் தேனாம்பேட்டை நகரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் உணவு விநியோகிக்கும் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் உஷா என்ற பெண்ணை பல மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கமும் அவ்வபோது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நாம் பிரிந்து விடலாம் என்று உஷா கூறியதோடு வேறு […]
கரூர் அருகே 12 மாணவர்கள் இடைநிற்றலுக்கு தலைமை ஆசிரியர் தான் காரணம் என்று கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம் ஜெகதாபி அருகே உள்ள பழனியாபுரம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு வகுப்பில் 28 மாணவர்கள் படித்து வந்தனர். கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு சிலர் பள்ளிக்குச் செல்ல பிடிக்கவில்லை என்று கூறி 12 […]
கள்ளக்குறிச்சியில் நேற்றைய தினம் வார சந்தையில் ரூபாய் ஒரு கோடியே 54 லட்சத்துக்கு பருத்தி விற்பனையாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாண்மை கூட்டுறவு உற்பத்தியாளர்கள் விற்பனை சங்க வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று பருத்தி விற்பனை நடைபெறும். அந்த வகையில் நேற்றைய தினம் நடைபெற்ற பருத்தி விற்பனையில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான விவசாயிகள் சுமார் 8086 பருத்தி முட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். என்றைக்கும் இல்லாத அளவிற்கு கூட்டம் நேற்றைய தினம் அலைமோதியது. அதில் ஒரு குவிண்டால் […]
காஞ்சிபுரம் அருகே இருக்கசக்கர வாகன விற்பனை மூலம் ரூபாய் 40 லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜா புரத்தில் இரண்டு சக்கர வாகனங்களை தவணை முறையில் விற்பனை செய்து வரும் மகேந்திரன் என்பவர் வாகனங்களை வாடிக்கையாளர்களுக்கு விற்றுவிட்டு வாடிக்கையாளர்கள் முழு தவணைத் தொகையையும் மகேந்திரனிடம் செலுத்திய பின்பும் கூட அவர் கடன் அளித்த நிதி நிறுவனங்களுக்கு அதை செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். மேலும் முழு கடன் தொகையை செலுத்திய பிறகு […]
ஈரோடு அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் மனைவி உயிரிழக்க கணவன் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கங்காபுரம் பகுதியை அடுத்த கொளத்தூர் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி நந்தினி. இவர்கள் இருவருக்கும் வினித், விக்னேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நேற்றையதினம் ரமேஷ் மற்றும் வினித்க்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடைக்கு சென்று வாங்கி விட்டு பின் டீ போடுவதற்காக சமயலறைக்குள் சென்றுள்ளார். அப்போது அவருக்கு கேஸ் கசிந்தது தெரியவில்லை. தீ பற்ற […]
தர்மபுரி அருகே ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு நபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் அசோக் குமார். இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். இந்நிலையில் இருவரும் தர்மபுரிக்கு அவர்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மொரப்பூர் பகுதியை தாண்டி வரும் பெட்ரோல் நிலையம் அருகில் […]
கடலூரில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாகுபாடு காட்டுவதாக கூறி பொதுமக்கள் பள்ளி முன் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை அடுத்த கீரனூரில் ஊராட்சி தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் நேற்று முன்தினம் தங்களது பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் சாதிய பாகுபாடு எங்களிடம் காட்டுவதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும் புகார் அளித்தனர். இதையடுத்து நேற்று காலை மாணவ மாணவிகள் […]
கோவையில் சித்தப்பா மீது ஒன்பதாம் வகுப்பு மாணவி பாலியல் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் திண்டுக்கல் விடுதியில் தங்கி படித்து வருகிறார். அவரது தாய் இறந்துவிட தந்தையும் வேறு ஒரு பெண்ணின் மீது ஆசை கொண்டு மாணவியை கை விட்டு சென்று விட்டார். இதையடுத்து அவரை அவரது சித்தி தான் பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் காது வலி காரணமாக […]
கோவையில் அரசு பேருந்தை ஓட்டும் டிரைவர்கள் பெண்களிடம் பேச கூடாது என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோவையில் அரசு பேருந்து விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மாதம்தோறும் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மண்டல அரசு போக்குவரத்து கழக மேலாளர் மகேந்திரன் தற்போது புதிய சில விதிமுறைகளை வாய்மொழியாக அறிவித்துள்ளார். அதில் கோவையில் மொத்தம் 2500 பேருந்துகள் கோவை மண்டல அளவில் சுமார் 2,700 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வபோது கோவை மாநகருக்கு உள்ளே […]
காஞ்சிபுரம் அருகே லாரி மோதிய விபத்தில் தாய் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் வசித்து வந்தவர் தரணி பாபு. இவர் நேற்று செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு தனது தாயை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சிங்கப்பெருமாள் கோவில் அருகே சென்று கொண்டிருந்த சமயத்தில், அவர் இருசக்கர வாகனத்தின் பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியதில் தாயும், மகனும் தூக்கி […]
சென்னை அருகே தனியார் கம்ப்யூட்டர் நிறுவன இன்ஜினியர் 6 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே உள்ள சிறுசேரியில் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் திருப்பூரைச் சேர்ந்த பிரபு என்கின்ற இளைஞர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த பிரபு நேற்றையதினம் திடீரென ஆறாவது மாடியில் இருந்து விழுந்து தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் […]
திருச்சி அருகே வாரசந்தையை நீக்கக்கோரி காய்கறி வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட கடைகளில் 126 காய்கறி வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் தங்களது வியாபாரத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் திடீரென வாரசந்தை என்ற பெயரில் ஸ்ரீரங்கத்தின் தெப்பக்குளம் பகுதிகளிலும், கீதா புரத்திலும் […]
நெல்லை மண்டல அண்ணா பல்கலைக்கழக டீன் சுரேஷ் மாணவர்களிடம் தமிழ் மொழியை வளர்ப்பதன் அவசியம் குறித்து பேசினார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அப்பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் நெல்லை மண்டல வளாகத்தில் கணித்தமிழ்ப் பேரவை திருவிழா நேற்றையதினம் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நெல்லை மண்டல டீன் சுரேஷ் குமார் என்பவர் தலைமை தாங்கினார். விழாவில் பேசிய அவர், மிகவும் தொன்மையான பழமையான மொழி தமிழ். உலகில் உள்ள பல்வேறு மொழிகள் பல்வேறு காலகட்டங்களில் பல மாற்றங்கள் அடைந்து […]
திருவாரூர் அருகே 3 திருநங்கைகளுக்கு ஆதார், குடும்ப அட்டை, 100 நாள் வேலை திட்டத்திற்கான அட்டை உள்ளிட்டவற்றை ஊராட்சி தலைவர் வழங்கினார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் வசித்து வரும் திருநங்கைகளான செல்வக்கனி, நதியா, அவந்திகா உள்ளிட்ட 3 பேரும் எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான அட்டை ஆகிய மூன்றும் வேண்டுமென ஊராட்சி தலைவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதன்படி, நேற்றைய தினம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற […]
தூத்துக்குடி மாவட்டம் இளையராசனேந்தலை தலைமையகமாக கொண்டு புதிய யூனியன் அமைக்க வேண்டுமென 15 பஞ்சாயத்தை சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்ற 2008 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து குருவிகுளம் யூனியனில் இருந்து இளையரசனேந்தல் பிரிவை சேர்ந்த 15 பஞ்சாயத்துக்கள் தூத்துக்குடி மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது. ஆனால் இதில் ஊரக உள்ளாட்சித் துறை தவிர்த்து மற்ற அனைத்தும் சேர்க்கப்பட்டதால் அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு தேவைகளுக்கு 35 கிலோ மீட்டர் தூரம் இந்த 15 பஞ்சாயத்துகளை […]
திருப்பூர் அருகே 6 ஆம் வகுப்பு மாணவியை வடமாநில இளைஞர் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சத்யா நகரைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளரின் 11 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 25 வயதிருக்கும் வாலிபர் ஒருவர் மாணவியின் வாயைப் பொத்தி தூக்கிச் செல்ல […]