Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வீட்டுக்கே போங்க…. மக்கள பாத்துக் கொடுங்க ….. முக.ஸ்டாலின் வேண்டுகோள் …!!

இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் , எதிர்க்கட்சி தலைவரும் , திமுக தலைவருமான முக.ஸ்டாலின் , கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டு நாமே கூட்டமாக அமர்ந்திருக்கிறோம். ரேஷன் பொருட்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சென்று கொடுக்க வேண்டும். வீட்டில் வந்து என்னை பார்க்க வேண்டாம் என மூத்த அமைச்சர் ஒருவர் போர்டு வைத்து விட்டார் என்று தெரிவித்தார்.

Categories
அரசியல் சற்றுமுன்

கொரோனா தாக்கம் : சட்டசபை ஒத்திவைப்பு ? மதியம் 1 மணிக்கு முக்கிய முடிவு …!!

கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.  சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கிய இந்த வைரஸ் தாக்கத்தால் தமிழகத்திலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்கள் , கோவில்கள் , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என பலவற்றை மூட உத்தரவு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் : தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு …..!!

தமிழக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக 6 மாநிலங்களவை உறுப்பினர்களான ன திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல்  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதே போல தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சும்மா இருங்க, எதுமே பண்ணாதீங்க…. எல்லாத்தையும் நிறுத்துங்க…. ஸ்டாலின் வேண்டுகோள்

மார்ச் 31ஆம் தேதி வரை கட்சி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கூட்டமாக பொதுமக்கள் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ள தமிழக அரசு தொடக்க பள்ளிகளுக்கு வருகின்ற மார்ச் 31-ம் தேதி விடுமுறை அறிவித்து  உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள கர்நாடகா , கேரளா எல்லைகளின் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பேசிய போது குறுக்கிட்டதால் பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேற்றம்!

முதல்வர் பேசிய போது குறுக்கிட்டதால் பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேற்றபட்டுள்ளார். தமிழக சட்டபேரவையில் இருந்து திமுக எம்எல்ஏ ஆஸ்டின் வெளியேற்றப்பட்டுள்ளார். முதலமைச்சர் பேசிய போது குறுக்கிட்டதால் சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசும் போது நான் குறுக்கிடுவதில்லை. பேரவையில் நாம் பேசும் போது குறுக்கிடுவது தவறு. ஆஸ்டினுக்கு விலாசம் கொடுத்தது அதிமுக என கூறியுள்ளார். இதனையடுத்து ஆஸ்டின் நடந்து கொண்டது போன்ற சம்பவம் தொடராமல் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் …!!

திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட  திமுக பொருளாளர் துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளார். திமுகவின் பொதுக்குழு 29ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற இருக்கின்றது. அதன் அடிப்படையில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுவதாக தனது பொறுப்பை விலகுவதாக கடிதம் கொடுத்திருப்பதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். இதனால் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்வு வரக்கூடிய 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன்மூலம் என்ன தெரிகிறது என்றால்  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் ராஜினாமா!

திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும் 29ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேலும் பொருளாளர் பொறுப்பில் இருந்து விலகும் துரைமுருகன் திமுக பொதுச்செயலாளராக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது. துரைமுருகன் விலகலை தொடர்ந்து திமுகவின் அடுத்த பொருளாளர் யார்? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது பொருளாளர் பதவிக்கான போட்டியில் எ. வ. வேலு, கே. […]

Categories
ஆன்மிகம் சற்றுமுன் மாநில செய்திகள்

புதிய பொதுச்செயலாளர் யார் ? ”எல்லாரும் வாங்க” திமுக அழைப்பு ….!!

மார்ச் 29ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். திமுக ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே 1957 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பேராசிரியர் கஅன்பழகன் 1977 இல் இருந்து திமுகவின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக பொதுச்செயலாளர் பதவி வகித்த  அவரின் இறப்பு திமுகவினரை உலுக்கியுள்ள நிலையில் வருகின்ற 29 இல் அண்ணா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் ஸ்டாலின் தோளில்….. உங்களுடன் நாங்கள் இருப்போம்….. தொல். திருமாவளவன் ….!!

மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் படத்திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுகவின் பொதுச்செயலாளர் மறந்த பேராசிரியர் அன்பழகனின் உருவப்படம் திறப்பு விழா நேற்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் , திமுக சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முக .ஸ்டாலின் அன்பழகன் போட்டோவை திறந்து வைத்ததை தொடர்ந்து அனைவரும் அன்பழகனும் புகழஞ்சலி செலுத்தினர். இதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே..! இப்படியா புகழுவீங்க…. ஸ்டாலினை மெய்சிலிர்க்க வைத்த வேல்முருகன் …!!

அன்பழகன் உருவப்படம் திறப்பு விழாவில் வேல்முருகன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார். திமுகவின் பொதுச்செயலாளர் மறந்த பேராசிரிய அன்பழகனின் உருவப்படம் திறப்பு விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் , திமுக சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முக .ஸ்டாலின் அன்பழகன் போட்டோவை திறந்து வைத்ததை தொடர்ந்து அனைவரும் அன்பழகனும் புகழஞ்சலி செலுத்தினர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க பேச்சை யாரு கேட்டா ? திமுகவை நோஸ்ட்கட் செய்த எட்டப்பாடி ….!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய விவாதத்தில் முக.ஸ்டாலினை நோஸ்கட் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். பள்ளிக்கல்வித்துறை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற போது ,  ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வை குறித்து திமுகவின் பொன்முடி பேசினார். இதற்க்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐந்தாம் வகுப்பு , எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்று […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைதியான தமிழகம்…. டெல்லி போல மாற்ற முயற்சி…. ஸ்டாலினை சாடிய EPS ..!!

தமிழகத்தை டெல்லி போல பதற்றம் அடைய எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டி இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைபெறவில்லை என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்ற போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : ”ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு” திமுகவினர் அதிர்ச்சி …!!

திமுக அமைப்புச்செயலாளர் RS.பாரதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இந்த கூட்டத்தில் திமுக எம்பியும் , திமுக அமைப்பு செயலருமான ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டார். இதில் பேசிய அவர் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கலைஞர் போட்ட பிச்சை என தெரிவித்தார். அதே போல ஊடகத்தையும் மோசமாக விமர்சித்தார். இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது காவல்நிலையத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : என்.பி.ஆர். நிறுத்திவைத்து – ”தீர்மானம் நிறைவேற்றுக” முக.ஸ்டாலின்

தமிழகத்தில் NPR நிறைவேற்றப்பட்டதற்கு தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் குடியுரிமை பதிவேட்டில் குறிப்பிட்ட சில விஷயங்களை நீக்க வேண்டும் , இதனால் இஸ்லாமிய மக்கள் அச்சப்படுகின்றனர் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் , மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காத நிலையில் தமிழகத்தில் NPR பதிவை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இந்நிலையில் இன்று […]

Categories
மாநில செய்திகள்

வீட்டில் இருந்து புறப்பட ரஜினி… மலர் தூவி வழியனுப்பி வைத்த ரசிகர்கள்!!

சென்னை போயஸ் கார்டனிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸிற்கு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். சென்னை போயஸ் கார்டன்வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு காரில் ஏறி புறப்படும் முன்பாக வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் காரில் போகும்போது ரசிகர்கள் மலர்தூவி அவரை வழியனுப்பி வைத்தனர். இன்னும் சற்று நேரத்தில் 10: 30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். ரஜினிகாந்த தனது முழுநேர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆலோசனை கூட்டம்….. செய்தியாளர்கள் சந்திப்பு…. ரஜினி போருக்கு தயார் …!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கின்றார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி  மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஒரு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

NPR குறித்து முக.ஸ்டாலின் கேள்வி…. பதிலடி கொடுத்த அமைச்சர் உதயகுமார் …!!

தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் எழுப்பிய NPR குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையில் நடைபெற்ற இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின்  தேசிய குடிமக்கள் மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.NPR-இல் இருக்கக்கூடிய புதிய கேள்விகள் தொடர்பாக தமிழக அரசு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது , அதற்கான பதில் வந்துவிட்டதா ? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.NPR குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் : திமுக வேட்புமனுத்தாக்கள் …..!!

மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கள் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறுகிறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுத்தாக்கள் மனுவில் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். அதேபோல வேட்பாளர்களின் சொத்து விவரம் ,  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : கொரோனா – திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் ….!!

கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. திமுகவினர் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை அரசு என்ன எடுத்துள்ளது என்பது குறித்து தமிழக சட்டப்பேரவையில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.  இன்று தமிழக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் மீண்டும் கூட்டும் போது கவன ஈர்ப்பு தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதிக்கப்படுமென்று தெரிகின்றது. தமிழகம் முழுவதும் எத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயிப்பது உறுதி…. முதல்வருக்கு நன்றி…. முக.ஸ்டாலின் கருத்து ….!!

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடலுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நேற்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேராசிரியர் இறப்புக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில்  பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு அரசியல் மாச்சரியங்களுக்கு  அப்பாற்பட்டு இரங்கல் அறிக்கை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் , அன்பழகன் உடலுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக முன்னாள் நிர்வாகி மரணம்….. அடுத்தடுத்த இறப்பால் கழகத்தினர் அதிர்ச்சி …..!!

கடந்த சில மாதங்களாகவே திமுக நிர்வாகிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து மரணம் என செய்தி கழகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று கூட திமுகவின் பொதுச்செயலாளரும் , மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான க.அன்பழகன் மரணம் திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது. க.அன்பழகன் மரணத்தில் இருந்து திமுகவினர் மீள்வதற்குள் அடுத்த மரணம் நிகழ்ந்துள்ளது.  முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா முத்து (90 வயது ) உடல்நலக்குறைவால் ராசிபுரத்தில் காலமானார். 1968 முதல் 1974 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு – OPS , EPS இரங்கல் அறிக்கை ….!!

அன்பழகன் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அதிமுக சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக அதிகாலை காலமானார். இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் , திராவிட இயக்கத்தின் கொள்கைகள் ஆழமான […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்துக்கு பேரிழப்பு – முதல்வர் இரங்கல் …..!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார் இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் ,  பேராசிரியர் அன்பழகன் இறப்பு தமிழ் நாட்டிற்கே பேரிழப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீரமணி…. முத்தரசன்….. கே.எஸ் அழகிரி…. நாராயணசாமி….. கமல் இரங்கல் ….!!

மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக பொதுச்செயலாளரும் , திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணிக்கு காலமானார். வயது மூப்பு காரணமாக அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிர் பிரிந்தது.அவருக்கு வயது 98. […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சிகரம் சரிந்தது…. இமயம் உடைந்தது….. கண்ணீருடன் ஸ்டாலின்….. கைப்பட எழுதிய இரங்கல் …..!!

திமுகவின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் மரணத்தையடுத்து முக ஸ்டாலின் கண்ணீருடன் இரங்கல் எழுதியுள்ளார்.  திமுக பொதுச்செயலாளரும் , திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான காலமானார் பேராசிரியர் க.அன்பழகன் அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 98 . வயது மூப்பு காரணமாக அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிர் பிரிந்தது. திமுக உறுப்பினர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுச் செயலாளர்…. பேராசிரியர்…. 1922 முதல் 2020 வரை….. முழு வரலாறு ….!!

இன்று அதிகாலை 1 மணிக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவையொட்டி அவரின் முழு அரசியல் வரலாற்றின் தொகுப்பு. திமுக பொதுச்செயலாளரும் , திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான காலமானார் பேராசிரியர் க.அன்பழகன் அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 98 . வயது மூப்பு காரணமாக அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

நிகழ்ச்சிகள் இரத்து….. அரை கம்பத்தில் கொடி…. முக.ஸ்டாலின் அறிவிப்பு ….!!

திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மறைவு திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 1  மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அன்பழகனின் நினைவை போற்றும் வகையில் திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் , திமுகவின் கொடிகள் ஒருவாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுமென்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

45ஆண்டுகள் பொதுச் செயலாளர்…. இந்தியாவிலே அதிக நாள் பொறுப்பு வகித்தவர் ….!!

திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மரணமடைந்தது திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் உயிரிழந்திருக்கிறார். கிட்டத்தட்ட திமுக ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே 1957 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பேராசிரியர் கஅன்பழகன். இனமான பேராசிரியர் என்று திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியால் அன்போடு அழைக்கப்படுபவர். தமிழ் நிலத்தின் மீதும் , தமிழ் மக்கள் மீதும் அவருக்கு கொண்டிருந்த ஈர்ப்பு காரணமாக அவர் இனமான பேராசிரியர் என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் வரலாறு…..!!

திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தவர் பேராசிரியர் க. அன்பழகன். தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான இவருக்கு பிப்ரவரி 24ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச பொருத்தப்பட்டு தொடர்ந்து 12 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த செய்தி திமுக தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. க.அன்பழகன் வரலாறு :  […]

Categories
அரசியல் சற்றுமுன்

BREAKING : திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் காலமானார் ….!!

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் மரணமடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் பொதுச் செயலாளரராக இருந்தவர் க.அன்பழகன். 1977 முதல் திமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான இவருக்கு பிப்ரவரி 24ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச பொருத்தப்பட்டு தொடர்ந்து 12 நாட்களாக அவருக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : சற்று நேரத்தில் அப்பல்லோ வருகின்றார் முக.ஸ்டாலின் …..!!

அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. க.அன்பழகன் 1977 முதல் திமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவரான இவருக்கு பிப்ரவரி 24ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு செயற்கை சுவாச பொருத்தப்பட்டு தொடர்ந்து 12 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மோதல்…. சண்டை…. சீண்டிய பாஜககாரர்…. உதவிய திமுக எம்.பி ….!!

தன்னுடன் கருத்து மோதலில் ஈடுபட்ட பாஜககாரருக்கு உதவிய திமுக எம்.பி செந்தில்குமாரைஅனைவரும் பாராட்டி வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செந்தில்குமார். இவர் சமூகவலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க கூடியவர் என்று அனைவருக்கும் தெரியும். சமூகவலைத்தளம் மூலம் மக்களின் குறைகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தை பிரச்சனையையும் தீர்த்து வைத்துள்ளார். கஷ்டப்படுபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுவரை 20க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்பிய காங்கிரஸ்…. கைவிரித்த தளபதி…. வெளிப்படுத்திய அழகிரி ….!!

முக.ஸ்டாலினிடம் மாநிலங்களவை சீட் கேட்டதற்கு கொடுக்க மறுத்து விட்டதாக கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி கூறும்போது , தமிழ்நாட்டில் நடைபெறும் சிஏ போராட்டத்தை அரசு ஒடுக்குகிறது. அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மாநிலங்களவை சீட்டு பங்கீட்டு கொள்வது குறித்து திமுகவுடன் எந்தவித உடன்பாடும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அவமானம்.!.. ”பெண் பாதுகாப்பற்ற மாநிலம்”….. இதயம் பதறுகிறது….. ஸ்டாலின் வேதனை ….!!

உசிலம்பட்டியில் அரங்கேறிய பெண் சிசு கொலையைக்கு முக.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலப்பட்டியில் வறுமையை காரணம் காட்டி 30 நாளான பெண் சிசு கள்ளிபால் கொடுத்து கொல்லப்பட்டதற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் , பெண்மையைப் போற்றும் தமிழகத்தின் பண்பாட்டுப் பெருமைக்கு அவமானமாக மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவது வேதனையளிக்கிறது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்காணூரணி அருகே புள்ளநேரி கிராமத்தில் இரண்டாவதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பெற்றோரே கள்ளிப்பால் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”MPக்கள் சஸ்பெண்ட்டை திரும்ப பெறுங்கள்” முக.ஸ்டாலின் ட்வீட் …!!

காங்கிரஸ் எம்.பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற வேண்டுமென்று முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடத்துவதற்கான  கூட்ட தொடர் கடந்த திங்கள் கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆனால் மக்களவை, மாநிலங்களவையில் டெல்லி கலவரம் குறித்து விவாதிக்க வேண்டுமென்று காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் ஓம்பிர் லா இருக்கையை முற்றுகையிட்டு, சபாநாயகர் இருக்கையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செயற்கை சுவாசகருவி… 2 வார தீவிர கண்காணிப்பு…. அன்பழகன் கவலைக்கிடம் …!!

திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் திமுகவினர் கவலை அடைந்துள்ளனர். மூத்த தமிழக அரசியல்வாதி ஆன க.அன்பழகன் திராவிடக் கொள்கையில் அதிக பற்று கொண்டுள்ளதால் ஆரம்ப காலம் முதல்  திமுகவில் முக்கியப் பங்கு வகித்து வந்தார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றிய இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார். 97 வயதான இவர் வயது மூப்பு , உடல் நலக்குறைவு காரணமாக சில வருடங்களாகவே அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருத்தணி அருகே திமுக அதிமுக மோதல் ….!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆர்கே பேட்டை ஒன்றிய குழு தேர்தல் தொடர்பாக திமுக அதிமுக முதல் ஆர்கே பேட்டை ஒன்றியத் தலைவர் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற ஏற்பட்ட போட்டியால் திமுக அதிமுகவினர் மோதலில் ஈடுபட்டனர். திமுக , அதிமுக தலா 8 கவுன்சிலர்களை பெற்றுள்ளதால் சுயேட்சைகளில் ஆதரவு பெற மோதல் ஏற்பட்டது. போலீசார் சமாதானம் செய்தனர் . இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல் முறையாக அதிகாரத்தை பயன்படுத்திய ஸ்டாலின்…. நிர்வாகிகளை நியமித்தார் …..!!

திமுகவின் பொதுச்செயலாளர் அதிகாரத்தை திமுக தலைவர் முக.ஸ்டாலின் முதல்முறையாக பயன்படுத்தியுள்ளார். க.அன்பழகன் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். தமிழக அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். திராவிடக் கொள்கையில் பற்று கொண்ட இவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் முக்கியப் பங்கு வகிக்கின்றார். இவர் 1977 முதல் திமுகவின் பொதுச் செயலாளராக உள்ளார்.கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டிருந்த க.அன்பழகன் அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார். இதனால் பொதுச்செயலாளர் அதிகாரத்தை முக.ஸ்டாலினுக்கு வழங்கும் வகையில் 2019ஆம் ஆண்டு நடந்த திமுக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

”நாளைய திமுக எம்.பிக்கள் கூட்டம் இரத்து” தொடர் மரணத்தால் சோகம் …!!

அடுத்தடுத்து நிகழ்ந்த திமுக எம்.எல்.ஏக்களின் மரணத்தால் திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவெற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ கே.பி.பி சாமி நேற்று உயிரிழந்ததை தொடர்ந்து இன்று வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் இயற்கை எய்தினார். இரண்டு நாட்களில் அடுத்தடுத்து திமுக உறுப்பினர்கள் மரணமடைந்ததால் திமுகவினர் அதிர்ந்து போயுள்ளனர். இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நாளை நடக்க இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2 நாள்… 2 மரணம்…. 98 ஆக குறைந்தத பலம்…. துவண்டுள்ள திமுக …!!

கடந்த இரண்டு நாட்களில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மரணமடைந்துள்ளதால திமுகவினர் துவண்டுபோயுள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களை பெற்று வலுவான எதிர்க்கட்சியாக திமுக இருந்து வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக திமுகவினர் அனைவரும் நொந்துபோயுள்ளனர்.  நேற்று சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ,  கே.பி.பி.சாமி  (58)   உடல் நலக்குறைவால் திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது.இவர் 2016  தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு   செய்யப்பட்டார். தமிழக அமைச்சராக இருந்த  […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING : குடியாத்தம் திமுக எம்.எல்.ஏ காலமானார் ….!!

திமுகவின் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காத்தவராயன் உயிரிழந்துள்ளது அக்கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காத்தவராயன். அவர் தற்போது இருதய அறுவை சிகிச்சை ஒரு மாதத்துக்கு முன்பாக செய்து கொண்டார்.  கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலம் குன்றி இருந்த நிலையில் தற்போது காலமாகியுள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக வினர் வருகை தந்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவுக்கு எதிரான ”சக்திவாய்ந்த முதல்வர் பினராய் விஜயன்” நாராயணசாமி புகழாரம் ….!!

பினராய் விஜயன் மிகப்பெரிய சக்தி வாய்ந்த முதலமைச்சராக விளங்குவதாக புதுவை முதல்வர் நாராயணசாமி புகழாரம் சூட்டியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் , தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றது. டெல்லியில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்து 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். கேரளா போன்ற பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இதனை கண்டித்து தீர்மானம் ஏற்றப்பட்டது. இந்நிலையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிகாரத்துக்கு வர என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்…. பாஜகவை சீண்டிய நாராயணசாமி …..!!

அதிகாரம் வேண்டுமானால் பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று புதுவை முதல்வர் எச்சரித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், CAA சட்டத்தை எதிர்த்து பாஜக கூட்டணியில் உள்ள அகாலிதளம் இந்த சட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுகிறார்கள். பீகாரில் பாஜக கூட்டணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடிக்கு 3 விஷயம் சொல்கிறேன் – அறிவுறுத்திய புதுவை முதல்வர் ..!!

CAAவை எதிர்த்து மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நாராயணசாமி கலந்து கொண்டு பேசினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரு முதலமைச்சர் இருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களுக்கு அதிகாரம் இல்லை…. எங்களுக்கு சொல்லாதீங்க – புதுவை முதல்வர் ஆவேசம் …!!

மதம் குறித்து மோடியோ , அமித்ஷாவோ எங்களுக்கு சொல்லி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை என புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில், இந்த நாட்டில் 7 யூனியன் பிரதேசங்கள் இருக்கின்றன. புதுச்சேரி மற்றும் டெல்லியில் சட்டமன்ற உள்ள யூனியன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பாஜகவுக்கு முட்டு கொடுக்கின்றது – நாராயணசாமி விமர்சனம் …!!

CAA சட்டம் நிறைவேற்ற அதிமுக பாஜகவுக்கு முட்டு கொடுத்துள்ளது என்று நாராயணசாமி விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது.  இதில் கலந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கொண்டு பேசிய புதுவை முதல்வர் நாராயணசாமி பேசுகையில் , CAA சட்ட மசோதா மக்களவை நிறைவேற்றி மாநிலங்களவைக்கு வந்தபோது அதற்கு பெரும்பான்மை இல்லாத நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் முட்டுக் கொடுத்து பாராளுமன்ற மேலவையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ, கே.பி.பி.சாமி காலமானார்

திமுக எம்.எல்.ஏ ,கே.பி.பி சாமி உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ,  கே.பி.பி.சாமி  (58)   உடல் நலக்குறைவால் திருவெற்றியூர் கேவிகே குப்பம் அருகே உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. எம்.எல்.ஏ கேபிபி சாமி, 2016  தேர்தலில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு   செய்யப்பட்டார். தமிழக அமைச்சராக இருந்த  எம்.எல்.ஏ கே.பி.பி சாமி 2006- 2011 தமிழக மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்தார். திமுக. மீனவர் அணி செயலாளராகவும் இருந்து வந்தார்.  

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மன்னிப்பு கேளுங்க…. ஜெயிலுக்கு போயிருவீங்க…. EPSயை விளாசிய ஸ்டாலின் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டுமென்று முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் , அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த அனுமதிக்க கூடாது என்று நான் சட்டமன்றத்திலே கேட்டேன். குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

இது கூரான கத்தி…. பதம் பார்க்கும்…. பசி தீராது…. முக.ஸ்டாலின்  கண்டனம் …!!

மதமும் , ஜாதியும்  இரு கூரான கத்திகள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில் , மதமாக இருந்தாலும் சரி , சாதியாக இருந்தாலும் சரி அது இரண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முஸ்லீம் மக்களுக்கு பாதிப்பு…. எடப்பாடி ஒப்புதல் வாக்குமூலம் ….. ஸ்டாலின் விமர்சனம் …!!

CAA , NPR சட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு இருக்கின்றது என்று முதல்வர் ஒப்புதல் அளித்ததாக முக.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.  இதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் , புதுச்சேரி முதலமைச்சர் ராமசாமி இந்து ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் வராது என்று முதலவர் எடப்பாடி […]

Categories

Tech |