ஜோ பைடன் முன்னிலை பெற்று வந்த ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகமே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்ற அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து இழுபறி இருந்து கொண்டே இருக்கின்றது. தற்போதைய அதிபர் டொனால்டு தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளார். அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 264 தேர்தல் சேவை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறும் தருவாயில் உள்ளார். இன்னும் 6 வாக்குகள் […]
Tag: DonaldTrump
அமெரிக்க தேர்தல் முடிவுகளில் நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 129 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 90க்கும் வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்று பின்தங்கிஇருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே குடியரசு […]
கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே பயம் காட்டி வருகின்றது. இதுவரையில் 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா வைரசால் 150க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது. அமெரிக்கா கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு […]
இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்கும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மோடி பேசிய போது ,மீண்டும் வரலாறு மீண்டும் படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். ஐந்து மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் இருந்து என் பயணத்தை தொடங்கியது போல ‘நமஸ்தே ட்ரம்ப்பில் இருந்து அவரின் பயணத்தை தொடங்கியுள்ளார். உலகின் பெரிய ஜனநாயக நாடு உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களை வரவேற்பதில் ஒட்டுமொத்த நாடும் உற்சாகம் […]
தேநீர் விற்ற மோடி இன்று பிரதமராகியுள்ளார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்புடன் தனி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் இன்று காலை அகமதாபாத் விமான நிலையம் வந்திறங்கினார். இந்தியாவின் பாரம்பரிய நடனம் மூலம் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்தை கண்டு ரசித்தார். அதைத்தொடர்ந்து உலகிலே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் மொடீரா மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ […]
டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி (உபரி) வர்த்தகம் 2019ஆம் ஆண்டில் மேலும் அதிகரிப்பை எட்டிள்ளது. இதன்படி, 2019இல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன் யூரோ அளவுக்கு இறக்குமதியும் அதைவிட அதிகமாக 384.4 பில்லியன் யூரோ அளவுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. 2018ஆம் ஆண்டை விடவும் இது 11 சதவீத அதிகரிப்பாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள […]
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் இந்திய வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். ஒடிசா மாநிலத் தலைநகர் புபனேஸ்வரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதிகளில் இடதுசாரி தொண்டர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பயணத்துக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள். அது டெல்லியாகவோ அல்லது குஜராத்தாகவோ இருக்கலாம். முதலில் அமெரிக்கா அழுத்தம் […]
இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன் மனைவி மெலனியா ட்ரம்ப்புடன் அகமதாபாத்துக்கு செல்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்தப் பயணித்தின் போது, தலைநகர் டெல்லிக்கும், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கும் செல்ல உள்ளனர். […]
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பிரதியை (நகலை) எடுத்து நான்சி பெலோசி கிழித்து விட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டனில் இருக்கும் கேபிட்டல் கட்டிடத்தில், செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக் கூட்டம் (ஸ்டேட் ஆப் தி யூனியன்) நடைபெற்றது. இதில் அதிபர் டொனால்டு டிரம்ப் 3-ஆவது முறையாக உரையாற்றினார். சுமார் ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் ட்ரம்ப் உரையாற்றினார். இந்த உரையின் போது, பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி […]
அமெரிக்கா – ஈரான் நாடுகளுக்கிடையே ஏற்பட்டிருக்கும் மோதலால் உலகளவில் பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவிற்குமிடையில் அதிகரித்துவரும் போர் பதற்றங்களால் உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்துள்ளது. மேலும் டோக்கியோ பங்குச்சந்தை கிட்டத்தட்ட இரண்டு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. ஹாங்காங்கின் பங்குச்சந்தை ஏறக்குறைய ஒரு விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. அதேபோல் ஷாங்காய், சிட்னி, தென்கிழக்கு ஆசிய சந்தைகளும் சரிவை சந்தித்தன. ஈராக்கில் உள்ள இரண்டு விமானத் தளங்களுக்கு எதிரான ஏவுகணைத் தாக்குதல் பற்றிய செய்தி வெளியான நிலையில், டோக்கியோ […]
உலக நாடுகள் ஈரானை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானம் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரான் பாதுகாப்புப் படை தளபதியும், அந்நாட்டு போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப் பதிலடி தரும் விதமாக, ஈராக்கில் அமெரிக்கப் படைகள் முகாமிட்டிருக்கும் அல் ஆசாத் மற்றும் இர்பில் ஆகிய இரண்டு விமானத் தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைத் […]
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆப்கானிஸ்தானுக்கு ரகசியமாகச் சென்று, அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களைச் சந்தித்து ‘தாங்கிஸ் கிவ்விங்’ எனப்படும் நன்றி கூறும் நிகழ்வில் பங்கெடுத்தார். உள்நாட்டுப் போரில் உழன்றுகிடக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று ரகசியப் பயணம் மேற்கொண்டார்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே அமைந்துள்ள பக்ரம் விமானப் படை தளத்தில் நேற்று இரவு 8.30 மணிக்கு தரையிறங்கிய ட்ரம்ப், அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களுடன் சேர்ந்து ‘தாங்க்ஸ் கிவ்விங்’ எனப்படும் நன்றி […]
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை அடுத்த வாரம் முதல் மக்கள் முன்னிலையில் நடைபெறும் என ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர். 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார். இந்தச் சூழலில், ஜோ பிடன், அவரது மகன் ஹண்டர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸெலென்ஸ்கியை (Vlodimir Zelensky) ட்ரம்ப் வலியுறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. […]
அமெரிக்கா-சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவுக்கு வருமாறு அதிபர் ட்ரம்ப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்புவிடுத்துள்ளார். அமெரிக்கா-சீனா இடையே கடந்த ஓராண்டாக வர்த்தகப்போர் நிலவிவருகிறது. இது உலக பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்த வர்த்தகப் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் பலகட்டங்களாக நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை தொடர் தோல்வியை சந்தித்துவந்தன. இதனிடையே, இருதரப்பு பிரதிநிதிகள் இடையே கடந்த மாதம் வெள்ளை மாளிகையில், நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் […]
தீபாவளி பண்டிகையையொட்டி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீபாவளி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும்விதமாக வெள்ளை மாளிகையில் தீபத்தை ஏற்றிவைத்த அதிபர் ட்ரம்ப், தீபாவளி திருநாளை அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வாழ்த்துக் கூறியுள்ளார். இதையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “அமெரிக்கா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது நமது நாட்டின் மிக முக்கியக் கொள்கையான மத சுதந்திரத்தை பேணும்வகையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இந்திய மக்கள் தீபாவளி கொண்டாடும் காலம் மிகவும் […]
ஹாங்காங்கை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் சீனா தங்களது படைகளை குவித்துள்ளதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்கிறது. ஆகவே அரசின் இந்த முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அரசு தனது முடிவை திரும்ப பெற்றது. இருப்பினும் ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் […]
அமெரிக்காவில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு அதிபர் டிரம்ப் திடீரென சென்றதால் மணமக்கள் உட்பட அங்கிருந்தவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பி.ஜே. மொங்கெல்லி (PJ Mongelli) தனது திருமணத்திற்கு வரும்படி அழைப்பிதழ் விடுத்திருந்தார். அதிபர் டிரம்ப் திருமண நிகழ்ச்சிக்கு வருவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் திடீரென நியூ ஜெர்ஸியில் நடந்த அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு டிரம்ப் வந்து மணமக்கள் மற்றும் அங்கிருந்த அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்தார். அதிபர் டிரம்பைக் கண்டதும் விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் யூ.எஸ்.ஏ, யூ.எஸ்.ஏ […]
இம்ரான்கானை வரவேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் யாருமே வரவில்லை என்று பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் அதிபர் அதிபர் டொனால்டு டிரம்பை நாளை சந்தித்துப் பேசுவதற்கு இம்ரான்கான் 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றார். இம்ரான் கான் தனிப்பட்ட விமானத்தில் செல்லாமல் சிக்கன நடவடிக்கையாக பயணிகள் விமானத்தில் சென்று டல்லாஸ் விமான நிலையத்தில் இறங்கினார். ஆனால் இம்ரான்கானை வரவேற்பதற்கு அமெரிக்க அதிகாரிகள் யாருமே வரவில்லை. பாக். வெளியுறவு அமைச்சர் குரேஷி, மற்றும் அமெரிக்காவுக்கான பாக். […]
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடில் மோடி சந்திப்பை எதிர் நோக்கியுள்ளேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். நாளை ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் 14 வது ஜி 20 உச்சி மாநாடு நடைபெறுகின்றது. இதில் அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 […]
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஒர்லாண்டோவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை துவங்கினார். அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும். இதன்படி, டொனால்டு டிரம்ப் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு, ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியினால் அமெரிக்காவின் 45-வதுஅதிபராக டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். சமீபத்தில் அதிபர் டிரம்ப் தான் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3 -ஆம் […]
மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது . மக்களவைத் தேர்தல் முடிந்ததை அடுத்து அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரு நாட்டு உறவுகள் பற்றி சந்தித்துப் பேசயிருக்கிறார்கள். 17 வது மக்களவை தேர்தலில் பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் தொலைபேசி மூலமாக வாழ்த்து […]
நிலவிற்கும், செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்பும் திட்டங்களுக்கு, 1.5 லட்சம் கோடி ரூபாய் நிதியை, அமெரிக்க அரசிடம், நாசா விண்வெளி ஆய்வு மையம் கேட்டுள்ளது. நாசா விண்வெளி ஆய்வு மையம், அடுத்த 10 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்று திரும்பும் வகையிலும், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் வகையிலும் விண்கலம், ராக்கெட்டுகளை தயாரிக்கும் முதற்கட்டப் பணியில் இறங்கியுள்ளது. இதற்க்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நிலவில் தங்கியிருந்து அங்குள்ள மேலும் பல இடங்களில் ஆய்வு மேற்கொள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம் முனைப்பு […]
பெயரை மாற்றிக் கூறிய டொனால்ட் ட்ரம்ப்_பை கிண்டல் செய்யும் விதமாக தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார் ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சியில்ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக்_கும் பாங்கேற்றார். இதில் டொனால்டு ட்ரம்ப் பேசியபோது டிம் குக் என்ற பெயரை குக் ஆப்பிள் என்று மாற்றிக்கூறினர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியது . நெட்டிசன்கள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்_பை கிண்டல் செய்யும் விதமாக மீம்ஸ் செய்து வந்தனர். இதையடுத்து ஆப்பிள் […]