அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிருமி நாசினியை முறையற்ற முறையில் பயன்படுத்துபவர்களுக்கு தான் பொறுப்பு இல்லை என்று கூறி சமாளித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ட்ரம்ப் தலைமையிலான அரசு என்ன செய்வது என்றே திணறி வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது, கொரோனா வைரசை குணப்படுத்துவதற்கான வழியாக லைசால் மற்றும் டெட்டால் ஆகிய கிருமி நாசினிகளை உடலுக்குள் செலுத்தி பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து […]
Tag: #donaldtrumph
கொரோனா அச்சுறுத்தலால் 15 நாட்களுக்கு பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என பொது மக்களை கேட்டுக்கொண்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சர்வதேச அளவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு அமெரிக்காவில் இதுவரை 91 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 4,700க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதை […]
அமெரிக்க தாக்குதலுக்கு பயந்து போய் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவரான மசூத் அசார் ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். பாகிஸ்தானில் பாஹாவால்புர் சிறையில் மசூத் அசார் அடைக்கப்பட்டிருந்தான். ஆனால் தற்போது அவன் திடீரென ராவல்பிண்டி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளான். காரணம், அமெரிக்கா அவனுக்கு குறி வைத்தாக சொல்லப்படுகிறது. ஆம் , அமெரிக்காவுக்கும், தாலிபான் தீவிரவாத இயக்கத்திற்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் காலாவதியாகி விட்டதை கிண்டலடித்துப் பேசினான் மசூத் அசார். அவன், ஓநாயின் வால் அறுந்து ஓடி விட்டது […]
அமெரிக்காவில் ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பு குறைவே என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் 92 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இதுவரையில் ஒட்டு மொத்தமாக கொரோனாவின் கோர பிடியில் சிக்கி 3,380 பேர் இறந்துள்ளனர். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.. நாளுக்குநாள் பலியானோரின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனா முன்பை விட தற்போது கொரோனாவை கட்டுக்குள் […]
அமெரிக்காவின் டென்னிசி (Tennessee) பகுதியில் சூறாவளி தாக்கியதில் கடுமையான சேதமடைந்த இடங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அமெரிக்காவின் டென்னிசி பகுதியில் கடந்த 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அடுத்தடுத்து வேகமாக சூறாவளி தாக்கியது. மிக வேகமாக சுழன்று அடித்த சூறாவளியால் டென்னிசி பகுதி நிலைகுலைந்து சின்னாபின்னாமாக தற்போது காட்சியளிக்கிறது. இந்த தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். அங்கு இருந்த ஏராளமான வீடுகளின் கூரைகள் சூறாவளியின் தாக்கத்தால் பிய்த்து எறியப்பட்டு கிடக்கின்றன. இதனால் மக்கள் […]
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக 100 கோடி செலவிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தநிலையில் மாநில அரசு இத்தனைகோடி ரூபாய் மட்டுமே செலவிட்டதாக குஜராத் முதல்வர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 24-ஆம் தேதி அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவருடன் டிரம்ப் மனைவி மெலனியா, மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் வந்திருந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அதிபர் ட்ரம்புக்கு […]
அமெரிக்க நாட்டின் அலாஸ்கா (Alaska) வனத்தில் வாழும் கிரிஸ்லி பழுப்பு நிற கரடிகளை (Grizzly Bear) வேட்டையாடுவதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன் 1000 டாலர் கட்டணம் கட்டி அனுமதி வாங்கியுள்ளார். ஆம், இனி அவர் காட்டுக்குள் புகுந்து விலங்குகளை வேட்டையாடலாம். அமெரிக்காவில் மான்கள், கரடிகள் மற்றும் காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்குகிறது. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு தான் இது பொருந்தும். அந்த வகையில் வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட் (Seward) […]
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா- அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக 24 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார். இதையடுத்து அதிபர் டிரம்ப் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியமான 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுதுறை அமைச்சக செய்தி […]