கடும் வறட்சியால் 55 யானைகள் உயிரிழந்ததையடுத்து ஜிம்பாப்வே அரசு, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 30க்கும் மேற்பட்ட யானைகளை விற்பனை செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் கடுமையாக பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதனால் அந்த நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி தலைவிரித்தாடுகிறது. அந்த நாட்டின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உணவின்றி தவித்து வருகின்றனர்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம், விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கடந்த இரண்டு மாதங்களில் அங்கு 55 யானைகள் பட்டினியால் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் […]
Tag: #Drought
தமிழகத்தின் தண்ணீர் பஞ்சம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கிரண்பேடி பதிவிட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னை மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் […]
ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தற்போது சென்னை மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. வறட்சிக்கு காரணம் […]
தமிழர்களின் வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு, ஆதிக்கத்தின் அடையாளம் என்று மு.க ஸ்டாலின் கிரண் பேடிக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார் தற்போது சென்னை மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் […]
வறட்சியால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை 25 முதல் 40% வரை அதிகரித்துள்ளது. கோடை வெயிலின் கொடூர தாக்கத்தினால் ஏரிகள், குளங்கள், மற்றும் ஆறுகளில் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த வறட்சியால் விவசாயிகள் பெரிதும் கவலைப்படுகின்றனர். முக்கியமாக காய்கறிகளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் இந்த வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். வறட்சி காரணமாக காய்கறிகளின் விளைச்சல் மிக குறைந்துள்ளது. இதன் காரணமாக சென்னையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் […]
தூத்துக்குடியில் காய்கறிகளின் இருமடங்காக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி சந்தைக்கு , திண்டுக்கல், நெல்லை, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் விளையும் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன .ஆனால் கடும் வறட்சியின் காரணமாக உற்பத்தி குறைந்ததோடு, காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. இதன் விளைவாக தக்காளி, கேரட்,அவரை ,பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது .இதனால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் .
விவசாயிகளுக்கு காப்பீடு திட்டத்தின் மூலம் உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பெருங்குடி பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது, விவசாயிகளுக்கு உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று கூறினார் . மேலும் விவசாயிகளின் நலம்காத்து ,குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நீர் நிலைகள் மேம்பாடு திட்டம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஏய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.
தேனி சந்தையில் ,வறட்சியின் காரணமாக,காய்கறிகள் விலை பெரிதும் உயர்ந்துள்ளது. வறட்சியின் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதால் காய்கறி விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான காய்கறிகள் விலை பெரிதும் உயர்ந்துள்ளது.தேனி உழவர் சந்தையில் , நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும் அவரைக்காய் ரூ.74-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.24 , பட்டர் பீன்ஸ் ரூ.135 , கத்தரிக்காய் ரூ.22, புடலங்காய் ரூ.30 , பாகற்காய் ரூ.38 , […]
குஜராத்தில் கோர்வாட் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாக அவ்வூர் பெண்கள் தெரிவித்துள்ளனர். கோடை வெயிலால் இந்தியாவில் பல மாவட்டடங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கோர்வாட் கிராமத்தில் வறட்சி வேகமாக பரவிவருகிறது. இங்குள்ள பெண்கள் பகலில் வேலைக்கும், இரவில் தண்ணீரை தேடியும் அழைக்கின்றனர். இது குறித்து அந்த கிராம பெண்கள் கூறுகையில், ”பகலில் வேலைக்கு சென்று இரவு வீட்டுக்கு வரும் இந்த பெண்கள், வீட்டிற்கு வந்ததும் உடனே தண்ணீரை தேடி இரவு […]