நேபாளத்தில் இன்று மிகப்பெரிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதில் 6 பேர் பரிதபமாக உயிரிழந்துள்ளனர். நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி, மணிப்பூர் மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
Tag: Earthquake
பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் கிராம மக்கள் அலறியடித்து கொண்டு வீடுகளை விட்டு ஓடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொன்ரங்கி கீரனூர் கிராமத்தில் நேற்று அதிகாலை பயங்கர சத்தத்துடன் 3 முறை நில அதிர்வு ஏற்பட்டதால் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த கிராமத்தில் இருக்கும் பல வீடுகளில் நில அதிர்வு காரணமாக மேற்கூரை ஓடுகள் உடைந்து விழுந்தது. இதனை அடுத்து […]
இந்தோனேசியா நிலநடுக்கத்தால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மெளமரே என்ற இடத்திலிருந்து வடக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள், அலுவலகங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வீதிகளில் ஓட்டம் பிடித்தனர்.. 7.6 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக் கூடும் என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. […]
ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தென் கிழக்கு கடற்கரை பகுதியில் மிகவும் பலம் வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 7.1 ஆகப் பதிவாகி உள்ளதாகவும் சுமார் 49 மைல் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத […]
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஜப்பானில் உள்ள நமீ நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, இந்த நிலநடுக்கமானது நமீ நகரில் இருந்து 90 கிலோ மீட்டர் கிழக்கு வடகிழக்கில் மையம் கொண்டிருந்தது. மேலும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. […]
பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொது மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களான டெல்லி, ஜம்மு மற்றும் பஞ்சாப் போன்ற இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொது மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸில் இரவு 10:34 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருக்கிறது என தேசிய நிலநடுக்க மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிலநடுக்கமானது […]
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கும் பிஜிக்கும் இடையே கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறும்போது, இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி இருந்ததாகவும், இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி உருவாகும் அச்சம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் நியூசிலாந்து பிஜி மற்றும் வனுவாட்டுவின் […]
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் டெல்லியில் நில அதிர்வால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சம் நிலவி வரும் நிலையில் ஏப்., 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 1,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிழக்கு டெல்லியை மையமாகக் […]
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவுகளில் கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி இருப்பதால் இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் பயங்கர சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல ரஷ்யாவின் குரில் […]
இந்தோனேஷியாவில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நில நடுக்கத்தால் பலர் தங்கள் வீடுகளையும், உயிர்களையும் இழந்துள்ளனர். அதன்படி அதிகாலை 3.24 மணியளவில் வடமேற்கு இந்தோனேசியாவின் சுமார் 229 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சயூம்லாகி பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கமானது 157 கி.மீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]
கியூபா மற்றும் ஜமாக இடையே அடுத்தடுத்து ஏற்பட்ட இரு பயங்கர நிலநடுக்கங்களால்சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 2.7 to 6.12 அளவில் நிலநடுக்கங்கள் கியூபா மற்றும் அதற்கு அருகில் உள்ள தீவுப்பகுதிகளில் பதிவாகி இருப்பதாக அமெரிக்க இயற்கை பேரிடர் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஆழிப் பேரலைகள் தாக்கலாம் என அஞ்சப்படும் சூழ்நிலையில், நிலநடுக்கம் காரணமாக ஜமாய்க்கா மற்றும் மியான்மரில் மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியேறினர். தொலைதூரத்தில் உள்ள புளோரிடாவில் சுனாமி எச்சரிக்கையால் அச்சம் […]
கிழக்கு துருக்கியில் வெள்ளிக்கிழமை மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 36 பேர் இறந்தனர் மற்றும் 1,607 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் கிழக்கு எலாசிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரிஸ் நகருக்கு அருகே 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் குறைந்தது 10 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன என்று உள்துறை அமைச்சர் சுலிமான் சோய்லு தெரிவித்தார். சுமார் 1,607 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை நிர்வாகத் தலைவர் (AFAD) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இடிந்து […]
துருக்கியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தார். துருக்கி நாட்டின் கிழக்குப் பகுதியில் நேற்று இரவு திடீரென கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் தலைநகர் அங்காராவில் இருந்து சுமார் 750 கி.மீ தொலைவில், எலாஜிக் மாகாணம் சிவிரைஸ் நகரில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலநடுக்கும் ரிக்டர் அளவுகோலில் 6.8 அலகாக பதிவாகியிருந்தது. இதில் அருகில் உள்ள 4 மாகாணங்களிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் காரணமாக எலாஜிக் […]
தலைநகர் டெல்லியிலும் சில வட மாநிலங்களிலும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரமான டெல்லி மற்றும் வட மாநிலங்களில் திடீரென நில அதிர்வு உண்டானது. மேலும், ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இந்துகுஷ் என்ற மலை பகுதியிலும் 190 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.3 என்று ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் உள்ள என்.சி.ஆர். தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் சில வடமாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதன் […]
அல்பேனியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 21 பேர் உயிரிழந்தனர். மேற்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் நேற்று சத்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டது. ரிக்கர் அலகில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் ஏராளமான கட்டடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதுவரை 21 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள அல்பேனியா அரசு, 350 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷிஜாக் நகர் அருகே சுமார் 30 கி.மீ., ஆழத்தில் இந்த நிலநடுக்கம் […]
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள கிழக்கு மாகாணம் மலுகுவில் இருக்கும் அம்பான் நகரில், நேற்று அதிகாலை திடீரென பெரும் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உருவான நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 6. 5 ஆக பதிவானது. இதில் அப்பகுதி முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டது. அங்குள்ள பல வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு மட்டுமில்லாமல் சில இடங்களில் பெரிய நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் மக்களின் […]
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் நாட்டின் ஹோகைடோ பகுதியில் அந்நாட்டின் நேரத்திற்கு அதிகாலை 5.16 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. எவ்வித சேதாரமும் தெரிவிக்கப்படாத நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் சொல்லப்படுகின்றது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். பல்வேறு தீவுகளை உள்ளடக்கியது பிலிப்பைன்ஸ். இந்த நாட்டின் லூஜன் தீவின் வடக்கே இத்பயாத் நகரின் வடகிழகில் 12 கி.மீ. தொலைவில் 12 கி.மீ. ஆழத்தில் இன்று அதிகாலை சரியாக 4.16 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ரிக்டர் அளவு கோளில் 5.4 ஆக பதிவானதாக புவியில் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதனால் வரலாற்று சிறப்பு வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருந்த வீடுகள் இடிந்து விழுந்தன. அதிகாலை வேளையில் மக்கள் […]
அருணாச்சல பிரதேச ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவாகியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இன்று அதிகாலை 4.24 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தல் கட்டிடங்கள் , வீடுகள் ஆதித்ததாக உணரப்படுகின்றது. மக்கள் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த வேளையில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் மக்கள் பீதியில் உறைந்தனர். இது ரிக்டர் அளவு கோளில் 5.5_ஆக பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் […]
இந்தோனோஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 5.7_ஆக பதிவாகியுள்ளது. சமீபத்தில் இந்தோனேசியாவின் மாலுக்கு தீவுப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7.3 என்று பதிவாகியது. இத்தோனோசியா என்றாலே அடிக்கடி ஏதாவது இயற்க்கை சீற்றத்துக்கு பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது . இந்தோனேசியா பூமியின் ‘நெருப்புக் கோளம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது தான் காரணம். இதனால் அந்நாட்டில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள பாலி பிராந்திய பகுதியில் இரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. […]
ஆஸ்திரேலியா புரூம் நகரின் ஏற்பட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் புரூம் நகரிற்கு மேற்கே சுமார் 210 கி.மீட்டர் தொலைவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகிள்ளது என்று ஐரோப்பிய மத்தியதரை பகுதி நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்படத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக பார்க்கப்படும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பொருட்சேதம் போன்ற […]
ஜப்பானின் நேஜ் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானின் நாட்டில் உள்ள கியூஷூ தீவின் ககோஷிமா நகரத்தில் நேஜ் பகுதியில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பதறிப்போன மக்கள் வீதிகளில் தன்சமடைந்தனர். மக்களுக்கு பீதியை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கம் நேஜ் பகுதியின் வடமேற்கே 174 கி.மீட்டர் தொலைவில் 237.7 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என்று சொல்லப்படுகின்றது. காலையில் ஏற்பட்ட நிலநடுக்க அளவு குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் , இது ரிக்டர் அளவில் […]
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே 10ம் தேதி ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மீண்டும் மற்றொரு பயங்கர நிலநடுக்கம் ஆண்டு ஜப்பானில் இன்று ஏற்பட்டுள்ளது. கடந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது ஆனால் அதனை விட பயங்கரமான நிலநடுக்கம் ஜப்பானில், யமகட்டா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஏற்பட்டு உள்ளது. இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த […]
அந்தமானில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை சரியாக 3 மணி 45 நிமிடத்தில் அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இலேசான நிலநடுக்கமாக ஏற்பட்ட இது ரிக்டர் அளவு கோளில் 4.9 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தால் அங்கு இருந்த அடுக்குமாடி கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டதில் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எவ்விதமான தகவலும் இல்லை.
சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கத்தால் 11 பேர் உயிரிழந்து , 122 பேர் காயமடைந்ததுள்ளனர். சீனாவில் உள்ள சிசுவான் மாகாணத்தில் நேற்று இரவு 10.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.இது ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவானது. பின்னர் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மீண்டும் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5.3 ஆக பதிவானது. தொடர்ந்து இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். நிலநடுக்கத்தில் உயரமான கட்டிடங்கள் […]
நிகோபார் ,மேற்கு வங்கத்தை தொடர்ந்து 3 வதாக பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தென்னமெரிக்க நாடான பெருவில் சில மணி நேரத்திற்கு முன் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் கட்டும் அதிர்வை சந்தித்து உள்ளன . இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவலில் கண்டறியப்பட்டுள்ளது. இன்று மட்டும் நிக்கோபார் மேற்குவங்கத்தை அடுத்து மூன்றாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் இது என்பது […]
சந்திரனில் அடிக்கடி நிகழும் நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகளால் சந்திரனின் மேற்பரப்பு சுருங்கி வருகிறது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். சந்திரனை சர்வதேச விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். அமெரிக்காவின் ‘நாசா’விண்வெளி ஆய்வு மையம் கடந்த 1969 மற்றும் 1977-ம் ஆண்டுகளில் சந்திரனுக்கு அப்பல்லோ விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. அந்த அப்பல்லோ விண்கலன்கள் சந்திரனின் மேற்பரப்பில் ஆய்வுகள் மேற்கொண்டதில் அதன் மேற்பரப்பு திராட்சை பழம் போல சுருக்கங்கள் நிறைந்து காணப்பட்டது. அதனை வைத்து விஞ்ஞானிகள் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். […]
ஈரானில் கெர்மான்ஷா மாகாணத்தில் இன்று மதியம் சுமார் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஈரானில் உள்ள கெர்மான்ஷா மாகாணம் மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இங்கு கடந்த 2016_ம் ஆண்டு நவம்பர் மாதம் சுமார் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இந்த பகுதியில் இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை கண்டு பயத்தில் மக்கள் அலறியடித்து தெருக்களுக்கு ஓடி வந்தனர்.
ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியூஷ் தீவில் திடிரென்று சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மியாசகி பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் மியாசகி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் தனது வீடுகளில் இருந்து வெளியேறினார். உள்ளூர் நேரப்படி காலை 8.48 மணியளவில் […]
நேற்று மாலை இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. நாகாலாந்தின் எல்லை பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் பதிவானது .அதில் 5 புள்ளி 4 ஆக பதிவாவாகியிருந்தது . இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிஷ்டவசமாக யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம், தொடர்ந்து கண்காணித்து வருகிறது .
இமாச்சல பிரதேசம் மண்டியில் இன்று நிலநடுக்கம் அதிர்ஷ்ட வசமாக எவ்வித சேதமும் ஏற்பட வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலபிரதேச மாநிலத்திலுள்ள மண்டியில் இன்று காலை 4.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு சுமார் 4.2 ஆக பதிவாகியுள்ளது. உயிர்சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்ததாக இந்நிலநடுக்கம் மண்டியில் வடகிழக்கு பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதல் முறையாக செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை படம் பிடித்து வெளியிட்டது நாசா ஆராய்ச்சி மையம். பல்வேறு நாடுகளால் ஆராய்ச்சி செய்யப்படும் கோள் செவ்வாய். கடந்த ஆண்டு ‘இன்சைட் ‘ என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பங்கள், நிலநடுக்கங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் கலிபோர்னியாவின் வாண்டன்பர்க் விமானப்படைத் தளத்தில் இருந்து செலுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி செவ்வாய் கிரகத்தின் உள்ளே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்த விண்கலத்தில் பதிவாகியுள்ளது. செவ்வாய் […]
பிலிப்பைன்சில் நாட்டின் பொடீகா நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பிலிப்பன்ஸ் நாட்டின் பொடீகா நகரில் நேற்று திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அந்நகரில் உள்ள பெரிய அடுக்குமாடி கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கியது. அதனால் அந்த பகுதியில் குடியிருந்த மக்கள் பயத்தில் உறைந்து போனார்கள். இதேபோல் பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி […]
இந்தோனேசியாவில் உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியா நாட்டில் உள்ள நுசா டெங்காரா மாகாணத்தில் இன்று அதிகாலை 4.54 மணிக்கு தீடிரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதனால்சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. தீடிரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பொது மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தினால் பொது மக்களுக்கோ […]