Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சரிந்து விழுந்த கல்லூரி கட்டிடம்… “6 பேர் படுகாயம்” கோவையில் பரபரப்பு..!!

கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர். கோவை அவிநாசி சாலையில் நடைபெற்று வரும் பிரபல பொறியியல் கல்லூரி ஒன்று புதிதாக பிளாக் என்று சொல்லப்படும் பெரிய கட்டிடம் ஒன்றை  கட்டி வந்துள்ளது. இந்த நிலையில் இதற்கான கட்டுமான பணிகள் இன்று நடைபெற்று வந்தன. அப்போது சிமெண்ட் கொண்டு நிரப்படும் மேல் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. […]

Categories
அரசியல் காஞ்சிபுரம் மாநில செய்திகள்

“பால் விலை”உற்பத்தியாளர்கள் சொன்னதால் தான் விலை ஏற்றினோம்… அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..!!

உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டதால்தான் பாலின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி முகமானது காஞ்சிபுரம் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியது. மூன்று நாட்களுக்கு மேல் இந்த பயிற்சி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்கள் எளிதாக கணிதத்தை கற்றுக் கொள்ளும் வகையில் மிக விரைவில் தமிழகம் முழுவதும் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். அவரை […]

Categories
அரசியல் தேனி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த கல்வி மாவட்டமாக தேனி மாறும்… துணைமுதல்வர் OPS நம்பிக்கை..!!

இன்னும் 5 ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மற்றும் கல்வியில் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக தேனி உருவாகும் என்று துணைமுதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் பழனிசெட்டி பகுதியில் ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் முறை நிதி உள்ளிட்டவற்றை வழங்கும் விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பெண்களுக்கு நிதிகளை வழங்கினார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“கல்லூரிகளில் புதிய பேராசிரியர்கள் நியமனம்” … தமிழக அரசு உத்தரவு ..!!

தமிழகத்தில் அரசு கலை , அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் புதிய உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன . இந்த காலி பணி இடங்களுக்கு ஆண்டுதோறும் பதினோரு மாதங்களுக்கு மட்டும் தொகுப்பூதியத்தில் உதவி பேராசிரியர் பணி அமர்த்தப்படுகின்றனர் . 11 மாதங்களுக்கு பின் நியமனம் மீண்டும் மாற்றி அமைக்கப்படுகிறது . அந்த வகையில் இந்த ஆண்டு 2653 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழக ஆசிரியர்களின் எண்ணிக்கை 5,65,639… கல்வித்துறை புள்ளிவிவரத்தில் தகவல்..!!

தமிழகத்தில் மொத்தம் 5,65,639 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக பள்ளி கல்வித்துறை புள்ளிவிவரப் பட்டியலில் தெரிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் புள்ளி விவரக் குறிப்பில் தற்போதைய ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளிகளில் 62,979 ஆசிரியர்களும் நடுநிலைப்பள்ளிகளில் 49,547 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். உயர்நிலைப்பள்ளியில் 31,531 ஆசிரியர்களும் மேல்நிலைப் பள்ளியில் 82,033 ஆசிரியர்களும் பணியாற்றி வருகிறார்கள். மொத்தமாக அரசுப் […]

Categories
மாநில செய்திகள்

“புதிய கல்விக்கொள்கையை நான் ஆதரிக்கிறேன்” ..சரத்குமார் பேட்டி ..!!!

“தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய புதிய கல்விக்கொள்கை அமலாக வேண்டும்” என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரான  சரத்குமார் தெரிவித்துள்ளார்.   டெல்லியில் ரயில்வேதுறை  அமைச்சர் பியூஸ்கோயலையும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் ஆகியோரை சரத்குமார் சந்தித்து பேசினார் .  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,விருதுநகரில் அண்மையில் திறக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை பொதுமக்கள் கண்டுசெல்லும் வகையில், அனைத்து ரயில்களும் விருதுநகரில் நின்று செல்லும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் உலக கல்வி தரத்திற்கு இணையாக, […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இணையத்தில் வெளியீடு ….!!

தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு நடத்தும் பணியிடங்களுக்கு தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வினை  23.77 லட்சம் பேர் எழுதினார். அதில்  3.52 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வு முடிவுகள்  இணையதளமான https://ctet.nic.in -ல்  வெளியாகியுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் பதிவு என்னை குறிப்பிட்டு தங்களின் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

Categories
கல்வி பல்சுவை

தமிழை விட சமஸ்கிருதம் பழமையானதா ???? TNSCERT விளக்கம் கேட்டு அறிக்கை …..

தமிழை விட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்ததை அடுத்து TNSCERT விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பியுள்ளது ….. பன்னிரெண்டாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் தமிழைவிட சமஸ்கிருதம் பழமையானது என அச்சிடப்பட்டிருந்த நிலையில் புத்தகத்தை வடிவமைத்த குழுவிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (TNSCERT) அறிக்கை அனுப்பியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் பக்கம் என் 142-ல் தமிழ் செம்மொழி என்ற தலைப்பின் கீழ் பல்வேறு மொழிகளின் காலவரிசை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்மொழி கிறிஸ்து பிறப்பதற்கு முன் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பொறியியல் கலந்தாய்வு நிறைவு..!! 16 கல்லூரிகள் காலி ..!!

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளில் 54 சதவீத இடங்கள் காலியாகவும், 16 தனியார் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில்  1,67,000 பொறியியல் இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 3-ம் தேதி முதல்  தொடங்கிய நிலையில்   4 கட்ட கலந்தாய்வு முடிந்தது . பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு துணை கவுன்சிலிங் நேற்று தொடங்கிய நிலையில்  4 கட்ட கலந்தாய்வில்  மொத்தம் 11 அரசு பொறியியல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சூர்யாவின் பேச்சு பாரட்டுக்குரியது… காங்கிரஸ் MP புகழாரம்..!!

புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது வரவேற்கத்தக்கது என்று விருதுநகர் MP  மாணிக்கம் தாகூர் தெரிவித்தார் . நடிகர் சூர்யா  நடத்தும் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். புதிய கல்வி கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது , பஸ் வசதி இல்லாத கிராமபுற மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு  , […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு” நாளை தொடக்கம்..!

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்கி வரும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்க இருக்கிறது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2019-2020 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.     அதன்படி மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 16 ஆம் தேதி நிறைவடைந்தது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்யப்பட்டு கடந்த 3-ம் தேதி […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

அதிர்ச்சி “ஒரு மாணவரும் சேரவில்லை” பரிதாபத்தில் பொறியியல் கல்லூரிகள் …!!

தமிழகத்தில் நடைபெற்ற மூன்று சுற்று பொறியியல் கலந்தாய்வில் 35 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது அதிர்ச்சியளிக்கின்றது. இது வரை நடைபெற்ற மூன்று சுற்று கலந்தாய்வின் முடிவில் அண்ணா பல்கலைக்கழகத்தின்  கிண்டி பொறியியல் கல்லூரி, சேலம் கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி, சிவகங்கை சிக்ரி கல்லூரி என இந்த 3 கல்லூரிகளிளும் 100 சதவிகித இடங்களும் நிரம்பியுள்ளது. அதே போல 8 கல்லூரிகளில் 99 சதவிகிதத்திற்கும் அதிகமமான இடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரம் :  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நூலகமாக மாறும் 45 அரசு பள்ளிகள்…. பேரவையில் அமைச்சர் அறிவிப்பு …!!

ஒரு மாணவர்கள் கூட சேராத  45 பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாற்றப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட பேரவை கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்குப் பின்னர் பள்ளி கல்வித் துறை தொடர்பாக திமுக எம்எல்ஏ தங்கன் பொன்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ள 1248 பள்ளிகளை மூடிவிட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

பி.டி.எஸ் மருத்துவ படிப்பு… 648 சீட்டுக்கள் … விறுவிறுப்பாக நடைபெறும் மாணவர் சேர்க்கை…!!!

எம்.பி.பி.எஸ்  மருத்துவ படிப்புக்கான சீட்டுகள் நிரம்பிய நிலையில், பி.டி.எஸ்மருத்துவ  படிப்புக்கான 648 சீட்டுகள் மீதமுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் எம்பிபிஎஸ் இடங்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில்,பி.டி.எஸ் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.2019 -2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கடந்த எட்டாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இருந்த 3968 […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேவையில்லை நெக்ஸ்டே போதும்…. புதிய மருத்துவ ஆணை மசோதாவில் வெளியான தகவல்….!!!

முதுநிலை மருத்துவ படிப்புக்கு நெக்ஸ்ட் தேர்வே போதுமானது என மாற்றி அமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணை  மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு முடித்த பின்னர் மருத்துவ படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் நீட் தேர்வில் கட்டாயமாக தேர்ச்சி பெற வேண்டும். அதே போல் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்த வேண்டுமென பல்வேறு தரப்பினரிடையே கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டில் பெரும் மதிப்பெண்களே எம்.டி  மற்றும் எம்.எஸ் போன்ற முதுநிலை மருத்துவ படிப்பின் மாணவர் […]

Categories
கல்வி கன்னியாகுமாரி மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் 60,000 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை…. அமைச்சர் செங்கோட்டையன்…!!!

கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்த்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப்…. கல்வி துறை அதிரடி..!!

11 மற்றும் 12ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கு மட்டும் இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.  புதிய பாடத் திட்டங்களில் உள்ள QR CODE  மற்றும் இணையதளத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்பிக்க ஏதுவான வகையில் மேல்நிலை வகுப்புகளில் உள்ள ஆசிரியருக்கு இலவச மடிக்கணினி வழங்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் உள்ள மேல்நிலை வகுப்பறைகளில் உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு உடனடியாக இலவச மடிக்கணினிகள் வழங்க வேண்டும் என மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கல்வி தகுதி அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி….அமைச்சர் உதயக்குமார்…!!

கிராம உதவியாளர்களாக பணிபுரிவோர்க்கு கல்வித்தகுதி  அடிப்படையில்  பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார். சட்ட பேரவை கூட்டத்த தொடரில்  மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில்,கூட்டத்த தொடரின்  கேள்வி நேரத்தில்  பேசிய திமுக உறுப்பினர் M.R.K.பன்னீர்செல்வம், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான  காலி பணி இடங்கள் எத்தனை உள்ளது, கிராம பணி   உதவியாளர்களை கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்க தமிழக  அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயக்குமார், அரசுப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தற்கொலையால் நீட் தேர்வை இரத்து செய்ய முடியாது” இல.கணேசன் கருத்து ..!!

தற்கொலைகளை மட்டுமே காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய சொல்வது ஏற்புடையது அல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பிற்கான தேசிய நுழைவு தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு நிறைவேற்றியற்றது. இதற்க்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் உட்பட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசின் தீர்மானத்தை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“நீட் எதிர்ப்பு மசோதா நிராகரிப்பு” ஸ்டாலின் கண்டனம் …!!

தமிழக அரசு அனுப்பிய நீட் எதிர்ப்பு சட்ட மசோதா நிராகரிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியளவில் மருத்துவ படிப்பிற்கு நீட் என்ற தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு இருந்தும் கூட நீட் தேர்வை இந்தியளவில் மத்திய அரசு கட்டாயமாக்கியது. தமிழகத்தில் அரசியல் கட்சியினரின் எதிர்ப்பையடுத்து தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.  ஆனால்  தமிழக அரசின் மசோதாவை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக சமீபத்தில் மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“பாஸ் ஆக , மதிப்பெண் பெற பணம்” லஞ்சம் வாங்கிய பேராசிரியர் பணிநீக்கம்…!!

அதிகமான மதிப்பெண் போட்டு தேர்வில் வெற்றிபெற வைக்க மாணவர்களிடம் லஞ்சம் வசூல் செய்த பேராசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா_வில் உள்ள நிர்மல் மாவட்டத்தில் இயங்கி வருகின்றது ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம். ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது எழுந்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அங்குள்ள வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் வரலா என்பவர்பல்கலைக்கழக தேர்வில் தன்னுடைய  தனது பாடத்தில்வெற்றி பெறவும் , அதிக மதிப்பெண் எடுக்கவும் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. பேராசிரியர் மீதான புகார் குறித்து  மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம்  தெரிவித்துள்ளனர். அதற்க்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி ”செருப்பு கிடையாது இனி ஷூ” அமைச்சர் அதிரடி ….!!

6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ வழங்கப்படுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் , பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். மேலும் பேசிய அவர் , தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் 6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

2,00,00,000 ரூபாய் செலவில் 70,00,000மாணவர்களுக்கு TAB…கல்வித்துறை அதிரடி..!!

 2000 கோடி ரூபாய் மதிப்பில் 70 லட்சம் மாணவர்களுக்கு  TAB வழங்க நடவடிக்கைகளை  மேற்கொள்வதாக கல்வி துறையமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்  ஆர்க்காடு  வீராசாமி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கல்விதுறையமைச்சர்   செங்கோட்டையன் மாணவிகளுக்கு இலவச லேப்டாப்களை வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், மூச்சு நின்றால் மட்டும்  மரணம்  அல்ல , முயற்சி நின்றாலும்   மரணம் தான்   என்ற அறிவுரையுடன் தொடங்கி மாணவர்கள் மத்தியில் பேசினார். அதன் பின்  செய்தியாகளை சந்தித்து  பேசிய அமைச்சர்  செங்கோட்டையன், புதிய பாடத்திட்டத்தை நன்கு புரிந்து […]

Categories
கல்வி தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பருவமடைந்த மாணவிகளுக்கு கல்வி கற்க தடை” பெற்றோர்கள் அதிர்ச்சி ..!!

அரசு பள்ளி சேதமடைந்ததால் கோவிலில் வைத்து கற்றுக்கொடுக்கப்படும் கல்வியை கற்க பருவமடைந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை  என்று கோவில் நிர்வாகம் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கிளாக்குளம் கிராமப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளி கூடம் மிகுந்த சேதமடைந்து இடிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தது. அதே பள்ளியறையில் வகுப்புகள் தொடர்ந்தால் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என்று அருகில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

திமுக நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றால் வாழ்த்துவேன்…. அமைச்சர் பேட்டி …!!

நீட் தேர்வுக்கு திமுக விலக்கு பெற்றால் வாழ்த்து கூறுவேன் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு நீட் செயல்படுத்தப்பட்ட 3 ஆண்டுகளாக தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை நீடித்து வருகின்றது.அனிதாவின் தொடங்கி கடந்த மாதம் இறந்த மோனிஷா வரை பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தமிழகத்தை ஆளும் அதிமுக நீட் தேர்வு மையத்தை அமைத்தாலும் நீட் வேண்டாம் என்றே சொல்லி வருகின்றது. மக்களவையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைத்தால் நீட் இரத்து என்று சொல்லப்பட்ட நிலையில் பாஜக ஆட்சி […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

பள்ளியில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி…… செங்கோட்டையன் பேட்டி …!!

பள்ளிக்கூடங்களில் வாரத்திற்கு ஒரு நாள் யோகாசன பயிற்சி அளிக்கப்படுமென்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை அனுசரிக்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதியில் யோகாசங்கள் செய்யப்படுகின்றது. இந்நிலையில் சென்னை நந்தனத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும்  தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஆகியோர் பங்கேற்று யோகாசனகளை செய்தனர். பின்னர் செய்தயாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , பள்ளிகளில் வாரத்தில் ஒரு நாள் யோகா பயிற்சி அளிக்க […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

“தொடர் வீழ்ச்சி காணும் பொறியியல் படிப்பு” 41 சதவீத இடம் காலி….!!

இந்த ஆண்டு 41 சதவீத பொறியியல் படிப்புக்கான இடங்களுக்கு மாணவர் சேராதது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 494 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இதிலுள்ள 1, 72 , 148 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகின்றது. இந்த ஆண்டு பொறியில் படிக்க 1, 33, 116 மாணவர்களே விண்ணப்பித்துள்ளனர். இதனால் சுமார் 39 ஆயிரத்து 32 பொறியியல் இடங்கள் நிரம்பாது என்ற நிலை உருவாகியுள்ளது. விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கடந்த 7_ஆம் தேதி முதல் 13_ஆம் தேதி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ….முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்…!!

தமிழக முதல்வர்  நாளை 70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஐ.நா. சபையின் யுனெஸ்கோ அமைப்பும், சகோதரன் என்ற தொண்டு நிறுவனமும் சேர்ந்து நடத்திய மூன்றாம் பாலின குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், அதனை தடுக்கும் பொருட்டும் ‘நண்பனாய் இரு, துன்புறுத்துபவனாய் இருக்காதே’ என்கின்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்டு  நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்கி, ஆய்வறிக்கையை வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் […]

Categories
கல்வி

“ஜூன் 21க்குள் கட்டாய யோகா பயிற்சி “யுஜிசி அதிரடி உத்தரவு ..!!

ஜூன் 21ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று யுஜிசி பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது . உயர்கல்வித் துறையில் யுஜிசி துறையானது மாணவர்களுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போதைய மாணவர்கள் ஆரோக்கியமான சூழ்நிலையில் இல்லை என்பதை உணர்ந்த யுஜிசி அவர்களது ஆரோக்கியத்திற்காக யோகா பயிற்சி நடத்த வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. வருகின்ற ஜூன் 21-ஆம் தேதிக்குள் அனைத்து கல்லூரிகளிலும் யோகா பயிற்சியினை கட்டாயமான முறையில் நடத்தவேண்டும் […]

Categories
கல்வி மாவட்ட செய்திகள் விழுப்புரம்

விழுப்புரத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்த மாணவி தற்கொலை …

விழுப்புரம் மாவட்டத்தில் ,நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் இன்று  ஒரு மாணவி தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.  விழுப்புரம் மாவட்டம், மரக்காணம்  கூனிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர்  மோனிஷா.   நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இவர் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்திருந்ததால், மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . இந்நிலையில் மோனிஷா, இன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.   மோனிஷா எழுதிவைத்துள்ள தற்கொலை கடிதத்தில், ”தனது தற்கொலைக்கு காரணம் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததே” என குறிப்பிட்டுள்ளார். பின்னர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

 “அழகிய தீர்வு” இந்தி கட்டாயமல்ல – வரவேற்ற ஏ.ஆர். ரஹ்மான்..!!

இந்தி கட்டாயமல்ல என்ற திருத்தப்பட்ட புதிய வரைவு கொள்கைக்கு “அழகிய தீர்வு” என்று ஏ ஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசின் புதியவரைவு கல்வி கொள்கையின் படி மும்மொழி கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டது. இந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும். அதேபோல இந்தி மொழி பேசும் பிற மாநிலங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர ஏதேனும் மொழியை கூடுதலாக கற்பிக்கப்படும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

“3-வது மொழியை தேர்வு செய்து படிக்கலாம்” இந்தி மொழி கட்டாயமில்லை..!!

கடும் எதிர்ப்புக்கு பிறகு இந்தி மொழி  பயிற்றுவிப்பது கட்டாயம் என்ற பரிந்துரை நீக்கப்பட்டு புதிய கல்வி வரைவு கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்றது. இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்வி வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை பயிற்று விக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது எதிர்ப்பை காட்டினர். […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த மொழியாக இருந்தாலும் விருப்ப பாடமாக இருக்க வேண்டும்” சித்தராமையா ட்விட்..!!

தாய்மொழி அல்லாத எந்த மொழியாக இருந்தாலும் அது விருப்ப பாடமாக இருக்கவேண்டும்  என்று கர்நாடக முன்னாள் முதல்வர்  சித்தராமையா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்றவுடன் கஸ்தூரி ரங்கன் குழு தேசிய கல்வி கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர்  ரமேஷ் போகிரியால் நிஷாங்கிடம் ஒப்படைத்தது. இதையடுத்து மாநில கல்விகளில் தாய்மொழி மற்றும் ஆங்கில மொழியை பயிற்று விக்கும் வகையிலுள்ள இரு மொழி கொள்கைக்குப் பதிலாக ஹிந்தியை […]

Categories
அரசியல் கல்வி

“மீண்டும் மொழிப் போர் ” அறிக்கை வெளியீடு செய்த வைகோ ..!!

புதிய கல்வி கொள்கையை அறிமுகப்படுத்தினாள் மீண்டும் மொழிப்போர் நடக்கும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் . அரசுப் பள்ளிகளை தனியாரிடம் தாரை வார்க்கும் நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தமிழ்நாடு இந்திய மாணவர் சங்கத்தினர் இதற்கு  எதிராக மாநிலம் முழுவதும் சைக்கிள் பிரசாரம் மேற்கொண்டு அது தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு நடந்து கொண்டிருக்கையில் மத்திய அரசு மற்றொரு புதிய கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து […]

Categories
கல்வி மாநில செய்திகள்

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் தேர்வு…… அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி….!!

சித்தா மற்றம் ஆயுர்வேத படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் படைப்பு கலை சிகிச்சை மையம், காற்றழுத்த குழாய் வழி அதி நவீன ஆய்வக சேவையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். இது மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பராமரிப்பதற்கு ஏற்ப நவீன வசதிகளுடன் கூடிய சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மகனுடன் சேர்ந்து 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தாய்..!!

மகனுடன் சேர்ந்து தாயும் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த சம்பவம் அனைவரின் மனதையும் நெகிழவைத்துள்ளது . ஒடிசாவை சேர்ந்தவர் பசந்தி . இவர் தனது பத்தாம் வகுப்பு படிப்பை படித்து கொண்டிருக்கும் பொழுதே திருமணம் ஆகிய காரணத்தினால் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார். திருமணம் முடிந்து குழந்தைகள் பிறந்த பின்பும் படிப்பை கைவிட்ட வருத்தம் அவர் மனதிற்குள் இருந்துகொண்டே இருந்தது. ஆகையால் அவரது மகன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அவருடன் சேர்ந்து மகன் சொல்லிக்கொடுக்க தாயும் […]

Categories
கல்வி

பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு ..!!

போலி பட்டப்படிப்பு சான்றிதழ்களை தடுக்கும் விதமாக நவீன முறையில் சான்றிதழ்களை வழங்குமாறு உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது . கல்லூரிகளில் வழங்கப்படும் மதிப்பெண் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை மாணவர்களிடம் பாதுகாப்பான முறையில் வழங்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. போலி சான்றிதழ்களை தடுத்து உண்மைத்தன்மையை கண்டறியும் வகையில் QR code, 3D logo ஆகியவற்றைக் கொண்டு நவீன முறையில் தயாரித்து வழங்கவும் ,  சான்றிதழில் மாணவர்களின் பெயர் ,படிப்பு விவரம் ,மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை பதிவு […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியீடு!

சிபிஎஸ்இ  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . நாடு முழுவதும் சிபிஸ்இ  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 2 முதல்  மார்ச்  29 வரை நடைபெற்றது.அதில் 29 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.இந்நிலையில் தேர்வுமுடிவுகள் இன்று   மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது . தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

Categories
கல்வி தேசிய செய்திகள்

நீட் தேர்வு எளிமையாக இருந்தது !மாணவர்கள் கருத்து !!

நாடுமுழுவதும்  , நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. நண்பகல் 12 மணி முதல் மாணவர்கள் , சோதனை நடத்தப்பட்டு,தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.    அணிகலன்களை மாணவிகள் கலற்றிய  பின்னரே,  தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆதார் கார்டு மற்றும் காலதாமதமாக வந்த மாணவர்கள்  தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் ,நீட் தேர்வு மிக  எளிமையாக இருந்தது என்றும் இயற்பியல் மட்டும் சற்று கடினமாக இருந்தது என்றும் கூறினர் . நாடு முழுவதும் , நீட் தேர்வு முடிவுகள் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

இன்று நீட் தேர்வு!! 15 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.!!!

இன்று நாடுமுழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு  நடைபெறுகிறது.  நீட் தேர்வு ,மொத்தம்  155 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.மொத்தம் , 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள். இந்த தேர்வை தமிழகத்தில் 1,40,000 பேர்  எழுதுகின்றனர்.தமிழகத்தில்  14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர் .   இந்த ஆண்டு பிற்பகலில் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நீட் தேர்வு ஒத்தி வைப்பு !!! பானி புயல் எதிரொலி !!

ஒடிசாவில், பானி புயலால்,  நீட் நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  தேசிய அளவில், இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர  நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு  மே 5-ஆம் தேதி நடக்க உள்ள  நிலையில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு கேட்டுக் கொண்டது. பானி புயலால்  கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்,  இதை ஏற்று நாளை ஒடிசாவில் நடைபெற உள்ள நீட் தேர்வு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது என  தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. […]

Categories
கல்வி செய்திகள் மாநில செய்திகள்

11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அனைத்துப்பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால்தான் காலேஜ் அட்மிஷன் …கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டம் …

11 மற்றும்  12ஆம் வகுப்பு ஆகிய இரு பொதுத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே  உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியானவர்கள் என்று  கல்லூரிக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம்,   பிளஸ் ஒன் தேர்வு  600 மதிப்பெண்களுக்கும்  கடந்த மார்ச் மாதம் , பிளஸ் 2 தேர்வு 600 மதிப்பெண்களுக்கும்   மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில், இரு தேர்வுகளிலும் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே  உயர்கல்வி சேர்க்கைக்கு தகுதியுடையவர்கள்  என்று  அனைத்து கலை, அறிவியல் கல்லூரி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

இன்று 10-ம் வகுப்பு இறுதித்தேர்வுமுடிவு வெளியீடு ….

இன்று காலை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்  வெளியாகின்றன. கடந்த  மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன.தமிழ்நாடு முழுவதும் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ- மாணவியர்கள்  இந்த தேர்வை எழுதியிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவு வெளியாகவுள்ளது . மின்னஞ்சல் மற்றும்  SMS மூலமாக,மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். வருகின்ற 2ந் தேதி , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களையும் மே 6 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

நாளை வெளியாகிறது 10-ம் வகுப்பு ரிசல்ட்…

 நாளை 10-ம் வகுப்பு தேர்வுமுடிவு வெளியிடப்படவுள்ளது . நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது . நாளை காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என்று  அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். மதிப்பெண் சான்றிதழை பள்ளிகளில் மே 2ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும் , தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வேண்டுவோர் மே 6ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மே 2 முதல் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

+2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு….!!

பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது. கடந்த 2019 மார்ச் மாதம் நடத்தப்பட்ட +2 பொதுத் தேர்வினை பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதினர். இவற்றின் முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. மாணவ , மாணவிகள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in http:/www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in http:/www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, http:/www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.  மேலும் மாணவர்கள் பயின்ற பள்ளிக்கூடங்கள் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

அரசு ஆசிரியர்களுக்கு ஆப்பு….. டியூசன் எடுத்தால் நடவடிக்கை…. நீதிமன்றம் உத்தரவு….!!

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பணத்திற்கு டியூசன் எடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு  உத்தரவிவு பிறப்பித்துள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தெரிவிகையில் , அரசுப்பள்ளிஇஎல் வேலை பார்க்கும்  ஆசிரியர்கள் இலாபநோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம். எனவே அரசுப்பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்கின்றார்களா என்று கண்காணித்து வேண்டும். மேலும் டியூசன் நடத்தும் அரசு ஆசிரியர்களுக்கு எதிராக தமிழக அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சொல்லிய அறிவுறுத்தலில் , அனைத்து அரசு […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர்கள் மகிழ்ச்சி….. TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 12_ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்1_ஆம் வகுப்பு  முதல் 8_ஆம்  வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி‌ பெற்றிருக்க வேண்டும். அதன்படி இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மாதம் பிப்ரவரி_ 28ஆம் அறிவித்தது. www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மார்ச் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை […]

Categories
அரசியல்

கல்வி மற்றும் விவசாயக்கடன் இரத்து……வெளியாகியது அதிமுகவின் தேர்தல் அறிக்கை…!!

அதிமுக_வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக , புதிய தமிழகம் , புதிய நீதி கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள்  இணைந்து தேர்தலை சந்திக்கின்றது.இதில் அதிமுக 20 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றது . அதற்கான வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் இன்று காலை அதிமுகவின்  தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார். அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

ஏப்ரல் 13_ஆம் தேதியில் இருந்து விடுமுறை……..பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

1 முதல் 9_ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 13_ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது.இதையடுத்து   பள்ளிகளில் முன்கூட்டியே 1_ஆம் வகுப்பு முதல் 9_ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது ஏப்ரல் மாதம் 13ம் தேதிக்குள் இந்த வகுப்புகள் காண வகுப்புக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாக இருக்கிறது . ஏற்கனவே 10 , 11 மற்றும் 12_ஆம்  […]

Categories
கல்வி மாநில செய்திகள்

S.S.L.C தேர்வு இன்று தொடக்கம்…… தமிழகம், புதுவையில் 9, 97, 794 பேர் எழுதுகின்றனர்….!!

S.S.L.C தேர்வு இன்று முதல் தொடங்க இருக்கின்றதை முன்னிட்டு அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி  அனைத்து தேர்வு ,மையங்களுக்கும் சுற்றைக்கை அனுப்பிள்ளார். இந்த 2018-19_ஆம் கல்வியாண்டுக்கான S.S.L.C  பொதுத்தேர்வானது இன்று தொடங்கி வருகிற 29-_ஆம் தேதி வரை நடைபெறுகின்றது.மொழிப்பாட தேர்வுகள் மாலை 2 மணிக்கும் , மற்ற பாடங்கள் காலை 10 மணிக்கும் நாடைபெறுகின்றது . இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் மொத்தமுள்ள 12,546 பள்ளிகளில் படிக்கும் 9 ,  59, 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38, 176 பேரும் என்று மொத்தம்  9, 97, 794 […]

Categories

Tech |